Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக்

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 1 2

இத்தனை நேரம் பார்வையாளனாய் மட்டுமே இருந்த ரிட்சர்ட், தலை கவிழ்ந்து கிடக்கும் மகனையும், சாற்றி இருக்கும் கதவையுமே சில நிமிடங்கள் பார்த்தவர், ஒரு முடிவோடு எழுந்து அவன் அருகே சென்று அமர்ந்தார்.

“ஜாக்கி?” அவர் மட்டுமே அழைக்கும் பிரத்யேக அழைப்பு! மிகவும் முக்கியமான பேச்சுகளின் போது மட்டுமே வெளிப்படும் அழைப்பு. மத்த நேரம் எல்லாம் அன்னையை போல ‘பப்பூ’ தான்!



Advertisement

தந்தையின் அழைப்பிலேயே அவர் எண்ணத்தையும் உணர்ந்தவன் போல, “எஸ் டேட்” என்று நிமிர்ந்தான் ஜேகோப்.

“அம்மா ரொம்ப பாவம்… என்னால தான் அவ சொந்தபந்தத்தை விட்டுட்டு வந்து வருத்தப்படுறா! என்னதான் அவமேல தப்பு இருந்தாலும், என் மனைவி அழுகுறதை, வருத்தப்படுறதை என்னால பாக்க முடியாது! ஒருவேளை அவங்க அம்மாக்கு எதுவும் தப்பா நடந்துட்டா, அவங்களை ஒருமுறை கூட பாக்க முடியலைங்குற ஏக்கம் அவளை ரொம்ப வாட்டும்! அவ வருத்தம் என்னையும் வருத்தும்!” என்றார் சரளமான ஆங்கிலத்தில்.

Advertisement

Advertisement

சுற்றி வளைத்து எண்ணத்தை சொன்னவருக்கு நேருக்கு நேராய் மகனுக்கு பிடிக்காததை செய்ய சொல்ல மட்டும் வாய் வரவே இல்லை.

ஜேகோப் வெகு ஆழமாய் மூச்செடுத்தான். கண்களை ஒரு முறை அழுந்த மூடி திறந்தவன், “ஃபைன் டேட்! நான் இந்தியா போறேன்” என்றான்.

Advertisement

தேவகியின் பலமணி நேர போராட்டம் செய்ய முடியாததை ரிச்சர்டின் ஐந்து நிமிட பேச்சு செய்து முடித்தது. இது தெரிந்து தான் தேவகி ஆரம்பத்திலேயே இவரை துணைக்கு அழைத்ததும்.

ஜேகோப் ‘இந்தியா போறேன்’ என்றதும் ரிச்சர்ட் மகிழ்ந்துவிடவில்லை. மாறாக, அவனுக்கு பிடிக்காததை செய்ய சொல்லிவிட்டோமே என்ற தவிப்பு தான் இருந்தது.

“ஜாக்கி… இத்தனை வருஷமா அம்மா தான் போகல… நீயாவது போய் கன்வின்ஸ் பண்ணிருக்கலாமே’ன்னு நீ என்னை பத்தி நினைக்கலாம்!” என்றவர், “லுக் அட் திஸ்” என்று அவர் அலைபேசியை காட்ட, நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். அத்தனையும் தேவகியின் அண்ணனுக்கு அவர் வருடம் தவறாமல் அனுப்பியது. கடந்த இரு மாதம் முன்பு வரை கூட அனுப்பி இருக்கிறார்.

“உன் அம்மாக்கு இதெல்லாம் தெரியாது. ஒருமுறை அவளுக்கு தெரியாம நேர்ல கூட போனேன்! தட் வாஸ் எ பேட் எக்ஸ்பீரியன்ஸ்” என்றவர், அங்கு அவர் அவமதிக்கப்பட்டு திருப்பியனுப்பட்டதை சொல்லவில்லை.

முதல் முறை காண போகும் உறவுகளை பற்றிய எதிர்மறை எண்ணங்களை மகனிடம் உருவாக்க அவர் எண்ணவில்லை.

“ஹவ்எவர், அவங்களை பொறுத்த வரை டேவ் செஞ்சது துரோகம்! அதை மறந்து அவங்க மன்னிக்கணும்! அதுக்கு உன்னால முடிஞ்ச உதவி நீ செய்யணும்” என்று சொல்ல,

“damn… this is what my major issue… its literally like a telugu movie. (இதான் என்னோட பெரிய பிரச்சனை… இது அப்படியே தெலுங்கு படம் மாதிரி இருக்கு) அதுல தான் இதுமாதிரி ஃபேமிலில ஒரு ஆள் பிரிஞ்சு போகும். அவங்களை அந்த ஃபேமிலி கூட ரீயுனைட் பண்ண ஹீரோ ஆர் ஹீரோயின் வருவாங்க. then the story goes with 4 duets and 8 mega budget fights…! படமா பார்க்கவே புல்ஷிட்டா இருக்கும். அதையே என்னை செய்ய சொன்னா? எப்படி டேட்?” ஆதங்கமாய் கேட்டான் ஜேகோப்.

எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டார் ரிச்சர்ட்.  அவன் உணர்வுகள் ரிச்சர்டுக்கு நன்கு புரிந்தது. ஏனெனில் தேவகி தயவில் பல தெலுங்கு, தமிழ் படங்களை கண்டு நொந்தவர் ஆயிற்றே.

“நீ ஏன் பப்பூ அதெல்லாம் யோசிக்குற? ஜஸ்ட் டூ திஸ் போர் யூர் மாம் சேக்!” (அம்மாக்காக பண்ணு)

ஒருமனதாய் தலையாட்டினான் அவன். ஏற்கனவே அவன் பதிவு செய்திருந்த விமான சீட்டை ரத்து செய்துவிட்டு, அன்று இரவுக்கே இந்தியாவுக்கு போக டிக்கெட் போட்டார் ரிச்சர்ட்.

தேவகி அறையை விட்டு வந்தப்பாடில்லை.  அவரை வரவழைக்கும் பொருட்டு,

“டேவ்… பப்பூ இஸ் லிவிங்… கம் அவுட்” என்றார் ரிச்சர்ட்.

அறைக்குள் இருந்தே, “நான் வரல” என்ற குரல் வந்தது. தந்தையும் மகனும் சிரித்துக்கொண்டனர்.

“ஓகே தென், பப்பூ இந்தியா போனதும் மறக்காம கால் பண்ணு… டேக் கேர்… பை” என அவர் முடிக்க கூட இல்லை, படாரென கதவை திறந்துக்கொண்டு புயல் போல வெளியே வந்தார் தேவகி.

“இந்தியா போறியா? நிஜமாவா?” அவர் முகத்தில் தான் எத்தனை பிரகாசம், எதிர்ப்பார்ப்பு, ஆவல்…!? அதை கண்ட பிறகு ஜேகோப்’பிற்க்கு இருந்த சின்ன சுணக்கம் கூட ஓடி போனது. இவர் சந்தோஷத்துக்காக தானே செய்யப்போறோம்!? செய்வோம்! என முடிவு செய்துக்கொண்டான்.

அவன் யோசித்த ஒரு நிமிடத்திற்குள்ளாகவே பலமுறை அவனது இந்தியா பயணத்தை பற்றி விசாரித்துவிட்டார் தேவகி.

அவரால் நம்பவே இயலவில்லை. தான் அத்தனை தூரம் கெஞ்சிக்கூட கேட்காதவன், எப்படி சம்மதித்தான் என்ற ஆச்சர்யம். கூடவே நேரம் கடத்தினால் அவன் மனம் மாறிவிடுமோ என்ற ஐயம்..! வெகு வேகமாய் அறைக்குள் ஓடி எதை எதையோ குடைந்து சில நிமிடங்களில் வெளியே வந்தவர் கைகளில் ஒரு பழைய நிழல்படம் இருந்தது.

“பப்பூ… இதுதான் நம்ம குடும்பம்.” என்றவர் அவன் கரத்தில் அந்த புகைப்படத்தை வைக்க, ஆர்வமாய் வாங்கி பார்த்தான் அவன். அடிக்கடி தேவகியின் தோழி அனுப்பி வைக்கும் படங்களில் சிலதை இவனும் பார்த்திருக்கிறான். இவர்கள் தான் என் சொந்தம் என அடையாளம் காணுமளவுக்கு அவர்களை இவனுக்கு பரிச்சயமாய் தெரியும் என்றாலும், இந்த புகைப்படத்தை அவன் இதுவரை கண்டதே இல்லை.

தேவகி பாவாடை தாவணியில் மிகவும் குட்டி பெண்ணாய் இருந்தார். இருப்பக்கமும் காளை மாடுகள் நிற்க, நடுவே பெரிய நாற்காலிகளில் வீட்டின் பெரியவர்களும் அவர்களின் பின்னே சிறியவர்களும் நின்றிருந்தனர். அந்த படத்தில் பார்க்க வீடு மிக பிரம்மாண்டமாய் இருந்தது.

“லவ்லி…” என ரசித்து கூறியவனிடம், “இப்போ வேண்டாவெறுப்பா இந்தியா கிளம்புற நீ, திரும்ப வரப்போ இந்தியாவுக்கு மருமகனா தான் போவேன்னு அடம் பிடிப்ப பாரேன்” என்றார் தேவகி நமட்டு சிரிப்பாய்.

ரிச்சர்டும் ஜேகோப்’பும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தேவகி சொல்ல வருவது இருவரின் சிறுமூளையையும்  எட்டவில்லை.

“என்ன முழிக்குறீங்க? என் அண்ணனுக்கு ஒரு பொண்ணு இருக்கு, தெரியும் ல?” என்றார் கெத்தாய். அப்போதுமே அவர்களுக்கு புரியவில்லை.

“சோ வாட் டேவ்?” என்ற ரிச்சர்டிடம், “என்ன சோ வாட்டு? இவன் போய் என் மருமகளை பார்த்ததும் அப்படியே ‘பிளாட்’ ஆகப்போறான்… அப்பறம் என்ன? அடுத்த முகூர்த்தத்துலையே கல்யாணம்… பிரிஞ்ச குடும்பம் ஒன்னு சேர்ந்துடும்…” என்று குதூகலமாய் கதையின் கிளைமேக்ஸ் காட்சியை முதல் அத்தியாயத்திலேயே அவர் சொல்லிவிட, ஆண்கள் இருவருமே திருதிருவென முழித்தவர்கள், பின்னே அடக்கமாட்டாமல் சிரித்தனர்.

அதிலும் ஜேகோப், “மாம்…! யூ ரியலி ஸ்டக்டு இன் 1960’s…” என்று சிரித்தவன், “நான்… இந்தியால… அதுவும் ஒரு கிராமத்துல இருக்க பொண்ணை லவ் பண்ணுவேன்? ஆர் யூ ஜோக்கிங்!? இங்க இருக்க பொண்ணுங்களாலையே என்னை இம்ப்ரெஸ் பண்ண முடியல! இதுல தட் வில்லேஜ் கேர்ள்? இம்போசிபிள்!” சற்றே பந்தாவாக தான் சொன்னான்.

தேவகியோ, “உங்கப்பா என்னை பார்த்து தலைக்குப்புற விழுந்தப்போ நானும் அதே வில்லேஜ் பொண்ணு தான் டா!” என்று அவனை விட பந்தாவாய் சொல்ல, இப்போது ஆண்களின் சிரிப்பு அடங்கிப்போனது நிதர்சனத்தில்.

ஜேகோப், ‘வாய்ப்பிருக்கோ?’ என்ற ரீதியில் பார்க்க, “டெஃபனட்லி” என்பது போல தோளை குலுக்கினார் ரிச்சர்ட்.

அப்போதும் கெத்தை விடாமல், “டேட் உங்களை பார்த்து விழுந்த மாறி நான் எந்த பொண்ணையும் பார்த்து விழ மாட்டேன்! குறிப்பா உங்க அண்ணன் பொண்ணை பார்த்து… காட் இட்! இங்கிருந்து எப்படி போறேனோ, அதே போல தான் திரும்ப வருவேன்!” சபதம் போல சொன்னான்.

தேவகி, “ஆஹான்… பாப்போம்… நான் சொன்னது நடக்குதா இல்ல உன் வெட்டி ஜம்பம் பலிக்குதான்னு” அவருமே பதில் சபதம் டோனில் பேச, இருவருக்கும் நடுவே ரிச்சர்ட் தான் அப்பாவியாய் விழித்துக்கொண்டு நின்றார்.

“உங்க பையன அவ்ளோ வீக்கா நினைச்சுட்டீங்கள்ள? இட்ஸ் எ செலேஞ் மாம்! நீங்களா நானான்னு பார்ப்போம்!” என்று அவன் சொல்ல, அவரும் பதிலுக்கு, “சேலேஞ் டா” என்று சொல்ல, அப்போதிருந்து ஆரம்பித்தது ‘ஆப்பரேஷன் குடும்பத்தை சேர்க்கிறது’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!