Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றலாய் என் காதல் – 11

  • அத்தியாயம் – 11

“வாச்மென் என்ன ஆச்சு?”

“அந்தப் பொண்ணு யாரு?”

“இங்க என்ன பண்றாங்க?”

இவ்ளோ உயரத்துல ஏறிட்டு இருக்காங்க, நீங்க என்னடானா பார்த்துட்டு சும்மா நிக்கிறீங்க”.



Advertisement

“இது தான் நீங்க வீட்டைப் பாத்துக்கற லக்ஷனமா?”

“இதுக்கு தான் பாஸ் அப்பவே சொன்னாரு, வயசான ஆளை எல்லாம் வேலைக்கு வைக்க வேண்டாம்னு”.

“நான் தான் பாவமேனு இரக்கப்பட்டு உங்களை அபாயிண்ட்மென்ட் பண்ணேன்”.

Advertisement

“ஆனா நீங்க என்னடானா இப்படி கேர்லெசா இருக்கீங்க?”

Advertisement

“அந்த பொண்ணு கீழ விழுந்து இருந்தாள் என்ன ஆயிருக்கும்.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க” என்று சற்றுக் கோபத்தோடுக் கூறினான் ஆதவ்.

“என்ன மன்னிச்சிருங்க தம்பி”.

Advertisement

“சிந்து பாப்பாத் தான் சொல்ல சொல்ல கேக்காம இப்படி பண்ணிருச்சு” என்றார் வாச்மென்.

“சரி அதை விடுங்க. யார் அந்தப்பொண்ணு”என்று கேட்டான்.

“என்ன தம்பி இப்படி கேக்குறீங்க”.

“இவங்க தான் சிந்து.நீங்க சுசிலா அம்மாவை பார்த்துக்க அப்பாயிட்மென்ட் பண்ண பொண்ணு”என்றார் வாச்மென்.

“என்ன நான் அப்பொய்ன்மெண்ட் பண்ணேனா?”

“இப்ச்…என்ன ஐயா நீங்க இவ்ளோ கேர்லஸ்சா இருக்குறீங்க?”

“நான் அந்த பொண்ண வேலைக்கு எடுக்கல.

நான் அப்பொய்ன்மெண்ட் பண்ண பொண்ணு வேற”.

“இப்படித் தான் யார் வந்தாலும் என்ன ஏதுனு கேக்காம உள்ள விட்டுருவிங்களா?” சொல்லுங்க என்றான் ஆதவ்.

“இல்லை தம்பி அந்த பொண்ணு தான்…”என்று வார்த்தையை இழுத்து தலையைத் தாழ்த்தினார்.

எரிச்சலுடன் “இப்ச்…”என்று பெருமூச்சு விட்டான் ஆதவ்.

“மன்னிச்சிருங்க தம்பி” என்றார் அவர்.

“நான் மன்னிக்கறது இருக்கட்டும்.இந்த விஷயம் சாருக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் உங்களுக்கேத் தெரியும்”.

“சரி போங்க என்ன ஏதுனு நான் விசாரிச்சுக்கறேன்” என்றான் ஆதவ்.

“ஹ்ம்ம்…”என்றவர் ஆதவை நிமிர்ந்தும் பார்க்காமல் சென்றார்.

அவசர எட்டுக்கலாய் ஆதவ் வீட்டிற்குள்ச் சென்றான்.

“இனியா என்ன காப்பாத்து…எனக்கு பயமா இருக்கு” என்று அலறிக்கொண்டு இருந்தார் சுசிலா.

பதஷ்டத்துடன் “அக்கா அந்த திருப்பிலி எடுத்துட்டு வாங்க” என்றாள் சிந்து.

கீதா அவசரமாக எடுத்து வந்து கையில் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு சுசிலாவின் அறையை நோக்கி ஓடினாள்.

உள்ளே வந்த ஆதவ் அவள் என்ன செய்கிறாள் என்பதை சத்தம் இன்றி கவனித்தான்.

சிந்து கதவின் தாள்ப்பாளின் ஆணிகளை கழட்டினாள்.

தாள்ப்பால் கலண்டு கையில் வந்தது.

கதவை வேகமாத் திறந்து சுசிலா “அம்மா….”

என்று அழைத்தபடி அறைக்குள்ளே நுழைந்தாள்.

அவளைக் கண்டவுடன் ஓடி சென்று அணைத்தார் சுசிலா.

“எங்க போன? என்ன விட்டுட்டு. எனக்கு எவ்ளோ பயம் இருந்துச்சு தெரியுமா” என்றார் குழந்தைப்போல்.

“அதான் நான் வந்துட்டேன்ல காம்டௌன்” என்று ஆதரவாய் தலையை வருடினாள் சிந்து.

“இனியா நீ என்னை விட்டு எங்கையும் போகக்கூடாது. எப்போதும் நீ என் கூடத்தான் இருக்கனும்” என்றார் சுசிலா.

“ஹ்ம்ம்…சரி அதுக்கு மொதல்ல நீங்க நான் சொல்றதை கேக்கணும். அப்போதான் நான் உங்க கூடவே இருப்பேன். இல்லைனா நான் போயிருவேன்ப்பா” என்றாள் அவளும் சிறு பிள்ளையாய் மாறி.

நடப்பதை சிறு புன்னகையுடன் ரசித்துப் பார்த்தான் ஆதவ்.

“இந்த பச்ச மிளகாய் இவ்ளோ அழகா கூட பேசுமா?

என்னால நம்பவே முடியல. வெளிய எங்க பார்த்தாலும் சும்மா நெருப்பு மாதிரி இருக்காங்க.

ஆனா சுசிலா அம்மாக் கிட்ட இப்படி பனிப்போல இருக்காங்களே.

அது சரி இவங்க எப்படி இங்க, நான் வேலைக்கு அப்பொய்ன்மெண்ட் பண்ண பொண்ணு ரஞ்சிதா எங்க? எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கு” என்று ஆலோசனையுடன் அமைதிக் காத்தான் ஆதவ்.

“கீதா ஓடி வந்து என்ன மன்னிச்சிருங்க அம்மா” என்றார்.அவருக்கு என்ன புரியவாப் போகிறது. குழந்தைப்போலே சிந்துவின் மார்பில் தலை வைத்து கொண்டு கீதாவை பார்த்து “போ”…என்றார்.

“கீதா அக்கா, இனியாவது கொஞ்சம் கவனமா இருங்க. பாவம் அக்கா சுசிலா அம்மா 

அவங்களுக்கு இப்போ எதுவும் தெரியாது. அடிக்கடி வந்து பார்த்துக்கோங்க”.

“குடும்பத்துல யாருக்குத்தான் பிரச்சனை இல்லை. அதுக்காக நம்மள நம்பி இருக்குற யாரையும் நாம அலட்சியப்படுத்தக்கூடாது”.

“அம்மாக்கு ஏதாவது ஒன்னு நடந்து இருந்தா?” என்றாள் சற்றே கண்டிப்புடன்.

அதை பார்த்துக் கொண்டு இருந்த ஆதவ் “பரவாயில்லையே நல்லா தான் அக்கறையாவும் பொறுப்பாகவும் அம்மாவை பார்த்துக்கறாங்க”. “விக்ரம் சாரும் இது போன்ற பெண்ணைத் தானே எதிர் பார்த்துக்கொண்டு இருந்தார்” என்று நினைத்துக் கொண்டான் ஆதவ்.

“என்ன மன்னிச்சிரு சிந்து. இனிமே இப்படி நடக்காது. இந்த விஷயம் விக்ரம் தம்பிக்கு தெரிய வேண்டாம்” என்றார்.

“ஹ்ம்ம்…பரவாயில்லை அக்கா நீங்க போய் வேலையைப் பாருங்க நான் அம்மாவை பார்த்துக்கொள்கிறேன்” என்றாள் சிந்து.

சரி மா என்றுவிட்டு கீதா அறைக்கு வெளியேச் செல்ல உள்ளே நுழைந்தான் ஆதவ்.

“ஹுக்கும்….” என்று குரலைச் செருமிய ஆதவை நோக்கினாள்.

“என்ன மேடம்…அங்க என் கிட்ட சண்டைப்போட்டுட்டு இப்போ அம்மா கிட்ட இவ்ளோ அன்பைப் பொழியிறீங்க” என்றான் ஆதவ்.

“ஹலோ யார் சார் நீங்க?”

“வந்தோமா, வந்த வேலையை பார்த்த்தோமானு இருக்கனும். அதை விட்டுட்டு சும்மா அனாவசியமா பேசக்கூடாது”என்றான்.

“பேசினா என்ன பண்ணுவ” என்றான் ஆதவ்.

அவளுக்கு கோபம் தலைக்கு ஏறியது. புருவங்கள் சுருங்கியது. முகம் சிவந்தது சிந்துவிற்கு.

“விக்ரம் சார் வரட்டும் அதுக்கப்பறம் தான் தெரியும் நான் யாருன்னு என்ன பண்ணப்போறேன்னு” என்றாள்.

“அதான் மேடம் நானும் சொல்றேன். விக்ரம் சார் வரட்டும் நீங்க யார் என்னனு அவர் கிட்டையே கேட்போம்” என்றான் ஆதவ்.

“அது…அது…வந்து”என்று வார்த்தையை விழுங்கினாள் சிந்து.

“என்ன மேடம் நீங்க இவ்ளோ நேரம் எவ்ளோ சரலமா பேசிட்டுத் இருந்திங்க இப்போ என்ன ஆச்சு மேடம்?” “பயமா இருக்கா?”என்றான்.

அவள் திருத்திருவென விழித்தாள். “என்ன மேடம் முகம் எல்லாம் வியர்க்குது ஓ நீங்க பண்ண ஆள் மாறாட்டம் தெரிஞ்சுருச்சுனா” என்றான் ஆதவ்.

“சார் உங்க கிட்ட கொஞ்சம் நான் தனியா பேசணும்” என்றாள்.

“என்ன பேசப்போற?”

“வாங்க சார் சொல்றேன்” என்றாள்.

அவன் சரி என்றதும் “சுசிலா அம்மா கொஞ்சநேரம் இங்க உக்காருங்க இதோ நான் இப்போ வந்தறேன்” என்றாள்.

“இல்லை நீ என்ன விட்டு எங்கையும் போகக்கூடாது என்று அடம்பிடிக்க, பார்த்தீங்களா! பார்த்தீங்களா! நான் என்ன சொன்னேன்.

என் பேச்சனைக் கேட்டாள் மட்டும் தான் நான் உங்க கூட இருப்பேன்” என்றாள் சிந்து.

“சிணுங்கி கொண்டே சரி. அப்போ நீ சீக்கிரம் வரணும்” என்றார் அப்பாவியாய்.

“ஹ்ம்ம்…சரி அம்மா” என்று அவர் கையை தன்னில் இருந்து பிரித்தாள் சிந்து.

தாயைப் பிரியும் பிள்ளையென அவளை ஏங்கத்தோடு பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தார் சுசிலா.

“வாங்க சார்”என்று அழைத்துக்கொண்டு வீட்டின் பின் பக்கம் தோட்டத்திற்குச் சென்றாள் சிந்து.

அமைதியான அந்த சூழல், வீசும் தென்றல் தென்னை ஓலைகளை சலசலக்க வைத்தது.

பல தென்னையில் ஏதோ ஒன்றின் பொந்தில் முட்டை இட்டு குஞ்சி பொறித்த பச்சைக்கிளிகளின் சப்த்தங்கள் காதுகளை துலைத்தன.

அமைதியும், அழகான இரைச்சலும் என இரண்டும் கலந்து அந்த சூழ்நிலையை மேலும் ரம்மியமாக்கியது.

ஆதவ் கையைக் கட்டிக்கொண்டு அவளைக் குறுகுறுக்கப் பார்த்தான்.

 

அவள் தன் சுடிதார் துப்பட்டாவின் நுனியை கையில் பிடித்தப்படி, தலையைக் கவிழ்ந்து நின்று இருந்தாள்.

“ஹலோ பொண்ணே என்ன எதுவும் பேசாம இப்படி நின்று இருந்தால் எப்படி?”

“ஏதாவது பேசுமா” என்றான் ஆதவ்.

அவள் மேலும் அமைதிக்காத்தாள்.

அவனுக்கு இனியும் பொறுமை இல்லை.

“இப்ச்….” என்று உச்சிக்கொட்டியவன் அங்கிருந்து நகர,

அவன் கால் அசையவில்லை.

திரும்பி தலை கவிந்து பார்த்தான்.

“ஏய் என்ன பண்ற காலை விடு” என்றான்.

“சார் ப்ளீஸ் சார். இந்த விஷயத்தை விக்ரம் சார்கிட்ட சொல்லிராதீங்க.

நாங்க செஞ்சது தப்பு தான் ஆனா எங்களுக்கு வேற வழிதெரியல சார்.

என் பிரண்ட் தான் சார் ரஞ்சிதா. எனக்காகத் தான் இன்ட்ரிவ் அட்டென்ட் பண்ணா.

என்னால நீங்க நேர்காணல் வைத்த அன்று வர முடியல. அதனால இந்த வேலை மிஸ் ஆயிரக்கூடாதுனு தான் இப்படி பண்ணோம்”.

“ஏன்னா என் குடும்ப சூழ்நிலை அதனால தான் சார் இந்த தப்பை நாங்க செய்ய வேண்டியதா போச்சு”.

“தயவு செஞ்சி எங்களை மன்னிச்சிருங்க சார்”.

“விக்ரம் சாருக்கு ஏற்கனவே என்னை கண்டால் பிடிக்காது. இப்போது இதுவும் தெரிந்தால் என்னை வேலையில் இருந்து நீக்கி விடுவார்” என்று கெஞ்சினாள் சிந்து.

“இப்ச்…. மொதல்ல எந்திரிங்க மேடம்”.

“இப்படி எல்லாம் யார் கால்களிலும் விழாதிங்க”. “நாம யாருக்கும் அடிமை இல்லை”என்றான் ஆதவ்.

“சார் என் குடும்பத்துக்காக நான் யார் கால்களில் வேண்டும் என்றாலும் விழுவேன். என்ன எல்லைக்கும் செல்வேன். எனக்கு என் குடும்ப சந்தோசம் தான் முக்கியம்”.

“நான் என் தங்கையின் கனவை நிறைவேற்றத் தான் இவ்வளவு கஷ்டப்படறேன். என் தங்கச்சியை டாக்டர் ஆக்கி பார்ப்பது தான் லக்ஷியம்” என்றாள்.

அதை கேட்ட ஆதவிற்கு மனம் இறங்கியது. சொல்லப்போனால் அவள் மேல் அவனுக்கு கோபமே வரவில்லை.

அவள் செய்வதை எல்லாம் உள்ளுக்குள் ரசிக்கவே செய்துக் கொண்டு இருந்தான்.

“அழாதீர்கள், கண்களை துடைத்துக்கொள்ளுங்கள்” என்றான்.

அவள் அழுததில்அவள் முகம் சிவந்து தாமரை மலரைப்போல் இருந்தது.

தன் சுடிதார் துப்பட்டாவைக்கொண்டு முகத்தை அழுந்தத் துடைக்க மேலும் சிவந்து அவன் கண்களை வருடியது அவள் பூ முகம்.

வாயடைத்து நின்றவனை “சார்…. சார்…”என்று அழைத்தாள்.

அவன் செவியில் அது விழவில்லை.

உறத்தக்குரலில் “சார்” என்றதும் தன் நிலைக்கு வந்தவன் “ஹான்… சொல்லுங்க மேடம்” என்றான்.

“விக்ரம் சார்கிட்ட சொல்ல மாட்டீங்களே” என்றாள்.

சற்றே புன்னயோடு தலையை அசைத்து “இல்ல நான் சொல்லல”.

“பட் எப்படி நீங்க அவர் கண்ணுலப்படாம தப்பிக்கப் போறீங்க”.

“அப்படியே தப்பிச்சாலும் எத்தனை நாளைக்கு இப்படி ஓடி ஒழிய முடியும்”என்றான் ஆதவ்.

“தெரியல சார். ஆனால் இப்போ எனக்கு வேற ஆப்சன் இல்ல. இதை நான் செஞ்சி தான் ஆகணும்” என்றாள்.

“புரிகிறது. நானா எதையும் சார் கிட்ட சொல்ல மாட்டேன். பட் நீங்க கவனமா இருங்க”என்றான்.

அந்த சமயம் விக்ரம் ஆதவின் செல்லுக்கு அழைத்தான்.

சார் தான் என்றவன் அழைப்பை ஏற்று ஹலோ என்றான்.

“என்ன ஆதவ். எவ்ளோ நேரம்.அந்த ஃபைல் எவ்ளோ முக்கியம்னு உனக்கு தெரியும்ல. அது இருந்தா தான் ஒர்க் ஸ்டார்ட் பண்ண முடியும். சீக்கிரம் வா” என்றான்.

“சாரி சார்…இதோ இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவேன்” என்றான்.

“ஹ்ம்ம்…குட்” என்றான் விக்ரம்.

“ஐயோ…சார் கொஞ்சம் தள்ளுங்க”என்று ஆதவை பிடித்து தள்ளினாள் சிந்து.

பெரிய தென்னை கீற்று ஒன்று அவன் தலையை நோக்கி விழப் போக எப்படியோ காப்பாற்றி விட்டாள் சிந்து.

இருவரும் கீழே விழுந்ததில் கையில் இருந்த கைபேசி சற்று தொலைவில் விழுந்தது.

“ஐயோ…சார் உங்களுக்கு எதுவும் அடிப்பட்டு விட்டதா” என்று வினவினாள்.

“இல்லை…எனக்கு ஒன்னும் ஆகல” என்றான் அவளை ரசித்தபடி.

உங்களுக்கு எதுவும் என்றான் ஆதவ்.

“இல்லை சின்ன சிராய்ப்பு தான்” என்றாள்.

இதை எல்லாம் விக்ரம் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

“சரி அப்போ நான் கிளம்பறேன் மேடம்”என்றான்.

“ஹ்ம்ம்…ஓகே சார் ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.

“ஹ்ம்ம்…உங்களுக்கும் தான்” என்று தன் அலைபேசியை எடுத்து தூசு தட்டி விட்டு சிந்துவை திரும்பி திரும்பி பார்த்தப்படி சென்றான் ஆதவ்.

விக்ரம் தன் அழைப்பை ஆழ்ந்த யோசனையோடு துண்டித்தான்.

“அப்பாடி எப்படியோ சமாளிச்சிட்டோம்” என்று பெருமூச்சு விட்டாள் சிந்து.

“என்ன சிந்து ஆண்களை நம்ப துவங்கிவிட்டாயா? “ என்றது அவள் மனம்.

“நானாவது ஆண்களை நம்புவதாவது. எப்போதும் ஆண்களை ஒரு துளி கூட நான் நம்பபோவதில்லை”.

“என் மனதில் எந்த ஆணுக்கும் இடம் இல்லை”என்று தன் மனசாட்சிக்கு பதில் கொடுத்து விட்டு சுசிலாவை காணா சென்றாள் சிந்து.

தென்றல் மீண்டும் வீசும்….***

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!