“ஐய்யோ விடுங்கண்ணா… நேரம் காலம் வரும் போது அவனும் பொறுப்புள்ள பையனா மாறிடுவான். அப்ப நீங்களே ஆச்சர்யப்படுவிங்க. ” நல்ல விதமாக பேசி அண்ணனை அமைதிப்படுத்த முயன்றார் வரலெட்சுமி.
Advertisement
அனைவரும் ‘இவனுக்கா பொறுப்பு வரும்… பொறுப்பா இருக்குறவன கெடுக்காம இருந்தா சரி…’ என்பது போல் பார்க்க…
“பொறுப்பு வரனும்னா அதுக்கு நம்ம மாப்ளக்கி கல்யாணம் பண்ணி வைச்சாத்தா சரியா இருக்கும். கால் கட்டு போட்டு, பொண்டாட்டின்னு ஒருத்தி வந்திட்டா. எல்லாம் சரியாகிடும்.. ” எனச் சம்மன் இல்லாது ஆஜர் ஆனது சண்முகம் தான்.
Advertisement
Advertisement
அவரும் ஆறு மாதமாக மனைவியிடம் பார்த்திபன் விஷாலினி திருமணத்தைப் பற்றி பேச, அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாது, ‘நெருங்குன சொந்தத்துக்குள்ள கல்யாணம் வேண்டாங்க… பாப்பாக்கு நாம வேற இடம் பாப்போம்.. ‘ என்று சொல்லி கணவனைச் சரிக்கட்டிக் கொண்டே இருந்தார்.
ஆனால் இது… நல்ல சந்தர்ப்பம். இனி மனைவியை நம்பி பிரயோசனம் இல்லை என நேரடியாக இறங்கி விட்டார் அவர். காலையில் தான் பத்மாவைக் குடும்ப ஜோதிடரைப் பார்த்து பேசச் சொல்லி தூண்டிவிட்டார். அவர் சண்முகம் சொல்லித் தந்ததை அப்படியே ஒப்பிக்க, தன் மகளைப் பார்த்திபனுக்குக் கட்டி வைத்து ஒட்டு மொத்த சொத்தையும் ஆள நினைத்தார்.
Advertisement
“நம்ம விஷா குட்டிக்கும் வயசு ஆகிட்டே போது மச்சான். எப்படியும் அவள ஒருத்தனுக்கு கட்டி வைத்தான போறோம். அதுக்கு நம்ம வீட்டு பையனுக்கே கட்டி வச்சி உங்க மருமகளா ஆக்கிக்கிட்டா அது நம்ம கூடவே இருக்குமே. நம்ம வீட்டு மகாலட்சுமி நம்மல பிரிஞ்சி போகாது.” என மகளை பிரிந்து தன்னால் இருக்கு முடியாது என்பது மேல் பேச,
நேகா முறைத்தாள் அவரை, ‘அவ மகாலட்சுமின்னா நாங்க யாராம்.. ‘ என்பது போல்.
அமைதி நிலவியது அந்த உணவு மேசையில். ஒவ்வொரும் ஒவ்வொன்றை நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
‘என்ன பொண்ணு விஷாலினியா!!!!.. இந்த வீட்டுல பொண்ணெடுத்ததுக்கே இந்தாளும் இந்தாளோட குடும்பமும் வர்ஷத்துக்கு ஒருக்க நடு வீட்டுக்குள்ள வந்து ஒரு ஆட்டம் ஆடிட்டு போகுதுங்க. இதுல பொண்ண குடுத்து முழு சம்மந்தியாகிட்டாருன்னா! வர்ற கும்பல் கூடாரம் போட்டு குத்தவச்சி உக்காந்திருமே. அப்றம் நமக்கு தான் வீட்டோட மாப்ளயா வேலை அதிகமா இருக்கும். கூடாது… மாப்ள யாரனாலும் கல்யாணம் பண்ணட்டும். இல்ல சன்யாசியாகி சாமியாரா போனாலும் சரி. சண்முகத்தோட பொண்ணு வேண்டாம்.’ சந்ருவின் மனநிலை.
எனெனில் சண்முகத்தின் குடும்பம் அப்படி. சற்று உரிமையுடன் நடந்து கொள்கிறோம் என்று அனைவரின் உரிமையையும் எடுத்துக் கொண்டு வேலை வாங்குவர். அதிலும் அதிகம் பாத்திக்கப்பட்டது house husband டான சந்ரு தான். மூத்த மருமகனாக வீட்டோடு இருக்கும் சந்ருவிற்கு தான் வேலை அதிகம்.
அவனின் மனைவி நேகாவுக்கோ, ‘ஏற்கனவே இந்த வீட்டு அதிஷ்ட லட்சுமின்னு சொல்லி சொல்லி எல்லா பொறுப்பையும் தூக்கி அத்தை கைல குடுத்தாச்சி.. அந்த அத்தை, நம்மல ஃப்ரியா எந்த வேலையும் செய்ய விடாம நம்ம சுதந்திரத்த கண்ட்ரோல் பண்ணிக்கிட்டே இருக்காங்க. இதுல சம்மந்தியாகிட்டா சொல்லவே வேண்டாம். புருஷன் பொண்டாட்டி மகன்னு கம்பேனிக்குள்ள வந்து உக்காந்துக்கிட்டு அதிகாரம் பண்ணுங்க… கூடாது…’ என நினைக்க,
சுகுமாரனோ, ‘இந்த வீட்டோட சாபகோடுன்னு நினைக்கிறேன். திரும்பி திரும்பி இந்தாளு பேச்சையே கேக்குற மாதிரியான சூழ்நிலையே அமையுது. ச்ச.. ‘ என நினைத்தவருக்கு தங்கையின் கணவன் மீது துளியும் நம்பிக்கை இல்லை. தன் மருமகனைக் கூட ஒரு கட்டத்தில் சேர்த்துக் கொள்வார். ஆனால் சண்முகத்தை… ம்ஹீம்.. ஆரம்ப முதலே ஆவது இல்லை… தங்கையின் முகத்திற்காக பார்க்கிறார்.
நம்ம பீபி ஃபேஷன் மாணிக்கமோ, ‘ குடும்பம்னு ஒன்னு நல்ல படி அமையணும்னா… ஒன்னு புருஷெ சரியா பொறுப்பா இருக்கணும். இல்லன்னா பொண்டாட்டிக்காது இருக்கணும். இந்தக் கல்யாணம் நடந்தா அது விளையாட்டு கல்யாணமாத்தா இருக்கும். குடும்பமா இருக்காது…’ என நினைத்தவருக்கு மருமகளாவது தனக்கு துணையாக நிற்க வேண்டும் என்கிற ஆசை, சண்முகத்தால் நீர்த்து போய்விடுமோ என்ற கவலை வந்துவிட்டது.
ஏனெனில் அவர் தங்கையின் பேச்சை இதுவரை மீறியது இல்லை. ‘உங்க மகனை என் மகளுக்கு கல்யாணம் செய்து குடுங்க அண்ணா.. ‘ என வரலட்சுமி ஒரு வார்த்தை சொன்னால் அதை அப்படியே செய்து விடுவார்.
ஆனால் இவர்களின் கவலையை போக்குவது போல் பேச்ச தொடங்கியது வேறு யாரும் அல்ல நம் மாலு தான், ” ஏற்கனவே சொந்தம் உறவுன்னு சொல்லி எம்மகளுக்கு ஒருத்தன கட்டி வச்சீங்க. இப்ப எப்படி இருக்கா எம்மக. சந்தோஷமாவா இருக்கா! எல்லாமே அவ தலை மேல வந்து விழுகுது. காலைல எழுந்து வேலைக்கி போய், அவளே சம்பாதிச்சி அவளே வயித்த ரொப்ப வேண்டி இருக்கு… ம்ஹிம்…
புருஷெ வேலைக்கி போய் என்னவாது காசு பணம்னு ஒன்ன பாக்கணும். இல்லன்னா அந்த குடும்பமே சாஞ்சி போன ஆலமரம் தான். என்ன தான் பொம்பள தாங்குனாலும் நொட்ட சொல்லு சொல்லிட்டு தான் கிடப்பான்.
ஏதோ எம்மகள கண்டு அனுசரிச்சி கஷ்டத்துக்கு மத்தியில வாழ்ந்திட்டு இருக்கா. அவளுக்கு இருக்குற சாமர்த்தியம் அந்த சின்ன பொண்ணுக்கு கிடையாது. பார்த்தி என்ன சொன்னாலும் சரி சரின்னு தலைய தலைய ஆட்டும். அவெ குட்டிய ஏமாத்திட்டு ஊர் சுத்த போய்டுவான்… நம்ம வீட்டுக்கு ஒத்த ஆம்பளப்பிள்ள. நம்ம அடுத்த தலைமுறையே அவன்தா.
அதுனால அவனுக்கு வரப்போற பொண்ணுக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கணும். ஏன்னா இந்த வீட்டுக்கு அவ தான் ஒத்த மருமக. நம்ம குடும்ப கௌரவம் பார்த்தி கல்யாணத்துல தான் அடங்கி இருக்கு. பாத்துக்கங்க….”
“என்ன மாமா? உ மாமியாரு உன்ன கண்ட படி பேசுது. உனக்கு கோபமும் ரோசமும் வரல. நானா இருந்தா இன்னேரம் என்ன செஞ்சிருப்பேன் தெரியுமா?” பார்த்திபன் சந்ருவின் காதை கடிக்க,
“என்ன செஞ்சிருப்ப? பக்கம் பக்கமா டயலாக் இருக்கு. ரொம்ப நேரமா பேசீட்டு இருக்கிங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க. நான் உங்க முன்னாடியை நிக்கிறேன்னு கைய கட்டிட்டு நின்னிருப்ப. சரியா… ” சந்ரு.
” ச்ச… ச்ச… நின்னா கால் வலிக்கும் மாமா. அதுனால உக்காந்திருப்பேன்.. ” என்க அவனை நிமிர்ந்து முறைத்தான் சந்ரு.
“ஏன் மாமா? உனக்கு இந்த வீட்டுல மரியாதையே கிடைக்கறது இல்லை. அத பத்தி உன்னோட கருத்து என்ன? அக்காவும் உன்ன இப்படித்தா ஜாட மாடையா திட்டுவாளா.. ” என ஆவலுடன் கேட்டான்.
“அவ எதுக்குடா என்னைத் திட்ட போறா. அதுவும் ஜாட மாடையா. நேர்ல வந்து நின்று சொன்னாக் கூட நான் கோபமே பட மாட்டேன்.”
“ஏன் மாமா? உணர்ச்சிகள் வத்திப்போச்சா?”
“கிட்டத்தட்ட அப்படி தான். நான் பெருசா காதுல வாங்கிக்க மாட்டேன். இந்த வேலைக்கி போற ஆம்பளைங்க வெளில இருக்குற கடுப்ப வீட்டுல பொண்டாட்டிட்ட காட்டுவாங்கன்னு காலா காலமாக ஒரு வசனம் சொல்வாங்கள்ல. இங்க அது உல்ட்டாவ இருக்கு… அவ்ளோ தான். “
“உன்ன house husband டா நடத்துறாங்களே ன்னு உனக்கு வருத்தமா இல்லயா! நாடி நரம்பு எல்லாம் பொடைக்கல.”
“இல்ல… ஏன்னா வீட்டுல ஒருத்தர் சம்பாதிக்கணும் இன்னொருத்தர் அத வச்சி வீட்ட நிர்வகிக்கணும்.. அதுல இந்த வேலைய ஆம்பளதா செய்யணும் இந்த வேலைய பொம்பளதா செய்யணும்னு பிரிச்சிக்குவாங்க.. நான் வீட்ட கவனிக்கிற house husband பதவிய எடுத்துக்கிட்டேன். அவ working wife ஆ மாறிட்டா. இதுல என்ன இருக்கு!
அந்த வகையில் உங்கக்காவ காட்டிலும் எனக்கு தான் பொறுப்பு ஜாஸ்தி. ” எனப் பெருமையாக சொன்னான் சந்ரு என்ற வீட்டு மருமகன்.
நேகா சந்ரு விசயத்தைப் பொறுத்த வரை அவன் கூறியது போல் தான் அவர்களின் வாழ்க்கை நடக்கிறது. மனைவி சம்பாதிக்க, கணவன் வீட்டு நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டான். அவ்வளவு தான்… இதில் பெருமைப்படவோ சிறுமைப்பட்டுக் கொள்ளவோ ஒன்றுமில்லை.
இருவரும் கிசுகிசுக்க மாணிக்கம் இருவரையும் ஒரு சேர முறைத்தார். அமைதியாகிப் போயினர். ஆனால் அந்த முறைப்பைக் கூட மாலுவிடம் வாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் சண்முகத்தை முறைக்க முடியவில்லை.
மாணிக்கம், சந்ருவைப் பார்த்திபன் போல் அல்லாது ஒரு வகையில் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் சில வீட்டு மருமகன்கள் போல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பணி விடை செய்யச் சொன்னது இல்லை. கூச்சம் பார்க்காது தன் வீட்டை போல் நினைத்து அனைவருக்கும் உதவுவான்.
மாப்பிள்ளை மிடுக்கில் முறுக்கிக் கொண்டது இல்லை. சண்முகத்தை போல் இல்லை என்று சொல்லலாம். இமியை அசைக்கும் வேலையைக் கூட செய்ய மாட்டார். கசங்காத சட்டை அணிந்து கொண்டு வரும் அவருக்கு, தட்டில் அவர் விரும்பு உணவு தான் இருக்க வேண்டும்.
எதுவும் செய்வதில்லை என்றாலும் மச்சினன்களிடம் மரியாதையை எதிர் பார்ப்பார். தன் பேச்சிற்கு எதிர் பேச்சு பேசக் கூடாது என்று நினைக்கும் அதிகார புத்தி அவருக்கு. மாணிக்கம் கேட்க மாட்டார். அதே போல் மாலுவும் சில நேரம் அவரின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்க மாட்டார்.
ஆனால், சண்முகத்திடம் தான் வரலெட்சுமி என்ற ஆயுதம் இருக்கிறதே. இதுவரை கணவரை ஒரு வார்த்தை சொல்ல விட்டது கிடையாது அவர்.
காரசாரமான விவாதத்துடன் காலை உணவு உண்டு முடித்தாலும், வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. இரவு உணவும் வந்தது. இளையவர்களை அனுப்பி விட்டு காலையில் விட்ட மாநாட்டை தொடர, சண்முகம் தன் மகளை பார்த்திபனுக்கு கட்டி வைப்பதில் பிடிவாதமாக இருக்க, மாலு கூடாது என்றார்.
அனந்தராமன் உட்பட பிள்ளையை பெற்ற இருவரும் அமைதியாக நிற்க, அகல்யா பாட்டி மட்டும், “ஆறு மாசத்துக்குள்ள எம்பேரனுக்கு கல்யாணம் முடிஞ்சே ஆகணும்.. இல்லாட்டி கல்யாணத்தையே எம்பேரன் வெறுத்திடுவான்னு நம்ம ஜோசியரு சொல்லிருக்காரு. எனக்கு பார்த்திபன் கல்யாணத்த பாக்கணும். எந்த பொண்ணா இருந்தாலும் எனக்கு சம்மதம் தான்… ” என்க, மாலதியின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர் ஆரம்பித்தது.
‘அதான் யாரா இருந்தாலும் ஓகேன்ட்டாங்களே! அப்ப ஏன் நம்ம தூரத்து அண்ணே மகளுக்கு பார்த்திபன் பேசக் கூடாது..’ எனச் சிந்தனைகள் ஓடத் தொடங்கியது.
“முதல்ல பார்த்திபன் கிட்ட இத பத்தி பேசுங்க. அவனுக்கு யாரையாது பிடிச்சிருக்கா. காதலின்னு யாராது இருக்கான்னு அவனோட அபிப்பிராயத்த கேட்டுட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.” என்ற ராமின் பேச்சு யாருக்கும் பிடிக்கவில்லை.
‘இது தான் பொண்ணு வந்து தாலிய கட்டுன்னு சொன்னா அவெ வந்து கட்டணும். அப்படித்தா எங்க பொண்ணுங்களுக்கு கல்யாண பண்ணி வச்சோம். அவெ பழகுற பொண்ணுங்களுக்கும், கூட்டீட்டு வர்ற பெண் தோழிகளுக்கும் மருமகங்கிற அந்தஸ்த தர முடியாது. ஏன்னா நம்ம குடும்ப ஸ்டேட்டஸ் அப்படி.’ என்றுவிட்டார் மாலு.
” நாம சொந்தம் இல்லாம வெளி இடம் தெரிஞ்சவங்க மூலமா பாப்போம். தீவிரமா தேடுனா அவனுக்குன்னு பிறந்தவ கிடைக்காமளா போய்டுவா.” என்றார் சுகுமாரன். அவருக்கும் விஷாலியின் உடனான பார்த்திபனின் திருமணத்தில் விருப்பம் இல்லை. அது நடந்தால் சண்முகத்தை கையில் பிடிக்க முடியாது என்பதால்.
“அதான் ஒரு வர்ஷமா தேடுறீங்களே மச்சான். எதாவது அமைஞ்சதா… இல்லைல்ல. இப்ப ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணணும்கிற போது. அதுக்கு எம்பொண்ணு தயாரா இருக்கும் போது. ஏன் சொந்தத்துக்குள்ள வேண்டாம்னு சொல்றிங்க. நேகா கல்யாணமும் சொந்தத்துக்குள்ள தான் நடந்தது. பிள்ள குட்டி எல்லாம் நல்லாத்தான இருக்கு. ஊனமா இல்லைல்ல…” எனச் சொன்னவர் தான் பெண் வீட்டாரை விரட்டியடித்து என்று தெரிந்தால் என்னாகும்?
“இதோ பாருங்க தேவையில்லாம என்னையும் எங்குடும்பத்தையும் பத்தி நீங்க பேசக் கூடாது.. உங்களுக்கு என்ன வேணுமோ அத தெளிவா கேளுங்க. அத விட்டுடுட்டு உதாரணம் சொல்றேன்னு எங்குடும்பத்த எட்டி பாக்காதிங்க.. ” என ரோசமாக சொன்னது சந்ரு தான்.. அவனைப் பற்றி விமர்சிக்கும் உரிமை அவனின் இரு மாமியாருக்கும் மாமனாருக்கும் மட்டுமே உண்டு. மற்றபடி யார் அவனைக் கேலியாக ஏளனமாக பேசினாலும் எதிர்த்து விடுவான்.
“அதா ஆறு மாசம் டயம் இருக்கில்ல அதுவரைக்கும் நாம பொண்ணு தேடி பாப்போம்.. எங்க வீட்டு சைடுல ஒரு வரன் இருக்கு.. நீங்க என்ன சொல்றீங்க மாமா? ” என மாலு அனைவரையும் பேசி சரிக்கட்டி பார்த்திபனிடம் பூஜாவின் நம்பரை தந்து பேசச் சொல்லினர்.
‘வாவ்… இப்படி ஒரு ஆப்பர்சூனட்டி கிடைக்கும்னு தெரிஞ்சா நான் டெய்லி ஒரு பொண்ண பாக்க சொல்லிருப்பேனே. இத்தன வர்ஷத்த வேஸ்ட் பண்ணிருக்க மாட்டேனே. ‘ எனப் பூஜாவின் நம்பர் கிடைத்த சந்தோஷத்தில் அவளுக்கு கால் செய்தான். முதலில் இருவரும் பேசி பழகி பின் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.
பாரதி, அதிவேகமாக தன் ஸ்ப்லெண்டர் பைக்கை ஓட்டிக் கொண்டு பூஜாவின் இல்லத்திற்கு சென்றாள். அங்கு அவளைக் கண்டு முகம் சுளித்த ரேணுகாவைக் கண்டு கொள்ளாது வேகமாக மாடிப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றாள் அவள்.
ரேணுகாவும் மாலதியும் கிட்டத்தட்ட ஒன்று தான். தராதரம் பார்த்து பழகும் ஆசாமிகள் அவர்கள். பூஜா பாரதியின் நட்பு LKG யில் தொடங்கியது. பாரதி அன்னையுடன் சென்னை வந்த பிறகு தோழியை பார்க்க முடியாததால் அழுதாள். அந்த அழுகையில் பூஜாவிற்கு காய்ச்சலே வந்து விட்டது. பின் ஜெயசீலன் மகளுக்காக சென்னைக்கி மாற்றல் வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.
பாரதியைக் காண என்று அவளின் ஏரியாவிற்கு தன் மகள் பூஜா செல்வது பிடிக்காத ரேணுகா, பாரதியிடம், “இதோ பாரு… உனக்கும் எம்மகளுக்கும் ரொம்ப நாள் பழக்கம் நட்பு எல்லாம் சரித்தா. ஆனா உன் ஏரியாக்கு அவ வர்றது… அவள பாக்க நீ என் வீட்டுக்கு வர்றதும் சரியில்ல. நாளைக்கி வீட்டுல எது காணாமப் போனாலும் எனக்கு உம்மேலதா சந்தேகம் வரும். நான் ஏதாவது சொல்லி பூஜா அப்பாக்கு கோபம் வந்து… சண்ட போடுறதுக்கு பதில… ரெண்டு பேரும் ஃபோன்ல உங்க நட்ப தொடருங்க. நேர்ல பாக்குறேன்னு இங்கெல்லாம் வராத.” என்று விட்டார் அவர்.
பூஜாவிற்கு அது அதீத கோபத்தை தர, ” அவங்க சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு பூஜா. எங்க ஏரியா கொஞ்சம் அப்படி இப்படி தான்.. உனக்கு அது நல்லது இல்ல.. எந்த அம்மாவா இருந்தாலும் தன்னோட குழந்தையோட சேஃப்டியத் தான் முதல்ல யோசிப்பாங்க. அதுனால நாம நேர்ல பேசிக்க வேண்டாம்.” என நட்பிற்குள் பிரேக்கப் செய்தாள்.
பூஜா அடம்பிடித்து தினமும் ஒரு மணி நேரம் என நேரம் குறித்து வைத்து வெளி இடங்களில் சந்திக்க தொடங்கினர். தினமும் மணிக்கணக்கில் அலைபேசியில் பேசுவர் இருவரும். கல்லூரியில் நடந்தது… வீட்டில் சண்டை இட்டது… எனப் பூஜாவின் தினசரி நடவடிக்கைகள் அனைத்தையும் பாரதியிடம் சொல்லவில்லை என்றாள் பூஜாவின் தலை வெடித்து விடும். பாரதி இல்லாது பூஜா இல்லை என்று சொல்லும் அளவுக்கு பாரதியுடன் ஒன்றி போனாள் பூஜா.
பாரதியைப் பொறுத்த வரை பூஜா தோழி மட்டுமல்ல.. தங்கை, அம்மா, மாமியார் எனப் பல உறவுகளுக்கு சமம். அவளின் வாழ்க்கையில் பட்ட… பட்டுக் கொண்டிருக்கும் துன்பங்களுக்கு வடிகால் பூஜா. எப்போதும் வீட்டிற்கு வராதவள் இப்போது அடித்து பிடித்து வீடு வந்து சேர காரணம், பூஜா அனுப்பிய குறுந்தகவல் தான்.
“இன்னும் பத்து நிமிஷத்துல என்னை வந்து நீ பாக்கலன்னா.. என்னோட டெத் பாடியத்தான் பாப்ப.. ” என்ற தகவலை அனுப்பி இருந்தாள் பூஜா. அதான் பதறிப் போய் வந்தாள் அவள்.
“பூஜா… பூஜா… கதவ திற… பூஜா.. ” என அறையின் வாயிலை உடைத்துவிடும் வேகத்தில் தட்ட, சில நிமிடங்களுக்கு பின்னே கதவை திறந்தாள் பூஜா.
“கதவ தொறக்க உனக்கு அவ்ளோ நேரமா?”
“பாத்ரூம்ல இருந்தேன். அப்படியே எப்படி வர்றது? ” என அசால்ட்டாக சொல்லி தலையணையை அணைத்தபடி கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
“ம்ச்… எதுக்குடீ அப்படி ஒரு மெஸ்சேஜ அனுப்புன… நான் பயந்து போய் எவ்ளோ வேகமா வந்தேன்னு தெரியுமா உனக்கு.”
“ஓ தெரியுமே. . உ பைக் சவுண்டு கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். பட் இவ்ளோ… டென்ஷனாகுற அளவுக்கு நான் எதுவும் அனுப்பலயே.”
“அப்ப இதுக்கு என்னடி அர்த்தம்.. ” என தன் நோக்கியா பட்டன் டயிம் ஃபோனை காட்டினாள்.
“நானும் உன்ன பாக்கணும் பாக்கணும்னு எத்தன தடவ தான் கால் பண்றது. நீ சன்டே இன்னும் வரல. மன்டே இன்னும் வரலன்னு டெய்லி காலண்டர் கணக்கா நாள் சொல்லிட்டே இருந்த. அதா உன்ன வரச் சொன்னே. என்ன தப்பு… ” என்றவளை முறைத்த பாரதி அவளின் முன் கட்டிலில் அமர்ந்து கொண்டு,
“என்னாச்சி பூஜா…” என கேட்க,
“ரெண்டு நாளா நான் ஒரு பையங்கூட ஃபோன்ல பேசிட்டு இருக்கேன். எனக்கு பாத்து வச்சிருக்குற மாப்ளயாம் அது.”
“நீ ஆங்கிரி பேடா மாறுற அளவுக்கு ஒன்னுமில்ல. ஜஸ்ட் மூஞ்சி பாக்கத்தா. அவெங்கிட்ட பேச ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியல. அந்த அளவுக்கு நல்லா பேசுறான்… வழியல. அதே நேரம் திமிராவும் இல்லாம ஃப்ரெண்லியா செம்மைய போகுது டாக்.. ” எனக் கற்பனைகளில் பேசினாள்..
“அதுக்கும் என்னை வரச் சொல்றதுக்கும் என்ன சம்மதம். “
“அவன எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா… “
“என்னடி ஆனா ஆவன்னாண்டு.. சீக்கிரம் சொல்லு எனக்கு வேல கெடக்கு. “
“என்னை விட அது தான் பெருசின்னா… ஏன் வந்த.. விட வேண்டியது தான. ” எனச் சூடாக கேட்டாள்.
“இப்ப நான் என்ன பண்ணணும்னு எதிர் பாக்குற?”
“அது எனக்கு அவன பிடிச்சிருக்கு. ஃபோட்டோல பாத்திருக்கேன். ரெண்டு பேருக்குமே செட்டாகுற மாதிரி இருக்கு. உனக்கும் அவன பிடிச்சிருக்கான்னு சொல்லணும்.. நாம வழக்கமான பண்றது பண்ணணும்.”
” உங்கம்மாக்கு தெரிஞ்சா என்னாகும்னு தெரியுமா…”
“அதெல்லாம் ஆகாது… இத்தன நாள் பண்ணிருக்கோம் மாட்டுனது இல்லல்ல. “
“முடியாது பூஜா. என்னால இந்த மொற முடியாது.” எனப் பாரதி எழுந்து கொண்டாள்.
” அவ்ளோ தானா நம்ம நட்பு. உன்னோட ஃப்ரெண்ட்டுக்காக நீ இத கூட செய்ய மாட்டியா? நான் இப்ப என்ன கேட்டுட்டேன்…. ஒரு உதவி.. ஒரே ஒரு உதவி.. அத பண்றது மூலமா நான் அவன கல்யாணம் பண்ணலாமா வேண்டாமான்னு முடிவெடுப்பேன்னு தான கேட்டேன். அது கூட பண்ண மாட்ட… ” எனக் கண்ணீர் விட, தோழியின் அழுகை பொறுக்காது,