Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் 17

அத்தியாயம்: 17

“உனக்கு பாத்திருக்குற பொண்ண நீ மட்டும் தான் தனியா பாத்து பேசி முடிவு பண்ணணும்.. எதுக்கு என்னையும் கூப்பிடுற.. ” என்று சடைத்துக் கொண்டான் வின்சென்ட். 



Advertisement

“பாத்து பேச மட்டும்னா உன்ன எதுக்கு கூப்பிட போறேன். நானே எல்லாத்தையும் பாத்துப்பேன். யாராது ஆஞ்சினேய பக்தன, பொண்ணு கூட பழக கூட்டீட்டு வருவானா..‌. ” 

“அப்றம் எதுக்கு என்னை கூட்டிட்டு வந்த.” என்ற வின்சென்ட்டுக்கு கடுப்பாக வந்து. 

Advertisement

Advertisement

ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளி வந்த அவனைக் கடத்தி கூட்டி வந்தால் கடுப்பு வராதா! குளித்து விட்டு வருகிறேன் என்றவனின் தலையில் நீரை தெளித்து ‘இது தான் என்னை பொறுத்தவரை குளியல்..’ என்று சொல்லி இழுத்து வந்துவிட்டான். 

எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நண்பன் கிடைக்க வேண்டும் எனத் தேவனிடம் கேட்டபடி உணவகத்தில் அமர்ந்திருக்கிறான் வின்சென்ட். 

Advertisement

“அது ஒரு பஞ்சாயத்து மச்சி… ஏதோ இன்டர்வியூ பண்ண ஆள கூட்டீட்டு வர்றதா சொன்னா! நமக்கு தான் கேள்வி கேட்டா பிடிக்காதே. ஒரு வேளை தப்பு தப்பா ஆன்சர் பண்ணி அடி தடி வெட்டு குத்துன்னு நிறைய ஆக்ஷன் சீன் நடந்தா ஒத்தாசைக்கி இருக்கும்னு உன்னக் கூட்டீட்டு வந்தேன். அடிபட்டு விழுந்தவனுக்கு ட்ரீட்மெண்ட் பாக்க பக்கத்திலேயே டாக்டர் இருந்தா நல்லது தான. ஆம்புலன்ஸ் செலவு மிச்சம்.”

“வாட்… அடிதடியா… என்ன சொல்ற பார்த்தி?” என்க, அப்போது பூஜா அவனை பார்த்து கை அசைத்தபடி வந்தாள்..

கத்தரிப்பூ நிறத்தில், பாதம் தொடும் அளவுக்கு நீளமான டாப் அணிந்து துப்பட்டாவை, ஒரு பக்கமாக போட்டு அவள் நடந்து வந்த அழகில் அந்த ஹோட்டலில் வெள்ளப்பெருக்கே வந்து விட்டது. எப்படி என்றால் பார்த்திபன் விட்ட ஜொல்லில். வாயை வாட்டர் பால்ஸ் அளவுக்கு திறக்காதது ஒன்று தான் குறை.. திறந்திருந்தால் ஹோட்டல் மூழ்கி இருக்கும்.  

“ஹாய் பார்த்திபன்…” என்றபடி வின்சென்ட்டை ஒரு பார்வை பார்த்தபடி இருவருக்கும் முன் இருந்த நாற்காலியில் அமர, பார்த்திபன் எழுந்து நின்று விட்டான். அவளை வரவேற்கத்தான்‌…

“ஃபோட்டோல பாத்தத விட நேர்ல சூப்பரா இருக்க. நைட்ஸ் டூ மீட்‌ யூ…” என அவளின் மதி முகத்தை ரசித்தபடி கரம் நீட்ட, அவளும் அவன் நீட்டிய கரத்தை குலுக்கினாள்.

“நானும் இதையே தான் சொல்ல நினச்சேன். நீங்களே சொல்லிட்டிங்க.‌ யூ லுக் வெரி ஸ்மார்ட். அண்டு டூ கூல். ” எனப் பாராட்ட, சிறு வெட்கம் கூட வந்தது பார்த்திபனுக்கு. 

“என்ன ஆர்டர் பண்ண?” என அவளின் விருப்பம் கேட்டான்.

“எனித்திங்… ” என்றவளுக்கு அவன் அந்த உணவகத்தின் ஸ்பெஷல் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்தவன்,

“ஐஸ்கிரீம் ஓகே ஃபார் யூ. இல்ல ஸ்லிம் பாடிய மெய்ட்டேன் பண்ண டயட்டுன்னு சொல்லி ரெஸ்டிக்ஷன் எதுவும் இருக்கா? ” என புன்னகைக்க,

“நோ… சாப்பாடு விசயத்துல எந்த கட்டுப்பாடும் எனக்கு கிடைக்காது‌‌. பட் சாப்பிடுற அளவுக்கு உடல் உழைப்பும் வேணும்… அவ்ளோதான்.” 

” ம்… நீ டான்ஸ் ஆடுறதுக்கு எனர்ஜி நல்லா சாப்டாத்தான கிடைக்கும். உனக்கு க்ளாசிக்கல் டான்ஸ்ல மட்டும் தான் இன்ட்ரெஸ்ட்டா?”

“இல்ல வெஸ்டனும் ஆடுவேன்.” என இருவரும் தங்களுக்குள்ளேயே பேச, பக்கத்தில் நண்பன் என்ற பெயரில் ஒருவனை அழைத்து வந்தோமே ஒரு மரியாதைக்காவது அவனை அறிமுகம் செய்து வைப்போமே என்ற எண்ணம் இல்லாது இரு ஐஸ்கிரீம்களை மட்டும் ஆர்டர் செய்தான் பார்த்திபன். 

பூஜாவிற்கு நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். ஒரு முறையாவது மேடை ஏறி பரதம் ஆட வேண்டும் என்பது அவளின் கனவு. நன்றாக வளைந்து நெளிந்தாள் ஆடுவாள். ஆனால் மேடையையும் கூட்டத்தையும் பார்த்து விட்டு திரும்ப வந்து விடுவாள்.

‘வேண்டாம்… நான் என் பெட் ரூம்குள்ளையே ஆடிக்கிறேன். வேற யாரும் என்னை பாக்க  வேண்டாம். என்னை பாராட்ட வேண்டாம்.’ என்பவளுக்கு ஸ்டேஜ் ஃபியர் அதிகம். ஆனால் மற்றவர்களை கோலி செய்து பேசுவாள்‌. வாயாடி.. ஓட்டை வாய்… யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாத அளவுக்கு வெள்ளந்தி. 

பூஜாவிடம் பேச்சை வளர்க்க வேண்டியே சிலபல நடனங்களின் பெயர்களையும் அசைவுகளையும் கூகுளில் இரவு முழுவதும் தேடி கண்டு பிடித்து, அதைப் பற்றி கேட்டு தன் உரையாடல்களை தொடங்க, வந்த பனிக்கூழ் கூழாகவே மாறியதை இருவரும் கவனிக்கவில்லை‌‌. சுற்றம் மறந்து போனது இருவரின் சுவாரஸ்யமான பேச்சில். 

அதைக் கலைக்க என வந்தது பூஜாவின் தொலைபேசி அழைப்பு.  “டூ மினிட்ஸ்… இதோ வந்திட்டேன். நீ அங்கயே இரு.‌..” என சொல்லி பார்த்திபனிடம் கண் ஜாடை காட்டியபடி பேசிக் கொண்டே எழுந்து சென்றாள்.

‘இதுக்கு தொலைபேசின்னு பேரு வச்சதுக்குப் பதிலா தொல்லை பேசின்னு வச்சிருக்கலாம்.. முக்கியமானத பத்தி பேசும் போது தான் சத்தம் போட்டு ஊரக்கூட்டும்‌. ச்ச…’ எனப் புலம்பிய படியே நண்பனை பார்க்க, அவன் உறங்கி விட்டான். 

“டேன் வின்சா… வின்சா‌… எந்திரி டா.. உன்ன தூங்குறதுக்கா கூட்டிட்டு வந்தேன்.. ” என உலுக்கி எழுப்பிவிட்டான்.

“பேசி முடிச்சிட்டீங்களாடா.. போலாமா.. ” எனத் திருதிருவென விழித்தபடி அவன் கேட்க,

“இல்ல டா‌… இப்ப தான் வந்த விசயத்த பத்தியே பேசப் போறோம். அதுக்கு தான் ஆள் கூட்டிட்டு வர போயிருக்கா…”

“அப்ப இவ்ளோ நேரம் பேசுனது?”

“அது ஜஸ்ட் ஃபன் டா.. ” என கூலாக சொல்ல… வின்சென்ட் டென்ஷன் ஆகி விட்டான்‌.‌

‘பின்ன! என்ன பேச வந்தானோ அதை பேசாது ஒரு மணிநேரமாக கண்டதையும் பேசினா.’

“அப்படி என்னத்த பேச போறிங்க.. முதல்ல பூஜா எங்க? யார கூட்டிட்டு வர்றா?” 

“அவளோட பெஸ்டிய கூட்டிட்டு வரப் போயிருக்கா. ”  

“பாய் பெஸ்டியா‌.‌‌.. அப்ப அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கா?”

“இல்லடா… அது வெறும் பெஸ்டி டா. இது க்ளோஸ் ஃப்ரெண்டு. அது ஆணா பொண்ணான்னு பூஜா சொல்ல. பட் கொஞ்சம் டெரர்ன்னு மட்டும் சொல்லிருக்கா. நீ என்னடான்னா இப்படி வாய்க்கு வந்த படி பேசுற.. ” எனக் கோபப்பட்டான் பார்த்திபன்.

‘பின்ன கல்யாணம் பண்ணிக்கிறேனோ இல்லையோ. அந்த பொண்ணு அழகா இருக்கு. அதுக்கு லவ்வரோ எக்ஸ் லவ்ரோ இருந்தா எப்படி. இருக்காதுன்னு நம்புவோம்.. ‘ பார்த்திபனின் மைண்ட் வாய்ஸ்.

“இப்ப மிஸ் பூஜா எங்க? ” என அவன் கேட்கும் நேரம் பூஜா பாரதியுடன் நடந்து  வந்து கொண்டிருந்தாள். கரங்கள் கோர்த்து இருவரும் வர, வின்சென்ட்டுக்குள் சந்தோஷம் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது. 

“நமக்கு கம்பெனி குடுக்க ஒரு ஆள் கிடைச்சிருச்சி.. ‘ என்பதால்.

அங்கு பார்த்திபனுக்கோ… இத்தனை நேரம் இருந்த இதமாக குளிர் மறைந்து உஷ்ணம் பரவத் தொடங்கியது. காரணம்… பூஜா பாரதியின் காதில் எதையோ பேசியபடி நடந்து வந்தாள்.

பார்த்திபன் கண்களுக்கு அன்று பார்த்த ஒத்த ரோசா தானா இது?? இல்லை அவள போல் வேற யாரோவா? என வேலை செய்யாத தன் மூளையை கசக்கி பிழியத் தொடங்கினான்.

இது தாங்க நம்ம brilliant பூஜாவின் திட்டம்‌. அதாவது பாரதியை தன் பெஸ்டி என அறிமுகம் செய்து. பூஜாவிற்காக பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளையை நேர்காணல் நடத்த வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் அடுத்த கட்ட நகர்வு. இல்லையே ‘ போப்பா.. போய் வேற ஏதாவது பொண்ணு இருந்தா பாத்துக்க.. ‘ எனத் துரத்திவிட்டு விடுவார். 

இது போல் பலரைத் துரத்தி இருக்கின்றனர். பார்வை சரியில்லை. மெச்சூரிட்டி இல்லை. அவனின் கவனம் உம் மீது இல்லை. அம்மா பையனா இருக்கான். சுய புத்தி கிடையாது. கீ கொடுத்து பொம்ம போல் யாரோ சொல்லித் தறுவதைப் பேசுகிறான்.‌ கஞ்சனாக இருக்கிறான். ஒரு ஃபுட் ஆர்டர் பண்ண இந்த யோசன யோசிக்கிறான். திமிரா பேசுறான். என பல காரணங்களை இருவரும் கூட்டாக கண்டு பிடிக்க‌, அதை வைத்து திருமணப் பேச்சை நிறுத்தி விடுவாள் பூஜா.

இம்முறை பார்த்திபனை பூஜாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவன் மேற்சொன்ன கேஸ்ஸாக இருந்தால் என்ன செய்வது? ஆதலால் பாரதியைப் பார்த்திபனை இன்டர்வியூ செய்ய அழைத்து வந்துள்ளாள்.

பாவம்… தன் தோழியை பூஜாவே மாட்டி விட்டுள்ளாள். 

உள்ளே நுழைந்த சில நொடிகளிலேயே பாரதியின் பார்வை வட்டத்திற்குள் பார்த்திபன் விழுந்து விட்டான். அவளை அவன் பார்க்கவில்லை. ஏனெனில் அவளுக்கு முதுகை காட்டி வின்சென்ட்டுடன் பேசுவதில் மும்முரமாக இருந்தான். பின்னால் தெரிந்த வரிவடிவத்தைப் பார்த்தே அது பார்த்திபன் என்று சொல்லியது அவளின் மனம். ஆனாலும் அவன் தானா அது? நாங்கள் காண வந்துள்ளது அவனைத் தானா என்பதை உறுதிபடுத்த நினைத்து,

“அந்த டேபிள்ள இருக்கானே அவனா உனக்கு பாத்திருக்குறவெ?” எனப் பாரதி சிறு படபடப்புடன் கேட்டாள். உள்ளுக்குள் ஒரு வேண்டுதல், அவனாக இருக்க கூடாது என்று.

“ம்… அவெந்தா… “

“ரெண்டு பேர் இருக்காங்களே!!” என்றபோது, அது பார்த்திபனாக இருக்கு கூடாது என மனம் மீண்டும் மீண்டும் இறைவனைத் தொந்தரவு செய்தது.

‘லேட் வேண்டுதல்.. ‘ எனக் கடவுள் அதை நிராகரித்தது தெரியாது போயிற்று.

“ம்… அந்த ஓய்ட் அண்டு க்ரே டிசர்ட். அவன் பக்கத்துல அவனோட ஃப்ரெண்ட்.”

“பூஜா… அவெ பேரு என்ன சொன்ன?” இப்போதும் நம்பிக்கையை விடாது கேட்டாள். 

‘திரும்ப திரும்ப கேட்கிறாளே! இவளுக்கு என்ன ஆயிற்று?’ எனப் புருவங்களை நெறித்த படி, 

“எவன் பேரு?” எனக் கேலியாக கேட்க,

“உனக்கு பாத்திருக்குற பையன்.‌‌ எவன பாக்கச் சொல்லி, எவனோட கேரெக்டர தெரிஞ்சிக்க சொல்லி என்னை இழுத்திட்டு வந்தியோ! அவெ…” எனக் கடுப்புடன் சொல்ல,

“ஹேய்.. உனக்கு என்னாச்சி? ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்கிற?” என்றாள் பூஜா.

“முதல்ல அவெ பேரு என்னன்னு சொல்லு. அப்றமா நான் சொல்றேன் என்னோட பிகேவியருக்கான காரணத்த… ம்.. சொல்லு அவெ பேரு என்ன? “

“பார்த்திபன்… VMS jewellery group-ப்போட ஓனர் திரு மாணிக்கவேலோட ஒரே பையன். உயரம் அஞ்சு அடி எட்டங்குலம். சிம்ம ராசி… நட்சத்திரம்…‌ ம்… என்னமோ போட்டிருந்தது அத நான் சரியா கவனிக்கல. படிச்சது லண்டன்ல,  மெக்கானிக்கல் இன்ஜினியரிங்… இப்போதைக்குச் சும்மா தான் இருக்கான். ஆனா கொஞ்ச நாள் கழிச்சி கம்பெனிய அவெந்தா எடுத்து நடத்த போறான். நிறைய சொத்து இருக்கு. நல்ல ஃபேமிலி பேக் ரவுண்ட். வளமான குடும்பம். ப்ளாப்… ப்ளாப்… ப்ளாப்… 

எங்கம்மா சொன்ன எல்லாத்தையும் நான் உங்கிட்ட சொல்லிட்டேன். போதுமா டீட்டெய்ல்ஸ். இப்ப சொல்லு, அவன உனக்கு முன்னாடியே தெரியுமா?”

“நான் கொஞ்ச நாளைக்கி முன்னாடி மும்பை போனேன்னு சொன்னேனே. என்னோட அப்பார்ட்மெண்ட்காக, நான் ஒருத்த ஏமாத்திட்டேன்னு…” 

“ஓ மை காட் அது பார்த்திபனா!!” என வாயை மூடிக் கொண்டு விழி விரிய கேட்ட பூஜா, திரும்பி பார்த்திபனை பார்க்க, அவன் வின்சென்ட்டுடன் விளையாடிக் கொண்டிருந்தான். 

‍”நான் திரும்பி போய்டுறது தான் நல்லது. பாத்தான்னா கண்டிப்பா பிரச்சன பண்ண வாய்ப்பிருக்கு. நீ அவன்ட்ட பேசிட்டு கிளம்பு.” எனச் சொல்லி பாரதி திரும்பிச் செல்ல, அவளைத் தடுத்தாள் பூஜா. 

“எங்கப்பெ புதருக்குள்ள இல்லன்னு நீயே காட்டி குடுத்திருவ போலயே! நீ அது இல்ல… அவெ பாத்தது நீ இல்லை… ஓகே… நீ என்னோட ஃப்ரெண்டு, சென்னைய தவிர நீ எங்கயும் போனது இல்ல… வா… ” எனப் பார்த்திபன் பார்த்த பெண் நீ அல்ல. உன்னை அவன் கண்டு பிடிக்க வாய்ப்பில்லை எனச் சொல்லி இழுத்து வந்தாள் பூஜா. பாரதியின் மறுப்பைக் காதில் வாங்கி கொள்ளாது.

” ஹாய் பார்த்திபன்… ஸாரி லேட்டாகிடுச்சி… இது என்னோட ஃப்ரெண்டு மணி பாரதி…” என அறிமுகம் செய்து வைக்க, பாரதி நிதானமாக பார்த்திபனுக்கு ஹாய் சொன்னாள். ‘உன்னை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை ‘ என்பது போல் அலட்சிய பார்வை ஒன்றை அவன் பக்கம் வீச, பார்த்திபன் கண்கள் இடுங்க பார்த்தான் அவளை.

கண்கள் பார்க்கும் கோணம் மாறும் போது காட்சிகள் கூட பிழையாக மாறலாம். இங்கும் அப்படியான காட்சி பிழை தான் நடைபெற இருந்தது.  

ஏன் காட்சி பிழை என்றேன் என்றால், அன்று பார்த்த மணி பாரதிக்கும் இன்று பார்க்கும் பாரதிக்கும் எண்ணிலடங்கா வித்தியாசம் உள்ளன.

அன்று, நீட்டாக மாடனாக நவயுக யுவதி போல் ஆடை அலங்காரங்களில் ஜெலித்த பார்த்திபனின் ஒத்த ரோசா இவள் அல்ல என்று உறுதியாக சொல்லும் அளவுக்கு மிகவும் சாதாரணமாக இருந்தாள் பாரதி.

முகத்திற்கு பவுடர் கூட அடித்திருக்க மாட்டாள். க்ரீஸ் படிந்த முகத்தை கழுவி துடைத்ததோடு பூஜா சொன்ன இடத்திற்கு தன் மெக்கானிக் உடையை மட்டும் கழற்றி வைத்துவிட்டு, நார்மலாக ஆண்கள் அணியும் முழுக்கை சட்டையும் ஜீன்ஸ்ஸுமாக வந்திருந்தாள் பாரதி.

அன்று மை பூசி ஆழி கண்கள் இன்று சாதாரணமாக காட்சி தந்தன. அன்று பார்த்திபனுக்கு பிடிந்திருந்த சாயம் பூசி அதரங்கள், இன்று சரி வர நீர் அருந்தாது வெளிறி போய் இருந்தன. விரித்து விடப்பட்டிருந்த கூந்தல் இன்று ஒரு ரப்பர் பேண்டிற்குள் அடை பட்டு அவளின் தலை அசைவிற்கு ஏற்றார் போல் இரு தோளிலும் உறவாடிய படி இருந்தது.

அன்று முகம் கொள்ளா சிரிப்புடன் இருந்தவள், இன்று பணம் தந்தாலும் புன்னகைக்க மாட்டேன் என இரும்பு பூட்டை போட்டுக் கொண்டிருந்தாள். அன்றைய பேச்சில் கனிவும் இனிமையும் இருந்தது. இன்று அது சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது.

இப்படி பல வித்தியாசங்கள் இருந்தாலும் பார்த்திபனின் பார்வை அவளின் மூக்கின் மீது இருந்தது. அவன் வர்ணித்த சைனா மூக்கு… அது தான் அவனிடம் அவளைக் காட்டிக் கொடுக்கப் போகிறது. 

பார்வையை மாற்றாது பார்த்திபன் பாரதியை பார்த்து வைக்க, “நீங்க தான் பார்த்திபனா? பூஜா சொன்னா, உங்களுக்கும் அவளுக்கு கல்யாணம் பேச்சு நடக்குறதா. உங்கள பத்தி சொல்லுங்களே தெரிஞ்சிக்கிறோம்.” என்க, அவன் வாய் திறக்கவில்லை.

வின்சென்ட் அவனைத் திரும்பி பார்த்தான், ‘என்னடா! இது ஆச்சரியமா இருக்கு! ஒரு பொண்ணே இவெங்கிட்ட வந்து பேசுன்னு சொல்லும் போது‌, வாய்ல கோந்த வைச்சிருக்குறவெ கணக்கா கம்முன்னு இருக்கானே. ஏன்… ‘ என.

பாரதி பதிலுக்காக பார்த்திபனை பார்த்தபடி இருக்க, பார்த்திபன் அவளை விழி விலகாது உற்று பார்த்தபடி இருக்க, பாரதிக்குள் குளிர் பரவத் தொடங்கியது. ஆனாலும் பூஜா சொன்னது போல், ‘தம்மை தாமே காட்டிக் குடுத்துவிட கூடாது.’ என நினைத்தவள் அதே மிடுக்குடன் மீண்டும் பார்த்திபனை பற்றி கேட்டாள்.

வின்சென்ட் தான் கூறினான். எங்களீ பார்த்திபன் நல்லவன். வல்லவன். நாலு வீட்டு ஆன்டிகளுக்கு சேவை செய்த ஆன்டி ஹீரோ.’ எனப் புகழ்ந்து தள்ள, 

“நீங்க பார்த்திபனுக்கு ஃப்ரெண்ட்டா?” பூஜா வித்தியாசமாக இருந்தது அவளின் குரல். இத்தனை நேரம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவனை ஊமை என்று நினைத்து விட்டாள் போலும். 

“எஸ்..‌. ஃப்ரெண்டு தான். ” என்றான் அவனும் அதே குரலில். 

“உங்க பேரு?” 

“வின்சென்ட்…”

“கிறிஸ்டீனா?” என புருவம் உயர்த்த,

“அதுல உங்களுக்கு எதுவும் பிரச்சன இருக்கா?” 

“இருக்கு…” என்றவள் வெகு ஆர்வமாக அவனின் பக்கம் தன் நாற்காலியை நகர்த்தி போட்டு, 

“சர்ச்சுல கேண்டில் ஏத்தி வச்சி சாமி குடும்பிடுவிங்களா? இல்ல மண்டி போட்டு சாமி கும்பிடுவிங்களா? இல்ல சும்மா நிமிந்து பாத்து சிலுவ போட்டுட்டு வந்திடுவிங்களா?” என சம்மந்தம் இல்லாமல் கேட்க, பார்த்திபன் முகத்தில் சிறு புன்னகை வந்தது. ஆனால் மற்ற இருவரும் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். 

‘எப்படி கும்பிட்டா உனக்கு என்னம்மா வந்தது?’ என்பது போல் வின்சென்ட் பார்க்க.

” அவ எதோ விளையாட்டுக்கு அப்படி கேட்டிட்டா. தப்பா எடுத்துக்காதிங்க.   ” என்றாள் பாரதி.

“பரவாயில்லை.” என அவன் சொல்ல வாயைத்திறக்கும் முன்,

“இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு. எனக்கு இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு. இத பத்தி நான் யாருக்கிட்ட கேக்குறதாம்… ம்.. நீங்க பதில் சொல்லுங்க. எப்படி கும்பிட்டா அருள் முழுசா கிடைக்கும்.” என ஆவலுடன் முகம் பார்க்க, வின்சென்ட் பேசத் தொடங்கினான்‌‌.‌ 

அவனின் அனைத்துமாகிய பரம்பொருளை பற்றி பேச கசக்குமா என்ன‌‌? அவனுக்கு ஜீசஸ் என்றால் மிகவும் பிடிக்கும். தினமும் அவன் விழித்தெழுந்ததும் பார்க்கும் பார்வை தன் அறையில் இருக்கும் குழந்தை ஏசு தான். பைபிள் வாசிக்காது அவனின் நாள் இனிய நாளாக என்றும் இருக்காது‌. 

பொதுவாக வின்சென்ட் பார்வையாளராக இருப்பான் பார்த்திபன் பேச்சாளராகி பெண்களுடன் பேசிக் கொண்டே இருப்பான். இன்று எல்லாம் தலைகீழாக நடந்தது. சில நிமிடங்கள் தான். பின்,

“பாம்பேல எந்த ஏரியா நீ?” எனத் திடீரென மணிபாரதியை பார்த்து பார்த்திபன் கேட்க, வின்சென்ட் அமைதியாகிப் போனான்.

ஒரு வழியா பார்த்திபன் கன்ஃபார்ம் பண்ணிட்டான் போலயே…

தென்றல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!