Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 16

 

       கீர்த்தீயை இருவர் தூக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் செல்வதை அந்த வழியாக மீட்டிங் முடித்து காரை ஓட்டி வந்த வெங்கட் பார்க்க உடனே வண்டியை நிறுத்தியவன் அவர்களை நோக்கி வர அதை கண்ட அந்த இருவரும் ஒருவரை ஒருவர் நோக்க ..

டேய் யாரு டா நீங்க என்று கேட்ட படியே வர சார் இது எங்க தங்கச்சி தீர்ருன்னு மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டா அதான் நாங்க ரெண்டு பேரும் அவள தூக்கிட்டு பொய்ட்டு இருக்கோம் என்றனர்.

என்னது இந்த பொண்ணு உங்க தங்கச்சியா அத நான் நம்பனுமா என்று ஒருவனின் முகத்தில் குத்து விட இன்னொருவன் கீர்த்தியை கீழே படுக்க வைத்தவன் பாக்கேட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவனை குத்த அது அவனது மணிக்கட்டில் கீச்சியது.



Advertisement

அதிலிருந்து இரத்தம் வரவே இருவரையும் போட்டு அடி அடியென அடிக்க இருவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினர்..

இருவரையும் பிடிக்க நினைத்தவன் தரையில் மயக்கத்தில் விழுந்து கிடந்த பொண்ணிண் முகத்தை காண அதிர்ந்தான்..

யாரோ ஒரு பெண்ணை கடத்திச் செல்கிறார்கள் என்று நினைத்த வெங்கட் அந்த இடத்தில் கீர்த்தி இருப்பாள் என்று சிறிதும் எண்ண வில்லை ‌.

Advertisement

யாரும் இல்லாத இடத்தில் இவளுக்கு இங்க என்ன வேலை இருந்திருக்கும் . இந்த இடம் ஒன்றும் பெண்களுக்கு பாதுக்காபான இடம் இல்லையே என்று நினைத்தவன் அவளை கைத் தாங்களாக தூக்கியன் அவனின் காரில் பின் இருக்கையில் படுக்க வைத்து சுற்றி முற்றியும் பார்த்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றான்…

Advertisement

அவனது கிளம்பிய பிறகே அந்த ஓடிப்போன இருவரும் வெளியே வந்து ச்ச இப்படி மிஸ் பண்ணிட்டோமே இது மட்டும் நம்ம பாஸ்க்கு தெரிஞ்சதுன்னா என்ன ஆகுறது என்று ஒருவரும் கூற ஆமா டா பாஸ்க்கு மட்டும் இப்படி நாம அந்த பொண்ண தப்பிக்க விட்டுட்டோம்னு தெரிஞ்சா நம்மல கொல பண்ணவும் தயங்க மாட்டாரு. அதுனால நாம கொஞ்ச நாளைக்கு இந்த ஊருலே இருக்க வேணாம் டா மச்சி என்று சொல்ல நீ சொல்றதும் சரி தான் டா வா நாம யாருக்கும் தெரியாம போறதுதான் நல்லது என்றவன் மற்றவனை அழைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்..

ஆனால் அவர்கள் இருவரையும் இரு கண்களுக்கு உரிய சொந்தமான ஒருவர் பார்த்துவிட்டு கொலை வெறியில் சென்றது..

அவளை அவனது அறைக்கு அழைத்துச் சென்றவன் அவளுக்கு சிகிச்சை அளித்தான். அவளது தலையில் லேசாக அடிப்பட்டிருக்க அதற்கு டெட்டால் போட்டு கீளின் செய்து மருந்திட்டவன் இதற்கு காரணமானவன் கார்த்திக்காக தான் இருக்கும் என்று எண்ணி அவன் மீது கோபத்தை மேலும் வளர்த்துக் கொண்டான்.

Advertisement

இதை செய்தது யார் என்று தெரியாமலே ஒருவரின் மீது பலியை சுமத்தி அதற்காக அவர்களின் வெறுப்பை வளர்த்துக் கொள்வது எந்த வகையில் நாயம் ஆகும் .

சிறிது நேரத்திலே கண் விழித்த கீர்த்திக்கு நடந்தது எதுவும் ஞாபகத்தில் இல்லை. அவளின் மூலைக்கு எட்டியது எல்லாம் ராஜிவ் தான். கண் விழித்த அடுத்த நொடி கூறிய வார்த்தை ராஜிவ் என்றே ..

அவளது சத்தத்தை கேட்ட வெங்கட் அவளிடம் வந்து இப்போ பரவால்லையா மிஸ் கீர்த்தி என்க வெங்கடை கண்ட கீர்த்திக்கு எதுவும் புரியாமல் முழித்துக் கொண்டிருக்க சார் ராஜிவ் எங்க என்றிட அவனுக்கு கோபமே வந்தது .

அதை வெளிக்காட்டாமல் சரி அத பத்தி அப்புறம் சொல்றேன் இப்போ கொஞ்சம் கிளம்புங்க  என்று கோபமாக கூற அதில் பயந்து போனவள் எழுந்து வெளியே செல்ல அவள் பின்னாடியே வெங்கட்டும் வந்து வண்டியில் ஏறு வீட்ல கொண்டு போய் விடுறேன் என்க அவளும் வந்து அமைதியாக அமர வண்டி அவனோட ஓட்டத்தில் பறக்க தொடங்கியது.

அரைமணி நேரத்திற்கு மேல் செல்ல வேண்டிய அவளது வீட்டிற்கு கால் மணி நேரத்திலே வந்து சேர்ந்தான்.

அவள் இறங்கி தேங்க்ஸ் சொல்லி விட்டு செல்ல அவள் தந்தை வெளியே வந்து அவள் காயத்தை பற்றி விசாரிக்க அப்போதே அதை கவனித்த கீர்த்தி தன் தலையை தொட்டு பார்த்து அமைதியாக இருக்க வெங்கட் முன்னே வந்து நான் டாக்டர் வெங்கடேஷ் சார் உங்க பொண்ணு வொர்க்ல இருக்கும் போது மயங்கி கீழ விழுந்துட்டாங்க அதுல அடிப்பட்டது தான் இது காலைல இருந்து சாப்பிடல அதான் மயங்கிட்டாங்க பத்திரமா பாத்துக்கோங்க நான் வரேன் சார் என்றவன் அவனது காரில் ஏறி பறந்தான்..

அவன் சென்ற பாதையை பாரத்து தலையில் கை வைத்திருந்த கீர்த்தி ஒன்றை யோசிக்க மறந்து போனால் எப்படி வெங்கட்க்கு தன் வீட்டு முகவரி தெரிந்தது என்று…

[the_ad id=”6605″]

அடுத்த இரண்டு நாட்களிலே உதய் சிங்கப்பூரில் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு வந்து உதகமண்டலத்திற்கு வந்து சேர்ந்தான்..

அவன் எப்போது ஊருக்கு சென்று வந்தாலும் அமைதியாக இருந்த வீட்டை மட்டுமே கண்டவன் இன்று சிரிப்பும் கேலியுமாக இருப்பதை கண்டான்.இதற்கெல்லாம் காரணம் நந்தினி தான் ‌. அவளின் வருகை தான் இந்த வீட்டின் மகிழ்ச்சியை சிறிது சிறிதாக கொண்டு வந்துக் கொண்டிருந்தது.

தான் காதலிக்கின்ற பெண் தன் கண் முன் இருந்தும் அவளை தான் தான் காதலிக்கிறேன் என்று சொல்ல முடியாமல் இருக்கும் நிலையை எண்ணி அவனிற்கு கோபமே வந்தது. இதையெல்லாம் செய்யறது சுமிக்காக தானே என்று மனதில் நினைத்து கொண்டான்…

சுமியும் நந்தினியும் கதை அளந்த படியே சமையலறையில் இருந்து வெளியே வர அதை கண்ட உதய்க்கு இருவரின் சிரிப்பையும் மனதில் பதிய வைத்துக்கொண்டான்..

சுமி அங்கே நின்றிருந்த உதயை கண்ட சந்தோஷத்தில் அவனை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டாள்.

ஹே உதய் வர இன்னும் நால்லு நாள் ஆகும்னு சொன்னா ஆனா  என சீக்கிரமே வந்துட்ட என்று கேட்க அவன் பார்வையோ அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கின்ற நந்தினியின் மேலே பதிந்திருக்க வேலை சீக்கிரமே முடிஞ்சிருச்சு அதான் வந்துட்டேன் என்று பதிலை மட்டும் சுமிக்கு கூறினான்..

சரி டா போ போய் ரெஃபிரஷ் ஆகி விட்டு வா நான் செஞ்ச பக்கோடா சாப்பிடுவியாமா என்றிட என்னது இன்னைக்கு நீ சமச்சியா உனக்கு தான் கேஸ் கூட ஆண் பண்ண தெரியாதே அப்புறம் எப்படி நீ சமைச்ச என்று கேலி செய்ய

ஹலோ என்ன ஓவ்வரா பேசுறீங்க பாஸ் நான் தான் சமைச்சேன் நந்து தான் சொல்லி குடுத்தா என்றிட என்னது நந்து வா இது எப்போலர்ந்து என்க அது உனக்கெதுக்கு போ போய்ட்டு ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா உனக்காக வெயிட் பண்றேன் அவனை அனுப்பி வைத்தாள்..

அவன் நேராக ஜானு அறைக்கு செல்ல அங்கே நந்தினி உறங்கும் ஜான்வி பக்கத்தில் அமர்ந்திருந்தாள்…

உள்ளே வந்த உதய் நந்தினியிடம் சென்று மனதில் நிதி என்று அழைக்க அவளின் மனதில் அவளுடைய அழைப்பதாக தோன்ற உடனே கண்களை சுழல விட்டாள்.

ஆனால் அங்கே உதய் தான் நின்றிருக்க அவளுக்கு தான் ஏதோ போல் ஆக முகம் சுருங்கி போனது.

என்னாச்சி நந்தினி எதையோ தேடுனீங்க அப்புறம் உங்க முகமே வாடி போச்சே என்றே கேட்க அவளோ ஒன்னும் இல்லை சார் யாரோ என்ன கூப்பிட்ட மாதிரி இருந்துச்சி அதான் சார் என்றவள் எழுந்து நின்றாள்…

ஓஓஓஓ என்றவனின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தது.

ரொம்ப தேங்க்ஸ் நந்தினி என்று மொட்டையாக சொல்ல எதுக்கு சார் எனக்கு இப்போ தேங்க்ஸ் சொல்றீங்க நான் எதுவும் பண்ணலையே என்றிட நீங்க எனக்கு எவ்வளோ பெரிய உதவி பண்ணி இருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியாது என்றான்..

நந்தினியோ முழிக்க உதய்க்கு அவளது முகபாவனையை கண்டு சிரிப்பு தான் வந்தது ஆனாலும் அதை மறைத்துக்கொண்டு எதுக்கு சொல்றேன்னு தெரியலையா என்றே புருவத்தை உயர்த்திட

அவளும் ஆமாம் என்பது போல் தலையாட்ட அவனும் தான் எதுக்கு நன்றி கூறினோம் என்பதற்கான காரணத்தை கூறினான்..

சுமிய சிரிக்க வைச்சதுக்கு தான் நன்றி சொன்னேன்  அவ சிரிச்சு நான் பாத்தே  ரொம்ப வருஷம் ஆச்சி அவளோட லைஃப்ல அவ ரொம்ப பெரிய கஷ்டத்த அனுபவசிட்டு இருக்கா அவளோட சந்தோஷத்த திருப்பி தரனும்னு நினைக்கிறேன் ஆனா லைஃப் ல என்ன நடந்துச்சின்னு அவளா சொன்னா தான் தெரியும். அதுக்கு நீ எப்போதும் அவ கூட இருக்கனும்னு நினைக்கிறேன் என்றான்..

இதுல என்ன சார் இருக்கு அவுங்க எனக்கு அக்கா மாதிரி இல்ல இல்ல அக்காவே தான் . நான் அவுங்க கூட இருந்தா சந்தோஷமா இருப்பாங்கன்னா கண்டிப்பா நான் கூட இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தாள்..

நான் உங்கள கஷ்ட படுத்தி என்னோட அம்மாவுக்காக தான் வர சொன்னேன் ஆனா நீங்க என்னோட பொண்ணுக்காவும் என்னோட ஃபிரண்ட் சுமிக்காகவும் நீ எவ்வளவோ பண்ணிருக்க அதுக்கும் சேர்த்து தான் என்றவன் என்னோட ஃபிரண்ட் சுமி என்பதை  அலுத்தி கூறினான்..

அப்போது ஜானு குட்டி கண்ணை கசக்கிக் கொண்டே எழும்ப இருவரும் ஒன்றாக நின்று ஜானுவை பார்க்க அவள் ஓடி வந்து அப்பா என்று கூறி இருவரையும் கட்டிக்கொண்டாள்.

பின் சிறிது நேரம் அவர்கள் இருவருடனும் நேரம் கடத்தியவன் அந்த இடத்தை விட்டு வந்தான் மாறாத புன்னகையோடு…

நந்தினிக்கு குழப்பமாக இருந்தது உதய் சாரும் சுமியும் கணவன் மனைவி என்றால் எதற்காக இருவரும் பிரிந்து வாழனும் அதேபோல் சுமி அக்கா ஜானு குட்டி என் பொண்ணு இல்லன்னு சொல்லி வெறுக்கிறாங்க ஆனா சார் இவ என் பொண்ணு தான்னு சொல்றாரு அத விட ஜானு குட்டி என்ன மொத தடவ பாக்கும் போது எண்ண பாத்து அம்மான்னு சொன்னா இப்போ என்னென்னா சுமி அக்காவ ஃபிரண்ட்ன்னு சொல்றாரு ஒரே குழப்பமா இருக்கே என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

ருமிற்கு சென்றவன் அந்த அறையில் இருக்கும் உள்ளறைக்கு சென்று அவனது இதயராணியாக இருக்கும் நந்தினியின் புகைப்படத்தின் முன்பு நின்று என்னோட காதல் உனக்கு புரியுமா நிதி நீ என்ன ஒரு ரெண்டு இல்லனா மூன்னு தடவ தான் பாத்திருப்ப ஆனாலும் நான் உன்ன என் மனசில உனக்கு நான் செல்லமா வச்ச பேர சொல்லவும் உன்னால அத உணர முடியுது பட்டூ அப்போ உனக்கு என்ன ஞாபகம் இருக்கா என்று பறக்கும் முத்தத்தை கொடுத்து அவள் கன்னத்தை தொட அங்கே அறையில் ஜான்வியுடன் இருந்த நந்தினி அவளது கன்னத்தை யாரோ தொடுகிறது போல் உணர்வும் அவளது உடல் சிலிர்த்தது..

இரவு வரவும் அனைவரும் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

[the_ad id=”6605″]

நந்தினி ஒரே நேரத்தில் ஜான்விக்கும் மரகத்தத்திற்கு ஊட்ட அப்போது உண்ண வந்த உதய் அதை கண்டு ஜான்விக்கு ஊட்ட வேண்டிய உணவை கேட்க இல்ல சார் வேணாம் நானே ரெண்டு பேருக்கும் ஊட்டுறேன் என்க பரவால்ல நந்தினி கொடுங்க இன்னைக்கு நான் என்னோட பொண்ணுக்கு ஊட்டி விடுறேன் என்றே ஜான்வி துக்கிய படி சொல்ல

அவளும் மறுப்பேச்சின்றி உணவு தட்டை தர அதை வாங்கிக் கொண்டவன்  வீட்டினுள் ஒரு பகுதியில் கண்ணாடியால் பொறுத்த பட்ட அறை  ஒன்று இருக்க அங்கே சென்றவன் ஜான்விக்கு நிலாவை காட்டி காட்டி சாப்பாடு ஊட்டினான்..

குழந்தையும் அடம்பிடிக்காம அவன் ஊட்ட ஊட்ட உண்டது . இதை அனைத்தையும் நந்தினி பார்த்து பூரித்து போனாள். அவள் கண்ணிலும் சிறு கண்ணீர் துளி வெளிப்பட்டது அவளது தந்தையை எண்ணி..

ஆனால் அவளுக்கு தெரியாத ஒன்று யாரை தந்தை என பாவித்து வைத்திருக்கிறாளோ அவர் அவள் தந்தை இல்லை என்று தெரிய வரும் போது அதை தாங்கும் சக்தி இருக்குமோ இல்லையோ அதற்குள் அவள் எத்தனை இன்னல்களை சந்திக்க போகிறாளோ தெரியவில்லை….

ஜான்வியை அறையில் விட்டுவிட்டு வந்தவன் அனைவருடனும் சேர்ந்து சாப்பிட தொடங்கினான்…

எல்லாரும் சாப்பிட்டு கொண்டு இருக்க உதய் சுமியை பார்த்து சுமி ஒரு ஒரு வாரத்துக்கு தேவையான ட்ரெஸ் எடுத்து வச்சிக்கோ நாளைக்கு நாம ஒரு டூர் மாதிரி போறோம் என்க அவளும் எந்த கேள்வியும் கேட்காமல் சம்மதித்தாள்.

பின்பு ஹரியும் நந்தினியும் என்கூட வரனும் என்று சொல்ல நந்தினி ஒகே ஹரி எதுக்கு அவனே இப்ப தான் காலேஜ் போயிருக்கான் ஒரு மாசம் தான் முடிஞ்சிருக்கு அதுக்குள்ள அவன் எதுக்கு வரனும் ஒழுங்கா அவன் அங்க படிக்கட்டும் என்று காட்டமாக கூற

அவன் வந்தா தான் நான் வருவேன் இல்லன்னா நான் வர மாட்டேன் என்றிவிட்டு பாதி சாப்பாட்டிலே எந்திரிக்க

சரி சரி உடனே கோப படாத அவனும் வந்து தொலையட்டும் என்றவன் ஒழுங்கா உக்கார்ந்து சாப்பாடு என்றான்…

சரிங்க சேர் என்று திரும்பவும் சாப்பிட தொடங்கினாள்..

நந்தினியிடம் திரும்பி உனக்கும் ஜான்விக்கும் தேவையானத எடுத்து வச்சிக்கோங்க என்க அவளும் சரி என்று தலையாட்டினாள். அதன் பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு உறங்க சென்றனர்…

அடுத்தநாள் விடியல் அருமையாகவே அமைந்தது. சூரியன் அதனின் உதயத்தை கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்கு கொண்டு வந்தது…

உதய்  நந்தினி சுமி ஜான்வி என நால்வரும் டூர் செல்ல ஆயத்தமானார்கள். இதில் ஜான்வி குட்டி மிகவும் சந்தோஷமாக இருந்தாள்..

சுமதியை வைத்து ஆலம் எடுத்து அவர்களை அனுப்பி வைத்தனர் மரகதம் மற்றும் மஹாலிங்கம்…

நால்வரும் கோவை ஏர்போர்ட்டில் நிற்க ஹரி நேராக ஏர்போர்ட்டிற்கு வந்தான். அவனை கண்ட நந்தினிக்கும் அதிர்ச்சி ஹரிக்கும் அதிர்ச்சியாக இருந்தது..

அங்கே சென்னையில் ஏதோ மீட்டிங் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டு இருந்த சூர்யாவை அழைத்த கங்கா அவன் வரும் வரை ஹாலில் அமர்ந்திருந்தாள்…

அவன் வேகமாக கிளம்பி கீழே வந்து சொல்லுங்க அம்மா எதுக்கு என்ன இப்போ வர சொன்னீங்க என்றே ஃபைலை பார்த்த படியே கேட்க அது அன்னைக்கு உன்கிட்ட பொண்ணு பாக்குறதுக்கு ஓகேவான்னு கேட்டேன் நீ கூட சரின்னு சொன்ன என்று மெதுவாக கங்கா சொல்ல சூர்யாவிற்கு இதயமே நின்றுவிட்டது போல் ஆகிட கையில் வைத்திருந்த ஃபைலை தவர விட்டான்…

[the_ad id=”6605″]

நான் எப்போ மா உங்கிட்ட சரின்னு சொன்னேன். நீங்க என்கிட்ட இந்த மாதிரி நீங்க ஒன்னு கேக்கவே இல்லையே என்று அதிர்ச்சியில் கேட்க…

நான் தான் உன்கிட்ட கேட்டேனே டா நீ ஊருக்கு போற அன்னைக்கு நீ கூட சரின்னு சொன்னீயே இப்போ என்ன இப்படி சொல்ற என்று வெடித்தாள் கங்கா.

அய்யோ என்று தலையில் அடித்தவனுக்கு போன் வர அதை எடுத்து பேசியவன் கங்காவிடம் வந்து எனக்கு இப்ப கல்யாணத்துல இஷ்டம் இல்லமா என்றவன் கங்காவின் பதிலை கூட எதிர் பார்க்காமல் வெளியே சென்றான்…

கவி அவன் கீழே போட்ட ஃபைலை எடுத்துச் சென்று வேகமாக கொடுக்க அதை பெற்றவன் ஆஃபிஸ்க்கு வேகமாக சென்றான்….

தேடல் தொடரும்….

??????????????????????

Stay tuned…✌️✌️✌️✌️✌️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!