Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 17

 

Every single person on the planet has a story. Don’t judge people before you truly know them.

      சூர்யா வேகமாக அவனது வண்டியை ஓட்ட எதிரில் யார் வருகிறார்கள் என்று கூட தெரியாமல் நினைவுகளை சிறிது நேரத்திற்கு முன்பு நடந்ததை யோசித்து கொண்டு இருந்தான்..

இதுனாலயோ என்னவோ அவனுக்கு முன்பு வந்து கொண்டிருந்த கார் டிராஃபிக் காரணமாக நிற்க அதை கவனிக்காதவன் அதில் மோத அந்த சத்தம் கேட்டே அவன் சுயநினைவு வந்து பார்க்க அதற்குள்ளே கார் நன்றாக மோதி நின்றது..



Advertisement

காரினுள் இருந்தவன் வெளியே வந்து பார்க்க  பின் சூர்யா காரை நோக்கி வந்தான் அதற்குள் அவனே இறங்கி விட இருவருக்கு ஆச்சிரியமே .

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நிற்க அதற்கு பின் இருவரும் ஆர தழுவிக் கொண்டனர்.

அதற்குள் க்ரீன் சிக்னல் காட்ட பின்னால் இருந்த பல வண்டிகள் ஹாரன் அடிக்கவும் இருவரும் பிரிந்து ஒரு ஓரத்தில் வண்டியை நிப்பாட்டினர்.

Advertisement

ஹே கார்த்திக் எப்படி இருக்க டா..?? உன்ன பாத்தே பல வருஷம் ஆச்சு என்று கேட்க ஐம் குட் டா நீ எப்படி இருக்க பாக்கவே ரொம்ப ஸ்மார்ட்டா ஆயிட்ட என்றே கேட்க அவனை முறைத்தவன் ஃபைன் டா என்றான்..

Advertisement

பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்க கார்த்திக்கு நந்தினியின் ஞாபகம் வரவே எதார்த்தமாக அவனுக்கு அவளை தெரியாதது போல் கேள்வி கேட்க நினைத்து உன் கூட ஸ்கூல்ல ஒன்னா படிச்ச நந்தினி இப்போ என்ன பண்றாங்க என்றான் சாதர்னமாக அதே நேரத்தில் ஆர்வமும் இருந்தது அதில்..

நந்தினியின் பெயரை சொன்னவுடன் சூர்யா முகம் என்னவென்று சொல்ல முடியாத ஒரு முக பாவத்தை கொடுத்தவன் நர்ஸிங் முடிச்சிருக்கா டா இங்க தான் பக்கத்துல SN hospital ல ஒர்க் பண்ணா இப்போ அவுங்க ஊட்டில சீஃப் டாக்டர் வீட்ல ஹோம் நர்ஸா இருக்கா என்றே அவன் சொல்ல..

கார்த்திக்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது சூர்யாவின் பதிலை கேட்டு . அந்த அதிர்ச்சியில் அவனது முகத்தில் வேர்வை துளிகள் வெளியே வர தொடங்கியது…

Advertisement

அய்யோ என்று மனதில் நினைத்தவன் இப்பவே அவர் கிட்ட பேசணும் என்று முடிவெடுத்தவன் சரி டா எனக்கு நேரமாச்சி நான் இப்போ கிளம்புறேன் என்றவன் அவனது நம்பரை தந்துவிட்டு வேகமாக சென்றான்…

சூர்யாவும் அவனது நம்பரை வாங்கிக் கொண்டு மீட்டிங்கிற்கு சென்றான்…

வேகமாக ஹாஸ்பிடல் வந்த கார்த்திக் தலையை பிடித்த படி அமர்ந்துக் கொண்டான். அவனுக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது..

எப்படி அவள் ஊட்டிக்கு செல்லாம்..??இது எப்படி எனக்கு தெரியாம போச்சி அய்யோ கடவுளே இனி நான் என்ன பண்ணுவேன் என்னோட வேலைய கூட என்னால ஒழுங்கா பண்ண முடியலையே இது மட்டும் அத்தைக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது .என்கிட்ட சொல்லாம அவள எப்படி அங்க அனுப்ப சமதிச்சாங்க என்றவன் யாருக்கோ அழைக்க அது தொடர்பில் இல்லை என்றே வர மொபைலை தூக்கி போட்டான்..

அதன் பின் அவனது ப்ர்செனல் போன் எடுத்து யாருக்கோ தொடர்பு கொண்டு நந்தினியை பற்றி விசாரிக்க சொன்னான்.

எதிர்முனையில் இருந்தவனும் சரி மச்சி அவுங்கள பத்தி விசாரிசிட்டு சொல்றேன் டா. எப்போ ஊட்டி வர என்றவனிற்கு சீக்கிரமே அங்க வரனும் டா இனி எனக்கு அங்க தான் வேலை என்றவன் சரி சீக்கிரமா விசாரிச்சு சொல்லு என்று அழைப்பை துண்டித்தான்..

[the_ad id=”6605″]

இங்கோ ஹரி மற்றும் நந்தினி இருவரும் அமைதியாகவே இருந்தனர் ஏர்போர்ட்டில். சுமி இவர்களை கவனித்தாலும் அமைதியாகவே விட்டு விட்டாள்..

ஏர்போர்ட்டில் மும்பை பிளைட்டிற்கு அனௌன்ஸ்மென்ட் தர நால்வரும் போர்டிங் செய்து செக்கின் செய்தனர்..

ஹரி வரவும் ஜான்வி குட்டி ஹரியுடன் ஒட்டிக் கொண்டாள்..

மூன்று சீட்டில் உதய் நந்தினி சுமி எனவும் அதற்கு சைட் சீட்டில் ஹரியும் ஜானுவும் அமர்ந்து கொண்டனர்.

உதய் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொள்ள நடுவில் உட்கார்ந்த சுமி நந்தினியிடம் நடுவுல உட்காந்துகோ டா நான் அங்க உக்கார்ந்துக்கிறேன் அப்போ தான் அந்த எரும கிட்ட பேச முடியும் என்க அவளும் சரி அக்கா வாங்க வந்து உட்காருங்க என்றாள்..

அதன் பின் இருவரும் பிளேஸ் மாரி உட்கார்ந்தனர். நந்தினிக்கு சிறிது படமாகவே இருந்தது. இதுதான் அவளுக்கு முதல் முறை பிளைட்டில் செல்வது என்பது..

ஃப்ளைட் டேக் ஆஃப் ஆக இங்கோ நந்தினிக்கு கைகள் எல்லாம் நடுங்க தொடங்கியது. அவள் கைகள் எல்லாம் சில்லென்று ஆகியது. நந்தினி தன் பயத்தினை மறைக்க கைகளை பிசைந்து கொண்டு இருந்தாள்..

இதை கவனித்த உதய் வேகமாக அவளது கைகளை எடுத்து அவனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான்..

அதில் திகைப்புற்றவள் அவனை காண அவனோ கண்களை மூடி திறந்து ஒன்னும் இல்லை பயப்புடாத நான் இருக்கேன் என்று என்றான்…

அவனின் தொடுகை அவளது உடலை மேலும் சிலிர்ப்பூட்டியது .அவள் கண்களுக்கு பதினொன்றாம் வகுப்பு படித்த போது பார்த்து காதல் கொண்ட கிருஷ் வந்து போனான்..

அவள் கையை உருவ முற்பட்டுக் கொண்டிருக்க அது அவளால் முடியவில்லை. அவளுக்கு பயமே அதிகரித்தது. சுமியை கூப்பிடலாம் என்றால் அவளோ ஹரியுடன் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தாள்.

பிளைட் மும்பையில் இறங்கி விட அடுத்த நொடியே அவளது கையை விட்டவன் நீ பயப்பிடுற அளவுக்கு எதுவும் இல்லை நீ பயந்தா அது உன்ன மட்டும் இல்ல உன்ன சுத்தி உள்ள எல்லாருக்கும் தான் பயம் . அப்புறம் உன்னோட கைய பிடிச்சது உன்னோட பயத்த போக்கிறதுக்காக மட்டும் தான் அதையும் நான் என்னோட கடமையா நினைச்சி தான் பண்ணேன் என்று சொல்லிவிட்டு இறங்க சென்று விட்டான்.

அவன் பின்னே அவளும் சென்றாள். அதன் பின் இருவரும் பேசிக் கொள்ள வில்லை. மும்பையில் இருக்கும் ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்றனர்.

சுமிக்கு ஒரு அறையும் ஜான்வி மற்றும் நந்தினிக்கு ஒரு அறையும் மற்றொரு அறையில் ஹரி மற்றும் உதய் தங்கிக் கொண்டனர்…

சென்னையில் சூர்யாவிற்கு வீட்டில் நடந்ததே மனதில் ஓடிக் கொண்டிருக்க அவனால் வேறெதிலும் கவனத்தை செலுத்த முடியவில்லை….

இதனால் நிறைய பிழைகள் செய்ய தொடங்கினான் பிரசென்டேஷன் செய்யும்போது…க்ளைன்ட்ஸ் அனைவருக்கும் அதிருப்தி தர இதை கண்ட மேனஜர் ஹோல்ட் ஆன் செய்து சூர்யாவை தனியே அழைத்துச் சென்றார்…

ஹே சூர்யா வாட் ஹேப்பண்ட் டூ யூ மேன் ஏன் இவ்வளோ கேவலமா உங்க பிரசன்டேஷன பண்ணிட்டு இருக்கீங்க என்று பொறுமையாக கேட்க சூர்யாவோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்…

சூர்யா என்ன ஆச்சி உங்களுக்கு நீங்க எவ்ளோ பெரிய ஆர்கிடெக்ட் உங்களோட கவனம் எங்க இருக்க சொல்லுங்க உங்களுக்கு ஏதோ பிராப்ளம்னு தெரியுது . ஆனா அதுக்காக என்ன செய்ய முடியும் இங்க யாருக்கு தான் பிரச்சனை இல்ல சொல்லுங்க எல்லாருக்கும் பிராப்ளம்ஸ் இருக்க தான் செய்யும் அத எப்படி ஓவர்கம் பண்ணி வரோம்னு தான் எல்லாமே இருக்கு சூர்யா என்றவர் அவனது தோலில் தட்டி கொடுக்க..

ஏதோ தெம்பு கிடைத்தவனாய் நீங்க சொல்றது சரி தான் சார் வாங்க இப்போ நம்ம மீட்டிங்க்கு போகலாம் என்று அவரை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்…

மீண்டும் முதலில் இருந்து பிரசன்டேஷனை பிரசன்ட் பண்ண ஆரம்பித்தான். அதில் வெற்றியும் கண்டான்.. அதன் பிறகு தயிரியத்தை வர வளைத்துக் கொண்டு எதுவாக இருந்தாலும் சமாளித்துக் கொல்லலாம் என்று முடிவுடன் வீட்டை நோக்கி சென்றான்….

[the_ad id=”6605″]

கீர்த்திக்கு அடிப்பட்டு இருப்பதால் அவளை வேலைக்கு அனுப்பவில்லை. அவளும் எதுவும் பேசாமல் வீட்டிலே இருந்தாள். ஆனால் ராஜிவ்விற்கு என்ன ஆயிற்று என்று யோசித்துக் கொண்டே அறையில் இருந்தாள்.

எனக்கு என்ன ஆச்சின்னே தெரியலையே எப்படி எனக்கு இந்த காயம் ஏற்பட்டுச்சி..?? ராஜிவ் கூட தான இருந்தேன் எப்போ வெங்கட் சார் வந்தாரு அப்புறம் நான் கண்ணு திறந்து பார்க்கும் போது ஹாஸ்பிடல்ல இருந்தேன் அய்யோ கடவுளே என்ன நடந்துச்சின்னே தெரியலையே என்று தலையில் கை வைத்த படி அமர

அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த விஷ்ணு அக்கா எனக்கு உன்னோட மொபைல் குடு கா கவிக்கிட்ட கொஞ்சம் டவுட் கேக்கனும் என்றிட

இங்க எங்கயாவது தான் இருக்கும் தேடி எடுத்துட்டு போ டி சும்மா என டிஸ்டர்ப் பண்ணி கிட்டு என்றாள் கோபமாக …

இவ ஒருத்தி யார் மேலயோ இருக்கிறத என்கிட்ட காட்டிக்கிட்டு இருக்கா என்ற முணுங்களுடன் அந்த அறை முழுவதும் மொபைலை தேட அது கிடைக்காமல் போனது..

அக்கா நான் எல்லா இடத்துலயும் தேடிட்டேன் ஆனா எங்கேயும் இல்ல என்று சொல்ல அப்போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது நேற்று மொபைல் ராஜிவ்விடம் கொடுத்தது.

அக்கா..!!! சொல்லு கா எங்க வச்ச ஃபோன்ன என்றே அவளை போட்டு உழுக்க

” அ…அ..அது வந்து “என்று கீர்த்தி இழுக்க

“இப்போ எதுக்கு அக்கா இப்படி ரயில் வண்டி மாதிரி இழுத்துகிட்டு கிடக்கிற ” என்று அவளை கேலி செய்ய

” ஹான் இப்போ ஞாபகம் வந்துருச்சி அது நேத்து நைட்டு டாக்டர் வெங்கடேஷ் சார் தான என்ன கூட்டிட்டு வந்து விட்டாங்க அதுனால நான் அத எடுத்துட்டு வர மறந்துட்டேன் ” என்று அவன் விட்ட பொய்யை இவள் தொடர்ந்தாள்…

” சரி சரி நாளைக்கு வரும்போது எடுத்துட்டு வா நான் அம்மாகிட்ட போன் வாங்கி பண்ணிக்கிறேன் ” என்று அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்..

விஷ்ணு போன உடனே தான் கீர்த்திக்கு உயிரே வந்தது..

இரவு எட்டு மணிப் போல் வீட்டிற்கு வந்த சூர்யா எதுவும் கண்டு கொள்ளாமல் நேராக அறைக்கு சென்றவன் ஃபிரஸ் ஆகிவிட்டு வந்தவன் நேராக கவி சுஜி அறைக்கு சென்றான்…

இருவரும் படித்துக் கொண்டு இருக்க அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்தவன் அவர்களது படிப்பு விஷயத்தை நந்தினிக்கு பதிலாக கவனித்துக் கொண்டு இருந்தான்…

சூர்யா வீட்டிற்கு வரும்வரை விளையாடியவர்கள் அவன் வந்ததை அறிந்து இருவரும் படிப்பது போல் பால்வா காட்ட ஆரம்பிக்க…

இவர்களை அறிந்த சூர்யா ” சரி ரெண்டு பேரும் இப்பவரைக்கும் என்ன படிச்சீங்க சொல்லுங்க பாப்போம் ” என்றிட

இருவருக்கும் பொறை ஏறாத குறை தான் ஒருவரையொருவர் முகத்தை பார்த்துக் கொள்ள

என்ன ரெண்டு ஒருத்தர் முகத்த ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருக்கீங்க என்ன படிச்சீங்கன்னு தான கேள்வி கேட்டேன் ஏதோ உங்கள சமச்சி கொண்டு வர சொன்ன மாதிரி பண்ணுறீங்க என்று அதட்ட..

அத்தான் என்று சுஜி இழுக்க கவி அமைதியாக இருந்தாள்..

நான் அத்தான் தான் அது நான் கேட்ட கேள்விக்கு அன்சர் இல்லையே என்று புருவத்தை உயர்த்திட கவி பதில் சொன்னாள்..

அடுத்து சூர்யா சுஜியை பார்க்க அவளோ கவியை முறைத்துக் கொண்டு இருந்தாள்…

அதற்குள் சிவசங்கரன் கீழே இருந்து சுஜி கவி மா உங்களுக்கு கால் வந்துருக்கு பாருங்க என்க இதோ வந்தறோம் மாமா என்றவர்கள் தப்பித்தால் போதும் என இருவரும் அறையை விட்டு ஓடி வந்தனர்…

அங்கே லைனில் விஷ்ணு இருக்க மூவரும் மாறி மாறி சிறிது நேரம் பேசினர்..

இரவு உணவுக்காக எல்லாரும் அமர சூர்யாவும் வந்தமர்ந்தான். சுஜி கவி இருவரும் இருக்கும் வரை அமைதியாக இருந்த கங்கா அவர்கள் சாப்பிட்ட பின்பு போங்க போய் தூங்குங்க என்று சொல்ல இருவரும் அமைதியாக அவர்களது அறைக்கு சென்றனர்…

[the_ad id=”6605″]

சூர்யா காலைல நான் கேட்டதுக்கு பதில் என்ன டா என்று கங்கா கேட்க நான் உங்களுக்கு அதுக்கான பதில்லை காலையிலேயே சொல்லிட்டேன் அம்மா திரும்பவும் சொல்றேன் எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல என்றவன் பாதி சாப்பாட்டில் கை கழுவிட்டு செல்ல எத்தனிக்க..

நான் உனக்கு கல்யாணம் பண்ணியே தீருவேன் டா .நீ கண்டிப்பா நான் சொல்ற பொண்ணுக்கு தாலி கட்டுவ இது நடக்குதா இல்லையான்னு பாரு .இது மட்டும் நடக்கல அப்புறம் உன்னோட அம்மாவ நீ உயிரோடவே பாக்க மாட்ட என்றுவிட்டு வேகமாக அறைக்கு சென்று விட்டாள்….

சிவசங்கரனோ தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அதை கண்ட சூர்யா கோபமாக அவனது அறைக்கு சென்றான்…

அங்கே மும்பையில் அனைவரும் அந்த நாள் முழுவதும் பக்கத்தில் இருந்த இடத்திற்கு சென்று வந்து இரவு உணவை முடித்து விட்டு சென்றனர்…

நடு இரவு இருக்க உதய் ஜான்வியை பார்க்க அறைக்கு வந்தான் (உண்மையா நீ ஜானு குட்டிய பாக்க தான் வந்தியா டா இது நாங்க நம்பிட்டோம் ???).

அறையினுள் லைட் லேம்ப் எறிய அங்கே ஜான்வி குட்டியை அணைத்த படி நந்தினி குழந்தை போல் உறங்கிக் கொண்டு இருந்தாள்…

ஜான்வி குட்டியின் நெற்றியில் இதழ் பதித்தவன் நந்தினியின் முகத்தை பார்த்து ” நீ ஏன் நிதி மா இப்படி பயப்பிடுற நீ இப்படி பயந்து போறதுனால தான் டா எதெதையோ சொல்லி உன்ன இங்க கூட்டிட்டு வர வேண்டியதா போச்சி .நீ தைரியமா இருந்திருந்தீனா நீ சென்னையிலேயே உங்க மாமா கூட இருந்திருக்கலாம். ஆனா உன்ன சுத்தி உனக்கே தெரியாம ஒரு பிரச்சினை இருக்கிறப்ப உன்ன அங்க விட்டுட்டு என்னால ஊட்டில நிம்யதியா இருக்க கூட முடியல ” என்றவன் ” நீ இப்படி இருந்தா அப்புறம் நம்ம பொண்ணு ஜானு மட்டும் எப்படி தைரியமா வளருவா சொல்லு இனிமேலாவது தைரியமா இருந்து பழகு நிதி மா ” என்று அவள் தலையை கோதி அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து விட்டு அந்த அறையை விட்டு சென்றான்…

அவன் சென்ற அடுத்த நொடி பதறியடித்து எழுந்த நந்தினி உதய் இதழ் பதித்த இடத்தில் கையை வைத்து கிருஷ் என்றாள்…

தேடல் தொடரும்….???

?????????????????????

Stay tuned….✌️✌️✌️✌️✌️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!