Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 33

தேடல் 33

??இது என்ன
புது வித மாயம்
என்  நெஞ்சில்
நீ தந்த காயம்
என்னை விட்டு
செல்ல நினைத்த நேரம்
விடுகதையாகுதடி ??

செவிலியர் வந்து சொல்லி விட்டு செல்லவும் சுமியும் நந்தினியும் வேகமாக ஜான்வியை பார்க்க சென்றனர்.

யாரோ ஒருவர் தான் செல்ல வேண்டும் என்பதால் இருவரும் அங்கேயே நின்று ஒருவரையொருவர் பார்க்க மற்றவர்கள் அனைவரும் அந்த இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தனர்..



Advertisement

“அக்கா நீங்களே முதல போய் பாருங்க அக்கா நான் அதுக்கப்புறமா நான் போய் பாக்குறேன் ” என்றாள் நந்தினி

” வேணாம் நந்து மா நீ போய் பாரு அதுதான் சரியா இருக்கும் ” என்று சுமி கூற

இருவருமே நீ போ நீ போ என்று பாசப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க இது சரி பட்டு வராது என்று நினைத்த உதய் ” நீங்க இப்படியே சண்ட போட்டுட்டு இருங்க நான் போய் முதல என் அம்மு குட்டிய பாத்துட்டு வரேன் ” என்று விட்டு உள்ளே சென்றான்.

Advertisement

அதன்பின் சுமியும் நந்தினியும் சேர்ந்தவாறு வந்து குழந்தையை பார்த்தனர். சூர்யாவிற்கு தான் சொல்ல இயலா உணர்வு தன்னுடைய இரத்தம் என்பதனாலே உருவானது..

Advertisement

இரு ஜோடிகளும் மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஜான்வியை பார்த்து விட்டு வர அதன் பின் ஒவ்வொருவராக சென்று பார்த்துவிட்டு வந்தனர்.

ஒருவாரம் கழித்து மருத்துவமனையிலிருந்து ஜான்வியை சூர்யா வீட்டிற்கு அழைத்து வந்தனர். சுமியும் நந்தினியும் அந்த ஒருவாரம் முழுவதும் ஜான்வியுடனே இருந்து விட்டனர். இதனால் சூர்யாவிற்கு நிம்மதியாகவும் உதய்க்கு கடுப்பாகவும் இருந்தது.

ஜான்வி ஓரளவிற்கு குணமாகவும் அவளை கவி சுஜியுடன் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறான முடிவை எடுத்தது கங்காவே .

Advertisement

மஹாலிங்கம் அடுத்தநாளே ஊட்டிக்கு சென்றுவிட்டார். ஜீவாவும் ஹரியும் கூட ஹாஸ்டல் சென்று விட்டனர்.

இரு ஜோடிகளின் வாழ்விலும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் எப்போதும் போல் சென்றதனால் மரகதமும் கங்காவும் சேர்ந்து இருவருக்கான சாந்தி முகூர்த்ததை நடத்த முடிவு செய்து அதற்காக ஜோசியரை பார்க்க சென்றனர்.

சூர்யா காலையிலே ஏதோ வேலை என்று அவனது ஆஃபிஸிற்கு சென்றுவிட்டான். உதய் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் வெங்கட்டுடன் மருத்துவமனை சென்றான் என்றால் வீட்டில் இருந்த இரு பெண்களும் குழந்தையை கவனிப்பதில் கவனத்தை செலுத்தினர்.

இருவரின் பாசத்தில் திக்குமுக்காடி போனால் ஜான்வி. மருத்துவமனை விட்டு வந்த நாளில் சுமியை பார்த்து பயந்த ஜான்வி அதன் பின் சுமியின் பாசத்தை கண்டு அவளுடனும் ஒட்டிக் கொண்டால்.

ஜான்வியின் அதிர்ஷ்டம் என்னவென்றால் அவளை தாங்கு தாங்கென்ன தாங்க இரு அன்னைக்களும் அவள் கேட்டத்தை வாங்கி தர என இரு தந்தைமார்களும் இருந்தனர்.

சிவசங்கரேன் எதிலும் கலந்துக் கொள்ளாமல் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்து வந்தார்.யாரும் அறியாத ஒன்று அவர் அறிந்ததாயிற்றே .

கங்காவும் மரகதமும் ஜோசியரை பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர். இன்றே நாள் அமோகமாக இருப்பதால் இன்றே இரவு வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிடவே இரு தாய்மார்களும் அதற்கான வேலையை கவனிக்க தொடங்கினர்.

வேலைக்கு வந்த சூர்யாவிற்கு அனைவரும் அன்று கூற முடியாத வாழ்த்துக்களையும் சிலர் அவன் மேல் இருக்கிற வெறுப்பில் பரிதாபமும் பட்டு விட்டு அனுதாபம் சொல்லிவிட்டு சென்றனர்.

அவர்கள் அனைவருக்கும் புன்னகையை நிறையாக அளித்து விட்டு நன்றியுடன் அவனது அறைக்கு மறைந்துக் கொண்டான்.

அவனது அறைக்கு வந்தவன் இருக்கையில் அமர்ந்து பெரு மூச்சை விற்றவன் வெளியில் அவர்கள் பேசியதை யோசிக்க தொடங்கினான் என்று கூறுவதை விட அவன் மனதில் மித்ராவை உள்ளே கொண்டு வர அவர்களே அறியாமல் உதவி செய்தனர் என்பதே சரியாக இருக்கும்.

இந்த ஒருநாளே தனக்கு இவ்வளவு செய்கின்ற உலகம் இந்த மூன்று வருடத்தில் மித்ராவை எவ்வளவு பாடு படுத்தியிருக்கும் என்று யோசிக்கும்போதே அவன் மனம் கன கனத்தது .

அதை பற்றி யோசித்த அவனுக்கு தலை வலி வர டேபிளில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான்.அவன் படுத்த அடுத்த நொடியே எக்ஸ் க்யூஸ் மீ என்று கேட்ட படி கதவை திறந்து பார்க்க அவர்களை கண்டவனின் மனது அனலாய் கொதித்தது.

மருத்துவமனைக்கு வந்த உதய் மருத்துவமனையில் சரிவர உள்ளதா என்று பார்வை இட்டு வந்துக் கொண்டிருந்தான். ஏதும் தவறுகள் அல்லது குறைபாடுகள் இருப்பினும் அதை மாற்றி அமைக்கலாம் என்று முடிவெடுத்து சென்றிருந்தான்.

சுத்தம் சுகாதாரம் என்றே இந்த இரண்டும் சமுதாயத்தில் இருந்தால் பலவகையான நோய்களை வராமல் தடுத்திருக்கலாம்.  மனிதர்களான நாம் இது இரண்டையும் கடைப்பிடிப்பது இல்லை. இதுவே பலவகையான நோய்களுக்கு காரணமாக அமைகிறது. சுத்தத்திலும் உணவு விஷயத்திலும் எந்தவொரு கோளாறும் நடக்க கூடாது என்று எண்ணி முதலில் மருத்துவமனையை சுற்றி காலியாக இருக்கும் இடத்தை காண வந்தான். அவன் கூடவே சில நபர்கள் வந்தனர். வெங்கட் பாதியில் சேர்ந்து கொள்வதாக கூறிவிட்டு பேஷ்ன்டை காண சென்றுவிட்டான்.

வழி எங்கும் பார்வை இட்டு வந்தவனின் கண்ணில் பட்டது பூத்து குலுங்கும் ரோஜா செடிகளே. அதை கண்டவன் அவனுடன் வந்தவர்களிடம் ” இத யாரு இங்க நட்டு வச்சது ” என்று கேட்க

“சார் அது நந்தினின்னு ஒரு பொண்ணு இங்க வேல பாத்துச்சி சார் அந்த பொண்ணு தான் இதையெல்லாம் நட்டு வச்சது . இப்போ அந்த பொண்ணு வேலைய விட்டு பொய்டுச்சி சார்” என்றான்..

“ஓஹோ” என்றவன் மனதில் ” நம்ம ஆளோட வேலை தானா இது எவ்வளவு அழகா இருக்கு இங்க ஒரு சிட்டிங் சார் இருந்தா நல்லா இருக்கும் ” என்று யோசித்வன் அதை செயல் படுத்தவும் ஆயுத்தமானான்.

அதன் பின் கேண்டின் சென்று பார்வையிட்டவன் அவர்கள் செய்து வைத்திருந்த அனைத்தையும் டேஸ்ட் பார்த்து விட்டு என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை கூறிவிட்டு திரும்ப அவனுக்கு எதிர் டேபிளில் கீர்த்தி ராஜிவ்வுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை கண்டான்.

அதேநேரம் அங்கே வெங்கட் வர ,” என்னடா மச்சான் இங்க நின்னுட்டு இருக்க ” என்று கேட்டு அவனை பார்க்க

” டேய் அது கீர்த்தி தான டா அவ யாரோ ஒரு பையன் கூட நின்னு பேசிட்டு இருக்கா ” என்று ராஜிவ்வை பார்த்து சந்தேகத்துடன் கேட்க

“டேய் அவுங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் டா . கார்த்திக்கோட கசின் தான் அவன் அதுவும் கீர்த்தியோட மாமா பையனாமா ” என்றுவிட்டு திரும்பிக் கொண்டான்.

ராஜிவ்வின் பார்வை உதய்க்கு சரியாக பட வில்லை .ஏனோ அவன் மீது தவறு இருப்பதாக அவன் மனம் உத்தர விட தன் மனைவியின் தோழி வாழ்வை காப்பாற்ற எண்ணினான்.

பின் வெங்கட்டை அழைத்துக் கொண்டு உதய் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து விட்டான்.

இங்கே சூர்யா கதவின் பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த மெர்லினை கண்டு கொந்தளித்து நின்றான்.

” இப்போ எதுக்கு இங்க வந்த அடுத்து அவள எப்படி உயிரோட புதைக்கிலாம்ன்னு சொல்ல வந்தியா ” என்று அதே கோபத்துடன் கேட்க

மெர்லின் ” அப்படியெல்லாம் இல்ல அண்ணா . நான் பண்ணது தப்பு தான் அண்ணா” என்று சொல்ல வருவதற்குள் ” நான் உனக்கு அண்ணா இல்ல” என்று வெட்டி முறித்தான்.

மெர்லினுக்கு அழுகையாக வந்தது. அழுகையை கட்டு படுத்தியவள் ” அன்னைக்கு அவ வாழ்க்கைய நாசம் பண்ணனும்னு நினைச்சது உண்மை தான் .ஆனா அவள அந்த ரூம்ல விட்டுட்டு வந்ததுல இருந்து என்னால நிம்மதியா இருக்கவே முடியல . அதான் உடனே ஜோஸ்க்கு கால் பண்ணி மீடியா உங்கள பாக்க வந்துருக்காங்கன்னு சொல்லி அவன வெளிய வர வச்சிட்டேன் ” என்றவள் மடிந்து சரிந்து அழுத படியே மன்னிப்பு வேண்ட

” நீ அவள உண்மையான ப்ரெண்டா நினச்சிருந்தா இப்படி பண்ணி இருக்க மாட்ட . நீ பண்ண தப்புக்கு நான் தண்டனை கொடுத்தா நீ பண்ண தப்ப சீக்கிரமா மறந்துடவ . அதுனாலயே நான் உன்ன மன்னிக்கிறேன் அப்போ தான் உன்ன யாரு பாத்தாலும் உனக்கு அத நினைச்சி தான் பாக்குறாங்களான்னு நீயாவே நினச்சி நினைச்சி வேதன படுவ ” என்றுவிட்டு ” இப்போ இந்த இடத்த விட்டு வெளியே போலாம் ” என்று வெளியே கை காட்ட மெர்லினும் அழுகையுடன் வெளியே சென்றாள்.

மாலை நேரம் போல இரு ஆண்மகன்களும் வீட்டிற்கு வந்திருந்தனர். வெங்கட் வேலை முடித்த பிறகு வருகிறேன் என்று கூறிவிட்டு தனிமையில் இருக்க தொடங்கினான்.

பள்ளிக்கு சென்றிருந்த சுஜியும் கவியும் வீட்டிற்கு வந்திருந்தனர்.அவர்களுக்கு முன்பே சூர்யா வீட்டில் தரிசனம் அழிக்க இருவரும் ரெஃபிரஷ் ஆகிவிட்டு படிக்க தொடங்கினர் . கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு எப்படி படிப்பதில் இருந்து எஸ்கேப் ஆகலாம் என்று சுஜியும்  கணக்கு படிக்கலாமா இல்லை கெமிஸ்ட்ரி படிக்கலாமா என்று கவியும் யோசனை செய்து கொண்டு இருந்தனர்.

சிறிது நேரத்தில் வெங்கட் முவரும் அவர்களது பனிகளை பற்றி பேசிக் கொண்டிருக்க இரவு நேரம் ஆகவும் அனைவரும் சாப்பிட்டு விட  வெங்கட் தான் கிளம்புவதாக கூற கங்காவும் மரகதமும் ” சரி பா பார்த்து பொய்ட்டு வா ” என்று வழி அனுப்பி வைத்தனர்.

சுமியையும் நந்தினியையும் அழைத்த கங்கா இருவரிடமும் புடைவையை கொடுத்து  ” குளிச்சிட்டு இத மாதிட்டு வாங்க” என்று இருவரையும் அனுப்பி வைத்தார்.

அவர்களும் மாற்றிவிட்டு வர ” வாங்க வந்து சாமி கும்பிட்டு இந்த விளக்க ஏத்துங்க ” என்று மரகதம் கூற இருவரும் எதற்காக செய்கிறோம் என்று தெரியாமல் அவர் அவர்களது அத்தை கூறியதை அப்படியே செய்தார்கள்.

பின் இருவர் கையிலும் பால் செம்பை கொடுத்து அவர் அவர்களது துணைவியர் அறைக்கு அனுப்பி வைத்தனர்.

சுஜி கவி ஜான்வி என மூவரையும் சீக்கிரமே உறங்க சொல்லி அனுப்பி வைத்து விட்டனர்.

வெங்கட் வந்த பொழிதில் அவனிடம் இதை பற்றி கூறி இரு ஆண்களிடமும் சொல்ல சொன்னார் சிவசங்கரன்.

அதன் படியே அனைத்தையும் செய்து விட்டே கிளம்பி சென்றான் வெங்கட்.

இரு பெண்களும் அறைக்குள் சென்றனர். இருவருக்குள்ளும் இரு வேற்றான எண்ணங்கள் அவர்களின் மனதில் சுழன்று கொண்டு இருந்தது .

சுமிக்கு கிடைக்காது என்று எண்ணிய வாழ்க்கை அவள் கண் முன் இருந்தும் அவளால் அதை இரசிக்க முடியவில்லை. ஏனோ அவளுள் ஒரு குற்ற உணர்வு. தன்னால் தான் அவன் ஆசை பட்ட வாழ்க்கை கிடைக்கவில்லையோ என்று எண்ணம் தலை தூக்கியது. ஆனால் மறுப்பக்கத்தில் நண்பன் காதலித்த பெணே அவனுக்கு கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சி என இரு வேறானா எண்ணங்களுடன் முதன் முறை அவனது அறைக்குள் நுழைந்தாள்.

அறைக்குள் நுழைந்த சுமி கண்டது லேப்டாப்பில் எதையோ தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த சுர்யாவை தான்.

அவளை கண்ட சூர்யா ” போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து தூங்கு மித்ரா எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு ” என்றான் தலையை நிமிராமல் அவனுக்கு அவளை பார்க்க திறனின்றி அந்த சவ பெட்டியை ( அதாங்க லேப்டாப் ??) பார்த்த படி கூறினான்.

” சரி ” என்று விட்டு அப்படியே நிற்க இன்னும் அவள் அங்கேயே நிற்பதை உணர்ந்த சூர்யா ” இன்னும் எதுக்கு இப்படியே நின்னுட்டு இருக்க போ போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்க வேண்டியது தானே” என்று அவனுக்கே உரித்தான குரலில் கூற

” அது வந்து ” என்று தடுமாறிய வளை கண்டு புருவம் உயர்த்த என்னவென்று கேட்க ” என்னோட ட்ரெஸ் எல்லாம் நந்து அறையில தான் இருக்கு ஆண்டி திடிருன்னு இப்படி உங்க ரூம்க்கு அனுப்பாங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணல ” என்றாள் தலையை தாழ்த்திய படி…

“எல்லாம் கப்போர்ட்ல தான் இருக்கு போ போய் எடுத்து போட்டுக்கோ ” என்றவன் வேலையில் மூல்கினான்.

அவளும் ஆடை மாற்றிவிட்டு வந்து அமைதியாக படுத்துக் கொண்டாள்.

இங்கே உள்ளே வந்த நந்தினி அமைதியாக அங்கே உதய் செய்து கொண்டிருப்பதை கண்டாள்.

” என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க சார் ” என்ற அவனின் நிதியின் குரல் கேட்கவே செய்து கொண்டிருந்த வேலையை விட்டு அவளை கவனித்தான்.

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளை நிற பட்டு உடுத்தி அதில் பிங்க் நிற அடர்ந்த கொண்ட அழகிய பட்டு புடவையில் தேவதை போல் இருந்தாள். அவளையே இமைக்க மறந்து இரசித்தவன் அவளின் ” சார்” என்ற வார்த்தையில் நினைவு வந்தான்.

“சாரி நி..நந்தினி இப்படி பண்ணுவாங்கன்னு நான் எக்ஸ்பெட்க் பண்ணல ” என்றவன் அந்த அறையில்  அலங்கரிக்க பட்ட மலர் மாலைகளை எல்லாம் கலட்டிக் கொண்டு இருந்தான்.

” இதுலாம் நடக்கும்  நானும் நினைக்கவே இல்ல ” என்றவள் மனதில் ” சார் கிட்ட எப்படி என்னோட காதல பத்தி சொல்லுறது. அவர் இத எப்படி எடுத்துக்க போறாரோ ” என்றே சிந்திக்க..

” ஹலோ நர்ஸ் மேடம் என்ன பலத்த யோசனையில இருக்கீங்க போல ” என்று அவள் முன் சொடக்கிட்டு சொல்ல நந்தினியோ பெக்க பெக்க முழித்தாள்.

“அப்படி என்ன யோசனை மேடம் ” என்றே அவளை பார்க்க “அதெல்லாம் ஒன்னும் இல்ல . நான் எத பத்தியும் யோசிக்கல ” வெடுக்கென சொன்னாள்.

அதை கேட்டு நகைத்தவன் ” இப்போ சொல்லு அப்படி என்ன இந்த சின்ன மூலை யோசிக்கிது ” என்றான்.

” அது வந்து ” என்று திக்கி திணற

” என்ன அது  வந்துன்னு இலுக்கிற புல்லா சொல்லி முடி ” என்றான் சிரிப்புடன்

” எனக்கு உங்க கிட்ட இருந்து ஒன்னு வேணும் ” என்றாள் எதையோ எதிர்பார்த்து

” சரி என்ன வேணும்னு சொல்லு என்னால முடிஞ்சா அத தர ட்ரை பண்றேன் ” என்றான் அவனின் ஆசை மனைவிக்காக

” எனக்கு உங்க கிட்ட இருந்து டிவெஸ் வேணும் ” என்றாள் படக்கென்று இதை கேட்ட உதய் அதீத அதிர்ச்சியில் சிலையென நின்றான்.

தேடல் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!