Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 22 1

அத்தியாயம்….22….(1)

அடுத்த முகூர்தத்தில் வாசுதேவன் வசுந்தரா கழுத்தில் தாலி கட்டி தன் மனைவியாக ஆக்கி கொண்டான்.தாலி கட்டிய வாசுதேவனின் முகத்திலும் சிரிப்பு இல்லை. என்றால், தலை குனிந்து தாலியை ஏற்றுக் கொண்ட வசுந்தராவின் முகத்தில் சிரிப்புக்கு பதிலாய் அங்கு பயம் தான் குடிக் கொண்டு இருந்தது.

ஆம் பயம் தான். அந்த புகை நடுவில் அமர்ந்து இருப்பது அவளுக்கு குடலை புரட்டிக் கொண்டு வரும் அளவுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

தெய்வநாயகி… “வாந்தி எடுக்காதே …” என்று  சொல்லாமல் இருந்து இருந்தால், அந்த நினைப்பு இல்லாது  வசுந்தரா இருந்து இருப்பாள் போல…



Advertisement

தெய்வநாயகி குறிப்பாய் வாந்தி எடுக்காதே என்று சொன்னதையே மனதில் உருப்போட்டு வந்து மணவறையில் அமர்ந்தவளுக்கு, அந்த நினைப்போடு புகையும் சேர்ந்துக் கொள்ள…

எங்கு அனைவரின் முன்னும்  வாந்தி எடுத்து தானே தன்னை காட்டிக் கொண்டு விடுவோமோ என்று  பயந்துக் கொண்டு, பக்கத்தில் அமர்ந்திருந்த வாசுதேவனை பார்த்தாள்.

அவன் எங்கு இவள் பக்கம் பார்க்கிறான். அந்த ஓம குண்டலத்தையே வெறிக்க பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவன், கடமையே என்று  அவள் கழுத்தில் தாலியையும் கட்டி விட்டான்.

Advertisement

அவனுக்கு வசுந்தரா மேல் கோபம். அது என்ன காலையில் காபி குடித்தால் வாந்தி வருகிறது என்று இரண்டு நாள் முன் தான் தன்னிடம் சொன்னாள்.

Advertisement

தலை முழுவதும் அலங்காரம்  பண்ணியதில் தலை வலித்ததாம்…அதனால் காபி குடிச்சா நல்லா இருக்கும் போல இருந்ததாம்…அதனால காபிய குடிச்சாளாம்…

 

[the_ad id=”6605″]

Advertisement

 

 

அறிவு வேணாம். நாம என்ன நிலையில் இருக்கோம். இப்போ காபி குடிச்சி வாந்தி எடுத்தா என்ன ஆகும்…?அதை யோசிக்க மாட்டாள். முட்டாள் முட்டாள். இவளோடைய முட்டாள் தனத்தால என் மானம் போச்சி…

என் குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லோரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க…இவள் செய்த முட்டாள் தனத்தால் நான் அவமானப்பட்டு நிற்க்கிறேன் என்று ஐய்யர் ஒரு பக்கம் மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தார் என்றால்…

இவன் மனதில் வசுந்தராவை அர்ச்சித்துக் கொண்டு இருந்தான். அந்த அளவுக்கு  அவள் மேல் கழுத்து அளவுக்கு கோபம் இருக்க…அவன் எங்கு மனைவியாக போகிறவளை  திரும்பி பார்க்க போகிறான். இருவரும் இருவேறு குணம் வேறு பட்ட நிலையில், அந்த  திருமண பந்தத்தில் அடி எடுத்து வைத்தனர்.

அதே போல் அன்று மாலை  வரவேற்ப்பிலும்  இரு ஜோடிகளும் இருவேறு மனநிலையில் அங்கு புகை படக்காரனுக்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தனர்.

“சார் மேடம் மேல்  லேசா கொஞ்சம் அனச்சா மாதிரி  நில்லுங்க.” என்று அந்த புகைப்படக்காரர் வீரேந்திரனிடம் சொல்ல…

லேசாக்கு எதிர் பதமாய் மணிமேகலையை தன் உடலோடு ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு தன்  நெருக்கத்திற்க்கு கொண்டு வந்து…அந்த புகைப்பட காரரே அலரும் அளவுக்கு போஸ் கொடுத்து கொண்டு நின்றான்.

அதுவும் மணிமேகலையின் முகவாயை பிடித்துக் கொண்டு அவள் கண்ணோடு கண் நோக்கி காதல் பார்வை பார்க்க வேண்டும்  என்று  அந்த புகைப்படக்காரர் தன் மனதில் ஒரு பிம்பத்தை உருவகப்படுத்திக் கொண்டு வீரேந்திரனிடம் சொன்னார்.

அவர் சொன்னதற்க்கு பிரதிபலிப்பாய் வீரேந்திரன் மணிமேகலையின் முகவாயை தன் ஒற்றை விரல் கொண்டு தன்னை பார்ப்பது போல் மேல் நோக்கி நிற்க…

 அவன் உயரத்திற்க்கு, அரை அடி குள்ளமாக இருக்கு மணிமேகலை, வீரேந்திரனை  அன்னாந்து பார்க்கும் படி தான் இருக்க வேண்டியதாயிற்று.

அந்த தோற்றத்தில் வீரேந்திரன் மணிமேகலையின்  விழிபிரையை அங்கும் இங்கும் நகர விடாது தன் கண்ணை மட்டுமே பார்க்கும் படி செய்து..அவன் அவளிடம் வீசிய அந்த காதல் பார்வை…அழகாய் அந்த புகைப்பட கருவியில் பதிவாகியது.

தான் பிடித்த புகைப்படம்  சரியாக இருக்கிறதா…?என்று திரும்பவும் ஒரு முறை  அந்த புகைப்படத்தை பார்த்த அந்த புகைப்படக்காரர்… அதில் இடம் பெற்று இருந்த பகைப்படம் தன் மனதில் கற்பனை செய்து வைத்திருந்த  பிம்பத்துக்கும் கூடுதலாகவே .இயற்யாக அமைந்ததை பார்த்து…

வீரேந்திரனை பார்த்து… தன் இரு விரலை மடக்கி வைத்த வாறு…. “சூப்பர் சார். சமையா இருக்கு.” என்று தன் பாராட்டை தெரிவித்தார்.

சரி ஒரு ஜோடியை  அட்டகாசமாய் தன் திறமை வெளிப்படும் அளவுக்கு எடுத்து விட்டோம். அடுத்த ஜோடியான  வாசுதேவனையும், வசுந்தராவிடம் தன் திறமையை காண்பிக்க…

“இப்படி நில்லுங்க சார். கொஞ்சம் அவங்கல ஒட்டினாப்பல நில்லுங்க சார்.” என்று வாசுதேவனிடம் கெஞ்சோ கெஞ்சு என்று கெஞ்சிய அந்த புகைப்படக்காரார்…

சரி இவரிடம் சொன்னால் தான் வேலைக்கு ஆகவில்லை. நாம் மேடமிடம் சொல்லுவோம் என்று… “ மேடம் நீங்கலாவது சார் பக்கத்தில் கொஞ்சம் நெருக்கமா நில்லுங்கலேன்.” என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

ஆனால் தன் கழுத்தில் தாலி கட்டியவுடன் தனிமையில் பேச சந்தர்ப்பம் கிடைத்ததும், வாசுதேவன் தன் மனதில் நினைத்ததை அனைத்தையும் வார்த்தைகளாய் கொட்டியதை இப்போது நினைத்தாலும்…தன் கழுத்தில் தொங்கி கொண்டு இருந்த மாலையை பிய்த்து எரித்து விட்டு இந்த இடத்தை விட்டு  ஓடி விட வேண்டும் என்று தோன்றியது.

ஆனால் கழுத்தில் மாலையோடு, வயிற்றில் பிள்ளையையும் சுமந்து இருப்பதால் அவளாள் இந்த பந்தத்தில் இருந்து விடு பட முடியாது பல்லை கடித்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தவளிடம்…

“அவன் பக்கத்தில் நெருங்கி நில்.” என்று சொன்ன அந்த புகைப்படக்காரரை வெட்டவா… குத்தவா… என்ற ரீதியில் தான் வசுந்தரா பார்த்து வைத்தாள்.

இப்படி காலை முகூர்த்தமும் மாலை வரவேற்ப்பும் முடிந்து , அன்று இரவு சாந்தி முகூர்த்த்திற்க்கு உண்டான ஏற்பாட்டை அந்த பெரிய வீடு குடும்பம் செய்துக் கொண்டு இருந்தது.

அப்போது தன் தாத்தாவின் அறைக்குள் நுழைந்த  வீரேந்திரன்… “தாத்தா நாங்க எங்க வீட்டுக்கு போறோம்.” என்று அனுமதி கோராது தகவலாக தான் தன் தாத்தாவிடம் வீரேந்திரன் சொன்னான்.

வீரேந்திரன் தாத்தா… “ஏன்ப்பா…இங்கயே…” என்ற அவர் வார்த்தையை முழுவதும் முடிக்க விடாது…அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு வந்த தெய்வநாயகி..

“ஏன் அங்க போற…இது எல்லாம் பொண்ணு வீட்ல தான் பண்ணுவாங்க…இந்த வீடு ராசியானது. இங்கு தான் இந்த சடங்கு நடத்தனும்.”என்று எப்போதும் போல் தெய்வநாயகி அதிகாரமாக தான் சொன்னார்.

வீரேந்திரனோ… “அப்போ வாசுவுக்கு ஏன் அவங்க வீட்ல ஏற்பாடு செய்யாம இங்கு செய்யுறிங்க…?” என்று கேட்டான்.

“ஆமா அவங்களுக்கு சாந்தி   முகூர்த்திற்க்கு நேரம் பார்க்க கூடாது. சீமந்த்திற்க்கு தான் நேரம் பார்க்க வேண்டும். அவங்க லட்சணத்துக்கு இது போதும்.” என்று சொன்னார்.

அப்போதும் வீரேந்திரன் விடாது… “எனக்கு அவங்க விசயம் எல்லாம் தேவையில்லாதது அம்மத்தா…நான் என் மனைவிய கூட்டிட்டு எங்க வீட்டுக்கு போறேன்.” என்று இது தான் என் முடிவு என்பது போல் பேசினான்.

“என்னங்க அவன் பாட்டுக்கு பேசிட்டு இருக்கான். நீங்க எதுவும் சொல்லாம அமைதியா இருக்கிங்க…? நீங்க இப்படி அமைதியா இருக்க தொட்டு தான், நேத்து முளச்ச பையன் எல்லாம் என்னை கை நீட்டிட்டு பேச வர்றான்.” என்று தெய்வநாயகி தன் கணவனிடம்  குறைப்பட்டு பேசினார்.

“இதுல நான் சொல்ல என்ன இருக்கு…? வீராவுக்கு அவன் வாழ்க்கை எங்க ஆராம்பிக்கனும் என்று தோனுதோ அதை சொல்றான். இதுல நான் சொல்ல எதுவும் இல்லை.” என்று ஒரு ஊர் தலைவராய்,  அந்த பெரிய மனிதர் தன் மனைவியிடம் நியாயம் பேசினார்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஏன் இங்கு வாழ்க்கை ஆராம்பித்த நம்ம வம்சம் தழைத்து வரலையா…நம்ம வாரிசு எல்லாம் இங்கு இதோ இந்த வீட்டில் தானே தங்களோட வாழ்க்கையே ஆரம்பித்தது.

ஏன் இவனோட அம்மாவுக்கு  கூட  இங்கு தான் செய்தேன். சிங்க குட்டி மாதிரி ஒரு பிள்ளைய பெத்து கொடுத்துட்டு, இதோ இப்போ என்னையே எதிர்க்கும் அளவுக்கு ஆளாய் நிக்கலையா…? இந்த வீடு தான் நம்ம வம்சத்துக்கு ராசியானது. அதனால இங்கு தான் அந்த சடங்கு நடத்தனும். அதுக்கு உண்டான வேலைய இப்போ புதுசா போட்ட அறையில ஆராம்பித்தாகி விட்டது.” என்று அவ்வளவு தான் என்பது போல் பேசி விட்டு செல்ல பார்த்த தெய்வநாயகியின்  காதில்…

“உங்க வம்சத்துக்கு இந்த வீடு ராசியானதா இருக்கலாம். ஆனா சிட்டுக்கு இந்த வீடு ராசியான்னு எனக்கு தெரியலையே அம்மத்தா…” என்ற வீரேந்திரனின் பேச்சில் நெஞ்சம் பதை பதைக்க தன் கணவர் முகத்தை பார்த்தார்.

தன் கணவர் முகத்தில் காணப்பட்ட வெறுமையில்… “என்னங்க…” என்று ஏதோ சொல்ல ஆராம்பித்தவரின் பேச்சை தடை செய்தவராய்..

“என் கிட்ட எதுவும் சொல்லாதே…பேச வேண்டிய நேரத்தில் பேசாத வார்த்தைகளுக்கு மதிப்பு கிடையாது. உன் உண்மை மதிப்பு இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது  தெய்வா…வேண்டாம்.

நம்ம உறவு சனம் எல்லாம் கூடி இருக்கு…இதை இதோட விட்டு விடு.” என்று பேசி விட்டு தன் மனைவி முன் நிற்க  கூட பிரிய படாதவராய் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.

தெய்வநாயகி சிலை போல் நின்று இருக்க…அவரின் தோளை தொட்டு அவரை சுய நினைவுக்கு கொண்டு வந்த வீரேந்திரன்…

“வீடு ராசியோட…எனக்கு நல்ல உள்ளங்களின் ஆசியோடு வாழ்க்கை ஆராம்பிக்கனும் என்று நினைக்கிறேன் அம்மத்தா…அதான்.” என்று அவன் அதோடு தன் பேச்சை நிறுத்தினான்.

“வீரா நான் உன்னை நல்ல மனசோட ஆசிர்வாதம் செய்ய மாட்டேன்னு நினைக்கிறியாடா…?” அடைக்கும் தன் நெஞ்சை நீவி விட்ட வாறே கேட்டார்.

 

[the_ad id=”6605″]

 

 

அவரின் கையை பற்றிக் கொண்ட வீரேந்திரன்… “என் மேல உங்களுக்கு எவ்வளவு கொள்ளை பிரியமுன்னு எனக்கு தெரியும். அம்மத்தா..ஆனா சிட்டு…வேண்டாம்.வேண்டாம் அம்மத்தா வேண்டாம். இந்த பேச்சை  இதோட விடுங்க.” என்று சொல்லி விட்டு அவனும் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தன் வாழ்க்கையின் முதல் கால் பதிக்க தன் வீட்டிற்க்கு சென்றான்.

வீரேந்திரன் சொல் படி தான், அவன் அறை எப்போதும் போல் தான் எந்த அலங்காரமும் இன்றி இருந்தது. அதே போல் தான் மணிமேகலையிடம் பால் சொம்பு அது போல் முறை எல்லாம் செய்யாது சங்கரி..

“போடா  உன் அத்தான் ரூம் எதுன்னு நான் சொல்ல தேவையில்லை..போ.” என்று சொல்லி விட்டு, அனைத்து தாழ்ப்பாளும் போட்டு இருக்கிறதா…?என்று பின் கட்டுக்கு போய் பார்த்து விட்டு, முன் கட்டுக்கு வரும் போது…நின்ற இடத்திலேயே நின்றுக் கொண்டு இருந்த தன் மருமகளை பார்த்த சங்கரி…

“ஏன்டாம்மா இங்கயே நிற்குற…?” என்று கேட்டவர்  அவள் முகத்தில் தெரிந்த பயத்தை பார்த்து…

தன் முந்தியில் அவளின் வியற்வையை துடைத்து விட்டு…”என்னடா என்ன பயம். இது உன் அத்தை வீடு. உன் புருஷன் என்ன வெளி ஆளா…பயப்பட…நீ சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு வர்ற அதே  உன் வீரா அத்தான் தான். 

எப்போவும் நீ கேட்பியே அவன் கிட்ட, வீரா அத்தான் உனக்கு அத்தைய பிடிக்குமா…?என்னைய பிடிக்குமான்னு…? இப்போவும் போய் அதே கேள்விய கேளு. அன்னைக்கு  பதில் சொல்லலே…ஆனா இன்னைக்கு சொல்வான்.” என்று சொன்ன சங்கரி..

முகத்தில் குறும்பு மின்ன… “நீ என்ன பண்ற…நாளைக்கு அவன் யாரை பிடிக்குமுன்னு சொன்னான் என்று மட்டும் சொல். அப்புறம் இருக்கு அவனுக்கு…” என்று சொன்னவர் கண் சிமிட்டி விட்டு…

“போ…போ…சீக்கிரம் போ…நாளையில் இருந்து மாமியார் மருமகள் சண்டையில நம்ம வீடே கலகட்ட போது.” என்று சொல்லி தன் மருமகளின் முகத்தில் இருந்த பயம் தெளிந்து அந்த இடத்தில் சிரிப்பு குடி கொண்ட பின் தான் தன் மகன் அறைக்கு வீராவின் சிட்டாக அவளை அனுப்பி வைத்தார். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!