Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடல் 34

 

??அலை வீசும்
ராகம்
ஆழ் மனதில்
அது அமுத கானம்
கரை வந்து
கால் நனைத்தாய்
உன்னுடன் இருக்கும்
நேரத்தை நீட்டி தந்தாய்
உன்னோடு இருந்த
நொடி முதல்
எந்தன் வெறுமை
விட்டு விலகயதை
உணர்ந்தேன் நிதி..??

உதயிடம் எப்படியாவது தன் காதலை பற்றி கூறி அவனிடமிருந்து விலக வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே அந்த அறைக்குள் நுழைந்தாள்.

ஆனால் அவன் செய்த காரியம் அவளை பேசா பேதையாக மாற்றி இருந்தது. ஏனோ அவளால் அவனின் கண்களை பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. ஏனோ அந்த கண்களில் அவள் கண்ட ஆனந்தத்தையும் ஒரு பூரிப்பையும் அவளால் கெட விரும்பவில்லை.



Advertisement

அவள் தன்னை காண்பது தெரிந்தும் அதை இரசித்தவாறே கட்டிலில் இருந்த பூக்களை எல்லாம் அப்புற படுத்தினான்.

” என்ன மேடம் என்ன யோசனை உங்களுக்கு ஏதாவது வேணுமா”  என்று அவன் கேட்க அவள் மனம் என்ன யோசித்ததோ உடனே அவனிடன் ” எனக்கு உங்க கிட்ட இருந்து டிவேர்ஸ் வேண்டும்” என்றாள் படக்கென்று…

இதை கேட்ட உதயால் நம்ப முடியவில்லை எங்கே இது கனவாக தான் என்ற ஆசையில் தன்னை தானே கில்லி பார்த்துக் கொண்டான். ஆனால் அந்த வலி அவனுக்கு உரைத்தது இது கனவில்லை நிஜம் என்று..

Advertisement

” இப்போ எதுக்கு என்கிட்ட இருந்து டிவேர்ஸ் வேணும்ன்னு எதிர்பார்க்கிற ” என்ற கூரலில் அவன் கோபம் அனைத்தும் தெரிந்தது.

Advertisement

” என்னால உங்க கூட நிமதியா வாழ முடியாது ” என்றாள் வெடுக்கென்று.

” ஏன் ” என்ற ஒற்றை புருவம் உயர்த்தி அவன் கேட்க

பெரு மூச்சு ஒன்றை வெளி விட்டவள் பக்கத்தில் இருந்த தண்ணீர் கோப்பையை எடுத்து மட மட வென்று குடித்து முடித்தாள்.

Advertisement

” சொல்லு எதனால உன்னால என் கூட நிம்மதியா வாழ முடியாது ” என்று கோபம் கலந்த குரலில் மீண்டும் ஒருமுறை கேட்க..

” ஏன்னா நான் கிருஷ்ன்ற ஒரு பையன லவ் பண்றேன் ” என்றாள் அந்த அறையே அதிரும் படி..

அதுவரை கோபம் கொண்ட மனம் அவளது பதிலில் காஷ்மீரில் இருப்பது போல் குளிர்ந்து போனது.

“யார் அந்த கிருஷ் ” என்று வேண்டுமென கேள்வி கேட்க

”  உயிர் ” என்றாள் ஒரே வார்த்தையில் அவள் காதலை இதை கேட்டவனின் உள்ளம் குத்தாட்டம் போட்டது.

” நீ அவன தான் விரும்பிறனா அப்போ எதுக்கு சூர்யாகூட நடக்க இருந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட ” என்று கேட்க

” அது என்னோட குடும்பத்துக்காக தான் சரின்னு சொன்னேன். எப்படி இருந்தாலும் அத்தான் கிட்ட சொல்லிருப்பேன் ” என்றாள்.

” உனக்கு என்கிட்ட இருந்து டிவேர்ஸ் தான வேணும் ” என்றே அவள் கண்களை பார்க்க கேட்க

” ஆமாம் ” என்றாள் வேகமாக

” அப்போ எனக்கு நீ ஒன்னு சொல்லனும் . அப்போ தான் உனக்கு டிவேர்ஸ் தருவேன் ” என்றான் வில்லத்தனமாக

அதை அறியாத நந்தினி ” என்ன சொல்லனும் சொலுங்க சொல்றேன் ” என்றாள் அவனின் வில்லத்தனம் அறியாமல்

” பரவால்ல இனி அவன மறக்க ட்ரை பண்ணு ” என்று அவளை சீண்டி பார்க்க எண்ணி சொல்ல

” என்னால அவன மறக்கவும் முடியாது வாழவும் முடியாது ” என்று கத்தினாள்.

இதனை கேட்ட உதயோ அவளை புரியாமலும் மனம் வலியோடும் அவளை பார்த்து ” என்ன சொல்ல வர நீ எனக்கு ஒன்னும் புரியல .அவன தான் உன் உயிருன்னு சொல்லுற அவ்ளோ காதலிக்கிற நீ அவன் கூட ஏன் வாழ மாட்டேன்னு சொல்லுற ” என்றே மனம் கசந்த குரலில் கேட்க

” ஏன்னா நான் எந்த அளவு கண்மூடி தனமா காதலிச்சேன்னோ அந்த அளவு அவன இல்ல இல்ல அதுக்கும் மேல அவன வெறுக்கிறேன் ” என்றாள் இதுநாள்வரை அமைதியே உருவமாய் இருந்த நந்தினி உக்கிரமாக மாறி பதில் அளித்தாள்.

உதய்க்கு மனம் வலித்தது தன்னவளின் வார்த்தைகளை கேட்டு தன்னை இவ்வளவு தூரம் காதலித்திருக்கிறாள் என்று சந்தோஷபடுவதா அல்லது அதை விட அதிகமாக வெறுக்கிறேன் என்கிறாளே அதை நினைத்து கவலை கொள்வதா என்று புரியாமல் சிலையென நிற்க

அவன் தன்னகான பதிலுக்காக தான் காத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு ” எவன் ஒருவன் அவனுக்கு வர போற மனைவியோட கையை பிடிச்சு பாதுகாப்ப தரனுமோ அத என்னோட கிருஷ் எனக்கு தராமா பொய்டான். அவனோட பாதுகாப்புல இருக்க வேண்டிய நான் அவனாலயே அசிங்க பட்டு நின்றேன் ” என்று சொல்ல அந்த நாள் அவள் கண் முன் வந்து செல்ல அதன் தாக்கமாக அவளது விழியில் கண்ணீர் தேங்கியது..

அவளது ஒவ்வொரு வார்த்தையும் அவனின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்க அவளது கண்ணீர் முழுதாக உடைக்க செய்தது.

அவள் விழிநீரை காண துடிக்காதவன் என்ன செய்யலாம் என்று யோசிக்க நைட் டைம் பீச்சுக்கு போறது பிடிக்கும் என்று சொன்னது ஞாபகம் வர முகத்தில் ஒரு புள்ளி அளவு புன்னகை பூத்தது.

” சாரி சார் என்னோட கஷ்டத்தை சொல்லி உங்களையும் கஷ்ட படுத்திட்டேன் ஐம் ரியலி சாரி சார் ” என்றவள் படுக்க போக யோசனையில் மிதந்ததவன் அவளது ” குட் நைட்டு” என்று வாக்கியத்தில் யோசனையை கலைத்தவன் ” நாம இப்போ பீச்க்கு போகலாமா ” என்றான் கனிவுடன்..

நந்தினி சிறிது யோசிப்பது போல் பாவனை செய்தவள் ” போகலாம் ஆனா ஒரு கண்டிஷன் ” என்றாள்.

” சரி என்னன்னு சொல்லு ” என்றான் அவள் வர சம்மதித்த சந்தோஷத்தில்..

” நான் உங்க கூட பீச்சுக்கு வந்தா நீங்க எனக்கு டிவேர்ஸ் தரணும் ஓகேவா சார்” என்று கேட்க அவனை பார்க்க

அவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது. “இவ ஒருத்தி அது நான் தான்னு கூட தெரியாம என்ன பழிவாங்க என்கிட்டயே டிவேர்ஸ் கேக்குறா” என்று நினைத்தவன் அவளுக்கு சரி என்று சொன்னான்.

“சரி போ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா போலாம் ” என்க நந்தினியும் வேகமாக உடை மாற்றிவிட்டு வந்தாள்.

பின் இருவரும் யாரும் அறியா வண்ணம் பீச் சென்றனர்.

ஜீவாவின் பைக்கிலே இருவரும் சென்றனர்.

” சார் கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க ” என்று அவசர படுத்த

” இரு நிறுத்துறேன் ” என்று வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான்.

” எதுக்கு நிப்பாட்ட சொன்ன தினு மா ” என்று கேட்க ” சார் அங்க பாருங்க அங்க ஒரு தாத்தா சுக்கு காபி வித்துட்டு இருக்காரு வாங்க போய் நாம்மலும் காபி வாங்கி குடிக்கலாம் ” என்று அவனை துரித படுத்தினாள்.

” வா போகலாம் ” என்று அவளை சிரித்தபடியே அழைத்துச் சென்றான்.

இருவரும் காபி வாங்கி குடிக்க அவர்கள் இருவரையும் கண்டவர் ” புதுசா கல்யாணம் ஆனவுங்களா ” என்றவர் இருவரும் நோக்கு வதை கண்டவர் ” பாக்க அப்படியே கிருஷ்ணன் ருக்குமணி மாதிரி அம்சமா இருக்கீங்க ” என்றார்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள உதய் அவருக்கு காசு கொடுத்து விட்டு வந்தான்.

உதயும் நந்தினியும் எதுவும் பேசாமல் அமைதியாக நேரத்தை கடத்த பீச்சிற்குள் வந்தவுடன் நந்தினி குழந்தையாக மாறி போனாள்.

அலைகளுடன் விளையாடுவதை சிறிது இடைவெளி விட்டு அமர்ந்த படி இரசிக்க தொடங்கினான் உதய்.

” உதய் சார் வாங்க ஏன் அங்கேயே உட்கார்ந்துட்டு இருக்கீங்க ” என்று விளையாடிய படியே கேட்க

” நான் வரல நீ விளையாடு நான் இப்படியே உட்கார்ந்துருக்கேன் ” என்க ” அட என்ன‌ சார் நீங்க பீச் வரைக்கும் வந்துட்டு கால் கூட நினைக்காம போனா அப்புறம் இந்த கடல் கோச்சிக்காதா ” என்று சிறுபிள்ளை தனம் போல் கூறி அவனை இழுத்துச் சென்றாள்.

உதய்க்கு சந்தோஷமாக இருந்தது அவளது இந்த உரிமையில். இத்தனை வருடம் இருந்த வெறுமை அவனை விட்டு சென்றது..

அவனும் நந்தினியுடன் மகிழ்வாக அந்த நிமிடத்தை கழித்தான். அவனுக்கு அவனது நிதி கிடைத்தது போல் இருந்தது.

பின் இருவரும் விளையாடி விட்டு கால் நடையாக நடக்க தொடங்கினர்.

இருவரது கைகளும் உரசியும் உரசாமல் இருந்தது. ஒவ்வொரு முறையும் அவனது கை அவளது கையை உரசிடும்போது அவளுக்குள் ஏதோ ஒருவித சிலிர்ப்பு.

அமைதியாக இருந்த அவர்களது பயணத்தை நிதி பேசிக் களைத்தாள். ” உங்களுக்கு ஒரு விஷியம் தெரியுமா சார் எனக்கு இந்த மாதிரி நைட் டைம் பீச்சுக்கு வரனும்ன்னு ரொம்ப ஆசை .ஆனா என்னால வரவே முடியல ரொம்ப வருஷத்துக்கு ஆசை இன்னைக்கு தான் நிறைவேறி இருக்கு சார்” என்றாள் அத்தனை மகிழ்ச்சியுடன்…

” எனக்கும் தான் அது முன்னாடியே தெரியுமே ” என்று வேகமாக சொல்லி நாக்கை கடித்துக் கொள்ள

” என்ன சார் சொல்றீங்க உங்களுக்கு எப்படி இது முன்னவே தெரியும்னு சொல்றீங்க . எனக்கு இப்படி ஒரு ஆசை இருக்குன்னு என்னோட கிருஷ் கிட்ட மட்டும் தான் சொல்லியிருந்தேன் அப்போ உங்களுக்கு எப்படி ” என்று கேட்டு அவனை பார்க்க

திருத்திருவென முழித்த உதய் ” அது வந்து பொதுவா எல்லா கேர்ள்ஸ்க்கு இப்படி ஒரு ஆசை இருக்கும் அத வச்சு தான் சொன்னேன் ” என்று வாய்க்கு வந்ததை அளந்து விட்டான்.

” ஓஓஓஓ ” என்றவள் அதற்கு மேல் பேசாமல் மெதுவாக நடந்தாள்.

” தினு மா நாம ஒரு செல்ஃபி எடுத்துக்கிலாமா ” என்று போனை காட்டி உதய் சொல்ல எதுக்கு என்பதுபோல் பார்த்து வைக்க ” மெமரிஸ்காக தான் தினு மா . நாம இங்க வந்தோம்னு நமக்கு ஞாபகமாக இருக்கனும்ல அதுக்காக தான் ” என்றான்.

அவனுக்கு எங்கே தெரிய போகுது இன்னும் சில தினங்களில் அவனுக்கு இந்த புகை மட்டுமே அவன் உயிர் வாழ உதவ போகுது என்று.

நந்தினியையும் சரி என்று சொல்லிட இருவரும் சேர்ந்த படி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்..

” சார் ஆல்ரெடி டைம் ஆச்சி வாங்க வீட்டுக்கு போகலாம் ” என்று சொல்லி இருவரும் பைக் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

பைக்கை ஆன் செய்ய அதுவோ ஆன் ஆகாமல் இருக்க நந்தினி அவனின் மொபைலை வாங்கி இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோஸ்ஸை பார்வையிட்டாள்.

ஒரு புகை படத்தை பார்த்தவளின் கண்கள் அகல விரிய ” சார் சார் ” என்று பதறிப்போய் அவனை அழைத்தாள்.

” என்னாச்சு தினு மா எதுக்கு இந்த பதற்றம் அப்படி என்ன அதுல பாக்குற ” என்று பைக்கை ஸ்டார்ட் பண்ணிய படி கேட்க..

” சார் இந்த போட்டோவ பாருங்க ஏதோ ஒரு பொண்ணு ஒடி வருது ” என்று காட்டிட

” இதுல என்ன இருக்கு” என்றே அதை வாங்கி பார்த்தவனின் கண்கள் உடனே சிவப்பு நிறத்தில் மாறியது.

அதில் அந்த பெண்ணின் ஆடை பாதி கிழிந்திருக்க அதையும் தாண்டி திரும்பி பார்த்தவாறே ஓடிய படி இருந்தது அந்த புகை படத்தில்.

அடுத்த புகை படத்தை பார்க்க அதில் அவளது முகம் தெளிவாக தெரிந்தது. அவனின் இதழ்கள் உச்சரித்தது ” ஸ்ருத்திக்கா ” என்று..

வேகமாக அந்த இடத்தை நோக்கி ஓட்டம் எடுக்க நந்தினியும் அவனின் பின்னாடியே சென்றாள்.

அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து பார்க்க அவள் இல்லாமல் போக அந்த படத்தில் சென்றிருந்த பாதையை நோக்கியே வேகமாக ஓட்டமெடுத்தான் நந்தினியை அங்கேயே பத்திரமாக இருக்கும் படி கூறி விட்டு.

சில தூரம் வரை சென்று தேடியவன் கண்ணில் வெறும் சாலையே தெரியே நந்தினியை நோக்கி வந்தான்.

தூரத்தில் நந்தினி சாலையில் அமர்ந்திருப்பதை கண்டவன் வேகமாக அவளிடம் வந்து பார்க்க அங்கே இரத்த வெள்ளத்தில் ஸ்ருத்திக்கா நந்தினியின் மடியில் கிடந்தாள்..

உடனே ஆம்பிலன்ஸை அழைத்தவன் ஸ்ருத்திக்காவை மருத்துவமனை அழைத்துச் சென்றனர். உடனே சரவணன்க்கும் ஆதிக்கும் அழைத்து சொல்ல பட இருவரும் உடனே கிளம்பினர். சரவணனிற்கு தன் உயிரானவளை காண போகிறோம் என்ற மகிழ்வில் கிளம்பினான்.

அவனுக்கு தெரியாத ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள் என்று…

நந்தினியோ பித்து பிடித்தவள் போல் மருத்துவமனையில் அமர்ந்திருந்தாள்…

தேடல் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!