Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடல் 40

 

?வெளிச்சம் கண்டு
பயந்தவள் இன்று
அதனை கண்டு
புன்னகையுடன்
ஏற்றுக்கொண்டாள்.?

    இருவரும் தன்னிலை மறந்து இருக்க அந்த நேரம் பார்த்து கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க இருவரும் வேறு உலகத்தில் இருந்து பூ உலகத்தை அடைந்தனர்.

பாவையவளுக்கு நாணம் வந்தாலும் கோபம் என்னும் திரையை முகத்தில் அணிந்து கொண்டு அவனை முறைத்து வைத்தாள்.



Advertisement

“அய்யோ இவ சும்மாவே நம்மகிட்ட இருந்து ஒதுங்கி போ வா இனி கேக்கவா வேணும். நம்ம கிட்ட அஞ்சடி தள்ளி நின்னு பேசுனாலும் பேசுவா ” என்று மனதில் புலம்பியவன் கண்ணுக்கு ஏனோ நந்தினி வித்தியாசமாக தெரிந்தால். மீண்டும் காலிங் பெல் அடிக்க உதயும் நந்தினியும் ஒரு சேர போல் கதவை திறக்க முயற்சித்து இருவரும் இடித்து கொண்டனர்.

நந்தினி அவனை பார்த்து முறைத்து வைத்தாள். ஆனால் உள்ளுக்குள் ஏனோ சந்தோஷமாக இருந்தது.

அதன்பின் உதய் அமைதியாக நிற்க நந்தினியே கதவை திறந்தாள்.

Advertisement

கதவை திறந்த அடுத்த நொடியே ” அம்மா ” என்று அழைத்தவாறு சூர்யாவிடம் இருந்த தாவினாள் குழந்தை ஜான்வி.

Advertisement

அவளை ஆர தழுவிக் கொண்ட நந்தினி அவளின் முகமெங்கும் முத்தத்தை கொடுத்து அவளை அணைத்து கண்ணீர் வடித்தாள்.

நந்தினியிடம் இருந்த குழந்தை தன் தந்தையான உதயை கண்டதும் அவனிடன் தாவிக் கொள்ள அவளை அணைத்தவன் ” ஜானு குட்டி எப்படி இருக்கீங்க ” என்று கேட்க முகத்தை ஏகத்துக்கும் தூக்கி வைத்துக் கொண்டாள் .

” அச்சோ என்னோட செல்ல பேபி இப்படி உம்முன்னு இருந்தா நல்லாவா இருக்கும் என் தங்கம்ல பட்டு குட்டில அப்பாவ பாருங்க டா ” என்று ஜானு விடம் கெஞ்சல் கொஞ்சல் என செய்ய எதுக்கும் தான் மயங்க மாட்டேன் என்பது போல் இருந்தாள்.

Advertisement

நந்தினியிடம் கண்களாலேயே பேசியவன் அமைதி காக்க நந்தினி சென்று கையில் சாக்லேட்டுடன் வந்திருந்தாள்.

சாக்லேட்டை கண்ட ஜானுவின் கண்கள் பல பலக்க ” அம்மா சாக்கி ” என்று கேட்க

” அப்போ நீ அப்பாகிட்ட பேசுங்க நான் உங்களுக்கு இது தருவேனாம் ” என்று தாஜா பண்ண சரியா அவளை தாக்கியது.

தந்தையின் கண்ணத்தை முத்தத்தால் இற படுத்தி விட்டு ” இனி இப்படி என்ன தனியா விட்டுட்டு போஹாத ” என்று மழலையில் சொல்ல

” சரி டா பேபி இனி அப்பா உன்ன விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன் ஓகே வா ”  என்று விட்டு நந்தினியிடமிருந்து அந்த சாக்லேட்டை வாங்கி அவளிடம் தந்தான்.

சாக்கி வாங்கிய சந்தோஷத்தில் ஜான்வி அவனை விட்டு இறங்கி வீட்டிற்குள் சென்றாள்.

” நாங்க உள்ள வரலாமா ரொம்ப நேரமா என்னையும் என் புருஷனையும் வெளியே நிக்க வச்சிட்டு இருக்கீங்க ” என்று சுமி இருவரை பார்த்து சிரித்த படி கேட்க

” ஹே சுமி மா இது உன்னோட வீடு இதுக்கு எதுக்கு பேர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு இருக்க உள்ள வா உள்ள வாங்க சூர்யா ” என்று இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.

இவர்கள் உள்ளே வரவும் குக்கர் சௌண்ட் அடிக்கவும் சரியாக இருக்கவே நந்தினி உள்ளே சென்று அடுப்பை அணைத்து விட்டு அவர்களுக்கு குடிக்க ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தாள்.

சூர்யாவுக்கு சுமிக்கும் கொடுத்தவள் உதயிடம் முறைத்த படியே நீட்ட அவனோ அமைதியாக எடுத்துக் கொண்டு குடிக்க தொடங்கினாள். நந்தினியும் அவளுக்கொன்று எடுத்து விட்டு உதயிக்கு எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.

” ஏன் டா கதவ திறக்க அவ்வளவு நேரம் ” என்று சுமி கேட்க ” அதுக்கு இவ தான் காரணம் ” என்று உதய் நந்தினியை கை காட்ட

” இல்ல அக்கா உதய் சார் தான் அதுக்கு காரணம் ” என்று உடனடியாக பதில் நந்தினியிடமிருந்து வந்தது.

இருவரையும் கண்ட சூர்யா ” யார் காரணம் ” என்று கேட்க

இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் கை காட்டினர்.

இருவரையும் கண்டு முறைத்த சுமி ” யாரு காரணமும்ன்னு நாங்க சொல்றேன் நீங்க நடந்துச்சின்னு சொல்லுங்க ” என்று சரியாக கோல் போட அதில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் முழிக்க தொடங்கினர். அதற்கு மேலும் நந்தினிக்கு நடந்தது ஞாபகத்துக்கு வரவே லேசாக அவளது கண்ணம் ஆப்பிள் போல் சிவப்பேற தொடங்கியது.

அதனை சுமி சூர்யாவின் ” பாருங்க சூர்யா நாம ஒன்னு நினைச்சிட்டு இங்க வந்தா இதுங்க ரெண்டும் ரொமன்ஸ் பண்ணிட்டு இருந்துருக்குங்க போல அதான் நந்து முகத்துல அந்த தேஜஸ் தெரியுது ” என்றாள்.

” நீ கொஞ்சம் அமைதியா இருக்கிறியா தேவை இல்லாம பேசிக்கிட்டு ” என்று சொல்ல சுமி இதழை சுளித்து காட்டிவிட்டு இரும்பினால்.

அவளது இருமலில் தன்னை மீட்டு எடுத்துக்கொண்ட நந்தினி எழுந்து வேகமாக உள்ளே சென்றாள்.

உதயோ ” சரி நீங்க போய் ரெஸ்ட் எடுங்க நான் போய் சமைக்கிறேன் ” என்று விட்டு வேகமாக சமையலறைக்கு சென்றான்.

அவனையே வாயை பிளந்து சுமி பார்த்து கொண்டிருக்க ” வா போய் ரெஸ்ட் எடுக்கலாம் .இப்படியே அவன வாய பொழந்து பாத்துட்டு இருக்காத அப்புறம் கொசு எதாவது உள்ள போயிட போகுது ” என்று அவனது கறாரான குரலில் சொல்லிவிட்டு அவளது அறைக்கு சென்றான்.

” இப்போ இந்த சூர்யா நம்மல கிண்டலடிச்சிட்டு போராறா இல்ல திட்டிட்டு போறாரா “என்று சிந்தித்தவள் அவனது பேசியது கேலி தான் என்று தெரிந்ததும் வேகமாக அவளது அறைக்கு அவனை தேடிச் சென்றாள்.

காலை உணவை செய்து முடித்த உதய் அனைவரையும் அழைக்க சுமி நந்தினி சூர்யா ஜானு குட்டி என நால்வரும் வர உதயே அனைவருக்கும் பரிமாறினான்.

அனைவரும் ருசித்த படி சாப்பிட்டு முடிக்க சூர்யா ஜான்வியை தூக்கிக் கொண்டு வெளியே சென்றான்.

உதய் ஹாலில் அமர்ந்து எஸ்டேட் விஷயமாக ஏதேதோ ஃபைல்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

சுமியும் நந்தினியும் பேசிக்கொண்டு மேலே செல்ல அப்போது ஏதோ ஃபைல் வேண்டும் என்று எழுந்த உதய் நந்தினி போவதை அறிந்து ” தினு மா ” என்றழைக்க..

உதயை திரும்பி பார்த்தவள் ” சொல்லுங்க உதய் சார் ” என்றாள்.

” தினு மேல ஒரு ப்லு கலர் ஃபைல் இருக்கும் அத கொஞ்சம் எடுத்துட்டு வந்து கொடு மா ” என்க

” சரிங்க சார் இருங்க நான் எடுத்துட்டு வரேன் “என்று வேகமாக மேலே சென்றாள். சுமி இதனை எல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.

வேகமாக அறைக்கு சென்ற நந்தினி உதய் எடுத்து வர சொன்ன ஃபைலை தேட அது இல்லாமல் போகவே அவனது கப்போர்டை திறந்து தேடி பார்த்தாள். அதிலிருந்து ஒரு சாவி கொத்து கிடைக்க அதை எடுத்தவள் உள்ளே வைக்க சென்ற போது ” ஏன் அது அந்த குட்டி ரூம்ல கிருஷ் வச்சிருக்க கூடாது ” என்று யோசித்தவள் அதை எடுத்து கதவருகில் சென்று திறந்து பார்த்தாள்.

திறந்து பார்த்தவளுக்கு ஆச்சிரயமே மிஞ்சியது. அந்த அறை முழுவதும் அவளுடைய புகைப்படமே நிறம்பி இருந்தது.

அவளது கல்லூரி முதல் நாள் கோவிலில் சாமியிடம் வேண்டியது போல் முதல் புகைப்படம் இருந்தது. அதற்கடுத்து மேடையில் ஃபரஷ்சர்ஸ் டேக்கு பாடிய  போது எடுத்தது இருந்தது.

அதற்கு அடுத்து கிருஷ் அந்த கோவிலில் அவளுக்கு லெட்டரில் அவளது பிறந்தநாள் பரிசாக கொடுத்து செயின் நந்தினி அனிந்தது இருந்தது. அதற்கு அடுத்ததாக அவள் கல்லூரி படிப்பை முடித்த பின்பு க்ரேஜுவன் அன்று எடுத்த படம் என அந்த அறை முழுவதும் அவளது நினைவுகள் மட்டுமே சேகரிக்க பட்டு இருந்தது.

இதனை எல்லாம் ஒர் பார்வை   இட்டவள் அந்த ஃபைலை தேட அது அங்கு இருக்கவும் வேகமாக அதை எடுத்தவள் அறையை மூடி விட்டு அந்த சாவியை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு கீழே சென்றாள்.

கிருஷை பார்த்த படி வந்தவள் கால் தடுக்கி கீழே விழ போக அவளை தாங்கி பிடித்திருந்தான் அவளின் கிருஷ்.

” பாத்து வர மாட்டியா தினு மா கீழ விழுந்துருந்தீன்னா என்ன ஆகுறது ” என்று அக்கறையுடன் கேட்டவன் அவளை நிற்க வைத்தான்.

” பாத்துகுறதுக்கு நீங்க இருக்கீங்க அப்புறம் நான் எதுக்கு கவல படனும் சார் ” என்று ஃபைலை அவன் கையில் திணித்து விட்டு வேகமாக சுமி அறைக்கு சென்றுவிட்டாள்.

அவள் சொன்னதை கேட்டவன் பித்து பிடித்தது போல் அப்படியே நின்றான் சூர்யா அவன் தோள் மீது கை வைத்து அழைக்கும் வரை..

சிறிது நேரம் கழித்து வெளியே வந்து சுமியும் நந்தினியும் உதய் மற்றும் சூர்யாவை நோக்கி வந்து ” இன்னைக்கு எங்களால சமைக்க முடியாது .அதுனால நீங்க ரெண்டு பேரும் தான் சமைக்கனும் “என்று சுமி கூற உதய் நந்தினியை பார்க்க அவள் ஆமாம் என்பது அழகாக தலை அசைத்தாள்.

” இன்னைக்கு புல்லா எங்க ரெண்டு பேரோட சமையல பாருங்க ” என்று உதய் கூறிவிட்டு சூர்யாவை இழுத்துக் கொண்டு சென்றான்.

” எனக்கும் சமையலுக்கு ஏணி வச்சா கூட எட்டாது இதுல நாங்க எங்க சமக்கிறது ” என்று சூர்யா புலம்ப

” நான் சொல்ற வேலையை மட்டும் செஞ்சா போதும் “என்று விட்டு சமையல் வேலையை தொடங்கினான்.

அதன் பின் இருவரும் மணக்க மணக்க சமையல் செய்து டைனிங் டேபிளில் வைத்தனர்.

உதயே சென்று இருவரையும் அழைத்து வந்தான். டைனிங் டேபிளிற்கு வந்தவர்கள் விழி விரித்து பார்த்தனர். ஏனெனில் அங்கு  மீல்ஸ் கடையே இருந்து.

சுமியும் நந்தினி வயிறு நிரம்ப சாப்பிட்டு முடித்தனர்.

அந்த நாள் முழுவதும் அவர்களுக்கு இனிமையாக சென்றது. அடுத்தநாள் நந்தினியின் பிறந்தநாள் என்பதால் உதய் சுமி சூர்யா என மூவரும் அவளுக்காக சின்னதாக ப்ரேத் டே ப்ளான் செய்தனர்.

அடுத்தநாள் பொழுது விடிய கதரிவனும் தனது வேலையை சரி வர செய்வதற்காக உதித்தான்.

நந்தினிக்கோ இன்று தனது பிறந்தாள் என்று சுத்தமாக மறந்து விட்டாள்.

காலையில் எழுந்ததில் இருந்து யாரும் நந்தினியை கண்டு கொள்ளவே இல்லை. அதுவே ஏனோ நந்தினிக்கு கஷ்டமாக இருந்தது.

இவள் சென்று பேசினாலும் அவர்கள் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அழுகை வரவே செய்தது அதுவும் உதய்யின்‌ ஒத்தி வைப்பு அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. மாலை நேரம் வரவும் சுமி சூர்யா ஜானு உதய் நால்வரும் எங்கோ வெளியே சென்றனர்.

நந்தினி அவளது அறைக்கு சென்று கண்ணீர் விட்டு அழுதாள். அதற்குள் அவளுக்கு உதயிடமிருந்து அழைப்பு அழுகையை நிப்பாட்டி விட்டு அழைப்பை ஏற்றாள்.

” இங்க பாரு நந்தினி என்னோட கப்போர்ட்ல செகேன்ட ரோ லெஃப்ட்ல ஒரு பாஸ் இருக்கும் அதுல ஒரு சாரி இருக்கும் அத வியர் பண்ணிக்கோ எனக்கு தெரிஞ்ச சில பேர் வீட்டுக்கு வராங்க ” என்று காட்டமாக கூறிவிட்டு அவள் பேச அனுமதி தராமல் அழைப்பை துண்டித்தான்.

அழுகை வந்தாலும் அவன் சொன்னது போல் கப்போர்டில் இருந்த பாக்ஸ் எடுத்து அதில் இருந்த மஞ்சள் கலந்த சிகப்பு நிற புடவை இருக்க அதை கண்டவளின் உதடுகள் சிரிப்பை தத்தெடுத்தது.

அதை போய் அணிந்து கொண்டு வந்தவள் அதுக்கு தகுந்தாற் போல் அணிகலன்கள் அணிந்து கொண்டு சிறிதளவு ஒப்பனை செய்து கொண்டு கீழே இறங்கினாள்.

வானம் இருட்டிருந்தது லைட்டை ஆன் பண்ண சென்றவள் ஆண் பண்ணி விட்டு அமர்ந்திருக்க அதற்குள் கரண்ட் கட்டானது.

பயத்தில் நின்றவள் டார்ச் தேட செல்ல அதற்குள் அவளுக்கு முன்பு ஒரு வெளிச்சம் தோன்றியது.

அந்த அவளை நெருங்கிய போது தான் அறிந்துக் கொண்டால் அது அவளின் கிருஷ் என்று..

ஓடிச் சென்று அணைத்துக் கொண்டவள் அந்த அணைப்பிலே இருந்தாள்.

அவளை விளக்கி விட்டவன் அவளை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றான்.

பயத்தில் இருந்ததால் எதுவும் தோன்றாமலும் கவனிக்காமலும் அவனுடன் சென்றாள்.

மாடிக்கு வந்தவர்கள் அவள் கண்களை இறுக்க மூடியவன் அவளை விட்டு விலகி நின்றுக் கொண்டான்.

கண்ணில் இருந்த கட்டை கலட்டிவள் கடந்தோ மெழுகுவர்த்தியில் ” ஹாப்பி பர்த்டே நிது ” என்று எரிந்து கொண்டு இருந்தது. அதை கண்டவளுக்கு ஆச்சரியத்துடன் அதிர்ச்சியாக இருந்தது.

அதனை தொடர்ந்து ஹாப்பி பேர்த்டே அம்மு என்றவாறு ஜீவா அவனுக்கு பின்பு ஹரி கவி சுஜி என அனைவரும் மெழுகுவர்த்தியை கையில் பிடித்த படி அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சிரித்த முகமாக அதனை ஏற்றுக் கொண்டவளின் கண்கள் யாரையோ தேட அதனை புரிந்து கொண்ட அனைவரும் மனதினுலே சிரிக்க கங்கா மட்டும் வெறுமனக்கு சிரித்து வைத்தாள்.

அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவனே வந்தான் அவள் கண் முன்னே நந்தினியின் கிருஷ்ஷாக வந்தான்.

அவளுக்கு பிடித்தமான ஒயிட் கலர் ஷேர்ட் ப்ளு கோர்ட் அணிவித்திருந்தான். ஒரு பூங்கொத்துடன் அவள் முன் நின்றவன் ” மெழுகுவர்த்தியில் ஏற்படும் வெளிச்சம் போன்றே உன் வாழ்விலும் வண்ண ஒளிகள் மிளரவே உன்னுடன் உன் தோழனாக காதலனாக மனையாளனாக என்றுமே இருப்பேன் ”  என்றவன் ” ஹாப்பி பேர்த்டே தினு மா ” என்று அந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்.

அவள் அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

பின்பு , அவளை விளக்கி விட்டவன் வா போய் கேக் கட் பண்ணலாம் என்று அவளை கேக் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

மெழுகுவர்த்தி ஊதி கேக் கட் பண்ணி முதலில் உதய்க்கு ஊட்டி விட்டவள் அதற்கு பின்பு ஜீவா கவி சுஜி சுமி சிவசங்கரன் என  அனைவருக்கும் ஊட்டி விட்டாள். ஜீவா அவள் முன் வர அதே நேரத்தில் ஹரியும் வந்தான். இருவருக்குமே இப்போது நந்தினி அண்ணியாகி இருந்தாள்.

” அம்மு இந்தா உன்னோட பேர்த்டே கிஃப்ட் ” என்று நீட்ட அதே நேரத்தில் ஹரியும் ” நந்து  இது இந்த கொழுந்தனாரோட கிஃப்ட்” என்று அவனும் நீட்ட நந்தினி குழம்பி போய் நின்றாள் யாரோடது முதலில் வாங்குவது என்று. உதயே இருவரிடமும் இருந்து அந்த பரிசை பெற்றுக் கொண்டான்.

நேரம் ஆவது தெரிந்து குளிர் வரவும் வீட்டிற்குள் சென்றனர்.அந்த இரவு முழுவதும் சந்தோஷமாக இருந்தனர் பாட்டு டேன்ஸ் என்று…

அனைவரும் இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் உறங்க சென்றனர்.

நந்தினி அறைக்கு வந்தவள் உதய்யை தேட அவனோ பால்கனியில் நின்றிருந்தான்.

” ரொம்ப தேங்க்ஸ் உதய் சார் .எனக்கு இன்னைக்கு என்னோட பேர்த்டேன்னு ஞாபகமே இல்ல சார் ” என்று அவன் பக்கத்தில் நின்று நிலவை இரசித்தாள்.

ஆனால் உதயோ நிலவை இரசிக்கும் தன்னவளை கண்டு இரசித்தான்.

” உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா சார் நான் என்னோட கிருஷ ரொம்பவே லவ் பண்ணேன். ஆனா இப்போ எனக்கு அவனோட ஞாபகம் கூட வர மாட்டேங்கிது சார் . உங்களோட இருக்கும் போது நான் எல்லாத்தையும் மறந்துடுறேன் .அது ஏன்னு கூட தெரியல சார் . ஆனா ஏனோ இந்த ஃபீலும் எனக்கு பிடிச்சிருக்கு. மறக்க முடியாதுன்னு நினைச்ச கிருஷோட ஞாபகங்கள் கூட மறக்க தொடங்கிருச்சு சார் ” என்று நிலவை பார்த்தவாறு சொன்னால் மனதினுள் சிரித்துக் கொண்டு இருந்தாள். உதயோ அதிர்ச்சியில் உறைந்தே நின்று விட்டான்.

அந்த மற்றவர்கள் அனைவரும் சென்னை கிளம்பி சென்றனர்..

தேடல் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!