Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 441

ஒரு வாரம் கழித்து….

அந்த நாளிற்கு பிறகு உதய் நந்தினியை தாங்கு தாங்கு என தாக்கினான். அவளை விட்டு பிரியாமல் அவளுடனே இருந்தான்.

நந்தினிக்கு தலையில் இருந்த காயம் ஆற ஒரு வாரம் எடுத்துக் கொண்டது..

” கிருஷ் நான் கேட்காமலேயே எல்லாத்தையும் கொடுக்கிற நீ இப்போ நான் கேக்கிறத மட்டும் ஏன் தர மாட்டேங்கிற ” என்று அவனுடன் சண்டையிட..



Advertisement

” அடியேய் நீ ஏதோ சாதாரண பொருள் கேக்கிற மாதிரி கேக்கிற ” என்று உதய் கேட்க

” உன்னால முடியுமா முடியாதா டா ” என்று அவனுடன் மலுக்கு நிக்க

” ஏன் டி இப்படி பண்ணுற உனக்கே உடம்பு சரியில்ல இதுல இது இப்ப கண்டிப்பா வேணுமா ” என்று கவலை நிறைந்த குரலில் கேட்க…

Advertisement

” ஹலோ மிஸ்டர் உதய் சார் இத்துநுண்டு அடிக்கு இவ்வளோ சீனா அதுக்கு போய் என்ன தள்ளி வைச்சிடல உன்ன போய் கல்யாணம் பன்னி இப்படி கன்னியாவே இருக்கிறதுக்கு நான் கல்யாணத்த பண்ணாமலே இருந்திருக்கனும் ” என்று அவனிடம் தொடங்கி புலம்பலில் முடித்தாள்…

Advertisement

” நீ கிளம்பி இரு நிது நாம இன்னைக்கு வெளிய போறோம் ” என்று விட்டு வெளியே சென்றான்..

” இவன் கிட்ட யாரு வெளிய கூட்டிட்டு போக சொல்லி கேட்டது ” என்று அர்ச்சித்தவள் கிளம்ப சென்றாள்..

அவள் கிளம்பி தயாராக இருக்கவும் அவளை அழைத்துக் கொண்டு சிறு வயதில் இருந்து வாழ்ந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றான்..

Advertisement

” இது யார் வீடு கிருஷ் ” என்று கேட்க

” இது நம்மளோட வீடு தான் டி . நானும் ஹரியும் இங்க தான் வளர்ந்தேன்  ” என்றான் சந்தோஷமாக

நந்தினி ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்துக் கொண்டே வந்தாள். கடைசி அறைக்கு சென்று கதவை திறக்க முற்பட அது பூட்டி இருந்தது..

” கிருஷ் இது பூட்டி இருக்கு ” என்று சொல்லும் போதே அவளின் கண்களை கட்டி விட்டவன் அந்த அறை கதவை திறந்து அழைத்துச் சென்றான்…

உள்ளே சென்ற கண்களில் கட்டி விட்ட துணியை எடுத்து விட்டான். கண்ணை கசக்கி கொண்டு பார்த்த நந்தினி ஆச்சரியப்பட்டு நின்றாள்..

அந்த அறை முழுவதும் சிகப்பு வண்ண பலூன்கள் இருந்தது. அதனை கண்ட நந்தினி உதயை காண ” நீ ஆசப்பட்டது எதையும் நான் செய்யாம இருப்பேன்னா சொல்லு ” என்று சிரிக்க

அவனின் இதழை சிறை செய்தால் பெண்ணவள். அவளின் இதழ் முத்தத்தில் தத்தளித்து கொண்டிருந்தான் உதய்.

அவள் தொடங்கி வைத்த இதழ் முத்தத்தை முடித்து வைத்தது என்னவோ நிதுவின் கிருஷ்…

அவளை அழைத்து கட்டிலில் அமர வைத்தவன் ” உனக்கு எப்படி நான் தான் கிருஷ்ன்னு தெரிஞ்சது நிது ” என்று கேட்ட படி அவளின் முகத்தில் கோலத்தை போட்டான்.

” ப்ளிஸ் கிருஷ் கொஞ்சம் கைய வச்சிட்டு அமைதியா இருக்கியா ” என்று நெலிந்த படி கூற

” சரி ” என்றவன் அவளை‌ இறுக்கி அணைத்துக் கொண்டவன் ” இப்போ சொல்லு ” என்றான்.

அவளும் அவனின் இதமான அணைப்பில் அனைத்தையும் கூறத் தொடங்கினாள்.

” நீ எப்படி என்ன கண்டு பிடிச்சியோ அத வச்சி தான் கிருஷ் நானும் அது நீ தான்னு கண்டு பிடிச்சேன் ” என்றாள்..

அவன் புரியாமல் அவளை பார்க்க ” என்ன என்னோட புருஸனுக்கு வயசாக்கிடுச்சோ இப்படி மறக்கிற வியாதி வந்துருச்சே ” என்றாள் சிரித்துக்கொண்டே..

அதில் கடுப்பானவன் அவளின் கண்ணத்தை கடித்து வைத்தான்.

” நீ இந்த மாதிரி பண்ணின்னா நான் அப்புறமா சொல்ல மாட்டேன் பாத்துக்கோ ” என்று சிணுங்க அவளின் சிணுங்களை இரசித்தவன் கடித்த கண்ணத்தில் முத்தத்தை பதித்தான்..

அதில் கண்ணம் சிவந்தவள் அதனை மறைக்க பெறும் பாடுபட்டாள்.

” சரி சொல்லு நிது எப்படின்னு ” என்றான்..

” நீ எப்படி என்ன கண்டு பிடிச்ச கிருஷ் ” என்று கேட்க அவன் முகத்தை பார்க்க

” உன்னோட பாட்ட வச்சி தான் ” என்றான் கிருஷ் அவன் கேட்ட கேள்விக்கும் அவனே பதிலை அளித்திருந்தான்.

” நீயே பதிலை சொல்லிட்ட கிருஷ் நானும் உன்ன கண்டு பிடிச்சது அதே பாட்ட வச்சி தான் ” என்றாள்.

” உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல நீ ஒரு ஃபைல் எடுக்க சொல்லி என்ன அனுப்பி வைச்ச ஆனா அது அந்த ரூம்ல இல்லவே இல்ல அப்போ தான் நான் பாடின பாட்டு நல்லா சத்தமாவே ஒளிச்சு நீ தான் கிருஷ்ன்னு சொல்லுச்சி . அதுக்கப்புறம் அந்த ரூம் குள்ள போனா ஃபுல்லா என்னோட போட்டோஸ் தான் அதுவே எனக்கு சொல்லிடுச்சி அது நீ தான்னு அப்புறம் அந்த கீய எடுத்த இடத்துளயே வச்சிட்டு வந்துட்டேன். அப்புறம் சுமி அக்கா கிட்ட உங்கள பத்தின விஷியத்த தெரிஞ்சு கிட்டேன். அப்போ தான் தெரிஞ்சது நீங்க சுமி அக்காவ காப்பாத்த தான் என்ன பாக்க வரலன்னு. அப்புறம் அவுங்க தான் உங்கள திரும்ப என்னை பாக்க வரவச்சுதுக்கு அவுங்க உங்கள புருஷான்னு சொல்லி தான் கூப்பிடுவாங்கன்னும் சொன்னாங்க. இதெல்லாம்  உன்ன அவன் வாழ்க்கைல கொண்டு வரதுக்கு தான் பண்ணேன்னு சொன்னாங்க. ஆனாலும் உங்கள சும்மா விட மனசு வரல அதான் கிருஷோட காதல் எனக்கு வேணாம்னு சொல்லி உங்க கிட்ட நம்மளோட லவ் ஸ்டோரிய சொன்னேன் ” என்றாள்.

இதனை எல்லாம் கேட்ட கிருஷ் அவளின் இதழை சிறை செய்தான். அவனின் சிறையில் சிக்குண்டு இருந்து தேனை சுவைத்தாள். அவளுக்கு மூச்சு வாங்கவும் அவளை விடுவித்தான்..

” லவ் யூ சோ மச் கிருஷ் ” என்று நந்தினி உதயை இறுகி அணைத்துக் கொண்டாள். அவனும் ” லவ் யூ டூ நிது ” என்றவன் அவளுடன் மெது மெதுவாக முன்னேற தொடங்கி அவர்கள் வாழ்வின் அடுத்த அத்தியாத்திற்கு சென்றாள்..

இருண்டிருந்த அவள் வாழ்வில் வண்ணத்தை கொண்டு அதில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடித்தான். பாவையவள் அவனின் செயலில் முதலில் கூச்சம் அடைந்தாலும் அடுத்தடுத்து அவனுடன் இசைந்து போனாள்…

அடுத்த நாளே உதயும் நிதுவும் இந்த வீட்டிற்கு குடி புகுந்தனர். அவர்களுடனே  மரகதமும் வந்து விட்டார். சிறியதாக ஒரு தொழில் தொடங்கி அதில் நல்ல படியாக சென்று கொண்டிருந்தான்.

பாதி நேரம் நிதுவின் கிருஷாக இருப்பான் மீதி நேரம் தினுவின் உதய் சாராக மாறிவிடுவான்.

சூர்யாவை அழைத்துக் கொண்டு சுமி ஒரு ரெஸ்டாரன்டிற்கு வந்திருந்தாள். அங்கே அவர்களை தவிர்த்து யாரும் இல்லை..

சூர்யா அவளை கேள்வியாக நோக்க சுமி அவனின் கை பிடித்து அழைத்து ஒரு இடத்திற்கு வந்தாள்.

சுமி அழைத்து வந்த இடத்தை பார்த்த சூர்யா எதுவும் பேசாமல் அந்த இடத்தை சுற்றி பார்த்தான்.

” என்ன பாக்குறீங்க சூர்யா நீங்க கண்டிப்பா இந்த மாதிரி எனக்காக செய்ய மாட்டிங்க நானும் நீங்க சொல்லுவீங்க சொல்லுவீங்கன்னு காத்திட்டு இருந்தா எனக்கு வயசாகிடும் ” என்றவள் சூர்யாவிற்கு முதுகை காட்டி நின்று பேசத் தொடங்கினாள்..

” கிட்டத்தட்ட நான் உங்கள நாலு வருஷமா லவ் பண்றேன். ஆனா என்னால அத உங்க கிட்ட சொல்ல முடியல சூர்யா . ஆனா இதுக்கபுறமும் என்னால சொல்லா மா இருக்க முடியாது சூர்யா ” என்றவள் ” ஐ லவ் யூ சூர்யா ”  என்ற அடுத்த நொடி அவனின் அணைப்பில் இருந்தாள்.

” நான் எப்போ உன்னோட கழுத்துல தாலி கட்டுனேன்னோ அப்பவே நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். ஆனாலும் உனக்கு சொந்தமானவான மாறுரதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் தேவப்படுச்சி. அதுனால இத்தன நாள் உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணாம இருந்தேன். சரி உன்கிட்ட என்னோட காதல்ல சொல்லலாம்னு இருந்தப்ப தான் நீயே இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சி காதல சொல்ற ” என்று மூச்சு முட்ட பேசியவன் ” லவ் யூ சோ மச் மித்து ” என்றான்..

அவனையே மெய்மறந்து பார்த்தவளின் இதழை கவ்வினான் சூர்யா . முதலில் அதிர்ந்தவள் அதன் பின் அவனுடன் ஒன்றிணைந்தாள். அதன் பின் இருவரும் வீட்டிற்கு வந்தனர்..

அந்த நாளில் இருந்து  சூர்யா சுமியை காதலில் நனைய விட்டிருந்தான். அவனின் காதிலில் திக்குமுக்காடி போனால் சுமி..

வெங்கியும் கீர்த்தியும் இப்போது தான் சிறிது சிறிதாக பேத் தொடங்கி இருந்தனர். அவளின் தப்பை உணர்ந்து வெங்கடேஷிடம் மன்னிப்பை வேண்டி நட்பு பாராட்டினாள். இருவரும் கணவன் மனைவி என்பதனை மறந்து நண்பர்களாக பழகத் தொடங்கினர்..

கவி சுஜி மற்றும் விஷ்ணு என மூவரையும் ஹரி மற்றும் ஜீவா படிக்கும் கல்லூரியிலேயே சேர்த்து விட்டனர். அவர்களுக்கு துணையாக விந்தியதேவி கோவையில் இருந்து கொண்டார்.

கங்கா எல்லாதில் இருந்தும் ஒதுங்கி கொண்டு அமைதியாக இருக்க தொடங்கி விட்டார். அவரின் இந்த அமைதி எதுக்கு என்று தான் யாருக்கும் புரி பட வில்லை…

கார்த்திக் தான் ராஜதுரையின் மூத்த மகன் என்று தெரிந்த பின்பு ராஜதுரைக்கும் ஜெயந்திக்கும் சந்தோஷம் தாளவில்லை. தொல்லைத்த பையன் பல வருஷம் கழித்து கண்டு கொண்டதில் பெற்றவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமல் போனது…

இரு தம்பதியினருக்கும் திருமணம் ஆகி ஐந்து மாதத்தை தொட அதை அவர்களின் குடும்பத்தாரோடு சிறப்பாக கொண்டாடினர்.

அப்போது சுமியும் சூர்யாவும் உதய் நந்தினியிடம் வந்து ஒரு பேப்பரை கிஃப்டாக கொடுக்க அதை வாங்கி பார்த்த இருவரின் கண்களிலும் கண்ணீர் வந்தது.

” இது எங்களோட மேரேஜ் கிஃப்ட் “என்றாள் சுமி.

” எதுக்காக இப்படி பண்ண சுமி நீ பெத்த குழந்தைய எங்களுக்கு தத்து கொடுத்திருக்க ” என்று கண்ணீருடன் உதய் கேட்க

” நாங்க அவளோட பைலோஜிக்கல் பேரேன்ஸா இருக்கலாம் டா. ஆனா அவள பாத்து கிட்டது முழுக்க நீங்க ரெண்டு பேரும் தான். அவ எங்களோட இருக்கிறத விட உங்களோட இருந்தா தான் சந்தோஷமா இருப்பா ” என்று சூர்யா கூறி முடிக்க அவனை இறுக அணைத்து கொண்டான் உதய்…

அந்த நேரம் பார்த்து ஜானு குட்டி ” அம்மா அப்பா ” என்று ஒடி வந்து உதய் நந்தினியை அணைத்துக் கொண்டாள்..

இவர்களின் பிணைப்பை எண்ணி குடும்பமே ஆச்சிரியபட்டாலும் அதை பார்த்து பூரித்து போனார்கள்.. இவர்கள் வாழ்வில் இருக்கும் வண்ணம் எப்போதுமே நிலைத்திருக்க வேண்டி பிரார்த்தனையிட்டு அவர்களின் வாழ்வின் மகிழ்ச்சியை கண்டு விடை பெறுவோம்….

?சுபம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!