Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன்♥️12

முதலில் சுதாரித்த சௌமி நிராதரவாய் அழும்  பவித்ராவை ஓடிவந்து அணைத்துக்கொண்டாள்.

சௌமியின் முகத்தை பார்க்கவே கூசியது பவித்ராவிற்கு.

அக்கா நா… நான்… அந்த மாதிரி இல்ல… அவள் தோள்  சாய்ந்து விம்மி அழுதாள்.

பவி என்ன இது குழந்தை மாதிரி அழுதுகிட்டு…



Advertisement

அக்கா ஸாரி நான்….தடுமாறினாள்.

பவித்ரா… உன்னை யார் இங்கே விளக்கம் கேட்டாங்க? நீ சொல்லி தான் நான் உன்னை புரிஞ்சுக்கணும்னு இல்லை.

எழுந்து உள்ளே வா! கோபமாய் அதட்டினாள் சௌம்யா.

Advertisement

அக்கா அகிலன் சார் எனக்கு அண்ணன்… இன்னும் அழுகை அதிகமானது.

Advertisement

இல்லாத ஒரு விஷயத்துக்கு நாம முக்கியத்துவம் கொடுத்தால் அது உண்மைன்னு அர்த்தம். நீ விளக்கம் சொன்னா எனக்கு கோபம் வரும் பவி…கோபமாகிவிட்டாள் சௌமி.

பவித்ரா  என்னடா இவன் இப்படி  பேசறானேன்னு என்னை தவறா நினைச்சுடாதேம்மா. அக்கா தங்கையோட பிறக்காத எனக்கு நீ தங்கை தான். உண்மையில் ஹரி இப்படி பேசக்கூடிய ஆளே இல்லை.

என் பிரண்டுக்கு வக்காலத்து வாங்குகிறேன்னு மட்டும் நினைக்காதேம்மா . அவனோடு 13 வருஷ பழக்கம் எனக்கு உண்டு.

Advertisement

அடுத்தவங்களை பற்றி புறம் பேசுவதோ, மட்டமா கமெண்ட் பண்றதோ அவனுக்கு பிடிக்காது… அவன் ஏன் இப்படி பண்ணினான்னு எனக்கு புரியல…!

நீ ஃபீல் பண்ணாதேம்மா… சௌமி ரூமுக்கு கூட்டிட்டு போ! மனைவியிடம் ஜாடை காட்டினான்.

கால்கள் வலுவிழந்து தொய்ந்து போய் கட்டிலில் அமர்ந்தாள்.

பவிம்மா இதயா சிணுங்குறா என்னன்னு பாரு! நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன்… குழந்தையை அவள் கையில் திணித்துவிட்டு போனாள் சௌமி.

குழந்தைகள் முகம் கண்டால் பூவாய் மலரும் அவள் இதழ்கள் இப்போது இறுகி துடித்தது. மடியில் கிடக்கும் குழந்தை கையை காலை உதைத்தும் அவள் புத்திக்கு அது எட்டவில்லை.

நீ சரியா இருந்தா உன் கதை ஏன் இப்படி சந்தி சிரிக்க போகுது?

இப்படி அவப் பெயர் வாங்கி கொடுத்ததுக்கு பதிலா நீ செத்துட்டா கூட எனக்கு சம்மதம்… தாயின் குரல் இன்னும் காதில் ஒலித்து மூளையை குடைந்தது.

ஏன்…. ஏன்… எனக்கு மட்டும் இந்த அவச்சொல் எல்லாம்…?

அப்படி எந்த ராசியில் பிறந்தேன்….? பன்னிரண்டு ராசியில் எந்த ராசி இப்படி அசிங்கப்பட்டு நிற்கும் ராசி… அவள் கண்களில் இப்போது கண்ணீர் இல்லை கானலும் இல்லை. உயிரற்ற கண்களில் உணர்வுகள் எங்கணம் இருக்கும்?

“—————-“

பால் கொதித்துக் கொண்டிருந்தது. சௌமியின் மனம் அதைவிட கொதித்துக் கொண்டிருந்தது.

என்னாச்சு இந்த ஹரிக்கு?

என்ன பிரச்னையா கூட இருக்கட்டும்… அதற்காக பேசக்கூடாத வார்த்தை எல்லாம் பேசி விடுவானா? உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மூளை மழுங்கவிடும் என்று புரியாதவனா இவன்?

கல்லூரியில் படிக்கும் காலத்தில் கூட எந்த பெண்ணிடமும் நெருங்கி பேசாத ஒருவன் முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் நடத்தையை பற்றி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசிவிடுவானா?

எனக்கு ஒரு அண்ணன் ஸ்தானத்தில் இருந்தவனா இப்படி என் கணவனை பேசினான்? இன்னும் அவளால் நம்ப முடியவில்லை.

பால் பொங்குவதை கூட உணராமல் ஸ்தம்பித்து நின்ற சௌமியை அகிலனின் குரல் நிகழ் உலகிற்கு கொண்டு வந்தது.

சௌமி ஏன் இப்படி நிற்கிற…? டீயை போட்டு அந்த பொண்ணுக்கு கொடு!

ஏங்க நம்ம ஹரியா…? அவருக்கு என்னங்க ஆச்சு? எவ்வளவு கட்டுப்படுத்தியும் அழுகை வந்தே விட்டது அவளுக்கு.

தெரியலம்மா அவன் எதையோ மனசில் போட்டு குழப்பிட்டு இருக்கான் அது மட்டும் ஊர்ஜிதமா தெரியுது!

பவி எந்த மனநிலையில் அமெரிக்கா வந்தான்னு உங்களுக்கு தெரியுமே… எல்லாத்தையும் அவங்க அம்மா சொன்னாங்களே…!

ஏற்கனவே புண்பட்டுப் போய் வந்த பொண்ணை ஹரி அவர் பங்குக்கு கூறு போட்டு விட்டாரே… எப்படிங்க அந்த பொண்ணுக்கு ஆறுதல் சொல்ல முடியும்?

டென்ஷன் ஆகாதே சௌமி…. ஹரி கொஞ்ச நாளாவே பயங்கர அப்சட்டா இருக்கான்… பவித்ராவை பார்த்த முதல் பார்வையிலே அவனுக்கு பிடிக்கலை.

ஆனா ஒன்னு அவனோட நடத்தைக்கு பின்னே ஏதோ வலுவான காரணம் இருக்கு!

ஊருக்கு போகாம அழிச்சாட்டியம் பண்ணி அவங்க அம்மாவை அழ வைக்கிறான்… இங்கே அந்த பொண்ணை அழ வைத்து வேடிக்கை பார்க்கிறான்…!

அவனை என்னால இப்போவும் கோபிக்க முடியல சௌமி…

ஆமாங்க…கோபமா பேசினாரே தவிர ஹரியோட கண்கள்ல ஏதோ ஒரு புதுவிதமான உணர்வு தெரிஞ்சதுங்க…. கோபமும் அழுகையுமா தான் அவர் போனார்… சௌமி ஒரு நிலையில் இல்லாமல் தவித்து போனாள்.

பவித்ராவுக்கு டீ கொடுத்துட்டு வா நாம போய் ஹரியை பார்த்துட்டு வருவோம்!

இப்போவே போகணுமா?

இல்லை சௌமி எனக்கு என்னவோ படபடப்பா இருக்கு. ஹரி ஏதாவது தவறா…

அவன் ஸ்ட்ரெசில் இருக்கான்… வா போய் பார்த்து பேசிட்டு வருவோம்.

“——————“

ஹரி  நீ ஒரு சைக்கோ… சைக்கோ… தன்னையே கன்னத்தில் வலிக்க அறைந்து கொண்டான்.

யார் மீது உள்ள கோபத்தை யார் மீது காட்டுகிறாய்? சம்பந்தமே இல்லாத பெண்ணை வார்த்தையால் குத்தி குதறிவிட்டு வந்திருக்கிறாயே… உனக்கு என்ன உரிமை இருக்கிறது அந்த பெண்ணை பற்றி பேச….? அவனை அவனாலே மன்னிக்க முடியவில்லை. உன் தாய் உன்னை வளர்த்த விதம் என்ன? நீ பேசிய வார்த்தைகள் என்ன?

மல்லார்ந்து படுத்திருந்தவன் கண்களில் ஒழுகிய கண்ணீர் கன்னம் தாண்டி கழுத்தில் இறங்கியது.

இவ்வுலகை மறந்திருந்தவன் சிந்தையில் புற உலக சத்தம் பதியவில்லை போலும்…. அகிலன், சௌமி இருவரும் கண்ணீர் வழிய படுத்திருந்த ஹரியை கண்டு பதறி விட்டனர்.

ஹரி… என்னடா உனக்கு? மனம் நடுங்க நண்பனின் தோள் தொட்டான் அகிலன்.

மச்சி சாரிறா… சாரி… நான் கடுமையான மன அழுத்தத்தில் இப்படி பேசிட்டேன்… நண்பனின் கரம் பற்றி கண்களில் புதைத்துக் கொண்டான்.

டேய் ஏன்டா… ஏன் உன்னை நீயே பலவீனப்படுத்திக்கிற…?

எதையும் மனசு விட்டு பேசவும் மாட்டேங்கிற… அகிலனுக்குமே கண்ணில் நீர் திரையிட்டது.

சௌமி சாரிடாம்மா… அவள் முகம் பார்க்க இயலாது தலை கவிழ்ந்தான்.

எங்கிட்ட சாரி கேட்டா போதுமா…? பவி பாவம்… உன் பேச்சில் அவ அணு அணுவா செத்துட்டா… சௌமி உரிமையாய் கோபப்பட்டாள்.

எனக்கு ஏன் அவள் மீது இவ்வளவு கோபம் என்று புரியாமல் இல்லை… அந்தக் கோபத்தில் அர்த்தம் இல்லை என்றும் எனக்கு புரியாம இல்லை … அவ மேல கோபப்பட எனக்கு எல்லா உரிமையும் வேணும்னு மனசு தவிக்குது. எனக்கு மட்டும் வேணும்னு என் மனசு ஏங்குது.

ஹரி…. அகிலன் தடுமாற்றத்துடன் அவன் முகம் பார்த்தான்.

ஆமாண்டா முதன் முதலில்   ஏர்போர்ட்டில் அவளை பார்த்தேனே… அப்போவே என் மனசுக்குள்ள அவ உருவம் புகுந்துடுச்சு.

பயந்த கண்களோட பரிதவிப்போட அவள் கண்கள் அங்கேயும் இங்கேயுமா தேடுச்சே… அவ கண்ணோட சேர்ந்து என் கண்ணும் எதையோ தேடுச்சு! என் மனசு எப்படி வேதனை சுமந்து வெறித்த பார்வை பார்க்குமோ… அப்படி தான் அந்த பொண்ணு பார்வையும் இருந்துச்சு.

எப்போவுமே ஒரு நிமிர்வு, ஒவ்வொரு வேலையும் அக்கறையோட அவள் செய்யற அந்த பாங்கு, குழந்தைகளை தாயன்போடு கொஞ்சுற அந்த மென்மை…. உன் வீட்டுக்கு வந்தா அவளையே பார்க்க சொல்லி மனசு நச்சரிக்குது…!

உனக்கு அவளை பிடிக்காதேடா… நம்ப இயலாது பார்த்தான் அகிலன்..

யார் சொன்னது? அவளை பிடிக்க கூடாதுன்னு நானா பேசின அபத்தமான பேச்சு அது!

உனக்கு பிடித்தால் அவகிட்டேயே சொல்லி இருக்கலாமே…

எனக்கு ஆயாம்மான்னாலே பிடிக்காதே…

என்னடா சொல்ற?

சொல்றேன்… நீ என் அம்மாவை பார்த்து எவ்வளவு நாள் இருக்கும்?

என் மேரேஜில் பார்த்தது. நீங்க தான் ஃபேமிலியா வந்தீங்களே…

இப்போ பாரு… மொபைலை எடுத்து போட்டோ காட்டினான்.

ஹரி… அலறிவிட்டான் அகிலன்.

சௌமியால் நம்பவே முடியவில்லை… திகைத்து போனாள்.

என்னடா… என்ன இதெல்லாம்?

சொல்றேன்… யார் கிட்டேயும் ஷேர் பண்ணிக்க முடியாத விஷயம் தான்… ஆனாலும் சொல்றேன்… சாரிடா மூனு வருஷமா உன்கிட்ட கூட சொல்லாம விட்டதுக்கு.

உடைந்து அமர்ந்தவன்… சொல்லத் தொடங்கினான் தன் வலியை…தன்னுள் அழுத்திக் கொண்டிருந்த சுமையை…

கேட்க… கேட்க… அகிலனும் சௌமியும் நொறுங்கி விட்டனர்…

சாரி ஹரி எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல… உண்மையான வருத்தம் கொண்டாள் உற்ற தோழி.

ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தன்னை நிலை படுத்திக்கொண்டவன்… அது தான் ஆயம்மா பிடிக்காது.

இவளும் ஆயாம்மாவா வந்தாளா … அது தான் பிடிக்கல… நண்பனின் தோளில் சோர்ந்து சரிந்தான்.

ஹரி நீ எவ்வளவு தைரியமானவன்… நீ ஏன்டா இப்படி உடைந்து போய்…தலை கோதி ஆறுதல் படுத்தினான்.

நான் கொஞ்ச நாளாவே இயல்பா இல்லை அகி. மனப்போராட்டம் அதிகமா அலைகழிக்குது. சைட்ரியாடீஸ் கவுன்சிலிங் கூட போனேன்.

அகி சௌமி ரெண்டு பேரும் என்னை புரிஞ்சிகிட்டீங்க தானே…? கெஞ்சும் பார்வையால் இரைஞ்சினான்.

உன் வேதனை ஒரு பக்கம் இருக்கட்டும்… பவித்ரா பாவம் இல்லையா… அவளை ஏன் இப்படி பேசி அசிங்கப் படுத்தின…?அகிலன் தயங்கியபடியே கேட்டாள்.

அவளை அசிங்கப்படுத்தல என் ஆவேசத்தை கொட்டி கவிழ்த்துட்டேன்…

நேத்து உன் பர்த்டே பார்ட்டியில் அந்த தினேஷ் பவித்ராவை பார்த்த பார்வையே சரியில்லை. எந்நேரமும் அவன் கண்ணு அவளை சுத்தியே வட்டமடிச்சது.

அவன் பார்க்கிறான்னு அவன் மேல கோபம்… இவளை ஏன் பார்க்கிறான்னு இவ மேல கோபம்.

இது போதாதுன்னு உன் மச்சினன் அவளை போன்ல அவ்வளவு ஆர்வமா பார்க்கிறான்.

நான் உள்ளுக்குள் தவிச்சுட்டு இருந்த நேரம் காலையில் அம்மா கால் பண்ணி ஒரே அழுகை ஊருக்கு வா கல்யாணம் பண்ணிக்கோன்னு…

அந்நேரம் நீ வந்து சௌமி அவ தம்பி சர்வேஷ்வரனுக்கு பவித்ராவை கல்யாணம் முடிக்க ஆசைப்படறான்னு சொன்னயா… என்னால தாங்கிக்க முடியல…!

நிம்மதியா பார்க்கில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தேன் அந்த தினேஷ் போன் பண்ணி பவித்ராவை பற்றி என்னென்ன பேசுறான்… அதுவும் என்கிட்ட… கடுமையான டென்ஷன் கோபம் தலைக்கு ஏறிடுச்சு!

சௌமியும் அகிலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சௌமி… பவித்ரா அழறாளா?  உடைந்து வெளிவந்தது அவன் குரல்.

உன் பாராட்டில் உச்சி குளிர்ந்து போயிருப்பாளா?

நான் அவகிட்ட சாரி கேட்கிறேன்டா… அவளை ரொம்ப காயப்படுத்திட்டேன் ரொம்பவே காயப்படுத்திட்டேன்.

உன் சாரி அவ காயத்துக்கு மருந்து போடாது ஹரி… அவ ஏற்கனவே காயம்பட்டு தான் இங்கே வந்தா… சௌமியின் குரலில் அவ்வளவு வேதனை.

என்ன சொல்ற சௌமி?

ஆமா ஹரி… அவ வாழ்வை வெறுத்து பெத்தவங்களை வெறுத்து தான் இங்கே வந்தா…

புரியற மாதிரி சொல்லும்மா… அவன் உடல் மொழியில் ஒரு நடுக்கம். ஏற்கனவே தளர்ந்திருந்த அவன் மேனி சிறிதாய் குலுங்கியது.

சொல்றேன்… எல்லாம் கேட்டுட்டு மறுபடியும் அவளை காயப்படுத்தக் கூடாது.

அவளுக்கு உன் மேல விருப்பம் இல்லைன்னா நீ ஃபோர்ஸ் பண்ணக்கூடாது.

என்னம்மா இப்படி சொல்ற? அப்பட்டமான ஏக்கம் அவன் முகத்தில்.

ஹரி உன் வலியும் வேதனையும் ஒரு விதம் அவ அனுபவித்த வலியும் அவமானமும் வேற விதம். ஆனா ரெண்டு பேருக்குகும் வலி அதிகம் தான்.

———தொடரும் ——–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!