இடையில் வருடிய கரத்தை நடுக்கம் குறையாது பீதியுடன் அவள் பார்க்க….
என்ன புடவை கட்டியிருக்க…? இடுப்பு எடுப்பா தெரியணுமோ…? இழுத்து மூட்றி அ குக்க எல சூஸ்துண்டி.. ( அந்த நாய் எப்படி பார்க்கிறான் ) அத்தனு செப்துனாடு ச்சோ கியூட்… கேதே (அந்த எருமை சொல்றான் ச்சோ கியூட்) கண்கள் சிவக்க கர்ஜித்த ஹரிசரண் லேசாய் விலகியிருந்த அவள் புடவையை இழுத்து மூடி விட்டான்.
இன்னும் இயல்புக்கு திரும்பாத பவித்ராவிற்கு உதறல் நிற்கவில்லை. கண்ணீரும் நிற்கவில்லை.
ஏய் ஆயம்மா எண்டுக்கு எடுஸ்துனாவு (ஏன் அழற ) உன்னை யார் புடவை கட்டி ஷோ காட்ட சொன்னது? சுடி போட வேண்டியது தானே…?
Advertisement
அவன் ஒரு ஜொள்ளு பார்ட்டி கேர்ஃபுல்லா இரு! அப்புறம் உன்னிஷ்டம்.
அவன் எதுவும் நடவாதது போல் போய் விட்டான். அவளுக்கு தான் அழுகை நிற்கவில்லை.
எதற்கெடுத்தாலும் உடைந்து அழும் அழுமூஞ்சி பெண் அவள் அல்ல என்றாலும் அவளாலும் தாள இயலாத வேதனை அழுகையாய் வெளி வந்தது.
Advertisement
பவி… பவி… சௌமியின் குரல் கேட்டு புடவை முந்தானையால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
Advertisement
என்னாச்சு…?
ஒன்னுமில்லக்கா… கொஞ்சம் தலை வலிக்குது… காபி போடலாம்னு வந்தேன். முகத்தை நிமிர்த்தாமலே பதில் கூறினாள்.
உனக்கு இன்னைக்கு ரொம்ப வேலை அதிகம் பவி… நீ இரு நான் காபி போட்டு தரேன்.
Advertisement
பரவாயில்லக்கா…
அய்யோ பவி நீ அப்படி உட்காரு நான் அஞ்சு நிமிஷத்தில் காபி போடறேன்.
காபி போட்டு இருவரும் குடித்து விட்டு தான் வெளியில் வந்தனர்.
“——————–“
சௌமி ஒரு குழந்தை, பவித்ரா ஒரு குழந்தை என்று தூக்கி வைத்து நிற்க.. வீடியோ காலில் ரேணுகாவும் நந்தகுமாரும் வந்து மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறினார்கள்.
அடுத்த ஐந்தாவது நிமிஷம் சௌமியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி லைனில் வந்தார் மருமகனுக்கு வாழ்த்து கூற…
ஹாய் அத்தான் எப்படி இருக்கீங்க…? இடையில் வந்தான் சர்வேஷ். சௌமியின் ஒரே தம்பி சமீபத்தில் தான் க்ரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று சப் ரெஜிஸ்டர் கிரேடு 2 பணி பெற்று ஆறு மாதம் தான் ஆகிறது.
சர்வா நான் நல்லா இருக்கேன்… ஜாப் எப்படி போகுது? மச்சினனிடம் பேசிக் கொண்டிருந்தான் அகிலன்.
அமோகமா போகல… டென்ஷனாவே போகுது. அத்தான் குட்டீஸ் எப்படி இருக்காங்க?
இதோ பாரு… அகிலன் வீடியோவை திருப்பி குழந்தைகள் புறம் காட்டினான்.
இவள் தானா அவள் என்ற யோசனையுடன் கூர்ந்து கவனித்தான் சர்வா…. குழந்தையை அணைவாய் பிடித்திருந்த பவித்ராவில் அவன் பார்வை நிலை பெற்று நின்றது.
ஏ சர்வா எப்படி இருக்க…? சௌமி தம்பியை பார்த்து கை அசைக்க… இயல்பாகி நின்றான் சர்வேஷ்.
ஒரே ஜாலி தான் போல… தமக்கையிடம் பேசினாலும் அவன் விழி பந்துகள் ஓரமாய் உருண்டோடியது.
நீயும் US வாயேன்… ஜாலியா என்ஜாய் பண்ணலாம்.. கேலியாய் சிரித்தாள் சௌமி.
எங்க…. எனக்கு புரபேஷன் பீரியட் (தகுதிகாண் பருவம்) முடியற வரைக்கும் லீவ் எடுக்க முடியாதே… நீ தான் இண்டியா வரியே அப்புறம் என்ன..?
அத்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி மீண்டும் அவன் விழிகள் தேடியது பின்னால் நின்ற பதுமையை.
“—————“
அகிலன் கேக் வெட்டி முதல் துண்டை மனைவிக்கு ஊட்டி விட்டு அடுத்து ஆருயிர் நண்பன் ஹரிக்கு ஊட்டிவிட்டான்.
ஹரி அகிலனுக்கு ஊட்ட… சௌமி ஒரு கேக் துண்டு எடுத்து பவித்ராவிற்கு ஊட்டி விட… வெள்ளை நிற க்ரீம் ஒட்டிய அவள் இதழ்களை இமைக்காமல் பார்த்து நின்ற தினேஷ் மொபைல் எடுத்து போட்டோ எடுக்க முனைய… சௌமி டிபன் பிளேட்டெல்லாம் ரெடியா? கேட்டுக்கொண்டே குறுக்கே வந்து நின்றான் ஹரி.
ரெடியா இருக்கு ஹரி… என்றாள் சௌமி.
தினேஷ் நீங்க இந்த கேக்கை பீஸ் போட்டு எல்லாருக்கும் கொடுங்க! கடும் முறைப்புடன் அவன் கையில் பேப்பர் பிளேட்டை திணித்தான்.
சௌமி குழந்தைங்களை கூட்டிட்டு உள்ளே போ…! என்றான் ஹரி
ஆமாங்கா நீங்க போங்க… இங்கே நான் பார்த்துக்கிறேன் என்றாள் பவித்ரா.
அவங்க காலையில் இருந்து வேலை பார்த்துட்டு இருக்காங்க… ரொம்ப டயர்டா தெரிஞ்சாங்க.. நான் தான் ரெஸ்ட் எடுக்க சொல்லி அனுப்பினேன்.
கெஸ்ட் எல்லாம் அவங்களே எடுத்து போட்டு சாப்பிடுவாங்க… எல்லாம் ரெடியா தான் இருக்கு… அகிலனை பேச விடாமல் இழுத்துக் கொண்டு சென்றான் ஹரி.
“—————“
உண்டு முடிக்கும் வரை தினேஷின் விழிகள் இடைவிடாது தேடியது அந்த பெண் குட்டியை.
சமையல் அருமை என்று வந்திருந்த அனைவரும் ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார்கள்.
இட்லி சாம்பார் தேவாமிர்தம். எங்க சென்னை ரத்னா கபே சாம்பார் மாதிரி இருந்துச்சு! நான் எங்கேயும் இத்தனை ருசியான சாம்பார் சாப்பிட்டதே இல்லை… சென்னை வாலா ஒருவர் மனம் திறந்து பாராட்டினார்.
பவித்ராவும் என் மனைவியும் பண்ணினது என்றான் பெருமை பொங்க…
பொங்கல் அவ்வளவு டேஸ்ட். அரிசி அரிசியா வேகாமலும் இல்லை… கூழா மசிந்து போகவும் இல்லை. பொங்கலில் மிளகு அவ்வளவு அருமையா பொறிந்து மணமா அவ்வளவு பதமா பக்குவமா இருந்துச்சு! ஒரு மாமி திருப்தியாய் உண்ட நிறைவுடன் பாராட்டினார்.
கரெக்ட்டா சொன்னீங்க மாமி…இதை செய்தவங்களை பாராட்டிட்டு தான் போகணும்… தினேஷ் அடமாய் நின்றான்.
குழந்தைகள் உறங்கி விட. மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமி.
என்ன ஓவரா பேசற…? நீ போய் அவன்கிட்ட பல்லை காட்டிட்டு நில்லு… அவன் உரசிட்டு நிற்பான். எனக்கென்ன எக்கேடும் கெட்டுப் போ…! சீற்றத்துடன் அவள் கரம் பற்றி தள்ளி விட்டு போனான்.
“—————–“ என்ன பவி முகம் வீங்கி இருக்கு நைட் தூங்கினியா இல்லையா?
தூங்கினேங்கா… நேத்து தலைக்கு குளிச்சது இன்னைக்கு நீர் கோத்துட்டு தலை வலிக்குது…
ஹாஸ்பிடல் போகலாம் கிளம்பு!
அக்கா சாப்பிட்டு டேபிலட் போடறேன் சரியாகிடும்.
நேத்தும் தலைவலின்னு சொன்ன… இப்படி கண்டுக்காம இருக்க கூடாது பவி. தாயன்புடன் பேசும் சௌமியாவை கண்டு நெகிழ்ந்து போனாள் பவித்ரா.
டேபிலட் போட்டு பார்க்கிறேன் சரியாகலைன்னா ஹாஸ்பிடல் போகலாம் என்றவள் அக்கா என்ன டிபன் செய்யட்டும் என்றாள்.
அடி வாங்க போற பவி.. ஓடி ஓடி நேத்து எவ்வளவு வேலை செய்த… இன்னைக்கு கொஞ்சம் அசந்துட்ட அவ்வளவு தானே… வெகு இயல்பாய் அவள் கன்னம் வருடினாள்.
சரி புட் வந்ததும் கூப்பிடறேன் நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு! ஆதுரமாய் தோள் தட்டி அனுப்பி விட்டாள்.
குழந்தைகள் அகிலனுடன் விளையாடிக் கொண்டிருக்க… அவர்களை பார்த்து முத்தமிட்டு பை சொல்லி தன் அறைக்குள் வந்து மீண்டும் கட்டிலில் புரண்டவளுக்கு இப்போதும் உறக்கம் தழுவவில்லை. கண்கள் எரிந்தது தலை வலித்தது… உறக்கம் மட்டும் ம்க்கூம்…
எதுவும் யோசிக்க அவசியம் இல்லாது ஆழ்ந்து அயர்ந்து உறங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்…! நமக்கு மட்டும் ஏன் அந்த கொடுப்பினை இல்லை… தன் மீதே இரக்கம் கொண்டாள்
அங்கு ஹரியின் நிலையும் அதே தான்… அவனுக்கும் உறக்கம் பிடிக்கவில்லை.
அந்த ஆயம்மா எப்படியோ போறா எனக்கென்ன வந்துச்சு?ஆணவம் பிடிச்சவ… பக்கத்தில் இருக்கிறவன் தான் வழியரான்னு பார்த்தால் போனில் கால் பண்றவன் கூட நாக்கை தள்ளிக்கிட்டு அலையறான். இவளுக்கு உள்ளுணர்வு சொல்லாதா மற்றவர் பார்வை எப்படி என்று…
எவ்வளவு திமிரு என்னை நிற்க வைத்து கேள்வி கேட்கிறா… இவ தகுதிக்கு என்னை வம்பிழுக்கிறா… அவனுக்கு ஆறவேயில்லை.
அவனுக்குள் ஆயிரமாயிரம் போராட்டம்…! தலை வலி பிளந்தது.
அவளை எண்ணி பார்க்கவே பிடிக்கவில்லை… எண்ணாமலும் இருக்க முடியவில்லை…!
ஒரு ஆயம்மா….அவ என்னை…. கவிழ்ந்து புரண்டான் கட்டிலில்.
அவளை அதிகம் வெறுத்தான்… காரணம் அற்பம் என்று தெரிந்தும் வெறுத்தான்.
மனதின் பட படப்பு கூடிக் கொண்டே போனது… ஏன் என் மனது இப்படி அலைப்புறுகிறது… என்ன நடக்கப் போகிறது மன பாரத்துடன் கண்களை மூடிக் கொண்டான். இன்றே ஆயம்மாவை அழ வைத்து தான் அதை விட அழப்போகிறோம் என்ற உள்ளுணர்வின் வெளிப்பாடு தான் இந்த போராட்டமோ?