Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️11

இறால் ஃபிரை ஹரிக்கு ரொம்ப பிடிக்கும்…. சொல்லிக்கொண்டே உப்பு காரத்தை பரிசோதித்தாள் சௌமி.

எப்படி பவி இவ்வளவு சூப்பரா குக் பண்ற? ஆச்சரியமாய் கேட்டாள் சௌமியா.

எங்க அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க அதை பார்த்தே வளர்ந்ததனால் எனக்கும் சமையலில் ஆர்வம் உண்டுக்கா.

அம்மா பிள்ளையா நீ…? சிரிப்புடன் சௌமி கேட்க அமைதியாய் இஞ்சியின் தோல் சீவிக் கொண்டிருந்தாள் பவித்ரா.



Advertisement

அவளுக்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை என்று உணர்ந்ததும்…. எனக்கு அவ்வளவா சமையல் வராது பவி… நான் பிளஸ் ஒன் படிக்கும்போதே அம்மா பிரெயின் டியூமர் வந்து தவறிட்டாங்க.

தாத்தா நாட்டாமைக்காரர்,அப்பா தாசில்தார்,வசதியான குடும்பம். சமையல் ஒரு பெரிய விஷயமா அப்பாக்கு தோனலை அதனால சமையலுக்கு ஆள் ஏற்பாடு பண்ணிட்டார்.

எங்க குடும்பத்தை பொருத்தவரை படிப்புக்கு தான் முதலிடம். நான் நைன்த் படிக்கிறதில் இருந்தே ஐஐடி கோச்சிங் போனேன் என்றால் பார்த்துக் கொள்ளேன்.

Advertisement

எங்க குடும்பம் விவசாயக் குடும்பம்… அம்மா கழனியில் வேலை செய்யும் ஆளுங்களுக்கு அம்பது அறுபது பேருக்கு கூட தனி ஆளா சமைச்சுடுவாங்க! உப்பு இருக்கா உறைப்பு இருக்கான்னு வாயில் வைத்து கூட பார்க்க மாட்டாங்க…ஆனா பர்ஃபெக்டா இருக்கும்.

Advertisement

இருவரும் பேசிக்கொண்டே அருமையாக சமைத்து முடித்தனர்.

சௌமி ஹரிக்கு ஃபோன் பண்ணினேன் ஸ்விட்ச் ஆஃப் வருது… உன் மொபைலில் இருந்து ட்ரை பண்ணி பாரு…!

ஆமாங்க எனக்கும் ஸ்விட்ச் ஆஃப்னு தான் வருது.

Advertisement

ஏங்க பார்க்கிங்கில் பாருங்க அவர் கார் இருக்கான்னு…

சௌமி அவன் கார் இல்லை… என்கிட்ட கூட சொல்லாம எங்கே போனான்…? அகிலன் யோசிக்கலானான்.

ஏதாவது அவசர வேலையா இருக்கும் அதுதான் சொல்லாம போயிருப்பார்.

சரி நீங்க வாங்க சாப்பிடலாம்.

சிக்கன் பிரியாணி, இறால் பெப்பர் ஃப்ரை, ஆனியன் கேரட் ரைத்தா,சாதம்,ரசம், எலுமிச்சை ஊறுகாய் என்று மதிய உணவை ரசித்து சாப்பிட்டனர்.

ஏங்க பவிக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணுமாம்… ஈவினிங்  கொஞ்சம் வெளியில் கூட்டிட்டு போயிட்டு வாங்க!

சரிம்மா என்று தலை அசைத்தான் அகிலன்.

“———————-“

கூப்பர் சாலையில் அமைந்துள்ள ஹெண்ட்ரிக்சன் பார்க்(Hendricksen park) மரங்கள் அடர்ந்த அந்த அழகிய பார்க்கில் சிமெண்ட் பெஞ்சில் கண் மூடி அமர்ந்திருந்தான் ஹரி.

காலையில் தான் அவன் அம்மா தாரணி அழைத்து பேசி இருந்தார்.

கல்யாணம் பண்ணிக்கோ ராஜு … உன் கூட படிச்சவங்க எல்லாரும் குடும்பம் குழந்தைன்னு வாழறாங்க. உன் கூட பிறந்தவனும் குடும்பஸ்தன் ஆகிட்டான்.

அடுத்த மாசம் பதினாளாம் தேதி வந்தா உனக்கு முப்பதொன்னு ஆகப்போகுது.

உனக்கு பெண் கொடுக்க நான் நீன்னு உன் நாயனாட்ட வந்து பேசுறாங்க..  உன் நானா  உன்னை நினைத்து ரொம்ப கவலை படறாரு ராஜு…

ம்ம்ம்மா… எப்படிம்மா இப்படி இருக்கீங்க? அவர் மேல உங்களுக்கு வருத்தமே இல்லையா…?

ஏன் இல்லாம…? நான் வருத்தப்பட்டா எல்லாம் மாறிடுமா?

நான் ரோஷம் பார்த்தால் நம்ம கிருஷ்ணா குடும்ப கௌரவம் சந்தி சிரிச்சிடும்  ராஜு.

நானே கடந்து வந்துட்ட பிரச்னையை நீ இன்னும் எத்தனை நாளைக்கு இழுத்து பிடிச்சுட்டு நிற்கப் போற…?

ம்ம்மா எனக்கு அந்த வாசலை மிதிக்கவோ அவரை பார்க்கவோ விருப்பம் இல்லை.

அப்படி சொல்லாதே ராஜு. உன் அம்மா நானிருக்கேன். உன் தம்பி இருக்கான். சின்னாயனா, பின்னி இருக்காங்க…  ஒருத்தரை வெறுக்குறதா நினைச்சு எங்க மொத்த பேருக்கும் தண்டனை கொடுத்துட்டு இருக்க…

ஒரு முறை வந்துட்டு போ ராஜு… கெஞ்சி அழுதார் அந்த அன்பான தாய்.

வழக்கம் போல் “வரேம்மா” என்று ஆறுதல் படுத்தியவன் என்று வருகிறேன் என்று மட்டும் சொல்லவே இல்லை.

இன்னும் எத்தனை நாளைக்கு ஊருக்கு போகாமல் இருக்க முடியும்? எப்படி அவர் முகத்தில் விழிக்க…?

தாயின் கண்ணீர் அவனை வெகுவாக பாதித்திருந்தது. ஊருக்கு கிளம்பும் யோசனையும் இருந்தது. அங்கு போக வேண்டுமா? என்ற வருத்தமும் இருந்தது.

நாளை திருமணம் என்று வரும்போது எப்படி எல்லாரையும் அழைப்பது என்ற வேதனையும் அவனை அழுத்தியது.

யாரை விலக்குவது யாரை சேர்ப்பது…? உறவுகளுக்குள் சின்ன விரிசல் வரலாம் அது விசாலமான வாய்க்கால்  அளவிற்கான விரிசலாக இருக்கக் கூடாது.

ஏற்கனவே பல பிரச்சனைகளை ஒன்றாய் மனதிற்குள் போட்டு அழுத்தி அழுத்தி அவனுக்கு மூச்சு முட்டிக் கொண்டிருந்தது.

தாயிடம் பேசி முடித்து தவித்துக் கொண்டிருந்த வேளையில்

காலை உணவு கொடுக்க வந்த அகிலன் சொன்ன விஷயம் அவனை இன்னும் வெகுவாய் பலவீனப் படுத்தி இருந்தது.

சௌமிக்கு ஏன் இப்படி ஒரு எண்ணம் வர வேண்டும்? தலையை பிய்த்துக் கொண்டவன் எங்காவது வெகு தூரம் தனிமையில் செல்ல வேண்டும் என்று  காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

பார்க்கில் நெடுநேரம் தனிமையில் அமர்ந்திருந்தவன் தவத்தை கலைப்பது போல் மொபைல் அழைப்பு அவனை உசுப்பியது.

அழைப்பில் தினேஷ்…!

நேற்றுதானே அகிலன் வீட்டில் பார்த்தோம் அதற்குள் எதற்கு இந்த இடியட் கால் பண்ணுகிறான்? யோசனையுடன் சொல்லுங்க தினேஷ் என்றான்.

சுற்றி வளைக்காமல் அவன் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான்… ஹரி எனக்கு மிஸ் பவித்ரா கூட பேசணும் அவங்க நம்பர் உங்க கிட்ட இருக்குமா?

என்கிட்ட எதுக்கு அவங்க நம்பர் இருக்கப் போகுது? தீயாய் தகித்து வந்தது அவன் குரல்.

இல்ல…. எனக்கு அகிலனிடம் கேட்க கொஞ்சம் சங்கோஜமா இருக்கு.. நீங்க அகிலனுக்கு க்ளோஸ் ஃப்ரண்டாச்சே… ஒரே அப்பார்ட்மெண்டில் இருக்கீங்க  உங்களுக்கு நம்பர் தெரிந்திருக்கும்.

நீங்க பவித்ரா கிட்ட என்ன பேசப் போறீங்க?

எங்க வீட்டில கொஞ்ச நாளாவே மேரேஜ் பண்ணிக்க சொல்லி பிரஷர் கொடுக்கிறாங்க… நேத்து அந்த பொண்ணை பார்த்த உடனே  மனசுக்குள்ள என்னவோ பண்ணுச்சு!

ஆபிசில் லிடியாவை பார்த்தும் அப்படி தானே சொன்னீங்க? எனக்கு தெரிந்து நாலைந்து பொண்ணுங்களை பார்த்து சேம் டயலாக் பேசி இருக்கீங்க..

அது சும்மா ஜாலிக்கு சொல்றது.  ஆனா பவித்ராவை சீரியஸாவே பிடித்திருக்கு.

பவித்ரா பேருக்கு ஏத்த மாதிரி பவித்ரமா செம்மையான லுக்கில் இருக்காங்க இல்ல ஹரி… உங்களுக்கு கூட அவங்களை பிடிக்குமோ…?

வெறியேற்றும் அவன் பேச்சு ஹரியின் பொறுமையை சோதித்தது.

புடவை கட்டின அவங்க உருவம் செய்து வைத்த சிலை மாதிரி என் கண்ணுக்குள்ளே இருக்கு. உங்களுக்கு அப்படி பீல் எதுவும் இதுவரை வரலையா?

கொடுத்து வைத்தவர் நீங்க ஒரே அப்பார்ட்மெண்டில் இருக்கீங்க உங்களுக்கு சௌகரியமா இருக்கும். ஐ மீன் அவங்க சமையலை சாப்பிடும் பாக்கியத்தை சொன்னேன்.

அவங்க கண்கள் என்னமா கதை பேசுது…! சான்ஸே இல்லை… நீங்க பார்த்திருக்கீங்களா? பார்த்து இருந்தா அந்த சுழலில் சிக்கி இருப்பீங்க.

அவங்கட்ட கொஞ்சம் க்ளோசா பேசிப் பழகி பார்க்கணும் .

டாமிட்.. செப்புத்தோ கொடாதான்னு (செருப்பால அடிப்பேன் ) யார்கிட்ட என்ன பேசுற? வைறா போனை…  ஹரியின் கத்தலில் பார்க்கில் இருந்தோரின் பார்வை அவன் மீதே…

“—————-“

கொதித்த மனதை அவனால் சமன் செய்யவே முடியவில்லை.

ஏன்டா எங்கிருந்து வரீங்க எல்லாம் எனக்குன்னு… ஸ்டியரிங்கை குத்தினான்.

கோபம் கோபம் கோபம் அவன் மனம் முழுவதும் கோபம்…

அவன் குடும்பத்தின் மீது கோபம்,சௌமியின் மீது கோபம்,பவித்ராவின் மீது கோபம்,தினேஷ் மீது கோபம். ஏன் தன் மீதே கோபம்.

கோபத்தின் அலைகள் அவனை தலைகீழாய் புரட்டிப்போட்டு சின்னா பின்னப் படுத்திக் கொண்டிருந்தது.

கோபம், வலி,ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து அவனை சொல்லொன்னா மனநிலையில் தள்ளியது.

கோபம் கொடியது அது தன்னை மட்டுமல்ல தன்னை சார்ந்தவரையும் அழித்துவிடும் என்றெல்லாம் நம் முன்னோர்கள் சொன்னது எவ்வளவு உண்மையான வார்த்தை.

ரௌத்திரமான மன நிலையில் அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

புயலென காரில் இருந்து இறங்கியவன் வேகமாய் அகிலனின் வீட்டிற்குள் நுழைந்தான் .

ஏய் ஆயம்மா எக்கட உந்த்தாளி.பயடிக்கி ரண்டி (எங்கே இருக்க வெளியில் வா ) கூடத்தில் நின்று அவன் கத்திய கத்தல் சௌமியாவை திகில் அடைய வைத்தது.

கண்கள் சிவந்து சிம்மமாய் கர்ஜிக்கும் ஹரியைக் கண்டு சௌமி பேச்சிழந்து நின்றாள்.

எ.. என்னாச்சு ஹரி? அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.

எங்க அவ?

அகிலன் கூட வெளியில் போயிருக்கா…

ஓ.. அகிலன் கூட போயிருக்கா…! எத்தனை பேரை தான் அவள் பின்னாடி அலைய வைப்பா…?

அமே எந்த கொப்ப யுவராணி அவ ( என்ன பெரிய பேரழகி அவ )

ஹரி… மூச்சிரைத்து கத்தினாள் சௌம்யா.

ஆயம்மா தானேன்னு ஈஸியா நினைச்சுடாதே உன் புருஷனை ஒழுங்கா பார்த்துக்கோ… அப்புறம் வேற மாதிரி பேராகிடும்.

ஹரி… கண்கள் கலங்க வார்த்தை தடுமாறி நின்றாள் சௌமி.

அவளால் இன்னும் நம்ப முடியவில்லை பேசியது ஹரி தானா? அவனிடமிருந்து இப்படி ஒரு பேச்சை சத்தியமாய் அவள் எதிர்பார்க்கவில்லை.

அவன் என்ன பேசினான் என்று தெரிந்து தான் பேசினானா…? உயிர் நண்பனை, சம்மந்தம் இல்லாத ஒரு பெண்ணை… இவ்வளவு மட்டமாக விமர்சிக்கும் குணம் உடையவனா ஹரி?

ஹரி இன்னும் கோபம் தகிக்க கொந்தளித்துக் கொண்டிருக்க… நடுங்கும் பார்வையுடன் வாயிலை பார்த்து நின்றாள் சௌமி.

ஆம் வாயிலில் நின்றது பவித்ரா. அவளுக்கு பின்னே அகிலன்.

மேனி நடுங்கி பிரம்மை பிடித்தார் போல் நின்றுவிட்டாள் பவித்ரா. எத்தனை பெரிய பேச்சை தன் காதுபடவே கேட்டு விட்டாள்.

அகிலனுக்கு அவ்வளவு ஆத்திரம்!

இவனா என்ன நண்பன்? என்னை என்ன இவன் அறிந்து வைத்திருக்கிறான்?

எதை வைத்து என்னை எடை போட்டான்…? குடும்பமாகி இரு குழந்தைகளுக்கு தகப்பனாகி வாழும் என்னுடன் ஒரு சின்ன பெண்ணை இணை கூட்டி பேசுவதா?

பவி… திக்கித் திணறினாள் சௌமி.

பவித்ராவை கண்டும் சிலை போல் நின்றான் ஹரி… அவன் முகத்தில் பேசியதற்கான வருத்தம் துளி கூட இல்லை. இறுமாப்புடன் நிற்க கண்ட அவன் கோலம் அவளை பத்ரகாளியாய் மாற்றியது.

அகிலனின் பதட்டம் கொண்ட முகம் வேதனையுடன் தளர்ந்து நின்ற அவன் நிலை கண்ட பவித்ரா கையில் இருந்த ஷாப்பிங் பேகை விசிறி அடித்து விட்டு ஹரியை நெருங்கி சென்றவள் பளார் என அறைந்தாள்.

அவன் முறைத்து பார்க்க… காலரை பற்றி இழுத்தவள் மீண்டும் ஒரு அறை கொடுத்தாள்.

என்னடா சொன்ன? யாரை பார்த்து என்ன சொன்ன?

ஆமா நான் ஆயம்மா தான்… குழந்தையை பார்த்துக்க தான் வந்தேன்.. குழந்தையோட அப்பனை கரெக்ட் பண்ண வரல….

நீ யாருடா என் நடத்தையை விமர்சிக்க…?

நான் எத்தனை பேரை என் பின்னாடி அலைய விட்டதை நீ பார்த்த…? நான் அந்த மாதிரி தொழில் பண்ற பொண்ணுன்னு முடிவு பண்ணிட்டியா?

சொல்லு… சொல்லுடா… அவன் சட்டை காலரை பிடித்து உலுக்கினாள்.

அங்கே அமைதி அமைதி பெரும் அமைதி…

நான் நிம்மதியா இருக்கிறதில் உனக்கு என்னடா பிரச்சனை? ஏன் என்னை கண்டாலே உனக்கு எரியுது? உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை?

நீ நல்ல குடும்பத்தில் பிறந்தவனா? சொல்லு

நல்ல தாய் தானே உன்னை பெத்து வளர்த்தா…?

ஏய்…. ஓங்கிய கையை அப்படியே நிறுத்தியவன் ச்சீ போடி என்று தள்ளிவிட்டு கண்கள் பொங்க வேகமாய் வெளியேறினான்.

மடிந்து அமர்ந்து விட்ட பவித்ராவின் கண்ணில் மாலை மாலையாய் கண்ணீர்.

அகிலனும், சௌமியும் விக்கித்து நின்றுவிட்டனர்.

———–தொடரும் ——–

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த FB வந்து கொண்டே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!