சௌமி அவ என்னோட பவித்ரா… அவ மேல எனக்கு அக்கறை இருக்கு. அவ வாழ்க்கையில் இனி வேதனையே இருக்காது… இருக்க கூடாது! நான் பார்த்துக்கிறேன்… அழுந்த கண்களை மூடி திறந்தான்
அவ கிராமத்து பொண்ணு… அதிகம் வெளி உலகம் அறியாதவ…உன் அடாவடிக்கு அவ ஈடு கொடுக்க மாட்டா..
அவளா…. தோளை குலுக்கி சிரித்துக்கொண்டவன் அவ எவ்வளவு பெரிய கேடி தெரியுமா… உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான்.
அகி நீங்க நெக்ஸ்ட் மந்த் வந்துருங்க! கட்டளை போல் கூறினான்.
ம்ம்ம்ம் என்று தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.
என்னாரா ம்ம்ம்ம்… வந்து சேரணும்!
உன் மேரேஜில் எல்லா வேலையும் நான் தானே இழுத்து போட்டு செய்தேன்?
இதெல்லாம் ஒரு அசைன்மெண்ட்டுன்னு… ஸ்ரீனி கடுப்பாகி போனான்.
அப்புறம்…நீ என்ன பண்ண போற ஹரி?
பண்ணும்போது தெரிஞ்சுக்குவ!
பாருடா ஹீரோ கெத்து காட்டுறாரு…
எஸ்… கெத்து தான்… காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
நேரில் பார்க்கும் போது இருக்கு உனக்கு… நர நரத்தான் ஸ்ரீனி.
ஹரியை நினைத்து ஒரு புறம் ஆச்சரியம்.
எத்தனை பெரிய குடும்பத்து வாரிசு… எப்படி நடந்து கொள்கிறான்!
“——————-“
ஹரி பவித்ரா விஷயத்தில் நீ ரூடா நடந்துகிட்டா அது எங்களுக்கு பெரிய சங்கடத்தை உண்டு பண்ணிடும்! சௌமியா மென்று முழுங்கி சொல்லியே விட்டாள்.
புரியல… கூர் விழியால் அவளை ஆராய்ந்தான்.
அவ எங்களுக்காக தான் இங்கே வந்தா… நீயும் எங்க பிரண்ட்… உங்க ரெண்டுபேருக்கும் பொதுவில் நாங்க தான் இருக்கோம்!
அதுக்கு?
புரிஞ்சுக்கோ ஹரி… எங்களால் தான் பிரச்னைனு ஈஸியா சொல்லிடுவாங்க!
அப்போ விட்டுட சொல்ற?
அப்படி சொல்லலை.. கம்பெல் பண்ண வேண்டாம்னு சொல்றேன்.
தேங்க் யூ பார் யுவர் வேல்யூபில் சஜ்ஜஷன். ஆனா விடுற ஐடியா இல்லை…! குடித்து முடித்த ஜுஸ் கிளாசை டேபிள் மீது வைத்தவன்… வரேன் என்று தலை அசைத்து தனது பெட்டியை உருட்டினான்.
அகிலன் கார் கதவை திறந்து காத்திருக்க… தன் பெட்டிகளை டிக்கியில் வைத்து மூடியவன் முன் பக்கம் சென்று அமர்ந்து கொண்டான்.
“——————“
ஏனோ இந்த வலிகள் ஏனோ காதல் அந்த வார்த்தை தானோ.. விழித்துளி பொழிகிறேன் குடைக்குள்ளே நனைகிறேன்
உயிர்வலி உணர்கிறேன்
விலகி ஏன் போகிறேன்
ஒலியில்லா மொழியுடன் ஊமையாய் செல்கிறேன்
தயையில்லா மனதுடன் நொடிகளை கொல்கிறேன்
காரில் அவன் ஒலிக்க விட்ட பாடலை கேட்டு அகிலனுக்கு இதயம் கணத்தது.
ஏமிரா…?உம்மென்று காரை இயக்கும் நண்பனை கண்டு கொண்டான்.
ம்கூம் என்று தலை அசைத்த அகிலனுக்கு அவன் வேதனையும் வலியும் புரிந்தது.
அகி நான் வில்லனாரா…? நேரடியாக அவன் கேட்ட கேள்விக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான்.
அகி… பவியை ஏன் தெரியுமா ரொம்ப ரொம்ப பிடிச்சுது… அவ பட்ட கஷ்டம்… அவளுக்கு இருக்கும் மனகாயம். அவ பாவம்ரா…
பெத்தவங்களே நம்பாம இருக்கிறது எத்தனை வலி… என்னால உணர முடியுது! எனக்கும் வலிக்குது.
ம்ம்ம்ம்… என்றான் பெருமூச்சுடன்.
அவளை இப்போ கொஞ்சமா கஷ்டப்படுத்தினாலும் வாழ்க்கை முழுக்க கஷ்டமே அவளை அண்ட விடாம கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குவேன்!
எனக்கு தெரியாதா ஹரி? உரிமையாய் கோபித்தான் அகிலன்.
உன் பாரியாளுக்கு சொல்லு…. உங்களுக்கு எந்த தர்ம சங்கடமும் வராமல் பார்த்துக்கிறேன்.
மும்பை… சத்திரபதி சிவாஜி மஹாராஜா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது விமானம்.
விமான நிலைய காத்திருப்பு அறையில் அரை மணி நேர ஓய்வு… முகம் கழுவி கொண்டு இலகுவான உணவை எடுத்துக் கொண்டான்.
மீண்டும் அவனுக்கு விமான அறிவிப்பு…
மும்பையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் உள்நாட்டு விமான நிலையத்தில் சென்று இறங்கினான்
அங்கு தயாராய் இருந்த காரில் ஏறிக்கொண்டான்.
ஏர்போர்ட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஹோட்டல் கோல்டன் ஹவேலி (Hotel Golden Haveli )சென்று சேர்ந்தான்.
ஏற்கனவே முன்பதிவு செய்த அறைக்கு சென்று தன் உடைமைகளை கூட எடுத்து பத்திரப்படுத்தாமல் கட்டிலில் விழுந்தான்.
ஏறத்தாழ முப்பத்திரண்டு மணி நேரம் பயணம்… சரியான உறக்கம் இன்மை, உடல் சோர்வு எல்லாம் சேர்த்து அசதியில் உடல் ஆடிவிட்டது.
படுத்தவன் அடுத்த நிமிடமே உறங்கி போனான். கிட்டத்தட்ட எட்டு நாள் ஆகிறது அவன் வயிரார உண்டுநி ம்மதியாய் உறங்கி.அவ்வளவு அமைதி…. நிம்மதி… தன்னை மறந்து சுற்றம் மறந்து….சரியான தூக்கம்.
மாலை ஆறுமணிக்கு கட்டிலில் விழுந்தவன் மறுநாள் காலை ஒன்பதுக்கு மேல் தான் கண் விழித்தான்.
கண் விழிக்கும் போதே உற்சாகம்… மூளையும் மனதும் எவ்வித அலைபுறுதலும் இல்லாமல் நிர்மலமாய் இருந்தது…
இலகுவான மனநிலையை ரசிக்கும் பொருட்டு… படுக்கையை விட்டு எழாமல் உருண்டு புரண்டு கையை காலை விரித்துக் கொண்டான்.
அப்பாடா என்ற அந்த நிம்மதி அடுத்தவருக்கு புரிவது கொஞ்சம் கடினமே…