Skip to content
Post Views: 3,190
ம்மா நானாக்கு ஒன்னும் ஆகாது அழாதீங்க ப்ளீஸ்… தன் அழுகையை விழுங்கிக் கொண்டு தாயின் கரம் பற்றி ஆறுதல் மொழிந்தான்.
ஹரி நானா பாருப்பா… எனக்கு பயமா இருக்கு ஹரி…! அவரோட பேசாம இருக்க முடிந்த என்னால அவரை பார்க்காம இருக்க முடியாது… முடியாது… அம்மா போய் சேர்ந்துடுவேன். அவன் தோளில் சாய்ந்து குலுங்கி அழுதார்.
ம்ம்மா ஏம்மா இப்படி எல்லாம் பேசறீங்க…?குணமாகி எழுந்து உட்கார்ந்துடுவார் பாருங்க…! பாலாஜி அங்கிள் ஹோப்ஃபுலா சொல்லி இருக்கார்… தாயின் கண்ணீர் கண்டு தாளவில்லை அவனுக்கு.
தாயின் கண்ணீர் அவனை வேரோடு சாய்த்து விடும். அன்றும் சரி… இன்றும் சரி.
Advertisement
ஜீவன் துடிக்க ஏங்கி பார்க்கும் தாயின் பார்வை அவனை வெகுவாய் உலுக்கி விட்டது.
ம்ம்ம்மா என் காதல் தான் இந்த குடும்பத்துல நிம்மதியை கெடுத்து இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்குன்னா வேண்டாம்மா இந்த காதல் எனக்கு வேண்டாம். நான் அமெரிக்காக்கு போயிடறேன்.
எனக்கு தனியா ஒரு வாழ்க்கை இல்லைன்னு போனாலும் பரவாயில்லை. எனக்கு ஒரு குடும்பம் இருக்குங்கிற சந்தோஷம் போதும்…. தாயின் கண்ணீரை துடைத்து விட்டவனுக்கு உள்ளத்தில் குருதி உடைப்பெடுத்தது.
Advertisement
அவன் ஏதோ நினைக்க… விதி இப்படி விளையாடி எக்காளமிடும் என்று அவன் துளியிலும் துளி கூட எதிர்பார்க்கவில்லை.
Advertisement
எந்த நம்பிக்கையில் ஒரு பெண்ணை அழைத்து வந்தேன்…? அதுவும் ஏற்கனவே புண்பட்டு புரையோடி வேதனையில் உழன்றவளை மென்மேலும் புண்ணாக்கி விட்டேனே…
வேண்டாம் என்று விலகி இருந்தவளை வலுக்கட்டாயமாக கூட்டி வந்தேனே… பொய்யாய் ஒரு நம்பிக்கை கொடுத்த என்னை பற்றி என்ன நினைப்பாள்…?
எனக்கான வாழ்க்கை மட்டும் ஏன் எப்போதும் உறவு சிக்களுக்குள் சிக்கி சீரழிகிறது.
Advertisement
கலங்கி நின்ற மகன் முகம் கண்டு இன்னும் இன்னுமாய் கரைந்து போனார் தாரணி.
பாபு நானாக்கு குணமாகட்டும் கண்டிப்பா உன் விவாகத்தை அம்மா நடத்தி வைக்கிறேன்… மகன் முகம் நிமிர்த்தி முத்தமிட்டார்.
தாயும் மகனும் வேதனையில் உழன்று கண்ணீரில் கரைவது காதில் கேட்க தான் செய்தது சுப்ப கிருஷ்ணாவிற்கு. ஏற்கனவே குற்றவுணர்வில் கொஞ்சம் கொஞ்சமாய் குன்றி போயிருந்தவர் இப்போது இன்னும் உயிர்வரை வலிக்க துடித்து அழுதார்.
கண்திறக்க இயலவில்லை என்றாலும் கடைவிழியால் கண்ணீர் வழிந்தோடியது.
அருகில் நின்ற மனையாளின் கரத்தை தட்டு தடுமாறி பற்றிக் கொண்டார்.
ஹரி… நானா பாரு… மகனிடம் கத்தினார்.
கண்ணீர் வழிய தாயின் கரம் பற்றியிருக்கும் தந்தையை கண்டவன் குற்றவுணர்வில் குன்றி நின்றான்.
அவருக்கும் அதே குற்றவுணர்வு தான்…! மகன் முகம் காண கூச்சம் அவருக்கு.
அவருக்கு மனதிற்குள் ஏதோ உருட்ட… கண்ணீர் இன்னும் ஆர்டிசியன் ஊற்று போல் பொங்கி ஊற்றியது.
பாவா என்ன இது… ஏன் அழறீங்க…? புடவை முந்தானை கொண்டு கணவனின் கண்ணீரை துடைத்தார் தாரணி…தன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு…
மனையாளின் இந்த ஸ்பரிசம் அவரை உருக்கியது, உலுக்கியது. நிழல் கூட படாமல் வைராக்கியமாய் விலகி இருந்த மனையாளின் புடவை முந்தானை ஸ்பரிசம் ஏழு ஜென்ம பாவத்தை கழுவியது போல் உணர்ந்தார். அவர் கண்ணீர் கூடியதே தவிர குறையவில்லை.
மகனின் முகத்தையும் மனையாளின் முகத்தையும் மாறி மாறி பார்த்தார். அவ்வளவு ஏக்கம் அவர் கண்களில். ஏக்கம் மட்டுமா….யாசிப்பும் கூட!
மகனை கண்களால் அழைத்தவர்… கண்ணீர் சொறிய அவன் கரம் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டார்.
அவனும் உணர்ச்சி மிகுதியில் இருந்தான்… என்ன பேச வேண்டும் என்று அவனுக்கும் தெரியவில்லை. இவ்வளவு நாள் பேசாமல் இருந்துவிட்டு இப்போது எப்படி பேச… ஒருவித குறு குறுப்பு அவனுக்கு.
பா.. பா.. பாபு… சிறு குரலில் விம்மினார்.
அழாதீங்க என்பது போல் தலை அசைத்தான்.
பாவா தைரியமா இருங்க… நீங்க தான் எங்களுக்கு எல்லாம்… எங்களுக்கான அடையாளமே நீங்க தான். உங்களுக்கு எதுவும் ஆகாது. கண்ணீரை துடைத்துக் கொண்டு கணவனின் கரம் பற்றி தைரியம் கொடுத்தார் தாரணி.
இவள் என் மனைவி… என் காதல் மனைவி… இவளுக்கா நான்…. அவர் கண்கள் தானாய் மூடிக் கொண்டது. இதயம் பிசைந்தது…. சுருக் என்ற வலி அவருக்கு…. மூச்சு திணறியது தொண்டை குழிக்குள் உயிர்காற்று சிக்கி தவித்தது.
நர்ஸ்…. ஹரி சத்தமாய் கத்த…. பணியில் இருந்த செவிலிப் பெண் ஓடி வந்தார்.
ரத்த அழுத்தம் கூடி இருந்தது.
உடனே தலைமை மருத்துவர் பாலாஜிக்கு அலைபேசியில் அழைத்து தகவல் கூறினார் செவிலி.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும் மருந்து ஏற்றி ஊசி போடும்படி கூறியவர் தான் வீட்டில் இருந்து வந்து விடுகிறேன் என்று தகவல் கொடுத்தார்.
பாலாஜிக்கு சொந்த தாய் மாமா மகன் அல்லவா சுப்ப கிருஷ்ணா. அவர் தங்கை ஷியாமளா சுப்ப கிருஷ்ணாவின் தம்பி சம்சாரம் என்ற நெருங்கிய உறவும் வேறு கூடுதல் அக்கறைக்கு காரணம்.
டியூட்டி மருத்துவர் வந்து பரிசோதித்து பார்த்து விட்டு பேஷண்டுக்கு Bp கண்ட்ரோலில் இருந்தால் தான் சர்ஜரி பண்ண முடியும். இப்போ பேஷண்ட் தூங்கட்டும் யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் . சீஃப் டாக்டர் வந்து பார்த்துட்டு மற்ற விபரம் சொல்வார் என்று பேசிவிட்டு சென்றார்.
இவ்வளவு நேரம் கொஞ்சம் தெம்புடன் இருந்த தாரணி இப்போது அதிகமாய் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தார்.
ஹரிக்கு புரிந்தது தந்தையின் மனபோராட்டம் என்னவென்று…!
அமைதியாய் நின்றிருந்த ஹரியை பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.
அழுது கொண்டிருக்கும் தாயை தேற்ற போராடிக் கொண்டிருந்தான் ராம்.
இப்போ ஏன் இப்படி அபசகுணமா அழுது வடியுற… பல்லை கடித்தார் ஷியாமளா.
அவசரமாய் வந்த தலைமை மருத்துவர் பாலாஜி ICU விற்குள் சென்று சுப்ப கிருஷ்ணாவை பரிசோதனை செய்து விட்டு வந்தார்.
பயப்படுப்படி எதுவும் இல்லை. கொஞ்சம் இமோஷனா இருந்திருக்கார் அது தான் Bp ரெய்ஸ் ஆகி இருக்கு.
ஹரி நீ அவர் பக்கத்தில் போக வேண்டாம். தாரணி நீங்களும் தான்.
அவர் நல்லா தூங்கி கண் விழிக்கட்டும். ஜுஸ் எதுவும் கொடுக்க வேண்டாம். ட்ரிப்ஸ் மட்டும் போடுங்க. பல்ஸ் மானிட்டர் பண்ணிட்டே இருங்க… ஒன் அவர் ஒன்ஸ் Bp செக் பண்ணி நோட் பண்ணி வைங்க! ICU வில் இருக்கும் செவிலிக்கு கட்டளை பிறப்பித்த பாலாஜி வெங்கட் நீயும் ராமும் மட்டும் இருங்க மற்றவங்க வீட்டுக்கு கிளம்புங்க! இயர்லி மானிங் தான் சர்ஜரி. பாலாஜி சென்று விட… ஹரி கலங்கி நின்றான்.
அம்மா வீட்டுக்கு கிளம்புங்க ராம் தாயின் கரம் பற்றி கெஞ்சினான்.
நான் போக மாட்டேன்… இறுக்கமாய் நாற்காலியை பற்றிக் கொண்டார் தாரணி.
ஹரி அவங்க எவ்வளவு நேரம் ஹாஸ்பிடலில் இருப்பாங்க… வீட்டுக்கு கூட்டிட்டு கிளம்பு பவித்ராவை காட்டி மெல்லிய குரலில் கேட்டான்.
நானும் இங்கே இருக்கேன் ராம் என்றான் இறங்கிய குரலில்.
எதுக்கு உன்னை பார்த்து இன்னும் அண்ணையாக்கு Bp எகிற வா? வெங்கட கிருஷ்ணா பல்லை கடித்தார்.
நீ கிளம்பு ஹரி… எர்ரபள்ளி போக வேண்டாம்… இங்கே நம்ம வீட்டுக்கு போ! அண்ணன் கோபம் கொண்டு பேசிவிடுவானோ என்ற பயம் ராம் சரணுக்கு.
தாயிடம் தலை அசைத்து விடை பெற்றவன் என்னோடு வா என்பது போல் பவித்ராவை பார்த்து கண் அசைத்து முன்னே சென்றான்.
அழாதீங்க… அவர் கண்டிப்பா குணமாகிடுவார் தாரணியிடம் ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினாள் பவித்ரா.
சேகர் நம்ம நேதாஜி நகர் வீட்டுக்கு போ என்றான் டிரைவரிடம்.
பத்து நிமிடத்தில் ஒரு பெரிய வீட்டு முன் கார் நின்றது.
சேகர் நீ ஹாஸ்பிடல் போ…!
ஸார் இங்கே வேங்கடம்மா நைட் டிபன் சமைச்சிருக்காங்க நான் வாங்கிட்டு ஹாஸ்பிடல் போறேன் என்றான்.
சரி என்றவன் சோர்வுடன் உள்ளே நுழைந்தான்.
சார் உங்களுக்கும் இவங்களுக்கும் டிரஸ் வாங்கி வைத்து இருக்கேன் ராம் சார் வாங்கி வைக்க சொன்னாங்க.
ம்ம்ம்ம் என்றவன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
விஸ்தாரமான பெரிய வீடு… அழகிய தோட்டத்துடன் கூடிய மூன்று மாடிகள் கொண்ட வீடு… அதற்கு மேலே மொட்டை மாடியிலும் பெரிய அறை ஒன்று உண்டு.
ஹாலில் நின்று கொண்டிருந்த பவித்ராவை நிதானமாய் அளவிட்டு கொண்டிருந்தார் வேங்கடம்மா.
இந்த கரீம் நகர் வீட்டின் மொத்த பொறுப்பும் பராமரிப்பும் அவர் தான்.
எர்ரபள்ளி சிறிய கிராமம் என்பதால் குழந்தைகள் படிப்பிற்கு டவுனில் வீடு இருந்தால் சௌகரியம் என்று திட்டமிட்டு கிருஷ்ணா சகோதரர்கள் கட்டிய வீடு இது.
இந்த வீட்டில் தங்கி இங்குள்ள லிட்டில் பிளவர் என்ற புகழ்பெற்ற பள்ளியில் படித்தவர்கள் தான் கிருஷ்ணா குடும்பத்து பிள்ளைகள். ஹரிசரண் உட்பட….
பவித்ராவை பார்த்து மெல்லிதாய் திருப்தி பட்டுக் கொண்ட வேங்கடம்மா அவளுக்கு குடிக்க நீர் கொண்டு வந்தார்.
நீரை வாங்கி பருகிய பவித்ரா அமைதியாய் நிற்க… அவளை மீண்டும் பார்க்க தொடங்கினார் வேங்கடம்மா.
வேங்கிம்மா அவ நம்ம வீட்டு மருமகள் தான் பொறுமையா கூட பார்க்கலாம். அவளை உள்ளே அனுப்புங்க என்று தெலுங்கில் கூறினான் ஹரி.
உள்ளே செல்லும்படி அவர் ஜாடை காட்டி விட்டு சமையலறைக்கு சென்று விட்டார்.
தயங்கி உள்ளே வந்த பவித்ராவிடம் உடையை கொடுத்து குளித்து விட்டு வரும்படி கூறினான்.
அவள் குளித்து வர வேங்கடம்மா சுட சுட டிபன் தயார் செய்து வைத்திருந்தார்.
கல் தோசையும் கார சாரமான மிளகாய் சட்னியும், சின்ன வெங்காயம் போட்ட சாம்பாரும்,எள்ளு பொடியும் வைத்தார்.
எல்லாம் ஹரிக்கு பிடித்த உணவு தான். அவன் விரும்பி உண்பான் என்று ஆசையாய் வேங்கடம்மா செய்து வைத்தார். அவனுக்கு ஒரு தோசையே முழுதாய் இறங்கவில்லை
பாபு ஐயாக்கு எதுவும் ஆகாது.நம்ம வேணுகோபன் துணை இருப்பான். நீங்க உடம்பை கவனிங்க!ஆறுதல் கூறிய வேங்கடம்மா இன்னும் இரு தோசை வைத்தார்.
சாப்பிடாமல் தட்டில் நிரண்டி கொண்டிருந்தவனிடம் சாப்பிடுங்க என்று ஜாடை காட்டினாள் பவித்ரா.
தான் சாப்பிடாவிட்டால் இவள் சாப்பிடமாட்டாள் என்று உணர்ந்தவன் சிரமப்பட்டு சாப்பிட்டு முடித்தான்.
பவித்ராவும் சாப்பிட்டு முடிய… சேகருக்கு சாப்பிட கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உணவை கூடையில் வைத்து தயார் செய்து அனுப்பினார் வேங்கடம்மா.
வேலை முடிந்து வேங்கடம்மா கிச்சனை ஒட்டிய அறைக்குள் சென்று படுத்துவிட… எங்கே சென்று படுப்பது என்று உடல் அசதியில் கொட்டாவி விட்டபடி நின்றாள் பவித்ரா.
பவி இங்கே வா…! உள்ளிருந்து குரல் கொடுத்தான் ஹரி.
சோர்வுடன் சென்றவளை படுக்கும்படி கட்டிலை காட்டினான்.
இல்ல…. நான் வேற ரூமில்… அவள் முழுதாய் முடிக்கும் முன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
அவன் செய்கை புரியாது அவள் தவித்து நிற்க… அவன் பிடி தளரவே இல்லை.
அவன் பிடி அவளுக்கு ஏதோ சொல்லியது.
என்னங்க என்றாள் அவனை பிரிக்க முயன்றபடியே…
நானாக்கு ஏதாவது ஆகிட்டா நான் குற்றவுணர்விலே செத்து போயிடுவேன் பவி என்று அவளை இடையோடு கட்டிக் கொண்டான்.
அவருக்கு ஒன்னும் ஆகாதுங்க . ஹார்ட் சர்ஜரி எல்லாம் பெரிய விஷயமே இல்லை. உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லை. தைரியமா இருங்க. அவன் தலையை பரிவுடன் கோதினாள்.
என்னால அவரை கண் கொண்டு பார்க்க முடியல… அவருக்கு என்னை பார்த்து வேதனையில் தான் Bp ரெயிஸ் ஆகிடுச்சு! வார்த்தை சிக்கி மூச்சுமுட்டி கண் கலங்கினான்.
நீங்க என்ன பண்ணீங்க? உங்களை பார்த்து ஏன் அவருக்கு Bp ஏறப்போகுது? புரியாமல் கேட்டாள்.
பெத்த தகப்பனை ஆத்திரம் தீரும் மட்டும் செருப்பால அடித்தவன் நான். அடி வாங்கி கூனி குறுகி நின்ற அப்பா அவரு… என்னை அவர் எப்படி நேர் கொண்டு பார்ப்பார். நான் தான் எப்படி அவரிட்ட சகஜமா பேச முடியும்?
ஹரி பேசிக் கொண்டிருக்க சிலையாக நின்றாள் பவித்ரா.
——–தொடரும் ———-
error: Content is protected !!