Skip to content
Post Views: 3,837
இமைகள் அசையாது அப்படியே நின்று விட்டது. கிறங்கியவனின் இதழ்களுக்கு அவன் குலாபி இன்னும் விடுதலை அளிக்கவில்லை.
சிலையாகி அமர்ந்திருந்தான். மூளை இயக்கநிலையில் இல்லை. விரும்பி தன்னை தொலைத்து நின்றான்.
அவன் ஆடாது அசையாது அப்படியே அமர்ந்திருக்க…. அவன் இதழ்களுக்கு இரக்கப்பட்டு விடுதலை அளித்திருந்தாள்.
அவன் இன்னும் இயல்புக்கு திரும்பவில்லை… என்னாச்சு இவளுக்கு… இப்படி ஒரு ஆழ்ந்த காதல் முத்தத்தை அதுவும் இதழுடன் இதழ் பொருத்திய இந்த அதிரடி முத்தம் அவனை இன்னும் பிரம்மிப்பில் வைத்திருந்தது.
Advertisement
ஏதோ ஒரு வேகத்தில் முத்தம் கொடுத்து விட்டாளே தவிர… உள்ளுக்குள் பக்கென்று இருந்தது. அய்யயோ…. என்ன வேலை பண்ணிட்ட பவி… தன்னையே கடிந்து கொண்டாள்.
அவள் முகத்தில் அலை அலையாய் தோன்றிய உணர்வை கண்டவனுக்கு காதல் ஊற்றாய் பொங்கியது.
அப்புறம்…. விழி சிமிட்டி குறுநகையுடன் கேட்டான்.
Advertisement
அப்புறம்…. அவள் நிமிர்ந்தாள் தானே…?
Advertisement
அவ்வளவு தானா? ஏக்கமாய் கேட்டான்.
வெட்கம் வெட்கமாய் வந்து அவள் எழுந்து நின்றுவிட்டாள்.
அவனுக்கு அடக்க முடியாத சிரிப்பு.
Advertisement
அவள் ஓடிவிடும்முன் அவள் கரம் பற்றி சொடுக்கி இழுத்தான்.
விடுங்க…. அவள் வார்த்தை அவளுக்கே கேட்கவில்லை… சொல்ல வேண்டும் என்று சம்பிரதாயத்திற்கு சொன்னாளோ?
என்ன என் பாரியாளுக்கு பாவா மேல இவ்வளவு பாசம்…? தன் மார்பில் முட்டி நின்றவளை நம்பாதவன் போல் கேட்டு வைத்தான்.
ஏன் எனக்கு பாசம் இல்லையா? கோபம் வந்துவிட்டது அவளுக்கு.
இருக்குதா? கேலியாய் சிரித்தான்.
உங்களுக்கு மட்டும் பொங்கி வழியுதா?
அதிலென்ன சந்தேகம்?
ரொம்ப தான்… நொடித்துக் கொண்டாள்.
ரொம்ப தான்… காட்டவா…? அவ்வளவு குழைவு பேச்சில் அவ்வளவு குறும்பு அவன் கண்களில்.
எ… என்ன….? இமையும் இதயமும் போட்டி போட்டு துடித்தது அவளுக்கு.
அவள் முகம் காட்டும் பாவம் அவள் பேசும் தொணி எல்லாம் கண்டு அவனுக்கு சிரிப்பு தான்.
என்ன சிரிப்பு…. நீங்க தான் ராஜேஷ் அத்தானை பெங்களுருக்கு அனுப்பி இருக்கீங்க… அவரை நல்லா செட்டில் பண்ணி விட்டிருக்கீங்க…! என்கிட்ட சொல்லவே இல்லை..
உனக்கு யாரு சொன்னது?
செந்தா அத்தை இப்போ தான் சொன்னாங்க.
இதுவரை இருந்த அவனின் இலகுவான மனநிலை இறுக்கமாகிவிட்டது.
நான் எவ்வளவு தவிச்சிட்டு இருந்தேன் தெரியுமா? ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன்… கோபமாய் உரிமையாய் சிணுங்கினாள்.
நான் சொல்லியிருக்கணுமா? பல்லை கடித்தான்.
நான் எவ்வளவு ஹேப்பி தெரியுமா? உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றது… அது தான் முத்தா… மீண்டும் அவன் மார்பில் புதைந்தாள் நன்றிபெருக்குடன்.
ஓ….. என்றவனின் குரலில் உயிர்பில்லை….
நான் எவ்வளவு கில்ட்டியா பீல் பண்ணினேன் தெரியுமா? இப்போ தான் மனசை அழுத்தின பெரிய பாரம் இறங்கின மாதிரி இருக்கு.
ம்ம்ம்ம்ம்ம் என்றவனின் குரல் பேதம் அவள் உணரவில்லை.
என்ன தான் கலா அத்தையை எனக்கு பிடிக்காதுனாலும் என்னை கொண்டு ராஜேஷ் சூசைட் பண்ணிக்க இருந்தது எனக்கு எவ்வளவு வேதனையை கொடுத்தது தெரியுமா?
ம்ம்ம்ம்ம்…. என்றான் வெறுப்புடன்.
என்ன ம்ம்ம்ம்ம்….? சிணுங்களாய் அவன் முகம் பார்த்தவள் அப்போது தான் அதில் இருந்த இறுக்கத்தை கண்டாள்.
என்ன ஒரு மாதிரி இருக்கீங்க…? நிதானித்து கொண்டாள்.
ஒண்ணுமில்ல நீ போய் உங்கம்மாக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணு…. தலையை கோதிக் கொண்டான்.
எ… என்ன? சங்கடமாய் கேட்டாள்.
ஒண்ணுமில்ல… என்றவன் அவளுக்கு எதிர் திசையில் பார்க்க தொடங்கி விட்டான்.
என்ன நான் தப்பா பேசிட்டேன்…? கடுப்பாகி விட்டாள்.
நீ தப்பு இல்லரா… ஆரம்பத்தில் இருந்தே நேனு தான் தப்பு என்றான்.
பயத்துடன் அவன் முகம் பார்த்தாள்.
என் மேல உள்ள ஆசையில் எனக்கு முத்தம் கொடுக்கல… உன் அத்தானை சேவ் பண்ணி இருக்கேன்னு காம்பிளிமெண்ட் கொடுத்திருக்க…. எவ்வளவு முயன்றும் வருத்தம் தொணித்தே வந்தது வார்த்தை.
ஷாக் அடித்தாற்போல் தள்ளி நின்றாள்.
அவன் சொல்வது உண்மை தானே…. அவளுக்கு கூசியது!
சாரி… நீங்க என்னை சரியா புரிஞ்சுக்கல… அதுவாய் கலங்கி கரை கடந்தது கண்ணீர்.
நீ என்னை சரியா புரிஞ்சிருக்கியா? விரக்தியுடன் கேட்டான்.
மறுபடியும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் கண்டு அவளுக்கு அய்யோ என்றானது.
ஏன் இப்படி ஏறுக்கு மாறா பேசறீங்க…?தவித்து போனாள்.
தலைவலிக்குது போய் எனக்கு இஞ்சி டீ கொண்டுவா என்றான்.
அழுகையை அடக்கிக் கொண்டு வெளியேறினாள்.
சற்று நேரம் முன்பிருந்த குறுகுறுப்பு இப்போது இல்லை.
நான் சொல்லவில்லை என்கிறாளே…. இவள் என்ன பிரச்சனை என்று நம்பி சொன்னாளா?
எனக்கு தெரியக்கூடாது என்று இவள் நினைக்கலாம்… இவளுக்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று நான் பார்த்து பார்த்து செய்வதை இவளுக்கு சொல்ல வேண்டுமா?
“———————–“
என்ன பவி சொல்ற? மணவாளன் நம்பமாட்டாது கேட்டார்.
ஆமா மாமா… இவர் தான் ராஜேஷூக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கார்.
புரியலம்மா… நெற்றி சுருக்கினார்.
பவிக்கு எங்கு என்ன நடந்தாலும் தனக்கு தெரிய வேண்டும் என்று தான் கண்காணிப்பிற்கு ஆட்கள் வைத்திருந்தான்.
ராஜேஷ் கை நரம்பை அறுத்து கொண்ட அடுத்த நிமிடமே ஹரிக்கு செய்தி பறந்து விட்டது.
பவித்ரா ஏதாவது கூறுவாள் என்று எதிர்பார்த்து ஏமார்ந்து போனான்.
அடுத்தகட்டமாக ராஜேஷின் தந்தை மகனின் தற்கொலை முயற்சியில் பயந்து போனவர் பவித்ராவை பெண் கேட்க போகிறேன் என்று சொன்னதும் யோசிக்க தொடங்கிவிட்டான்.
அவனுக்கு கிடைத்த துருப்பு சீட்டு கலாவதி தான்.
பெங்களுருவில் இருக்கும் தன் நண்பன் தனஞ்செயனுக்கு அழைத்து விட்டான்.
சொல்லுடா மாப்பிள்ளை… உன் ஆளு கூட டூயட் பாடுற நேரத்துல என்னை எல்லாம் ஞாபகத்தில் வைத்து கால் பண்ற… கேலியாய் சிரித்தான் தனா.
தனா உன் கம்பெனியில் ஒரு வேலை வேணும்…!
யாருக்குடா?
தெரிஞ்சவங்க ஒருத்தருக்கு!
வேகன்ட் இல்லையேடா…!
நீ கிரியேட் பண்ணு மேன்!
டேய் இப்போ கம்பெனி சிடுவேஷன் சரியில்லை… பிராஜக்ட்ஸ் எல்லாம் முடியற நிலையில் இருக்குடா… இருக்கிறவனுக்கே வேலை இல்லை.நியூ பிராஜெக்ட்ஸ் கமிட் ஆனா சொல்றேன்.
தனா நீ வேலை கொடு… நான் சம்பளம் கொடுக்குறேன்…!
என்னடா சொல்ற?
அதிகம் பேச எனக்கு நேரம் இல்லை… கல்யாண வேலை எக்கச்சக்கமா இருக்கு. ஒரு அப்பாயின்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ணு.
சேலரி பிப்டிk ன்னு ரெடி பண்ணவா?
ஒன் அன் ஹாஃப் போடு!
டேய்…. தனா அதிர்ந்து விட்டான்.
சொன்னதை செய் மேன்…!
அதிருக்கட்டும் ஆளு யாரு? அவ்வளவு ஆர்வம் தனாவிற்கு.
சொந்தம்!
உன் பியான்ஸேக்கா?
ம்ம்ம்ம்…. என்றான்.
நினைத்தேன்… தனா சிரித்து விட்டான்.
என்ன சிரிப்பு?
சும்மா… உன் ஆளோட தம்பியா?
இல்லை… அத்தை பையன்!
எது… அதிர்ந்து விட்டான்.
என்ன மேன் கொய்ட் ஆகிட்ட…? நான் சொல்ற மாதிரி செய்! இன்னும் ரெண்டு நாளில் ஜாயின் பண்ணணும்னு அர்ஜ் பண்ணு!
டூ டேய்ஸ்?
ஆமா… அவன் அங்கே இருக்க கூடாது… உன் கஷ்டடியில் வச்சுக்கோ…!
புரிஞ்சுதுரா ஹரிசரண் நந்தமூரி எர்ரபள்ளி… வெடித்து சிரித்தான் தனஞ்செயன்.
கலாவதியை எப்படி காலாவதி ஆக்குவது என்று அவனுக்கு தெரியாதா…? அது தான் ஒரேடியாய் ஒன்றரை லட்சம் சம்பளம் என்று தட்டி தூக்கினான்.
“—————–“
ஹலோ சொல்லுங்க…. மருத்துவமனையில் இருந்து கலாவதி பேசினார்.
மேம் நாங்க பெங்களூரு நியூ ஸ்டார் ஐ டி கம்பெனியில் இருந்து பேசறோம்.
சொல்லுங்க…!
மிஸ்டர் ராஜேஷ் இல்லையா?
சொல்லுங்க சார்! நான் அவனோட அம்மா தான்.
மேம் உங்க சன் எங்களுக்கு ரெசியும் அனுப்பி இருக்கார். அவர் குவாலிபிகேஷன் பார்த்தோம் எங்களுக்கு பிடிச்சிருக்கு. அவரை இம்மிடியேட்டா அப்பாயின் பண்றோம்…
என்ன சொல்றீங்க?
அவர் இன்னும் டு டேஸில் ஜாயின் பண்ணனும்.
ரெண்டு நாளிலா? கலாவதி விழித்தார்.
இந்த போஸ்டிங்கிற்கு ஏகப்பட்ட டிமாண்ட். ஒன்றரை லட்சம் சம்பளம் ஈஸியா யாரு மேடம் கொடுப்பாங்க?
என்னது ஒன்னரை லட்சமா? கலாவதிக்கு மயக்கம் வராத குறை. திருவிளையாடல் தருமியின் மனநிலையில் அவர்.
மேம் அப்பாயின்மெண்ட் ஆர்டர் அவருக்கு மெயில் பண்ணியிருக்கோம்.
கலாவதிக்கு கை கால் புரியவில்லை.
நிஜமாவா?
மெயில் பாருங்க புரியும்! மறுமுனை அழைப்பு துண்டிக்கப்பட்டது.
என்ன செய்ய? ஏது செய்ய என்று அவருக்கு புரியவில்லை.
சற்று நேரத்தில் மயக்கத்தில் இருந்த மகன் வலியில் முணங்க ஓடிப்போய் மருத்துவரை அழைத்து வந்தார்.
பரிசோதித்த மருத்துவர் இனி உயிருக்கு ஆபத்தில்லை என்று உத்திரவாதம் கொடுத்தார்.
டாக்டர் நாங்க டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாமா?
நோ… பேஷண்ட் இன்னும் முழுசா ரெக்கவர் ஆகல… கடுமையாய் ஆட்சேபித்தார் மருத்துவர்.
மறுநாள் இன்னும் கொஞ்சம் தெளிவாய் இருந்தான் ராஜேஷ்.
டாக்டர் நாங்க வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறோம்… டிஸ்சார்ஜ் பண்ணிவிடுங்க என்றார் கலாவதி.
வேல்முருகனுக்கு மனைவியின் பேச்சில் கடும் அதிருப்தி.
இதோ பாருங்க அவனுக்கு பெரிய கம்பெனியில் வேலை கிடைத்திருக்கு. இடம் மாறி இருந்தா மனசுக்கு ஆறுதலா இருக்கும்.. கணவரின் வாயை அடைத்தார்.
ராஜேஷ் புரியாமல் பார்த்தான்.
அன்று இரவே பெங்களுருவுக்கு காரில் பயணம்.
ராஜேஷ் உனக்கு வேலை கிடைத்திருக்கு தங்கம்… ஒன்னரை லட்சம் சம்பளம். இதோ பாரு ஆர்டர்…. பெருமை பொங்கியது கலாவதிக்கு.
கட்டுப்போட்ட கையில் ஆர்டரை வாங்கி பார்த்தவன் பிரம்மித்து விட்டான்.
எனக்கு நியூ ஸ்டார் கம்பெனியில் வேலையா? அவனால் நம்ப முடியவில்லை.
இந்த கம்பெனிக்கு நான் அப்ளை பண்ணின ஞாபகம் இல்லையே… குழம்பினான்.
நீ அப்ளை பண்ணாம சும்மாவே வேலை கொடுக்க அவங்க என்ன கேனையங்களா…?
உன் திறமை உனக்கு தெரியல ராஜா… இனி பாரு உன் வாழ்க்கையை… எவரெஸ்டை தொட்டுவிட்ட மகிழ்ச்சி அன்னைக்கு. மனுஷி இந்த நிலா என்ன விலை, இந்த சூரியன் என்ன விலை ரேஞ்சுக்கு இருந்தார்.
முப்பதாயிரம் சம்பளம் வாங்குபவனுக்கு ஒன்னரை லட்சம் எவ்வளவு பெரிய விஷயம்… அவன் சிந்தையில் இப்போது வேலை தான் பிரதானம் . பவித்ரா பின்னுக்கு சென்று விட்டாள்.
இவ்வளவு தான் அவன் காதல்….! நிலைத்த மனமும் தெளிவும் அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே பவித்ரா விஷயத்தில் இல்லை.
பெங்களுரு சென்று பணியில் சேர்ந்து விட்டான். இன்னும் அவனுக்கு நம்பமுடியவில்லை.
எடுத்த எடுப்பில் இவ்வளவு சம்பளமா? சீனியர்களுக்கு, டீம் மேனேஜர்களுக்கே இவ்வளவு கிடைக்காதே…
ஆனால் பணியில் சேர்ந்து ஆர்டர் பெற்ற பின்னே வேறெதுவும் யோசிக்க தோன்றவில்லை.
எங்கள் கம்பெனி உங்களுக்கு ராஜவைத்தியம் பார்க்கும். உங்களுக்கு இன்ஷுரன்ஸ் இருக்கிறது என்று தனஞ்ஜெயன் அங்கேயே பிடித்து வைத்துக்கொண்டான். இதுவும் ஹரியின் ஏற்பாடு தான்.
பவித்ரா திருமணம் முடியும்வரை தமிழ்நாட்டிற்கு வரவேண்டாம் என்பது கலாவதியின் விருப்பமும் கூட….
தப்பித்தவறி கூட அவன் சிந்தையில் பவித்ரா வந்து விக்கூடாது என்று அவ்வளவு தெளிவு அவருக்கு.
ஒரு வாரம் கழித்து தன் அக்கா செந்தாமரைக்கு அழைத்து வாய்வலிக்க பெருமை பேசி இருக்கிறார் கலாவதி.
எம்புள்ள எவ்வளவு பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறான் தெரியுமா? அவனவன் வேலை கிடைக்காம நாயா பேயா அலையறான்…. எம்புள்ள திறமைக்கு தேடிவந்து வேலை கொடுத்திருக்காங்க.
அப்படியா சந்தோஷம் என்று கேட்டுக் கொண்டார் செந்தாமரை.
எப்படி நடந்தது உன் அண்ணன் பொண்ணு கல்யாணம் என்று கேட்டு தெரிந்து கொண்ட கலாவதி எவ்வளவு பெரிய இடத்துல என் பிள்ளைக்கு பொண்ணு கொண்டு வருவேன் பாரு என்று சவால் விட்டிருக்கிறார்.
ஹரி தம்பிதான் இதெல்லாம் செய்தாருன்னு உனக்கு யாரு சொன்னது பவிம்மா….?மணவாளனுக்கு ஆச்சரியம்.
அவர் தான் செய்திருப்பார் மாமா… எனக்கு தெரியும்!
ம்ம்ம்ம்ம்…. நல்லது நடந்தா சரி… இனி ராஜேஷ் திருந்திருவான்.
இனி திருந்தலைனா அவர் கொலையே பண்ணிடுவார் என்றாள் கவலையாக…
ஹரி வம்பு தும்புக்கு போற ஆளு இல்லைமா… அவ்வளவு சப்போர்ட் மணவாளன்.
ஆனா வர வம்பை விட மாட்டாரு…. அவனை நன்கு அறிந்தவள் கவலையாக கூறினாள்.
காயத்ரி, யுவி, வித்யா,சரண்யா எல்லோரும் ஹாலில் அமர்ந்து கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
எந்நேரமும் விளையாட்டு தானா…..? வயசு பொண்ணுங்க இருக்கீங்க ஒருத்தியாவது ஹெல்ப் பண்ண வந்தீங்களா? பவித்ரா டீ கேட்டியே…. செந்தாமரை அவள் கையில் கொண்டு வந்து கொடுத்தவர்… போங்க அண்ணி தனியா சுகியம் பண்ணிட்டு இருக்காங்க போய் ஹெல்ப் பண்ணுங்க… பெண்களை விரட்டினார்.
இதோ ஹரியே வந்தாச்சு! மணவாளன் சிரிக்க… ஹரி வந்து நின்றான்.
தம்பி எழுந்து வந்துட்டாரு நல்லதா போச்சு… நாங்க ஆறு மணி பஸ்ஸுக்கு கிளம்பனும் என்றார் செந்தாமரை.
என்ன அதுக்குள்ள கிளம்பறீங்க? உரிமையாய் பேசினான் ஹரி.
உங்களை விருந்துக்கு அழைக்க தான் வந்தேன்… நாளை விக்ரம் ஆபிஸ் போகணும். வித்யாக்கு காலேஜ் இருக்கு.
கண்டிப்பா பவியை அழைச்சுட்டு நம்ப வீட்டு விருந்துக்கு வரணும் உரிமையாய் வேண்டுகோள் வைத்தான் விக்ரம்.
அண்ணா உங்களுக்கு எங்கேஜ்மெண்ட் இருக்கே அதுக்கு இன்வைட் பண்ணலையா…? வித்யா சிரிப்புடன் கேட்டுவிட்டு ஓடினாள்.
அப்படியா…? காயத்ரியை கண்களால் கேட்டான் தேவ்சரண்.
தெரியாது என்பதாய் உதடு பிதுக்கினாள்.
டீயை அருந்தி கொண்டே விக்ரமை அளவிட்டான் ஹரி.
என்னத்தை எங்களுக்கு சொல்லவே இல்லை… கோபித்துக் கொண்டாள் பவித்ரா.
இல்லை பவி ஜாதகம் பொருந்தி வந்திருக்கு அவ்வளவு தான்… உங்களுக்கு சொல்லாம உறுதி பண்ணிடுவோமா என்றவர். பிறந்த வீட்டு உறவுக்கு சொல்லாமலா? என்றார் சிரிப்புடன்.
பவி கும்பகோணம் பக்கத்துல திருப்பந்துறை தான் பொண்ணு. இந்த வாரம் ஞாயிற்று கிழமை போய் பார்த்துட்டு வருவோமா என்றார் செந்தாமரை.
என்ன பதில் சொல்வது என்று பவித்ரா விழிக்க…
கண்டிப்பா போய் பார்த்து பேசி முடிச்சுட்டு வருவோம் என்றான் ஹரி.
பவித்ராவிற்கு வியப்பாய் இருந்தது. என்னடா இவனை புரிஞ்சுக்க இந்த ஜென்மம் போதாதோ…?
விக்ரம் கூட ஹரியை பெருமிதமாய் பார்த்தான்.
என்னத்தான் உங்களுக்கு பொண்ணு ஓகேவா? சிரிப்புடன் கேட்டாள்.
ம்ம்ம்ம்ம் என்று சிரித்தான் விக்ரம்.
விக்கி அத்தான் சிரிக்கிறதை பார்த்தா டைரக்ட்டா கல்யாணம் தான் போல… காயத்ரி சிரிக்க… எல்லோரும் சிரித்துவிட்டனர். மாமன் மகள்களின் கேலியில் அவன் வெட்கி நெளிந்து கொண்டிருந்தான்.
அப்புறம் பொண்ணு பெயர் என்ன…? பொண்ணு என்ன படிச்சிருக்காங்க? வெகு இயல்பாய் பேசினான் ஹரி. விக்ரம் தான் திகைத்து அமர்ந்திருந்தான்.
காலையில் இருந்து கண்டு கொள்ளாதவன் இப்போது இவ்வளவு அக்கறையா பேசுறானே…. பவித்ரா வாயடைத்து அமர்ந்திருந்தாள்.
விக்ரமும் ஹரியும் அருகே அமர்ந்து பேச தொடங்கிவிட்டனர்.
சந்தோஷமாய் விசிலடித்தபடி தோட்டத்திற்கு சென்றான் தேவ்.
அவனுக்கு இப்போது தான் நிம்மதியாய் இருந்தது.
அண்ணன் தம்பி இருவருக்கும் விக்ரமை கண்டதும் புகைய தொடங்கியது இப்போது அவனுக்கு திருமணம் செய்ய இருக்கும் செய்தி கேட்டு தான் நிம்மதி.
“—————–“
இலகுவான இரவு உணவு போதும் என்று ஹரி சொல்லி விட்டான்.
தோசை, மூன்று வகை சட்னி, சாம்பார் என்று புது மருமகனுக்கு பார்த்து பார்த்து செய்திருந்தார் தமயந்தி.
மாப்பிள்ளை கெத்தோடு சுற்றிவந்தது தேவ் தான்.
ஆரம்பத்தில் அண்ணன் தமிழ் பெண்ணை மணப்பதற்கு அவனே எதிர்ப்பு தெரிவித்தவன் தான்…. இன்று அதே வீட்டில் இவனும் பெண்ணை பார்க்கிறான்.
நிவேதாவிற்கும் பவித்ரா குடும்பத்தை மிகவும் பிடித்து விட்டது. அன்பாய் பழகும் மனிதர்களாக இருக்கிறார்களே…
அண்ணையா நீங்க மன்டே தான் கிளம்புவீங்களா?
ஏன்ரா பட்டுமா… தங்கை மகனை கொஞ்சியபடியே கேட்டான்.
அவருக்கு ஹாஸ்பிடலில் லீவ் கன்டினியு பண்ண முடியாது. ஒரு சம்பிரதாயத்திற்கு தான் உங்க கூட வந்தோம்.
நீங்க இருந்து விருந்து முடிச்சிட்டு வாங்க….!
நாம எல்லோரும் மண்டே போகலாமே ப்ளீஸ் என்றாள் பவித்ரா.
இல்ல வதின தவறா நினைக்காதீங்க… நாங்க கிளம்பனும்…!
தேவையும் கூட்டிட்டு போங்க நிவி.அங்கே ராம் மட்டும் எப்படி தனியா மேனேஜ் பண்ண முடியும்?
சரிங்க அண்ணையா…நீங்க தங்கிட்டு வாங்க என்றாள் நிவி.
தேவ்வின் ஆர்வத்தை கண்டு கொண்டு தானே இருக்கிறான். வயது பெண் இருக்கும் வீட்டில் தேவையற்ற சங்கடம் வேண்டாம் என்றே தம்பியை கிளம்ப சொல்லிவிட்டான்.
தேவ்வின் முகம் வாடிவிட்டது. எதுவும் பேசாது அமைதியாக நகர்ந்து விட்டான்.
இங்கே சுற்றி பார்க்க நிறைய கோயில் குளம் இருக்கு பார்த்துட்டு பொறுமையா போகலாமே என்றார் தமயந்தி.
இல்ல அத்தம்மா அண்ணையா விவாகத்துக்கோசரம் இவர் பத்து நாள் லீவ் எடுத்துட்டார்.
இன்னொரு முறை அவங்களுக்கு லீவ் கிடைக்கும் போது கூட்டிட்டு வந்து நம்ம ஊரை சுற்றி காட்டுவோம் என்றார் மணவாளன்.
“———————-“
என்ன மனநிலையில் இருப்பானோ….கால் நடுங்க….பதட்டத்துடன் அறைக்கு வந்தாள் பவி. அவன் மொபைல் பார்த்துக் கொண்டிருந்தான்.
கணவன் என்ன பேசுவானோ என்ற பயம். இன்னும் சரியான புரிதல் தங்களுக்கு வரவில்லையோ என்ற கவலை.
கதவடைத்துவிட்டு அவள் வர அவன் கண்டு கொள்ளவே இல்லை. கையில் இருந்த தண்ணீர் குவளையை டேபிளில் வைத்தவள் தடுமாற்றத்துடன் அவன் முகம் பார்த்தாள்.
அவன் ஆர்வமாய் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தான்.
மாலை முத்தமாய் மொத்தமாய் அவனிடம் குழைந்து கரைந்து நின்ற நினைவு அவளை வதைத்தது.
தன் பாவாவின் காதல் பார்வைக்கு அவள் மனம் ஏங்கியது.
ஏதாவது பேசுவான் பேசுவான் என்று எதிர்பார்த்தாள். அவன் கண்டு கொண்டால் தானே…? அழுகை முட்டிக்கொண்டு வர… விசுக்கென்று எழுந்து தண்ணீர் குடித்து அமர்ந்தாள்.
இவனுக்கு நான் ஜென்ம விரோதியா…? திடீர்னு பேசுறான் திடீர்னு முறைக்கிறான்… இவன் கண்ணாமூச்சிக்கு நான் ஆளா? கோபமும் அழுகையும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது.
அவன் இன்னும் மொபைலில் தான் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தான்.
அவள் பொறுமை எல்லையில் நின்று கொண்டு கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தது.
அவன் ஒரு முடிவோடு தான் இருக்கிறான் போல…. அவள் மட்டும் என்ன?
அவன் கையில் இருந்த மொபைலை பறித்தாள்.
ஏய் என்ன பண்ற….? போனை கொடு! அவளிடமிருந்து பறிக்க முயன்றான்.
உனக்கு எதுக்கு கல்யாணம்? அவ்வளவு கடுமை அவள் குரலில்.
அவன் பதில் சொல்லாது அவளையே பார்த்தான்.
என்ன பார்க்கிற…? உன்னை தான் கேட்கிறேன்… உனக்கு எதுக்கு கல்யாணம்,எதுக்கு பொண்டாட்டி, குடும்பம்…? சன்னியாசியா போக வேண்டியது தானே…?
இந்த காதல் கருமாந்திரம் எல்லாம் வேண்டாம்னு தெளிவாதானே இருந்தேன்… ஏன் என் வாழ்க்கையில் வந்து இப்படி என்னை டார்ச்சர் பண்ற… வாய் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் பீறிட்டு பொங்கி புது வெள்ளமாய் கறைபுரண்டது.
பொங்கிய சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு குறு குறுவென்று அவளை பார்த்தான்.
என்ன பேசுவாள் பார்ப்போம் என்ற ஆர்வம் அவனுக்கு…
பேசி விடுவது என்று ஒரு முடிவோடு இருப்பவளுக்கு அவன் முக மாற்றம் எங்கே புலப்பட்டது….? மனதில் உள்ளதை கொட்டி தீர்த்துவிடும் உத்வேகம் மட்டுமே…
நான் என்ன செய்தாலும் தப்பு தானா…? சரி நான் என்ன பண்ணி இருக்கணும்? என் அத்தை பையன் எனக்காக கையை அறுத்துக்கிட்டான் அவனை ஏதாவது பண்ணுங்கன்னு சொல்லி அழுதிருக்கணுமா?
நீங்க அவனை அடித்து கையை காலை உடைத்து… கல்யாண வீட்டில் தேவையில்லாத பிரச்னை வரணுமா…?
அவள் நீதி நியாயம் கேட்டு அரற்றிக் கொண்டிருக்க…
அவன் அமானுஷ்ய கதை கேட்பது போல் ஆவலாக கேட்டுக் கொண்டிருந்தான்.
என்ன உரங்குட்டான் போல பார்க்கிற… என் அழுகை உனக்கு ஆனந்தமா இருக்கா …? ஆகாத பொண்டாட்டி கைப்பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தங்கிற நிலைமையில் நான் இருக்கேன்.
வாயை திறந்து பேச யோசிக்கும் குலாபியா இது…? அவன் இன்னும் தோற்றபிழையில் தான் மூழ்கி இருந்தான்.
நீ சொன்ன டயலாக் தான் நான் இப்போ சொல்றேன்….என் மேல உனக்கு நம்பிக்கை வரும்போது… என்னை மீறி உனக்கு எதுவும் நடக்காது என்ற தைரியம் வரும்போது என்னை நெருங்கி வா…. அதுவரை என் கட்டிலில் மட்டும் தான் உனக்கு இடம் .. நீ நீயா இருந்துக்கோ…. கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தவளை ராட்சஸனாய் வளைத்து அணைத்துக்கொண்டான்.
விடு என்னை… ம்ச்ச்… விடு… இன்னும் அவளுக்கு அழுகை அதிகமானது.
ஏன் விடனும்? எனக்கு சன்னியாசியா போகும் ஐடியா இல்லரா அம்மாயி… குறைந்தது மூனு குழந்தை பெத்துக்குற ஐடியா இருக்கு….
போய்யா… வேகமாய் தள்ளிவிட்டு எழுந்தாள்.
எது போய்யாவா….?
போடான்னு கூட சொல்லுவேன்… கண்மண் தெரியாத ஆவேசம் அவளுக்கு.
போடான்னு சொல்லு! அவள் கரம் பற்றி இழுத்து தன் மார்போடு இழுத்து வளைத்துக் கொண்டான்.
கண்கள் மூடிக்கிடக்க… மூச்சு சீரற்று இருந்தது. முகம் சிவந்து தலை களைந்து யதார்த்த ஓவியமாய் காட்சி கொடுத்தாள்.
செப்புறா அம்மாயி ஒக டைம் போடான்னு செப்பு…. ஜிமிக்கி ஆடும் நங்கை அவள் காது மடல் உரசி கிள்ளை மொழியில் கெஞ்சினான்.
மாட்டேன் என்பதாய் தலை அசைத்தாள்.
ஏனாம்… மீண்டும் கொஞ்சினான்.
நீங்க போயிட்டா உங்க குலாபி மொத்தமா போயிடுவா…. விம்மினாள்.
ஏய்… லூசு பொண்ணு… அவள் வாயில் செல்லமாய் தட்டினான்.
பிராமிஸ்…. நீங்க போயிட்டா…. நா.. நான் அவள் பேச முயன்றாள்.
எங்கே அவன் விட்டான்… அவள் தண்ணீர் விட்டு தரைக்கு வந்த மீன் போல் துள்ளினாள். மூச்சு முட்டியது…இமைகள் கசிந்தது இதழ்வழி அவன் இதயம் நுழைந்து விட்டான்.
முத்தம் ஒன்றே அவன் முக்திபெற வழி என்று எண்ணினானோ…. நெடுமுத்தம் யுத்தமாய் தொடர்ந்து…. பித்தமாய் தலைக்கேறி மொத்தமாய் சூடேற்றி இருவருக்குள்ளும் உயர்ந்திருந்த அர்த்தமற்ற சுவற்றை அடித்து நொறுக்கியது.
அவனே ஓய்ந்து விலகினான். புண்பட்ட இதயம் அவளுக்கு பண்பட்டதோ… அவன் கோபம் தீர்ந்தது தாபம் தீரவில்லையே…
முத்த சுழலில் சிக்கி மொத்தமாய் தன்னிலை இழந்தவளை தவி(ர்)க்க விடாமல் அள்ளி அணைத்து பஞ்சு மெத்தையில் பதமாய் சரிந்து விட்டான்.
அவள் சிணுங்கினாள்…. செல்லமாய் முறைத்தாள். சிவந்து சிரித்தாள்.
நம்ம சோபன ராத்திரி…. அவள் விழியில் இதழ் பதித்தான்.
அப்படினா…. விழிகள் படபடக்க வினவினாள்.
நீ நானாவும் நான் நீயாவும் மாற போகும் நாள்… குழைந்து இழைந்து அவள் மூக்கின் நுனி நிமிண்டினான்.
எ…. என்ன…? பேதை அவள் விழி விரித்து யோசிக்கும் முன் அழகனவன் விரல்கள் அத்துமீறி ஸ்வரம் மீட்ட தொடங்கியது .
இன்னைக்கா…. அவளுக்கு வார்த்தைகள் இடறியது. ஆறு நாள் வேஸ்டா போச்சு…. இச்சுக்களால் பதில் சொன்னவன் இதுவரை காதலாய் காதல் செய்தவன் இன்று காமத்தாலும் காதல் செய்ய தொடங்கினான் .
அவளின் வெட்கம் அவனை இன்னும் ஆட்டிபடைத்தது. அவள் கண்ணாடி வளையல் ஓசையும் கொலுசு பாடிய சிம்போனியும் அவன் காதல் அணுக்களை தட்டி கொட்டி கதகளி ஆட வைத்தது. கண்ணாட்டியின் கருக மணி தாலி அவன் கண்ணில் பட்டு இச்சைக்கு இன்னும் அனல் ஏற்றியது.
இனி கட்டுப்படுத்த முடியாது என்று இருவரும் உணர்ந்தனர். ஆண்டான் அடிமை என்று இல்லை… இருவரும் ஆண்டனர் இருவரும் அடிமையாகினர்.
அவன் விரும்பிய அவனை விரும்பிய அவனுக்காய் காத்திருந்த அவன் அம்மாயியை தனக்குள் நிறைத்தான்.
அவளுடன் வாழ ஏங்கிய ஏக்கத்தை காதலுடன் கலவியில் காட்டினான். அவளை எவ்வளவு பிடிக்கும் என்று முத்தத்திலும் இடையிலே சத்தத்திலும் காட்டினான்.
எனக்காக என்னை ஏற்ற என் பாவாவிற்கு நான் சமர்ப்பணம் என்று தன்னை கொடுத்தாள் ஹரியின் அம்மாயி.
ஒரு நாளில் தீராது என்று தெரியாதா என்ன… ஆயினும் தீர்த்துக் கொள்ள நினைத்தான். தீர்வு கொடுக்க நினைத்தாள். சூரியனுக்கு தடை உத்தரவு போட்டு விட முனைந்தான். விடியா இரவாகி நீண்டுக் கொண்டிருந்தது. முதல் இரவா… முடிவில்லா இரவா… சூரியன் குழம்பியது.
கூடி கலை(ளை)த்து , களைத்து கூடி அதுவே தொடர்ந்து ஹரியிடம் பவித்ரம் பெற்றாள் அவன் அம்மாயி. அம்மாயின் வசமான பொம்மையாய் அவன் ஹரிசரண் நந்தமூரி.
அவன் மார்பில் ஒண்டிகொண்டவள் அவன் கரம் பற்றி விரல் கோர்த்து பாவா நான் உங்களுக்கு எந்த வகையிலும் பொருத்தம் இல்லை. என்னை எப்படி உங்களுக்கு பிடித்தது? இவ்வளவு நாளாய் கேட்க நினைத்த கேள்வியை இன்று கேட்டாள்.
அவளை இன்னும் இறுக்கி மார்பு கூட்டில் பொத்திக் கொண்டவன் என் அம்மாயி எப்படி எனக்குள்ள வந்தான்னு எனக்கே தெரியல…. ஏர்போர்ட்டில் முதல்முறை பார்க்கும் போதே அந்த முகத்தில் தெரிந்த வலியும் வேதனையும் என்னை ஏதோ பண்ணுச்சு…! அவகிட்ட விழுந்துடக் கூடாதுன்னு தான் அவளை கண்டாலே ஆயம்மான்னு எரிந்து விழுந்தேன்.
என் குலாபி எனக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமானவ…. எர்ரபள்ளி குடும்பத்துக்கு இவளைவிட பொருத்தமானவங்க யாரு…? அவள் இதழில் முத்தம் வைத்தான்.
ஏற்கனவே அவன் மீது பித்தானவள் இப்போது இன்னும் காதலாகி கர்வம்கொண்டு மோகத்தின் உச்சத்தில் அவன் இதழை கடித்து இன்பத்தை வாரி வழங்கினாள்.
சுந்தரனவன் தன்னிடம் சரணடைந்தவளை இனிதாக இச்சைகூட்டி சொர்க்கத்திற்கு அழைத்து சென்றான்.
என்றோ உள்ளத்தால் சேர்ந்தவர்கள் இன்று உடலால் சேர்ந்து தற்சமயம் சோர்ந்து துயில்கின்றனர்.
இனி தன் வாழ்வில் எது நடந்தாலும் தன் பாவா பார்த்துக் கொள்வார் என்ற நிம்மதி அவளுக்கு.
தன் குலாபி தன்னிடம் முழுதுமாய் சரணடைந்து விட்டாள் என்ற ஆனந்த உவகையுடன் அவன் கிறங்கி கிடக்கிறான்.
“——————–“
அயர்ந்த உ(கி)றக்கத்தில் கதிரவனின் கிரணமோ பறவைகளின் சத்தமோ… எதுவும் எழுப்பவில்லை காதல் கிளிகளை.
வீட்டில் யாரும் அவர்களை எழுப்பவும் முனையவில்லை. புதுமண தம்பதிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் இங்கிதம் அற்றவர்கள் யாரும் இல்லையே…
கண்கள் எரிந்தாலும் உடல் வளைத்து கொட்டாவி விட்டவளுக்கு வளைக்க முடியாமல் இடித்த அவன் திண்ணிய மார்பை கண்டு இரவில் எழுதிய இதிகாசம் ஆங்காங்கே பிறை சந்திரன் போல் நக கீறல்களாய் பரிகாசம் செய்தது.
நாணத்துடன் இதழ் கடித்து அவன் வதன பிம்பத்தை ரசித்து கன்னத்தில் சின்னதாய் முத்தம் வைத்து மெல்ல எழுந்தாள்.
காயத்ரி,சரண்யா எல்லாம் வயசு பொண்ணுங்கடி நீ இன்னும் எழுந்து போகாம என்ன பண்ற என்றானே….
யோவ்…. அவன் குரல்வளையை நெறித்தவளை கவர்ச்சியாய் சிரித்து காதலுடன் கண்சிமிட்டி சுனாமியாய் சுருட்டி மடக்கி அவசர முத்தத்தை அழுத்தமாய் கொடுத்து குளிக்க அனுப்பினான் குறும்பனவன்.
வயசு பொண்ணுங்க இருக்க வீடு இல்லையா… நாம தான் டீசண்டா நடந்துக்கணும்…. போ… உங்கம்மாக்கு ஹெல்ப் பண்ணு கண்சிமிட்டி சிரித்தான்.
போடா…. பல்லை கடித்துக் கொண்டே தலை துவட்டினாள்.
குலுங்கி சிரித்தவன் நிம்மதியாய் கையை காலை உதறி சுகமாய் உருண்டான். அவன் கோபம் டென்ஷன் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் இரவோடு இரவாக வெளியேறிவிட்டதே…
மயில் வண்ண புடவையில் அவன் மயில் அவ்வளவு அழகு. இப்போது அள்ளி அணைக்க தோன்றவில்லை அமைதியாய் ரசிக்கத் தோன்றியது.
ஒருக்களித்து படுத்து குலாபியை நிதானமாய் ரசித்தான்.
என்ன பார்வை… ஈரத் துண்டை அவன் மீது வீசினாள்.
குங்குமம் வச்சுகிட்டு போடி… கவிழ்ந்து படுத்தவன் பாவா செம்ம டயர்டா இருக்கேன் என்னை எழுப்பக் கூடாது கண்டிஷன் போட்டு உறக்கத்தை தொடர்ந்தான்.
ஏழு மணிதான் ஆனது. காபி வேலை மட்டுமே முடிந்திருந்தது. யாரையும் பார்க்க சகோஜமாய் இருந்தது அவளுக்கு. யாரும் அவளை கண்டுகொள்ளவில்லை.
மாப்பிள்ளைக்கு காபி கொடுக்கலையா என்றார் சுசிலா.
அவர் தூங்குறார் பாட்டி என்றாள் சின்ன குரலில்.
மாப்பிள்ளையோட தம்பி தங்கச்சி சாயந்திரம் கிளம்புறாங்கல்ல இப்போ வைத்தீஸ்வரன் கோயில் போயிட்டு வந்துடலாம் என்றார் மணவாளன்.
அப்பா அப்படியே பூம்புகார் போயிட்டு பீச்சில் விளையாடிட்டு வந்துடலாம் பிளீஸ் என்றாள் சரண்யா.
இந்த வெய்யிலிலா என்றார் சுசிலா.
பாட்டி எல்லாரோடேயும் போனா ஜாலியா இருக்கும் பாட்டி ப்ளீஸ் பாட்டி என்றாள் சரண்யா.
அவங்க சாயந்திரம் கிளம்பணும் எதுக்கு அலைச்சல் என்றார் அஞ்சுகம்.
இல்ல பின்னி போயிட்டு வரலாம் என்றான் தேவ்சரண்.
கோயிலுக்கு போகணும் எண்ணெய் தேய்ச்சு குளிச்சுட்டு வா என்றார் அஞ்சுகம்.
அத்தை இப்போ தான் தலைக்கு குளிச்சுட்டு வந்தேன் என்றாள் சங்கடத்துடன்.
சொன்னதை செய்… தம்பியையும் எண்ணெய் தேய்ச்சு குளிக்க சொல்லு என்றார்.
அவசரமாய் காபி குடித்துவிட்டு குளிக்க சென்றாள்.
ம்மா பவிக்கா குளிச்சுட்டு தானே வந்தாங்க…. சரண்யா சந்தேகம் கேட்க… போய் தமையா அத்தைக்கு தேங்காய் துருவி கொடு என்று மகளை விரட்டினார்.
தேவ் ஓரவிழியால் காயத்ரியை பார்த்து சிரிக்க அவள் வெட்கம் தாளாது குனிந்து கொண்டாள்.
கபோர்ட் திறந்து உருட்டிக் கொண்டிருந்தவளின் சத்தத்தில் கண் விழித்தவன் என்னரா… கொட்டாவி விட்டப்படி உருண்டு புரண்டான்.
கோயிலுக்கு போகிறோமாம் … எண்ணெய் தேய்த்து குளித்துட்டு வர சொன்னாங்க…அவசரமாய் புடவைக்கு மேட்சான பிளவுஸ் தேடினாள்.
அப்படியா…. மெல்ல எழுந்து உடலை முறுக்கி நெட்டை உடைத்துக் கொண்டவன்…. ஒரே எட்டில் தாவி பிடித்து அவள் கூந்தல் காட்டில் முகம் புதைத்து மல்லி வாசனையை மோப்பம் பிடித்து இடையை இறுக்கினான்.
விடுங்க குளிக்கணும்… தள்ளிவிட முயன்றாள்.
குளிக்க தானே போற… மோகத்துடன் சிரித்து தோளால் இடித்து கட்டிலில் தள்ளியவன் அவசரமாய் குறுங்கவிதை எழுதினான்.
பொய்யாய் முறைத்தாலும் இனிமையாய் சுகித்தாள் அவள் பாவாவின் ஸ்பரிசத்தை.
போதும் என்ற மனநிலைக்கு அவன் வரமாட்டான் என்று உணர்ந்தவள் பாவா விடுங்க… எல்லோரும் கிளம்பி இருப்பாங்க…. செல்லமாய் அவன் கரத்தில் கிள்ளியவள் துள்ளி எழுந்து குளியலறை புகுந்தாள்.
காலை விருந்து முடித்து கோயிலுக்கு கிளம்பினார்கள். சுசிலா, தமயந்தி இருவரும் வரவில்லை என்றுவிட்டனர்.
மதியம் சமைக்க வேண்டாம் ஹோட்டலில் பார்த்துக் கொள்ளலாம் என்றான் ஹரி.
வேன் புக் பண்ணியிருந்தனர். ஹரி பவித்ரா ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டனர். நிவேதா குழந்தை கணவனோடு ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
யுவராஜும் சந்தோஷும் கடைசி சீட்டில் அமர்ந்து கொள்ள… காயத்ரியும் சரண்யாவும் மூன்றாவது சீட்டில் அமர்ந்த பிறகு அவர்களுக்கு பின்னால் இருந்த சீட்டில் விசிலடித்தபடி சௌகரியமாய் அமர்ந்து கொண்டான் தேவ்.
சரண்யாவும் காயத்ரியும் சிரித்து பேசிக் கொண்டு வர…. மாம்பழ வண்ண பட்டுப்பாவாடை காபி பொடி வண்ணத்தில் தாவணி அணிந்து வெள்ளை முத்துக்கள் பதித்த பெரிய ஜிமிக்கி கம்மல் அழகாய் அசைந்தாட அலைபாய்ந்து முகத்தை மறைக்கும் முடியை விலக்கி கொண்டிருந்த காயத்ரியை அவ்வளவு ரசித்தான் தேவ்சரண்.
இந்த பெண் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறாள்? தனக்குள் இன்பமாய் நுழைந்து இம்சை செய்யும் பெண்ணவவளை கண்டு ஜன்னலோரம் சரிந்து அமர்ந்த தேவ் மெல்ல அவள் காதோரத்து குழலை ஊதி விட்டான்.
அவள் அசௌகரியமாய் முறைக்க…. என்ன என்பதாய் புருவம் விரித்தான்.
கொன்னுடுவேன் என்பதாய் அவள் உதடசைக்க…. அட்டகாசமாய் சிரித்தான்.
கடுப்பானவள் மெல்ல தட்டு தடுமாறி அவன் காலில் மிதித்தாள்.மறுகாலால் அவள் பாதம் வருடினான். அவள் தான் நெளிந்து கொண்டிருந்தாள்.
இவனை என்ன செய்ய என்று உள்ளுக்குள் பொறுமிக் கொண்டிருந்தாள்.
பதினான்கு கிலோமீட்டர் பயணம். வைத்தீஸ்வரன் கோயில் வந்து விட்டது. சிவன் வைத்தியனாக அருள்பாளிக்கும் ஸ்தலம். செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலுமும் கூட…. கோயிலில் நல்ல கூட்டம். அனைவரும் தரிசனம் காண வரிசையில் நெருக்கி பிடித்து நிற்க…. கூட்டத்தில் காயத்ரியை நெருங்கி நின்றான் தேவ்.
அவன் மூச்சுக்காற்று அவள் முதுகை துளைத்தது.
என்ன இது அசிங்கமா? அவளுக்கு கோபம் வந்துவிட்டது.
ஏய் நான் என்ன பண்ணினேன்…? அவன் பொய்யாய் பணிந்தான்.
இது கோயில்…. அவள் கடுகடுத்தாள்.
அவுனு இதி தேவாலயம்…. பின்பாட்டு பாடினான்.
ஹலோ மரியாதையா பிஹேவ் பண்ணுங்க….!
நமக்குள்ள என்ன மரியாதை….?
இடம் பொருள் கருதி அவள் அமைதி காக்க…. ஈவினிங் நான் கிளம்பிடுவேன் அதுவரைக்கும் கொஞ்சம் சிரித்து பேசேன்.
ரொம்ப டார்ச்சர் பண்றீங்க மிஸ்டர் தேவ். உங்க அண்ணனிட்ட சொல்லிடுவேன்.
எங்க அண்ணையாக்கு தெரியாதுன்னா நினைக்கிற..? அவ்வளவு குதூகலம்.
தெரியுமா….? அச்சம் கொண்டது அஞ்சன விழிகள்.
பின்ன…. ஓடி ஓடி தேடி தேடி லவ் பண்ணினவருக்கு நம்ம லவ் புரியாதா?
எது நம்ம லவ்வா? வாய் பிளந்து நின்றாள்.
இல்லையா பின்ன… வெகு தீவிரமாய் தலையாட்டி கேட்டான்.
பேச்சற்று பேதையவள் நிற்க… நான் பிரபோஸ் பண்ணிட்டேன் யோசித்து பதில் சொல்லு…! சமத்து பிள்ளையாய் தள்ளி நின்று கொண்டான்.
“——————“
தேவ் என்ன காயத்ரிட்ட பிரச்னை பண்றாரு? பவித்ராவிற்கு பயம்.
சொந்தகார் பொண்ணுட்ட பிரச்னை தான் பண்ணனுமா என்ன…? பிரியமா கூட பேசலாமே… மீசையை நீவிக் கொண்டான் ஹரி.
பிரியமாவா? அவள் குழப்பமாய் யோசிக்க…
நீ எல்லாம் லவ் மேரேஜ்… அவள் தலையில் தட்டினான்.
என்னாச்சு…?புரியாமல் அவள் கேட்க… ம்ம்ம்ம்… என் தம்பிக்கு உன் தங்கையை பிடிச்சிருக்கு அது தான் நூல் விட்டு பார்க்கிறான்…. அசால்டாய் அவன் தோளை குலுக்கி கொண்டான்.
என்னது…. திகைத்து நின்றுவிட்டாள்.
எதுக்கு இவ்ளோ ரியாக்ஷன்? அவனுக்கு பிடிச்சிருக்கு…. உன் தங்கைக்கும் பிடித்தால் தான் அடுத்த கட்டம் பற்றி பேசப்போறோம்… முடிவோடு தான் பேசினான்.
இது சரியா வருமா? அவள் அச்சம் கொண்டாள்.
அதெல்லாம் வரும்… அவனும் தமிழ்நாட்டு மாப்பிள்ளையாகிட்டான் பாரு….சிரித்து விட்டான். தம்பி தான் சகலை என்று ஏறத்தாழ முடிவே செய்துவிட்டான்.
காயத்ரிக்கு பிடிக்கணும், எங்கம்மா ஓகே சொல்லணும்…
ஏன் என் தம்பிக்கு என்ன குறை? கோபம் வந்துவிட்டது அவனுக்கு.
ஏன் என் தங்கச்சிக்கு என்ன குறை? அவளும் எகிறிவிட்டாள்.
எந்த குறையும் இல்லாம லட்சணமா இருக்கான்னு தான் அவனுக்கு பிடிச்சிருக்கு…. அழகாய் சிரித்தான்.
அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் அவள் மௌனித்து நிற்க… நடக்கும் போது பேசிக்கலாம் இப்போ சாமி கும்பிடுவோம் என்று அவளை திசைதிருப்பி விட்டான்.
அமைதியாய் மனதிற்கு நிறைவாய் சாமி தரிசனம் முடிந்து தீப ஆரத்தி பெற்று குருக்கள் கொடுத்த விபூதி குங்குமம் பிரசாதம் பெற்றுக் கொண்டனர்.
அனைவரும் பக்தியுடன் பிரகாரத்தை சுற்றிக் கொண்டிருந்தனர்.
கோயிலின் வரலாறு குறித்து பவித்ரா சொல்லிக் கொண்டிருக்க கேட்டுக்கொண்டே எல்லாரும் முன்னே சென்றனர்.
தேவின் நடவடிக்கையில் பதட்டத்தில் இருந்த காயத்ரி யோசனையுடன் பின் தங்கிவிட்டாள்.
அவளை பின்தொடர்ந்தவன் வேண்டுமென்றே காயத்ரியின் பாவாடையை மிதிக்க… அவள் சட்டென்று திரும்பினாள். தன் கையில் மூடி வைத்திருந்த குங்குமம் எடுத்து அவள் நெற்றியில் வைத்தவன் எதுவும் நடவாதது போல் விலகி சென்றுவிட்டான்.
தான் விரும்பியவனே தனக்கு கணவனாய் அமைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு பவித்ரா கொடி மரத்தின் ஓரம் நெய் தீபம் ஏற்ற…. ஒன்பது தீபம் அடங்கிய தட்டை தேவ் கொண்டு வந்து காயத்ரி அருகில் வைத்து ஏற்று என்பதாய் ஜாடை காட்டினான்.
அவள் எதுவும் பேசாது அமைதியாய் தீபம் ஏற்றினாள். பட்டுப் பாவாடை தாவணியில் தேவதையாய் ஜொலித்தவளை ஆசையாய் பார்த்து நின்றவன் வைத்தீஸ்வரனிடம் தன் காதல் நிறைவேற வேண்டுதல் வைத்தான்.
“——————–“
கூட்டம் இல்லாத அன்னதான கூடத்தின் ஓரமாய் அமர்ந்து தேங்காய் வாழைப்பழம் சாப்பிட்டு கதையளந்து கொண்டிருந்தனர்.
காயத்ரி கண்ணோரமாய் அவனை காண்பதும் தலைக்குனிவதுமாய் இருந்தாள். அவன் கண்டு கொள்ளாது பிரசாதமாய் வாங்கிய புளியோதரையை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
தேவ் அவ்வளவு அழகு… சுருண்ட கேசம்,கூர்மையான நாசி…எப்போதும் துறு துறுப்பாய் இருக்கும் அவன் கண்கள், ராஜ கலை….கொஞ்சம் குழந்தை முகமும் கூட…..
அழகாதான் இருக்கான்… அவள் மனம் ஜொள்ளியது.
அவள் தான் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் கண்டுகொள்ளவே இல்லை.
மணவாளன் எல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருந்தார். அவர் அனுபவத்திற்கு புரியாதா? ஆனாலும் எதுவும் கேட்கவில்லை.
தம்பியின் சேஷ்டைகளை கண்டும் காணாது அமர்ந்திருந்தான் ஹரி.
பவித்ராவிற்கு தான் பயமாய் இருந்தது. தெலுங்கு தேசத்திலிருந்து ஒரு மாப்பிள்ளையையே ஏற்க மறுத்தவர்கள் அதே தேசத்தில் இருந்து இன்னொரு மாப்பிள்ளையை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?
பூம்புகார் சென்று சேர்ந்தனர்.
பனிரெண்டு மணி வெயிலில் எங்கே விளையாட….?
விளையாட ஏதுவாக பூம்புகார் பீச் இருக்காது. கற்பாறைகள் மட்டுமே இருக்கும். மொட்டை வெயிலில் பாறையில் அமர்ந்து ரசிக்கும் ஜென் மனநிலையில் யாரும் இல்லை.
ஹரி தன் மனையாளின் கரம்கோர்த்து கடல் நீரில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.
யுவியும் சந்தோஷூம் அலையை துரத்தி விளையாடிக் கொண்டிருந்தனர். சரண்யா மணல் வீடு கட்டிக் கொண்டிருந்தாள்.
காயத்ரி கரையில் நின்றிருந்த போட்டின் அருகில் நின்று கொண்டிருந்தாள். அவள் கண்கள் அவனை தேடியது.
அவன் தூரமாய் நின்று கடலை ரசித்துக் கொண்டிருந்தான்.
கிளம்பலாமா என்ற மணவாளனின் குரலில் சுயம் பெற்ற காயத்ரிக்கு நெஞ்சம் அடைத்தது. இன்னும் சற்று நேரத்தில் கிளம்பி விடுவானே…
வேனில் ஏறும்போது அவள் கையில் ஏதோ திணித்து விட்டு அமைதியாய் சென்று அமர்ந்து கொண்டான்.
கையில் இருக்கும் பொருளை பார்த்தாள். D என்ற எழுத்து கொண்ட அழகிய கிளிஞ்சலிலான சாவிக் கொத்து.
மாயவரத்தின் பாலாஜிபவனில் மதிய உணவை முடித்துக் கொண்டனர்.
வீடு வந்து சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்ட தேவ் கிளம்பி விட்டான்.
மறுவீடு விருந்துக்கு வந்த நாத்தனாருக்கு செய்யும் சீராக நிவேதா அவள் கணவன் இருவருக்கும் ஆடை வைத்து வெற்றிலை பாக்கு பூ பழம் வைத்து கொடுத்தார் தமயந்தி.
தேவிற்கும் புது துணி வாங்கி வைத்திருந்தார் மணவாளன்.
சின்ன மாப்பிள்ளைக்கு வைத்து கொடு என்ற மணவாளன் தேவ் சரணை ஆழ்ந்து நோக்கினார் அவன் அசராது அவரை நோக்கினான். எர்ரபள்ளி குடும்பத்திற்கான திமிர் அவனுக்கும் உண்டு அல்லவா?
விமான நிலையத்திற்கு அழைத்து செல்ல கார் வந்துவிட்டது.
பை யுவி, பை சந்தோஷ்…. வரேன் அத்தம்மா… கிளம்புறோம் பின்னி என்று தமயந்தி, அஞ்சுகத்திடம் விடை பெற்றவன் அடைக்கும் நெஞ்சத்துடன் காயத்ரியை பார்த்து கண்களால் விடைபெற்றான்.
முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை உள்ளிழுத்து அணைகட்ட பெரும்பாடுபட்டாள்.
தன் காதலை வெளிப்படுத்திய நிம்மதியில் அவன் கிளம்பிவிட்டான். அவனுக்கு அவன் காதல் மீதும் அண்ணையா மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை.
“———————-“
இரண்டு நாள் மாமியார் வீட்டில் விருந்தாடிவிட்டு மணவாளன் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுவந்தனர். செந்தாமரை வீட்டிற்கு விருந்திற்கு சென்றவர்கள் விக்ரமிற்கு பெண்பார்த்து கை நனைத்து பூ வைத்து உறுதி செய்துவிட்டு வந்தனர்.
காதல் கணவனுடன் வாழ்க்கை அழகாய் செல்ல… புதுப்பொலிவுடன் பேரழகாய் ஜொலித்தாள் பவித்ரா. சும்மாவே அம்மாயியை அழகி என கொண்டாடுபவன் இப்போது இருபத்து நான்கு மணிநேரமும் அவளோடு அளவலாவி இல்லற வாழ்வின் பேரின்பத்தை சுகித்தான்.
மறுவீட்டு விருந்து முடிந்து கிளம்பி விட்டனர் புதுமண தம்பதிகள்.
இன்னும் நான்கு நாட்கள் தங்கி செல்லலாமே என்று தமயந்தி ஏக்கமாய் கேட்க… அத்தம்மா நாங்க வந்து ஒன்பது நாள் ஆகுது என்றான் புன்னகையுடன்.
மகள் தனியே பிறந்தவீட்டிற்கு வந்தால் தான் தாய்மனம் வருத்தம் கொள்ளும். மாப்பிள்ளையுடன் வந்து நின்றால் அத்தனை ஆனந்தம்.
ஹரி எவ்வளவு பிஸி என்று பவித்ரா அறிவாள். அடுத்து தாய் வீடு வர எவ்வளவு நாள் ஆகுமோ…? கண்ணீருடன் வீட்டை சுற்றி சுற்றி பார்த்தாள்.
தமயந்திக்கு தொண்டையை அடைத்தது.
பார்த்துக்கோங்க தம்பி…. உங்களை மட்டும் நம்பி வாழ வர பொண்ணு அவளுக்கு எல்லாமே நீங்க தான்… துளிர்த்த கண்ணீரை புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.
இப்போது கூட தாயிடம் பேச அவளுக்கு வார்த்தை வரவில்லை. பேசக்கூடாது என்பதல்ல…. இயல்பாய் பேச்சு வரவில்லை. மூன்றாண்டு ஆகபோகிறதே அவள் தாயுடன் பேசி…
அம்மாவோட பேசு என்று ஹரி எவ்வளவோ சொல்லி பார்த்தான். நீங்க உங்கப்பாவோட பேசறீங்களா என்றாள்.
உண்மை தான் ஹரியால் இன்னும் தந்தையை உரிமையாய் நெருங்க முடியவில்லை.
பார்ப்போம் காலம்தான் அவர்கள் மனதை மாற்றும்.
தாயிடம் தலையசைத்து விடைபெற்றவள் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்று தன் குடும்பத்தை பார்த்துக்கொள்ள சொல்லி தாய் மாமனிடம் கேட்டுக் கொண்டு தம்பி தங்கைக்கு ஆரத்தழுவி முத்தமிட்டு பிறந்த இடத்தினின்று புகுந்தவீடு புறப்பட்டாள் ஹரியின் பவி.
எர்ரபள்ளி வந்தவர்கள் ஒரு வாரம் கழிந்து தேனிலவு புறப்பட்டனர்.
எங்கே பாவா போறோம்….? நச்சரிக்க தொடங்கினாள்.
சொல்றேன்… சொல்றேன் என்றவன் ஏர்போர்ட் வந்த பிறகே கூறினான் ராஜஸ்தான் போகிறோம் என்று.
எதே ராஜஸ்தானா?
ம்ம்ம்ம்ம் எனக்கு பயந்து நீ அங்கே தானே ஓடி ஒளிந்த…. அவள் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவன் நான் தான் அப்போவே சொன்னேனே ராஜஸ்தான் தான் ஹனிமூன் ஸ்பாட்…அவள் காதோரம் முத்தமிட்டு சிரித்தான்.
இந்த உலகத்துலே ராஜஸ்தானுக்கு ஹனிமூன் போறவங்க நாமா தான் இருப்போம்…. கேலி செய்து சிரித்தாள்.
நாம என்ன சுத்தி பார்க்கவா போறோம்…? சுகமா ரூமில் ….. அவன் சொல்லி முடிக்க இயலாமல் கரம் கொண்டு அவன் வாய் பொத்தினாள்.
காதலுடன் ஜோடி கிளிகள் தேனிலவு கொண்டாடட்டும் நாம் வாழ்த்தி விடை பெறுவோம்.
————-முற்றும் ———–
ஹாய் மக்காஸ் ஒரு வாரமாய் கொஞ்சம் கொஞ்சமாய் எழுதி பெரிய எபி கொடுத்து முடித்து விட்டேன். படித்து பார்த்து கமெண்ட் பண்ணுங்க!
என்னை ஊக்கபடுத்தும் உங்கள் அன்பிற்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. Love you all 💕💞💕💞💕💞
உங்கள் அன்பு தான் எவ்வளவு கடினமான சூழலிலும் என்னை எழுத வைக்கிறது.
முடிந்தால் இந்த கதைக்கு ஒரு குட்டி எபிலாக் போடுகிறேன்.
இதுக்கு செகண்ட் பார்ட், தேவ் காயத்ரிக்கு ஒரு ஸ்டோரி… சாரி அப்படியான ஐடியா எனக்கு இல்லவே இல்லை.
அடுத்த கதையில் மீட் பண்ணுவோம். நிறை குறைகளை கமெண்டில் சொல்லுங்கள். காத்திருக்கிறேன் உங்களுக்காக…. பை பை பை செல்லம்ஸ் 💕💞💕💞💕💕💕♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️
error: Content is protected !!