Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நமக்காக💞36

வாங்கண்ணி வாங்க மகிழ்வுடன் வரவேற்றார் பாப்பாத்தி கூடவே பூமாலையும்.

சுபி எங்கே? ஆர்வமாய் அலைபாய்ந்தது நவமணியின் கண்கள்.

முதல்ல உட்காருங்க! குடிக்க நீர் கொடுத்து அமர வைத்தார்.

மாப்பிள்ளைக்கு முடியாம போயிருச்சே…. மிகவும் வருந்தினார் பூவராகன்.



Advertisement

அதெல்லாம் ஒண்ணுமில்ல சாதாரண காய்ச்சல் தான். இப்போ சரியாகிட்டான்.

சுபி இப்போ தான் ஜூஸ் குடிச்சுட்டு படுத்தா நீங்க போய் பாருங்கண்ணி இதோ வரேன் என்று சமையலறைக்குள் புகுந்தார் பாப்பாத்தி.

சுபிக்குட்டி என்ற குரலில் விலுக்கென்று கண்விழித்தாள் சுபி.

Advertisement

ம்மா….. வேகமாய் கட்டிலில் இருந்து இறங்கினாள். தாயை கண்ட சேயதன் கண்ணில் சரமாய் கண்ணீர் மழை.

Advertisement

ஐயோ பார்த்துடா குட்டி….மெல்ல மெல்ல! பூப்போல் மகளை தோளில் சாய்த்து முத்தமிட்டு கண்ணீரை துடைத்து விட்டார்.

ம்ம்ம்மா…. அவளுக்கு  அழைக்கும் போதே கண்கள் கசிந்தது. இன்று அவள் அம்மாவாகிவிட்டாளே….

அம்மாக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? நெகிழ்வுடன் கன்னம் பற்றி முத்தமிட்டார்.

Advertisement

அத்தை சொன்னாங்களா?

ம்ம்ம்ம் என்றார் ஆமோதிப்பாய்.

இன்னும் ஹாஸ்பிடல் கூட போகலம்மா அது தான் உங்களுக்கு சொல்லலை தப்பா நினைக்காதீங்க.

என் பொண்ணு இவ்வளவு பக்குவமா பேசுவாளா சிரித்து விட்டார் நவமணி.

வெளியில் பேச்சு குரல் கேட்டு மன்னர் எழுந்து வந்தான்.

வாங்க மாமா என்று மரியாதையுடன் வரவேற்று எதிர் நாற்காலியில் அமர்ந்தான்.

இப்போ எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன் இன்னும் மூனு நாளையில் டூட்டியில் ஜாயின் பண்ணிடுவேன்.

வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க? சுகன்யா நல்லா இருக்காங்களா?

ம்ம்ம்ம்ம் அவங்க சென்னைக்கு போயிட்டாங்க. சுகன்யாக்கு துணைக்கு அவங்க அம்மா போய் இருக்காங்க.

பேச்சின் நடுவே பாப்பாத்தி காபி கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார்.

அத்தை எனக்கு கொஞ்சம் காபி கெஞ்சுதலாய் கேட்டாள் சுபி.

பால் கொண்டு வரவா?அவர் சிரிப்புடன் கேட்டார்.

வேண்டாம் காபி தான் வேணும்!

உன் புருஷனை கொண்டு வந்து கொடுக்க சொல்றேன்….. செல்லமாய் மிரட்டி சிரித்தார்.

போங்கத்தை எப்போ பார்த்தாலும் பாலு ஜூஸ்ன்னு கடுப்படிக்கிறீங்க. நல்லா ஸ்ட்ராங்கா காபி குடிக்கணும் போல இருக்கு.

காபி தானே குழந்தை பிறந்த பிறகு எவ்வளவு வேணும்னாலும் குடி.

நீ அம்மா கூட பேசிட்டு இரு நான் சமையலை முடிச்சிட்டு வரேன்.

“—————————“

குட்டிமா நல்லா பார்த்துத்துகிறாங்களாடா? மடியில் படுத்திருக்கும் மகளின் தலைகோதினார் நவமணி.

எனக்கு என்னம்மா குறை? தலைமாட்டில் பெரிய டப்பாவில் கொட்டி வைத்திருக்கும் பாதாம் பிஸ்தாவை காட்டினாள். கைக்கெட்டும் தூரத்தில் ஆப்பிள் வாழைப்பழம் என்று பழம் வகையறாக்கள் அடுக்கப்பட்டு இருந்தது.

இன்னைக்கு ஒருவாரமா என்னை தரையில் நடக்க விடவே இல்லை.

நான் வாமிட் பண்ணிட்டேன் முகம் சுழிக்காமல் அத்தை கிளீன் பண்ணாங்கம்மா என்று சொல்லும் போதே அவளுக்கு கண்கள் கலங்கியது.

எனக்கு என்ன வேணும் என்று கேட்டு கேட்டு சமைக்கிறாங்க! என்னோட சேர்ந்து அத்தை வாக்கிங் பண்றாங்க.

மாமா எனக்காக மாதுளம் பழம் உரித்து ஜூஸ் போடுறார். சொல்லும்போதே அவ்வளவு பெருமை அவளுக்கு.

பெற்றவராக வயிறும் மனமும் குளிர்ந்து போனது நவமணிக்கு.

அண்ணி தனியா சமையல் பண்றாங்க நான் போய் என்ன ஏதுன்னு பார்க்கிறேன் நீ கொஞ்ச நேரம் படு என்றவர் வெளியில் போய்விட்டார்.

“—————————–“

சுபிக்கு போன் அழைப்பு. வேறு யார் அவளின் கண்ணாளன் தான்.

சுப்பு…அத்தை மாமா கூட ஹாஸ்பிடல் போய் வரியா?

இப்போ அவசரமா ஹாஸ்பிடல் போகணும்னு நான் உங்ககிட்ட கேட்டேனா?

என்னதான் உனக்கு பிடிவாதமோ?சலித்துக் கொண்டான்.

ஆமா பிடிவாதம் தான்! என் புருஷன் கூட போய் தான் டெஸ்ட் பார்ப்பேன். இன்னும் எப்படி ஓப்பனா சொல்லணும்னு எதிர்பார்க்கிறிங்க?

எனக்கென்று ஆசை இருக்க கூடாதா….? அவங்க கூட போ இவங்க கூட போனு சொல்றதுக்கு என்ன மயிருக்கு பிள்ளை பெத்துக்க அலையறீங்க ? பொங்கிவிட்டாள்.

அடியேய்…… வாய் ரொம்ப நீளுதுடி.

ஆமா நீளுது பக்கத்தில் இருந்தா கையும் நீளும்! உங்க மரமண்டைக்கு ஒரு புண்ணாக்கும் புரியல. இப்படி தான் பேச வேண்டியிருக்கு.

அவளின் ஆசையும்,தவிப்பும் அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

மாமா உன்னை ஊருக்கு கூட்டிட்டு போற பிளான்ல இருக்காருன்னு நினைக்கிறேன்.

என்னது என்றவள் நெஞ்சடைத்து அமர்ந்து விட்டாள்.

நீங்க என்ன சொன்னீங்க? கடுகடுப்புடன் கேட்டாள்.

நான் என்ன சொல்ல?

டெலிவரி வரைக்கும் என் பொண்டாட்டி அங்கேயே இருக்கட்டும்னு சொல்ல வேண்டியது தானே…..?

இந்த ஐடியா கூட நல்லாத்தான் இருக்கு. என்னதான் மாமியார் நல்லா பார்த்துக்கிட்டாலும் இந்த மாதிரி நேரத்துல அம்மா கூட இருக்கத்தானே பொண்ணுங்க விரும்புவாங்க.

டேஷ்…… வாயில் வந்த வார்த்தையில் திட்டி தீர்த்தாள்.

என்னடி பக்கா லோக்கலா பேசுற? சிரித்து விட்டான்.

இன்னும் பேசுவேன்…..சரியான மாக்கானை கட்டிக்கிட்டு அவஸ்தை படுறேன்…. அவள் பாட்டிற்கு புலம்பி தள்ளினாள்.

நோ பேட் வேர்ட்ஸ்…. அவன் ஆஃப் பண்ணிவிட்டான்.

“————————–“

பொரியலுக்கு உருளைக்கிழங்கை உரித்துக் கொண்டு இருந்தார் நவமணி.

ரசத்திற்கு புளியோடு தக்காளியை சேர்த்து கரைத்துக் கொண்டிருந்தார் பாப்பாத்தி.

அண்ணி நான் சுபியை கூட்டிட்டு போய் பத்து நாள் வைத்திருந்து அனுப்பவா? ஆசையாய் கேட்டார்.

அவ புருஷன் சம்மதித்தால் கூட்டிட்டு போங்க என்று வாய்விட்டு சிரித்து விட்டார் பாப்பாத்தி.

என்ன சொல்றீங்க? புரியாமல் பார்த்தார் நவமணி.

அவனுக்கு காய்ச்சல்ன்னு பின் வீட்டில் இருக்கான்.இன்னும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து நேரில் கூட பேசிக்கல. பாவம் போன்ல பேசி நேரத்தை ஓட்டிக்கிட்டு இருக்குதுங்க…..! எப்போடா பொண்டாட்டியை பார்க்கிறது என்று அவன் தவித்துக் கிடக்கிறான். அந்தப் பொண்ணு கண்ணுல அவ்வளவு ஏக்கம் மண்டி கிடக்கு…. இந்த லட்சணத்துல நீங்க கூப்பிட்டு அவன் அனுப்பிட்டாலும்….

பெரியவர்கள் இருவரும் அர்த்தத்துடன் சிரித்துக் கொண்டனர்.

ஹாஸ்பிடலுக்கு நான் கூப்பிட்டேன் உங்க பொண்ணு வரலை…. புருஷன் கூடத்தான் போகணும்னு அவளுக்கு ஆசை.

அதுவும் நியாயமான ஆசை தானே அண்ணி என்றார் நவமணி.

அனைவரும் சேர்ந்து மதிய உணவை உண்டனர்.

சம்மந்தி நாங்க சுபியை கூட்டிட்டு போய் பத்து நாள் வைத்திருந்து அனுப்பவா? பூவராகன் கேட்க பக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் சுபி.

சிரித்துக் கொண்டே சாப்பிட்டான் மன்னர்.

இந்த ஆளுக்கு எவ்வளவு எகத்தாளம் பாரு! அழுகையும் கோபமுமாய் குனிந்து கொண்டாள்.

அது இன்னைக்கு நாள் நல்லா இல்லை…. இன்னும் ஒரு மாசம் போகட்டும் வந்து கூட்டிட்டு போகலாம் என்று நாசுக்காக பேசினார் நவமணி.

இப்போதும் சிரிப்பு தான் மன்னரிடம்.

மாலை நேரம்…..நாங்க கிளம்புகிறோம் என்றார் பூவராகன்.

நல்லா இருக்கே இந்த கதை. மகளைப் பார்க்க வந்துட்டு அவசரமா ஒருவேளை சாப்பிட்டு கிளம்பிடுவீங்களா? பாப்பாத்தி உரிமையாய் சண்டை போட்டார்.

மாமா என்ன அவசரம் ரெண்டு நாள் தங்கிட்டு போகலாமே என்றான் மன்னர்.

இல்ல மாப்பிள்ளை பருத்திக்கு மருந்து அடிக்கணும்.

அப்பா, அம்மா என் கூட ரெண்டு நாள் இருக்கட்டுமே ப்ளீஸ் என்றாள் சுபி கெஞ்சுதலுடன்.

பூவராகவன் யோசனையாய் மனைவியை பார்க்க சம்மதமாய் தலையசைத்தார் நவமணி.

சரி மணி அப்போ நான் கிளம்புறேன்…. மாப்பிள்ளை இரண்டு நாள் கழிச்சு இவளை பஸ் ஏத்தி அனுப்பவிடுங்க என்று புறப்பட்டார் பூவராகன்.

சசி வந்திருந்தான் மன்னரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல.

மீண்டும் ஒரு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான் மன்னர்.

100% காய்ச்சல் சரியாகிவிட்டது என்றாலும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினார் மருத்துவர்.

“——————————-“

இரவு உணவுக்குப் பின் ஒரு வித நெருடலுடனே தான் அறைக்குள் சென்றான் மன்னர்.

அவளே பலஹீனமாக இருக்கிறாள் ஒருவேளை அவளுக்கு காய்ச்சல் தொற்றிக் கொண்டாள் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்குமோ என்ற பயம் இன்னும் இருக்கத்தான் செய்தது.

மெல்ல கட்டிலுக்கு அருகில் வந்து அதிராமல் அருகில் அமர்ந்து சுப்பு என்றான் வழக்கமான காதலை தேக்கிய குரலுடன்.

அவள் பேசவே இல்லை.

சுப்பு குட்டிக்கு என்னை கட்டிக்கணும்னு தோணலையா? கொஞ்சி கெஞ்சி கிசுகிசுத்தான்.

எனக்கு தோணலை என்றாள் வீராப்பாய்.

நிஜமா?நம்பிக்கை இல்லாமல் சிரிப்புடன் கேட்டான்.

ஆமா…. அவன் புறம் திரும்பாமலே பதில் கொடுத்தாள்.

சரி அப்போ நான் பின் வீட்டிலே போய் படுத்துகிறேன்.

போய்யா போய் தொலை இங்கே யாரும் உனக்காக வீங்கி கிடைக்கலை…. சீறிவிட்டாள்.

சுப்பு குட்டிக்கு என்ன கோபம்? வேண்டுமென்றே அவள் தலை முட்டினான்.

என்னை எங்க அம்மா வீட்டுக்கு பெட்டியை கட்ட சொன்ன ஆளு தானே நீ? மூச்சிறைத்தது அவளுக்கு.

அடி அசடு! என் பொண்டாட்டி இல்லாம என்னால் இருக்க முடியாதுனு நான் எங்கம்மாட்ட சொல்லி அவங்க உங்கம்மாட்ட சொல்லி தான் இந்த பிளானை ஸ்டாப் பண்ணினாங்க.

நிஜமாவா? ஆச்சரியமாய் எழுந்து அமர்ந்தாள்.

அவன் பதில் பேசாது விரைப்பாய் அமர்ந்து இருக்கவே ஆசையாய் கட்டிக் கொண்டாள்.

அவள் அணைப்பின் தீவிரத்தில் புரிந்து கொண்டான் அவள் தன்னை எவ்வளவு தேடுகிறாள் என்று.

எதுவும் பேச தோன்றவில்லை அவனுக்கு…. அவன் குழந்தையை சுமந்திருக்கும் அவன் மனைவி அவன் மடியில் பாதுகாப்பாய் இருக்கும் இந்த கனத்தை அவன் அணு அணுவாய் ரசித்தான்.

சூல் கொண்டிருக்கும் மணி வயிற்றை மெல்ல நீவினான்.

ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சுப்பு. நீயும் நானுமா இருந்தோம் இனி நாமாக போகிறோம்.

தேங்க்யூ செல்லம்மா மீண்டும் ஆசையாய் நெற்றியில் முட்டினான்.

அரிய சாதனையை செய்து விட்ட சிலிர்ப்பு இருவருக்கும். பிள்ளை பெற்றுக் கொள்வது சாதனையா என்று கேட்டால் இன்றைய காலகட்டத்தில் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். நூற்றில் 75% தம்பதிகளுக்கு உடனே கருத்தரிக்கும் வாய்ப்பு அமைவதில்லை.

நாசுக்காய் பட்டும் படாமலும் மனைவியின் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தான்.

என்ன போலீஸ்கார் அவ்வளவு தானா என்பது போல் நக்கலாய் பார்த்து விஷமமாய் சிரித்தாள்.

எனக்கு 100% உடம்பு சரியாகிடுச்சுன்னு  சொல்ல முடியாது….. இன்னும் ஒரு வாரத்துக்கு கவனமா இருக்கிறது நல்லது.

உன்னை விட்டு தள்ளி இருக்கிறதை விட உன் கூட ஒரே ரூமில் இருக்கலாமேன்னு வந்துட்டேன். நான் கீழே படுத்துகிறேன். எனக்கு இருமல் தும்மல் வந்து உனக்கு காய்ச்சல் தொத்திட்டா ரொம்ப கஷ்டம்.

சரி என்றாள் வறண்ட குரலில்.

உன் கூட இதே ரூமில் தான் இருக்க போறேன் அதுக்கு ஏன் இவ்வளவு வருத்தப்படுற?

அதுக்கு நீங்க பின் வீட்டிலே இருந்திருக்கலாம்…. முகம் சுணங்கினாள்.

அவளின் கர்ப்பகால ஆசை அவனுக்கு மட்டும் புரியவில்லையா என்ன?

ஒரு வாரம் பொறுத்துக்கோ செல்லம்மா. அப்புறம் மாமா மடி மெத்தையடி தான்…. அவள் தலைக்கோதி விட்டு கீழே படுக்கை விரித்தான்.

“—————————“

சுப்பு நீ மகாபாரத கதை படிச்சு இருக்கியா…? இரு கையையும் கோர்த்து தலையணையில் வைத்துக்கொண்டு நீட்டி படுத்துக் கொண்டான்.

ஏன்? புரியாமல் பார்த்தாள்.

அம்மா வயிற்றில் இருக்கும் போதே அபிமன்யு சக்கர வியூகம் பற்றி தெரிந்து வைத்திருந்தானாம்.

சரி….. அவனை கேள்வியாய் பார்த்தாள்.

அதே மாதிரி தான் நம்ம பாப்பாவும். நேர்மறையா சிந்திக்கணும்,நல்ல புத்தகங்கள் படிக்கணும்,நல்ல கதைகளை கேட்கணும் ! நாம் என்ன நினைக்கிறோமோ அதே மாதிரி தான் வயிற்றில் இருக்கும் குழந்தை வளரும்.

கர்ப்ப காலத்தில் தேவையற்ற பயம் வருமாம் அதுக்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டாள் இந்த போலீஸ்காரன் பொண்டாட்டின்னு நான் நம்புறேன்!  ஜாடையாய் சொல்லி வைத்தான் யாராவது ஏதாவது பேசி அவள் மனதை குழப்பி விட போகிறார்கள் என்ற பயம்.

ம்ம்ம்ம்ம் என்றாள் வெள்ளையான சிரிப்புடன்.

விட்டா வயிற்றில் இருக்கும் குழந்தையை இப்போதே கலெக்டர் ஆக்கிடுவீங்க போல…? கேலியாய் சிரித்தாள்.

என் குழந்தைக்கு எது விருப்பமோ அதுவா ஆக்கிடுவேன் என்றான் அலட்டல் இல்லாமல்.

இப்போ என் பயமெல்லாம் என்ன தெரியுமா? நீயே நிறைய நேரம் குழந்தை மாதிரி நடந்துக்கிற இப்போ உன் வயிற்றில் ஒரு குழந்தை…. லேசான வருத்தம் எட்டிப் பார்த்தது அவன் பேச்சில்.

“சாரி என்றாள் சங்கடத்துடன்”. பின்னே இதுவரை அவள் நடந்து கொண்டது புரிதல் இல்லாத குழந்தைத்தனமாக தானே…

இனிமே நீங்க சொல்ற மாதிரி நடந்துக்கிறேன்…. உணர்ந்து தான் பேசினாள்.

நான் சொல்ற மாதிரி எல்லாம் நீ நடந்துக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சரி தவறு எல்லாம் கொஞ்சம் யோசித்து புரிந்து நடந்தால் போதும். நான் உன் புருஷன்,ஆம்பள நான் முடிவு எடுத்தால் 100 சதவிகிதம் சரியா தான் இருக்கும் என்பதெல்லாம் இல்லை.

சரி தவறு எல்லாம் ஆளைப் பொறுத்து சூழ்நிலை பொறுத்து மாறும். முடிவு எடுக்கும் போது இரண்டு பேரும் சேர்ந்து எடுப்போம். அதன் சாதக பாதகங்களை ஈகோ இல்லாமல் ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுவோம்.

ம்ம்ம்ம்ம்ம் என்றாள்.

சரி நான் போய் பால் எடுத்துட்டு வரேன் குடிச்சிட்டு தூங்கு!

பாலா? அவள் முகம் அஷ்ட கோணலாய் மாற அவன் வாய்விட்டு சிரித்து விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!