Skip to content
Post Views: 2,814
ஆறு வருடங்கள் பிறகு…
“மாமி பாட்டி வீட்டுக்கு போறேன்” வாசலில் நின்று குரல் கொடுத்த பூர்வி வாயில் கதவினை திறக்க,
“அக்கா நானு” அவள் பின்னே வால் பிடித்து ஓடி வந்தான் பூர்வி சகோதரன், சக்தி இதயன்.
சகோதரனை பார்த்து பெருமூச்சு விட்ட பூர்வி, “அம்மா… இவன் வந்தா என்னால துருவ் அண்ணா கூட விளையாட முடியாது” வாசலில் நின்றே மீண்டும் கத்த, ஆரபிக்கு பதில் பார்த்திபன் தான் வந்து நின்றான்.
Advertisement
“சக்தி வாடா அப்பாவும் நீயும் விளையாடலாம்” மகளை ஓரக்கண்ணால் பார்த்தவாறே பார்த்திபன் மகனை அழைக்க ஓடி வந்த சிறியவன் நின்று சகோதரியை பார்த்து பின்பக்கத்தை ஆட்டிவிட்டு ஓட, பார்த்திபன் வாய் விட்டு சத்தமாய் சிரித்தான்.
“அப்பா…” பெரியவள் சிணுங்கினாள்.
“என்னடா?” என்றான் பார்த்திபன் ஒன்றும் தெரியாதது போல்.
Advertisement
“நான் விளையாட கூப்டப்போ மாட்டேன்னு சொன்னிங்க”
Advertisement
“நான் மாட்டேன்னு சொல்லலடா… அப்பறம் வர்றேன்னு சொன்னேன். நீ இப்போ தம்பிய தனியா விட்டு போனா அவன் அழுவான், அம்மாக்கும் ஒடம்பு சரியில்ல அப்போ அப்பா தானே பாத்துக்கணும்” என்றான் மகனை தன்னை நோக்கி வர சைகையில் அழைத்து.
தன்னுடைய தவறை உடனே புரிந்துகொண்ட பூர்வி, “சாரிப்பா” என்றாள் தந்தையை அணைத்து.
அவள் சிகையை மெதுவாய் வருடியவன், “தம்பி சின்ன பையன் பூர்விம்மா, உன் கூட விளையாடணும்னு ஆசையா உன்ன நம்பி வர்றான், அப்போ இப்படியா விட்டுட்டு போறது?”
Advertisement
சகோதரனை பூர்வி பார்க்க, அந்த குட்டி சேட்டைக்காரன் அக்காவை பார்த்து பெரிதாய் பற்கள் தெரிய சிரித்தான், தந்தை தன்னை பற்றி தான் பேசுவதை அறிந்து.
“நம்மள நம்பி வர்றவங்கள எப்பவும் கை விட கூடாதுடா”
பார்த்திபனை பார்த்து தலை அசைத்த பெரியவள் சகோதரன் கை பிடித்து வெளியே நடந்தவாறே, “அப்பா நாங்க டூ ஹவர்ஸ்ல வந்துடுவோம். அதுக்குள்ள குக்கிங் முடிச்சிடனும் சொல்லிட்டேன்”
“சரிங்க இளவரசி”
“சக்தி உனக்கு என்ன வேணும்னும் அப்பாகிட்ட சொல்லு”
அக்கா கூறியதை கேட்டு தந்தையிடம் திரும்பி நின்ற சக்தி இதயன், “டாடி எனக்கு பண்ணீர் தந்தூரி வேணும்” என்றான்.
“பண்ணீர்க்கு நான் எங்கடா போவேன்?”
“நம்மள நம்பி ஒருத்தர் கேக்குறப்போ அதை செய்றது தானே ப்பா நல்லது…” சகோதரன் கேட்பது பெரியவாளுக்கு அவ்வளவு பிடித்தமான இருக்க தந்தையின் வார்த்தையையே அவனிடம் திருப்பி ஓடிவிட்டாள் சகோதரன் கை பிடித்து.
சிறியவர்கள் இருவரும் வீட்டை விட்டு செல்லவும் வாயிலில் வந்து நின்றான், அவர்கள் அன்னை வீட்டினை பாதுகாப்பாக அடைந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்ய.
தூரம் இல்லை, இரண்டு இல்லம் தாண்டி தான் அன்னை வீடு. ஒரு வருடம் முன்பு தான் அதே தெருவில் வந்த ஒரு வீட்டை வாங்கி புதுப்பித்து குடி வந்தனர்.
வசந்த், பார்த்திபன் சகஜமாக பேசி சிரித்து விளையாடினாலும் வீட்டில் உள்ள அனைவர் அழைத்தும் பார்த்திபன் பிடிவாதமாக மீண்டும் அதே வீட்டிற்கு வர மாட்டேன் என்றுவிட்டான்.
வித்யா வசந்த் தான் அதிகம் பேசி பார்த்தது. அவர்களுக்காகவே அதே தெருவில் வந்த வீட்டை வாங்கிவிட்டான் பார்த்திபன்.
உடன் இல்லை என்றாலும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பார்த்திபன் குடும்பத்தை பார்ப்பதே அவர்களுக்கு போதுமானதாக இருக்க இப்பொழுது அடிக்கடி இந்த விஜயம் சிறியவர்கள் பெரியவர்கள் என மாறி மாறி நடக்க தான் செய்யும்.
வீட்டை பூட்டி மகன் கேட்ட பண்ணீரை வாங்கி வந்து பார்த்திபன் சமைத்துக்கொண்டிருந்த நேரம் அழைப்பு மணியே இல்லாமல் வாகனத்தின் ஒலியை வைத்தே விஷ்ணு வந்திருப்பதை கூற, தங்கள் அறை கதவை மெதுவாக மூடி வெளியே வந்தான்.
அனாயா விஷ்ணு மட்டுமே வந்திருக்க அவர்கள் மகனை காணாமல், “எழில்வானன் எங்கடா?”
“அவனை இன்பன் வாசல்ல வச்சே இழுத்துட்டு போய்ட்டான்டா” என்றான் நாற்காலியில் அமர்ந்து.
“ஜூஸ் குடிக்கிரியாம்மா?” பார்த்திபன் அனாயாவிடம் கேட்டான்.
“ஐயோ அண்ணா இப்போ தான் அத்தை ஜூஸ் குடிக்க வச்சு அனுப்புனாங்க. ப்ளீஸ் மறுபடியும் ஜூஸ் வேணாம். வேணும்னா ஏதாவது காரமா மொறு மொறுனு ஏதாவது குடுங்க”
விஷ்ணு மனைவியை முறைக்க, “எதுக்குடா முறைக்கிற? பிள்ளைக்கு சாப்பாடு ஒழுங்கா போடலையா?”
அனாயா இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறாள். போன வாரம் தான் சென்று உறுதி செய்விட்டு வந்தனர். அதன்பொருட்டே அவளுக்கு இந்த பலத்தமான கவனிப்பு.
“வாய திறந்தாலே அன்ஹெல்த்தி புட்ஸ் தான் கேக்குறா… அதுக்கு தான் வாயவே திறக்க விடாம வச்சிருக்கேன்” என்றான் விஷ்ணுவும்.
“நீ இரும்மா, உனக்கு ருசியா நான் சமைச்சு தர்றேன் ஆனா நல்லதா” என்றவன் விஷ்ணுவையும் இழுத்து சமையலறை செல்ல அனாயா ஆரபி இருக்கும் இடம் தேடி சென்றாள்.
நேற்று இரவிலிருந்து காய்ச்சலின் பிடியில் தவிக்கும் ஆரபியை பார்த்திபன் மெத்தையை விட்டு இறங்க விடவில்லை. காலை நண்பனுக்கு அழைத்து அவனையே கடையை பார்த்துக்கொள்ள கூறும் பொழுது தான் ஆரபி நிலையை கூறியிருந்தான் அதனாலே மதியம் மனைவி மகனோடு வந்துவிட்டான் விஷ்ணு.
“அக்கா…”
அசதியில் படுத்திருந்த ஆரபி அனாயா குரலில் எழுந்துவிட்டாள், “அனாயா வாம்மா, என்ன பேபி எப்படி இருக்கு”
“எல்லாம் குட் தான்க்கா, நீங்க எப்படி இருக்கீங்க? ஹாஸ்பிடல் போனீங்களா?”
“சாதாரண பீவர் தான், இதுக்காக இந்த நேரத்துல வந்திங்களா”
“அதெல்லாம் ஒன்னுமில்ல க்கா, இவருக்கு அண்ணாவை தினமும் பாத்துடனும்” கேலியாக கூறி சிரிக்க ஆரபியும் ஆமோதிப்பாய் தலை அசைத்தாள்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வசந்த், கமலவல்லி, பூஜா, வித்யா அனைவரும் சிரியவர்களோடு வந்துவிட்டனர் வீட்டிற்கு.
“ஏன்டா ஆரபிக்கு ஒடம்பு சரியில்லைன்னு சொல்லவே இல்ல”
படையெடுத்து வந்த குரல் எல்லாம் அவர்கள் அறையை நோக்கி வருவதை உணர்ந்த அனாயா, “அக்கா பூமி அதுறுது அநேகமா எல்லாரும் இங்க தான் வர்றாங்க போல” சொல்லி முடிக்கவும் அனைவரும் உள்ளே இருந்தனர்.
வந்தவர்கள் பார்த்திபனை தான் திட்டி தீர்த்துவிட்டனர், “வீட்டை விட்டு தான் வந்துட்டன்னு விட்டா எங்களை மொத்தமா ஒதுக்கி வைக்க நினைச்சிடல பார்த்திபா?”
அடிக்கடி இந்த வார்த்தை அன்னையிடமிருந்து வரவே தலை ஆட்டிக்கொண்டான், “ம்மா…” என்று.
“போடா, சரி வீட்டுல எதுவும் செய்யா வேணாம். நான் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்”
“ம்மா நான் சமைக்க ஆரமிச்சிட்டேன்”
“சரிங்க தம்பி நாங்க உங்களுக்கு தேவையில்லை தான?”
கமலாவல்லியும் அத்தையோடு இணைந்துகொள்ள, “அண்ணி நீங்களுமா?” தவிப்போடு பார்த்திபன் கேட்க விஷ்ணு சிரித்துவிட்டான்.
“இருந்தாலும் உங்க பாசத்தை பாத்து எனக்கு புல்லரிக்கிதுடா” என்றான் கேலியாக.
நண்பனை முறைத்தவன் அன்னையிடம், “ம்மா இணைக்கு எல்லாருக்கும் சமையல் இங்கையே செஞ்சிடலாம்”
அவன் கொடுத்த யோசனையின்படி அன்று மதிய உணவு பார்த்திபன் வீட்டிலே தயாரானது. இது போல் கூட்டு சமையல் நடக்க வாய்ப்புள்ளதென்று யூகித்து தான் பார்த்திபன் சமையலறையை சற்று பெரிதாகவே மாற்றியிருந்தான்.
அது பெண்களுக்கு மிகவும் வசதியாகி போனது. தடபுடலாக சைவத்தில் உணவு ஒரு பக்கம் நடைபெற, பார்த்திபன் பிள்ளைகளுக்கெனவே பண்ணீரில் தந்தூரி செய்தான் வீட்டில் பின்னிருந்த இடத்தில்.
அவன் செய்வதை பார்க்கவே ஒரு குட்டி கூட்டம் அவனை சுற்றி கூடி நின்றுவிட்டது.
“சித்தப்பா எனக்கு”
“மாமா நான் செய்யவா?”
“அப்பா ஆஆஆ… கை சுட்டுடுச்சு” ஒவ்வொரு வாண்டும் தன்னுடைய பங்கிற்கு பார்த்திபனை பாடாய் படுத்திவிட்டது.
அவன் எதற்கும் முகத்தை தூக்காமல் சிரித்து பேசியே சமாளித்துவிட்டான். குழந்தைகளை கவனித்துவிட்டு மனைவிக்கு கஞ்சி வைக்க செல்ல அவன் அன்னையே அந்த பொறுமை கவனித்துக்கொண்டார்.
மதிய உணவு வேளையில் வீடே ஜே ஜேவென இருந்தது. குழந்தைகள் ஒரு அறையில் உறங்க சென்றுவிட பெரியவர்கள் சில நேரம் பேசிவிட்டு கலைந்தனர்.
நிறைவாக இருந்தது பார்த்திபனுக்கு. இந்த தனிமை கூட பல நேரம் உறவை பலப்படுத்த தேவை தான் போல. இன்றும் தனியாக வந்த தன்னுடைய முடிவை எண்ணி நிம்மதிக்கொண்டான்.
தொழிலும் அபார வளர்ச்சி தான். பாதி கடனை நண்பர்கள் அடைத்துவிட்டனர். உள்ளூரில் மட்டுமில்லாது வெளியூரிலிருந்து பல திருமண அலங்கார வேலைகள் வந்து குவிந்தன.
குடவுனில் ஆடிட்டர் அலுவலகத்தை மாதிரிடலாம் என நினைத்திருக்க, அதனை முழுதாய் மாற்றி வரவே இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது.
இப்பொழுது கோவையில் அதிக அலைச்சல் இல்லை என்றாலும் முகூர்த்த நாட்களில் வெளியூருக்கு இருவரும் மாறி மாறி சென்று பார்த்து வர தான் வேண்டி இருந்தது.
ஸ்ரீனியை பார்த்திபன் அவன் தந்தையோடு போகும்படி அனுப்பிவிட்டான். ராஜ்கோபால் இன்னும் வயது முற்பதிவு தட்டாவிடினும், அவரோடு அவரது தொழிலை கவனிப்பது தான் அவனுக்கு ஆரோக்கியம் என கருதி தான் அனுப்பினான்.
நினைத்தது போலவே நிறைய நுணுக்கங்கள் அனுசரணைகள் இருந்தது.
அதை எல்லாம் கற்று இப்பொழுது தந்தைக்கு ஓய்வு கொடுத்து இவனே பாதி நேரம் பார்த்துக்கொள்கிறேன்.
ஸ்ரீனிக்கும் இரண்டு வருடம் முன்பு தான் திருமணம் முடிந்து ஒரு மகள் இருக்கிறாள்.
இன்று மாலை ராஜ் கோபால் குடும்பத்தினர் வந்து மகளை பார்த்துவிட்டு சென்றனர். இரவு குழந்தைகளை உறங்க வைத்து வீட்டை பூட்டி வரவே பார்த்திபனுக்கு பத்து மணிக்கு மேல் ஆனது.
சோர்ந்து தான் போய்விட்டான்.
தங்களது படுக்கைக்கு அருகே இருந்த படுக்கையில் உறங்கும் பிள்ளைகளுக்கு நெற்றி அவர்களை சுற்றி கொசு, எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு முத்தம் கொடுத்து, மனைவி நெற்றியிலும் இதழ் பதித்து மெத்தையில் அமர்ந்து விஷ்ணு கொடுத்த கணக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒரு மணி நேரமிருக்கும், அவன் கையிலிருந்த காகிதங்களை எல்லாம் தூக்கி ஓரம் வைத்து அவன் மடியில் தலை சாய்த்து ஆரபி படுக்க, மடிக்கணினியை அணைத்துவிட்டு மனைவியோடு அவளை அணைத்தவாறே படுத்துகொண்டான் பார்த்திபன்.
சிரம் தாழ்த்தி மனைவியை பார்க்க விழிகள் திறந்திருந்தது, சோர்வில். “தூங்கலையா ஆராம்மா?”
“தூக்கம் வரலைனா ரொம்ப நேரம் தூங்கிட்டேனே, நோக்கு?”
“இல்ல மாமி, நம்ம ஆபீஸ் ஆடிட் முடிக்கணும், அதான் கணக்கு பாத்துட்டு இருந்தேன்” என்றான் பெண்ணவள் தலை கோதி.
“ஓ… இன்னும் ரொம்ப கடன் இருக்கா பார்த்தி?”
“ரொம்ப இல்ல, வெளிய தான் எல்லாம் முடிச்சாச்சே, இன்னும் பேங்க் லோன் மட்டும் இருக்கு. அஞ்சு வருடமாவது ஆகும், அது முடிஞ்சதும் இன்னொரு பிஸ்னஸ் பண்ணலாம்னு யோசிக்கிறோம்” என்றான்.
“இன்னும் ஒண்ணா, நோக்கு போர் அடிக்காதா? சும்மாவா சொன்னா பணம் பாத்துட்டா ஆசை குறையாதுன்னு” முகைப்பு தான் மனைவிக்கு கணவனிடம்.
“நீ ஏண்டி அப்டி நினைக்கிற, உன் ஆம்படையால் ஓடி ஓடி உழைக்கிறேன்னு நினைச்சுக்கோ. அடுத்தவன் சொத்தை எடுத்தா தான் தப்பு” என்றான்.
ஆரபி அமைதியாகிவிட அவள் முகம் பிடித்து, “என்ன யோசனை என் மாமிக்கு?” கேட்டான்.
தலை அசைத்தவள், “அனாயா தாத்தா பத்தி யோசிச்சேன். வயசு ஐம்பது மேல ஆச்சே, எத்தனை நாள் தான் படுத்த படுக்கையாவே இருப்பா? இவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சிண்டு ஒரு முக்தி கிடைக்க மாட்டேன்னு அல்லாடுதே அவா உயிர்”
“செஞ்ச பாவம் அப்டி” என்றான் சிறிதும் குற்றவுணர்ச்சி இல்லாமல் நிர்மலமான முகத்தோடு.
இதில் தவிப்பது அனாயாவின் அன்னை மட்டும் தான். மூன்று வருடத்திற்கு முன்பு அனாயாவின் தந்தை மாரடைப்பில் இறந்து போக தாமோதரனின் மொத்த பொறுப்பும் இவரிடம் வந்துவிட்டது.
அனாயா எந்த நிலையிலும் அந்த வீட்டிற்கு செல்லவே முடியாது என்றுவிட்டு, ஆரிவ் சகோதரியை பின்பற்றி தானும் அங்கு வரமாட்டேன் என்றுவிட்டான்.
படிப்பு முடிந்து கோவை அரசு மருத்துவமனையில் இப்பொழுது அவன் வேலை தொடர அன்னையை தனியாக ஒரு வீடு பார்த்து தன்னோட வைத்துக்கொண்டான்.
ஆனாலும் தினமும் அவர் சென்று தந்தையை பார்த்து அவருக்கு தேவையானதை செய்து சென்றுவிடுவார். பிள்ளைகள் இருவரும் இதனை தடுக்கவே இல்லை.
தாமோதரனின் தொழில்களும் மொத்தமாய் மூடப்பட்டுவிட்டது கடன் தொல்லைகளால், மற்ற சிறு சொத்துகள் இருந்ததை அவர் மருமகனின் லீலைகள் மூடிவிட்டது.
மீதமிருப்பது சில லட்சம் பணம், மற்றும் அவர்கள் வீடு மட்டுமே. அவரை கணிப்பதற்கு ஒரு ஆள், மற்றும் வீட்டை பராமரிக்க இரண்டு ஆட்கள் அவ்வளவு தான்.
“இருந்தாலும் மனசு கேக்க மாட்டிங்குது ன்னா”
“ப்ச் அந்த ஆள் பேச்சை விடு மாமி. உனக்கு இப்போ ஒடம்பு பரவாயில்லையா?”
“ரொம்பவே பெட்டர், இப்போ நீர் என் கூட இருக்கேளே கம்ப்ளீட்டா சரியாகிடுவேன்” இன்னும் வாகாய் கணவன் மேல் சாய்ந்தபடி கூறினாள்.
பார்த்திபன் மென் புன்னகையோடு ஆரபி கன்னத்தில் முத்தம் வைத்து, “எப்படிடி இவ்ளோ வேலை பாக்குறீங்க? ஒரு நாள் வீட்டையும் பிள்ளைகளை பாத்து முடிக்க வீட்டுக்கு கெஸ்ட் வர்றாங்க. அவங்களையும் பாத்து… அப்பப்பா மூச்சு முட்டுது ஆராம்மா” என்றான் பெரிதான மூச்சுகளோடு அவள் விறல் பிடித்து.
“ரொம்ப கஷ்டமா இருந்துச்சா பார்த்தி?”
“இல்லடி ஒரு நாளையே இவ்ளோ கஷ்டமா இருக்கேனு தான் ஆச்சிரியம் எனக்கு”
“என்னால உம்மை வேலைய செஞ்சிட முடியாது பார்த்தி, அது உமக்கு ஈஸியா இருக்குமோன்னோ, அது போல தான் இதுவும். நீர் என்ன சாதாரண வேலையா பாக்குறேள்? எவ்ளோ ட்ராவல், எவ்ளோ அலைச்சல்…”
அலுப்பில் பெரிதாய் மூச்சு வாங்கிய ஆரபி கன்னத்தை பிடித்து தனக்கு ஏதுவாய் உயர்த்தியவர் அவளது இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் வைத்தான்.
“இன்னைக்கு உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்டி”
“இங்க தானேன்னா இருந்தேன்” எதுவும் தெரியாதவள் போல் அவன் முகம் பார்த்து சிரித்தாள்.
“நீ இங்க தான் எப்பவும் இருப்ப, எனக்கு என்னையே பாத்துட்டே இருக்க என் செல்ல மாமி வேணும், அவளோட பார்வைல சொக்கி சொக்கி வேலைக்கு போறதா வீட்டுலையே இருக்குறதான்னு குழம்பி நிக்கணும்”
மனைவி முகம் நோக்கி குனிய அவன் தாடையை பற்றி, “என்ன பண்ண போறேள்?”
“முத்தம் மாமி” என்றான் தாபத்தோடு.
“ஒன்னும் வேணாம், நேக்கு இருக்க காய்ச்சல் நோக்கு வந்துடும், அப்றம் குழந்தைங்க அல்லாடுவா”
பொத்தென தலையணையில் விழுந்தவன் மேல் வந்து விழுந்த ஆரபி அவன் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்து அவன் மார்பினில் சாய்ந்து அங்கும் ஒரு முத்தம் கொடுக்க, பார்த்திபன் கைகள் தன்னாலே மனைவியை அணைத்துக்கொண்டது.
“பார்த்தி நேக்கு ஒரு ஆசை”
“சொல்லுடா”
“நேக்கு சின்ன வயசுல இருந்து ஜேர்மன் போகணும்னு ஆசை. கூட்டிண்டு போறேளா?”
“இதை ஏன்டா இவ்ளோ நாள் சொல்லல?”
“அதான் இப்போ சொல்லிண்டேனே கூட்டிட்டு போறேளா?”
“அடுத்த ஆறு மாசத்துல நாலு பேரும் கெளம்புறோம்” என்றான்.
சூம்பிய முகத்துடன், “நாலு பேர் மட்டும் தானா? அப்பா அம்மா, மாமா அத்தைமா?”
“இவ்ளோ பேரா?”
“நான் ஆளுங்கள கம்மியா தான் சொல்லிருக்கேன். இன்னும் லிஸ்ட் இருக்கு கேக்குறேளா?”
அவள் உதட்டை பிடித்து பிதுக்கியவன், “உன் லிஸ்ட் நேக்கு தெரியும் மாமி. ஒரு வருஷம் ஆகட்டும். ஒரு சீட்டு போட்டு எல்லாரையும் ரெடி பண்ணி, அவனுங்க மண்டையையும் கழுவி பேமிலி டூர் ஏற்பாடு பண்ணிடலாம், அதுக்குள்ள விஷ்ணு பிரீ ஆகிடுவான்”
பெரிதாய் தலை அசைத்து சிரித்தவள் சோர்வெல்லாம் எங்கோ சென்றிருந்தது. தன்னவளின் இந்த அழகிய வதனத்தில் தன்னையே தொலைத்தவன் பிடித்திருந்த இதழில் ஒரு மென் முத்தம் பதிக்க இம்முறையும் ஆரபி தடுத்தாள்.
“அதான் உன் அப்பனை ஊருக்கு கூட்டிட்டு போறேன் அவரை என் பிள்ளைங்களை ரெண்டு நாள் பாத்துக்க சொல்லு”
மாமன் மாப்பிள்ளை உறவு அதிகம் பலப்பட்டிருந்தாலும் அடிக்கடி மனைவியை இப்படி தான் கேலி செய்வதை வழக்கமாக்கி இருந்தான்.
முறுக்கிக்கொண்டு கூறியவன் அவள் மறுப்பை மீறி மனைவியை ஆசையாய் அணைத்துக்கொண்டு இதழ் கொண்டும் விறல் கொண்டும்.
நிசப்தத்தை ஏந்திய நின்ற இரவு, நித்திரை சுமக்கும் விழியோடு அவன் மார்பில் அவள் விரல்கள் கோலம்… சுபிட்சம் ❤️
முற்றும்…
error: Content is protected !!