Skip to content
Post Views: 4,991
“பாப்பா ட்விங்க்ள் ட்விங்க்ள் லிட்டில் ஸ்டார் சொல்லுங்க” சித்தப்பா வசந்த் குழந்தை பூர்வியின் கை பிடித்து அவளை தன் பக்கம் திருப்பினான்.
அவளோ சகோதரன் துருவோடு விளையாடும் முனைப்பில் சித்தப்பனை கண்டுகொள்ளவே இல்லை. கழுவும் மீனில் நழுவும் மீனாய் தப்பித்து ஓடிவிட்டாள். வசந்த் விடுவதாக இல்லை, “ம்மா இவளை சொல்ல சொல்லுங்க ம்மா” அன்னையிடம் முறையிட்டான் மக்களைப்பற்றி.
“இப்போ தான்டா பிள்ளை எல்லாருக்கும் ஒண்ணுக்கு மூணு தடவை சொல்லி காட்டுனா. நீ ப்ரன்ட்ஸ் கூட ஊர் சுத்திட்டு இப்போ வந்து புள்ளைய நச்சரிக்கிற” தாத்தாவாய் மகனை அதட்டினார்.
“அண்ணி நீங்களாவது சொல்லுங்களேன்”
Advertisement
மழலை மொழியில் பூர்வி பேசுவது வசந்த் மனதை அதிகம் கொள்ளைக்கொண்டிருக்க அவளை பேச வைத்து கேட்பதில் அவனுக்கு அலாதி பிரியம்.
ஆண்கள் மட்டுமே அதிகம் இருந்த வீட்டில் முதல் பெண் வாரிசாக பூர்வியை வீட்டினர் அதிகம் தான் கொண்டாடினர். தாத்தா பாட்டி, பெரியப்பா சித்தப்பா என அனைவருக்கும் அவள் ஒரு படி மேல் தான்.
இப்பொழுது கூட சிலுப்பும் அழகு கூந்தல் ஆட வீட்டையே காரணமில்லாமல் சுற்றியவளை கைகளில் அள்ளி கொஞ்ச தான் ஆசை. அவள் நின்றாள் தானே.
Advertisement
“அண்ணி” வசந்த் மீண்டும் ஆரபியை அழைக்க சுயம் அடைந்தவள் முகம் இன்னும் தெளிச்சு இல்லாமல் இருந்தது.
Advertisement
தந்தை பேசி இரண்டு நாட்கள் ஆகியது, இன்னும் ஆரபியால் அதிலிருந்து வெளி வர முடியவில்லை. எவரிடமும் மனம் விட்டு அந்த செய்தியினை பகிர்ந்துகொள்ளவும் முடியவில்லை. கணவன் பல முறை கேட்டும் பதிலே வராது போனது.
“தம்பி…?” என்றாள் இன்னும் புரியாமல்.
“பாப்பாவை ரைம்ஸ் சொல்ல சொல்லுங்க அண்ணி” வசந்த் சிறு பிள்ளை போல் கேட்கவும் அவளும் மெல்ல சிரித்து மகளை பிடித்து நிறுத்தினாள்.
Advertisement
“ம்மா பவ்வர்…” அரபி சிகையில் சூடியிருந்த மல்லிப்பூவை பார்த்து மகள் கை நீட்டி வர, “இப்டி எடுக்க கூடாதுடா அம்மா சொல்லிருக்கேன்ல” சிறு கண்டிப்பு மகளை நிறுத்தியது.
“பட் அம்மா வில் கிவ் யு எ ரோஸ். சித்தப்பாக்கு ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார் பாடி காட்டிடுங்க”
“ப்தாமிஸ் ம்மா?” பிஞ்சு கையை நீட்டி குழந்தை கேட்க அன்னையும் சத்தியம் செய்தாள்.
குழந்தை அன்னையை பார்த்தே, “த்விக்கிள் த்விக்கிள் லித்தில் ஸ்தார்…”
“சித்தப்பாகிட்ட பாடி காட்டுடா” மகளை திசை திருப்பி வசந்த்திடம் அனுப்பி வைத்து ஆரபி சமயலறைக்குள் சென்றுவிட்டாள்.
வசந்த் வாகாக மகளை மடியில் கிடத்தி பாட கூறினான், “த்விக்கிள் த்விக்கிள் லித்தில் ஸ்தார்…”
வசந்த், “ம்” என்றான் சிரிப்போடு கைபேசியில் காணொளி எடுத்துக்கொண்டே.
பூர்வி, “த்விக்கிள் த்விக்கிள் லித்தில் ஸ்தார்…” என்றாள் மறுபடியும்.
வசந்த், “சரி ம்மா அப்றம்”
“ரிபீத் பண்ணு சிப்பா”
வாய் விட்டு சத்தமாக சிரித்தவன் அவளை போலவே ராகமாக, “ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்” என்றான்.
பூர்வி முகம் எல்லாம் புன்னகையோடு தனக்கு அடிமை கிடைத்த மகிழ்ச்சியில் மேலும் தொடர்ந்தாள், “அவ் ஐ வந்தர் வாத ஆர்”
வசந்த், “ஹவ் ஐ ஒண்டெர் வாட் யு ஆர்”
“அப் அவவ்…”
“வசந்த் வண்டிய உள்ள ஷெட்ல ஏத்தி நிறுத்து” சட்டையின் ஒரு பட்டனை அவிழ்த்து தம்பிக்கு உத்தரவிட்டு வீட்டினுள் நுழைந்தான் பார்த்திபன்.
“நான் பசங்களை வெளிய கூட்டிட்டு போகணும் பார்த்திபா”
“நேரமாச்சு வசந்த், இதுக்கு மேல வேணாம்” மகனை தடுத்தார் அவன் அன்னை.
அதற்குள் வசந்த் பூர்வியை கைகளில் ஏந்தி, துருவின் கை பிடித்து வாசலை நோக்கி நடந்தான், “அதெல்லாம் ஒன்னுமில்ல, நாங்க பத்து நிமிசத்துல வந்துடுவோம், அண்ணி எதாவது வீட்டுக்கு வாங்கணுமா?” சமையலறை எட்டி பார்த்தான். அங்கிருந்து பதிலே வரவில்லை.
“வேணாம்டா, காலைல தான் உன் அப்பா வாங்கிட்டு வந்தார்” மகனுக்கு வித்யா தகவல் கொடுத்தார்.
“வசந்த் கார் எடுத்துக்கோ”
சாவியை அவன் முன்பு பார்த்திபன் நீட்ட மகளோ தந்தையின் கையை தட்டிவிட்டாள், “சிப்பா சார் வேணா.. பைக் போலா” என்றாள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு.
மகளை செல்லமாக முறைத்தவன், “சேட்டை பண்ண கூடாதுடா. சித்தப்பா அண்ணனையும் பாக்கணும் சரியா?” சமத்தாக சரி என்றாள் பூர்வி.
மகளின் தலை கோதி சிகையை சரி செய்தவாறே அவன் கன்னம் பிடித்து மெதுவாக கிள்ளினான், “துருவ் சித்தப்பாவை கெட்டியா பிடிச்சுக்கணும் சரியா?” அவனுக்கும் அறிவுரை கூற வெளியேறினர் மூவரும்.
தந்தையிடம் ஒரு காகித கவரை ஒப்படைத்து, “எல்.ஐ.சி ஆபீஸ் போனேன் ப்பா, நீங்க வந்து சைன் போடணும். அப்றம் ஒரு மாசத்துல பணம் கைக்கு வந்துடும் சொன்னாங்க, உள்ள இருக்க ஆளுங்ககிட்ட பேசுனா வேகமா வேலை ஆகும்”
வித்யா, “அவசரம் இல்ல பார்த்திபா வீட்டுல பணம் இருந்தா எங்கையும் வெளிய போனா பக்கு பக்குனு மனசு அடிச்சுக்கும். அதுக்கு பத்திரமா அங்கையே இருந்துக்கட்டுமே”
ராஜேந்திரன், “வித்யா சொல்றதும் சரி தான். அந்த பணத்தை என்ன பண்றதுனு முடிவு பண்ணிட்டு பணத்தை எடுக்கலாம்”
பார்த்திபன், “ம் உங்க விருப்பம் ப்பா” என்று மகன் எழ பார்க்க, “உனக்கு என்ன ப்பா தோணுது. என்ன பண்ணலாம் அந்த பணத்துல?” மகன் சில நொடிகள் அமைதியாகிவிட்டான்.
“அண்ணையும் வசனத்தையும் வச்சு கேளுங்க ப்பா. நான் சொல்றதுக்கு என்ன இதுல?” என்றான் நழுவும் எண்ணத்தோடு.
பெரியவர்கள் இருவரும் அவனை சிறு வருத்தத்தோடு பார்த்தனர்.
ராஜேந்திரன், “அவங்கள விட நீ வெளி உலகம் தெரிஞ்சவன் பார்த்திபா, அதான் உன்கிட்ட அபிப்ராயம் கேக்குறோம்” என்றார் அவன் அன்னை.
இப்பொழுதும் மகனிடம் மௌனம் தான், அங்கு அமரவே சங்கோஜமாக இருந்தது.
“ஏதாவது ப்ராபர்ட்டி வாங்கலாம் ம்மா, இல்லனா கோல்ட்ல இன்வெஸ்ட் பண்ணலாம். ம்யூசுவல் பன்ட்ஸ் பத்தி கொஞ்சம் தான் தெரியும் பெருசா தெரியாது, ரெண்டு நாள்ல சொல்றேன். எதுல பண்ணலாம்னு யோசிங்க நீங்க” என்றான் தனக்கு தெரிந்ததை முன்னிறுத்தி,
“என்ன கேட்டா கொஞ்ச பணம் நீங்க கைல வச்சுக்குறது நல்லது. மத்த எல்லாமே இன்வெஸ்ட் பண்ணிடலாம்”
ராஜேந்திரன், “எவ்ளோ பண்ணலாம் ப்பா?”
பார்த்திபன், “உங்க கைக்கு வர்ற பணத்தை பொறுத்து ப்பா”
வித்யா, “பார்த்திபா எங்களுக்கு எவ்ளோ பணம் வருதுன்னு உனக்கு தெரியாதா?”
அவருக்கு ஆச்சிரியம் தான், இரண்டு நாட்களாக அவன் கையில் தான் அத்தனை தகவலும் இருந்தது அதை அவன் இன்று வரை சரியாக பார்க்க கூட இல்லை என்னும் பொழுது அன்னைக்கு அதிகளவு வருத்தம் தான்.
சுளையாக ஒரு கோடிக்கு மேல் வரும். கணவன் மனைவி இருவரும் இருவது வருடங்களுக்கு மேல் தங்கள் பணத்தை இதில் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்து வருகின்றனர்.
வீட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரியும், ஆனால் மற்ற புதல்வர்களை போல் அல்லாது பார்த்திபன் அதில் ஒட்டுதல் இல்லாமல் அப்படி ஒன்றை மறந்தவாறே காட்டிக்கொண்டான்.
இன்று காலை கூட மூத்த மகன் இது பற்றி நினைவில் வைத்து கேட்க வசந்தம் எவ்வளவு பணம் வரும், அதில் என்ன செய்யும் எண்ணத்தில் இருக்கிறீர்கள் என கேள்வி கேட்டு தள்ளிவிட்டனர்.
“ஏன் ப்பா இப்டி” ஆதங்கம் தாங்காமல் மகனிடம் கேட்டார் வித்யா.
“அப்டிலாம் ஒன்னுமில்ல ம்மா நீங்க எதுவும் யோசிக்காதிங்க, நான் ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன். ஆரபி டிபன் எடுத்து வை அஞ்சு நிமிசத்துல நான் வர்றேன்”
மனைவியிடம் கூறி மேலே சென்று குளித்து வந்தவன், “சாப்பிட்டீங்களா ம்மா”
அவர்கள் இன்னும் அங்கிருந்து அகலவில்லை. இளைய மகனையும் பேரப்பிள்ளைகளை எதிர் பார்த்து வாயிலில் சென்று நின்றனர்.
“நாங்க சாப்பிட்டோம் பார்த்திபா நீ பூ ப்பா. மருமக முகமே என்னவோ சரியில்ல” அன்னை பேசியதை கேட்டு சமையலறை சென்று பார்த்த பார்த்திபனுக்கு அது தான் தோன்றியது.
இரண்டு நாட்கள் வேலை அதிகம், வார இறுதி நாட்களாக இருந்தும் இருந்த வேலை அலுப்பில் அவளை அதிகம் கவனிக்காது போனான்.
சமையலறை வந்த பார்த்திபன், “அண்ணி எங்க ஆரா?” என்றான் அவ்விடத்தையே முழுதும் பார்த்துக்கொண்டே.
“அவாளுக்கு குறுக்கு வலினு சொன்னா, நீங்க அங்க ஒக்காருங்கோ இங்க வெக்கையா இருக்கு நான் தோசை சுட்டு எடுத்துண்டு வர்றேன்”
தோசை வார்க்கும் வேலையில் இருந்த மனைவியை பின்னோடு அனைத்தவன் அவன் கழுத்து வளைவில் நாடி பதித்து முகம் பார்த்தான். அளவிற்கு அதிகமாக நெற்றி சுருங்கி முகத்தில் சோக ரேகைகள் அப்பிக்கிடந்தன. எந்நேரமும் பொலிவோடு இருக்கும் மனைவியின் வதனம் இருள்படிந்து வாடியிருந்தது.
“என்னாச்சு மாமி” அவள் இடையோடு கைகள் வளைத்து அடுப்பை அணைத்து தங்களுக்கான பேச்சுவார்த்தையை துவங்கினான்.
“ஒன்னுமில்ல”
“நீ ஒன்னுமில்லன்னு சொன்னாவே அதுல ஏதோ இருக்கும், சொல்லு”
“இல்ல ன்னா, ஏதோ கெட்ட சொப்பனமா வந்துண்டே இருக்கு” கணவன் பிடியிலிருந்து தளர்ந்து நடந்தவளை மீண்டும் தன்னை பார்த்து திருப்பினான்.
“உண்மையை சொல்றப்போ ஒரு நாளும் இந்த மாதிரி விலகி ஓடுற ஆள் இல்ல மாமி நீ. என் முகத்தை பார்த்து பேசு” மனைவி தாடை பிடித்து தன்னை பார்க்க செய்தான்.
கண்கள் கலங்கி போனது அவளுக்கு, “நீங்க நிலத்துக்கு அட்வான்ஸ் குடுத்தேள்ல?”
கன்னம் தொட்ட அவள் கண்ணீரை மென்மையாக துடைத்தான், “ஆமா”
“அது நேரம் சரியில்ல ன்னா. நேக்கு பயமா இருக்கு” பரிதவிப்போடு அவனை பார்த்து அழுதவள் கன்னம் முழுதும் நனைந்திருந்தது, கருத்த அவள் முகம் சிவந்து சிறுத்து போனது, கண்களில் எதிர்காலத்தை நினைத்து அதிகப்படியான பயம், கலக்கம்.
“அட்வான்ஸ் குடுத்தது எல்லாம் கணக்கா, நம்ம ரெஜிஸ்ட்ரேஷன் உனக்கு புடிச்ச மாதிரி நல்ல நாள் நேரம் பாத்து வச்சுக்கலாம்”
“அப்போ நாலு மாசம் கழிச்சு வைங்கோ” எதிர்பார்ப்போடு கணவனை பார்த்தாள்.
“இல்ல மாமி, அந்த குடவுனுக்கு போட்டி அதிகம் உடனே முடிக்கணும். இப்போ தேய்பிறை, அடுத்தது புரட்டாசி மாசம். அதுனால தான் லேட்டா பண்றோம் இல்லனா ஒடனே நான் முடிச்சிருப்பேன். விட்டா இவ்ளோ மெயின்ல இந்த மாதிரி நல்ல இடம் கெடைக்காது ஆரா ம்மா”
“இந்த இடம் இல்லனா வேற இடம் பாக்கலாமே ன்னா”
மனைவியின் தவிப்பு புரிந்து அவள் முகம் பற்றியவன், “வேலைக்கு அந்த இடம் செட் ஆகிடுச்சு, எல்லாருக்கும் இந்த இடம் ஓரளவு பரிட்சயமாகிடுச்சு. இதெல்லாம் யோசிச்சு தான் அந்த இடத்துக்கே எல்லாத்தையும் மாத்திடலாம்னு இன்டீரியர் டிசைனர்ஸ்க்கு முதற்கொண்டு பேசி வச்சாச்சு”
ஆரம்பியின் முகம் இன்னும் வாடியது. அவன் வேகம் இது தான் என அறிந்திருந்தாலும் இத்தனை ஆண்டுகளாய் இல்லாத சோபை இன்று அதிகமானது.
நிதானித்திருக்கலாமே இவன், ஆனால் அவன் மேலும் தவறு கூற முடியவில்லை கடவுள் நம்பிக்கை, ஜாதகம் என எதிலும் நம்பிக்கை இல்லாதவன் தான் என்ன கூறியும் நம்ப போவதில்லை, கூறி அவன் மனதையும் குழப்ப விரும்பவில்லை.
“நீ இப்டி இருந்தா நல்லா இருக்காது ஆராமா, சந்தோசமா நீ என் பக்கம் நின்னா தான் என்னோட முயற்சி ஜெயிக்கும். முழு மனசோட எல்லாத்தையும் எனக்காக செய் அப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கும்”
இதற்கு மேல் அவனிடம் என்ன பேச முடியும்? ஒரே அடியில் மனைவியை சாய்த்திருந்தான்.
தன்னுடைய மன வேதனையை மறைத்து கணவனுக்காக சிரித்தாள். மனைவி கன்னம் தட்டியவன் அவளை தள்ளி நிறுத்தி தானே இருவருக்கும் தோசை வார்த்து உணவு மேஜை அழைத்து வந்தான்.
மனைவியிடம் பொதுவான சில நிகழ்வுகளை பற்றி பேசும் பொழுதே மகள் வந்துவிட்டாள் சித்தப்பாவின் தோளில் உறங்கியபடியே.
“பாப்பா தூங்கிட்டாடா. நான் ரூம்ல படுக்க வச்சிடவா?”
சிறியவள் கையிலிருந்த பெரிய சாக்லேட்டை பார்த்த பார்த்திபன் சகோதரனை முறைத்தான். போதாததற்கு துருவ் கையில் ஒரு கவர் முழுவதும் தின்படங்கள் தான்.
“இல்ல தம்பி நீங்க குடுங்கோ அவ ஆள் பக்கத்துல இல்லனா முழிச்சுக்குவா” ஆரபி பூர்வியை வாங்க மகளின் முகம் பார்க்க வாயை சுற்றிலும் இனிப்பு உண்ட தடயம் தான்.
“நைட் நேரம் ஏன் வசந்த் இதெல்லாம்?” பார்த்திபன் சகோதரனை முறைதான்.
ஆரபி, “விடுங்கோ அவருக்கு நேரமிருக்குறப்போ தானே வாங்கி தர முடியும். துருவ் சித்தப்பாகிட்ட சாக்லேட்ஸ் எல்லாம் குடுத்துடுங்க நாளைக்கு சித்தி ஸ்கூலுக்கு ஸ்னாக்ஸ் குடுத்து விடுறேன்”
சிறுவனும் சமத்தாக வசந்த்திடம் பையை ஒப்படைக்க கையில் பாதி உண்டிருந்த இனிப்பை மட்டும் எடுத்துக்கொண்டு ஆரபியிடம் வந்தவன் குழந்தைக்கு ஒரு முத்தமும் ஆரபிக்கு ஒரு முத்தமும் கொடுத்து ஓடினான்.
“டேய் சாக்லேட் வாங்கி குடுத்த எனக்கு எங்கடா முத்தம்? சோ சேட் நன்றியில்லாத உலகம்” வசந்தின் புலம்பலை கேட்டு தம்பதி இருவரும் உணவுண்டு வரவேற்பறை வர பெரியவர்கள் இன்னும் அங்கு தான் இருந்தனர்.
“தூங்கலையா ம்மா?”
“இல்ல ப்பா உங்களுக்காக தான் வெய்ட் பண்ணோம்” எழுந்தவர் பேத்தியின் உறங்கும் கைகளுக்கு முத்தம் வைத்து தங்கள் அறைக்கு சென்றிட ஆரபி வீட்டின் விளக்குகள் அனைத்தையும் அனைத்து வீட்டினை பூட்டி மேலே வந்தாள்.
பார்த்திபன் மகளை இருவருக்கும் இடையில் படுக்க வைத்து திரைசீலைகளை மூடிக்கொண்டிருந்தான்.
கணவனுக்கு பால் டம்ளரை நீட்டியவள், “மாமி எல்.ஐ.சி பணத்தை பத்தி கேட்டாங்கோ ன்னா”
“எப்போ?”
“நீங்க இப்போ குளிக்க போனப்போ”
“நான் தான் அம்மாகிட்ட சொல்லிட்டேனே”
“அதான் அவாளுக்கு வருத்தம். நீங்க ஒரு வார்த்தை என்ன எதுனு உங்க அபிப்ராயத்தை சொல்லிடுங்கோ ன்னா. அவாளுக்கு சஞ்சலம் இருக்காதுன்னோ”
பார்த்திபன், “இது அவங்க சம்பாத்தியம் ஆரபி நான் தலையிட என்னயிருக்கு?”
error: Content is protected !!