Skip to content
Post Views: 1,773
10(2)
வகுப்பறையில் சுப்ரியாவை சுற்றி மாணவ, மாணவிகள் அமர்ந்து அவளை பாராட்டிக் கொண்டிருந்தனர்.
Advertisement
“ஹேய்..வழி விடுங்கடா” கலையரசனின் சத்தம் கேட்டு அனைவரும் அவரவர் இடத்திற்கு சென்றனர். கலையரசன் நண்பர்களும் மாறனும் வந்தனர்.
நேராக சுப்ரியாவிடம் வந்த கலையரசன், “அவள் மேசையின் முன் பூவை வைத்து நான் இங்கே அமர்ந்து கொள்ளவா?” கேட்டான்.
Advertisement
Advertisement
“சார், மேம் எதுவும் சொல்லலைன்னா உட்கார்ந்து கொள்” சுப்ரியா சொல்ல, “அவங்கள நான் பார்த்துக்கிறேன்” கலையரசன் சுப்ரியா அருகே அமர்ந்தான்.
வித்யா பட்டென எழுந்தாள்.
Advertisement
“வித்யா உட்காரு. நீ எதுக்கு நிக்குற?” கலையரசன் கேட்க, “உட்காரு விது” என்று அவளை அமர வைத்து, அவள் பக்கம் திரும்பி சுப்ரியா பேசினாள்.
பெஞ்சின் பின் கையை நீட்டி காலை விரித்து சுப்ரியாவை இடிப்பது போல அமர்ந்தான். மாறனுக்கு தன் நண்பன் மீது சினம் எழுந்தது.
சுப்ரியாவை கலையரசன் மேலும் உரச, பக்கத்து பெஞ்சில் அமர்ந்திருந்த மாறன் முகம் இறுகியது. வித்யா அவனை கவனித்து கலையரசனை பார்த்தாள். ஆனால் அவன் கொஞ்சமும் நகராது மேலும் சுப்ரியாவை இடித்தான்.
வேகமாக எழுந்த சுப்ரியா அவன் காலை அழுத்தி மிதித்து, “எரும மாடே எதுக்கு இப்ப உரசிட்டு இருக்க? உனக்கு உடம்பு அரிக்குதுன்னா சுவத்த உரசிட்டு உட்காரு. அதை விட்டு பேச விடாமல் தொந்தரவு செய்கிற? ப்ளடி இடியட்”
ஏய், யார எருமை மாடுன்னு சொன்ன?
“அவன தானடா சொன்னேன். நீயும் எருமையாட்டம் தான் இருக்க” பொண்ணுங்ககிட்ட எப்படி உட்காரணும்ன்னு தெரியாதா? அவனுக்காக நீ பேசிட்டு வர்ற? போங்கடா” சத்தமிட்டு அமர்ந்தாள்.
எல்லாரும் அதிர்ந்து அவளை பார்க்க, “உன்ன பார்க்க வேண்டிய இடத்துல்ல பார்த்துக்கிறேன். வாங்கடா” கலையரசன் அழைக்க, மாறன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“மாறா” அவன் சத்தமிட, எழுந்து அவனுடன் சென்று அமர்ந்தான் மாறன். அவனையும் முறைத்து விட்டு வித்யாவிடம் பேசத் தொடங்கினாள்.
உனக்கு பயமா இல்லையா?
நாம தப்பு செய்தால் தான் பயப்படணும். நாம என்ன செய்தோம்?
இல்லடி..ரம்யா ஏதோ கூற வந்தாள்.
“மேம் வாராங்க” என்று ஒருவன் உள்ளே ஓடி வந்து அமர்ந்தான். அவன் பின்னே மகேஷ் பாண்டி வந்து கடைசி பெஞ்சில் அமர்ந்தான்.
ராதிகா வந்திருந்தார். சுப்ரியா கண்கள் விரிய, “நான் நினைத்தது போல இவங்களே வந்துட்டாங்க” மகிழ்வுடன் எண்ணினாள்.
ராதிகா எல்லாரையும் பார்த்து, “உங்களை அறிமுகப்படுத்துங்க” கேட்டார்.
மேம், “நீங்க உங்கள பத்தி சொல்லுங்க? உங்க பையனுக்கு அவங்க அப்பா பெயர் தெரியாதாமே! உங்களுக்கு உங்க புருசன் பெயர் தெரியுமா?” அவன் கேட்க,
மிகவும் சாதாரணமாக.. எனக்கு என்னோட புருசனை நல்லாவே தெரியுமேப்பா. என் மகனுக்கு தெரியும்மான்னு நீ வேணும்ன்னா அவனிடமே கேட்டுக்கோ அவன் இப்ப போலீஸ் ஸ்டேசனில் தான் இருப்பான்.
ஆமா, சிரிப்பு போலீஸ் அவர் ஸ்டேசனில் உறங்கி கொண்டிருப்பார்.
அதற்கும் ராதிகா புன்னகை முகத்துடன், அவனுக்கு தூங்குவதே பிடிக்காது. சில சோம்பேறி வெட்டிப்பயலுக தான் இப்படி அடுத்தவங்க கதைய நோண்டி நோண்டி கேட்பானுக..
பசங்களா..என்னோட மகன் பார்க்க தான் அமைதியா இருப்பான்.
கலை, உனக்கு நான் நேரம் கூட தருகிறேன். அவன் முன் சென்று என்னிடம் கேட்டதை கேட்டு பாரு. நேற்று அந்த பொண்ணு பேசியதால் அமைதியா ஓர் அடியோட போயிட்டான். உன் பேச்சுக்கு அவன் பதில் உனக்கு ஏற்றதாகவும் தரமாகவும் தான் இருக்கும். நீ முயற்சித்து பாரு..
மேம், “என் மேல யாரும் கை வைக்க முடியாது” கலையரசன் திமிறாக பேச, ம்ம்..அதே போல தான் என் மகனின் பிறப்பை எந்த பயலும் பேச முடியாது. பேசினால் எவன்னு பார்க்க மாட்டான். உன் தாத்தனாக இருந்தாலும் அவன் வேலையை காட்டிருவான். இந்த மிரட்டுற வேலைய விட்டு, ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு..
மேம்..அவன் சத்தமிட, நான் கல்வி கற்பிக்க வந்திருக்கேன். என்னை தொந்தரவு செய்தால் எவனாகினும் வெளிய தான் போகணும்.
ஓ! வெளிய அனுப்பீடுவீங்களா?
ராதிகா பதிலளிக்காமல், அறிமுகம் ஆரம்பமாகட்டும் என்றார்.
பசங்களும் ஒருவரின் பின் ஒருவராக வந்தனர். சுப்ரியா அவள் தோழிகள் எல்லாரும் பேசினார்கள். மாறன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனும் அவனருகே அமர்ந்தவர்கள் எழாமல் இருந்தனர்.
“நீ சொல்லும்மா?” என்று கலையரசனின் நண்பர்களை தவிர்த்து மற்றவர்களிடம் சென்றார். பின் வகுப்பை தொடங்கினார்.
கலையரசனும் அவன் நண்பர்களும் காகிதத்தில் விமானம் செய்து பறக்க விட்டனர். மாறனும் அவர்களுடன் சேர்ந்து செய்து பறக்க விட்டான். அது அங்குமிங்கும் செல்ல, அனைவர் கவனமும் சிதறியது.
ராதிகா சினமுடன் அவர்களை திட்டி வெளிய செல்ல சொன்னார்.
“போக முடியாது” முதலாவதாக மாறன் எழுந்து நின்றான். அதன் பின் அவர் பேசுவாரா? அமைதியாக அனைவரையும் வெறித்தார்.
சுப்ரியா எழுந்து வேகமாக மாறனது பெஞ்சிற்கு சென்று எல்லாருடைய பையையும் இழுத்து வெளியே போட்டாள்.
“ஏய்! மாறன் சத்தமிட,
இங்க பாரு. நீ படிக்க வரல. கமெண்ட் பண்ண தான் வந்திருக்கன்னா. வெளியே அமர்ந்து நல்லா கமெண்ட் பண்ணு. என்னோட படிப்பை யாராவது தொந்தரவு செஞ்சீங்க. மறுநிமிசம் தீரன் சார் இங்க இருப்பார். உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்” என்று அவனை முறைத்து விட்டு, “மேம்..நீங்க கிளாஸ் எடுங்க”.
“இவ படிச்சு முன்னுக்கு வந்து எப்படியும் குட்டிய தான பெத்து போடப் போறா அதுக்கு எதுக்கு இவ்வளவு சீன்? படிப்பு?” அவன் கேட்க, சப்பென அவன் கன்னத்தில் அறைந்தாள் சுப்ரியா..
“சுபா” வித்யா தடுக்க, விடுடி அவனுக்கு எவ்வளவு திமிரு பாரு..
“சுப்ரியா” ராதிகா சத்தமிட, மேம் இவனுக கிளாஸ்ல இருந்தால் நான் இந்த வகுப்பில் படிக்க மாட்டேன். எனக்கு வகுப்பை மாற்றி விடுங்க.
“தீரன் தான் உன்னை இந்த வகுப்பில் போட சொன்னது” வெளியே வந்த பிரின்சிபில் ராதிகாவை முறைத்தார்.
சார் அவர் அழைக்க, என்னோட அறைக்கு வாங்க ராதிகா.
“சார் இவனுக தான்” சுப்ரியா சொல்ல, அவளை முறைத்து சென்றார்.
இவருக்கென்ன கட்டபொம்மன்னு நினைப்போ? சுப்ரியா பிரின்சிபிலை திட்டினாள்.
மாறனும் அவன் நண்பர்களும் சுப்ரியாவை முறைத்து தள்ளினார்கள்.
சுபா, இவனுக ரொம்ப மோசமானவனுக…
“ஆமா. சினிமாவில் வர்ற வில்லனுக. இவனுக மூஞ்சிய உத்து பாரு. சிரிப்பு தான் வருது” சுப்ரியா மேலும் அவர்களை அசிங்கப்படுத்தினாள். கலையரசன் மாறனை பார்த்தான்.
மாறா, “இவளை சும்மா விடக் கூடாது” கலையரசன் சொல்ல, “ஆம்” என்று மாறன் தலையசைக்க, விரோதப்புன்னகை சிந்தினான் கலையரசன்.
மகியிடம் சென்ற சுப்ரியா, காலை உதவியதற்கு நன்றி கூறி விட்டு அவளிருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
சுப்ரியாவின் பேச்சில் மாறனுக்கும் அவமானமாகிப் போனது. அவன் தவறை உணராமல் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றினான்.
மாலை பள்ளி நேரம் முடியவும் மணியடிக்கப்பட்டு மாணவ, மாணவியர்கள் வந்தனர். பன்னிரண்டாம் வகுப்பிற்காக சிறப்பு வகுப்பு என்பதால் பன்னிரண்டு, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் மட்டுமே வந்திருந்தனர். அனைவரும் கிளம்ப, தீரன் தன் காரை பள்ளி முன் நிறுத்தினான்.
மாறனுக்கு ராஜ் அறிவுரை என்ற பெயரில் அவனை திட்டிக் கொண்டிருந்தான்.
தீரனை பார்த்து, போ. அந்த பொண்ணு எங்க? ஒழுங்கா அழைச்சிட்டு போ மாறனிடம் சத்தமிட்டான். மாறன் அவனை முறைத்து விட்டு நகர, “ஹாய் சார்” ராஜ் அருகே வந்து கையை நீட்டினாள் சுப்ரியா.
அவளை பார்த்து மாறன் முறைக்க, “என்னடா முறைப்பு? போடா” ராஜ் சொல்ல, அவன் சுப்ரியாவை பார்த்தான்.
அவன விடுங்க சார். இந்தாங்க இது உங்களுக்கு. விதுவுக்கு உதவியதற்காக..
ஓ!…சிப்ஸ் பாக்கெட்டோட நிறுத்தீட்ட?
சார், இதுவே பெருசு. என்னிடம் காசே இல்லை. தீரன் மாமா என சொல்ல வந்தவள் நிறுத்தி தீரன் சார் கொடுத்த காசில் கொஞ்சமா சிப்ஸ் வாங்க எடுத்துட்டேன்.
மேடம், கிளாஸ் எப்படி போனது?
ம்ம்ம்..சூப்பர் சார். கையிலிருந்த ஜூஸ்ஸை உறிஞ்சினாள்.
எனக்கு தான் சிப்ஸா? இது கிடையாதா?
நோ..சார், இது சாப்பிட்டா சளி பிடிக்கும். நான் சாப்பிட்டது தெரிந்தால் அக்கா பயங்கரமா திட்டுவா. நீங்க சாப்பிட்டு நாளை விடுப்பெடுத்தால் வருமானம் தடைபடுமே!
ராஜ் பயங்கரமாக சிரித்தார். தீரன் அவர்களை நோக்கி வந்தான்.
என்னடா சிரிச்சிட்டு இருக்க?
“இந்த ஜூஸ்ஸை குடித்தால் எனக்கு வருமானம் குறையுமாம்” மேலும் சிரிக்க, மாறன் முகம் கடுகடுத்தது.
தன் தம்பியின் முகத்தை பார்த்தே “ஏதோ நடந்துள்ளது” என புரிந்து, “குட்டிம்மா எப்படி இருந்தது வகுப்பு?”
வகுப்பா மாமா..என அவளை அறியாமல் மாமா சொல்ல, மாமாவா? ராஜ் கேட்டார்.
“ம்ம்..அங்கிள்ன்னா உங்க ஊர்ல மாமா தான” ஜூஸ்ஸை அவள் உறிஞ்ச, “அண்ணா நான் காருக்கு போறேன். நீ வந்துரு” மாறன் விறுவிறுவென நடந்தான்.
மாமா, “லிப்ஸ்டிக் போடாமலே உதடு நல்லா சிவந்திருக்கு” சுப்ரியா சொல்ல, மாறன் அவளை திரும்பி பார்த்து விட்டு சென்றான்.
மாமா, “நம்ம போலீஸ் சார் அம்மா தான் எங்களுக்கு வகுப்பாசிரியர். சூப்பரா போச்சு” என்று மாறனை காட்டிக் கொடுக்காமல் அவள் பேச, ராஜ் அவளையே பார்த்தார்.
மாமா, உங்க ப்ரெண்டுக்கு என்னோட ஜூஸ் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். நீங்க வாங்கிக் கொடுங்க என்று தீரன் சட்டையில் கையை விட்டாள். அதில் பணமேயில்லை.
மாமா, வெளிய வரும் போது பணம் எடுத்து வர வேண்டாமா?
எதுக்கும்மா? கொண்டு வரும் பணத்தை சாப்பிட்டே காலி செய்யவா?
ஆமா சார், சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்ப நல்லது.
அது உணவு, காய்கறி, பழம் சாப்பிட்டால் நல்லது. உன்னை போல நொறுக்குத்தீனி சாப்பிட்டால் நெஞ்சு வலி தான் வரும்.
என்னோட ஹார்ட் ரொம்ப ஸ்ட்ராங். யாராலும் எதுவும் செய்யமுடியாது.
தீரன் புன்னகையுடன், “குட்டிம்மா நீயும் காருக்கு போ. வாரேன்” என்று தீரன் தன் நண்பன் ராஜ்ஜிடம் நடந்ததை கேட்டு அறிந்து கொண்டான்.
கலையரசன் செல்லும் சுப்ரியாவை பார்க்க, வித்யா அவனை பார்த்துக் கொண்டே வந்து மகேஷ் பாண்டியை இடித்தாள்.
சாரி சாரி..அவள் நகர, தீரன் அண்ணா வீட்ல இருக்கால்ல அந்த பொண்ணோட எப்படி பேசி பழகின?
எதுக்கு?
நானும் பேசதான்.
மாறனுக்கு தெரிந்தால் கோபப்படுவான்.
அவன் அவ மேல கொலவெறியில இருப்பான். அவனை விடு..
நான் கிளம்புகிறேன் என்று அவள் நகர, அவள் கையை பிடித்தான் கலையரசன். அவனை பார்த்து பயந்து கையை தட்டி விட்டு சைக்கிளை எடுத்து அவள் பயந்து கொண்டே சென்றாள்.
அடிக்கடி வித்யாவை இடைமறித்து அவளை தொந்தரவு செய்வது அவர்களின் வழக்கம் தான். அவனுக்கு பதிலாக மகி பாதி தூரம் அவள் பயத்தை போக்க பின் சென்றான். பின் அவன் வீட்டிற்கு சென்றான்.
காரினுள் டிரைவர் சீட் அருகே அமர்ந்தாள் சுப்ரியா. வேண்டுமென்றே அவள் உறிஞ்சி உறிஞ்சி ஜூஸ்ஸை குடிக்க, மாறனுக்கு கடுப்பானது.
“எங்க விசயத்துல்ல தலையிடாத!” மாறன் எச்சரிக்க, அதே தான் நானும் சொல்றேன். என்னோட படிப்பை தொந்தரவு செய்யாத..
தீரன் காரில் ஏறவும் அமைதியாக இருந்தனர். சுப்ரியா காரில் பாட்டை போட்டு விட்டாள்.
“போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு…” பாடல் ஒலிக்க, சிரித்துக் கொண்டே ஓரக்கண்ணால் மாறனை கண்ணாடி வழியே பார்த்தாள். அவன் சீற்றமுடன் அவளை வெறித்தான். வீட்டிற்கு வரும் வரை இருவரையும் அவதானித்தவாறே வந்தான் இளந்திரையன்.
வீட்டிற்குள் சென்று நேராக அறைக்கு சென்றாள் சுப்ரியா.
மாறன் தனது பையை சோபாவில் விட்டு விலாசி விட்டு வேகமாக அவனறைக்கு செல்ல படியில் ஏறிக் கொண்டிருந்தான்.
“மாறா” வைஷ்ணவி அழைப்பில் நின்று அவளை பார்த்தான்.
ப்ரெஷ் ஆகிட்டு வா. காஃபி சாப்பிடலாம்.
“எனக்கு வேண்டாம் அவன் மேலும் ஏற, ஓ.கே நான் உன்னோட அறைக்கு வாரேன்” என்று சைகையில் கூறி அவனிடம் பதில் எதிர்பாராமல் அடுக்கலைக்குள் சென்றாள்.
இளந்திரையன் அவனது புத்தகப்பையை ஓரமாக எடுத்து வைத்து விட்டு அமர்ந்தான். அவனுக்கு காஃபியை கொடுத்து விட்டு மாறனறைக்கு சென்று கதவை தட்டினாள். இளந்திரையன் கண்டும் காணாதது போல அவளை பார்த்தான்.
மாறன் கதவை திறந்து, அவள் கையிலிருப்பதை வாங்கி உள்ளே சென்றான். வைஷ்ணவி அவனை பார்த்தவாறு அங்கேயே நின்றாள்.
“உள்ள வாங்க” மாறன் அழைத்தான். வைஷ்ணவி புன்னகையுடன் அவனறைக்கு சென்றாள். நால்வரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் மட்டும் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது.
மாறன் காஃபியை பருகிக் கொண்டே அவளை பார்த்தான்.
நீ…நீ..நா..நான்..பேச தயங்கினாள் வைஷ்ணவி.
நான் உங்களை திட்ட மாட்டேன். பேச வந்ததை பேசுங்க..
ம்ம்..காலை எத்தனை மணிக்கு எழுந்திருப்ப?
ஆறு மணிக்கு..
ஓ..
எதுக்கு?
காலை உனக்கு ஏதும் வேணும்ன்னா அழை.
என்ன வேணும்? காலை இதே போல காஃபி குடிப்பேன்.
அதில்லை..ஸ்டடிஸ்ல்ல?
படிப்பா? அதெல்லாம் பிரச்சனையில்லை. நான் பாஸ் ஆகிடுவேன்..
ஓ!…அவள் பேச தயங்கினாள். அவனுக்கு புரியவில்லை.
நானே உனக்கு காலை அறைக்கு எடுத்து வாரேன். குடித்து விட்டு சிலமணி நேரம் படிக்கிறீயா?
காலையிலேவா?
ம்ம்…அமைதியான காலை பொழுது படிப்பது மனதில் தங்க ஏதுவாக இருக்கும்.
இல்ல..வேண்டாம். எனக்கு படித்து பழக்கமில்லை.
பழகிக்கலாமே!
எனக்கு படிப்பில் பெரியதாக விருப்பமில்லை.
ஸ்போர்ட்ஸ்..
நோ..
அப்புறம் உனக்கு என்ன பிடிக்கும்?
எனக்கு தூங்குறது தான் பிடிக்கும்.
படிக்கலைன்னாலும் பரவாயில்லை. அதிகமா தூங்காத. ரொம்ப நேரம் தூங்கினால் சோம்பேறித்தனம் வந்துரும்.
மாறன் சினமுடன் அவளை முறைத்தான்.
உன்னோட நல்லதுக்கு தான். உன்னோட அண்ணன்களுக்கு பின் நீயும் அவங்களை போல வேலைக்கு போகணும். தூங்கினால் உழைக்க முடியாது.
முயற்சி செய்கிறேன். நீங்க கிளம்புங்க..
நிஜமாக முயற்சி செய்கிறாயா?
செய்கிறேன். “சித்தப்பூ எங்க? வீட்ல இருக்கிறதா தான சொன்னாரு” அவன் கேட்க, வைஷ்ணவி என்ன சொல்ல திணறினாள்.
சிட்டு, “நீ கீழ போ” இளவேலன் பற்றிய அனைத்தையும் இளந்திரையன் சொல்ல, மாறன் அதிர்ந்து.. அந்த போலீஸ்காரன் நம்ம சித்தப்பூ மகனா? அந்த ராதிகா டீச்சர் சித்தியா? நோ….கத்தினான்.
“மாறா” இளந்திரையன் அதட்டினான்.
அண்ணா, “எல்லாரும் என்னை எப்படி கேலி செய்வாங்க தெரியுமா? இன்று நடந்ததே அவமானமா போச்சு. இந்த சுபா என்னோட மானத்தை வாங்காமல் விட மாட்டா. இதில் அவங்க வேறயா?” சத்தமிட்டான்.
இளவேலன் சத்தம் கேட்டு மாறனறைக்கு வந்தார்.
“மாறா” தடுமாறிய குரலில் இளவேலன் அழைக்க, சித்தப்பூ…இந்த வயசுல உனக்கு புள்ள தேவையா? அதுவும் எனக்கு பிடிக்காத அந்த போலீஸ்காரன்.. சீற்றமுடன் கத்தினான்.
“மாறா” இளந்திரையன் மாறனை அடித்தான்.
அண்ணா, முதல்ல பொண்ணுங்க வந்ததிலிருந்து தான் என்னை அடிக்க தொடங்கின. இப்ப இவரு யாரையோ அழைச்சிட்டு வருவார். வந்தார்ன்னா நான் இந்த வீட்ல இருக்கவே மாட்டேன்.
“உங்க வீட்டுக்குள்ள யாரும் வரமாட்டாங்கப்பா. நான் பார்த்துக்கிறேன்” குரல் தழுதழுக்க இளவேலன் கூறி விட்டு கீழிறங்கினார்.
“சித்தப்பூ..நில்லு, அவன் சின்னப்பையன் புரியாம பேசுறான். நீ என்ன பேசிட்டு போற?” இளந்திரையன் சத்தமிட்டான். அறையிலிருந்தவர்கள் வெளியே வந்தனர்.
“என்ன இருந்தாலும் அவங்கள உன்னோட தாத்தாவும் ஏத்துக்கலை தான! அவங்க பேரன் தான இவனும். யாரும் அவங்கள ஏத்துக்க வேண்டாம். நான் என்ன பண்ணனும்ன்னு முடிவெடுத்துட்டேன்” உறுதியுடன் கூறினார்.
“சித்தப்பூ” பதறி இளந்திரையன் கீழே ஓடி வந்தான். மாறன் மேலிருந்து வேடிக்கை பார்த்தான்.
அங்கிள், “என்ன பிரச்சனை? உங்க மேல எந்த தப்பும் இல்லை” அக்சரா சொல்ல, அவர் அவளை பார்த்தார்.
சரா இது வந்து இளந்திரையன் பேச, “தீரா உங்க எல்லாருக்கும் செய்ய வேண்டியதை சரியா செய்துட்டேன். ஆனால் இனி அவங்கள நான் பார்க்கணும். என்னை மன்னிச்சிருடா” அவரறைக்கு சென்றார். மாறன் திகைத்து விழித்தான்.
“மாமா நில்லுங்க” சுப்ரியா இளந்திரையனை போக விடாமல் தடுத்தாள்.
குட்டிம்மா, சித்தப்பூ வீட்டை விட்டு போகப் போறேன்னு சொல்றாரு..
போகட்டும் மாமா..
“சுபா” அக்சரா சத்தமிட்டாள்.
அக்கா இப்ப தான் விசயத்தை சொன்னாள்.
அங்கிள், அவர் வாழ்க்கையை வாழவேயில்லை. வாழட்டுமே!
எனக்கும் அதான் வேணும் குட்டிம்மா. ஆனால் வீட்டிலிருந்து அவர் வெளிய போகக் கூடாது.
சரி மாமா, அவர் போக வேண்டாம்ன்னா அவங்கள இங்க வரவையுங்க என்று சொல்லிக் கொண்டே மாறனை பார்த்தாள்.
மாறன் குழப்பமுடனும் சினமுடனும் நின்று கொண்டிருந்தான்.
ஆனால்ம்மா..இளந்திரையனும் தன் தம்பியை பார்த்தான்.
மாமா, வீட்ல சொந்தபந்தங்கள் நிறைந்து இருந்தால் தான் வாழ்க்கை. இத்தனை வருசமாக அவரு காதலியை பிரிந்து தன் குழந்தை தான் அவள் வயிற்றில் இருந்திருக்குன்னு தெரியாமல் உங்களை தன் பசங்களா வளர்த்திருக்காரு. ஆமாவா? இல்லையா மாமா? கேட்டுக் கொண்டே மாறனை பார்த்தாள்.
ஆமாம்மா..கண்கலங்கினான் இளந்திரையன்.
அவருக்கு நீங்க மூவரும் செய்ய வேண்டிய ஒரே விசயம் அவர் குடும்பத்துடன் சேர்த்து வைப்பது தான? மீண்டும் மாறனை பார்த்தாள்.
ஆமா..
உங்க தம்பிக்கு அவங்க வர்றது விருப்பமில்லைன்னா இவர் தான் போகணும். இத்தனை வருசமா புருசன் இல்லாமல் கழுத்தில் தாலி இல்லாமல் சுப்ரியா சொல்லும் போது அவளுக்கு கண்ணீர் வந்து விட்டது.
என்னோட அம்மாவும் அப்படி தான் வாழ்ந்தாங்க மாமா. எங்கள எப்படி போராடி வளர்த்தாங்க தெரியுமா? வெளிய வரவே முடியாது..ஆனால் என் அம்மா கழுத்தில் தாலி இருந்தது. அப்பா உயிரோட இருக்கார்ன்னு ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் இந்த ஆம்பளைங்க சும்மாவா இருப்பானுக.
பிள்ளையார் சுழியாக பொண்ணுங்க அவதூறான பேச்சை பரப்ப, ஆண்கள் பார்க்கும் பார்வை தவறாக தான் இருந்தது.
ராதிகா மேம்மும் கண்டிப்பா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க. எங்க கிளாஸ்ல்ல ஒரு பொறுக்கி நாய் இருக்கான். அவன் கேட்கிறான் உன் புருசன் யாருன்னு உனக்காவது தெரியுமான்னு? கேட்டுக் கொண்டே சீற்றமுடன் கண்ணீருடன் மாறனை வெறித்தாள் சுப்ரியா.
“ஏய், நீ யார பேசுற? உனக்கென்ன தெரியும்? அவன் பொறுக்கியா?” நண்பனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்தான் மாறன்.
அவனை கேவலமாக அவள் பார்க்க, சினமுடன் அவளிடம் வந்து கொண்டிருந்தவன் அவள் பார்வையில் நின்று விட்டான்.
மாமா, அவர் இங்கே இருக்கணும்ன்னா அவர் குடும்பத்தை அழைச்சிட்டு வரணும். அங்கிள்காக எதுவும் செய்யலாம்.
ஆனால் இவர்..
மாமா, “உங்களுக்கு ஒரு வாரம் தான் நேரம் தருவேன். அதுக்குள்ள ராதிகா மேம்மும் அவங்க மகனும் இந்த வீட்டுக்குள்ள வரணும். அதுவரை நான் அங்கிள் வீட்டை விட்டு போகாமல் பார்த்துக்கிறேன்” சுப்ரியா இளந்திரையனை பார்த்தாள்.
“நன்றிடா” சுப்ரியாவை அணைத்துக் கொண்டான் இளந்திரையன்.
error: Content is protected !!