Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நினைவே சிட்டாய் Ep-12 (1)

12(1)

“அண்ணாவுக்கு ஆங்கிலம் தெரியுமா? அந்த ரூபினி சொத்தை எழுதி வாங்க வந்தாளா? இவங்களை நம்ம ஊர்க்காரன் தான் கொலை செய்ய என்கிறான் என்றால் இவங்களுக்கும் நம்ம ஊருக்கும் சம்பந்தம் இருக்குமோ?” இளந்திரையனை பார்த்தவாறு நின்றான் மாறன்.



Advertisement

தீரன் அவனறைக்கு செல்லவும் மாறனும் அவனறைக்கு சென்றான்.

இளந்திரையன் அவனறையில் சீறலுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

Advertisement

Advertisement

“அகிலரசரன் வாசனை திரவியம் ஏதும் பயன்படுத்த மாட்டானே! நம்ம ஊர்ல நம்மை எதிர்க்க வேற எவன் இருக்கான்?” சவுந்தரபாண்டியன் குடும்பம் நினைவில் வந்தாலும் அவனுக பொண்ணு விசயத்துல்ல சரியா இருப்பானுக..

“ஒரு வேலை வெளியூர்க்காரனாக இருக்குமோ? அப்படி யார் தான் என் சிட்டுவை வைத்து என்னை பழிவாங்க எண்ணுகிறான்?” புரியாமல் அன்றிரவு உறக்கம் இளந்திரையனுக்கு பறி போனது.

Advertisement

ராதிகா வீட்டில் காலையிலிருந்தே சத்யா அவரை கவனித்துக் கொண்டே இருப்பது ராதிகாவிற்கு தெரிந்தது.

சத்யா நில்லு… எதற்காக என்னையே பார்த்துக் கொண்டிருக்க?

நீங்க அங்க போகலையா? போயிடுவீங்கன்னு நினைச்சேன்.

உன்னை விட்டு நான் எப்படிடா போவேன்? சத்யாவுடன் தான்..இல்லைன்னா வேண்டாம்.

“சரி போகலாம்” சத்யா கூற, அவனை நம்பமுடியாமல் பார்த்தார் ராதிகா.

இப்ப முடியாது. 

சரிடா, “நீ சொல்லும் போது செல்லலாம்” ராதிகா முடித்துக் கொண்டார்.

மற்றைய நாள் சுப்ரியா மாறனின் புத்தகப்பையை அவனுக்கு பின்னே வைத்து அதன் பின்னே அவன் சைக்கிளில் அமர்ந்து அவளின் பின்னே செழியன் சைக்கிளில் வைத்துக் கொடுத்த கைபிடியை பிடித்துக் கொண்டு அவன் சைக்கிள் சென்றாள். மாறனுக்கு முகமே மாறிப் போனது.

மாறன் இல்லாத நேரம் பள்ளியில் சுப்ரியாவிடம் அன்றைய நாள் போல வம்பு செய்தான் கலையரசன். இம்முறை அவனின் மற்றைய நண்பர்களும் இருந்தனர். சுப்ரியா பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் சென்று விட்டாள். கலையசரன் அவளை கிடப்பில் போட எண்ணி விட்டு விட்டான்.

வைஷ்ணவி கூறினாலும் யாரும் மாறனிடம் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் மாறன் வைஷ்ணவி தெரியாமலே அவளை பல முறை கண்காணித்து வந்தான். அவனுக்கும் அவளை பிடித்து தான் விட்டது. ஆனால் அவன் அண்ணனை அவனிடமிருந்து பிரித்து விடுவாளோன்னு பயந்தான்.

அன்றிரவு அடிக்கடி அவர்கள் வீட்டு பக்கம் வரும் இளவேலன் ராதிகா வீட்டிற்கு எதிர் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார்.

மறுபக்கமிருந்து வந்த வேலனின் பால்ய சிநேகிதன் அவரை பார்த்து அவரருகே அமர்ந்தார்.

இவளுக்காக தான் கல்யாணமே பண்ணிக்காம இருந்தீயாடா?

இப்ப அதுக்கு என்னடா? இளவேலன் அவரை முறைத்தார்.

இல்லடா, இந்த பேச்சு தேவைதானா? உன்னை தான் எல்லாம் தப்பா பேசிட்டு இருக்காங்க?

பேசட்டும். என் மீது தவறு தான!

உன்னோட அப்பா தானடா காரணம். நீ எதுக்காக பழி சுமக்கணும்? உன்னை தவறாக பேசுறவங்கல பார்த்தால் எனக்கு கோபம் வருது. ஆனால் எதுவும் செய்யமுடியல..

எனக்காக நீ யோசித்ததும் வருத்தப்படுவதுமே பெரிதுதான். வாழ்க்கையை எளிதாக எண்ணிய எனக்கு என் குடும்பம், ராதுவை இழந்ததில் எல்லாம் புரிந்தது. தீரன், செழியன், மாறனால் தான் என் வாழ்க்கை மாறிடுச்சு.

அவங்களுக்காக என்று நான் செய்த எதையும் அவங்க வீணாக்கல. ஆனால் மாறன் தான் எதையும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறான். அதான் வருத்தமா இருக்கு. அவனுக்கு ராது, சத்யாவை வீட்டிற்கு அழைத்து வருவது பிடிக்கல.

என் புள்ள சத்யாவுக்கு அவங்க தாத்தா செய்ததும், நான் அவன் அம்மாவை விட்டுட்டேன் என்பதும் தான் பெருசா தெரியுது. ஏதோ நான் இங்கே சந்தோசமா சுத்திட்டு இருக்கேன்னு நினைப்பு.

என்னோட ராதுவை அவளோட பெற்றோர் தான் எனக்கு தெரியாமல் அழைச்சிட்டு போய் கல்யாணம் செய்து வச்சிருப்பாங்க. அவளுக்கு வேற குடும்பம் இருக்குன்னு நினைச்சிட்டு தான் இருந்தேன். ஆனால் எங்க காதலை மொத்தமாக முடிச்சு விட்டு என்னை விட்டு ஒரேதா போயிட்டா..

என்னோட அப்பா அவளிடம் பணமில்லைன்னு பேசி இருந்தா என்னிடம் சொல்லி இருக்கணுமா? இல்லையா? ஒரு வேலை சொல்லி இருந்தால் இப்ப நானும் என் குடும்பத்துடன் சந்தோசமா இருந்திருப்பேன். என்னோட வாழ்க்கையும் தொலைந்து அவளோட மனம் காயப்பட்டு புள்ளைய தனியா கஷ்டப்பட்டு வளர்ந்திருக்கா.

கட்டுப்பாடுகள் நிறைந்த நம்ம கிராமத்திலே புருசன் இல்லாமல் தாலி இல்லாமல் வாழ்ந்தால் என்ன என்ன பேச்செல்லாம் பேசி அந்த பொண்ணை கஷ்டப்படுத்துறாங்க.

“அவளும் எம் புள்ளையும் சிட்டியில தனியா எத்தனை துயர்களை கடந்திருப்பாங்களோ? அந்த மதுரை வீரனுக்கு தான் வெளிச்சம்” கண்ணீர் வந்தது இளவேலனுக்கு.

அறையிலிருந்தவாறு கேட்டுக் கொண்டிருந்த சத்யா சன்னல் கம்பியை இறுக பற்றி இருந்தான்.

ராதிகாவும் அவர் பேசியதை கேட்டிருப்பார். இளவேலனின் வார்த்தையில் ஸ்தம்பித்து தன் தவற்றை உணர்ந்து அவர் இளவேலனிடம் ஓடினார்.

இளவேலன் வருத்தமுடன் சோர்ந்தும் அமர்ந்தார்.

வீட்டிலிருந்து ஓடி வந்த ராதிகா இளவேலன் காலில் விழுந்து அழுதார். சத்யா இதை பார்த்தும் அமைதியாக அங்கேயே நின்றான். அவனுக்கும் அவன் அம்மாவின் தவறும் இளவேலனின் நிலையும் புரிந்தது.

ராதிகாவை தூக்கி விட்டு இளவேலன் அவரை பார்த்தார்.

என்ன மன்னிச்சிருங்க இளா.

நீங்க சொன்னது போல உங்க அப்பா எங்க வீட்டுக்கு வந்து பேசியதை உங்களிடம் சொல்லி இருக்கணும். நம்ம சத்யா வயிற்றில் இருந்த போது நிறைய பிரச்சனை தான். ஆனால் எங்க வூர்ல அதிகமாக யாரும் என்னை தவறாக பேசலை. அதற்கான ஏற்பாட்டையும் உங்க அப்பா தான் செய்தார். நான் பொய் தான் சொன்னேன். எனக்கு உங்க மேல தேவையில்லாத கோபம். அதை செல்லூர் சென்ற பின் தான் உணர்ந்தேன்.

ஆனால் என்னால உங்க அப்பா வசதி வைத்து பேசியதை தாங்கிக் கொள்ள முடியல. அவர் முன் நல்ல வசதியாக வர தான் எண்ணினேன். ஆனால் என்னால உங்க அளவிற்கு வசதியாக வர முடியல. ஆனால் நம்ம சத்யாவை நல்லவனாக வளர்த்திருக்கேன். அவனிடம் சரியான பண்புகள் உள்ளது. அவனும் சம்பாதிக்கிறான். நானும் பணம் வைத்திருக்கிறேன் ராதிகா கூற,

சினமுடன் கையை தூக்கி உயர்த்திய இளவேலன் ராதிகாவை கூர்ந்து பார்த்தார்.

ராதிகாவிற்கு பயத்தில் மனம் அடித்துக் கொண்டது.

உனக்கு சம்பாதித்து போடும் அளவு கூட பணம் அன்று சம்பாதிக்கவில்லை. ஊர்க்காரவங்களும் எங்க குடும்பத்திலும் உன்னை ஏதும் சொல்லி விடக் கூடாதுன்னு தான் என்னோட தந்தை உன்னிடம் பேசினார்.

ஏன்னா உன் பிறந்த வீட்டில் பணமில்லை. மருமகளாக நீ நம்ம வீட்டுக்கு வந்தால் யாரும் உன்னை மதிக்கமாட்டாங்கன்னு தான் உன்னிடம் காரணம் காட்டி இருக்கார். அதுக்காக அவர் செய்தது நியாயம்ன்னு சொல்லவில்லை. அவர் உன்னை மட்டுமல்ல என்னிடம் வீட்டை விட்டு போக சொல்லி சினமுடன் பேசினார்.

நான் போனேனா? பெற்றோருக்கு காதல்ன்னா பயமும் கோபமும் இருக்க தான் செய்யும். அதுக்காக ஒரேதா அவர் சொன்னாருன்னு விட்டு போயிட்டா..

“நாளை பின்னும் உன்னை யாரும் ஏதும் சொன்னால் விட்டு போயிடுவீயா?” சினமுடன் கத்தினார்.

“இல்ல” தலையசைத்து ராதிகா அழுதார். இருவரின் சத்தத்தில் அக்கம் பக்கத்து வீட்டார் வெளியே வந்து வேடிக்கை பார்த்தனர்.

ராதிகா அழவும் இளவேலன் மனமிறங்கி அவரை பார்த்து, உன் நிலைமை புரியுது. நம்ம பிள்ள வயிற்றில் இருக்கும் போதே நீ என்னிடம் சொல்லி இருந்தால் உன்னையும் பார்த்துக் கொண்டு என்னோட, உன்னோட பெற்றோரையும் சம்மதிக்க வைத்து கல்யாணம் செய்திருப்பேன்.

ஒன்று நாம அவங்களோட சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். நீயும் நம்ம பிள்ளையும் யாரிடமும் எந்த பேச்சும் வாங்கியிருக்க மாட்டீங்க. அவனும் அப்பன் பெயர் தெரியாதவன்னு பேச்சும் வாங்கி இருக்க மாட்டான். பாரு எப்படி இறுகி போய் நிக்கிறான்னு என்று சத்யாவை கை காட்டினார்.

எல்லாரும் அவனை பார்த்தனர். சத்யா கண்கள் கலங்கியது.

அவங்க யாரையும் ஏத்துக்க வச்சுக்க முடியலைன்னா கூலோ கஞ்சியோ சேர்ந்தே சமாளித்து இருக்கலாம். என்னையும் கஷ்டப்படுத்தி நீயும் கஷ்டப்பட்டுட்ட.

ராதிகா அழுதார்.

எனக்கு என்னோட ராதுவை நன்றாக தெரியும். அவள் மகனில்லாமல் என்னிடம் வந்தாலும் சந்தோசமா இருக்க மாட்டா. இங்கேயே இருங்க..

எனக்கு நேரமெல்லாம் தேவையில்லை அப்பா. ஆனால் மாறன் சம்மதத்தோடு நம்ம வீட்டுக்கு நாங்க வருவோம். ஆனால் தாத்தாவை மட்டும் மன்னிக்க முடியாது சத்யா கூறினான்.

இளவேலன் கண்ணீருடன் தன் மகனை அணைத்தார். அவனும் தன் தந்தையை அணைத்தான்.

அக்கம் பக்கத்து வீட்டார் உள்ளே சென்ற பின் இளவேலன் தன் மகனை பார்த்து, “ஏதும் பிரச்சனைன்னா தனியே சமாளிக்க எண்ணாத. நானிருக்கேன். உடனே தகவல் அனுப்பு. நீ எடுத்திருக்கும் காரியம் அனைவரும் அஞ்சக் கூடிய பேராபத்து நிறைந்த விசயம். இதற்கு முன்னிருந்த போலீஸார்கள் அனைவரும் இந்த கலவர கேஸை விசாரிக்க தொடங்கவும் தான் இறந்தனர். கவனமா இரு. உன்னோட அம்மா வேலையிலிருந்தாலும் அடிக்கடி பேசு. முன் விசாரித்த  போலீஸின் மனைவி, கைக்குழந்தையை வைத்து மிரட்டி அவரையும் பிடித்து மொத்தமாக குடும்பத்தை எறிச்சுட்டாங்க”.

ராதிகா மனம் பதற இருவரையும் பார்த்தார்.

“உங்க விசயமும் அப்படி தான் இருந்துருக்கு” சத்யா கூற, இளவேலன் புரியாமல் அவனை பார்த்தார்.

அருகே நின்ற இளவேலனின் நண்பனை பார்த்தவாறே சத்யா “உங்களுக்கு எதுவும் தெரியாதா அங்கிள்?” கேட்டான்.

“அவனிடம் என்ன கேக்குற?” இளவேலன் தன் நண்பனை பார்க்க, அவர் பட்டென இளவேலன் காலில் விழுந்தார்.

என்னடா? இளவேலன் அவரை தூக்கி விட்டார்.

என்னை மன்னிச்சிருடா. என்னாலும் தான் உனக்கு பிரச்சனை வந்தது. பூவரசனை கொன்றது அந்த கலவர ஆட்கள் அல்ல. அவரோட தந்தை பேரரசன் தான். அதை தீரனும் பார்த்துட்டான். அதான் அவன் அவரிடம் ஒட்டவில்லை. எதற்கு செய்தார்ன்னு எனக்கு தெரியல. பூவரசன் இறக்கும் தருவாயில் தீரனிடம் எதையோ கூறினார். நான் தூரமிருந்து அனைத்தையும் பார்த்தேன். ஆனால் தீரனிடம் எதையும் கேட்கவில்லை. ஆனால் தற்பொழுது பேரரசனின் குரூரப்பார்வை உன் மீது விழுந்திருக்கு.

“என்னடா சொல்ற? பூ மாமாவை அவரா கொன்றார்? ஏன்டா சொல்லவில்லை?” தன் நண்பனை அடிக்க கையை ஓங்கினார் இளவேலன்.

தடுத்த இளசத்யவேந்தன், “ஓ! இது வேறையா? என்னோட அம்மா, அப்பா பிரிய காரணம் நீங்க தான? தாத்தாவிடம் விசயத்தை வேண்டுமென்றே சேர்த்தது நீங்க தான?” கேட்க, இளவேலன் தன் நண்பனை விட்டு தள்ளி நின்று, “ஏன்டா?” என்று பார்வை பார்த்தார்.

என்னை மன்னிச்சிருடா வேலா. நான் தான் காரணம். உங்க அப்பாவுக்கு தெரியப்படுத்தியது நான் தான். அது என்னோட இக்கட்டான நிலை..

என்னடா நிலை? இளவேலன் அவர் சட்டையை பிடித்தார்.

அப்பா, ஒரு நிமிசம் அவர் சொல்லட்டும்.

என்னோட மகள் ஆப்ரேசனுக்கு பணம் தேவைப்பட்டது. நான் முதலில் உன்னிடம் தான் கேட்டேன். அப்பா பணம் தர மாட்டார்ன்னு என் நிலையை பற்றி கூட யோசிக்காமல் சொல்லிட்ட. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல. மற்ற நம் நண்பர்கள் பற்றி கூறவே வேண்டாம். அவங்க சும்மாவே உதவ மாட்டானுக..

அதுக்காக?

அதுக்கு..அவன் என் பொண்ணுக்கான எல்லா செலவையும் பார்த்துக்கிறேன்னு சொல்லி உதவினான். அதான் செய்துட்டேன்.

அவனா? எவன்? சத்யா கேட்டான்.

வந்து.. என்று இளவேலனை பார்த்து பொன்னரசன்.

மாமாவா? எதுக்குடா?

உன்னோட ராதுவை அவருக்கும் பிடித்திருந்தது. இவங்களுக்காக தான் பொன்னா அவரோட திருமணத்தை தள்ளி போட்டுக் கொண்டே இருந்திருக்கார். ராது கர்ப்பமா இருக்கான்னு தெரிந்த பின் தான் திருமணம் பேருக்கென்று செய்தார். வருடங்கள் கழித்து தான் அவர் மனைவியுடன் வாழவே தொடங்கினார்.

“அடப்பாவி! ஏன்டா இப்படி பண்ணீங்க?” ராதிகா இளவேலன் நண்பனின்

சட்டையை பிடித்தார்.

“அம்மா” அவர் நிலையையும் யோசிங்க. அப்பாவாக இருந்து இவர் சரியாக தான் செய்திருக்கார். ஆனால் இப்ப எதுக்கு அம்மாவை பற்றி தப்பா பேசுறது போல பேசுனீங்க?

இளவேலன் நண்பர் மண்டியிட்டு அழுதார்.

என்னடா? இளவேலன் பதற, என்னோட பொண்டாட்டி இப்ப பொன்னா கிட்ட தான் இருக்கா. வெளிய தெரிஞ்சா அசிங்கமா போயிடும். அவளை வைத்து உங்களை பிரிக்க இப்ப சொல்லி அனுப்பி இருக்கார்…

இளவேலன் அதிர்ந்து நண்பனை பார்த்தார்.

டேய், இதை நேரடியாக என்னிடம் சொல்லி இருக்கலாமே!

சொன்னால் என்னோட பொண்டாட்டியை அவன்…அழுதார்.

“சரி. ஏதும் தெரியாதது போல இருந்துக்கோ” இளவேலன் சொல்லி தன் மகனை பார்த்தார். சத்யாவின் கண்கள் சுற்றுப்புறத்தை அளந்தது.

ஓர் வீட்டின் பின்னின்று ஒருவன் இவர்களை வேவு பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் ஓடிச் சென்று அவனை பிடித்து பார்த்தனர். “கலையரசனின் தம்பி தமிழரசன் தான்” அவன்.  

“சின்னவனா?” இளவேலன் அவனை முறைத்து பார்த்தார். சத்யாவோ அவனை பார்வையிலே கணித்து விட்டான்.  

“இந்த நேரத்துல எதுக்கு வந்த தமிழ்?” சத்யா கேட்டான்.

மாமா, என்னை மன்னிச்சிருங்க. இன்று மாலை பள்ளி விட்டு வந்த போது யாரோ முணங்கும் சத்தம் கேட்டது. சத்தம் வந்த பக்கம் போனப்ப முகிலண்ணா இடையில வந்துட்டான். அதனால என்னால என்னன்னு பார்க்க முடியல.

இரவு சாப்பிட செல்லும் போதும் சத்தம் கேட்கவும் அவ்விடம் சென்று பார்த்தேன்.

யாரை ஒரு பொம்பளைய கட்டிப் போட்டிருந்தாங்க. அவங்க வாயில துணிகள் அடைக்கப்பட்டு இருந்தது. சாப்பிடல. தண்ணீ கூட குடிக்கல போல..ரொம்ப சோர்வா இருந்தாங்க. அவங்களிடம் பேசலாம்ன்னு நினைச்சேன். தாத்தாவின் சத்தம் கேட்கவும் ஓடிட்டேன். எனக்கு உங்ககிட்ட சொல்லணும்ன்னு தோணுச்சு. அதான் வந்தேன். இப்ப இந்த அங்கிள் சொல்றத பார்த்தால் இவங்க மனைவியா இருக்குமோன்னு தோணுது.

தமிழ், “உங்க வீட்ல அடைச்சு தான் வச்சிருக்காங்களா? பெரியவருக்கும் தெரியுமா?” இளவேலன் அதிர்ச்சியுடன் கேட்டார்.

“ஆமா பெரிய மாமா”. இப்ப நான் என்ன செய்றது? கேட்டான் அவன்.

“நிஜமாகவே பெரியவருக்கு தெரியுமா?” இளவேலன் நம்ப முடியாமல் கேட்டார்.

சின்னப்பையன் எனக்கே தெரியுது. அவருக்கு தெரியாமலா இருக்கும்?

“அப்படின்னா அவருக்கும் எங்களை பிரித்ததில் பங்கிருக்குமோ?” இளவேலன் சிந்தனையுடன் குழப்பமுடன் அமர்ந்தார். ராதிகாவிற்கும் அதே யோசனை தான் சென்று கொண்டிருந்தது.

சத்யா, “என்னோட பொண்டாட்டிய காப்பாத்தி குடுத்திருய்யா. நாங்க இந்த ஊரை விட்டே போயிடுறோம்” இளவேலனின் நண்பர் கதறி அழுதார்.

“நீங்க எதுக்கு ஊரை விட்டு போகணும்? முதலடி எடுத்து வைக்கும் நேரம் வந்திருச்சு” சத்யா சொல்ல, இளவேலன் நிமிர்ந்து அவனை பார்த்தார்.

தப்பு யார் செய்தாலும் தப்பு தானப்பா? அங்கிள் நீங்க என்னோட வாங்க. அப்பா நீங்க கிளம்புங்க. தமிழ் முதல்ல நீ வீட்டுக்கு போ. யாருக்கும் உன் மீது சந்தேகம் வரக் கூடாது..

அவன் சென்றதும் வீட்டிற்குள் சென்று காக்கி உடையில் வந்தாள் இளசத்யவேந்தன்.

அலைபேசியில் பேசிக் கொண்டே அவன் செல்ல, இளவேலன் அவனை நிறுத்தி, என்ன பண்ணப் போற?

உங்க நண்பரின் மனைவியை மறைமுகமாக நாம காப்பாற்றினாலும் அவனுக அவங்கள மீண்டும் தூக்க தான் செய்வாங்க.

அதுக்கில்லைடா..

பிரச்சனை தான? வரட்டும். நீங்க வீட்டுக்கு பத்திரமா போங்க. சிலரோட கண்ணு உங்க மேல இருக்கு. தனியா போயிடுவீங்களா? அக்கறையுடன் கேட்டான்.

“போயிடுவேன். இது என்னோட எண். பிரச்சனை முடியவும் கால் பண்ணு” இளவேலன் தன் நண்பன் தோளில் தட்டி, “உன்னோட பொண்டாட்டிக்கு ஏதும் ஆகாது. பயப்படாம இரு” என்று இரு வார்த்தை ஆதரவாக பேசி ராதிகாவை பார்த்துக் கொண்டே சென்றார்.

அம்மா, “உள்ள போங்க. கதவை நல்லா லாக் பண்ணீக்கோங்க. என்னோட வாய்ஸ் கேட்டால் மட்டும் கதவை திறங்க” என்று சொல்லி சத்யா இளவேலன் நண்பரை முதலில் ஸ்டேசன் அழைத்து சென்று “எஃப் ஐ ஆர்” வாங்கி விட்டு, மற்ற போலீஸூடன் பேரரசன் வீட்டிற்கு சென்றான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு முகிலரசனின் தந்தை மகிழ்வரசன் கதவை திறந்தார். வீட்டின் ஒவ்வொரு அறையையும் திறந்து தாத்தாவும், அவர் மகன்கள் பேரன்கள் வந்தனர்.

“செக் இட்” சீற்றமுடன் சத்தமிட்டான் சத்யா. அவனுடன் வந்த போலீஸ் வேகமாக ஒவ்வோர் அறையாக தேடிக் கொண்டிருந்தனர்.

பொன்னரசை நெருங்கிய சத்யா, “இவரோட மனைவியை நீங்க கடத்தி வைத்திருப்பதற்காக உங்களை கைது செய்கிறேன்” என்று விலங்கை அவர் கையில் பூட்டினார்.

“ஏலேய், யார் வீட்டுக்கு வந்த என்ன செஞ்சிட்டு இருக்கீக? தெரியலையா…” பேரரசன் சீறினார்.

சத்யா சளைக்காமல் அவருக்கு இணையாக, “யாரு வீடா இருந்தாலும் தப்பு நடந்தால் போலீஸ் வரத்தான் செய்யும்” கத்தினான்.

ஏய்! அகிலரசனும் கலையரசனும் சத்தமிட்டனர்.

“வாயை மூடுங்கடா பொறுக்கிகளா?” சத்யா சத்தமிட, “யார பார்த்து பொறுக்கீன்னு சொன்ன?” அகிலரசன் சத்யாவின் காக்கி உடையில் கையை வைத்தான். மறுநிமிடம் பறந்து சென்று விழுந்தான்.

“பேச்சு பேச்சா இருக்கும் போது போலீஸ் உடையில் கை வைக்கிற? இவனையும் கைது செய்யுங்க கான்ஸ்டபுள்” அகிலரசன் கையிலும் விலங்கு மாட்டினர்.

சார், “அந்த பொம்பள மயங்கி இருக்காங்க” ஒருவர் கத்த, அவரை அப்படியே வெளியே தூக்கி வந்தனர். இளவேலனின் நண்பர் அழுது கொண்டே பின்னே வந்தார்.

இருவரையும் வீட்டிலிருந்து இழுத்து செல்ல, திடீரென அங்கே ஊர்க்காரர்கள் வந்து நின்றனர்.

எல்லாவற்றையும் பார்த்து, “ச்சீ…நல்ல மனுசங்கன்னு பார்த்தா பொம்பளைய கடத்தி வச்சிருக்காங்க. இந்த அகில் போலீஸ்காரரையே அடிச்சிருக்கான். அவர் சும்மா விடுவாரா?” அனைவரின் அவதூறான பேச்சு அனைவர் காதையும் நிறைக்க, அகிலின் சினம் உச்சிக்கு சென்று கொண்டிருந்தது.

சித்தப்பாவையும் மகனையும் வெவ்வேறு சிறையில் அடைத்தனர்.

தன் மனைவியை விழிக்க வைக்க, அவர் கதறி விட்டார். இருவரும் அழுது முடித்து சத்யாவிடம் வந்தனர்.

ரொம்ப நன்றி சத்யா. உங்க வாழ்க்கையை அழித்த பாவம் தான் இது. என்னை மன்னிச்சிருய்யா. இனி நான் யார் விசயத்திலும் தலையிட மாட்டேன். அந்த பெண்மணியும் சத்யாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

ஆன்ட்டி, பெரிய இப்படியெல்லாம் செய்யக் கூடாது. அம்மா சொல்லுவாங்க. “நீங்களும் கையெழுத்திட்டு கொடுத்துட்டு போங்க. நாளை கோர்ட்டுக்கும் வருவீங்கல்ல?” சந்தேகமுடன் அவர்களை பார்த்தான்.

“கண்டிப்பாய்யா, வாரேன்..இந்த மாதிரி அடுத்தவங்க வாழ்க்கையை சீரழிக்கும் பாவிகளையெல்லாம் சும்மா விடக்கூடாது” என்று பொன்னரசனை கேவலமான ஒரு பார்வையை பார்த்து விட்டு கிளம்பினார் அந்தம்மா. அவர் கணவரும் அவர்களை முறைத்து பார்த்துக் கொண்டே சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!