Skip to content
Post Views: 1,756
12(2)
நடந்த சல்லாபத்தில் கலையரசனை அவர் தாத்தா பேரரசு கவனிக்க தவறி விட்டார். கலையரசன் மறுநிமிடம் வேக வேகமாக ஓடினான் சத்யாவின் வீட்டிற்கு.
Advertisement
“அப்பன் புத்தி தான பிள்ளைக்கும் வரும்” என்றவாறு மனதில் “அந்த ராதிகாவை வைத்து மிரட்டலாம்” என்ற எண்ணத்துடன் செல்ல, அங்கே ஒருவன் இவன் எண்ணத்தை தவிடு பொடியாக்க சிம்ம சொப்பனமாய் சத்யா வீட்டின் வெளியே மதுரை காவலுக்கே உரிய மதுரைவீரன் தோரணையோடு அமர்ந்திருந்தான் இளந்திரையன்.
மாமா, இங்க என்ன பண்றீங்க?
Advertisement
Advertisement
நான் நம்ம ஊருக்கு காவலா இருக்கேன். நீ இங்க என்ன பண்ற? இளந்திரையன் கேட்டான்.
மாமா, இந்த போலீஸ்காரன் இருக்கான்ல்ல அவன் என்னோட அப்பாவையும் அகிலண்ணாவையும் பொய் கேஸ்ல கைது செய்துட்டு போயிட்டான். தாத்தா உடைஞ்சு போயிருப்பாங்க. அதான் இந்த டீச்சரிடம் பேசலாம்ன்னு வந்தேன்.
Advertisement
“பேச வந்தீயா?” புருவம் உயர்த்தி சந்தேக பார்வையை கலையரசன் மீது வீசினான் இளந்திரையன்.
இப்ப எதுக்கு மாமா இப்படி பாக்குறீங்க?
“எனக்கு நீ பேச வந்த மாதிரி தெரியல. உன்னோட முதுகுக்கு பின்னாடி கத்தி வச்சிருக்க? பேச வர்றவன் எதுக்கு கத்தி எடுத்துட்டு வரணும்?”
மாமா, நான்..என்று கண்ணை உயர்த்தி இளந்திரையனை பார்த்த கலையரசன் தீரன் எதிர்பாராத சமயம் அவன் மீது வீசினான். அது தீரனின் மார்பில் கோடாகி இரத்தம் வந்தது.
கலையரசன் புன்னகையுடன், “என்ன மாமா நேற்று வந்தவனுக்காக இப்படி வந்து நிக்கிறீங்க?” பல்லை காட்டிக் கொண்டே கேட்டான்.
நேற்று வந்தவனா? எவன்டா நேற்று வந்தவன்? அவன் என்னோட தம்பிடா. என்னோட சித்துப்பூவின் மகன் இளசத்யவேந்தன். என்னோட இரத்தம்டா. “அவனுக்காக வரமால் எவனுக்காக வருவேன்?” கத்தினான்.
மாமா, “தப்பு பண்றீங்க” அவன் மீண்டும் கத்தியை வீச, உள்ளே சத்தம் கேட்டது. ராதிகா சன்னலை திறந்து பார்த்தார்.
இளந்திரையனுக்கு அடிபட்டது இவர் கண்ணில் படவில்லை.
தீரன் கலையரசனின் கத்தியை லாவகமாக பிடுங்கி தூக்கி எறிந்து விட்டு அவனது சட்டையை இழுத்து நீட்டப்பட்டிருந்த உயர்ந்த இரும்பு கம்பியில் மாட்டி விட்டான். கலையரசன் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தான்.
“கீழ இறக்கி விடு மாமா” அவன் சத்தமிட, “இருடா உன் சட்டை கிழியவும் கீழ தான் விழப் போற” என்று கையை தட்டி விட்டு சாதாரணமாக அமர்ந்தான்.
சட்டை கிழிந்து பொத்தென கீழே விழுந்தான். தீரன் இப்பொழுது இவனை கண்டுகொள்ளவில்லை.
அவனுக்கு முதுகு வலித்தது. பின்னே தொட்டுப் பார்த்தான். முதுகில் இரத்தமாகி இருந்தது.
மாமா நீ செய்த வேலையால் நீ கஷ்டப்படுவ..
“போடா. முதல்ல பத்திரமா வீட்டுக்கு போய் சேரு” தீரன் சொல்ல, அவனை முறைத்தவாறு மனதில் வஞ்சத்துடன் நகர்ந்தான் கலையரசன்.
பெயில் எடுக்க வக்கீலுடன் வந்து நின்றார் பேரரசன்.
வக்கீல் சார், இந்த பெயில் இனி நான் நினைத்தாலும் கொடுக்க முடியாது. நாளை காலையே கோர்ட்டுல்ல இவனுகள வர சொல்லி மனு வந்துருச்சு என்று காகிதத்தை நீட்டினான் சத்யா.
சரி சார், ஆனால் அகிலரசனை விடலாமே சார்?
சார், “நான் இப்ப உங்க சட்டையை பிடிச்சு சொல்ல வேண்டியதை சொல்லி இருந்தால் என்னை அப்படியே விட்ருவீங்களா?” கேட்டான் சத்யா.
அதெப்படி விடுவேன். நீங்க போலீஸ்ன்னா நான் வக்கீல். எனக்கும் சமூகத்தில் மரியாதை இருக்குல்ல.
“அதான்..அதே தான். நானும் செய்திருக்கேன். நான் உயிராய் நினைக்கும் என் சட்டையில் அவன் கையை வைச்சுட்டான். எப்படி சார் விடுவேன்? அதுக்காக அடிக்கலாம் மாட்டேன். அவன் அமைதியாக இங்க இருந்துட்டு உங்க வீட்டுக்கு ஒரு வாரத்துல்ல வந்திருவான்” பேரரசனை பார்த்தான்.
அவர் பல்லை கடித்துக் கொண்டு, “உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விட மாட்டேன்டா” கூறினார்.
சரிங்க தாத்தா, “நான் கூப்பிடும் போது வாங்க” நக்கலாக அவரை கலாய்த்து அனுப்பினான் சத்யா. சிறையில் இருந்த அகிலரசனும் பொன்னரசனும் சத்யாவை சீற்றமுடன் பார்த்தனர்.
சார், “நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்கிறேன்” கான்ஸ்டபிள் ஒருவர் வந்தார்.
“வேண்டாம். நான் இவரை கோர்ட்டில் பிரடியூஸ் செய்யும் வரை என் கண்காணிப்பிலே இருக்கட்டும்” சத்யா அவரை அவர் வீட்டுக்கு அவன் குடும்பத்துக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லி அனுப்பி விட்டு ராதிகாவை அழைத்து விசயத்தை கூறினான். அவரும் கலையரசனின் செய்கை, பேச்சை பார்த்ததை சத்யாவிடம் கூறி வருந்தினார்.
“அம்மா, இதெல்லாம் ஒன்றுமில்லை. அவன் சின்னப்பையன் புரியாமல் செய்கிறான். பள்ளியில் ஏதாவது பேசினான்னா கண்டு கொள்ளாதீர்கள்” தன் தாய்க்கு அறிவுரை கூறி அலைபேசியை வைத்தான்.
வீட்டிற்கு இளந்திரையன் சோர்வுடன் வருவதை பார்த்து அவனுக்காக காத்திருந்த வைஷ்ணவி, “நீங்க இந்த ஆடையுடன் போகலையே!” கேட்டாள்.
ம்ம்!
என்னாச்சு?
“ஒன்றுமில்லை. கொஞ்சம் தண்ணீர் எடுத்துட்டு வா” என்று அமர்ந்தான். அப்பொழுது பெரியதாக வலிக்காத காயம் நேரமாகவும் வலிக்க ஆரம்பித்து விட்டது இளந்திரையனுக்கு..
தண்ணீர் செம்பை அவனிடம் கொடுத்து விட்டு, அவனையே வைஷ்ணவி பார்த்துக் கொண்டிருந்த சமயம் அவனது சட்டையில் லேசாக இரத்தக்கறை தெரிந்தது.
அவனருகே வந்து அதனை அவள் தொட்டு பார்க்க, அவன் அவள் கையை பிடித்து “வேண்டாம்” தலையசைத்தான். அவன் சோர்வு, இரத்தக்கறையை பார்க்கவும் அவளுக்கு பயமாகிப் போனது.
விரைந்து அவனை மேலும் நெருங்கி அவனது சட்டை பொத்தானை கழற்றினாள்.
சிட்டு வேண்டாம். பாப்பா தனியா இருக்கா..போ.
இரத்தம் வர்ற மாதிரி இருக்கு? கண்கலங்கினாள்.
ஒன்றுமில்லை சிட்டு.. சின்ன காயம் தான்.
அவள் பொத்தானை கழற்றி அவன் மார்பில் இருந்த கீறலில் இருந்து இரத்தம் வழிவதை பார்த்து கண்ணீருடன் அவனை பார்த்தாள்.
ஒன்றுமில்லை சிட்டு. நான் என்னறையில் மருந்து வச்சிருக்கேன். போட்டுப்பேன்.
“இதையா சின்னக்காயம்ன்னு சொல்றீங்க?” அழுகை அவளுக்கு பொங்கிக் கொண்டு வந்தது. கைகள் நடுக்க குனிந்து அவன் காயத்தை ஊதினாள்.
மாறன் இதை பார்த்து, “இந்த நேரத்துல்ல என்ன இது?” என எண்ணியவாறு அருகே வந்து பார்த்து அதிர்ந்து, “அண்ணா என்னாச்சு?” பதறி ஓடி வந்தான்.
ஒன்றுமில்லைடா சத்தம் போடாத. எல்லாரும் விழிச்சிடுவாங்க..
“ஐய்யோ அண்ணா! இரத்தம் வருது” மாறன் வைஷ்ணவியை பார்க்க, அவள் அழுது கொண்டே காயத்தை ஊதிக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து அவன் தன் அண்ணனை பார்க்க, இளந்திரையனுக்கு கண்கள் சொருகியது. இவ்வளவு நேரம் சமாளித்த அவனால் இதற்கு மேலும் சமாளிக்க முடியவில்லை. பட்டென மேசையில் சாய்ந்து விட்டான்.
இருவரும் திகைத்து அவனை பார்க்க, அண்ணாவை பிடிங்க. அறைக்கு அழைத்து செல்லலாம்..
“இப்ப மேல போக முடியாது. எங்க அறையில அழைச்சிட்டு போகலாம்” வைஷ்ணவி சொல்ல, மாறன் உதவியுடன் இருவரும் இளந்திரையனை வைஷ்ணவியின் படுக்கையில் கிடத்தினார்கள்.
கண்ணீரை துடைத்தவாறே மாறா, “முதலுதவி பெட்டி ஏதும் இருக்கா?” என்று அவள் கேட்க, அவன் அவனறைக்கு சென்று எடுத்து வந்தான்.
மாறா, “மருத்துவரை அழைக்கலாமா?” வைஷ்ணவி கேட்டாள்.
இது யாருக்கும் தெரிய வேண்டாம். நீங்க உங்களுக்கு தெரிந்ததை பாருங்க..
தண்ணீரால் காயத்தை துடைத்து மருந்திட்டு, அங்கிருந்த பொருட்களை வைத்தே கட்டிட்டாள் வைஷ்ணவி.
“டாக்டர் பார்த்தால் தான குணமாகும்” வருத்தமுடன் அவள் கேட்க, அவள் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்த மாறன், அண்ணா அடிப்பட்டால் என்றும் மருத்துவமனைக்கு போகவே மாட்டான். அவனறையில் மருந்து இருக்கும். அதனை உபயோகித்துக் கொள்வான்.
அப்ப எடுத்துட்டு வா..
இல்ல, என்னோட அண்ணா அறைக்குள்ள யாரும் போனால் அவனுக்கு பிடிக்காது.
ஏன்?
அது எனக்கும் தெரியல. அவனுக்கு பிடிக்காது. ரொம்ப கோபப்படுவான். நாங்க யாருமே போனதில்லை. சித்தப்பூவை கூட விட மாட்டான்.
ஏன் அந்த பொண்ணு பற்றிய விசயங்கள் இருக்குமா? வைஷ்ணவி கேட்க, இதை எதிர்பாராத மாறன்..இல்ல..இல்ல..அதுக்கு வாய்ப்பில்லை. அண்ணா தனிமையிலே வாழ்ந்தவன். அதனால அவனுக்கு யாரும் அவனறைக்கு செல்வது பிடிக்காமல் இருக்கலாம்.
ம்ம்..
இவரு காவல் காக்கும் மதுரைவீரனாக கூட இருக்கட்டும். அதுக்காக விரதமெல்லாம் இருக்கணுமா? வேலையும் பார்த்து வீட்டையும் பார்த்து, ஊரையும் பார்த்துப்பவர். அவரை பார்த்துக்க வேண்டாமா? வைஷ்ணவி சாதாரணமாக கேட்டது மாறன் கன்னத்தில் அறைந்தது போல இருந்தது அவனுக்கு.
இதுவரை அவன் அண்ணன் பெருமையையும், அவன் என்னோட அண்ணன் மட்டும் தான்னு சொல்லும் மாறன் இளந்திரையனின் உடல் நிலையோ, சாப்பிடுகிறானா? இல்லையா? என கவனிக்காததை எண்ணி மனதில் திட்டிக் கொண்டான்.
“ஒரு வேளை உங்க அத்தை பொண்ணு உயிரோட இருந்தால் இவர் கல்யாணம் செய்துருப்பார்ல்ல? இவரை அந்த பொண்ணு நல்லா கவனிச்சிருக்கும்ல்ல?” கேட்க, மாறனுக்கு கண்ணீர் வந்து விட்டது.
மாறா, என்னாச்சு? தப்பா ஏதும் பேசிட்டேனா?
“அண்ணா எங்க எல்லாருக்கும் வேண்டியதை செய்து எங்களை பாதுகாப்பா பார்த்துக்கிறார். இதுவரை இந்த எண்ணம் என்னிடம் தோன்றியதேயில்லை. எல்லாரும் அவரவர் வேலையை தான் பார்த்திருக்கோம். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து ஒரு நாள் கூட எங்களுடன் சேர்ந்து அவர் சாப்பிட்டதேயில்லை” அழுதான் மாறன்.
“மாறா” வைஷ்ணவி அவனருகே சென்று அவன் கையை பற்றிக் கொண்டாள். அவன் என்ன எண்ணினானோ வைஷ்ணவியை அணைத்து அழுதான். அவளும் அணைத்துக் கொண்டாள்.
“அழாத மாறா, கோவில் திருவிழா முடியவும் அவரை நீயே உட்கார வைத்து சாப்பிட சொல்லி பார்த்துட்டே இரு. அவர் எங்க போகப் போகிறார்?” அவனை தேற்றும் விதமாக பேசினாள்.
மாறன் விலகி அவன் அண்ணனை பார்த்து விட்டு, “அண்ணா எனக்கு காயப்பட்டால் சில மாத்திரைகளும் வாங்கித் தருவான். இருங்க அது இருக்கான்னு பார்க்கிறேன்” அவனறைக்கு சென்று சிட்டையுடன் வந்தான்.
“இல்லையா? நான் வாங்கிட்டு வரவா?” வைஷ்ணவி கேட்க, நான் போயிட்டு வாரேன். இந்த நேரத்துல்ல மெடிக்கல் இருப்பது சந்தேகம் தான் பார்த்துட்டு வாறேன் என்று கிளம்பினான்.
நிறைய இடங்களில் இல்லை. ஓரு மெடிக்கல் ஷாப்பை கடை உரிமையாளர் அடைத்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்ற மாறன், அவரிடம் சிட்டையை காட்டி கேட்டான்.
அவனை பார்த்து, “யாருக்கு மாறா மருந்து?” கேட்டார்.
எங்க வீட்ல இருக்கிற பொண்ணுக்கு தான் பாத்ரூம்ல விழுந்துட்டாங்க. மாஃப் கம்பி இழுத்து விட்டுருச்சு. அதான் அண்ணா வாங்கிட்டு வர சொன்னாங்க..
அவர் மருந்தை கொடுக்க, விரைந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். அவனை தாண்டி சைக்கிளில் இருவர் பேசுவதை கேட்டு நின்று விட்டான்.
பொன்னரசனும், அகிலரசனும் கைதான விசயத்தை பேசிக் கொண்டு சென்றனர். மாறன் சிந்தனையுடன் உள்ளே சென்றான். இளந்திரையன் விழித்திருந்தான்.
வைஷ்ணவியிடம் மருந்தை கொடுத்து தன் அண்ணனை பார்த்துக் கொண்டே அமர்ந்தான்.
என்ன மாறா? இளந்திரையன் கேட்டான்.
இந்த காயம் எப்படி பட்டது?
இந்த காயமா? குலசேகரன் தாத்தாவோட பையன் மீண்டும் அவரை அடிக்க வந்தான். உதவ போனேன். அவனுக்கும் எனக்கும் நடந்த சண்டையில் அடிபட்டு விட்டது.
“பொய் சொல்லாத அண்ணா” மாறன் பேச்சு மாற, வைஷ்ணவி இருவரையும் பார்த்தான்.
மாறா, “நீ உன்னோட வேலையை மட்டும் பாரு. யார் விசயத்திலும் தலையிடாத!”
ஆனால் நீ தலையிடுற அண்ணா. அகில் மாமாவோட சண்டை போட்டியா?
அவனோட நான் எதுக்கு சண்டை போடணும்?
அண்ணா, அவங்கள அரெஸ்ட் பண்ணி இருக்கான் அந்த போலீஸ்காரன்.
“என்னடா அந்த போலீஸ்காரன்? அவன் உனக்கும் அண்ணன் தான்” இளந்திரையன் வலியுடனும் சத்யாவிற்காக பேசினான்.
அண்ணா, அவன் எனக்கு அண்ணனாக முடியாது.
இங்க பாரு. நான் யார் விசயத்திலும் தலையிடல. எனக்கு மத்தவங்க சந்தோசம் தான் முக்கியம். அதை விட நம்மை உயிராக இத்தனை வருடங்களாக வளர்த்த என் சித்தப்பூவின் சந்தோசத்திற்காக எதுவும் செய்வேன்.
அதுக்காக அவங்கள இப்படியா பிடிச்சுக் கொடுப்ப?
எல்லாரும் செஞ்ச தப்புக்காக தண்டனை அனுபவிக்கிறாங்க..
அது நல்லது தான். ஆனால் உன்னால் தாத்தா வருத்தப்படுவார்ல்ல? பேரரசனுக்காக பேசினான் அவர்களை பற்றி அறியாமல்.
“தாத்தாவா? அவரா உன்னை பார்த்துக் கொண்டார். மாறா நீ எதுவும் தெரிஞ்சுக்காம பேசாத!”
“சரிண்ணா, நான் பேசலை” அவன் சினமுடன் அமைதியாக இருந்தான்.
இந்த மருந்தை எப்படி போடணும்? வைஷ்ணவி இடைபுகுந்தாள்.
இளந்திரையன் அவளிடம் இருந்ததை வாங்கி அவனாகவே போட சென்றான். அவன் செய்ததை பார்த்த வைஷ்ணவி அவன் கையிலிருந்து மருந்தை பிடுங்கி, அவனை முறைத்து விட்டு அவள் போட்டிருந்த கட்டை பிரித்து ஊதிக் கொண்டே மருந்திட்டாள்.
மாறனை கவனிக்காமல் இளந்திரையன் அவளையே ஏக்கமுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
மாறன் இளந்திரையனை பார்த்து, “என்னோட அண்ணா ரொமான்டிக்கா இப்படி பார்க்கிறார்?” என்று வைஷ்ணவியை பார்க்க, அவள் மருந்தை வைத்து கட்டிட்டுக் கொண்டே,
“ஏன் சார்? வரும் போதே மருத்துவமனைக்கு போயிட்டு வந்திருக்கலாம்ல்ல? உங்களுக்கு என்ன மனசுல்ல டாக்டர்ன்னு நினப்பா? மதுரை வீரனுக்கு சண்டை போட தான் தெரியும்ன்னு நினைச்சா. நல்ல வேலை பாக்குறீங்க?” அவள் திட்டிக் கொண்டிருக்க, அவன் பார்வை கொஞ்சம் கூட மாறவில்லை.
வைஷ்ணவியை ரசித்து பார்த்தான்.
மாறா, உன்னோட பாசத்துல்ல உங்க அண்ணனை இப்படியே விட்ட அவ்வளவு தான். எல்லா தொழிலையும் கையில் எடுத்திருவார். அதனால நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிரு..
“உங்க குலதெய்வம் மதுரைவீரனுக்கு இரண்டு பொண்டாட்டியாம். இவருக்கு ஒன்று கூட கொடுத்து வைக்கலை போல..” அவள் பேசிக் கொண்டே இளந்திரையனை பார்த்தாள். அவள் பேச்சில் துடிக்கும் அவளது இதழ்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கண்கள் விரிய அவனை பார்த்து விட்டு மாறனை பார்க்க, அவன் கன்னத்தில் இரு கைகளையும் ஊன்றி இருவரையும் பார்த்தான்.
விரைந்து அவனிடமிருந்து எழுந்து, “மாறா உன்னோட அண்ணா தூங்கிடாமல். இன்னும் இன்செக்சன் இருக்கு. முதல்ல அவரு சாப்பிடட்டும் பின் போட்டுக்கலாம்” சொல்லிக் கொண்டே அடுக்கலைக்குள் சென்று விட்டாள்.
மாறனும் எழுந்து அவள் பின்னே சென்றான்.
“சிட்டு எனக்கு சாப்பாடு வேண்டாம். ப்ரூட் கட் செய்து எடுத்து வா” சொல்லி இளந்திரையன் புன்னகையுடன் படுத்துக் கொண்டான்.
வைஷ்ணவி பின்னே சென்ற மாறன், “அண்ணா சாப்பாடு வேண்டாம்ன்னு சொல்றான்? நீங்க என்ன பண்ணப் போறீங்க?”
சாப்பாடு, குழம்பு தான் இருக்கே!
அண்ணா, சாப்பிட மாட்டான்.
உனக்கு உன் அண்ணாவின் விரதம் முக்கியமா? இல்லை உடல்நலம் முக்கியமா?
சொன்னா சாப்பிடுவாரா?
சாப்பிட வைக்கலாம்..
எப்படி?
“ஜஸ்ட் சீ” என்று தட்டில் உணவுடன் குழம்பை ஊற்றி பொறித்து வைத்திருந்த அப்பளமும் அதனுடன் பூசணிக்காய் பொரியலும் வைத்து, “தண்ணீரை எடுத்துக் கொண்டு வா” என்று மாறனை அழைத்தாள்.
அறைக்குள் வரவும், “சார் சாப்பிடுங்க” என்று உணவை அவன் முன் வைத்தாள்.
சிட்டு, நான் தான் சொன்னேன்ல்ல? எனக்கு சாப்பாடு வேண்டாம்.
இவ்வளவு பெரிய காயமாகி இருக்கு. நாளை நீங்க நல்லபடியா எழணும்ன்னா சாப்பிட்டே ஆகணும். உங்க தேவியம்மாவும், மதுரைவீரனும் நீங்க சாப்பிட்டீங்கன்னு கோவிச்சுக்க மாட்டாங்க. நான் வேணும்ன்னா நாளை முழுவதும் சாப்பிடாமல் உங்களுக்கு பதில் விரதம் இருக்கேன். போதுமா? சாப்பிடுங்க சார்..
“நீ விரதமா? வேண்டாம். எனக்கு உணவு வேண்டாம்” இளந்திரையன் பிடிவாதமாக படுத்தான்.
“சரி..” இழுத்த வைஷ்ணவி “மாறா எனக்கு ரொம்ப பசியா இருந்தது. உன் அண்ணா சாப்பிடும் போது நானும் சாப்பிடலாம்ன்னு எடுத்த வச்ச உணவை கீழ போட்டுக்கிறேன். இந்தா இதை நீ சாப்பிடு” அவனிடம் தட்டை நீட்டினாள். அவன் புரியாமல் அவளை விழித்து பார்த்தான்.
“இன்னும் நீ சாப்பிடலையா?” இளந்திரையன் எழுந்து கேட்டான்.
சாப்பிட்டேன். பாப்பாவை வச்சுக்கிட்டே சாப்பிட்டேனா? அதான் சரியாக சாப்பிட முடியல. லைட்டா பசிக்குது. அதான் எடுத்து வந்தேன். நீங்க சாப்பிடலைன்னா எனக்கும் வேண்டாம்.
“சாப்பிடுறேன். உனக்கும் எடுத்துட்டு வா” இளந்திரையன் சொல்ல, மாறன் ஆவென வைஷ்ணவியை பார்த்தான்.
“மாறா, வர்றீயா?” அழைத்தாள் வைஷ்ணவி.
பிரம்மை பிடித்தவன் போல மாறன் அவள் பின்னே சென்றான்.
எப்படி ஒத்துக்க வச்சேன் பாரு. உன்னோட அண்ணா ரொம்ப பாசமானவரு. நாங்க உங்க வீட்டுக்கு வந்த ரெண்டாவது நாளே தெரிஞ்சுக்கிட்டேன். ஆனால் நீ தான் ரொம்ப பேசிட்ட..
சாரி, ரொம்ப தேங்க்ஸ். அண்ணாவும் எங்களை நல்லா பார்த்துப்பார். ஆனால் ஒருநாள் கூட அவரை கவனிக்க இங்க ஆள் இல்லை.
சித்தப்பூ அண்ணாவை சாப்பிட அமர சொன்னால், “சாப்பிடு சித்தப்பூ” என அறைக்கு சென்று விடுவான். “எப்பொழுது எப்படி சாப்பிடுவான்? அவனுக்கு என்ன பிடிக்கும்? எதுவும் எங்க யாருக்கும் தெரியாது”..
உன்னோட அண்ணா நான்வெஜ் பிரியர் தான்.
நீங்க தான் வந்ததிலிருந்தே நான்வெஜ் சமைக்கலை.
“நான் சமைக்கலை. அவர் அமர்ந்திருக்கும் போது அவரது அலைபேசியில் அடிக்கடி இறைச்சி சம்பந்தப்பட்ட உணவை தான் பார்ப்பார். அன்று கூட சுபா நான் வெஜ்ஜிற்காக பிடிவாதம் செய்து தரையில் அமர்ந்தாளே! அவர் புன்னகைத்த விதமே அவருக்கும் இறைச்சி சார் உணவு அவருக்கு பிடிக்கும்ன்னு தெரிஞ்சது” புன்னகைத்தாள்.
நீங்க எங்கேயும் போக வேண்டாம்..
என்ன?
ஆமா, நான் கொஞ்சம் அதிகமா தான் பேசிட்டேன். நீங்க எங்க வீட்ல இருந்து வெளிய போகக் கூடாது.
வைசுவை தேடி வந்த இளந்திரையன் தன் தம்பி பேசுவதை கேட்டு வெளியவே நின்று விட்டான்.
error: Content is protected !!