Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நினைவே சிட்டாய் Ep-14 (2)

14(2)

அக்சரா இருக்கும் அறையை பார்த்தான் சத்யா. முதலாவதாக அவள் பேசியது சத்யாவிற்கு நினைவுக்கு வந்தது. அவன் தானாக வைஷ்ணவியை பார்த்தான். அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் தோளில் சாய்ந்தவாறு சுப்ரியா இருந்தாள்.



Advertisement

கலெக்டர் சென்று விட இளந்திரையன் வந்தான். சத்யா அவனருகே வந்தான்.

சத்யா, நம்ம ஊர்ல்ல இருக்கும் எல்லா சிசிடிவி புட்டேஜ் வைத்து வடநாட்டுக்காரனுக யாருன்னு கண்டுபிடிக்கணும்.

Advertisement

Advertisement

பள்ளி, கல்லூரி?

நாளை ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக கொடுக்கணும். நாளைக்குள் பள்ளி, கல்லூரிக்குள் ரெஸ்ட் ரூம் தவிர அனைத்து இடத்திலும் கேமிராக்கள் பொருத்தணும். வாட்ச் மேன் நம்ம பசங்க யாரையாவது பாதுகாப்புக்காக போடுங்க..

Advertisement

நம்ம ஊரின் இருபக்க எல்லையிலும் கண்டிப்பாக ஷிப்ட் படி போலீஸ் நின்று பாதுகாக்கணும். நம்ம ஊருக்குள் புதிதாக நமக்கு தெரியாமல் யாரும் வரக் கூடாது. நம்ம ஊர்க்காரவங்க எல்லாருக்கும் பாதுகாப்பு வேணும். எல்லாமே கலெக்டரிடம் பேசிட்டேன்..

ராஜ் அங்கே வந்தார்.

தீரா, எல்லா பசங்களையும் அவங்க பெற்றோரிடம் ஒப்படைச்சிட்டோம். ஆனால் என்று அவர் மாறனை பார்க்க, அவன் தன் அண்ணனை பார்த்தான்.

இளந்திரையன் அவன் கையை பிடித்து கதிர் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான். சுப்ரியாவும் அவர்கள் பின்னே சென்றாள். அவர்கள் கதிருக்கு இரத்தம் வர வர வயிற்றில் கத்தியால் குத்தி இருந்தனர். அவன் பெற்றோர் மாறனை பார்க்கவும் அழ, அவன் கதிரை தொட்டு பார்த்தான். அவன் கைகள் நடுங்கியது.

அண்ணா, “அவனுக்கு கூல்லா இருக்க ரொம்ப பிடிக்கும். அதுக்கு இப்படியே போயிடுவானா?” பேசியவன் விசும்பலில் இருந்து கதறி அழுதான்.

சற்று நேரத்தின் பின் அவன் அம்மாவை பார்த்து, “பசங்க யாரும் பார்க்க வரலையா?”

“இல்ல மாறா. யாருமே வரலை” அவர் அழ, அவனுடன் படிக்கும் பசங்க சிலர் அங்கு அவர்களின் பெற்றோருடன் வந்தனர். மாறனால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கதறி அழுதான்.

சுப்ரியா ஏதும் பேசாமல் தன் அக்காவிடம் செல்ல, “மாறன் எங்க?” வைஷ்ணவி கேட்டாள்.

அவன் அழுதுட்டு இருக்கான்.

“நான் பார்த்துட்டு வாரேன்” வைஷ்ணவி செல்ல, செழியன் அவளை தடுத்தான்.

செழியா, “போகட்டும்” இளவேலன் சொல்ல, மாறன் அழுவதை பார்த்து “மாறா” அழைத்தாள் வைஷ்ணவி.

இளந்திரையனை கட்டிக் கொண்டு அழுத மாறன் வைஷ்ணவியை பார்த்து அவளை அணைத்துக் கொண்டு அழுதான்.

மாறன் அழுதவாறு வைஷ்ணவியை நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன?” அவள் புருவத்தை உயர்த்த, “ஆறுதலுக்காக எதுவும் பேச” மாட்டீங்களா? பாவமாக கேட்டான்.

எனக்கு அவனையும் தெரியாது. உன்னோட ப்ரெண்ட்ஸூப்பும் தெரியாது. நான் என்ன சொல்வது?

வைசு, “அக்சராவுக்கு ட்ரீட்மென்ட் முடிஞ்சிருச்சு” குரு அவர்களிடம் வந்து மாறனை பார்த்தான்.

வைஷ்ணவி மாறனை பார்க்க, அவன் நகர்ந்தான்.

அண்ணா எங்க? மாறன் கேட்க, “நீ என்னை கட்டிப்பிடிச்சிட்டு இருந்தேல்ல அப்பவே போயிட்டாரு” சொல்லிக் கொண்டே விரைந்து அவ்விடம் அகன்று அக்சராவை பார்க்க வந்தாள்.

மருத்துவர், இளவேலன் இளந்திரையனிடம் பேசிக் கொண்டிருந்தார். எல்லாரும் அவரை சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். வைஷ்ணவியும் அவர்களிடம் வந்தாள்.

“நல்ல வேலை எலும்புகளில் கத்தி படவில்லை. காயம் ஆழமாக தான் இருக்கு. வலி இருக்கும். அதற்கும் மருந்து கொடுத்திருக்கோம். இரு நாட்களுக்கு அதிகமாக கையை அசைக்கக் கூடாது. கவனமா பார்த்துக்கோங்க. நாளை டிஸ்ஜார்ஜ் பண்ணிக்கலாம். அவங்க விழித்தவுடன் செவிலியரிடம் கூறுங்க. நான் அவங்கள வந்து பார்க்கிறேன்” மருத்துவர் கூறி வைஷ்ணவியை பார்த்து புன்னகையுடன் “அம்மாடி தீரனோட என்னோட அறைக்கு வாங்க. பேசணும்” சொல்லி சென்றார்.

சத்யா அவர் பின்னாடியே சென்று, “அவள இப்ப பார்க்கலாமா?” கேட்டான்.

யாராவது ஒருவர் தொந்தரவு செய்யாமல் உள்ளே இருங்கள். மற்றபடி அவங்க விழித்த பின் பேசிக்கோங்க..

சத்யா வரவும் இளந்திரையன் அவனிடம், அம்மாவை இப்ப இங்க அழைச்சிட்டு வா..

எதுக்கு? சத்யா இளவேலனை பார்த்துக் கொண்டே கேட்டான்.

ராதிகா இவர்களை நோக்கி தான் வந்து கொண்டிருந்தார்.

தீரா, அக்சராவுக்கு ஒன்றுமில்லைல்ல?

இல்ல சித்தி, கையில அடிபட்டிருக்கு. நீங்களும் இந்த நேரம் தனியே இருப்பது நல்லதல்ல. நீங்க நம்ம வீட்டுக்கு வந்து தான் ஆகணும். சத்யா உங்க பக்கத்திலே பாதுகாப்பிற்கு இருக்க முடியாது..

அவர் இளவேலனையும் சத்யாவையும் பார்த்தார்.

“அவங்க சொந்தபந்தங்கள் பேசட்டும்” என்று அமைதியாக சென்று அமர்ந்தாள் வைஷ்ணவி பாப்பாவுடன். சுப்ரியாவும் அவளருகே அமர்ந்து கொண்டாள். வைஷ்ணவி யோசனையில் ஆழ்ந்தாள்.

“நம்மால எதுக்கு இவங்க எல்லாரும் கஷ்டப்படணும்? நாம கிளம்புறதாக சொன்னால் விட மாட்டேங்கிறாங்க. என்ன செய்யலாம்?” யோசித்தவள் அவளது அலைபேசியை பார்த்தாள். ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை.

“சரிம்மா…நீங்க அவரு வீட்டுக்கு போகணும்ன்னா எல்லார் முன்னும் அவர் உனக்கு தாலி கட்டணும்” சத்யா இளவேலனை பார்த்தார்.

சித்தப்பூ, “சித்தி சத்யாவை வெளியே அழைச்சிட்டு போய் பேசி முடிவெடுத்துட்டு வந்து சொல்லு” என்று வைஷ்ணவியை பார்த்தான்.

அவளின் சிந்தனை புரியாமல் சிட்டு, “நீயும் குட்டிம்மாவும் தேனும்மா கூட அறையில இருங்க”.

செழியா, மாறன் இருவரும் இந்த அறையை விட்டு நகரக் கூடாது. புரியுதா? கேட்டான்.

மாறன் வைஷ்ணவியை பார்க்க, “அக்கா” சுப்ரியா வைஷ்ணவியை உலுக்கினாள்.

இளவேலனும் சத்யாவும் தன் குடும்பத்துடன் வெளியே வந்தனர்.

சிட்டு, “என்ன யோசனை? கவனமா இருக்கணும்” இளந்திரையன் சொல்ல, அவனையே பார்த்தாள்.

என்ன? அவன் புருவம் உயர்த்த, “ஒன்றுமில்லை” தலையை ஆட்டினாள்.

“உள்ள போங்க” இளந்திரையன் சொல்ல, பாப்பாவை தூக்கிக் கொண்டு எழுந்து அக்சராவை வைத்திருந்த அறைக்குள் சென்றனர் இருவரும்.

குரு, “இப்ப சத்யா ஸ்டேசன் போவான். அவனோட சென்று அந்த அகிலரசனுடன் பேசணும்” இளந்திரையன் கூறினான்.

தீரா, அவனோட பேசி என்ன ஆகப் போகுது?

பேசி பார்க்கலாம்..

ம்ம்..அவர்களும் அங்கேயே அமர்ந்தனர்.

சற்று நேரத்தில் அக்சரா விழித்தாள். வலியில் அழுதாள். அவளை சமாதானப்படுத்தி மருத்துவரை வர வைத்தனர். அவளை பரிசோதித்த மருத்துவர், மருந்துச்சீட்டை செழியனிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார். அவன் வரவும் அக்சராவிற்கு மருந்தை உடலில் செலுத்தி அவளை படுக்க வைத்தனர். அமைதியாக இருந்தாள்.

இளவேலன் ராதிகா மற்றவர்களும் அறைக்குள் வந்து அக்சராவை விசாரித்தனர்.

சித்தப்பூ, என்ன முடிவு எடுத்திருக்கீங்க? இளந்திரையன் கேட்டான்.

நாளை நடக்கவிருக்கும் தேர்த்திருவிழாவில் கோவிலில் வைத்து ராது கழுத்தில் தாலி கட்டி வீட்டுக்கு அழைச்சிட்டு வாரேன்.

அவன் சத்யாவை பார்த்தான்.

“நானும் தான் வாரேன்” அவன் மாறனை பார்த்து, “நான் அதிகம் வீட்ல இருக்க மாட்டேன். உனக்கு பிரச்சனை இருக்காது”.

“வீட்ல யார் இருந்தாலும் எனக்கு பிரச்சனையில்லை” மாறன் சொல்ல, மாறனை ஆச்சர்யமாக பார்த்தான் சத்யா.

சித்தப்பூ, “உனக்காக மட்டும் தான்” முறுக்கிக் கொண்டான் மாறன்.

“அதான பார்த்தேன்!” சத்யா கூற, “மாமா அவன் ஒத்துக் கொண்டதே பெரிய விசயம். அப்புறம் வீட்டை விட்டு அனுப்ப பிளான் போட்ருவான்” அக்சரா மெதுவாக பேசி புன்னகைத்தாள்.

“குரு வா” இளந்திரையன் வைஷ்ணவியை பார்த்துக் கொண்டே, தேனும்மா வலி அதிகமானால் செழியனிடம் சொல்லு. அவன் மருத்துவரை அழைச்சிட்டு வருவான்.

மாமா, “நீங்களும் பக்கத்தில் இருங்களேன்” அக்சரா கேட்க, சீக்கிரம் வந்துருவேன்ம்மா. சித்தியும் உன்னோட அக்காவும் இன்று உன்னோட இங்க தான் தங்கப் போறாங்க..

ம்ம்ம்! நீங்களும் என்று அவள் வைஷ்ணவியை பார்க்க, அவள் அக்சராவை முறைத்தாள்.

“வந்துடுறேன்ம்மா” அவன் குருவுடன் வெளியேறினான். வீரன் அவர் வீட்டிற்கு சென்றார்.

செழியனும் மாறனும் வெளியே செல்ல எத்தனிக்க, “மாமா” அக்சரா அழைத்தாள். செழியனும் மாறனும் அவளை பார்த்தனர்.

தேங்க்ஸ், அப்புறம் எனக்கு லைம் ஜூஸ் வேணும்..

“சரா” வைஷ்ணவி சத்தமிட, “வைசு வாங்கிட்டு வாரேன். சும்மா சத்தம் போட்டுக்கிட்டே இருக்காத!” செழியன் அவளருகே வந்து அமர்ந்தான்.

“என்ன பிரச்சனை? நீ எதையோ மனசுல வச்சிட்டு இருக்க?” அவன் கேட்க, வைஷ்ணவி கண்கள் கலங்கியது.

“அக்கா” சுப்ரியா அழைக்க, சீனியர் நான் வேணும்ன்னா இங்கிருந்து போயிடவா? இதெல்லாம் என்னால தான!

“வைசு” அக்சரா சினமுடன் அழைத்தாள்.

நீ ஏன் அப்படி நினைக்கிற வைசு?

அதான உண்மை சீனியர்..

எங்கம்மா போவ? ராதிகா கேட்டார்.

எங்கையாவது யாரும் தெரியாத இடத்திற்கு…

சுப்ரியா எழுந்து வேகமாக வெளியே சென்றாள்.

உனக்கு மட்டும் தான் பிரச்சனையாம்மா? நாங்க எல்லாருமே இத்தனை வருசமா பிரச்சனையில தான் இருக்கோம். யாருக்கும் நிம்மதி இல்லை. எங்களை விடு. குருவும் அப்படிதான்.

மாறன் புருவம் சுருக்கினான்.

என்னன்னு பாக்குறியாம்மா? குரு தீரனோட சிறுவயது நண்பன் மட்டுமல்ல என்னோட இரண்டாவது அக்கா துர்கா தேவியின் மகன்..

“சித்தப்பூ” மாறன் அதிர, ஆமா மாறா. அவன் உன்னோட மாமா தான்..

மாறன் செழியனை பார்க்க, அவனும் “ஆம்” என்று தலையசைத்தான்.

இளவேலன் அவர் அக்காவின் காதல் கதையை கூறி விட்டு, தீரனும் குருவும் ஒன்றாக படித்தனர். தீரன் நம்ம வீட்டுக்கு மூத்தவன் என்பதால் அப்பவே எல்லாருக்கும் அவன் மீது பெரிய மரியாதை. அதனால் தான் தீரனையும் குருவையும் பழக விட்டிருந்தார் வீரன் மாமா. 

உனக்கு உன் அண்ணா எவ்வளவு முக்கியமோ அதே போல குருவிற்கும் தீரன் முக்கியம். அவனுக்காக எதுவும் செய்வான்.

குரு நினைத்தால் எப்பொழுதோ தீரனை விட்டு சென்றிருக்கலாம். அவன் போகவில்லை. அவன் படிப்பிற்கும் தகுதிக்கும் உயர்ந்த நிலையில் இருந்திருப்பான். இப்படி தீரனுக்கு அசிஸ்டென்டா இருந்திருக்க மாட்டான்.

செவிலியர் உள்ளே வந்து, “யாராவது ஒருவர் மட்டும் பேசண்ட்டுடன் இருங்க” என்று சொல்ல, வைஷ்ணவியை தவிர எல்லாரும் வெளியே வந்தனர். ராதிகா கையில் நிகிதா சத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.

மாறா, “என்னோட வா. சித்தப்பூ பார்த்துப்பேல்ல?” செழியன் கேட்டான்.

ம்ம்! அவர் கூறவும், மாறனிடம் அனைவருக்கு உணவை வாங்கி கொடுத்து விட்டு செழியன் வீட்டிற்கு சென்றான்.

மாறனை பார்த்து, மாமா வரலையா? கேட்டாள் அக்சரா.

வீட்டுக்கு போயிருக்கான். வந்துருவான்..

வைஷ்ணவி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கதிர் அம்மாவுடன் சுப்ரியா நின்று கொண்டிருந்தாள்.

மாறன் அதை பார்த்து செல்ல முனைய, அங்கே மகி, வித்யா, ரம்யா, அருள்..இன்னும் சிலர் கதிருக்காக வந்திருந்தனர். மாறனும் அவர்களுடன் சென்றான்.

கதிரின் சடலத்தை ஊருக்குள் எடுத்து செல்லாமல், நேராக மின் இயந்திரத்திற்கு எடுத்து சென்றனர். அவ்விடத்தில் மாறனின் மற்ற நண்பர்கள் கலையரசனை தவிர அனைவரும் இருந்தனர்.

மாலை மங்கும் வேளை இளந்திரையனும் குருவும் வந்தனர்.

சுப்ரியா எழுந்து அவனிடம் சென்று, “மாமா நான் உங்களிடம் பேசணும்” என்றாள். மாறன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

சுபா, ஆன்ட்டி எங்க? குரு கேட்க, ஆன்ட்டியா? மாறன் குரு அருகே வந்தான்.

அதான் உங்க ராதிகா மேம்..

அவங்க அறையில் இருக்காங்க. எதுக்கு கேக்குறீங்க?

“கேக்குறீங்களா? என்னடா தீரா மரியாதையெல்லாம் கொடுக்குறான்?” குரு இளந்திரையனை பார்த்தான். அவன் சிறுபுன்னகையுடன் சுப்ரியாவை பார்த்தான்.

“சும்மா தான் கேட்டேன்” குருவும் சுப்ரியாவை பார்த்தான்.

அழுதியா சுபா..

அண்ணா..ம்ம்..என்று கண்களை மட்டும் உயர்த்தி இளந்திரையனை பார்த்தாள் சுப்ரியா.

என்னாச்சு குட்டிம்மாவுக்கு? தேனுவுக்கு சீக்கிரம் சரியாகிடும்ன்னு சொல்லி இருக்காங்க..

“மாமா” கண்ணீர் வந்து விட்டது சுப்ரியாவிற்கு.

என்னடா?

மாமா…நாங்க போயிடவா. கதிர் மாதிரி யாருக்கும் ஏதுமாகி விட்டால்..

என்ன குட்டிம்மா?

“பயமா இருக்கு மாமா. நானும் அக்காவும் அம்மா சாகும் போது பார்த்தோம். வெறியோட அடிச்சு தூக்கிட்டானுக. அவ்வளவு இரத்தம்..அம்மாவுக்கு எவ்வளவு வலித்திருக்கும்” சுப்ரியா இதழ்கள் துடிக்க அழுதாள்.

அவளை தன் மீது சாய்த்துக் கொண்ட இளந்திரையன், “குட்டிம்மா சாகும் போது அவங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் வலிச்சது தெரியுது. அதுக்காக இப்ப நீங்களும் போனா..

எங்களுக்கும் அதே வலியை கொடுக்க போறீங்களா? நீ புத்திசாலி புரிஞ்சுப்பன்னு நினைச்சேனே!” தீரன் கண்ணீருடன் சொல்ல, “சாரி மாமா. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல” அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.

குரு இருவரையும் பிரித்து, “இப்ப என்ன உனக்கு இன்று நடந்தது போல யாருக்கும் ஏதும் ஆகக் கூடாது. அவ்வளவு தான!” கேட்டான்.

அண்ணா, “நாங்க இங்க இருக்கும் போது எப்படி முடியும்? முடியுமா?” சுப்ரியா அவனை பார்த்தாள்.

காலையில எங்களோட ஊருக்குள்ள வா. உனக்கே தெரியும். இனி யாருக்கும் ஏதும் ஆகாது..

பிராமிஸா?

ம்ம்..அவன் கண்ணை விரிக்க, அவள் விரலை நீட்டினாள். அவள் விரலை கோர்த்து, “தீரா பிராமிஸ்” என்றான் குரு.

போடா..அவனை அடித்தாள் சுப்ரியா..

டா வா? இப்ப தான அழகா க்யூட்டா அண்ணான்னு சொன்ன? இப்ப பாரு அதுக்குள்ள டாவா?

அது அப்பப்ப வரும். வரலாம்ல்ல மாமா? இளந்திரையனை பார்த்தாள்.

வரலாமே!

செழியன் வந்தான்.

மாமா, “உங்கள அக்கா தேடுனா?” இளந்திரையன் புருவம் சுருங்கியது.

புன்னகைத்த சுப்ரியா தீரனை பார்த்து, “மாமா வைசு சரா செழியன் மாமாவை தேடுனா..” இழுத்து கூறினாள் சுப்ரியா.

அதான் ஜூஸ் வாங்கி கொடுத்து விட்டேன்ல்ல. மாறா கொடுத்துட்டேல்ல?

“கொடுத்துட்டேன்” அவன் முறைத்து கூறினான்.

“சரியான டியூப் லைட் மாமா” சுப்ரியா சொல்ல, என்ன சொன்ன? செழியனும் மாறனும் சேர்ந்து கேட்டனர்.

ஏய் விது..இல்லாத வித்யாவை அழைத்து அவள் வேகமாக அகன்றாள். குரு அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தான்.

“போ செழியா. ஏதாவது கேட்பா..” தீரன் சொல்ல, இருவரும் முன் சென்றனர்.

சீரியசனா முகத்துடன், இப்ப என்னடா பண்றது? அந்த அகில் பரதேசி எதையும் சொல்ல மாட்டேங்கிறான். அவனோட சித்தப்பாவை போல அவனுக்கும் கடுங்காவல் தண்டனை கொடுத்திருக்கணும். உள்ள இருக்கும் போதே இந்த பேச்சு பேசுறான் பாரு…

அகிலுக்கு அவனை தெரிந்திருக்க வாய்ப்பிருக்குமான்னு தெரியல. முதல்ல சத்யாவிடம் பேசணும். அவன் யாருன்னு கண்டுபிடிச்சானான்னு தெரியல..

மச்சீ..தெரியாமலா நம்மை கேலி செய்துட்டு இருப்பான்.

குரு, நமக்கு ஒரு வழி அடைக்குதுன்னா மறுவழி திறக்கும். ஆனால் நம்ம ஊருக்குல்ல எப்படி இத்தனை பேரு ஒரே நேரத்துல்ல நுழைஞ்சானுக? இளந்திரையன் கேட்டான்.

அதான் தெரியலடா மச்சீ!

“பார்க்கலாம். முதல்ல சத்யாவுக்கு கால் பண்ணு” இளந்திரையன் சொல்ல, குரு சத்யாவிற்கு அழைப்பு விடுத்தான்.

செழியன் அறைக்குள் வரவும் ராதிகா வெளியே வந்தார். வைஷ்ணவி மட்டும் உள்ளே இருந்தாள். மாறன் அவளருகே சென்று அமர்ந்தான்.

அக்சா, என்னை தேடுனீயா? அதான் மாறன் ஜூஸ் கொடுத்துட்டானே! அவள் முகம் வாடியது..

சும்மா தான் கேட்டேன்..

சரி..நான் வெளிய இருக்கேன்.

சீனியர் கொஞ்ச நேரம் இவளை பார்த்துக்கோங்க. நான் பாப்பாவை பார்க்க போறேன். இப்ப தான அவங்க பாப்பாவோட போனாங்க செழியன் கேட்க, மாறா..வா வைஷ்ணவி மாறனையும் அழைத்தாள். அவன் செழியன் அக்சராவை பார்த்துக் கொண்டே சென்றான்.

செழியன் அக்சராவை பார்த்தான். அவள் கைவலியுடன் படுக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

ஏய், என்ன பண்ற? படுத்துக்கோ..

மாமா, “இங்க வாவேன்” செழியனை அருகே அழைத்தாள்.

என்ன?

திரும்பு…

அவனது சட்டையை தூக்கினாள்.

ஏய், என்ன பண்ற?

உனக்கு முதுகுல அடிபட்டதுல்ல. மருந்து போட்டுக்கிட்டீயா? அவள் கவனம் அவன் முதுகில் பதிந்தது.

வேண்டாம். ஆழமாகவெல்லாம் படலை. வீட்டுக்கு சென்று வாஷ் பண்ணீட்டேன். வலிக்கவில்லை.

அதெப்படி மாமா வலிக்காமல் இருக்கும்? இங்க வா!

“நீ ரெஸ்ட் எடு” அவன் நகர, அக்சரா செழியன் கையை பிடித்தாள்.

அக்சா..

மாமா, ப்ளீஸ்..

நான் என்னோட கடமையை தான் செய்தேன்..

மாமா..

கடமையை செய்யும் போது அடி ஏற்பட்டாலும் வலிக்காது..

மாமா, நான் உன்னிடம் சொல்லணும்.

எனக்கு வேலை இருக்கு.

“லவ் யூ மாமா” அக்சரா அவன் கையை இழுத்தாள். அவன் அவளருகே சென்று, “ஐ அம் சாரி” என்று அவள் கையை தட்டி விட்டு முகத்தை சாதாரணமாக வைத்து சென்றான்.

வழிந்த கண்ணீரை துடைத்து கண்களை மூடிக் கொண்டாள் அக்சரா.

மாறன் மட்டும் உள்ளே வந்தான். அக்சரா கண்ணை மூடி இருக்கவும் தூங்கிட்டீங்களா? கேட்டான்.

கண்ணை அவள் திறக்கவும் கண்ணீர் வடிந்தது.

என்னாச்சு? ரொம்ப வலிக்குதா? மாறன் கேட்க, மாறா சுபாவை வரச் சொல்லேன்.

என்ன வேணும்?

“ப்ளீஸ் மாறா” அவள் கண்ணீர் மீண்டும் வர, அண்ணா ஏதும் திட்டிட்டானா? மாறன் கேட்க, “இல்லை” தலையசைத்தாள்.

மாறன் வெளியே வந்தான். இளந்திரையனும் குருவும் இளவேலனிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

சுப்ரியா வருவதை பார்த்து அவளருகே சென்று, அவங்க உன்னை கூப்பிட்டாங்க.

யாரு?

“உங்க அக்கா தான்” அறையை காட்டினான்.

என்னையா? எதுக்கு?

“அவங்க அழுற மாதிரி இருக்கு. பெயினா என்னன்னு தெரியல” அவன் சொல்ல, வேகமாக உள்ளே ஓடினாள். செழியன் அவ்விடம் இல்லை.

குட்டிம்மா, “மெதுவா போ” இளந்திரையன் சத்தமிட்டு மாறனை பார்த்தான். அவன் முகத்தில் இருந்த குழப்பதை பார்த்து அறையை பார்த்தான்.

மாறா, வந்து உட்காரு..

ம்ம்..அண்ணா என்று அவர்களுடன் அமர்ந்து, “செழியா எங்க அண்ணா?” கேட்டான்.

“செழியனா? வெளிய இருக்கான்” குரு சொல்ல, மாறன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!