“முடியாது. நம்ம ஊரை காக்கும் மதுரவீரன் எங்க அண்ணா. அவர் வீடு சுத்தமாக இருக்க வேண்டாமா?” மாறன் சினமுடன் கேட்டான்.
“என்னது ஊரை காக்கும் மதுரவீரனா?” அக்சரா அவனை பார்த்தாள்.
Advertisement
Advertisement
“ஆம்” அவன் தலையசைக்க, “அப்ப நீங்க இங்க பெரிய ஆளா? உங்களிடம் பணம் நிறைய இருக்கா?” அப்பாவியாக சுப்ரியா கேட்டாள்.
ஆமாம்மா, நம்ம ஊரு மதுரவீரன், வைஷ்ணவி தேவி கோவில் கூட இந்த வீட்டு குல தெய்வம் தான். வீட்டில் பொண்ணுங்க இல்லாததால் அந்த கோவில் சடங்குகளை பூசாரி வகையினர் ஏற்று நடத்துறாங்க.
Advertisement
தீரன் தாத்தா காளையன் தான் நம்ம ஊர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். பிரச்சனை வெடித்து தான் மொத்த ஊரும் சுடுகாடா போச்சு. அப்புறம் அரசன் குடும்ப பெரியவர் பேரரசன் தான் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேத்துகிட்டார். ஆனால் அடுத்த வருடமே போலீஸ் நிலையம் எல்லா கிராமத்திற்கும் வர ஆரம்பித்தது.
அவர் வீட்டிலும் பொம்பளைங்க எல்லாரும் பிரச்சனையின் போது இறந்துட்டாங்க. அவங்களாலும் வைஷ்ணவி தேவி கோவில் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“நம்ம ஊர்ல்ல இப்ப பேரரசன் பெரிய தலக்கட்டு” சுந்தரம் சொல்லி முடித்தார்.
“உங்க தேவதைகளை அந்த பிரச்சனையில தான் இழந்தீங்களா சார்?” சுப்ரியா கேட்க, “அதெதுக்கு சும்மா கேட்டுக்கிட்டே இருக்க?” மாறன் எரிச்சலுடன் கேட்டான்.
சுப்ரியா கையை பிடித்த வைஷ்ணவி, “இனி நாங்க இங்கேயே இருக்கோம். உங்க கோவில் திருவிழா நடக்குது. நாங்க இங்க இருப்பது பிரச்சனை இருக்காதுல்ல?” தயக்கமுடன் இளவேலனை பார்த்தாள்.
கண்டிப்பா இருக்காதும்மா. ஆனாம்மா..நீ மட்டும் இப்பொழுதைக்கு வெளியே வர வேண்டாம்.
ஏன் சார்? சுப்ரியா கேட்க, அக்சராவிடமிருந்து பதில் வந்தது.
ஏன்னா..அந்த கொலைகாரப்பாவி அக்காவை தேடி இங்க வரை வந்துட்டான். அதனால அவ வீட்லயே இருக்கட்டும்.
“வந்துட்டானா?” வைஷ்ணவி உதட்டை அசைத்து கண்கள் படபடக்க பயத்துடன் இளந்திரையனை பார்த்தாள்.
பயப்படாம இரு. நான் தான் இருக்கேன்ல்ல. உங்க யாருக்கும் ஏதும் ஆகாது.
அப்படின்னா நாங்களும் வெளிய போகக் கூடாதா?
பள்ளிக்கும் நீ போகலாம். பள்ளியில் உன்னுடன் எப்போதும் மாறன் இருப்பான் இளந்திரையன் சுப்ரியாவிடம் சொல்ல, அண்ணா..நான் இவளுடனெல்லாம் இருக்க மாட்டேன்.
“நம்மை நம்பி வந்த பொண்ணுங்க. பள்ளியில் இனி குட்டிம்மா உன்னோட பொறுப்பு தான்” கண்டிப்புடன் கூறி விட்டு, “தேனும்மா…நீங்க செழியா கூட போயிட்டு வாங்க. என்னடா செழியா? உனக்கு பிரச்சனையில்லைல்ல?”
எனக்கு என்னன்னா பிரச்சனை? எந்த காலேஜ்?
பெரியார் யுனிவர்சிட்டில்ல..சைக்காலஜி..படிக்கப் போறாங்க.
“வாங்கும்மா..வாங்கு..உன்னை யார் வேணாம்ன்னு சொன்னா. உனக்கு வகுப்பு எடுக்கும் மேடம் பாவம்” செழியன் சொல்ல, “பாவம்ன்னா நீங்க வந்து எடுக்குறீங்களா?”
வைஷ்ணவி கோபமாக அக்சராவிடம் வந்து, “எதிர்த்து எதிர்த்து பேசாத” சைகையில் சொல்ல, “விடு வைசு. பேச மட்டும் தான செய்றா. பேசிட்டு போகட்டும்” செழியன் பெருந்தன்மையுடன் கூற, அவள் அவனை முறைத்தாள்.
சார், “அலைபேசி அதிக பணம் கொடுத்து வாங்காதீங்க” வைஷ்ணவி இளந்திரையனிடம் கூற, நான் வாங்கித் தருவதை வச்சுக்கோங்க. சிட்டுவுக்கும் குட்டிம்மாவுக்கும் ஒன்று. தேனுக்கு ஒன்று..
இரண்டா? வேண்டாம் சார்..
அவளுக்கு பிரச்சனைன்னா எப்படி தெரியும்? பள்ளியில் குட்டிம்மாவுடன் மாறன் இருப்பான். கல்லூரியில் தெரிந்தவர்களிடம் சொல்ல தான் முடியும். யாரையும் முழுதாக நம்ப முடியாது. பிரச்சனைன்னா உடனே கூப்பிடு தேனு..
“தேங்க்ஸ் சார்” அவள் அவனை அணைக்க, வைஷ்ணவி அவளை முறைத்தாள்.
“ஹப்பா, என்ன முறைப்பு? செம்ம பயமா இருக்கு வைசு” செழியன் கேலியுடன் கூற, அவனை மேலும் அவள் முறைத்தாள். அனைவரும் சிரித்தனர்.
“தேனு, குட்டிம்மா…கொஞ்ச நேரம் கழித்து போகலாம்” வீட்டில் வேலை செய்பவர்களை தனியே அழைத்து சென்று இளவேலனும் இளந்திரையனும் பேசினார்கள்.
இப்பொழுதைக்கு நம்ம வீட்டு பொண்ணுங்க பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என்றும், அவர்கள் யாருன்னு கேட்டால் செழியனால் காப்பாற்றப்பட்டவர்கள். பிரச்சனைக்காக தஞ்சம் புகுந்ததாக ஊருக்குள் சொல்ல சொல்லி அனுப்பினான்.
காளையன் வீட்டில் பொண்ணுங்க. அதுவும் தீரன் ஒத்துக் கொண்டான் என்றதும் காட்டுத்தீ போல் விசயம் பரவியது.
அதன் பின் அலைபேசி வாங்க இளந்திரையன் இருவரையும் அழைத்து சென்றான்.
அலைபேசியுடன் வீட்டிற்கு வந்தனர் மூவரும். பழைய எண்ணிற்கான சிம்மை கையில் வைத்து அலைபேசியுடன் வைஷ்ணவியை தேடினாள் சுப்ரியா.
என்ன? அவள் இழுவை பயம் கலந்து கூற, இளந்திரையன் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டான்.
சுப்ரியா அவனை பார்க்க, அவளிடமிருந்து அலைபேசியை பிடுங்கி கீழே வைத்தான்.
சுபா, உங்க அம்மாவை கொன்னவனுக உங்களை தேடி இரு நாளுக்கு முன் வந்தானுக. நீங்க இல்லை. பக்கத்து வீட்ல சித்து அக்கா, பாப்பா, அவங்க அம்மா, அப்பா இருந்திருக்காங்க. எங்க வீட்லயும் நாங்க யாருமில்லை..
வந்து..அவனுக சித்து அக்காவையும் அவங்க அம்மா, அப்பாவையும் கொன்னுட்டாங்க. பாப்பாவை அக்கா மறைச்சி வச்சிருக்காங்க. நாங்க வீட்டுக்கு வந்த பின் பாப்பா அழும் சத்தம் ரொம்ப நேரமா கேட்டு தான் பார்த்தோம்.
பாப்பாவை இந்த ரெண்டு நாளா சமாளிக்க முடியல. என்னோட அப்பா ரொம்ப கோபப்படுறார். வைசு அக்கா அவளை பார்த்துப்பாங்கல்ல?
அப்பா பாப்பாவை அநாதை ஆசிரமத்தில் விட சொல்றாரு. எங்களுக்கு மனமில்லை. உங்களுக்கு கால் பண்ணிக்கிட்டே இருந்தேன். நீங்கள் என் அழைப்பை எடுக்கவில்லை.
அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம். நம்ம தெரு வீடியோவை பார்த்ததில் அவனுக பெரிய இடம் என்றும் அவனுக வைசு அக்காவை தான் முக்கியமா தேடுறாங்கன்னு போலீஸ் பார்த்துட்டாங்க.
“அக்காவை கவனமா பார்த்துக்கோங்க. அப்புறம் பாப்பாவை என்ன செய்றது?” அவன் புரியாமல் கேட்க, மூன்று பெண்களும் அதிர்ந்து இருந்தனர்.
வைசுவிற்கு அவளால் தான் எல்லா பிரச்சனையும் என்ற எண்ணம் வர அழுதாள்.
அண்ணா..நீ காப்பு கட்டி இருக்க? நீ எப்படி போவ? செழியன் கேட்க, வேலனும் ஆமோதித்தார்.
சார் நீங்க எங்க இருக்கீங்க? நாகா கேட்டான்.
நாங்க மதுரை மாவட்டம் காளையனூரில் இருக்கோம். உன்னால வர முடியுமா?
சார், நாங்க திருநெல்வேலி போறோம். நான் இப்பொழுதே கிளம்பி உங்க ஊர் பேருந்து நிறுத்ததில் காத்திருக்கிறேன். பாப்பாவை மட்டும் வாங்கிக்கோங்க..
அவன் இப்பொழுது பேருந்தில் கிளம்பினாலும் நம்ம மதுரைக்கு வரவே மதியத்துக்கும் மேலாகும். அதனால நம்ம ஊர்ல வேண்டாம். மதுரை பேருந்து நிலையத்தில் அவன் வரட்டும். நாம செழியனும் மாறனும் அங்க போயிட்டு வரட்டும். தேனும்மா..இவனுக கூட போய் அந்த பாப்பாவை அழைச்சிட்டு வா..
“ஆமா, பாப்பான்னு சொல்றீங்க? எத்தனை வயதிருக்கும்? பத்து வயதிலிருக்குமா?” இளவேலன் கேட்டார்.
வைசுவிற்கு கண்ணீர் வந்து விட்டது.
தப்பா ஏதும் கேட்டுட்டேனாம்மா?
“நிகிதா பிறந்து அஞ்சு மாதம் தான் ஆகுது” அக்சரா ஓரக்கண்ணால் இளந்திரையனை பார்த்தாள்.
“என்னது அஞ்சு மாசப்பிள்ளையோட அம்மா இறந்துட்டாளா?” வேலன் அதிர்ந்து கேட்டார்.
ஏன் சித்தப்பூ? நம்ம மாறன் அப்படி தான வளர்ந்தான். நாம தான வளர்த்தோம்.
“ஏலேய் தீரா, அவன் நம்ம வீட்டு பையன். அந்த குட்டிப்பொண்ணு யாரோ ஒருவரின் குழந்தை. நம்ம ஊர்ல பேச்சு எப்படி போகும்? இப்ப தான் பொண்ணுங்க வீட்டுக்குள்ள வந்திருக்காங்க. குழந்தை அதுவும் அஞ்சு மாசக்குழந்தைன்னா என்ன சொல்வாங்க?” தலையில் அடித்தார்.
எல்லாருக்கும் எல்லாவற்றையும் விளக்க அவசியமில்லை சித்தப்பூ. நமக்கு எது சரின்னு தோணுதோ செய்து கொண்டே இருக்கணும். யாரும் என்னமும் பேசட்டும்.
வைஷ்ணவி அவனிடம் வந்து, “நாங்களும் அவங்களோட நிக்கியோட திருநெல்வேலி போறோம் சார்” அவள் சொல்லி முடிக்க, அங்கிருந்த மேசையை சீற்றமுடன் எட்டி உதைத்தான் இளந்திரையன்.
வைஷ்ணவி பயந்து பின் நகர்ந்தாள் கண்ணீருடன்.
இங்க பாரு. இங்கிருந்து யாரும் போகக் கூடாது. என்னால உங்க மூவரையும் வெளியே தனியா விட முடியாது. ஏற்கனவே நாங்க இழந்தது போதும். இனி யாரையும் இழக்க நாங்க தயாராக இல்லை. புரியுதா? இந்த வீட்டு படியை நீ தாண்டவே கூடாது.
அந்த பாப்பா தான உனக்கு வேணும்? பாதுகாப்பா வந்திருவா. இதுக்கு மேல இங்கிருந்து வெளிய போறதை பத்தி பேசின. உன்னை கொலை செய்ய எண்ணுபவனிடம் உன்னை நானே விட்டு வந்திருவேன்..
“தீரா” வேலன் சினமுடன் அழைக்க, “அண்ணா” அவன் தம்பிகளும் சத்தமிட்டனர்.
என்ன? என்ன? எ..ன்..ன…? சினமுடன் அவர்களை பார்த்தான். அனைவரும் அமைதியானார்கள். வைஷ்ணவி அழுது கொண்டே பயந்து நின்றாள்.
அந்த குழந்தையை பற்றி யாரும் ஏதும் கேட்டால் என்ன சொல்றது?
வைஷ்ணவி அழுது கொண்டே அறைக்கு செல்ல, அவளுடைய தங்கைகள் இருவரும் அவள் பின்னே சென்றனர்.
பெருமூச்சுடன் அமர்ந்த இளந்திரையன், “உன்னோட பெயர் என்ன?” நாகாவிடம் கேட்டான் இளந்திரையன்.
“சார், என்னை பற்றி எதுக்கு? நீங்க எதுக்கு வைசு அக்காவை வெளிய விட மாட்டேன்னு சொல்றீங்க?” அவன் கேட்க, அலைபேசியை அவன் மட்டும் கேட்குமாறு வைத்து, “அவள் சீதை மாதிரியும் என்னை இராவணன் மாதிரியும் நினைக்கிறியோ?” கேட்டான்.
அப்படியெல்லாம் இல்லை. உங்களது பேச்சில் எல்லாருக்கும் உதவும் எண்ணம் தெரியுது. ஆனால் வைசு அக்கா..
உன்னோட அக்காவை நான் விழுங்கிற மாட்டேன். அவ நல்லா தான் இருக்கா. நீ பேசியதை கேட்டுட்டு தான இருந்த? சீக்கிரம் கிளம்பு. மதுரை பேருந்து நிலையத்தில் என்னோட தம்பிங்க வருவானுக. பாப்பாவை கொடுத்திட்டு நீ போகலாம்.
சார்..
என்ன?
பாப்பா எப்போதும் வைசு அக்கா கூட இருப்பால்ல? அவளை சித்து அக்காவும் வைசு அக்காவும் தான் மாறி மாறி பார்த்துப்பாங்க. அவ வேற யாரிடம் போனாலும் அழுவா..
ம்ம்..சரி, நீ விட்டு மட்டும் போ. நாங்க அவளை நன்றாக பார்த்துக்கிறோம்.
தேங்க்ஸ் சார், நான் தயாராகுறேன்.
சுப்ரியா இளந்திரையனிடம் அலைபேசியை பிடுங்கி, “வரும் போது பாப்பா சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களையும் எடுத்து வா. ஏற்கனவே சார் எங்களுக்காகவே நிறைய செய்துட்டார்”.
என்ன செய்தார்? உங்களுக்கு பிரச்சனை இல்லைல்ல?
அவர் இரண்டு போன் வாங்கிக் கொடுத்தார். மீதியை அவரிடம் கேட்டுக்கோ..பை..அலைபேசியை இளந்திரையனிடம் கொடுத்து விட்டு அவள் சென்றாள்.
“வாயாடி, இத்தனை பிரச்சனையிலும் உன் வாய் மட்டும் குறையவேயில்லை” நாகா சுப்ரியாவை திட்டினான்.
“என்ன சொன்ன? வாயாடியா? இதுவரை நீ எப்படி வேண்டுமானாலும் அவங்கள பேசி இருக்கலாம். இனி மரியாதையோட பேசு. மதுரை பக்கம் வரவும் சொல்லு?” அலைபேசியை வைத்தான் இளந்திரையன்.
“இந்த உலகத்துல்ல இப்படி ஒரு ஆளா? நம்பவே முடியல” அவன் சிந்தனையுடன் அலைபேசியை வைத்தான்.
சித்தப்பூ, ரொம்ப நேரமா அழுதுட்டு இருக்கா. போய் பாரு சித்தப்பூ..
தீரா, “சாமி சாமானை எடுக்க ஆள் வந்திருக்காங்க” ஒருவர் ஓடி வந்தார்.
இந்த அறையில தான் இருக்கு. எல்லாவற்றையும் சரியா பார்த்து எடுத்துட்டு போங்க.
“சும்மா சும்மா வீட்டுக்கு யாரும் வரக் கூடாது” என்று சத்தமிட, அவனை பார்த்துக் கொண்டே சிலர் வந்தனர். அவர்களிடமும் அதே போல் பேசி அவனே சரி செய்து அனுப்பி வைத்தான்.
இளவேலனும் செழியனும் சிரமப்பட்டு வைஷ்ணவியை சமாதானப்படுத்தி உணவுண்ண அழைத்து வந்தனர். அவளுக்கு உணவு இறங்கவேயில்லை..
“சித்தப்பூ” இளந்திரையன் சத்தமிட, பயத்துடன் அவனை பார்த்த வைஷ்ணவி உணவை வேகவேகமாக கொறித்து விட்டு மீண்டும் அறைக்குள் அடைந்து கொண்டாள். அவன் அவனது பண்ணைக்கு செல்ல, சுப்ரியா அவனிடம் ஓடி வந்து, “நானும் வரவா சார். வாத்து, குதிரையை பார்க்க ஆசையா இருக்கு”.
வா..என்று அவளை ஏற்ற, மாறனையும் அழைத்தான் இளந்திரையன். மாறன் முறைப்புடன் அவனுடன் ஏறினான்.
“முதல்ல நாம உங்க பள்ளிக்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரை பார்த்துட்டு வந்திறலாம்” என்று பைக்கை பள்ளி பக்கம் திரும்பினான்.