Skip to content
Post Views: 2,003
9(1)
“அக்சா, அந்த போலீஸ்காரன்..” செழியன் அக்சரா கையை நடக்க விடாமல் பற்றினான்.
Advertisement
ஆமா,… சத்யா உங்க இளவேலன் சித்தப்பாவின் மகன். இவரும் ராதிகா மேம்மும் காதலிச்சாங்க. உங்க தாத்தாவால தான் பிரிஞ்சாங்க. ஆனால் அவங்க தன் பையனை வச்சிட்டு உங்களை சந்திக்கவும் முடியாமல் குழந்தையை பற்றி பேசவும் முடியாமல் எப்படி தவிச்சிருப்பாங்க. உங்க தாத்தாவுக்கு எல்லாமே தெரியும். அவங்களை பாதுகாப்பாக கூட செட்டில் பண்ணல உங்க தாத்தா.
ராதிகா அத்தை வீட்ல அவங்கள பாரமா பார்க்க ஆரம்பிச்சதால் அவங்க இங்க இருக்கக்கூடாதுன்னு சத்யா மாமாவின் ஏழாவது வயதில் சென்னை போயிருக்காங்க. அங்க எப்படி கஷ்டப்படாங்கன்னு தெரியல…
Advertisement
Advertisement
எல்லா பிரச்சனைக்கும் மூல காரணமே அந்த கலவரம் மட்டும் தான்.
கலவரம் நடக்காமல் இருந்தால் அவங்களும் இங்க பாதுகாப்பாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்திருப்பாங்க. இளவேலன் மாமாவும் தனியா இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டார். எல்லாத்துக்கும் காரணம் அந்த குடும்பம் தான் சினமுடன் பேசினாள்.
Advertisement
சரி, அண்ணா அன்றிரவு வாய்ஸ் கேட்டு அந்த கொலைகாரனை கண்டுபிடிக்கிறதை பற்றி பேசினார்ல்ல? யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா? யாரு? செழியன் கேட்க, சாரி மாமா இதை என்னால யாரிடமும் சொல்ல முடியாது. வேலன் மாமாவுக்கு கூட தெரியாது. என்னால சொல்ல முடியாது..
சொல்ல முடியாதா? ஏன்?
சொல்ல முடியாதுன்னா முடியாது..
அதான்..ஏன்?
அது உங்களுக்கு தானாக தெரிய வரும்..
“ஓ! அதுவா தெரியும். நீ சொல்ல மாட்ட?” அவள் எதிர்பாராத நேரம் அவள் இடையை இழுத்து அவனுடன் நெருங்க நிற்க வைத்தான்.
“மாமா..” சினமுடன் அவனை தள்ளி விட்ட அக்சரா, கண்கலங்க நீங்களும் மத்த பசங்க மாதிரின்னு காட்டிட்டீங்கல்ல?
மத்த பசங்க மாதிரி நானா?
“ஆமா” அவளுக்கு அழுகை வந்து விட்டது.
நான் இப்ப என்ன செய்தேன்னு அழுற?
“இல்லை” தலையசைத்து அவள் நகர, அவள் கையை பிடித்து..
அக்சா, “நான் உன்னை தவறான எண்ணத்தில் எதுவும் செய்யவில்லை. நம்ம குடும்பத்துக்காக கேட்க.. உன்னை சொல்ல வைக்க..”
சொல்ல வைக்க இப்படி தான் செய்வீங்களா?
செழியன் சிந்தனையுடன், உன்னுடன் இது போல் விளையாட்டாக நடந்தது தான? உனக்கு என்னாச்சு?
கண்ணை துடைத்து, “என் மேல தான் தப்பு மாமா” சொல்லி விட்டு காருக்கு ஓடி ஏறிக் கொண்டாள்.
நல்லா தான இருந்தா?
காருக்கு வந்த அக்சரா வைஷ்ணவி தோளில் சாய்ந்து கொண்டாள்.
சரா, “நீ அக்காகிட்ட ஒட்டாத” சுப்ரியா சொல்ல, அவளை நிமிர்த்து பார்த்து மீண்டும் வைஷ்ணவி தோளில் சாய்ந்து கொண்டாள்.
சுபா, சும்மா இரு. சரா என்னாச்சு? யாரும் ஏதும் சொன்னாங்களா? வைஷ்ணவி சைகையில் கேட்டாள்.
அக்கா, “வாயை திறந்து பேசு” சுப்ரியா சொல்ல, “முடியல” கையசைத்து அக்சராவை பார்த்தாள்.
எனக்கு மனசு சரியில்லைக்கா..
உனக்கா?
ம்ம்ம்..
வைஷ்ணவி ஆதூறமாக அக்சரா தலையை வருடினாள்.
சாரிக்கா, உனக்கு துணையா இருந்திருக்கணும். உன்னை கவனிக்காமல் விட்டுட்டேன் அக்சரா பேச, கார் கதவின் வழியாக செழியன் அவர்களை பார்த்தான்.
சீ..சீ..சீனி…ய..ய…ர்….வைஷ்ணவி அழைக்க, வைசு..நீ பேசிட்ட?
ஆமா மாமா, “அக்கா திக்கினாலும் பேசுறா” சுப்ரியா மகிழ்வுடன் கூறினாள். அக்சரா தலையை நிமிர்த்த கூட இல்லை. செழியன் அவளை பார்த்தான்.
அக்சராவிற்கு செழியன் மீது காதல் வந்து விட்டது. அவனது நெருக்கம் தாங்க முடியாமல் தான் தற்பொழுது அழுதே விட்டாள். இளவேலன் வருத்தமுடன் அவர்களிடம் வந்தார்.
சித்தப்பூ, “நாம கோவிலுக்கு போகலாமா?” அவன் கேட்க, ம்ம்..என்று செழியனை பார்த்தார்.
அங்கிள், “எதுக்கு இவ்வளவு டல்லா இருக்கீங்க?” சுப்ரியா கேட்டாள். மாறனும் அவரை கவனித்தான்.
“ஒன்றுமில்லைம்மா” செழியனுடன் ஏறினார். அவர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு கிளம்பினார்கள்.
சித்தப்பூ, இப்ப என்ன செய்யப் போறீங்க? நேரடியாக சத்யாவிடம் பேசலாமே?
அவன் மூஞ்சியிலே விழிக்க கஷ்டமா இருக்குப்பா..
ஏன் சித்தப்பூ? உங்களுக்கு தான் அவர் பிறந்ததே தெரியாதுல்ல?
“ஆமாப்பா. அது தப்பு தான? என்னோட அப்பா இவ்வளவு தூரம் செல்வார்ன்னு நான் எண்ணவேயில்லை” கண்கலங்கினார்.
சித்தப்பூ அவன் வண்டியை நிறுத்த, அவர்களை சுற்றி வளைத்தனர் ஐவர்.
“சித்தப்பூ” சத்தமிட்டு செழியன் இளவேலனை தள்ள, அவர் கீழே விழுந்தார். அந்நேரம் ஒருவன் அரிவாளை இளவேலன் மீது வீச, அவன் கையை நகர்த்த முடியாமல் சக்தியை பார்த்தான். இவர்களுக்கு உதவ சக்தி வந்திருந்தான்.
“ஐய்யா எழுந்திருங்க” சக்தி இளவேலனுக்கு கையை கொடுத்தான். அவர் எழவும் மூவரும் சண்டையிட்டு அவர்களை விரட்டினார்கள்.
அந்த பாண்டியை இளவேலன் கர்ஜிக்க, ஐய்யா..வந்தவனுக பாண்டியய்யா ஆட்களே இல்லை. ஆளுங்க புதுசா இருக்காங்க. நம்ம சுத்து கிராமத்து ஆளுங்க இவனுக இல்லை.
அப்படின்னா யாரு இவனுக?
கலவரம் சம்பந்தப்பட்டவங்க கிராமத்து ஆளுங்க தான? இவனுக யாரு புதுசா தெரியுறானுக?
“தெரியல செழியா. நம்ம சத்யா சார்கிட்ட சொல்லணும்” சக்தி ஓரக்கண்ணால் இளவேலனை பார்த்தார்.
அதெல்லாம் வேண்டாம்லேய். அவங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும்..
ஐய்யா, அவருக்கு வேலையே இதான?
என்ன?
நம்ம ஊர்ல நடந்த கலவர கேஸை இவர் எடுத்திருக்கார்ல்ல இவங்க மூலம் அவருக்கு ஏதாவது ஆதாரம் கிடைக்கும்ல்ல? அதான் சொன்னேன்..
ம்ம்..
செழியா, கவனமா இருங்க. அப்புறம் தீரன் அண்ணாவையும் கவனமா இருக்க சொல்லுங்க. ஊருக்குள்ள எல்லாம் தப்பாவே இருக்கு.
நம்ம சத்யா சார் ரூபினி பிரச்சனையில அவள் அப்பனோட கொலைகார தனத்தை வெளிய கொண்டு வந்திருக்கார். எனக்கு அவரை நினைத்தால் கொஞ்சம் பயமா இருக்கு. ஆதாரம் கிடைக்கும் வரை அந்தாளால் அவருக்கும் ஆபத்து இருக்கு. சொன்னால் கேட்கவே மாட்டேங்கிறார்..
இந்த கலவர கேஸூம் சும்மா இல்லை. ஏற்கனவே தயாள் சார் கொலை செய்யப்பட்டார். அந்த இடத்துக்கு இவர் வந்ததும் இல்லாமல் பெரிய ஆளுங்களோட பிரச்சனையும் பண்ணீட்டு இருக்கார். என்ன நடக்கப் போகுதோ? கொளுத்தி விட்டு சென்றான் சக்தி.
செழியா, இவன் எதுக்கு எல்லார் விசயத்திலும் தலையிடுறான்? அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால். சரா சொன்னது சரி தான். அவங்கள எப்படியாவது நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரணும். அப்ப தான் அவங்க பாதுகாப்பா இருப்பாங்க.
சித்தப்பூ, அக்சா இன்னொன்றும் சொன்னா. அவருக்கு உங்க மேல கோபம்ன்னு சொன்னா.
இருக்க தான செய்யும்..
பார்த்துக்கலாம் சித்தப்பூ. பயப்படாத..
பயமில்லை செழியா. வருத்தமும் கோபமும் தான். என் மேல் எனக்கே வருது. உங்க தாத்தா இப்படி அவளிடம் பேசியிருப்பார்ன்னு நான் கெஞ்சித்தும் சிந்திக்கவில்லை. அவள் வயிற்றில் என் குழந்தை இருக்குன்னு தெரிந்தும்
உங்க தாத்தா அவளை தனியே விட்ருக்கார்.
விடு சித்தப்பூ. இப்ப அவங்கள நம்ம வீட்டுக்கு எப்படி அழைச்சிட்டு வர்றதுன்னு யோசி..
எனக்கு ஒன்றுமே புரியல..
சித்தப்பூ முதல்ல கோவிலுக்கு போகலாம். நம்ம வைசு மனசுக்குள்ள கஷ்டத்தை வச்சிட்டு வெளிய காட்ட மாட்டேங்கிறா. அவளை சமாதானப்படுத்தணும்.
“ம்ம்..வா போகலாம்” இருவரும் வண்டியில் கிளம்பினார்கள்.
சற்று நேரத்தில் கோவிலை அடைந்தனர். வீதி உலா முடிந்து மக்கள் வீடு திரும்பி கொண்டிருக்க, இளந்திரையன் குதிரையில் வந்து கொண்டிருந்தான்.
இருவரையும் பார்த்து, சித்தப்பூ..நான் மதுரவீரனிடம் மாணிக்கை விட்டு வாரேன். கொஞ்ச நேரம் கோவிலிலே இருங்க. நம்ம மாறனோட வந்திடுறேன் என்று அவன் சென்றான்.
இளவேலனும் செழியனும் வைஷ்ணவி தேவி கோவிலுனுள் சென்று பிரகாரத்தை சுற்றிக் கொண்டிருந்தனர்.
சில மணி நேரத்திலே இளந்திரையன் மதுரைவீரன் வேடத்தை களைந்து வந்தான். மாறன் காரில் சுப்ரியா அருகே அமர்ந்தான்.
அங்கு அமைதி நிலவியது.
“மாறா, வைஷ்ணவி தேவியம்மா கோவிலுக்கு போ” இளந்திரையனின் கட்டளையின் பெயரில் காரை கோவிலுக்கு செலுத்தினான் மாறன். அவ்வப்போது இளந்திரையன் வைஷ்ணவியை பார்த்துக் கொண்டே வந்தான்.
கோவிலுக்கு வரவும் குரு அவர்களுக்கு எதிராக வந்தான்.
மச்சான், எல்லாம் தயாரா இருக்குடா..
“ஹே….ஜூஜ்ஜூக்குட்டி” நிகிதா பாப்பா கன்னத்தை கிள்ளினான். பாப்பா வீறிட்டு அழுதாள்.
“உன்னோட கை சும்மாவே இருக்காதா?” மாறன் முறைப்புடன் கேட்டான்.
அவனை சுற்றி சுற்றி வந்த குரு, “முதல் முறையாக என்னிடம் வெறுப்பில்லாமல் பேசுற? ஆச்சர்யமா இருக்கே! ஆவி ஏதும் புகுந்திருச்சோ?” சிந்திப்பது போல தாடையை தேய்த்தான்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை” மாறன் அவனை தள்ளி விட்டு உள்ளே சென்றான்.
வைஷ்ணவியிடமிருந்து அழும் பாப்பாவை வாங்கிய இளந்திரையன், “முன்னாடி போ சிட்டு” என்று இளவேலன் பின் போக சொல்லி கண்ணசைத்தான். அவள் அவனை புரியாது பார்த்துக் கொண்டே சென்றாள்.
“மாமா, எதுக்கு இப்ப இங்க வந்திருக்கோம்? இவ்வளவு நேரம் செம்ம கூட்டமாக ஜே ஜேன்னு இருந்தது. இப்ப யாருமில்லாமல் நாம மட்டும் வந்திருக்கோம்?” சுப்ரியா கேட்டாள்.
மணியப் பாரும்மா…ஒன்றாகுது..அதான் யாருமில்லை.
ஊ..ஊ..ஊ..சத்தமிட்ட நிகிதா வைஷ்ணவி தேவியம்மாவை நோக்கி கையை நீட்டியது.
கருவறை முன் வந்த இளந்திரையன் நிகிதாவை கீழே இறக்கி விட்டான்.
நிகிதா காலை இழுத்து இழுத்து தவண்டு நகர்ந்தது கருவறை நோக்கி..
“நிக்கிம்மா” வைஷ்ணவி எமோன்ஸ்னலாகி சத்தமிட, அனைவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர். எல்லார் கண்ணிலும் ஆனந்தக்கண்ணீர்.
பூசாரி அவளை பார்த்து, “தேவிம்மா இருங்க .பாப்பா அம்மாவிடம் செல்லட்டும் ஒன்றுமில்லை. நீங்க இங்க வாங்க” என்று அவர் அழைக்க, குரு மாலையை வைஷ்ணவி கையில் கொடுத்தான். அவள் புரியாமல் இளவேலனை பார்த்தாள்.
“சரா, சுபா முன்னாடி வாங்க” குரு அழைக்க, அவர்களும் முன்னே வந்தனர்.
“அக்காவோட சேர்ந்து மாலையை பிடித்து பூசாரியிடம் கொடுங்க” இளவேலன் கூறினார்.
“நாங்க எதுக்கு?” திக்கி திக்கி வைஷ்ணவி கேட்க, இளந்திரையன் கண்கலங்க அவளை பார்த்தான்.
“இப்படி சேர்ந்து கொடுத்தால் உங்க வாழ்க்கையில் பிடித்த கெட்டது விலகி நல்லதே நடக்கும்” பூசாரி இளந்திரையனை பார்த்துக் கொண்டே கூறினார்.
பூசாரியிடம் அவனது அத்தை பொண்ணுங்களை பற்றியும், வைசுவின் நிலை பற்றியும் சொல்லி தான் அழைத்து வந்தான்.
வீரனுக்கான விழாக்கள் ஓரளவு முடிந்து விட்டது. இனி அம்மாவுக்கு தான் நடக்கும். “தீரா, நீங்க இரவு பாதுகாப்புக்காக மட்டும் வந்தால் போதும். உங்களது வேலையை பாருங்க” என்று கண்ணை காட்டினார் பூசாரி.
சுப்ரியா குருவிடம் வந்து, “நீங்க எதுக்கு எங்க குடும்பத்தோட நிக்கிறீங்க?” கேட்க, அவள் காதை கடித்தாள் அக்சரா.
“என்னது? அண்ணாவா?” சுப்ரியா குருவை பார்க்க, அவன் அவளை பார்த்து கண்சிமிட்டினான்.
மெதுவாக மீண்டும் அவனிடம், “உங்க வீட்ல ஐ மீன்..அம்மா, அப்பா வரலையா? அவங்களும் செத்து போயிட்டாங்களா?” கேட்டாள்.
அப்பா வீரன் நல்லா இருக்கார். அவருக்கு உங்கள பற்றி தெரியாது. அவரும் மத்தவங்க போல நீங்க பிரச்சனையின் காரணமாக தான் நம்ம வீட்ல தங்கி இருக்கீங்கன்னு நினைச்சிட்டு இருக்கார். மாறனுக்கு என்னை பற்றியும் தெரியாது.
“உங்களுக்கு கஷ்டமா இல்லையா?” சுப்ரியா கேட்டாள்.
பழகிடுச்சு..
ஓ!..
“என்ன அங்க பேச்சு?” இளவேலன் கேட்க, அங்கிள்..இனியாவது நான் வெஜ் சாப்பிடலாமான்னு கேட்டேன்.
“எங்க நின்னு என்ன பேசுற?” அக்சரா கேட்டாள்.
“ஏய்! உனக்கும் பிடிக்கும் தான? இப்ப நல்லவ மாதிரி பேசுற?” சுப்ரியா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
அம்மாடி, சாப்பிடக் கூடாது. நம்ம ஊர்ல தேவியம்மாவுக்காக எல்லாரும் விரதம் இருப்பாங்க. நிறைய நிகழ்ச்சி நடக்கும். நீங்களும் விருப்பப்பட்டால் கலந்துக்கோங்க..
நிகழ்ச்சியா?
ஆமாம்மா. முளப்பாரி, மாவிளக்கு எடுத்தல், விளக்கு பூஜை, அதிகாலை பெண்கள் தலைக்குளித்து மஞ்சத்தண்ணீருடன் வந்து அம்மாவுக்கு ஊற்றுவாங்க..இன்னும் நிறைய நடக்கும்..தற்பொழுது இந்த மஞ்சத்தண்ணீர் ஊற்றுவது தான் தொடர்ந்து நடக்கும்.
“மாமா, நாங்க செய்யலாமா?” இளந்திரையனிடம் சுப்ரியா கேட்டாள்.
“இப்பொழுது வேண்டாம். பின் பார்த்துக்கலாம்” இளந்திரையன் கூற, “தீரா புள்ள ஆசைப்படுதுல்ல?” பூசாரி கேட்டார்.
இதெல்லாம் குடும்பமாக செய்ய வேண்டியது பூசாரியய்யா. உங்களுக்கு தெரியாதா?
“சரி…முதல்ல பூஜையை பார்க்கணும். மூணு பேரும் சேர்ந்து மாலையை பூசாரியிடம் கொடுங்க” இளவேலன் கூற, நிகிதாவை தூக்கிய வைஷ்ணவி அவளது கையையும் மாலையில் வைத்து சேர்த்து கொடுத்தாள்.
“இந்தா வைசு. இதை நீ பூசாரியிடம் கொடு” செழியன் பூக்கூடை ஒன்றை வைஷ்ணவி கையில் கொடுத்தான். அதில் மாலை, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு இருந்தது.
எல்லாரையும் வித்தியாசமாக பார்த்துக் கொண்டே வாங்கி பூசாரியிடம் கொடுத்தாள்.
ராசி நட்சத்திரம் சொல்லுங்க என்று பூசாரி கேட்க, நால்வருக்கும் அக்சரா சொல்ல, தொடர்ந்து இளவேலன் தன்னுடையதையும் தன் அண்ணன் மகன்கள் ராசி நட்சத்திரம் கூறி மனம் வியர்க்க தடுமாறி நின்றார்.
“வேலா” பூசாரி அழைக்க, இளந்திரையன் அவரை கூர்ந்து பார்த்தான்.
ஹம்ம்..ம்ம்..இன்னும் பெயர் ராசி நட்சத்திரம் இருக்கா? அவர் கேட்க, அங்கே வந்த சத்யா தன் அம்மாவை பார்த்தான்.
ராதிகா அவர்களுக்கு எதிரே வந்து தனக்கும் தன் மகனுக்கும் சொல்லி அவர் கையிலிருந்த பூக்கூடையை கொடுத்தார். வைஷ்ணவியும் அவள் தங்கைகளும் பாப்பாவுடன் ராதிகா அருகே சென்று நின்றனர்.
வைஷ்ணவி தேவி அம்மாவுக்கு பூஜை நடந்தது. பிரசாதம் கொண்டு வந்து பூசாரி அனைவருக்கும் கொடுத்தார்.
குங்குமத்தை ராதிகா கையில் அவர் கொடுக்க, இடையிட்டு அதை வாங்கிய சத்யா..
“சாரி சாமி, என்னோட அப்பா செத்துட்டாரு. அம்மா எப்படி குங்குமம் வைப்பாங்க?” கேட்கவும், இளந்திரையன் கைகள் இறுகியது. இளவேலன் மொத்தமாக உடைந்தார். அவர் கண்ணீரை பார்த்த ராதிகா மனம் ஊமையாக கதறியது. மகனின் செயலில் கோபமும் வந்தது.
“இதுக்கு தான் அழைச்சிட்டு வந்தீயா?” ராதிகா சினமுடன் சத்யாவிடம் கேட்டார்.
“உண்மையை தானம்மா சொன்னேன். என்ன சாமி சொல்றீங்க?” பூசாரியிடம் கேட்டுக் கொண்டே ஓரக்கண்ணால் இளவேலனை பார்த்தான் சத்யா..
“ஹே..உன்னோட பெயரிலும் இளா இருக்கு” மாறன் கேட்க, சத்யா அதற்கு பதில் கூறாமல்.. “ஏன் சாமி, இங்க திதி குடுக்குற இடம் இருக்கா? ரொம்ப வருசமா என்னோட அப்பனுக்கு நாங்க எதுவும் செய்யலை”.
“இங்க இல்லைப்பா. நீங்க ராமேஸ்வரத்துல்ல குடுங்க. உங்களுக்கு நல்லது தேடி வரும்” பூசாரி கூறினார்.
“ஓ! ஏம்மா எப்ப போகலாம்?” ராதிகா பக்கம் சத்யா திரும்ப, அவனது வார்த்தையில் ராதிகா சிலையாகி சமைந்து விட்டார். ஆனால் இளவேலனுக்கு உடலில் நடுக்கம் பரவியது.
சத்யா சார், “இது நல்லதுக்கில்லை” சினமுடன் செழியன் சத்தமிட்டான்.
“செழியா” அவன் கையை பிடித்த தீரன் “அமைதியா இரு. நாம கோவில்ல இருக்கோம்” அவனை அடக்கினான்.
“என்னோட அப்பனை பத்தி பேசினால் உங்களுக்கென்ன கோபம் வருது செழியன் சார்?” சத்யா சற்று கேலியுடன் கேட்க, சத்யாவை முறைத்த இளந்திரையன் தன் சித்தப்பாவின் கையை இறுக பற்றினான்.
சத்யா அதை பார்த்து, “ஆமா உங்க சித்தப்பாவுக்கு எதுக்கு தீரன் அண்ணா இப்படி வியர்க்குது?” அவன் மேலும் சீண்ட, பொறுமை காக்க முடியாமல் ராதிகா தன் மகனை அறைந்து தரதரவென வெளியே இழுத்து சென்றார். இளவேலனோ மனம் தாங்காமல் அமர்ந்து விட்டார்.
“சித்தப்பூ” இளந்திரையன் அவரை எழுந்து நிற்க வைத்தான்.
“அவன் பேசியதற்கு இவர் எதுக்கு இப்படி தடுமாறுகிறார்?” மாறன் நேரடியாகவே கேட்டான்.
“மாறா” இளந்திரையன் சத்தமிட, அனைவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.
சிட்டு, “சாமி பிரசாதம் வாங்கிட்டு வாங்க” என்று இளந்திரையன் இளவேலனை வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியே அழைத்து சென்றான்.
ராதிகா தன் மகனை திட்டிக் கொண்டிருக்க, அவர் கையை பற்றிய சத்யா “அம்மா..நிறுத்துங்க” கத்தினான் சீற்றமுடன்.
நான் கேட்டதுக்கே அந்தாளுக்கு வலிக்குதே! அப்பன் யாருன்னு தெரியாதவன்னு எத்தனை பேர் என்னிடம் கேட்டிருப்பாங்க. அவங்க முன்னாடி நான் இப்படி தான நின்னேன்.
நீங்க என்ன தான் அப்பா செத்துட்டான்னு சொல்லி வச்சிருந்தாலும் அப்பா பெயரை எதிலும் பயன்படுத்தவில்லை. அதனாலே இப்படி பெயர் கிடைச்சது? ஏதாவது ஒரு பெயரையாவது பள்ளி, கல்லூரிக்காக கொடுத்திருக்கலாமே! சீறினான்.
ராதிகா கதறி அழுதார்..
“சொல்லுங்கம்மா? ஏன் கொடுக்கல? இந்த வைஷ்ணவி தேவியம்மா மீது ஆணையாக சொல்லுங்க. இதுக்கும் காரணம் இருக்கு தான? சொல்லுங்க?” கத்தினான்.
“ஆமா இருக்கு” அழுது கொண்டே ராதிகா கூறினார். அவர் கூறியதை கேட்ட சத்யாவிற்கு சினம் மிகுந்தது. இளவேலனும் இளந்திரையனும் திகைத்து நின்றனர்.
error: Content is protected !!