Skip to content
Post Views: 4,243
??? பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.. நேரம் இருக்கும் போது பிழைகளை மாற்றிக் கொள்கிறேன்??
அத்தியாயம் மூன்று
Advertisement
காசியின் தவிப்பை மேலும் அதிகரிக்காமல் கால் மணி நேரத்தில் வெளிவந்த ஏகலைவன் கெத்தாக காலரை தூக்கிவிட்டு கண்ணடிக்க காசிக்கு தான் ஏகபோக குஷியானது.
“சூப்பர் டா மச்சான் சூப்பர் சூப்பர்… எங்க மேடம் இன்டர்வியூ வைச்சே நீ செலக்ட் ஆயிட்டன்னா இதுக்கு அப்பறம் என்ன வந்தாலும் நின்னு சமாளிச்சுடுவ டா…”எனக் குத்தாட்டம் போடாத குறையா கூறினான்.
Advertisement
Advertisement
“அதென்ன மேடம் இன்டர்வியூ வைச்சு செலக்ட் ஆயிட்டேன்னு பெருமையா சொல்ற… அந்தளவுக்கெல்லாம் சீன் இல்லை… கேட்ட எல்லாமே சில்லி கொஸ்டீன்ஸ் தான்…” உதட்டை சுழித்து இகழ்சியாக கூறியவனை நம்பாத பார்வை பார்த்தான் காசி…
நண்பனின் பார்வையை அலட்சியமாக கடந்தவன் “நான் பைக் எடுத்துட்டு வீட்டுக்கு போறேன் மாமே. ஆபிஸ் முடிஞ்சதும் ஷேர் ஆட்டோல வந்துரு…” என்றபடி முன்னால் நடத்தான்.
Advertisement
“நோ பிராப்ளம் டா மச்சி தாராளமா பைக் எடுத்துட்டு போ…” என காசி சிரித்தபடியே கூறியது அப்போது ஏகலைவனுக்கு புரியவில்லை பெட்ரோல் இல்லாமல் பைக் பாதியில் நிற்கும் போது தான் அந்த சிரிப்பு எதற்காக என்று புரிந்தது…
“வெண்ண மவனே…” என ஆரம்பித்து பல கெட்ட வார்த்தையில் த்திட்டியவன் கோடை காலத்தின் உச்சி வெயிலில் பைக்கை உருட்டிக் கொண்டே பெட்ரோல் பங்க் வரைக்கும் சென்றான்.
வியர்க்க விறுவிறுக்க பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்தியவன் “எக்கா இரண்டு நூறுக்கு போடு க்கா…” எனக் கூறிவிட்டு நெற்றியில் வழிந்த நீரை கைகளில் வழித்து உதறினான்.
“இடியட்…” என்ற சத்தமானக் குரலில் விழிகள் இரண்டும் தன்னிச்சையாக விரிந்து கொள்ள குரல் வந்த திசையைப் பார்த்தான். காரில் அமர்ந்தபடியே முகத்தை துடைத்து கொண்டிருந்தாள் ஆரியா.
“ஐயோ சாரி சாரி… ஏதோ தெரியாம…” என இவன் திணற அவளோ இவனைக் கண்டுகொள்ளாமல் முகத்தை அழுந்த துடைத்து கொண்டிருந்தாள்.
“என்ன தம்பி பின்னாடி யார் இருக்கா இல்லன்னு பார்த்து கையை உதற கூடாத… பாருங்க பாப்பா முகத்துல பட்ருச்சு…” என டிரைவர் கூற அவரை சங்கடமாக பார்த்தான்
“இல்லைண்ணா கவனிக்கல…” என்றவன் “சாரி ஏதோ தெரியாம பட்ருச்சு நான் கவனிக்கவே இல்லை…” என ஆரியாவிடம் மன்னிப்பு கேட்டான். அவளோ இவனை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை… கையில் வைத்திருந்த கைக்குட்டையை பேக்கில் வைத்துவிட்டு நிதானமாக நிமிர்ந்து பார்க்க கண்களில் விழுந்தான் ஏகலைவன். அவள் நிமிர்ந்த அடுத்த நிமிடம் மீண்டும் அவளிடம் மன்னிப்பை வேண்டினான். புன்முறவலுடன் “தட்ஸ் ஒகே கலைவாணன்…” என்றாள்.
“கலைவாணன் இல்லை மேம் ஏகலைவன்…” என்றான் அழுத்த குரலில். அதற்கு அவள் பதில் கூறும் முன்பே
“தம்பி காசு கொடுத்துட்டு பேசுங்க…” என்ற கேசியரின் குரலில் பல்லைக் கடித்தப்படியேத் திரும்பியவன் அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் ஆரியின் பக்கம் திரும்ப கார் கிளம்ப சரியாக இருந்தது ‘கிளம்பறேன்’என்பதை போல் தலையாட்டிவிட்டு சென்றாள்.
“இப்படி பண்ணிட்டியே தல…” என அழுவது போல் முகத்தை வைத்தபடி கேட்டவனை பார்த்து விசமமாக சிரித்த கேஷியரியோ “நான் நைன்ட்டி கிட்ஸ் சிங்கிளாக்கும்…” என்றான்.
“நீயா டா…” என்றவன் அதே விசம சிரிப்போடு “இங்க பேசலன்ன என்ன? நான் தான் ஆபிஸ்ல பேசுவனே வவ்வவே…” என பழிப்பு காட்டிவிட்டு சென்றவனுக்கு தெரியவில்லை அவளை மீண்டும் காண்பது அரிதிலும் அரிதான ஒன்று என்று…
அடுத்த அரைமணி நேரத்தில் காசியின் வீட்டிலிருந்தான் ஏகலைவன்… ரெப்ஃபர்ஷ் செய்துவிட்டு படுக்கையில் விழுந்தவன் அடுத்த சில நிமிடங்களில் உறங்கி போனான். அந்த உறக்கம் மாலை சௌர்ந்தயா அழைக்கும் வரை நீடித்தது.
கண் பாஷை பேசினால்
நான் என்ன செய்வேன்
கன்ப்யூசன் ஆகிறேன்
உள்ளுக்குள்ளே என்ற பாடலின் சத்தத்தில் கண் விழித்தான்.
தொடுதிரையில் தெரிந்த தாயின் எண்ணைப் பார்த்ததும் போனை சிலைண்ட் மோடில் போட்டுவிட்டு மீண்டும் உறக்கத்திற்கு தாவ உறக்கம் வர மறுத்தது… நிதானமாக எழுந்தவன் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி விட்டு தாயிற்கு அழைத்தான்.
எதிர் முனையில் அழைப்பை ஏற்க சில நிமிடங்களானது “இவ்வளவு நேரம் போனை எடுக்காம என்ன பண்றாங்க இவங்க..” என முனகிக் கொண்டே மீண்டும் அழைத்தான். இம்முறை அழைப்பு ஏற்கப்பட்டது. ‘சொல்லுங்கம்மா…” என்றதும் தான் தாமதம் படபடவெனப் பொரிய ஆரம்பித்துவிட்டார் சௌந்தர்யா
“யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ணிட்டு இருக்க ஏகலைவா… நான் உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன் எங்களுக்கு யார் துணையும் வேண்டான்னு… ஒருதடவை சொன்னா உனக்கு புரியாதா? ஆம்பளை துணை இல்லாமல் கூட எங்கனால இருக்க முடியும்… நீயோ, உங்கப்பாவோ எங்களை பாத்துக்க வேணும்னு தேவையில்லை… இப்பவே உங்கப்பாவை இங்கிருந்து போக சொல்லு இல்லை நடக்கறதே வேற…” என சௌந்தர்யா கோபமாக கத்த கத்த இடையிட்டான் கலை
“உங்களுக்கு யார் துணையும் வேண்டாம் ம்மா… ஆனா டாடிக்கு கண்டிப்பா ஒரு துணை வேணும்…” என்றதும் எதிர்முனையில் பலத்த அமைதி.
தாயின் அமைதியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டவன் “அவருக்கு போன மாசம் மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்துருச்சு மா… டாடி தான் யார்கிட்டேயும் சொல்ல வேண்டான்னு சொல்லிட்டார். இப்ப நானும் அங்க இல்லை சடன்லி அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா அம்மான்னாலும் வராது அப்பான்னாலும் வராது. அதான் இப்படியொரு சப்பைக் கட்டுக் கட்டி உங்க கிட்ட அனுப்பி வைச்சேன்…” எனக் கூறியவனின் குரலில் மித மிஞ்சிய வருத்தம் மட்டுமே இருந்தது. மகனின் குரலே அவன் கூறுவது உண்மையென புரிந்தது சௌந்தர்யாவிற்கு
“சரி வைக்கிறேன்…” என்றதோடு அழைப்பைத் துண்டித்தார் சௌந்தர்யா.
“ஹப்பா…” பெருமூச்சுடன் திரும்ப அவனருகில் சோக ஸ்மைலியுடன் காசி நின்றிருந்தான்.
“மாமே நீ எப்ப வந்த…”என உற்சாக குரலில் கேட்டான். அதற்கு காசி பதில் கூறவில்லை அவன் மனம் முழுவதும் கலை கூறியதிலயே இருக்க அதை பற்றி தான் விசாரிக்கவும் செய்தான்.
“மாமாக்கு உடம்பு சரியில்லையா மச்சி? அதனால தான் இங்க வரலன்னு சொன்னீயா? ஒரு வார்த்தை சொல்லிருக்க வேண்டியது தானே டா…ச்ச நான் கூட உன்னை தப்பா நினைச்சுட்டேன் சாரி டா மச்சி…” என சோகம் போல் கூறியவனைப் பார்த்து பக்கென்று சிரித்தான் கலை.
‘என்ன கேட்டுட்டேன்னு இவன் இப்படி சிரிக்கிறான்…’ என நினைத்தபடியே கலையைப் பார்த்தான் காசிநாதன்.
“அடேய் உனக்கு கூடவா நான் பொய் சொல்றேன்னு புரியல…” என்றதும் விழிகள் விரிய “எதே பொய் சொன்னாயா…” என்றான் அதிர்ச்சியாக.
“ஆமா பொய் தான் சொன்னேன்…” என சிரித்துக் கொண்டே கூறினான்.
“ஏன் டா இப்படி பண்ற? அத்தை ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க…” என கலையை முறைத்தப்படி சௌந்தர்யாவிற்காக பேசலனான் காசி.அவனின் முறைப்பில் கண்களை இறுக மூடித் திறந்தவன்
“பின்ன என்ன செய்ய சொல்ற? நான் சொல்றதை யாருமே கேட்கல. வீட்டில இரண்டு பேருமே பொம்பளைங்க. அவங்க துணைக்கு யாருமே இல்லை. திடீர்னு மணிக்கு லேபர் பையின்(வலி) வந்துட்டாலும் அம்மானால எப்படி அவளை ஹாஸ்பிடல் வரைக்கும் கொண்டு போக முடியும் சொல்லு… ஆப்டர் டெலிவரிக்கு அப்பறமாவது வொர்க் மாத்திக்கிறேன்னு சொன்னேன் கொஞ்சம் கூட காதுல வாங்கிக்கல பெண்ணியம், பெரியாரிஸன்னு பேசறாங்க… அதையும் மீறி சொன்னா உங்கத்தை எங்கிட்ட சண்டைக்கு வராங்க… சரி அப்பாவை அவங்க கூட இருக்க சொல்லி அனுப்பி வைச்சா அதுவும் வேண்டாமாம் அதான் இப்படி சொன்னேன்…” என்று கூறியவனின் முகத்தில் அத்தனை நிம்மதி. அதற்கு நேர்மாறாக காசி நின்றிருந்தான்
“ஓபனா சொல்றேன் இப்படியான எண்ணத்தை மாத்திக்கலன்னா ஃப்யூசர்ல ரொம்ப வருத்தப்படுவ டா…” என ஆழ்ந்த குரலில் கூறினான்.
“ஐயோ நாங்க இப்படியே இருந்துட்டு போயிடறோம்.எங்களுக்கு இந்த கூலைக் கும்பிடு வாழ்க்கையே வேண்டாம் சாமி. நீங்களே பொண்ணுங்களுக்கு கூலை கும்பிடு போட்டுட்டு ஜெகஜோதியா ஜாலியா இருங்க…” என நக்கலாக கூறிவிட்டு அங்கிருந்து நகர காசி தன் கோபத்தை அடக்கியப்படி அங்கேயே நின்றிருந்தான். அதற்கு பிறகு இருவருமே பேசிக் கொள்ளவில்லை அந்த மெளனம் இரவு வரை தொடர்ந்தது…
கிச்சனில் ஏதோ உருட்டிக் கொண்டிருந்தவனின் அருகில் வந்த கலையோ “மாமே என்ன செஞ்சு இருக்க. எனக்கு ரொம்ப பசிக்குது…” வயிற்றை பிடித்தபடிக் கேட்டவனை மேலிருந்து கீழாக பார்த்தவன் “எதுவும் செய்யல…” என இறுகிய குரலில் கூறினான்.
“சூப்பர், அப்ப வெளிய எங்காவது போகலாமா. மூஞ்சி புக்ல புட் ரீவியூஸ் பாத்தேன் பாக்கவே எம்மியா இருந்துச்சு. ட்ரை பண்ணி பாக்கலாமா…” என்றான் ஆர்வமாக
“ஏதாவது சந்து பொந்துல தான் இந்த மாதிரியான நல்லக் கடையிருக்கும். அதை இந்த நேரத்தில தேடிப் பிடிச்சு சாப்பிட்டு வர ரொம்ப லேட் ஆகும்…” இப்போதும் அதேக் குரலில் தான் கூறினான்.
“அடேய் வா டா இந்த நேரம் அந்த நேரன்னு பேசிட்டு…” எனக் கையோடு இழுத்து சென்ற இடம் தான் பாகுபலி தோசை கடை…
ரோட்டு கடையாக இருந்தாலும் கூட்டம் அலை மோதியது ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அருகிலேயே இருந்ததால் மாணவர்களின் கூட்டம் சற்றே அதிகமாக இருந்தது “டேய் கூட்டமா இருக்கு டா…”என கடுப்பாக மொழிந்த காசியை பார்த்தவன் “பரவாயில்ல வெயிட் பண்ணி சாப்பிடலாம் டென் மினிட்ஸ் டிராவல் பண்ணி இவ்வளவு தூரம் வந்தாச்சு இனி சாப்பிடாம போகவே கூடாது…” என காசியிடம் கூறிவிட்டு கடைக்காரரிடம்
“அண்ணே அதிரடி தோசை இரண்டு பிளேட்…” என்றான் சற்றே பெரிய குரலில்…
“எதே அதிரடி தோசையா…” எனக் காசி கண்களை விரிக்க ஆமென சிரிப்போடு தலையாட்டினான்.
“டேய் பேரே அதிரடியாக இருக்கு டா… நார்மல் தோசையே போதும் டா…” என பதறினான் காசிநாதன்
“பயப்படாத மச்சி நல்லா இருக்கும்…” எனக் கூற கூறவே கலை கூறியிருந்த அதிரடி தோசை வந்திருந்தது.
“ஜஸ்ட் வாவ்…” என்றபடி வாங்கியவன் தோசையை முகர்ந்து பார்த்தான். காசியோ கலையை பாவமாக பார்த்தான்.
“சும்மா அடிச்சு விடு மாமே…” என்றவன் சாப்பாட்டில் மூழ்க காசியோ அதனை ஆராய்ந்தப்படி நின்றான்…
“என்னடா பாத்திட்டே இருக்க சாப்பிடு…” என வாயில் தோசையை அதக்கி கொண்டே கூறினான்.
“இல்ல நீயே சாப்பிடு… நான் வெஜ் தோசை…” என கூற முறைத்தான் கலை
“ரொம்ப பிகு பண்ணாதே தின்னு… எல்லாமே மட்டன் தான்…” என்றவன் தோசையை மென்றப்படியே அதீத வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த வாகனங்களை வேடிக்கை பார்த்தான்.
அதீத வாகனங்களுக்கு இடையில் மிதமான வேகத்தில் அவளின் வாகனம் சென்று கொண்டிருக்க அவசரமாக வாயிலிருந்த தோசையை முழுங்கி விட்டு “டேய் மாமே… இந்த பொண்ணு எங்க டா இங்கிருந்து போறா…” எனப் பொதுவாக கேட்டான்.
“எந்த பொண்ணு…” எனக் கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்க்க ஆரியின் வாகனம் பாதி தூரம் சென்றிருந்தது…
வாகனத்தின் எண்ணை வைத்தே சென்றது ஆரி தானென்று கண்டுகொண்டவன் “ஓ மேடமா…” என்றான்.
“ஆமா அந்த பொண்ணு எங்க இங்க…” என்றான் தோசையை பிய்த்து வாய்க்குள் வைத்தபடி
“இங்கொரு சைட் வொர்க் போயிட்டிருக்கு சோ அதை விசிட் பண்ணிட்டு போறாங்க…” என்றான்
“ஓ, கொஞ்சம் ஆட்டிட்யூட் போல தெரியுது …” என்றவன் பெட்ரோல் பங்கில் நடந்ததைக் கூறினான்.
“நாலு தடவைக்கு மேல சாரி சொல்லியும் நிமிர்ந்து கூட பாக்கல தெரியுமா மாமே… முகத்தை முழுசும் தொடச்சிட்டு நிதானமா நிமிர்ந்து பார்க்குது. கொஞ்சம் கடுப்பா தான் இருந்துச்சு. போன போகுதுன்னு மறுபடியும் ஒருதடவை சாரி கேட்டேன்… அதுக்கு அந்த புள்ளை ‘தட்ஸ் ஒகே கலைவாணன்’ சொல்லுது…” என்றான் கடுப்பான குரலில்…
“அதான் தட்ஸ் ஒகேன்னு சொல்லிட்டாங்களே இதுல எங்க டா ஆட்டிட்யூட் இருக்கு…” என புரியாமல் கேட்டான் கலையின் நண்பன்.
“எங்க இருக்கா? டேய் உடம்பு முழுக்க ஆட்டிட்யூட் தான் இருக்கு அதுக்கு… இன்னைக்கு இன்டர்வியூ ஹால்லயே ஒரு போல பந்தவா பாத்துச்சு அதுக்கு அப்பறம் பெட்ரோல் பங்கில் கூப்பிட கூப்பிட நிமிர கூடயில்லை… இதெல்லாம் பார்த்தா எனக்கு ஆட்டிட்யூட் மாதிரி தான் தெரியுது… உனக்கு எப்படியோ தெரியல…” என்றான் ஒருவித ஏற்ற இறக்க குரலில்.
“எனக்கு எப்படியோன்னா நீ என்ன சொல்ற வர…” சற்று முன் சென்ற கோபம் திரும்ப வந்திருந்தது. அத்தனை கோபம் வந்தது காசிக்கு… என்னை என்ன நினைத்து இப்படி பேசுகிறான் என்று…
குனிந்து அடுத்த தோசையைப் பிய்த்துக் கொண்டே “இல்ல மாமே நீ அவளை ரொம்ப வருசமா பாத்துட்டு இருக்க சோ உனக்கு அவளோட குணம் பழகி இருக்கலாம் இல்லை அது தெரியாம கூட இருக்கலாம். நான் பாத்ததும் கண்டு பிடிச்சுட்டேன்னு சொல்றேன்…” காசியின் கோபத்தை கவனிக்காதவன் போல் சாதாரணமாக கூறினான்.
“ஹிம் இருக்கலாம்…” என்றதோடு அமைதியாகி விட்டான். சில சமயம் கலையின் பேச்சு இப்படி தான் இருக்கும். பெண்களை மட்டம் தட்டும் ரகமில்லை என்றாலும் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் ரகமுமில்லை இரண்டிற்கும் மத்தியில் நின்று உயிரை வாங்கும் ரகம். பெண்களுக்கு கல்வி முக்கியம் என்று பேசுபவன் அதே சமயம் பெண்களால் ஆண்கள் இல்லாமல் தனியே சாதிக்க முடியாது என்றும் பேசுவான்…
********
இங்கு தன் வீட்டிற்கு வந்த ஆரி தொலைக்காட்சி பெட்டியை உயிர்ப்பித்து சத்தத்தை கூட்டி வைத்தாள்…அப்படி வைத்தாலாவது தன் அன்னை வந்துவிட மாட்டாரா என்ற நப்பாசை அவளுக்கு… தொலைக்காட்சியின் சத்தம் அவளின் காதில் இரைச்சியாக கேட்டதே தவிர தெளிவாக கேட்கவில்லை இருந்தும் தொலைக்காட்சியின் சத்தத்தை குறைக்கவில்லை அவள்..
கோடை கால வெயிலுக்கு இதமாக சில்லென்ற நீரில் உடம்பை கழுவி விட்டு வந்தவள் ஹாலிலிருந்த சோபாவில் கால் நீட்டி அமர்ந்தாள்.
காலையிலிருந்து அலைந்து கொண்டே இருந்ததற்கு அடித்து போட்டது போல் உடம்பு வலியெடுத்தது…கண்கள் இரண்டும் தூக்கத்திற்கு ஏங்கியது கண்களை அழுந்த துடைத்து கொண்டவள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடலை பார்த்தாள்.
உணர்வே இல்லாமல் ஆனேனோ ஆயுதமாய்
உயிரே இல்லாமல் நின்றேனோ காவலனாய்
புது பாடல் போல என நினைத்துக் கொண்டவள் அடுத்தடுத்து வரும் பாடலின் வரிகளை படித்தாள்.
வெறும் வரிகளால் கூட ஒருவருக்குள் உணர்வை கடத்த முடியுமா என்ன? என்ற கேள்விக்கு பதில் தற்போது ஆரியின் இதழில் இடம் பிடித்த மெல்லிய புன்னகை தான் பதில். அதே புன்னகையுடனே அயர்ந்து உறங்கியும் போனாள்.
அது ஓர் அழகிய பூஞ்சோலை. ஊதா நிற பூக்களும் வெள்ளை நிற பூக்களும் மட்டுமே நிறைந்தது… மனதிற்கு பிடித்த நிறத்தில் அங்கிருந்த பூக்களைக் கண்டதும் குழந்தை போல் மனம் துள்ள அந்த வயல் வெளியில் ஓடினாள் பெண்…
“குட்டிமா பாத்து போ…” என்ற தந்தையின் குரலும் “ஆரி விழுந்திட போற…” என்ற தாயின் குரலும் அதனுடனே “அம்மா நானும், அக்காவோட போறேன்…” என்ற சகோதரனின் குரலும் கேட்டது அவளுக்கு… மூவரின் குரலும் மாறி மாறிக் கேட்க வெகுதூரம் சென்ற பின்னே திரும்பி பார்த்தாள். வெண்ணிற பூக்களுக்கு நடுவில் மூவரும் இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
“அப்பா,அம்மா,வாங்க டேய் எருமை வாடா…” என அங்கிருந்தபடியே கத்த
அவளை பார்த்து சிரித்தவர்கள் பின்னால் திரும்பி பார்த்தனர்…
அவர்களுக்கு பின்னால் ஒருவன் வந்துக் கொண்டிருந்தான். முகம் சரியாக தெரியவில்லை என்றாலும் ஏதோ அரைகுறையான முகம்.. அலையலையான கேசத்தை கோதிக் கொண்டே இவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
தன் குடும்பத்தினரையும், தன்னை நோக்கி வரும் ஆடவனையும் மாறி மாறி பார்த்தாள். ஆடவன் இவளை நெருங்க நெருங்க குடும்பத்தினர் மூவரும் மெல்ல மெல்ல மறைய தொடங்கினர்.
“அப்பா, அம்மா, பப்பி டேய்… எங்க போறீங்க இருங்க நானும் வரேன்…” எனக் கத்தியவள் நிஜத்திலும் கத்தி விட உறக்கமும் கலைந்திருந்து. இத்தனை நேரம் இவளை தழுவிய நித்திரை சற்றே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது… முகம் முழுவதும் வியர்வை பூக்கள் பூத்திருக்க அதனை புறங்கை கொண்டு துடைத்தவள் மணியை பார்த்தாள். மணி அதிகாலை மூன்று மணியைக் காட்டியது…
தொலைக்காட்சி பெட்டியை அணைத்தவள் அறையினுள் இருந்த படுக்கையில் விழுந்தாள். சற்று நேரம் எட்டி நின்று பார்த்த நித்தரை மீண்டும் அவளை ஆற தழுவிக் கொண்டது.
error: Content is protected !!