Skip to content
Post Views: 4,813
??தாமதத்திற்கு மன்னிக்கவும் தங்கம்ஸ் ?? பிழைகள் இருப்பின் அவற்றை சரிசெய்ய பார்க்கிறேன் சீரமத்திற்கு மீண்டும் மன்னிக்கவும்??
அத்தியாயம் நான்கு
அப்பாவும்,மகளும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது கார் போச் வரைக்கும் நன்றாகவே கேட்டது.
Advertisement
“பாரேன் அவங்க அப்பா வந்ததும் நான் இவ்வளவு நேரம் வராம இருக்கறதுக் கூடத் தெரியாமல் இருக்கிறாள்…” என நினைத்தப்படியே உள்ளே நுழைந்தார் சௌந்தர்யா.
தியாகராஜனின் மடியில் படுத்திருந்தாள் மணிமேகலை. கணவனையும், மகளையும் ஆழ்ந்துப் பார்த்தவர் பதில் பேசாமல் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டார். மனைவி பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவர் “குட்டி ம்மா, சாப்பிட்டு ரொம்ப நேரம் ஆயிடுச்சு கொஞ்சம் பால் தரவா…” எனக் கேட்டுக் கொண்டே மடிமீதிருந்த மகளின் தலையை தலைகணையில் வைத்தவர் கிச்சன் நோக்கி நடந்தார்.
மகளின் பெயரில் மனைவிக்கும் காபி தாயாரித்தவர் மகளிற்கு பாலைக் கொடுத்துவிட்டு மனைவியின் அறைக்குள் நுழைந்தார். கணவன் காபியுடன் வரவும் கண்களை அகல விரித்துப் பார்த்தார் சௌந்தர்யா. உன்னிடம் இதை எதிர் பார்க்கவில்லை என்பதைப் போல் தான் நின்றிருந்தார்.
Advertisement
தியாகுக்கோ மனைவியின் சோர்ந்திருந்த கண்களும் கலையிழந்த முகமும் பரிதாபத்திற்கு பதிலாகக் கோபத்தை தான் கொடுத்தது. “இந்த வயசுலயும் இப்படி கஷ்டபட்டு சம்பாதிக்க வேணும்னு என்ன இருக்கு…” என்றார் கையில் வைத்திருந்தக் காபியை மனைவியிடம் நீட்டியப்படி.
Advertisement
‘அதானே பார்த்தேன்…’ என்று நினைத்துக் கொண்டவர்
“ம்ச் பிளீஸ் மறுபடியும் ஆரம்பிக்காதீங்க. இன்னும் நம்ம சண்டைப் போட சின்னப் பசங்கக் கிடையாது. நமக்கு பேரன், பேத்தியே வர போறாங்க.தென் நான் ஆணுங்கற க்கர்வத்தையும், ஈகோவையும் இத்தோட விட்ருங்க…” என்றவர் கணவன் கொடுத்த காபியை வாங்கி பருகினார்.
“பேரன்,பேத்தியே வந்தாலும் நீ என்னைப் புரிஞ்சுக்க மாட்ட…” எனக் கோபமாக மொழிந்து விட்டு சென்ற கணவரை ஆற்றாமையோடு பார்த்தார் சௌந்தர்யா…
Advertisement
மனைவியின் பேச்சில் உண்டானக் கோபத்தை முகத்தில் காட்டாமல் வெளியில் வந்தவர் மகளின் அருகில் அமர்ந்தார்… மகளோ போனோடு அல்லாடிக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சு டா…” என்றார் பரிவாக
“ஹான் அப்பா… அவருக்கு தான் கூப்பிட்டேன் அவர் எடுக்கல…” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
“வேற ஏதாவது வொர்க்ல இருப்பார்… கொஞ்ச நேரம் கழிச்சு ட்ரை பண்ணு…” என்றவர் மகளிற்கு தனிமைக் கொடுத்துவிட்டு அங்கிருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்துக் கொண்டார்.
தந்தைக் கூறியதுப் போலவே சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் கணவனின் அலைபேசிக்கு அழைத்தாள்.
அதே கணம் இங்கு காசியின் அறையில் விடாமல் அலைபேசி ஒலித்துக் கொண்டே இருந்தது..
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
வாத்தி ரைடு…
என்ற பாடல் வரிகளும் அதற்கு பின்னே வரும் பி.ஜி. எம்_மும் முற்றும் முழுதாக முடிந்து மீண்டுமொருமுறை பாட ஆரம்பித்திருந்தது. இத்தோடு இரண்டு முறைக்கு மேல் அழைத்து விட்டாள் காசியின் மனைவி.
கலையின் பேச்சில் கோபத்தில் இருந்தவன் அதை மனைவியின் மேல் காட்டி விடுவோமோ என்று நினைத்தான். அதனாலயே அவள் அழைத்தும் அழைப்பை ஏற்கவில்லை. தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டேயிருக்கவும் தான் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“மாமா… பிஸியா…” என்றாள் மெல்லிய குரலில்
“ஹான் இல்லை மா… என்ன பண்ற…” எனக் கேட்டவனின் குரலில் இருந்த மாறுபாட்டை சரியாகப் புரிந்துக் கொண்டாள் மணி மேகலை…
“என்னாச்சு மாமா… ஏன் வாய்ஸ் ஒரு மாதிரியிருக்கு…” எனக் கேட்டதும்
“ஒன்னுமில்லை தங்கம்…” என்றான் மெல்லியப் புன்னகையுடன்
“என்னாச்சு சொல்லுங்க…” என மீண்டும் கேட்க கலை பேசிய அனைத்தும் ஒன்று விடாமல் கூறினான்.
“மனசங்களோட உணர்வை இவன் ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறான். அத்தைகிட்ட இப்படியா சொல்லணும் அவங்க ஃபீல் பண்ண மாட்டாங்களா? கேட்டா அம்மாவும், மணியும் தனியா இருக்காங்க.. அம்மானால எல்லாத்தையும் பாத்துக்க முடியாதுன்னு சொல்றான்…” தன் ஆதங்கத்தைச் சொல்ல எதிர்ப்புறம் ஆழ்ந்த அமைதி..
மனைவியின் அமைதியில் “தங்கம்…” என அழைக்க அவளோ பெருமூச்சுடன் “அண்ணாவோட பாய்ண்ட் ஆப் வியூ வேற, உங்க பாய்ண்ட் ஆப் வியூ வேற. நான் உங்களை தப்பா சொல்லல. அதுக்காக அண்ணா பேசற எல்லாமே த்தப்பா இருக்கணுன்னு இல்லை…” என்றவள் காசியின் பதிலைக் கூடக் கேட்காமல் அழைப்பைத் துண்டித்தாள்.
“இவளைக் கட்டிகிட்டு…” எனப் பல்லைக் கடித்துக்கொண்டு மொபைலை டேபிளில் பட் என்ற சத்தத்தோடு வைத்தவன் அதே கடுப்போடு உறங்கியும் போனான்.
இங்கு அவர்களின் பேச்சிற்கு காரணமானவனோ அவன் அறையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். அவனின் மனமோ காரிகையை சுற்றியே வளம் வந்தது. காலையில் மங்கையைக் கண்டதிலிருந்து தற்போது வரை மனம் அவளை விட்டு விலகுவேனா என்று அடம் பிடித்தது…
வெறும் நான்கு முறை பார்த்த பெண் இத்தனைப் பாதித்து விட்டாளா? என்று நினைக்கும் சமயமெல்லாம் அவள் உன்னைப் பாதிக்க மட்டும் செய்யவில்லை குப்பற விழ வைத்துவிட்டாள் என்று அவனின் வெள்ளை மனம் கூறுவதை முற்றும் முழுதாக இல்லையென்று மறுக்க முடிவில்லை அவனால்… இப்போதும் கூட காரிகையை நினைத்தால் அவளின் கன்னத்து மச்சமும், நயனங்களும் கண்முன்னே வந்து நின்றது…
“ஐயோ கொல்றா ராட்சஸி…” என சத்தமாக முணுமுணுத்துக் கொண்டே எழுந்தமர்ந்தான்.
என்னை அவள் துளியும் பாதிக்கவில்லை. அவள் என் மனதில் இப்படி தான் பதிந்து இருக்கிறாள் என்று தன் வெள்ளை மனதிற்கு புரிய வைக்கும் நோக்கில் தான் காசியிடம் அப்படிக் கூறிவிட்டு வந்தான். ஆனால் அதுவே அவனுக்கு பாதகமாக அமையும் என்று நினைத்திருக்கவில்லை… ஆம் காசியிடம் அவளை பற்றி கூறியதிலிருந்து மனதில் ஏதோ ஓர் வெற்றிடம். எப்படி சொல்வது தனக்கு மட்டுமே உரிமையானவர்களை மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து பேசிவிட்டால் மனம் ஒரு போல அடித்துக் கொள்ளுமே அப்படி தான் உணர்ந்தான் ஏகலைவன்.
உறக்கம் வருவேனா என்று அடம் பிடித்தது அவனுக்கு… கண்ணை மூடினால் கூட கனவில் வந்து மிரட்டினால் அவனின் ராட்சஸி. “அம்மா பரம தேவதையே என்னை மன்னிச்சிடு தாயே… தப்பு தான் உன்னை எனக்கு பிடிக்கலன்னு நிருபிக்க அந்த வீணா போனவன் கிட்ட உன்னைப் பத்தி அப்படி சொன்னேன். அவன்கிட்ட உன்னை அப்படி சொன்னது தப்பு தான் இந்த தலைகணையை உன் காலா நினைச்சு மன்னிப்பு கேட்கறேன் மன்னிச்சுக்கோ டி… பிளீஸ் என்னைத் தூங்க விடு…” எனப் படுக்கையிலேயே முட்டிப் போட்டு அமர்ந்தபடி தலையணையை அவளாக பாவித்து மன்னிப்பு கேட்ட பின்னர் தான் மனதிலிருந்த வெற்றிடம் விலகி சென்றது போல உணர்ந்தான். சொல்லபோனால் அதற்கு பின் தான் தூக்கம் என்பது அவனைத் தழுவியது. பாவம் அந்த உறக்கம் கூட விடியற் காலையில் பட் என்ற சத்தத்தில் கலைந்திருந்தது…
கண்களை மூடிக் கொண்டே அலைபேசியை எடுத்தவன் லேசாக விழிகளைத் திறந்து மணியைப் பார்க்க அது ஐந்து மணியைக் காட்டியது… கண்களை கசக்கியப்படி எழுந்தவன் தன் அறைக் கதவை திறக்கவும் காசி ஷூஸ் மாட்டியப்படி நிமிரவும் சரியாக இருந்தது.
“என்ன மாமே… இந்த நேரத்துல எழுந்துட்ட? ஏதாவது சைடு பிஸ்னஸ் பண்ணறயா?..” என உறக்கத்தில் கரகரக்கத்த குரலோடுக் கேட்டான்.
“சைடு பிஸ்னஸா?… காலங்காத்தால என்ன சைடு பிஸ்னஸ் இருக்கு …” என இடுப்பில் கைவைத்துகலையை முறைத்தபடிக் கேட்டான் காசி நாதன்.
“காலங்காத்தால என்ன சைடு பிசினஸ் இருக்கா? காலையில தான் அத்தனை பிசினஸ் இருக்கு. எக்ஸாம்பிளுக்கு சொல்லப்போனால் பால் பாக்கெட் போடுறதிலிருந்து பேப்பர் போடுகிற வரைக்கும் எல்லாம் காலையில நடக்குற பிசினஸ் தான். இதுல எது பண்ற?…” என்றான் கேள்வியாக..
“காலங்காத்தால எக்ஸ்பீரியான மொக்கை ஜோக்கை சொல்லிக் கடுப்பேத்தாத…” என்றவன் திரும்பி நடந்தான். நேற்றைய கோபம் இன்னும் மறையவில்லை காசிக்கு. அதனாலயே கலையிடம் சற்று கட்டமாகவே பேசினான்.
முகம் இறுக வெளியில் செல்லும் காசியைப் பார்த்து நின்றவன் என்ன நினைத்தானோ அவசரமாக காசியிடம் சென்று
“மாமே ஒரு ஃபீவ் மினிட்ஸ் வெயிட் பண்றியா? நானும் உன் கூட வரேன்…” என்றவன் காசியின் பதிலைக் கூட கேட்காது வீட்டினுள் நுழைந்தான்.
“இவனை வைச்சுக்கிட்டு…” என தலையில் அடித்துக் கொண்டவன் கலைக்காக காத்திருந்தான்.
அவன் கூறியது போலவே சில நிமிடங்களில் வெளிவந்தவன் காசியுடன் இணைந்து நடந்தான். காசியின் இறுகிய முகம் துளியும் தளரவில்லை. தன் நண்பனின் முக இறுக்கத்தை கவனித்தவன் “என்ன மாமே… ஏன் உன் முகம் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி இருக்கு…” என காசியின் தோளில் கைபோட்டப்படி கேட்டான்… அவனின் கையை எடுத்து விட்டவன் முன்னால் நடந்தான். சிறு தோள் குலுக்களுடன் காசியைப் பின் தொடர்ந்தான் கலை.
*******
ஸ்போர்ட்ஸ் டீசார்ட்டும், காட்டன் ட்ராக் பேண்ட்டும் அணிந்திருந்தவள் தன் அடர்ந்தக் கூந்தலையெல்லாம் திரட்டி உச்சந்தலையில் கொண்டைப் போட்டிருந்தாள். அதனையும் மீறி காற்றில் கேசம் பறக்க அதனை காதோரம் ஒதுக்கி விட்டப்படி வீட்டு மாடியில் நின்றிருந்தாள்… எப்போதும் போல அதிகாலை காற்றின் குளுமையும், தோட்டத்து பூக்களின் வாசமும் காரிகையின் மனதை வருடி விட்டது…
அதனை ரசித்துக் கொண்டே நின்றவளுக்கு சொல்லாமல் கொள்ளாமல் கலையின் நினைவு வந்தது…நேற்று இவள் சற்றே சத்தமாக திட்டியதும் அவசரமாக பைக்கிலிருந்து எழுந்து சுற்றும் முற்றும் பதட்டமாக பார்த்த கலையின் முகம் கண்முன்னே விரிய தன்னாலேயே காரிகையின் இதழ்கள் புன்னகையை பூசிக் கொண்டது…
எப்போது இவளின் குரலையேக் கேட்க முடியாமல் போனதோ அப்போதிலிருந்தே சில சமயம் சூழல் அறிந்து குரலைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. பல முறை சூழல் அறிந்து குரலைக் கட்டுப்படுத்தினாலும் சில சமயங்களில் அவளையும் மீறி நன்றாகவே கத்தி விடுகிறாள்.
நேற்றும் அப்படி தான் நடந்தது. அவன் கூறிய வார்த்தைகள் தெளிவாகப் புரிந்ததும் சட்டென கோபம் வரக் கத்திப் பேசி விட்டாள் போல… அது அவன் அவசரமாக எழுந்து சுற்றி முற்றி பார்க்கவும் தான் அவளுக்கே தான் முணுமுணுப்பாக கூறவில்லையென்று புரிந்தது.
அதற்குப் பின் அலுவலகத்தில் கலையை பார்ப்பாள் என்று துளியும் நினைக்கவில்லை அவள். அந்த கணம் ஆடவனின் முகபாவமும் காசியைப் பாவமாக பார்த்த விதமும் காரிகையின் கண்ணுக்குள் நின்றது. நேற்றைய நினைவில் மூழ்கி இருந்தவளின் அலைபேசி வைப்ரேட்டானது.
வாடிக்கையாளர் தான் புலனத்தில் குறுஞ்செய்தியும், சில புகைப்படங்களும் அனுப்பி இருந்தார். அதைக் கண்டதும் ஆரியின் தற்போதைய மனநிலை மொத்தமும் மாறியிருந்தது…
இதழ்கள் மட்டும் அசைய வாடிக்கையாளர் அனுப்பிய குறுஞ்செய்தியை படித்து முடித்தவள் நிமிர்ந்த போது கண்கள் இரத்தமாய் சிவந்திருந்தது…
‘வாட் தி ஹெல் இஸ் கோயிங்க் ஆன்…’ என ஆங்கிலத்தில் வாய் திறந்த போது அனைத்தும் வந்து விழுந்தது இடையிடையே பிப் போட வேண்டிய வார்த்தைகளும் விழ தான் செய்தது.. அதே கோபத்தோடு வாடிக்கையாளர் அனுப்பிய அனைத்து புகைப்படங்களையும் டெக் குரூப் (tech group) என்ற பெயரிலிருந்த குழுவிற்கு அனுப்பி வைத்தவள்
“இம்மீடியட் மீட்டிங் அரேஞ்ச் பண்ணுங்க காசி… அண்ட் ஒன்பது மணிக்கு வஜ்ரவேல் சைட் என்ஜினியர், அண்ட் புராஜெக்ட் மேனேஜர் எல்லாரும் என்னை வந்து பெர்சனலா மீட் பண்ணுங்க…” என்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தவள் உடனே அங்கிருந்து புறப்பட்டு வஜ்ரவேல் சைட்டிற்கு சென்றிருந்தாள்.
இங்கு காசியும், கலையும் அவள் அனுப்பிய குறுஞ் செய்தியையும் புகைப்படங்களையும் பார்த்து விட்டு வஜ்ரவேல் சைட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அதீத வாகன நெரிசல் இல்லை என்பதால் சில நிமிடங்களில் வாஜ்ரவேல் சைட்டிற்கு வந்திருந்தனர். காசியின் நல்ல நேரமோ என்னவோ இன்னும் ஆரி அங்கு வந்திருக்கவில்லை…
அவசரமாக அந்த பத்து தளங்களைக் கொண்டக் கட்டிடத்திற்குள் நுழைந்தனர் நண்பர்கள் இருவரும்.
மெட்டீரியல் அனைத்தும் ஒரு ஒழுங்கு இல்லாமல் இருந்தது…அதை கண்டதுமே காசியின் பி. பி எகிறியது. அது மட்டுமல்ல சென்டரிங் பலகை அனைத்துமே கண்டமேனிக்கு கிடைந்தது…செங்கற்கள் சிறு சிறு குவியலாக ஒவ்வொரு இடத்திலும் குவிந்து கிடந்தது. அனைத்தையும் ஒரு பார்வைப் பார்த்தப்படி உள்ளே சென்றனர் இருவரும். இத்தனை இடர்களையும் தாண்டி ஆரி அனுப்பிய புகைப்படங்கள் இருக்கும் இடத்திற்கு செல்லவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவர்களுக்கு. பெரிய ஹாலை இரண்டாக பிரித்து கட்டி இருந்தனர்.. அதில் தான் பெரிய விரிசல் இருந்தது… காசி அதனை ஆராய கலையோ சுவரில் முகத்தை பதித்து அந்த விரிசலின் வழியே வெளியில் பார்த்தான் அங்கு ஆர்யா ருத்ர தேவியாய் தெரிந்தாள்.
error: Content is protected !!