Skip to content
Post Views: 4,388
“அதான் எங்களுக்கும் தெரியல, நானும் எத்தனை முறையோ உள்ள போக முயற்சி பண்ணேன், ஆனா அவன் வாசல்ல ஒரு கேமரா செட் பண்ணி நாங்க அந்தப் பக்கம் வந்தாலே எங்களையுள்ள விடாதப்படி நாயைக் காவலுக்கு வச்சிருக்கானா பாரு” என்று மாறன் சொன்னதும் மாயா சலிப்பாக முகத்தைச் சுலித்துக்கொண்டவள்,
“ஆமா…அப்படியென்ன அங்க வச்சி இருக்க போறான்,மிஞ்சிப் போனா வீடு முழுக்க ஓவியமா மட்டும் தான் வச்சிருக்க போறான்” என்று மாயா சொன்னதும், “ஓ… அப்போ உங்க தம்பி நல்லா ஓவியம் வரைவாரா!?” என்று ஆச்சிரியமாகக் கேட்டாள் வைதேகி.
வைதேகி கேட்ட கேள்வியில் சத்தமாகச் சிரித்த மாயா, “நல்லா வரைவானான்னு எனக்குத் தெரியாது, ஆனா கனடாவில் வாழுற தமிழ் பெண்ணின் மனதை கொல்லை கொள்ளும் வகையில் சுமாரா வரைவான்னு மட்டும் எனக்குத் தெரியும்” என்று மாயா சொன்னதும் வைதேகி புரியாமல் மாறனை பார்த்தாள்.
“என்னமா அப்படி பாக்குற, நீ உன் ஈமெயில் டிபியாக வச்சி இருக்கியே ஒரு கருப்பு உருவத்தோட ஓவியம், அந்த ஓவியத்தைத் தீட்டிய ஓவியரே என் மச்சான் ரணதீரன் தான்” என்று மாறன் சொன்னதும் வைதேகியின் கண்கள் ஆச்சிரியத்தில் மிளிர்ந்தது.
Advertisement
“என்ன அண்ணா சொல்றிங்க!!, அவ்ளோ அழகான ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துற மாதிரி ஒரு ஓவியத்தை வரைந்தது ரணதீரன் சாரா!?” என்று வைதேகி கேக்க, “இங்க பாரு என்னோட தம்பி வரைந்த ஓவியங்களை” என்று நிறைய புகைப்படங்களைத் தன் கைபேசியின் மூலம் மாயா வைதேகியிடம் காட்டினாள்.
ரணதீரன் வரைந்த ஓவியங்களைப் பார்த்த வைதேகிக்கு ஆச்சிரியமாக இருந்தது.தோற்றத்தை வைத்து ஒருவரின் சுபாவத்தை தீர்மானம் செய்வது எப்படிப்பட்ட தவறான செயல் என்று அவள் அவளையே நொந்துகொண்டாள்.அதுவும் ஒரு மருத்துவராக இருந்து அவளால் ரணதீரன் மனநிலையை புரிந்துகொள்ள முடியவில்லை என்று கவலையும் கொண்டாள்.
பார்த்த கணத்திலிருந்து வைதேகியை எதிரியாகக் கூட இல்லாமல் அருவருப்பாகப் பார்க்கும் ரணதீரனை அவள் கடந்த நொடிவரை ஒரு கொலையாளியாக நினைத்தது தான் உண்மை.
அனால் பொம்மியை பற்றிக் கேள்வி பட்ட கணத்திலிருந்து ரணதீரன் மீது வைதேகிக்கு மரியாதையை அதிகரித்தது.
ரணதீரனின் கம்பனியில் பார்த்த கண்ணீர் சிந்தும் பொம்மையைப் பற்றிய சந்தேகம் வைதேகி மனதில் இருந்தாலும் கூட அதற்கும் எதாவது காரணம் இருக்கும் என்று எண்ணியவள் மனதில் ரணதீரன் நல்லவனாகக் குடி புகுந்தான்.
Advertisement
“என்ன வைதேகி இன்னும் என் தம்பியைப் பற்றி எதாவது சந்தேகம் இருக்கா “என்று மாயா கேக்க, “உங்க தம்பி இன்னைக்கு நைட் என்னைக் கொலை பண்ண போறதா சொன்னாரு, அதான் கழுத்தை நெரித்துக் கொலை பண்ணுவாரா! இல்லை கத்தியால் குத்தி கொலை பண்ணுவாரான்னு யோசிக்கிறேன் “என்று வைதேகி சிரித்துக்கொண்டே சொன்னவளுக்கு ரணதீரன் தன்னை பயமுறுத்தத் தான் அப்படி பேசி இருக்கின்றான் என்று உணர்ந்து கொண்டாள்.
Advertisement
“பாருடா .. நீ பேசுறதை பார்த்தா என் மச்சான் மனசை புரிஞ்சி பேசுற மாதிரி தோணுது “என்று மாறன் கேக்க, “ஆமா அண்ணா வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் உருவத்தில் அழகாகத் தெரியுறவன் மனசலவுளையும் அழகாக இருப்பான்னு நினைக்கிறது முட்டாள் தான், அது எனக்கு நல்லாவே தெரியும், நானும் கூட இதுநாள் வரை ராணா சாரை வேற மாதிரி தான் பார்த்தேன். அதுவும் இல்லாம நீங்கத் தானே ரம்யாவை கொலை பண்ணீங்கன்னு அவர்கிட்டையே
கேட்டேன் “என்று சிரித்துக்கொண்டே சொல்லும் வைதேகியை பார்த்து மாயாவும் மாறனும் கூடச் சிரித்துக்கொண்டார்கள்.
“சரி அண்ணா நீங்கத் தூங்குங்க, நானும் போய்ப் படுத்துக்குறேன் “என்ற வைதேகி ரணதீரனின் நினைவிவாகவே அங்கிருந்து
செல்ல, “என்ன மாமா ஏன் வைதேகியை அப்படி பார்த்துகிட்டு நிக்குறீங்க “என்று மாயா கேட்டாள்.
“எனக்கு என்னமோ இந்தப் பொண்ணு உன் தம்பியை லவ் பண்ண ஆரம்பிசிடுவாளோனு தோணுது”என்று மாறன் சொல்ல, “எப்படி சொல்றிங்க!?”என்று மாயா கேட்டதும்,”எனக்கு அப்படி தோணுது”என்று
மாறன் சொன்னதும், “இது மட்டும் ராணா காதுல விழுந்தால் அவன் உங்களைக் குழி தோண்டி புதைச்சிடுவான்.வாங்க வந்து படுங்க “என்று சொன்ன மாயா தன் மகள் அருகே படுத்துகொண்டாள்.
Advertisement
ரணதீரனை பற்றி மாறன் சொன்னதை நினைத்துப் பார்த்தபடி வைதேகி அவள் கட்டிலில் படுத்தவள், “ராணா சார் மனசுல இன்னும் சொல்ல முடியாத ரணங்கள் அதிகமா இருக்கு, நம்ம அவர்கிட்ட பேசி அவரோட தாழ்வு மனப்பான்மையை சரி பண்ணனும், அதே மாதிரி நம்ம கனடா போகும் நேரம் அவரோட ஒரு ஓவியத்தில் அவர் ஆட்டோகிராப் கேட்டு வாங்கிட்டு போகணும் “என்று தனக்குள் எண்ணியவாறே வைதேகி நிம்மதியாகத் தன் படுக்கையில் படுத்துக் கண்கள் மூடினாள்.
மறுநாள் காலைப் பொழுது பொலிவுடன் விடிந்தது.
ஜன்னல் வழியே கேக்கும் குயில்களின் கூகுறள் இன்று தான் வைதேகியின் செவியில் இசையாக ஒலித்தது.
படுக்கையிலிருந்து எழுந்தவள் தன் இருக்கரங்களை ஆவி பறக்கத் தேய்த்து அவளின் அழகிய வதனத்தை மயிலிறகை போல வருடித் தன் விழிகளைத் திறந்தவளின் கண்களுக்கு அவள் அறையின் சுவற்றில் மாட்டி இருக்கும் கருமை நிற கண்ணனின் தரிசனம் மனதிற்கு மேலும் மகிழ்ச்சயைக் கொடுத்தது.
படுக்கையைச் சரி செய்து குளியல் அறை சென்றவள் கூந்தலில் ஈர துணியைக் கட்டிக்கொண்டு கண்ணாடி முன் நின்று அவள் அணிந்து இருந்த கரு நீல நிற ஆடையைச் சரிசெய்தக் கொண்டாள்.
வட்டமான முகத்தில் திலகத்தை இட்டுகொண்டு, அருகே இருந்த அஞ்சனத்தை அவள் விழிகளில் தீட்டியவள் பட்டாம்பூச்சி சிறகைப் போலத் தன் இமைகளை மூடித் திறந்து தன்னையே திருப்தியாகக் கண்ணாடி முன்னே ரசித்துப் பார்த்து,”ம்… இப்போ தான் சித்ரா நீ பழைய மாதிரி சிரித்த முகமா இருக்குற, வெரி குட் இப்படி தான் இருக்கனும்” என்று தன்னை தானே பாராட்டிக்கொண்டு தன் அறையில்
இருந்து கீழ இறங்கி சென்றவள், இறைவனை வணங்கியபின் சமையலறைக்குள் புகுந்தாள்.
“சின்னம்மா…என்ன நீங்க ஆறு மணிக்கே எழுந்து வந்து இருக்கீங்க, உங்களுக்கு டீ போட்டுக் கொடுக்கவா?” என்று அங்கிருந்த பணியாளர் கேட்டதும்,
“இல்லிங்க உங்க எல்லோருக்கும் நானே இன்னைக்கு டீப்போடப் போறேன்” என்ற வைதேகி தன் சுடிதார் துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வெண்மையான பசும் பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துப் பற்ற வைத்தாள்.
வைதேகியின் செயலைப் பணியாளர்கள் மகிழ்ச்சியாகவே பார்த்து இருந்தார்கள், அவர்களிடம் யாருக்கு எப்படி தேநீரை தயார் செய்ய வேண்டும் என்று கேட்டுத் தெரிந்துக் கொண்ட வைதேகி சூடான டீயை கோப்பைகளில் ஊற்றி முதலில் அங்குள்ள பணியாளர்களுக்குக் கொடுத்தாள்.
“ஐயோ சின்னமா… நாங்க அப்புறமா குடிக்கிறோம், நீங்கக் குடிங்க” என்று ஒரு பணியாளர் சொல்ல, “ஏன் அண்ணா… நான் போட்ட டீயை குடிக்க பயமா இருக்கா?” என்று பாவமாகக் கேட்டாள் வைதேகி.
“இல்லை இல்லை சின்னமா நாங்க எடுத்துக்குறோம்” என்ற பணியாளர் தேநீரை எடுத்துக்கொண்டு, “அப்படியே உங்களுக்குப் பெரியம்மா குணம், அவங்களும் எங்களை இப்படி தான் பார்த்துப்பாங்க” என்று பணியாளர் சொல்ல, அவரைப் பார்த்துச் சிரித்த வண்ணமாகச் சமையலறையிலிருந்து தேநீர் கோப்பைகளுடன் வெளியே வந்தாள் வைதேகி.
ரணதீரன் தன் பங்களாவிலிருந்து இந்த வீட்டுக்குள் வந்தவன், “இவளுக்கு வேற இன்னும் நாலு நாள் நான் சேவை பண்ணனும்” என்று முனங்கிக்கொண்டே
உள்ளே வர, “குட் மார்னிங் சார்… இந்தாங்க டீ எடுத்துக்கோங்க” என்று சிரித்த முகமாக வைதேகி ரணதீரன் முன்னே வந்து நின்றாள்.
வைதேகியை பார்த்ததும் ரணதீரன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, “ஏய்… நீ ஏன் எனக்கு டீத்தர, நான் உன்கிட்ட டீக்கேட்டேனா?” என்று ரணதீரன் கோவமாகக் கேக்க, “கேட்டா தான் தரணுமா என்ன!?, இந்தாங்க சார் டீ எடுத்துக்கோங்க”என்று மீண்டும் தன் கையில் இருந்த கோப்பையை அவன் முன் நீட்டினாள் வைதேகி.
“எனக்கு வேணா, உன் கையில டீயை வாங்கி குடிச்சா அது விஷத்துக்குச் சமம்” என்று ரணதீரன் முகம் சுழிக்க, “ஓ!!அப்போ நான் கொடுத்தா நீங்க இந்த டீத்தண்ணியை குடிக்க மாட்டீங்க அப்படி தானே?” என்று வைதேகி கேட்டதும், “ஆமா குடிக்க மாட்டேன், டீ மட்டும் இல்ல, சிவப்பு மஞ்ச பச்சைன்னு எந்தத் தண்ணியும் வாங்கி குடிக்க மாட்டேன்” என்ற ரணதீரன் கோவமாகச் சமலையறைக்குள் செல்ல முயன்றவனின் கையைப் பிடித்துத் தடுத்தாள் வைதேகி.
“ஏய் கையை எடு… எவ்ளோ தைரியம் இருந்தா என்னைத் தொட்டு பேசுவ?”என்று கோவம் கொண்ட ரணதீரன் வைதேகியை அடிக்கக் கை ஓங்கியதும்,”அத்த அத்த சீக்கிரமா வாங்க” என்று முதல் முறை வைதேகி வேதநாயகியை அத்தை என்று அழைத்த குரலைக் கேட்டு, “மருமகளே… என்னையா அத்தைன்னு கூப்பிட்ட” என்று பின்னங்கால் பிடரியில் அடிக்கும் வகையில் இவர்களை நோக்கி அவர் அறையில் ஓடி வந்தார் வேதநாயகி.
“அத்தை… உங்க பிள்ளை தான் என்னை ஆசையா டீப்போடச் சொன்னாரு, நானும் போட்டுக் கொடுத்தேன். ஆனா இப்போ குடிக்க மாட்டேன்னு சொல்லுறாரு, உங்க பிள்ளையை என்னனு கேளுங்க அத்தை”என்று வைதேகி கண்ணனை கசக்க,
“அடிப்பாவி….”என்ற ரணதீரனின் கண்ணுக்குள் இனி தான் வைதேகி விரலை விட்டு விளையாடப் போகிறாள் என்று இந்தக் காட்சியைத் தூரத்திலிருந்து பார்த்து ரசித்த மாறன் மனதளவில் நினைத்துக்கொண்டான்.
error: Content is protected !!