Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 13.1

மருத்துவமனையில் அன்று, ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடக்கவிருக்கும் கூட்டம் நடைபெற இருந்தது. வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை தான் இப்பொழுதும் நடைபெற இருக்கிறது.

மருத்துவமனை பங்குதாரர்கள் பலர் இருந்தாலும் அதிக பங்கு வகிக்கும் ராமகிருஷ்ணன் குடும்பம் தான் இந்த பொறுப்பை எல்லாம் எப்பொழுதும் எடுத்து நடத்துவது.

ஒரு சில பங்குதாரர்கள் வருவது உண்டு. இவர்கள் வீட்டில் இருந்தும் அனைவரும் வந்துவிடுவார்கள் அர்ஜுனை தவிர.

மருத்துவமனையின் மேலாளர்கள் உதவியோடு அந்த பெரிய அரங்கில் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர துவங்கிவிட்டனர்.



Advertisement

ஓ.பி காலை வேலையோடு முடிவடைவதால் மதியம் மூன்று மணி முதல் ஐந்து மணி வரை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

காலையிலே தன்னுடைய வேலைகளை முடித்து அர்ஜுன் வீட்டிற்கு கிளம்பியிருக்க இனி வருவது சந்தேகம் தான் என தெரிந்தது. இலக்கியாவிற்கு மாலை ஆறு மணிக்கு தான் வேலை முடியும்.

மதியம் வழக்கம் போல் குடும்பத்தினருடன் உணவை உட்கொண்டு, மீதமிருந்த சில வேலைகளை முடித்து அரங்கத்தினுள் வந்தவளை அங்கு மேடையில் நின்றிருந்த வருண் பிடித்து நிறுத்தினான்.

Advertisement

“சார்?” இலக்கியாவும் நிற்க, “இன்னைக்கு தான் கேள்வி பட்டேன், ஹாஸ்பிடல்க்கு யூனிபார்ம் இல்லாம வந்திங்களாமே. அதுக்கு பனிஷ்மென்ட் கூட யாரும் உங்களுக்கு குடுக்கல”

Advertisement

அவளிடம் எப்பொழுதும் போல் பேசும் குறும்பு பேச்சு வார்த்தையில் இல்லை. ஆனால் கண்ணில் கிலோ கண்ணகில் இருந்தது.

“வருண்” தர்ஷன் வந்து நண்பனை பிடித்தான் பலர் தங்களை கவனிப்பதை பார்த்து.

“நோ. தப்பு இலக்கியா நீங்க பண்ணது. அதுக்கு பனிஷ்மென்ட் இன்னைக்கு லாஸ்ட் சீட் ஆக்குபை பண்ணிக்கோங்க”

Advertisement

இது என்ன விளையாட்டு என நங்கை அசையாமல் இருக்க, “கோங்கிறேன்” மீண்டும் அவன் கூற வருணை திரும்பி திரும்பி பார்த்தே சென்று அமர்ந்தாள்.

இவள் அமரவும் சில நிமிடங்களில் வரிசையாக வலது பக்கம் அர்ஜுன் வீட்டு ஆட்கள் தான். ராமகிருஷ்ணன், வரதராஜன், சுந்தராஜன் மேடையில் அமர்ந்திருக்க மற்ற வீட்டினர் அனைவரும் பின்னர் தான்.

அவன் பின் பக்கம் அனுப்பி வைத்ததன் காரணம் இப்பொழுது புரிந்தது மெல்ல சிரித்தாள்.

பெண்ணவளின் சிரிப்பை பார்த்த வருண் அவளுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து, “அய்யா சொன்னா சரியா தான் இருக்கும்” என்றான் காலரை தூக்கிவிட்டு.

இலக்கியாவும் ஆமோதிப்பான சிரிப்போடு, “கரெக்ட் தான் சார்” என்றாள்.

இன்று நடக்கும் இந்த கூட்டத்தில் மருத்துவமனையில் நிகழ்ந்த தவறுகள், புகார்கள், புதிதாக கண்டுபுடிக்கப்பட்ட அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டினை விளக்குவது, புதிய விதிமுறைகள் கொணர்வது போன்ற பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.

துவங்க வேண்டிய நேரத்தில் ராமகிருஷ்ணன் அனைவரின் உழைப்பிற்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தை துவங்கினார். திருத்த வேண்டிய இடத்தை எடுத்து கூறி, வந்த புகார்களை பற்றி பேசிக்கொண்டிருந்த நேரம் பின் கதவின் வழியே வந்த அர்ஜுன்,

இறுதியாக இருக்கையில் அமர்ந்திருந்த மனைவி மற்றும் தன் வீட்டு மக்களையும் பார்த்தவாறே அவர்களை விட்டு தள்ளியிருந்த இருக்கையில் அமர பார்க்க,

“அர்ஜுன் இங்க” ப்ரியதர்ஷன் தான் அமர்ந்திருந்த இருக்கையை எழுந்து இடம் கொடுத்தான். அருகே இலக்கியா.

‘டேய் கேடி’ அர்ஜுன் கோணல் சிரிப்பு உதிர்த்தபடியே, “நான் இங்க போறேன்” என்றான் முன்னே இருந்த இருக்கையை காட்டி.

“வருண் உன்கிட்ட ஏதோ பேசணுமாம் அர்ஜுன்”

வருண் அப்படியா என தர்ஷனை பார்க்க, “ம்ம் இப்போ தானேடா சொன்ன?”

“ஆமா அர்ஜுன், வா வா” இவனே எழுந்து பிடித்து பக்கத்தில் அமர வைத்துக்கொண்டான்.

பிடித்து பக்கத்தில் அமர வைத்தற்காகவே காரணமே இல்லாத இரண்டு கேள்வியை கேட்டு ஏதோ சாக்கிட்டு வருணோடு வெளியே சென்றுவிட்டான்.

‘சரியான தில்லாலங்கடி பயலுக’ சிரித்தபடியே பக்கவாட்டமாக திரும்பி மனைவியை பார்த்தான்.

அவளோ புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Advanced Defibrillators பற்றி ஒரு மருத்துவர் கொடுக்கும் பயன்பாட்டினை ஆர்வமாக கவனித்துக்கொண்டே கையிலிருந்த சிறிய குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தாள்.

மனத்தினுள்ளே சிரித்துக்கொண்டான் அர்ஜுன், ‘இவ கூட பேசவாடா இவ்ளோ ட்ராமா போட்டீங்க’ இளைஞர்களுக்கு வசவு தான் விழுந்தது.

“ரைட் எலக்ட்ரோட் பேஷண்டோட ரைட் காலர் போன் கீழ வைக்கணும். அண்ட் லெப்ட் எலக்ட்ரோட் லெப்ட் செஸ்ட்ல, விலா எலும்புக்கு மேல…”

அவர்கள் கூறியது ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இப்பொழுதும் குறிப்பெடுத்துக்கொண்டிருந்த இலக்கியாவின் கையிலிருந்த பேனா அர்ஜூனால் ஒரே நொடியில் பறிக்க பட்டது.

“என்ன பன்…” இலக்கியா அதிர்ச்சியில் குரல் எடுக்க, ‘ஷ்ஷ்ஷ்’ தன் உதட்டில் விறல் வைத்து அவளை அமைதியாக்கினான் அவர்களுக்கு முன்னிருந்தவர்களை கண்ணால் காட்டி.

‘நான் நோட்ஸ் எடுக்கணும்’ இவள் சைகையால் கூற அவள் கையிலிருந்த குறிப்பிடும் அவன் கைக்கு மாறியிருந்தது பதில் கொடுக்க. ஏதோ எழுதி இவளிடம் நீட்டினான் பேனாவோடு.

‘உனக்கு இதெல்லாம் ஏற்கனவே தெரியும். தென் எதுக்கு?’ அதனை பார்த்தவள் முறைத்து அந்த குறிப்பேட்டில் கடைசி பக்கத்திற்கு வந்தாள்.

‘தெரிஞ்சத்தையேவா சொல்லி குடுக்க போறாங்க. இதுல வந்த மாடிஃபிகேஷன் தானே சொல்லி குடுக்க போறாங்க? அதை தெரிஞ்சுக்கணும்ல’

அர்ஜுன், ‘எல்லாம் ஒன்னு தான். இது அடல்ட், சைல்ட் எல்லாருக்கும் யூஸ் ஆகுது. கொஞ்சம் அட்வான்ஸ் பண்ணிருக்காங்க அவ்ளோ தான்’

இலக்கியா, ‘இருந்தாலும் நான் கவனிப்பேன்’

இம்முறை அவன் கையில் குறிப்பேட்டை ஒப்படைக்காமல் அவன் கண்ணில் படும்படி காட்டியவள் விட்ட வேலையை துவங்க, அவளது நாற்காலியின் அடி பாகத்தை பிடித்து கொஞ்சம் தன்னை நோக்கி அர்ஜுன் இழுக்க விழி விரித்து அவனை வியப்பாய் பார்த்தாள்.

அவளது பார்வையில் குளிர்ந்தவன், ‘பென்’ சைகையில் கேட்க அவள் மாட்டேன் என தலையை ஆட்டினாள்.

அவனோ அவளை பிடித்து மீண்டும் தனக்கு அருகே இழுக்க, இன்னும் இரண்டு மூன்று இன்ச் இடைவேளை மட்டுமே பாக்கி இருந்தது. மொத்தமாக இழுத்துவிட்டால் அவனோடு ஒட்டி உரசி அமரும் நிலையாகி போகும்.

அதற்காகவே பயந்தவள் இரண்டையும் அவனிடம் ஒப்படைத்து சத்தம் கேட்காவண்ணம் தள்ளி அமர்ந்துக்கொண்டாள்.

‘இவரோட ஒரே ரோதனையா போச்சு. யாராவது பாத்துட்டா’ கணவனை அழகாய் திட்டியும்கொண்டாள்.

எவருக்கோ பயந்தாலும் அவன் நெருக்கம் கொடுத்த கனலில் தான் அவள் அலறி அவனிடம் சரணடைந்தது. இது போல் இன்று நேற்று அல்ல, கடந்த ஒரு மாதமாகவே அர்ஜுனின் குறும்பு வெளியே எட்டி பார்க்க தான் செய்கிறது.

அவளை சீண்ட ஏதாவது ஒரு காரணத்தை தேடி பிடித்துவிடுகிறான். அதிலும் பெண்ணவளின் அவஸ்த்தையை பார்த்து ரசிப்பது ஒரு பொழுதுபோக்காகவே மாறி போகிறது.

அடிக்கடி மருத்துவமனை விட்டு எங்கேனும் அழைத்து சென்றுவிடுகிறான், காரணம் தெரியாமல் இலக்கியா தான் புதிரோடு சுற்றுவது. இதில் அவள் மறந்த ஒன்று தற்கொலை செய்யும் அவளது எண்ணங்கள்.

தனிமையின் பிடியில் தவித்து, தேவையற்ற எண்ணங்கள் வளர்ந்து அதிலிருந்து மீள முடியாமல் போராடியவளின் சிந்தனையை இவன் செயலில் புதிர் போட்டு மறக்க வைத்திருந்தான்.

இப்பொழுதும் கூட அவனுக்கு ஏதுவாக வருண் தர்ஷன் அவளை இவனோடு தனியே விட்டு செல்ல வசதியாக போனது. அவ்விடத்தில் நிலவியிருந்த அமைதியும் அவளை கட்டிப்போட்டது.

அர்ஜுன், ‘அது ஒன்னுமே இல்லடி, முகத்தை தூக்காத’

இலக்கியா, ‘மானிட்டர்ல சில வித்யாசம் இருக்குன்னு சொன்னாங்க’

அர்ஜுன், ‘சரி விடு நான் சொல்லி தர்றேன்’ அவன் கொடுத்ததை படித்தவள் கணவனை திரும்பி பார்க்க அவன் பார்வையோ இவளிடம் குறிப்பேடு போன அடுத்த நிமிடம் கைபேசிக்கு மாறியது.

பதில் கொடுக்காமல் அவனிடமே அதை ஒப்படைத்தாள்.

‘பிங்கோ விளையாடலாமா?’

இலக்கியா, ‘நெஜமாவே நீங்க டாக்டர் தானா?’ அர்ஜுன் இதழில் மெல்லிய கீற்று புன்னகை.

‘காலேஜ்ல யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர்ம்மா அய்யா?’

‘அய்யா எக்ஸாம் எப்படி எழுதுனீங்கனு யாருக்கு தெரியும்?’

‘போர்த் இயர்ல ஒரு சப்ஜெட் இருக்கு. அந்த சப்ஜெட்ல சென்டம் மார்க். இப்போ வர அந்த ரெக்கார்டை யாரும் பிரேக் பண்ணதில்ல’

‘அப்டி என்ன சப்ஜெக்ட்ங்க அய்யா?’

‘கைனோ’

இலக்கியா, ‘ஏதோ தெரியாம வாங்கிருப்பிங்க’

அர்ஜுன், ‘நம்பிக்கை இல்லல. வா இன்னைக்கு நைட் உனக்கு கிளாஸ் தான். நான் கத்துக்குட்டது எல்லாம் சொல்லி தர்றேன்’

ஆஹா சுதாரிக்கும் இடம் இதுவென உணர்ந்தவள் அவன் எழுதி கொடுத்ததை படித்தும் படிக்காமல் இருப்பது போல் இருந்துவிட, மீண்டும் வாங்கி எழுதி கொடுத்தான்.

‘முதல pathology of the female reproductive system. ஆரமிப்போமா?’ அவன் சிரிப்பே ஒரு தினுசாக இருக்க வெடவெடக்க துவங்கியது இலக்கியாவின் உடல்.

‘மார்க் ஷீட் காட்டி நிரூபிக்க எல்லாம் தெரியாதா இவருக்கு? பாடம் எடுக்குறாராமே பாடம். அதுவும் சப்ஜெக்ட் பாரு. ப்ராடு… ப்ராடு டாக்டர்’ அவனை கண்டுகொள்ளாமல் முகத்தை நேராக வைத்துக்கொண்டாள் கன்னத்து சிவப்பை கட்டுப்படுத்த.

‘வெளிய போகலாமா?’

வெடவெடத்து போனாள் நிஜமாகவே பாடம் எடுத்து விடுவானோ என. அவளது தயக்கத்தை உணர்ந்தவன் மென்னகையோடு, “நீ நினைக்கிறது இல்ல. நிஜமா கேக்குறேன். வெளிய போகலாமா?”

‘என்ன ஆச்சு இவருக்கு இன்னைக்கு?’ என்னும் பார்வை தான் அவனுக்கு பதிலாய் கிடைத்தது.

‘நான் வரல’

அர்ஜுன், ‘சுத்த போர்டி நீ’

இலக்கியா, ‘இருந்துட்டு போறேன்’

கைபேசியில் இதுவரை ஒரு உரையாடல் கூட இவர்களுக்குள் நிகழ்ந்தது இல்லை.

ஏன் அவளுக்காக காத்திருக்கும் நேரம் மட்டுமே அவன் அவளுக்கு அழைத்து வர கூறுவது உண்டு. மற்ற படி எந்த செய்தி பரிமாற்றங்களும் இருந்தது இல்லை. இன்று அதற்கெல்லாம் சேர்த்து இருவரும் கடிதத்தின் மூலம் பேசிக்கொண்டிருந்தனர்.

அர்ஜுன், ‘இப்போ நீ வரல, இவ்ளோ நேரம் சொன்னதை ஸ்டேஜ்ல வந்து சொல்ல சொல்லுவேன்’

இலக்கியா, ‘சார்…’ கெஞ்சல் பார்வையோடு இலக்கியா அர்ஜுனை பார்க்க எதுவுமே தெரியாதவன் போல் கை கட்டி முன்னே நடப்பதை தீவிரமாக பார்த்தான்.

‘இன்னும் ஹால்ஃப் அன் ஹௌர் தான் சார். அப்போ வர்றேனே’ படித்து பார்த்தவன் அவளை புறக்கணித்துவிட்டான் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக.

‘கவிதா மேம்கிட்ட சொல்லாம போனா திட்டுவாங்க சார்’

இம்முறை அவளை திரும்பி முறைத்து பார்த்தவன் எழுந்து நிற்க, இவன் செய்ய போகும் விபரீதத்தை அறிந்தவள் வேகமாக அவனது பின்பக்க சட்டையை இரண்டு விரல்கள் கொண்டு பிடித்து நிறுத்த இவளை முறைத்தவாறே நின்றான்.

“சரி வர்றேன்” வாயசைத்து அவனிடம் அனுமதி கொடுக்க மெல்லிய புன்னகையோடு வந்து அமர்ந்த அர்ஜுன், “நீ போ” தன்னுடைய வாகனத்தின் சாவியை மனைவி கையில் திணித்தான்.

“என் திங்ஸ்…” அவள் தயங்க, மீண்டும் அர்ஜுன் எழவும் அவனுக்கு முன்பு இவள் அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தாள் பின் கதவின் வழியே.

இவரக்ளின் சம்பாஷணையை தூரத்தில் இருந்து கவனித்த பானு மகனிடம் வந்து, “என் மருமகளை என்னடா சொன்ன?” கோவமாக கேட்டார்.

“நான் என்ன சொன்னேன்?” அவனுக்கு நிஜமாகவே தெரியவில்லை எதற்காக அன்னை கோவத்தை காட்டுகிறார் என.

“நான் தான் பாத்தேன் நீ அவளை ஏதோ திட்டுன”

“அட போங்க ம்மா” அன்னையை முற்றிலுமாக புறக்கணித்தவன் அவனாக எழுந்து வெளியேறியிருந்தான்.

அவனுக்கு இப்பொழுது வேறு ஒரு எண்ணம் சிந்தையில் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ஐந்து நட்சத்திர உணவகத்தில் உண்ட மெக்சிகன் உணவின் ருசி அவனை இப்பொழுது இழுத்தது.

மருத்துவமனையின் பின் பக்கத்தில் நிறுத்தியிந்த காருக்கு வர தூரத்தில் இலக்கியா ஒரு ஆடவனுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அர்ஜுன் சற்று தூரத்திலே நின்றுவிட்டான்.

அந்த ஆண் இலக்கியாவிடம் இன்னும் ஐந்து நிமிடம் நின்று பேச, கணவனை காத்திருக்க வைப்பது பிடிக்காமல் அவனிடம் விடைபெற்று இவளே வந்து அவன் கொடுத்த சாவியால் வாகனத்தை திறந்துவிட்டு வேகமாக உள்ளே அமர்ந்துக்கொண்டாள்.

அவளுக்கு பின்பு சாவகாசமாக வந்து அமர்ந்தவன், “எதுக்கு இவ்ளோ அவசரம்?” என்றவாறே வாகனத்தை உயிர்ப்பித்திருந்தான்.

இலக்கியா அர்ஜுனிடம் கேள்விகளை எதிர்பார்த்திருக்க அவன் மிகவும் சாதாரணமாக இருந்தான்.

“சார், எதுவும் கேட்டீங்களா?” இப்படி கேட்டாலாவது அவன் கேள்வி எழுப்புவான் என நினைக்க, அவனோ இல்லை என்றிருந்தான்.

அவள் இத்தனை தவிப்பதன் காரணம் அவள் சில நிமிடங்களுக்கு முன்பு பார்த்தது நெடுஞ்செழியன்.

இலக்கியாவின் திருமணத்திற்கு முன்பு அவள் பின்னே தினமும் வந்தவன். இன்று திடீரென இவள் முன் வந்து நின்று அவனுக்கு இங்கேயே வேலை கிடைத்துவிட்டதாக மிகவும் மகிழ்ச்சியோடு கூறினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!