Skip to content
Post Views: 4,162
சில நொடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்தி தந்தைக்கு அழைத்து, “அவருக்கு ஒரு எமர்ஜென்சிப்பா. இன்னொரு நாள் நான் வர்றேன்” தந்தைக்கு மகள் இவ்வளவு தூரம் அருகே வந்து தன்னை பார்க்காமல் செல்வதில் வருத்தம் தான் இருந்தும் அவளின் நிலை புரிந்து சரி என்றார்.
மணிகண்டனிடம் பேசும் பொழுதே அவளின் தேய்ந்து போன குரலில் வாகனத்தை ஓரமாக நிறுத்தி, “கோவமா?” இறங்கிய குரலில் கேட்டான், அவள் தந்தையை பார்க்காமல் அழைத்து வந்ததற்கு.
“இல்ல கோவப்படுறதுக்கு கூட உங்கள பொறுத்தவரை அறிவு வேணும்ல” குரல் கறகறக்க அவள் கூறவும் அவள் கையை பிடித்து இழுத்தான்.
திரும்பவே இல்லை இலக்கியா. எங்கு தொடங்கினாலும் மீண்டும் இங்கு தான் வந்து நிற்க வேண்டுமா என்கிற அசௌகரியமான மனநிலை அவனிடம்.
Advertisement
“நான் எப்பவும் அப்டி சொல்லவே இல்லடி” நிஜமாக இந்த வார்த்தையை தான் எப்பொழுது பயன்படுத்தினோம் என்பதே அவன் நினைவில் இல்லை.
“உங்களுக்கு நீங்க பேசுனது எதுவுமே நியாபகம் இருக்காது. அன்னைக்கு கூட சொன்னிங்களே இதுலயும் நான் மக்கு தானான்னு. என்ன எப்படி கிஸ் பண்றது, எப்படி ஹக் பண்றதுன்னு செர்டிபிகேட் வாங்கிட்டு வரவா? இல்ல இதுலயும் டாக்ட்ரேட் டிகிரி பண்ணனுமா?”
அவனை பார்க்காமல் அழுகையோடு அவள் கேட்க அர்ஜுன் தான் நொந்து போனான்.
Advertisement
உண்மையில் அவன் வெளியே புலம்பிக்கொண்டாலும் உள்ளுக்குள் சில்லென வீசிய காற்றின் குளுமையை அவளிடம் எப்படி சென்று சேர்ப்பதென தெரியவில்லை.
Advertisement
“லூசு…”
“ஆமா லூசு தான். யாரோ எப்டியோ போங்கனு சொல்லிட்டு உங்க அஞ்சுஸ்ரீ பண்ணதை நான் ஓரமா நின்னு வேடிக்கை பாத்துருக்கணும். வாண்டடா வந்து மாட்டிகிட்டேன் பாருங்க.
அப்பவும் உங்ககிட்ட உடனே சொல்ல வரல, உங்க தாத்தாகிட்ட தான் சொல்ல வந்தேன், என் நேரம் அவர் வரல அங்க” அவளுள் இன்று எனோ ஒரு வேகம் வந்து அவனை வந்து பார் என நின்றாள்.
Advertisement
“என்ன பண்றது மனசு கேக்கல, ஹாஸ்பிடல் நினைச்சு, உங்கள நினைச்சு என்ன வந்தாலும் பாத்துக்கலாம்னு உங்க முன்னாடி வந்து நின்னது தான் தப்பா போச்சு. அங்கையும் முழுசா என் தப்புனு சொல்லிட முடியாது”
அவனை திரும்பி பார்த்தாள், “பணம் சம்பாதிக்கணும்னு முடிவு பண்ணிட்டா யாரு வேணாலும் எப்படி வேணாலும் போவாங்கனு யோசிக்காம ஒரு பக்கமே யோசிக்கிற உங்ககிட்ட வந்து நான் நின்னுருக்க கூடாது.
சரி வந்துட்டா, இப்டி வந்து சொல்றதால அவளுக்கு என்ன கிடைச்சிட போகுதுனு யோசிக்காம உங்க அஞ்சுஸ்ரீ எதுவுமே பண்ண மாட்டான்னு கண் மூடி தனமா இருந்துட்டீங்க”
மீண்டும் அவனுடைய அஞ்சு ஸ்ரீ என இலக்கியா அழுத்தி கூறியதில் நீண்ட மூச்சை விட்டு இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து கடுக்காய் வெடிக்கும் மனைவியை கை கட்டி பார்த்தான் அர்ஜுன்.
“பெரிய பெரிய டிகிரி எல்லாம் படிச்சிருக்கேன்னு சொல்றிங்களே, அப்டி என்ன ஒருத்தர் மேல கண் மூடித்தனமாக நம்பிக்கை? நான் தான் சொல்றேன் அவங்க பேசுனதை நான் கேட்டேன்னு, என்னமோ அவ ஒண்ணுமே தெரியாத குழந்தை மாதிரி அந்த சப்போர்ட் பண்ணீங்க.
ஆமா நீங்க சப்போர்ட் பண்றதுல தப்பில்லையே, கல்யாணம் ஆகியும் ஊர்ல இருந்து வந்தவர் முதல போய் நின்னது அவகிட்ட தான. நீங்க அவங்ககிட்ட தான் போக துடிக்கிறீங்களாம், எத்தனை சொந்தம் இருந்தாலும் அவங்கள தேடி தான் போறிங்களாம்”
அவள் வாக்கில் மனதில் தோன்றியதை எல்லாம் பேசிக்கொண்டே இருக்க கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை. கோவம், வேதனை அவளையும் மீறி அழுகையாக வந்தது.
“யார் சொன்னது?” அர்ஜுன் கேட்க,
அவனை பார்த்தவள், “யார் சொன்னா என்ன? அன்னைக்கே நீங்க டைவோர்ஸ் பேப்பர்ஸ் வாங்கிட்டு வந்துட்டிங்கனு எனக்கு தெரியும். நேத்து கூட உங்க ரூம்ல பாத்தேன்”
“யார் சொன்னதுனு கேட்டேன் இலக்கியா”
“வேற யார் உங்க அஞ்சுஸ்ரீ தா…” காற்றின் வேகத்தில் நகர்ந்த அர்ஜுனின் கரம் மனைவியின் கன்னத்தை அழுத்தமாய் பற்றியிருந்தது.
வலிக்கும்படி அவன் பிடிக்கவில்லை, ஆனால் அவளை பிடித்த அவன் கரம் வந்து சில நொடிகளில் அவனும் அவளை நெருங்கி வந்திருந்தான். அதன் தாக்கம், பெண்ணவளின் நெஞ்சம் பலமாக மூச்சு வாங்கியது.
அர்ஜுனின் கண்கள் கள்வன் போல் அதை மறக்காமல் பார்க்க, கண் மூடி திறந்தவன், “உன்னையா என் வீட்டுல ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினைக்கிறாங்க?” வியப்பாக கேட்டான்.
அவன் கேள்வியில் விழிப்பு தட்டியவள் அவன் கையை விலக்க பார்க்க அவன் விடவில்லை.
“நீ சொன்னது எல்லாம் சரி தான், ஆனா அவ என்னோட அஞ்சுஸ்ரீ இல்ல. எனக்கு யாரு உரிமையானவங்க, நான் யாருக்கு உரிமையானவன்னு நீ சொல்ல கூடாது. நான் தான் சொல்லணும். புரியுதா?”
நிதானமாக அவள் கண்களை ஆழம் பார்த்து பதில் கொடுத்து கேள்வி கேட்டான்.
அவனின் அப்பார்வையில் மயங்காத அவன் மனைவி, இல்லை என தலை அசைக்க, கொஞ்சம் விடுதலை கொடுத்தான் கைகளை சற்று தளர்த்தி, “என்ன புரியல?” கேள்வியாக அவளின் விரித்த கண்களில் கொஞ்சம் மயங்கி.
“நான் அவங்க மேல தப்புனு நிரூபிக்காம இருந்தா, அவங்க உங்க அஞ்சு…”
“சொல்லாதனு சொன்னேன்” அழுத்தி ஆணை பிறப்பித்தவன், “அவ மேல நம்பிக்கை இருந்துச்சு, அதுக்குன்னு கல்யாணம் முடிவு பண்ணிட்டா என் உலகமே அவ தான்னு முடிவு எடுக்குற அளவு நான் போகல” நீ நம்பி தான் ஆக வேண்டும் என்றது அவன் கண்கள்.
அவள் அமைதி அவனுக்கு ஊக்கமளிக்க, இந்த பிரச்னையை அதற்கு மேல் அவன் தொடர விரும்பவில்லை.
இது மட்டுமல்ல, அவளோடு சண்டையிடவே அவனுக்கு மனம் ஒப்பாது போனது. இலக்கியாவின் கன்னத்திலிருந்து கையை எடுத்தவன் அவள் விலகும் முன் சற்று குனிந்து அவளது இடது முழங்காலை பிடித்து தன்னை நோக்கி திரும்ப அமர வைத்திருந்தான்.
“என்னங்க…” அவளின் அந்த அலறல் எதற்கு தான் அவனுக்கு பிடித்ததோ மீண்டும் அந்த வார்த்தையை கேட்கவே இன்னும் அவளை இழுக்க,
வாகனத்தின் இருக்கையையும் டாஷ்போர்டையும் பிடித்துகொண்டாள் பதட்டமாக, “சார்…” அவன் எதிர்பார்த்ததை செய்யாமல் வேறு ஒன்றை தான் இப்பொழுதும் செய்தாள்.
“இன்னைக்கு சண்டைக்கு வருவோமா?”
“நான் சண்டை போடல, அந்த குழந்தையை நினைச்சு கொஞ்சம் கோவமா பேசிட்டேன் அவ்ளோ தான்”
“ஒஹ் இதுவே உங்க ஊர்ல சண்டை இல்லையா, அப்போ சண்டை போடுறப்போ எவ்ளோ கோவப்படுவ நீ?”
கேலியாக அவளை பார்க்க பதில் பேசவில்லை அவள். அவளது குணமே இது இல்லை, அதிகம் கோவமே வராத பெண். இல்லை கோவம் வரும் சூழல் அவளுக்கு அதிகம் அமையவில்லையா தெரியவில்லை. இவன் என வரும் பொழுது இவளே மாறி தான் போகிறாள்.
“சரி கேளு. அந்த குழந்தையை ஏன் வேகமா எடுக்கலைனு தான நீ கேட்ட? எல்லா குழந்தையோட வளர்ச்சியும் ஒரே மாதிரி இருக்காது.
ஆபரேஷன் தியேட்டர் வெளிலயே அம்மா சொன்னாங்க, பேபிக்கு க்ரோத் பத்தலை, லங்ஸ் இன்னும் வெளிய வந்து சர்வே ஆகுற அளவு க்ரோத் இல்லனு.
அது மட்டும் இல்ல, அந்த பொண்ணோட ஹஸ்பண்ட் முதலை வச்ச கோரிக்கை அவரோட மனைவியை அவர்கிட்ட கேட்டு தான். ஒரே நேரத்துல ரெண்டு ஆபரேஷன் நாங்க பண்ணிடுவோம்.
அந்த பொண்ணோட நிலைமையை யோசிச்சு பாரு, குழந்தையையும் பாத்துக்க முடியாம தன்னையும் கவனிக்க முடியாம ஷி வில் பி மென்டல்லி ஸ்ட்ரெஸ்ட். இப்பவும் அது நடந்துருக்கு தான் ஆனா அதுக்கு காரணமே வேற”
“இந்த ஸ்ட்ரெஸ்க்கு அது எவ்வளவு பரவல்லாம இருந்திருக்கும் சார். பேபி இப்போ சேப், ஆனா அம்மா? பெண் குழந்தை. ஒரு அம்மா இல்லாம அந்த குழந்தையால் எவ்ளோ நாள் இங்க சர்வைவ் பண்ணிட முடியும் நினைக்கிறீங்க.
ஒவ்வொரு நாள் என்னன்னே தெரியாத பிரச்சனை எல்லாம் வந்து நிக்கும். எங்க எப்படி நடக்கும்னு தெரியாது, எந்த இடத்துல நிக்கணும் நடக்கும்னு கூட தெரியாது.
கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி, சொல்லப்போனா பல நேரம் பைத்தியம் புடிக்காத குறையா….”
“ஹே… ஹே… ரிலாக்ஸ். காம் டவுன் இலக்கியா” மென்மையாக அவளது முழங்காலில் அவன் மெல்ல அழுத்தம் கொடுத்து தடவினான்.
அந்த குழந்தையை தன்னோடு ஒப்பிட்டு அவள் பார்த்துவிட்டு தான் சண்டையிட்டுள்ளாள் என்பதை இப்பொழுது தான் புரிந்துக்கொண்டான். அவளின் நிலையை அவனும் அறியவில்லை, அவளும் அறிவிக்காத காரணத்தால் வந்த சிறிய பிரச்சனை என உணர்ந்தான் அர்ஜுன்.
“அந்த பேபிக்கு கண்டிப்பா அவங்க அம்மா இருப்பாங்க. நேத்து விட இன்னைக்கு அந்த பொண்ணு ரொம்ப பெட்டெர்ரா இருக்கு. இன்னும் 12 ஹௌர்ஸ் தாண்டிட்டா கம்ப்ளீட்டா சேப்.
பிரைன்ல பிரஷர் வச்சிட்டு அந்த பொண்ணுக்கு ஆபரேஷன் பண்றது எனக்கு சரியா வராம தான் ஸ்டாப் பண்ணேன். புரியுதா?”
தலை கவிழ்த்தி அமர்த்திருந்தவளுக்கு சில நிமிடங்கள் கொடுத்தான். நிதானமாக, உணர்வுகளை தள்ளி வைத்து யோசிக்கும் பொழுது அவன் கூறுவதில் உள்ள சாத்தியக்கூறுகள் புரிந்து நிதானமானாள்.
“இருந்தாலும் நீங்க பேசுனது எல்லாம் சரியா? ச்சை-னு சொல்றதெல்லாம் ரொம்ப லோ-வா பீல் ஆகுது சார். ஒருத்தரை மதிக்கலானாலும் அவங்களோட கஷ்டத்துக்கும், உழைப்புக்கும் மதிப்பு குடுக்கணும் தான?
எத்தனையோ பேர் வறுமைல படிக்காம இருக்குற இடத்துல என் அப்பா என்ன இவ்ளோ தூரம் ஆளாக்கினதே நீங்க படிச்சா டாக்டர் டிகிரிக்கு மேல பெருசு தான். தயவு செஞ்சு என்னோட வேலைய மட்டும் இழுக்காதீங்க சொல்லிட்டேன்” இயலாமையில் துவங்கியவள் கடுமையான எச்சரிக்கையோடு முடித்தாள்.
“சரி சாரி. ரொம்ப ரொம்ப சாரி. சின்ன வயசுல இருந்து அப்பா அம்மாவ பாத்து வளர்ந்து, ஒரு கெளரவம் மனசுல ஊறி போச்சு. கண்டிப்பா டாக்டர் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசிச்சு, என்னோட வைப்க்கு என்னால பெருமை மட்டும் தான் வரணும்னு யோசிச்சே ரொம்ப படிச்சேன், நிறையா படிச்சேன். அதை எல்லாம் சட்டுனு மாத்திக்க முடியல. டைம் தேவை எனக்கு” என்றான் உளமார.
இவ்வளவு இறங்கி வந்து பேசுபவனிடம் வீம்பிற்கு நிற்க முடியாமல் சிரிக்காமல் தலை அசைத்தாள். இருவருக்கும் இடையே உருவாகியிருந்த உருவமில்லா பதற்றம், ஆங்காரம் மெல்ல விலகி நிரந்தர தீர்வு இல்லையெனினும் அமைதி உருவாகியது.
“சாப்பிட போகலாமா?” மறுக்காமல் தலை அசைத்தாள். எப்படி அவளை தன்னை நோக்கி திருப்பி வைத்திருந்தானோ அதே போல் மீண்டும் அவளை திருப்பிவிட்டு வாகனத்தை உயிர்பித்தான் உணவகத்தை நோக்கி.
சுத்தம் சுகாதாரம் பார்க்கும் மருத்துவன் இப்பொழுதெல்லாம் எதற்கு இப்படி அவளோடு, அவளுக்காக, அவள் ஆசைப்பட்டு உண்ணும் உணவை வாங்கி கொடுத்து, அவளின் சோர்வை நீக்க அடிக்கடி உணவகம் செல்கிறோம் என்பதை கூட ஆராய மறந்து போனான். எதிலும் அவள் என்னும் வார்த்தை தான் உள்ளதென உணரும் நாளும் விரிவாக வந்து தானே ஆகும்.
error: Content is protected !!