Skip to content
Post Views: 4,184
“நீ சாப்பிடு இலக்கியா, அப்பா கீழ வேலை பாத்துட்டு வர்றேன்” மணிகண்டன் கீழே கிளம்பிவிட முகத்தை தூக்கி வைத்து அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவனை வெறுப்பேற்றவே தட்டில் வகை வகையாக உணவை வைத்து அவன் அருகே சென்று அமர்ந்தாள்.
“போய்ட்டுடி”
“முடியாது”
“அப்போ கடிச்சிடுவேன்”
Advertisement
“கடிச்சுக்கோங்க”
கூச்சத்தை விட்டு அவள் தட்டிலிருந்த கறித்துண்டு ஒன்றை எடுத்து கடிக்க போனவன் நிறுத்தி, “ஏன் இலக்கியா, கடிச்சோனு சொன்னது உன்னையா இல்ல இந்த கறி துண்டையா?” மர்ம புன்னகை அவன் கொடுக்க இவள் இதழ் கடித்து கணவன் மார்பினில் அடித்தாள்.
“நர்ஸம்மா ஊட்டி விடுறியா?”
Advertisement
“முடியாது”
Advertisement
அர்ஜுன், “ப்ளீஸ்டி”
“முடியாதுங்க”
“இது எதுக்கு தண்டனை?”
Advertisement
“இவ்ளோ நாள் என்ன சுத்த விட்டீங்கல்ல”
“நான் ரெண்டு வருஷம் சுத்த விட்டதுக்கெல்லாம் சேர்த்து இந்த ரெண்டு மாசத்துல செஞ்சுட்ட தான? எப்படி எப்டியோ சாப்பாட்டுல கூட அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன் மத்த எதுலயும் காய போடாம இருந்தா சரி தான்” தலைக்கு கைகள் கொடுத்து அப்படியே அர்ஜுன் சாய்ந்து படுக்க, அவன் சட்டையை பிடித்து இழுத்து அமர வைத்தவள் அவனுக்கு தானே அனைத்தையும் ஊட்டிவிட்டாள்.
“இதை அப்பயே கொடுத்திருக்கலாமே. ரைத்தா வச்சு குடு இலக்கியா, பிரியாணி டாப்பு டக்கர்” வாய் நிறைய உணவை வைத்து மனைவியின் உணவை புகழ்ந்தான்.
அவன் கேட்டதை அப்படியே செய்தவள், “உங்களுக்கு நானே ஊட்டி விடணும்னு ஆசை” என்றாள்.
அவளின் சிவந்த கன்னங்களை ரசனையோடு பார்த்தவன், “அடி கள்ளி” செல்லமாக சிரித்தான்.
“இருந்தாலும் உனக்கு கொழுப்பு அதிகம் தான். அன்னைக்கு நைட் சண்டைல சிக்கிட்டேன்னு எத்தனை டா… எத்தனை நீ, போயா, போடா”
சிரித்துவிட்டாள் பெண், “நல்லா இருந்துச்சுல” என்று.
“ஆஹான்…” மனைவியை மேலும் கீழும் பார்த்தவன், “எத்தனை வருஷ பிளான் தெரியல” என்றான்.
“பிளான் எல்லாம் இல்ல, நெஜமாவே உங்ககிட்ட சண்டை போட இத்தனை நாள் யோசிச்சிருக்கேன். நமக்கு கல்யாணம் ஆன இவ்ளோ மாசத்துல உங்களுக்கு நெருக்கமா பீல் பண்ணதில்ல.
அந்த ஒரு சண்டை என்ன உங்க பக்கத்துல நிறுத்துச்சுனு பீல் பண்ணேன். சாதாரண வாக்குவாதம் தான், இருந்தும் ஏன் அது அப்டி தோணுச்சுனு நினைச்சு பாதப்போ தான் புரிஞ்சது.
என்னையும் மீறி என்னோட உரிமையை உங்ககிட்ட அன்னைக்கு தான் முதல் தடவ காட்டிருக்கேன்” அர்ஜுன் மையல் பார்வை அதிகரித்ததை இருவரும் உணர்ந்தனர்.
“டி, டா சொல்றது உரிமைன்னு சொல்றியா?”
“அப்டி இல்ல, யார்கிட்ட மனசு எதையும் யோசிக்காம பேசுதோ அவங்ககிட்ட தான் நம்ம உரிமை அதிகம் கொடுக்குறோம், அதே உரிமையை எடுத்துக்கவும் செய்றோம்னு அர்த்தம். நான் அன்னைக்கு எந்த தயக்கமும் இல்லாம சண்டை போட்டேன்ல” புரிந்தது அர்ஜுனுக்கு.
தந்தையிடம் கூட அளந்து பேசும் மனைவி, தன்னிடம் சண்டைக்கு, உரிமைக்கு நேருக்கு நேர் நிற்பதன் காரணம் புரிகிறது.
“சரி தான். நம்ம வீட்டுல வைக்க சில செடி வாங்கிட்டு வந்துருக்கேன்”
“பாத்தேன், பால்கனில வைக்க வாங்குனீங்களா?” ஆமாம் என்றான் அவளிடமிருந்து பார்வை எடுக்காமல்.
தட்டிலிருந்து உணவு பத்தாமல் போக எழுந்து சென்று எடுத்து வந்தாள் அவன் விரும்பி உண்ட பிரியாணியை எடுக்க.
“பீஸ் வேணாம் இலக்கியா. ரைஸ் மட்டும் குடு” முன்பு உண்ட உணவு கூட அவள் கையிலிருந்து வந்த உணவின் முன்பு காணாமல் போனது.
“எப்போ போகலாம்?”
“எங்க?” தெரிந்தே கேட்டாள்.
தனக்கு ஊட்டிவிட வந்தவள் கையை பிடித்து உச் கொட்டியவன், “தெரியாத மாதிரி கேக்காதடி. நம்ம வீட்டுக்கு தான்”
“பாட்டி சொன்னதுக்காக கூப்பிட வந்திருக்கிங்கனு சொன்னிங்கல…”
“கார்ல தான் ரெண்டு வீட்டு சாவியும் இருக்கு. போகணும்னா எப்பயோ போயிருப்பேன்” மனைவியிடம் அமைதி.
“இலக்கியா…” அவள் மணிக்கட்டை பிடித்து தன்னை நோக்கி நெருங்கி திருப்பினான்.
“பயமா இருக்கு. இன்னைக்கு ஏதோ ஒரு ஈர்ப்புல என் மேல இருக்க நெகடிவ் உங்களுக்கு தெரியாம இருக்கலாம். அந்த ஈர்ப்பு தெளிஞ்சதும் என்ன உங்களுக்கு…” அவள் பேசி முடிக்கும் முன் எழுந்திருந்த அர்ஜுன் மனைவியிடம் ஒரு வார்த்தை பேசாமல் தன்னுடைய உடமைகளை எடுத்து சென்றிருந்தான்.
“சார்…” பின்னாலே சென்று இவள் பார்க்க, அவன் படி இறங்கியிருந்தான். கை கழுவி வேகமாக இலக்கியா மாடியிலிருந்து எட்டி பார்க்க, அர்ஜுனின் வாகனம் அபார்ட்மெண்ட் விட்டு வெளியேறியிருந்தது.
பல குறுந்செய்திகள், அழைப்புகள் கொண்டு தூது அனுப்பி பார்த்தாள், எதிலும் அந்த இரும்பு மனிதன் இளகவில்லை. அவனின் ஒவ்வொரு நிராகரிப்பிலும் இவள் மனம் இங்கு துவள துவங்கியது.
மாலை தாண்டி இரவு வந்த பிறகும் அர்ஜுன் வரும் வழி தெரியாமல் போக கண்ணீரை அடக்க முடியாமல் தலையணை அணைத்து படுத்திருந்தவள் நேரத்தை பார்த்தாள். இரவு பனிரெண்டை தாண்டியிருந்தது.
வீட்டின் வெளியே சத்தம் கேட்க வேகமாக கண்ணை துடைத்து முகம் கழுவினாள், சில நேரம் தந்தை மகள் தூக்கம் கெட்டு போக கூடாதென்று வெளியிலே படுத்து உறங்கிவிடுவார்.
அதே எண்ணத்தில் இலக்கியா கதவை திறக்க, திறந்த வேகத்தில் அவளை நெருங்கிய அர்ஜுன் மனைவியின் கழுத்தை பிடித்து இழுத்து பெண்ணின் செவ்விதழ்களை சிறை செய்திருந்தான்.
இலக்கியாவின் இதழ்களை தீவிரமாய், கோவத்தோடு அர்ஜுன் சிறை செய்திருக்க அவனின் முத்த மோதலில் ஒத்துழைப்பு என்னும் சமாதானத்தை அதிர்ச்சிலிருந்து வெளி வந்து கொடுத்தாள் பெண்ணவள்.
அன்னியோன்யம் கொண்டாடும் அந்த நொடி, அவர்களுக்குள் நீண்ட நாட்களாக காத்திருந்த ஆழ்ந்த உணர்வுகளின் வெடிப்பு போல் இருந்தது.
அவளது முதுகை பிடித்து அருகே இழுத்தவன் இதழில் குறுகுறுக்கும் அவளது கற்றை முடி ஒன்றை முத்தத்திற்கு டையூறு விளைவிக்காமல் எடுத்து விட்டான்.
பத்து முடி கூட இருவரின் நெருக்கத்தை சீர் குழைத்து இப்பொழுது போனதில் அர்ஜுனுக்கு அத்தனை நிம்மதி. இருவரின் மூச்சு காற்றும் ஒன்றாகியது.
மருத்துவன் இதழ்கள் அவன் அன்பினை கொடுக்க, அதில் பாவை இதழ்கள் தன்னுடைய உணர்வுகளையும் வருத்தத்தையும் கொடுத்தாள்.
அந்த முத்தத்தில் இருந்த தீவிரம், உடலின் கோபத்தை தவிர்க்காமல், அவர்களுக்கிடையே தடை எதுவும் இல்லாமல் இருப்பதை உணர்த்தியது.
ஒவ்வொரு சொற்களும், சமாதானமும் முத்தத்தின் மூலமாக உரையாடின. அந்த ஆத்திரமும் அன்பும் நிறைந்த முத்தம், கோபத்திற்குப் பிறகும் இருவரின் பகிரப்படாத காதல் எவ்வளவு ஆழமானது என்பதைக் காட்டியது.
மூச்சுக்கு கிரங்கியவளை பத்திரமாக பிடித்து நிறுத்தியவன், விழிகளை திரையிட்டிருந்த மயக்கத்தை மறைத்து, இடைவேளை விட்டு நின்றான்.
“இதை தான சொன்ன, விட்டுட்டு போய்டுவேன்னு. செடி எடுக்க தான் வந்தேன்” வருத்தத்தை மறைக்காமல் கோவமாய் காட்ட முயன்றான்.
திரும்ப போனவன் டீ-ஷர்ட்டின் கழுத்து பகுதியை பிடித்தவள், “இல்ல, நீங்க போனாலும் நான் விட மாட்டேன்னு சொல்ல வந்தேன்” எக்கி நின்றவள் அவன் இதழுக்கு குறி வைக்க, கொக்கு அவன் விளையவில்லை ராமனின் வில்லாய் நிமிர்ந்து நின்றான். கோவமாம்.
“குனிங்க ப்ளீஸ்” நல்ல பிள்ளையாக கெஞ்சினாள்.
வீம்பு காரன் செடியை தான் உண்மையாக எடுக்க நள்ளிரவில் வந்தது போல் பேச்சு மாறாமல் நின்றான்.
“எதுக்கு குனியனும்? முடியாதுடி”
“டேய் குனிடா” முரட்டுதனமாக அவள் இழுத்ததும் தடுமாறி விழுந்தவன் போல் சற்று நிதானம் விட, பிடித்துகொண்டாள் மனைவி.
மருத்துவனுக்கும் இது தானே வேண்டும். முதல் முத்தம் சித்தத்தை பித்தாகியிருந்தது. பிரிந்த பிறகே பிரிந்திருக்க கூடாதோ என மனம் கூக்குரலிட்டு கத்த அவளே மீண்டும் அவன் வலையில் விழுந்திருந்தாள்.
மக்கு என அன்று அவன் கொடுத்த பட்டத்தை அவன் மனதையே திரும்ப பெற வைத்திருந்தாள் சொக்கி போகும் இதழ் அணைப்பில். உலகமே அமைதியாகி ஆழந்த, மௌனமான மென்மை உணர்வு பரவியது.
இலக்கியாவின் இதழ் வெப்பம் அவனது உள்ளத்தை தாக்க, அவன் நாசியினில் மெல்லிய காற்றை போல தன்னுடைய நேசத்தை, மன்னிப்பை அவனுக்கு பரிமாறினாள்.
வார்த்தைகளில் விவரிக்க முடியாத முத்தத்தில் முத்துக்கள் சிதறி சத்தமில்லாமல் பரவுவது போல் இரண்டு வருடங்களுக்கு மேலாய் காதல் பாரத்தை சுகமாய் சுமந்த இதயத்திற்கு விடுதலை கொடுத்தது அந்த முத்தம்.
உன் இதழின் ஈரம் காய விட மாட்டேன் என கங்கணம் கட்டி தான் வந்தான் போல அர்ஜுன் சக்கரவர்த்தி. அவள் நிறுத்திய வேட்டையை இவன் விடாது தொடங்கினான். பெண்மையின் இதழ் ருசியோடு காதல் ருசியும் அறிந்துக்கொண்டவனனுக்கு இனி எதையும் விடும் எண்ணம் இல்லை.
*****
“என்ன ப்பா சொல்ற, நம்ம அர்ஜுனா ரெண்டு நாளா ஹாஸ்பிடல் வரல?” ராதா நம்ப முடியாமல் கேட்டார் மகனிடம்.
ஊரிலே இருந்து இது போல் அவன் செய்ததே இல்லை. ஒரு நாளில் இரண்டு முறையாவது வந்து விடுவான் மருத்துவமனையை பார்வையிட ஆவது. அதனால் தான் வீடே நம்ப முடியாமல் சுற்றுகிறது.
“அட நிஜம் தான் பாட்டி. எங்க போறான்னு பாத்தா சூர்யா அபார்ட்மெண்ட் பக்கம் அர்ஜுன் அம்பு பாஞ்சிருக்கு” ராதா தனக்காக எடுத்து வந்த சீடையை பேரன் வருண் எடுத்து உண்டிருந்தான்.
“இன்னைக்கு இப்ப வருவான்னு நினைக்கிறன் அத்தை. எல்லாரும் எங்க இருக்கோம்னு கேட்டான்” தர்ஷன் பானுவிடம் கூறினான்.
ராதாவுக்கு மகிழ்ச்சி, “இலக்கியாவுக்கு புடிச்சது செய்யணும், அப்டியே ஒரு ஸ்வீட். என்ன ம்மா செய்யலாம்?” மருமகளிடம் அவர் கேட்க, “எதுக்கு அத்தை இவ்ளோ சந்தோசம். அவங்க எப்பவும் வர்றது தான?” என்றார் பானு.
யாருக்கு புரிந்ததோ ராமகிருஷ்ணனுக்கு புரிந்தது மனைவி யோசிக்கும் பாங்கு.
“எப்பவும் வர்ற மாதிரி இல்ல மருமகளே இந்த தடவை. மனசு ஒத்து வர்றாங்க ரெண்டு பேரும்” அதற்கு மேல் அவர் பேசவில்லை.
யார் உதவியும் இல்லாமல் தானே வேலையாள் உதவியோடு ஒரு மணி நேரத்தில் சிறு விருந்தை செய்துவிட்டார். எல்லாம் பேத்தியின் பிடித்தமான உணவுகள் மட்டும் தான்.
வீட்டினர் எதிர்பார்த்ததை விட நேர தாமதமாகி தான் வந்தனர் இருவரும். எப்பொழுதும் அர்ஜுனோடு வரும் பொழுது மங்கி போயிருக்கும் அவளது முகம் இன்று ஜொலித்தது. முகம் மட்டுமல்ல, அவளே ஜொலித்தாள்.
மங்கிய நிறத்தில் இருக்கும் அவளது உடை இன்று, பளிச்சென சிகப்பு ஜார்ஜெட் புடவையில் ஜொலித்தது. வீட்டினுள் நுழைந்ததும் கணவனை மறந்து பெண்களோடு இலக்கியா ஐக்கியமாகிவிட அர்ஜுன் வளமை மாறாமல் தனித்து அமர்ந்துவிட்டான்.
இரவு உணவை முடித்து அனைவரும் அமர்ந்திருக்க, சுடுதண்ணீர் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தாள் இலக்கியா.
“என்னடா எதுக்கு இன்னைக்கு இந்த கூட்டம்?” வரதராஜன் நேரடியாக மகனிடம் வந்து நின்றார்.
அர்ஜுனை பற்றி நன்கு அறிந்த குடும்பத்தினரும் உள்ளுக்குள் சிரித்து அவனை பார்த்தனர்.
“ஓ கூட்டம் கூடிருக்கா?” என்றான் எதுவுமே தெரியாதது போல.
“அடேய் நடிக்காதடா. ஓணான் கரணம் இல்லாம லுங்கி டான்ஸ் ஆடாது”
தர்ஷன் கூற அவனை முறைத்த அர்ஜுன், “வர வர பயம் இல்லாம போகுதுடா உங்களுக்கு”
“போடா புடலங்கா” வருண் வேண்டும் என்றே இலக்கியா அருகில் அமர்ந்துகொண்டான். பெண்ணவள் அவனது செயலில் திருதிருவென விழிக்க சிறியவனுக்கு அது இன்னும் வசதியாகியது.
“அப்றம் இலக்கியா வர்றியா ஒரு நைட் வாக் போய்ட்டு வரலாம்”
ராதா, “வருண் நம்ம இருக்குறப்போ இப்டி பேசுறது சரி, வெளிய இந்த மாதிரி விளையாடாத”
அர்ஜுன், “இருக்கட்டும் பாட்டி. எனக்கு தெரியும் அவங்கள பத்தி. பேர் சொல்லி கூப்பிட்டாலும் இவனுங்க இலக்கியாவை எந்த மாதிரி உறவா பாக்குறாங்கனு எனக்கு தெரியும்”
பெரியவரிடம் கூறியவன் சகோதரனிடம் கூறுவது போல் மனைவியிடமும், “வெளிய போறதா இருந்தா போங்க, ஆனா ஒரு மணி நேரத்துல வந்துடனும்”
“நீயும் வா அர்ஜுன்” அந்த நேரம் வீட்டினுள் கணவன் குழந்தையுடன் வந்த ப்ரியங்கா அழைக்க, உறங்க வேண்டுமென தப்பித்துவிட்டான்.
இலக்கியா கூட கணவன் வந்துவிட மாட்டானா என பார்க்க, அவன் நிற்கவில்லை. இன்று காலை மூன்று மணிக்கு அழைப்பு, அவசர சிகிச்சைக்கு.
அப்பொழுது கிளம்பி சென்றவன் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் இலக்கியாவை அழைத்து செல்ல அவள் தந்தை வீட்டிற்கு வந்திருந்தான். ஆதலால் இலக்கியாவும் அவன் போக்கில் விட்டு சென்றாள்.
இரவு அருகே இருந்த ஒரு தேநீர் கடைக்கு சென்று வந்தனர் ஐவரும். அறைக்குள் நுழையும் பொழுது அர்ஜுன் உறக்கத்திலிருப்பது தெரிய எளிமையான ஒரு இடவு உடையை மாற்றி வந்து படுத்தாள்.
error: Content is protected !!