Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 2.2

அர்ஜுன் சென்றதும் வீட்டில் இருந்த அனைவரின் மனமும் கூட சந்தோசத்தில் துள்ளியது ராதாவை தவிர. அன்னையின் வருத்தமான முகத்தை பார்த்த பரிமளா,

“அர்ஜுன் பத்தி யோசிக்க வேணாம் ம்மா, அவனை என்ன செஞ்சாலும் நல்லா யோசிச்சு தான் செய்வான். நாமளும் பொண்ணோட குடும்பத்தை பத்தி நல்லா விசாரிக்கலாம்” என்றார் ஆறுதலாய்.

சரி என தலை அசைத்தாலும் மனதில் இருந்த நெருடல் நீங்காமல் இருந்தது அவருக்கு, கணவன் வந்து புகைப்படத்தை நீட்டும் பொழுது இல்லாத சலனம், பேரன் கூறும் காரணங்களில் வந்தது.

“ஏன் இந்த சோகம்?” பாட்டியின் அருகே வந்தமர்ந்தனர் மற்ற இரு பேரன்கள்.



Advertisement

இருவரின் முகத்தை பார்த்து மௌனமாய் இல்லை என்க, “உங்களுக்கென்ன டாக்டர் பொண்ணு வேணாமா?” – வருண் அதற்கும் இல்லை என்றார் பெரியவர்.

“சரி உங்க ஆசை எதுவோ அத எங்களை வச்சு நடத்திக்கோங்க” – தர்ஷன்(ப்ரியதர்ஷன்)

“ஆமா அர்ஜுன் கல்யாணத்துலையே நல்ல பொண்ணா பாருங்க, உங்க விருப்பம் எப்டியோ அப்டி” – வருண்

Advertisement

“ரத்த வாடையே பாக்காத பொண்ணா” – தர்ஷன்

Advertisement

“ஆபரேஷன் பண்ணிட்டு குளிக்காமலே வந்தா மூக்கை மூடிட்டே பாத்ரூம் உள்ள அடிச்சு விரட்டுற பொண்ணா” – வருண் “

“பயாலஜி வெறுக்குற பொண்ணா” – தர்ஷன்

“நம்ம பணத்தை பாக்காம நம்ம குடும்பத்தை பத்தி தெரிஞ்சு, புரிஞ்சு நடக்குற பொண்ணு” – வருண்

Advertisement

“என்ன சுத்துறத விட, உங்கள சுத்துற என்னோட பொண்டாட்டியா” தர்ஷன் சிரித்தான்.

“வீட்டுக்குள்ள நான் வந்த ஒடனே என்னோட அம்மா மாதிரி இல்லாம என்னோட பாட்டி மாதிரி சிரிச்சிட்டே, சூடா காபி குடுக்குற பொண்ணா பாருங்க” – வருண்

“ஆமா, மொத்தத்துல என்னோட சந்தோசம் அவ சந்தோசத்துலன்னு சொல்ற மாதிரி, டிகிரி, ஸ்டேட்டஸ், சொந்தம், சொத்துனு எதுவும் பாக்காம காதல் யுத்தம் மட்டும் தான் எங்களுக்குள்ள நடக்கணும்” – தர்ஷன்

“அப்டி ஒரு பொண்ண நீங்களே பாருங்க”

இருவரும் ஒன்றாக கூறவும், இந்த வயதிலும் தன்னுடைய கண்களின் மொழியை எளிமையாய் புரிந்து அதன்படி நடக்கும் அந்த இருவரின் கன்னத்தை வாஞ்சையாக தடவி தன்னுடைய சந்தோசத்தை கண்ணீர் மூலம் வெளியிட,

“அட பாட்டி” வருண் ராதாவை கட்டிக்கொள்ள, “டேய் போடா நான் தான்டா கட்டி பிடிப்பேன்”

அடுத்த சில நிமிடங்களில் அர்த்தமில்லாத அவர்கள் சண்டையில் சிரிக்க வைத்துவிட்டனர் பெரியவரை.

அன்னையின் சஞ்சலத்தை மகனும், மருமகனும் சேர்ந்தது தீர்த்து வைக்க நிம்மதியானது வரதராஜனுக்கும்.

*****

ஒரு நாள் இரவு மருத்துவமனையிலிருந்து இரவு பத்து முப்பது மணிக்கு இலக்கியாவிற்கு அழைப்பு வந்தது.

“அக்கா நாளைக்கு காலைல ஒரு ஆபரேஷன் வர முடியுமா உங்களால?”

“ஏர்லி மார்னிங் ஆபரேஷனா அஞ்சலி?”

“ஆமா க்கா, அஞ்சு மணிக்கு ஸ்டார்ட் ஆகிடும். விஸ்வநாத் சார் தான் ஆபரேஷன் பன்றார், நான் ஒரு அவசரத்துக்கு ஊருக்கு போறேன் க்கா, உன்ன விட்டா வேற யார்கிட்ட சொல்லனு தெரியல” மிகவும் சோர்வான குரலில் அந்த பெண் கேட்கவும் அவளின் மன காயத்தை பெரிதுபடுத்தாமல் உடனே சரியென்றாள்.

இரவு வீட்டை சுத்தப்படுத்தி உறங்கவே பதினொன்றை தாண்டியிருக்க அதிகாலை வீட்டிலிருந்து நான்கு மணிக்கெல்லாம் கிளம்பியிருந்தாள். மகள் இரவில் செல்ல பயம் கொள்வதால் அவள் தந்தையே மருத்துவமனை வரை வந்து விட்டு சென்றார்.

ஐந்து மணிக்கு துவங்கிய அறுவை சிகிச்சை அடுத்த மூன்றரை மணி நேரம் நடக்க, பிறகு கருவிகளை சுத்தப்படுத்தி முடிக்கவே மேலும் இருவது நிமிடங்கள் கடந்திருந்தது.

இன்னும் பத்து நிமிடங்களில் அர்ஜுனின் ஓ.பி வேலைகளை கவனிக்க இவள் தான் செல்ல வேண்டும். அஞ்சலியுடைய வேலையை இலக்கியா வாங்கியிருந்தாலும், இலக்கியாவின் வேலை எப்பொழுதும் போல அன்று இரவு வரை இருந்தது.

பம்பரம் போல் சுழலும் அர்ஜுனின் வேகத்திற்கு உணவு அருந்தாத இலக்கியாவால் பதினோரு மணி வரை மட்டுமே சரிக்கட்ட முடிந்தது. டெஸ்ட் எடுப்பது, எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் வாங்குவது, நோயாளிகளை வழிநடத்துவது என மொத்த உடலும் தளர்ந்தது, கால்களில் வலி அதிகமாகியது, நிற்காமல் நடந்துகொண்டே இருந்ததால்.

அர்ஜுனிடம் சென்று ஓய்வு கேட்கலாம் என சென்றால் அவன் இன்னும் இரண்டு வேலைகளை கொடுத்து அந்த கேள்வி இருந்த இடம் தெரியாமல் ஓட விட்டான்.

அவனிடம் அதற்கு மேல் அழுத்தியும் பேச முடியவில்லை பெண்ணால். அவனிடம் ஏதாவது சந்தேகம் கேட்கும் சாக்கில் அவனுடைய மேஜையில் தன்னுடைய மொத்த அழுத்தத்தையும் கொடுத்து சில நொடிகள் ஆறுதல் தேடிவந்தாள்.

அதே போல் ஒருமுறை அவன் டேபிளில் சாய்ந்து நின்று மருந்து சீட்டிற்காக காத்திருந்த பொழுது அவளை தலை தூக்கி பார்த்தவன், “என்ன பழக்கம் இது இலக்கியா? ஒழுங்கா தள்ளி நேரா நில்லு”

காட்டமாக பேசியவன் வார்த்தைகள் சட்டென பெண்ணின் மனம் சுட்டது. கலங்கிய கண்களை இமை தட்டி அடக்கிய இலக்கியா மனம், தன்னை தீண்ட தகாத பெண்ணை போல் அல்லவா பேசுகிறான் என சுணங்கியது.

எப்பொழுதும் இருக்கும் ஒரு வித மகிழ்ச்சி அவன் அருகில் இல்லை, “இந்தா” மருந்து சீட்டை நீட்டி, “போன தடவ குடுத்த டேப்லட்ஸ் ஸ்டாப் பண்ணிட சொல்லு, இந்த ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு வா”

அவளை பார்த்து நீட்டி, ரிப்போர்ட் ஒன்றை கவனித்தவன் அவள் தன்னிடம் சீட்டை வாங்காமலிருப்பதை கவனித்து அப்பொழுது தான் அவள் முகம் பார்த்தான். கண்கள் அவனை பார்க்காமல் அவன் நீட்டிய சீட்டின் மேல் கோவமாய் படிந்தது.

அவள் வாங்க போவதில்லை என்பதை புரிந்து, “நின்னுட்டே கனவு காணுற ஐடியாவா?” அழுத்தி கேட்டு அவள் மொத்த கவனத்தையும் தன் பக்கம் இழுத்தான்.

“வேற யாரையாவது குடுக்க சொல்லுங்க சார்” குரல் கமர அவனிடம் தைரியமாக பேசினாள்.

இதுவரை எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் வேலையை செய்யும் பெண் இன்று எளிமையான வேலையை மறுக்கவும் அவள் முகத்தை உன்னிப்பாக கவனித்தான்,

“ஏன் குடுக்க முடியாது?”

கண்களை மூடி சோர்வை விழுங்கி, “வேற ஒர்க் இருக்கு சார் ப்ளீஸ்” மன்றாடியது அவள் வார்த்தைகள் மட்டுமல்ல, அவள் மனமும் கூட.

“ஓ… என்ன தவற உனக்கு வேலை குடுக்க இன்னொரு ஆளுங்க இருக்காங்களா?” இலக்கியா பதில் பேசவில்லை.

“சரி அப்போ இனிமேல் நீ அவங்களுக்கு அசிஸ்ட் பண்ணிக்கோ, நான் வேற ஆள அப்பாய்ண்ட் பண்ணிக்கிறேன்”

இது தான் முடிவென உறுதியாய் நின்றவன் வார்த்தைகளில் அதிர்த்தவள் அவனை பார்க்கும் இந்த சில நொடிகளுக்காக ஆசைக்கொண்டு உடனே அவன் கையிலிருந்த பேப்பரை வாங்கி வெளியில் நடந்தவளை நிறுத்தினான்.

“நில்லு… குடுத்துட்டு அஞ்சே நிமிசத்துல வா, பேஷன்ட்ஸ் எல்லாரையும் மதுக்கு பார்வட் பண்ணிடு”

அவனை திட்டவும் முடியாமல் தன்னுடைய உடல் சோர்வினால் உண்டாகும் கோபத்தையும் கட்டு படுத்த முடியாமல், வறண்ட தொண்டையின் தாக்கம் மொத்தமாய் கண்ணீராய் வெளியில் வந்தது. அவன் கொடுத்த வேலைகளை முடித்து அர்ஜுன் ஓ.பி பார்க்கும் அறையில் பார்க்க அவன் இல்லை.

இரண்டு மாடி மேலே ஏறி அவன் அறை கதவை தட்டினாள். உள்ளே வருமாறு குரல் வர அங்கிருந்த ஒரு சோபியாவில் அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

“சார் வர சொன்னிங்க” இலக்கியா நிற்க அவளை கண்கள் உயர்த்தி பார்த்தவன் தனக்கு முன்னே இருந்த ஒரு தட்டை காட்டினான்.

குழப்பமாய் அவனை பார்த்து இலக்கியா அசையாமல் நிற்க, “உனக்கு தான் எடுக்குறியா இல்லை வந்து ஆள் வச்சு ஊட்டி விட சொல்லவா?”

“எ.. எனக்கு எதுக்கு சார்?” – இலக்கியா

“காலைல ஆபரேஷன் அன்டன் பண்ணிருந்தா சாப்பாடு சாப்பிட்டு வந்து ஓ.பி அன்டன் பண்ண தெரியாதா? இப்பிடி தான் எதுவும் சாப்புடாம இருப்பியா?” – அர்ஜுன்

சில நிமிடங்களுக்கு முன்பு அவன் பேசிய கூரிய வார்த்தை அத்தனையும் அந்த வாக்கியத்தில் அடிபட்டு மாண்டது. ஒரு வார்த்தை தொழிலை மீறி பேசியிராதவனின் முதல் முயற்சியே அவள் முகம் பார்த்து அகம் படித்ததில் குளிருந்து போனது பேதையின் உள்ளம்.

“இருக்கட்டும் சார், நான் கேன்டீன்ல வாங்கிக்கிறேன். அரை மணி நேரம் எனக்கு பிரேக் தாங்க” கேட்டாள் உள்ளிறங்கிய குரலில்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “சாப்பிட முடியுமா முடியாதா? ஒக்காரு” அவனுக்கருகில் சோபாவை காட்டினான். அவனுடைய அழுத்தத்தை புரிந்தவள் குனிந்து அந்த தட்டை எடுத்து ஓரடி வைத்த பொழுது,

“எங்க போற?” என்றான் தனக்கு முதுகு காட்டி நின்ற பெண்ணிடம்.

அவஸ்தையில் கண்களை மூடி திறந்தவள், “உங்க பக்கத்துல ஒக்காந்து என்னால சாப்பிட முடியாது சார்”

அவளின் தவிப்பை உணர்ந்தவன் எழுந்து அவன் மேஜைக்கு அருகில் இருக்கும் நாற்காலி ஒன்றை டீ பாயின் முன்பு எடுத்து போட்டு மீண்டும் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டான்.

அவன் செய்கையின் அர்த்தம் புரிந்தவள் மனம் மேலும் தவித்தது. இவன் அருகே தினம் தினம் காரணமே இல்லாமல் ஈர்க்கப்பட்ட இதயத்திற்கு இப்பொழுது இவனை பிடிக்க காரணங்களை கொடுத்தால் அந்த மனம் படும் பாட்டை தான் அவன் அறிவானோ?

அமைதியாக மறு பேச்சின்றி அமர்ந்தவள் தொண்டையில் இறங்கவே மாட்டேன் என சண்டித்தனம் செய்தது அவன் கொடுத்த மிருதுவான அந்த பிரட் சாண்ட்விச்.

அவளை பார்க்கவில்லை அவன், ஒரு நொடி கூட அவள் முகத்தையோ தவிப்பையோ கண்டுகொள்ளும் எண்ணம் அவனுக்கு என்றும் இருந்ததில்லை.

சின்னஞ்சிறு செயலில் இன்பம் கொள்ளும் அந்த பிஞ்சு இதயத்திற்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீணாகி குப்பைக்கு செல்லும் பிரட் சூடாகாக இரண்டு பச்சை வெங்காயமும் தக்காளியும் அலங்கரித்து வந்தது பெரியகோவிலின் மகிமையை விட உயர்ந்து நின்றது.

காதலில் பித்தாகியிருந்த அவள் மனம் பசியை துறந்து அவன் செயலை உண்டு மனதை நிறப்பியது.

அதற்கு மேல் உள்ளே உணவை அனுப்பாதே என வயிறு கட்டளையிட்டும், வரம்பு மீறி செல்லும் அந்த உணவை உள்ளிழுக்காமல் இருக்க, அவனே எழுந்து சென்று ஒரு கிளாஸ் தண்ணீரை அவன் முன் வைத்தான்.

முகத்தை தாங்கி கால்களில் கை வைத்து தன்னை பார்க்கும் அவன் பார்வை வீச்சை தாங்காமல் விக்கும் உணவை வீணடிக்க விரும்பாமல் இலக்கியா ஒரு வழியாக கால் மணி நேரம் எடுத்துக்கொண்டாள்.

“ஏன் இந்த பதட்டம்?” அவன் கேட்பதற்கு பதில் வரவில்லை.

திகட்ட திகட்ட மகிழ்ச்சியை கொடுத்து திக்கு முக்காட செய்தவனின் கேள்விக்கு பதில் நிச்சயம் இல்லை, ஆனால் அவனுக்காக காலமெல்லாம் கொடுக்க ஒரு வார்த்தை மட்டுமே இருந்தது, “தேங்க்ஸ் சார்”

ஆழியின் ஆழத்தை கொண்டவன் கண்களில் எந்த விதமான உணர்வையும் பிரித்தெடுக்க முடியவில்லை பெண்ணால், “வீட்டுக்கு போ, நாளைக்கு ஹாஸ்பிடல் வந்தா போதும்”

வேலை அசதியை விட மருத்துவனின் செயல் அவள் மனதிற்கு ஓய்வு தர வேண்டியது. தயக்கமாக எழுந்தவள் வாய் வார்த்தையாக, “பரவால்ல சார் ஈவினிங் போறேன்” என்றாள்.

“அடுத்தவங்களுக்கு உதவி பண்றது தப்பில்லை, அந்த உதவி நம்ம மனசையும் உடம்பையும் பாதிக்காம இருக்க நமக்கு தகுதியிருக்கா-னு பாக்குறது தான் முக்கியம்”

அவளின் உடலை படித்தவன் கூற, அவன் வார்த்தையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அர்ஜுனிடம் வாதாடவும் வேண்டாம் என தோன்றியது.

இது என்ன முதல் முறையா இது போன்ற இரண்டு மூன்று வேலைகளை இவள் ஒருத்தியே பார்ப்பது? இரண்டு நாள் கூட உறக்கமில்லாமல் இருந்ததுண்டு ஆனால் அந்த நேரமெல்லாம் குட்டி கப் டீ குடித்தாவது உடலின் அசதியை போக்கிவிடுவாள் இன்று தான் தண்ணீர் மட்டுமே துணையாகி போக மொத்த உடலும் சோர்வின் பிடியில் விழுந்தது.

“ஓகே சார்” பேச்சுக்காக ஒப்புக்கொண்டு நின்றவளிடம் ஒரு கார்டை நீட்டினான்.

அலங்கரித்து நின்ற அந்த அழகிய காகிதத்தில் சொக்கி போனவள் அதனை திறக்கும் முன்பே அவளின் உயிரை பாதி கொன்றிருந்தான் தன் செய்திகொண்டு.

“கம்மிங் சண்டே எனக்கு என்கேஜ்மெண்ட், கண்டிப்பா வந்துடு”

இத்தனை நேரம் அவள் பார்த்திராத ஒரு மெல்லிய புன்னகை அவன் இதழின் ஓரம். எந்த சிரிப்பிற்காக பல நாள் இலக்கியாவின் மனம் ஏங்கியதோ அதே சிரிப்பு இன்று அவளை கூறுபோட்டு கொன்றது.

 

How is the chapter? COmment plzz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!