Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 2.1

இல்லத்தின் கதவை அடைந்த பொழுதே அவன் முகத்தை காரினுள் ஸ்கேன் செய்த அந்த தானியங்கி பெரிய இரும்பு கதவு தன்னாலே திறக்க, தன்னுடைய பென்ஸ் இ.க்யூ.எஸ் வாகனத்தை வீட்டினுள் செலுத்தினான்.

அவர்கள் ராமகிருஷ்ணன் மருத்துவமனையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவியில் இருந்தது அந்த இல்லம். அவனுடைய அன்னை தந்தை, தாத்தா பாட்டி, சகோதரன் என அனைவரும் வசிக்கும் இடம் அது.

ஆரம்பத்தில் அத்தை குடும்பம் கூட அங்கு தான் இருந்தது. கடந்த சில காலங்களாக தான் அவர்கள் இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் வீட்டிடை கட்டி குடி போனது. ஆனால் இந்த வீட்டினை கூட ஐந்து வருடங்கள் முன்பு தான் பேரப்பிள்ளையின் விருப்பத்தை கேட்டு ஆசையாய் கட்டினார்கள்.

நீண்ட நெடிய அந்த தெருவில் இருக்கும் மூன்றே வீடுகளில் இந்த வீடும் ஒன்று. வீட்டினுள் நுழைந்ததுமே சில தூரம் சிறுக வளர்ந்த புல்லால் நிரம்பியிருக்க வீட்டை சுற்றிலும் ஒவ்வொரு வகை மரங்கள் வளர்ந்திருந்தது.



Advertisement

வீட்டின் பின் பகுதியில் பெரிய நீச்சல் குளம் ஒன்றும், பயர் பிட் ஒன்றும் அமைத்து அதை சுற்றி அமர்வதற்கு ஏதுவாக நாற்காலிகளும், அதற்கு குடையும் செய்திருந்தனர்.

வீட்டின் தரை தளம் நல்ல விசாலமாக வரவேற்பறை, சமையலறை, உணவரை, மூன்று பெரிய படுக்கையறை, ஒரு பெரிய தியேட்டர் கொண்டது. முதல் தளம் பெரிய பெரிய படுக்கையறைக்கு ஆறு, ஒரு லைப்ரரியோடு இணைந்த மீட்டிங் ஹால் ஒன்றும் இருக்கும் மருத்துவமனை பற்றிய பேச்சுகளுக்காக.

அதற்கு மேல் மாடியில் பெரிய ஜிம் அறையும், வீட்டின் தோட்டத்தை காணும் வகையில் மேற்கூரை மட்டுமே இருக்கும் திறந்த வெளி ஊஞ்சல்கள் சிலவும் அமைந்திருந்தன. வீட்டின் ஒவ்வொரு இடமும் அனைவரின் விருப்பத்திற்கிணங்க அமைக்கப்பட்டிருக்க, அவரவர் அறை மட்டும் அவரின் தனிப்பட்ட விருப்பத்தின் பாணியில் இருந்தது.

Advertisement

இரவு விளக்கின் ஒளியில் மின்னிய அந்த மாளிகை போன்ற இல்லத்தின் ஒரு ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி வீட்டினுள் நுழைந்த பொழுதே அவனை பிடித்துக்கொண்டது அவர்கள் வளர்க்கும் ஹஸ்கி வகையை சேர்ந்த ப்ருனோ. அர்ஜுனை பார்த்து பல நாட்கள் ஆன சந்தோசத்தில் துள்ளி குதித்து அவன் மேல் பாய்ந்தது.

Advertisement

“டேய் ப்ருனோ” அதன் முகத்தை கைகளில் ஏந்தியவன் அதன் உடலை சந்தோசமாக தட்டி கொடுக்க அவனுக்கோ இன்னும் சந்தோசம்.

சமையலறையிலிருந்து அவன் பாட்டி, தாத்தா பேச்சு சத்தம் கேட்டு செல்ல நினைத்த அர்ஜுனின் மேல் மொத்தமாய் தாவி அவன் முகத்தை எச்சிலால் நிறைக்க விளைந்த நேரம் அதன் வாயை பிடித்து, “வேணாம் ப்ருனோ, மறுபடியும் என்னால குளிக்க முடியாது” என்றவன் கீழே தரையில் அமர்ந்து அந்த சிரியவனின் சேட்டையை ரசிக்க துவங்கினான்.

உள்ளே மனைவியோடு நின்று சமைத்த உணவுகளை மேஜையில் மாற்ற உதவி செய்துகொண்டிருந்த ராமகிருஷ்ண சக்ரவர்த்தியின் பேச்சை சிரிப்போடு கேட்டுக்கொண்டிருந்தார் ராதா சக்ரவர்த்தி, ராமகிருஷ்ணனின் அன்பு மனைவி.

Advertisement

எழுவதை தாண்டிய வயதிலும் காதல் பாடம் கற்க தோன்றும், காதல் ஆசையை தூண்டும் அந்நியோன்யம் அவர்களிடம் என்றும் இருக்கும்.

கணவன் பேசுவதை கோவமாக இருந்தாலே ரசிப்பவர், இன்று சிரிப்போடு பேசவும் சொல்ல வேண்டியதே இல்லை.

“நிஜமா ராதா, அப்டியே அந்த பொண்ணுக்கு உன் கை பக்குவம் போல. நீ போட்ட மாதிரியே டீ. கொஞ்சம் கூட மாறல, அதே அளவு சுகர், டீ தூள், பாலோட திக்னெஸ் எல்லாமே. உண்மைய சொல்லு எனக்கு தெரியாம நீ ஏதாவது ஆன்லைன் கிளாஸ் எடுக்குறியா?”

செய்த வேலையை அப்படியே நிறுத்தி, “உங்களுக்கு தெரியாம நான் என்ன பண்ணிருக்கேன் இது வர?” என்றார் சிறு முறைப்போடு.

“அப்றம் எப்படி அந்த பொண்ணுக்கு உன் கை பக்குவம் இருக்கும்?” முக்கியமான கேள்வியை வைத்தார்.

“நான் என்னோட அம்மாகிட்ட கத்துக்குட்டேன், அவ அவளோட அம்மாகிட்ட கத்துட்டு போட்ருப்பா” – ராதா

“இருக்கவே இருக்காது, நான் இது வர இப்டி வேற யாரும் செஞ்சு பாத்தது இல்ல” அடித்து பேசினார் மனைவியை பின்தொடர்ந்து.

இடுப்பில் கை வைத்து கணவனை முறைத்தவர், “நீங்க என்ன தமிழ் நாட்டுல இருக்குற எல்லார் வீட்டுலையும் டீ குடிச்ச மாதிரி பேசுறீங்க? யாருக்கு தெரியும் என்ன விட இன்னும் நல்லா டீ போடுறவங்க இருப்பாங்க”

“சத்தியமா அதுக்கு வாய்ப்பே இல்ல” அடித்து பேசினார் ராமகிருஷ்ணன்.

“நீங்க நினைச்சுக்க வேண்டியது தான்”

மனைவி அலுத்துக்கொண்டதை பார்த்து மென்மையாய் அவர் கன்னம் பற்றியவர், “ஆமா நான் நினைக்கிறது தானே சரி, என் ராதா தான் எனக்கு எப்பவும் பெருசு, அவளோட கை பக்குவம் தான் எனக்கு உசத்தி”

ஆழமான மூச்சை விட்டு அவரே மீண்டும், “அதுக்கு சோதனை வந்த மாதிரி உன் டீய ஒரு பொண்ணு அடிச்சிட்டா” என்றார் வருத்தமாக.

“ஏங்க? அந்த மாதிரி நல்லா சமையல் தெருஞ்ச பொண்ணா நம்ம அர்ஜூன்க்கு பாக்கலாமா?”

“சமையல் தெரிஞ்சு என் ஹாஸ்பிடல்ல கேன்டீன் போடவா பாட்டி?”

சரியாக பாட்டி இறுதியாக பேசியதை மட்டும் கதவில் சாய்ந்து நின்று கேட்டவன், பெரியவர்கள் இருவரின் இனிமையான பேச்சை தடுக்க வேண்டாம் என நின்றுவிட்டான். ஆனால் தன்னை பற்றி பேச்சு எழவும், அதுவும் தன்னுடைய வாழக்கை துணை பற்றிய தேர்வில் தவறான பேச்சு எழவும் நிற்க முடியவில்லை.

“ஏன் அந்த தொழில் எதுல கொறஞ்சு போச்சு?” கணவனிடமிருந்து விலகி நின்றவர் பேரனை பார்த்து கேள்வி எழுப்பினார்.

“அதான?” பெரியவரும் பேரனை பார்த்தார்.

“கொறஞ்சு போகல, என்ன கல்யாணம் பண்ணிக்க போறவ, என் பக்கத்துல என்னோட பொண்டாட்டியா நிக்க போறவ, எனக்கு சரி சமமா நிக்கணும். படிப்பு, வேலை, அழகு, அந்தஸ்து-னு எல்லாத்துலயும்” என்றான் அழுத்தத்தை கூட்டி.

“ஏன் நான் உன் பாட்டியை கல்யாணம் பண்ணிக்கல?” – ராமகிருஷ்ணா

“நல்ல வேலை பண்ணீங்க” சாலட்ற்காக வெட்டியிருந்த கேரட் ஒன்றை எடுத்து உண்டான்,

“இல்லனா எனக்கு இப்டி ஒரு பாட்டி கெடைச்சிருக்க மாட்டாங்கள்ல?” என்றவன் மேலும்,

“ஆனா அது அம்பது வருஷம் முன்னாடி தாத்தா, அந்த காலத்துலயே பாட்டி டிகிரி ஹோல்டர். இந்த காலத்துல எல்லாருக்கும் டிகிரி இருக்கு, ஏன் ரெண்டு மூணு டிகிரி எல்லாம் அசால்ட்டா முடிக்கிறாங்க. பட் ஐ வாண்ட் எ கேர்ள் வித் மாஸ்டர்ஸ் டிகிரி இன் டாக்டர்ஸ். தட்ஸ் இட் தாத்தா” பேரனை பார்த்து பாட்டி சிரிக்க அவர்கள் தன்னை புரிந்துகொண்டதில் அவனுக்கும் சிறு நிம்மதி.

ஏனெனில் பலமுறை அவர்கள் மருத்துவமனை ஷேர் ஹோல்டர் ஒருவரின் பெண்ணை இவனுக்கு திருமணம் செய்துவைக்கலாம் என்னும் பேச்சு அவன் காதுப்படவே அடிபட்டது.

நல்ல வசதியான குடும்பம், லண்டன் சென்று இன்ஜினியரிங் படித்த பெண், அதோடு நில்லாமல் அவளின் அழகை பாராட்டி அவன் அன்னை பேசியதை காது கொடுத்து அவனால் கேட்க இயலவில்லை.

பதில் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தவன் இந்த பேச்சே இப்பொழுது வேண்டாம் என இரண்டு வருடங்கள் தள்ளி வைத்து தனியாய் ஒரு அபார்ட்மெண்டை வாங்கி சென்றுவிட்டான்.

வீட்டினர் தடுத்து பார்த்துவிட்டனர், “ஒரு அஞ்சு வருஷம் நான் தனியா இருக்க ஆசைப்படுறேன் தாத்தா, கல்யாணம்னு ஒன்னு ஆகி ரெண்டு வருஷம் இல்லனா மூணு வருஷம் கழிச்சு நீங்க கூப்புடாமயே வந்துடுவேன்”

அதோடு பெரியவர்களால் அவனை தடுக்க முடியவில்லை. தனிமையை விரும்புகின்றவன் மனநிலையை மதித்து அவன் போக்கில் போகட்டும் என அர்ஜுன் மேல் நம்பிக்கை வைத்து அனுப்பினர்.

எப்பொழுதாவது பெரியவர்கள் விருப்பப்பட்டு கேட்டால் இரவு அங்கு தங்கியிருந்து மறுநாள் வீட்டிற்கு சென்று விடுவான். இன்றும் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதால் தான் வீட்டிற்கு வந்தது.

“ம்மா காபி” வரதராஜன் உள்ளே நுழையும் பொழுதே சோர்ந்த குரலோடு அன்னையிடம் கேட்டுக்கொண்டே வருவார்.

“பாத்தியா? டாக்டர் பொண்ண கல்யாணம் பண்ணா, யாரைவாது எதிர் பாத்துட்டே தான் இருக்கனும்” பேரனிடம் கூறி அவனுக்கு அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.

அர்ஜுன் சின்ன சிரிப்போடு நிறுத்திக்கொண்டான்.

“ம்மா காபி கேட்டேன்” மகன் மீண்டும் கேட்க, “நைட் சாப்பாடு சாப்புடுற நேரம் எதுக்கு காபி? குளிச்சிட்டு வா ப்பா, சாப்பிடலாம்” ராதா கூறவும் பாவமாக தன்னை பார்க்கும் தனயனின் பார்வையில் கரையவில்லை.

“ஒழுங்கா போ” பத்து வயது மகனை மிரட்டுவது போல் மிரட்டவும் தான் எழுந்தார், “பானு எங்க வரதா?”

“அவ ரூம் போய்ட்டா ம்மா” என வரதராஜனும் தனதறைக்கு நடந்தார்.

“ஏன் இந்த திடீர் மீட்டிங்? அப்பா அம்மா இந்த நேரம் வீட்டுக்கு வர மாட்டாங்களே” கேள்வியாய் அர்ஜுன் பெரியவர்களை பார்க்க இருவரிடமும் மௌனம் தான்.

“உன் அத்தை மாமா வரட்டும் அர்ஜுன், சொல்றேன்” – ராமகிருஷ்ணா

“அப்டி என்ன ரகசியம்?” – அர்ஜுன்

“ரகசியமா? இல்லையே. சந்தோசமான விசியம் சொல்ல போறேன், அதுக்கு வீட்டுல எல்லாரும் இருந்தா நல்லா இருக்குமேன்னு சொல்றேன்” அர்ஜுன் அமைதியாகி போனான்.

அடுத்த அரை மணி நேரத்தில் சிரியவர்களிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் உணவு மேஜையில் வந்து அமர்ந்துவிட்டனர். உணவு செய்வது ராதா தலைமையில் நடந்தாலும், பரிமாறுவது எல்லாம் வீட்டின் பெண்கள் இருவர் தான்.

மருமகள் பானுவும், மகள் பரிமளாவும் பரிமாறி நிற்க, “உன் பையன்னுக்கு முப்பது வயசாகிடுச்சு பொண்ணு பாக்குற எண்ணம் இருக்கா இல்லையா வரதராஜா?” – ராமகிருஷ்ணன்

மகனை பார்த்தார் வரதராஜன், அமைதியாக அவன் இருக்கவும் அவன் மனதிலும் இந்த எண்ணமும் இருப்பது புரிய, “இவன் இத்தனை நாள் வேணாம்ன்னு சொன்னதால தான் ப்பா பேசாம இருந்தேன். பாக்க ஆரமிச்சிடலாம்” இது பற்றிய பேச்சுக்கள் தான் வரும் என எதிர் பார்த்திருந்தான் அர்ஜுன்.

“உனக்கு அந்த வேலையே வேணாம்”

தன்னுடைய கைபேசி எடுத்து மகனிடம் நீட்டினார், “ரெண்டு பொண்ணு பாத்து வச்சிருக்கேன், ரெண்டுமே அர்ஜுன் எதிர் பாக்குற மாதிரி அவனுக்கு ஈகுவலா இருக்கும். படிப்பு அந்தஸ்து அழகுன்னு எல்லாத்துலயும். அவனுக்கு எந்த பொண்ணு ஓகே-னு கேளு பேசி முடிச்சிடலாம் ரெண்டு வரனுக்கும் ஜாதகம் பொருத்தமா இருக்கு. நம்ம பதிலுக்காக தான் வைட்டிங்”

கைபேசி அங்கிருந்த அத்தனை கைகளுக்கும் மாறி மாறி சென்றது அர்ஜுனை தவிர. அமைதியாக உண்டு முடித்தவன் அவர்கள் ஆர்வத்தை கவனிக்காமல் கை கழுவி மீண்டும் நாற்காலியில் வந்து அமர்ந்தான்.

“அர்ஜுனு ரெண்டுமே செம்ம, உனக்கு புடிக்கலைனா சொல்லு ரெண்டு பொண்ணுங்களை கட்டிக்க நான் ரெடி” தாராளமாய் அர்ஜுனின் தம்பி வருண் கூற அவன் தலையில் கொட்டு வைத்தாள் பிரியங்கா.

“ஏய் அண்ணி” வருண் வலியில் தலையை தேய்த்தான்.

“ரெண்டுபேரும் உன்ன விட ஒரு வருஷம் பெரிய பொண்ணுங்க” என்றாள் அவனை கண்டிக்கும் பொருட்டு.

“அப்போ ரெண்டு பொண்ணு பாலிசிக்கு ஓகே-னு சொல்ற?” – வருண்

“இது கூட ரொம்ப நல்லா இருக்கே” ப்ரியதர்ஷன்

“உங்கள முதல ஒரு பொண்ணு சரின்னு சொல்லுதா பாக்கலாம்” – ப்ரியங்கா

“ஏன் எங்களுக்கு என்ன அறிவில்லையா அழகில்லையா?” – வருண்

“ரெண்டும் இல்ல” அர்ஜுன் கூற மொத்த வீடும் குலுங்கி சிரித்தது.

“ச்சீ போடா உனக்கு இந்த ரெண்டு பொண்ணுமே செட் ஆகாது” சபித்து அவன் முன்னாள் வருண் கைபேசியை வைக்க சிரிப்போடு எடுத்தான் அர்ஜுன்.

முதலில் இருந்த பெண்ணை பார்த்தான், எம்.எஸ் சர்ஜென். பார்த்த உடனே மறுக்க தோணாமல் ஒத்துக்கொள்ளும் அழகு முகம். அடுத்த பெண்ணை பார்த்தான்.

உடனே அடையாளமும் கண்டுகொண்டது புத்தி. டெல்லியில் அவன் படித்த பொழுது அவனுக்கு ஜுனியராக இருந்த பெண்.

சிறு தவறு கூட கூற முடியாத பளிங்கு போன்ற அழகிய முகம். ஜெனரல் சர்ஜெரி பிரிவு அவனுக்கு தெரிந்து. அர்ஜுன் கவனத்தை கூட பல நேரங்களில் எளிதாக கவர்ந்துவிடுவாள் சிறு சிரிப்பிலே. நான்கு ஆண்டுங்கள் முன்பு பார்த்ததை விட இப்பொழுது இன்னும் அழகாய் இருந்தாள்.

“இந்த பொண்ணுங்களோட அப்பா என்ன பன்றாங்க?” – அர்ஜுன்

“முதல இருக்குற பொண்ணு பேர் கீர்த்தி. அப்பா சிமெண்ட் பிஸ்னஸ். அம்மா ஸ்டாக் மார்க்கெட் பிஸ்னஸ் சின்னதா பண்றங்களாம். தம்பியும் இப்போ டாக்டர் பைனல் இயர் பன்றான். பீடியாட்ரிசன் டாக்டர், நல்ல பேமிலி, தங்கமான பொண்ணு, முக்கியமா நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு” – ராமகிருஷ்ணன்

“அப்போ என்ன மாமா, பேசிடலாம். நம்மள்ல யாரும் சைல்ட் ஸ்பெசலிஸ்ட் இல்ல. வசதியா போச்சு, கடைசி வர சபைல நின்னு செய்ய தம்பி கூட இருக்கான்” சந்தோசமாக பானு கூறினார், அவருக்கோ தனக்கு துணியாக தன்னுடைய மருமகள் இருப்பாளென ஆசை.

“ம்மா வெயிட் பண்ணுங்க”

அன்னையை அடக்கியவன் தாத்தாவை பார்த்தான், “ரெண்டாவது பொண்ணு?”

“பேர்…” தாத்தாவை முந்தி, “அஞ்சு ஸ்ரீ. தெரியும் என் காலேஜ்ல படிச்சா. பேமிலி டீடெயில்ஸ்?”

அவனை கூர்மையாய் பார்த்தவர், “அப்பா பார்மசியுடிகல் கம்பெனி வச்சு நடத்துறாங்க, நம்ம ஹாஸ்பிடல்க்கு சப்ளை பன்றாங்கள்ல பிரீமியம் மெடிகேர், அவங்க தான். அம்மா ஹவுஸ் வைப் தான், கூட பொறந்தது யாருமில்ல. சிங்கள் ச்சைல்ட். ஆனா அவங்க குடும்பம் பெருசா சொந்தம் பந்தம்ன்னு இருக்க மாட்டாங்க போல”

“இந்த பொண்ண பேசி முடிங்க தாத்தா” அஞ்சுஸ்ரீயை காட்டி கூறினான்.

“அர்ஜுன், இது லைப். பிஸ்னஸ் இல்ல” தந்தை மகனை நிறுத்தினார்.

“எக்ஸாட்லி அர்ஜுன். எனக்கு நீ பிஸ்னஸ் மைண்ட்ல பேசுறியோனு இருக்கு. யோசிச்சு முடிவெடு” என்றார் பரிமளாவின் கணவன் சுந்தர்ராஜன்.

“உண்மையும் அது தான் மாமா, டேப்லட்ஸ் தயாரிக்கிற ரேட்க்கு வாங்குறதெல்லாம் எவ்ளோ பெரிய விசியம் தெரியுமா ப்பா? கால் வாசி லாபம் நமக்கு. அதோட ஒரே பொண்ணு.

மொத்தமும் எனக்கு தான் வரும். ஆல்சோ ஐ க்நோ ஹெர். என்னோட ஜூனியர். எனக்கும் அவளுக்கும் கண்டிப்பா செட் ஆகும். பர்சனல் அண்ட் ப்ரோபஸ்னல் ரெண்டுமே சரியா அமைஞ்சா வேற என்ன எங்களுக்குள்ள பிரச்சனை வர போகுது” அனைவர் முகத்தை பார்த்து கேள்வி கேட்க அவன் கூறுவதும் சரியாக பட்டது.

“காசு பணம் தான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டியா அர்ஜுன்?” அமைதியாக இருந்த ராதா பேரனை பார்க்கவும் ஒரு நொடி அவரது ஆழ்ந்த பார்வை அவன் முடிவையே சந்தேகப்படுத்தியது.

“நான் என்னைக்குமே பணத்தை பெருசா யோசிச்சதில்ல பாட்டி. என்னால வேற ஹாஸ்பிடல்ல வேலை பாத்து கூட ஒரே மாசத்துல மினிமம் மூணு லட்சம் சம்பாதிக்க முடியும்”

“அப்போ சந்தோசமான வாழ்க்கையை தேடிக்கோ அர்ஜுன், உனக்கே உனக்காக. உன் படிப்புக்காக, உன் ஹாஸ்பிடல்-னு பாக்காம, அர்ஜுன் வீட்டை, அர்ஜுன் மனச பாக்குற பொண்ண நாங்க தேடுறோம்”

ராதா கூறியதை அமைதியாக கேட்டவன் மனம் மாறிவிடும் என பெரியவர்கள் எண்ணியிருக்க அஞ்சு ஸ்ரீயின் அழகு அவனை வீழ்த்தியிருந்தது,

“வேணாம் பாட்டி. எனக்கு இது தான் சரியா வரும். பேசிடுங்க, எப்போ வேணாலும் கல்யாணம் வைங்க, எனக்கு பிரச்சனை இல்லை” அவ்வளவு தான் பேச்சு என அனைவரிடமும் கூறி தன்னுடைய அபார்ட்மெண்ட் நோக்கி புறப்பட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!