Skip to content
Post Views: 4,183
இலக்கியாவிற்கு நெஞ்சம் பதைபதைத்து. மற்றவர்களிடம் சரியாக பேசாவிடினும், அர்ஜுனிடம் அவள் காட்டும் நெருக்கம், அவர்கள் வாழ்க்கையில் எந்த விதமான பிரச்னையும் வராது என எண்ணையிருக்க, அவள் சிந்தனையில் இப்படி ஒரு அழுக்கான எண்ணம் உள்ளதென நம்ப முடியவில்லை.
குடும்பமாக திட்டமிட்டு ஒரு பெரிய நிறுவனத்தையே வீழ்த்தும் செயல் அல்லவா இது?
“சிஸ்டர் என்னாச்சு?” நடுக்கத்துடன் படிகளில் இறங்கிய இலக்கியாவை அக்கறையாக பார்த்து கேட்டாள் அங்கு புதிதாக சேர்ந்திருந்த சுதிக்ஷா என்னும் பெண் கவலையோடு.
பிரமை பிடித்திருந்த இலக்கியாவிற்கு வார்த்தை வரவில்லை. ‘இல்லை’ என தலை அசைத்தும் முகத்தில் வழியும் அந்த வியர்வை அவள் சரியில்லை என காட்ட, “தண்ணி கொண்டு வரவா சிஸ்டர்?” மேலும் கேட்டாள் அந்த பெண்.
Advertisement
தன்னை மீட்டு முகம் உயர்த்தி பார்த்த இலக்கியா சன்னமான சிரிப்போடு, “தங்க்ஸ், வேணாம்” என லாக்கர் ரூம் நோக்கி செல்ல அவளை தனியாக விட மனம் வராமல் பின்னாலே சென்றாள் அந்த பெண்.
“ஏதாவது ஹெல்த் ப்ராப்லம்மா சிஸ்டர்? டாக்டர்கிட்ட போகலாமா?”
“இல்ல நான் நல்லா தான் சிஸ்டர் இருக்கேன். காலைல சாப்பிடல அதான் கொஞ்சம் மயக்கம் வர்ற மாதிரி ஆகிடுச்சு” எனவும் அந்த பெண் இலக்கியாவிற்கு தண்ணீர் கொடுத்தாள்.
Advertisement
சில நேரம் ஆசுவாசமடைய ஒரு செவிலியர் மூலம் அர்ஜுன் அழைப்பதாக தகவல் வர உடனே எழுந்து சென்றாள். வெளி நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைக்காக வந்திருக்க அதை கவனிக்கும் வேலை கொடுத்து அனுப்புகினான் அர்ஜுனன்.
Advertisement
அந்த தீவிரத்தில் இருந்தாலும் மனம் ஒன்றாமல் வேலை செய்வது போல் தவித்தது இலக்கியாவிற்கு. யாரிடம் இதை கூறி விடை தேடுவது? பெரியவரிடம் கூறிவிடலாமா என யோசித்தாள்.
மற்றவரிடம் கூறுவதை விட அவரிடம் தகவல் போவது தான் சரியாக பட்டது, வீட்டின் மூத்தவர் என்னும் பொழுது பல கோணங்களில் அலசி ஆராய்ந்து நிதானமாக முடிவெடுப்பார் என தோன்ற அவரை எப்பொழுது பார்த்தாலும் தகவலை காதில் போட்டுவிட முடிவெடுத்து நிதானமானாள்.
இலக்கியா யோசித்ததை விட நேர் மாறாக சென்றது அதன் பிறகான நாட்கள்.
Advertisement
அஞ்சுஸ்ரீ பற்றிய உண்மை தெரிந்ததும் ராமகிருஷ்ணனிடம் தகவல்களை கூற வேண்டும் என்றே ஒரே நாளில் குறைந்தது மூன்று முறையாவது மேல் தளம் சென்று அவரை தேடும் அவள் கண்கள்.
அதே போல் அஞ்சுஸ்ரீ மருத்துவமனை வரும் நேரங்களில் எல்லாம் தன்னுடைய வேலையை விட அவளை கவனிப்பதே வேலையாகிப் போனது. பின்னாளில் அதுவே பெரிதாகி அவர்கள் மருத்துவமனையிலே அஞ்சு ஸ்ரீ வேலை செய்ய துவங்கிவிட, அடுத்த செய்தியாய் அவர்கள் திருமணமும் இன்னும் ஒரு மாதத்தில் என வர தலையே சுற்றியது பெண்ணுக்கு.
எந்த வேலையும் சரியாக ஓடாமல் ராமகிருஷ்ணனையே எதிர் பார்த்து ஒரு மாதம் ஓடியிருந்தது. பலமுறை ஏதேனும் சாக்கு ஒன்றை கூறி அஞ்சுஸ்ரீ இருக்கும் பிளாக் சென்று அவளை கவனித்த இலக்கியாவிற்கு, அவள் அடிக்கடி மருந்துகளை வைத்திருக்கும் ஸ்டாக் ரூம் சென்று வருவது தெரிந்தது.
இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்னும் நிலை வர, ராமகிருஷ்ணன் திருமண வேலை, பத்திரிகை கொடுத்தல் என மகன் மருமகளுக்கு இருக்கும் வேலையை பார்த்து தானே எல்லா பக்கமும் சென்று வர வேண்டி இருக்க,
மருத்துவமனை வர முடியாமல் போனது. மருத்துவமனையின் மருந்துகளை பராமரிக்கும் அறைக்கு செல்ல அஞ்சு ஸ்ரீயின் தந்தைக்கு முழு அதிகாரமும் கிடைத்துவிட, மிகவும் உல்லாசமாக வளைய வந்தாள்.
இதில் அர்ஜுன் அறைக்குள் செல்லும் பொழுது சில நேரம் அவள் அவனோடு காட்டும் நெருக்கம் வேறு மனதை குத்தி கிழிக்க, தலையை தூக்கி அர்ஜுன் முகத்தை பார்க்காமல் வந்த வேலையை முடித்து அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியேறிடுவாள்.
சாதாரண நாட்களிலே அவன் பேச்சு அளந்து தான் வரும், இப்பொழுது அவனிடம் வேலை சார்ந்த சந்தேகங்களுக்கு கூட இலக்கியா அரிதாக செல்ல இருவருக்குமான பேச்சுவார்த்தை இன்னமும் குறைந்து நலிந்து போனது.
இடையில் வருண், தர்ஷன் வந்து இலக்கியாவிடம் பேச்சை வளர்க்க சூசகமாக நழுவி சென்றிடும் அந்த பெண் மீன்.
“இலக்கியா ஆபரேஷன் க்ளவ்ஸ் எல்லாம் தீந்து போச்சு மெடிக்கல்ல இருந்து கொஞ்சம் வாங்கிட்டு வந்துடுங்க”
ஒருவர் நினைவு படுத்தி செல்ல மருத்துமனை மெடிக்கல் சென்ற இலக்கியா க்ளவ்ஸ் மற்றும் தேவையான மற்ற பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த நேரம், “ஜெல் பேட் ஸ்டாக் இல்ல சிஸ்டர், நான் அனுப்பி வைக்கவா?” அங்கிருந்த ஒருவன் கூட்டம் கருதி கேட்க இலக்கியாவிற்கு இது ஒரு சாக்காகி போனது.
“இருக்கட்டும் சார், நான் போய் வாங்கிட்டு வர்றேன்” என கூறி ஸ்டாக் ரூம் செல்ல அங்கு இவளுக்கு முன்பாக தந்தையோடு வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தாள் அஞ்சு ஸ்ரீ.
அவளை பார்த்து பெயருக்கு வணகத்தை வைத்து தேவையான பொருளை அங்கிருந்த நபரிடம் கூறி வாங்கும் சாக்கில் அவ்விடத்தை நோட்டம் விட, சந்தேகத்திற்கினங்க ஒரு ஒரு வகை மருந்து மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது.
மற்ற மருந்து பெட்டிகள் சரியாக ஒரே வரிசையில் நேர்த்தியாக இருக்க அதனை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவல் இலக்கியாவிற்கு அதிகம் வந்தது.
கால்கள் தன்னாலே அவ்விடம் நோக்கி நகர அந்த பெட்டியின் வெளியே இருந்த ‘ரிகிரியேஷனல் ஹைட்றோகிளோராய்ட் கிராக் (Recreational Hydrochloride Crack)’ என்னும் அதன் பெயரை வாசித்த இலக்கியா அதனை எடுக்க சென்ற நேரம்,
“இலக்கியா உள்ள வர உனக்கு பெர்மிஷன் யார் குடுத்தா?” குரலை உயர்த்திக்கொண்டு வந்த அஞ்சுவின் கண்கள் தீயாய் இருந்தது.
“சாரி டாக்டர்” அவள் எடுக்க சென்ற பெட்டிக்கு அருகில் இருந்த வேறொரு மருந்து பெட்டியை எடுத்தவள், “மெடிசின் எடுக்க வந்தேன்” என சமாளித்தாள்.
இலக்கியா கையிலிருந்த மருந்தை வாங்கி பார்த்த அஞ்சு ஸ்ரீ அவள் எடுத்தது நரம்பியல் சார்ந்த மருந்து தானா என்பதை சந்தேகத்தோடு ஆராய, சரியாக இருந்தது.
இலக்கியா அதை கவனித்து தானே அந்த இடத்திற்கு வந்தது… “சரி கெளம்பு” என்ற அஞ்சுவை உன்னிப்பாக பார்த்த இலக்கியா மனதில் அத்தனை கேள்விகள்.
இது வெளி நோயாளிகளை கவனிக்கும் நேரம், நிச்சயம் அவள் துறைக்கு இது போல் நிற்க கூட நேரம் கிடைக்காத பொழுது.
அப்படிப்பட்ட நேரத்தில் இவ்வளவு சாவகாசமாக இவள் நிற்கிறாள் என்றால் நிச்சயம் ஏதேனும் வேலை அவள் தந்தைக்காக செய்திருக்க வேண்டும்.
அதோடு தான் இது போல பல முறை அந்த இடத்திற்கு வந்த பொழுதெல்லாம் உள்ளே சென்று இலக்கியாவே தனக்கு தேவையானதை எடுத்துள்ளாள், இப்பொழுது மட்டும் என்ன திடீர் தடை?
யோசனையோடு தன்னுடைய பிளாக் வந்தவளுக்கு அந்த நொடி தான் உரைத்தது கிராக் என்பது கொக்கைனை குறிக்கும் வேறொரு சொல்.
வேகமாக அர்ஜுன் அறைக்கு சென்ற இலக்கியா கதவை கூட தட்டாமல் புயல் வேகத்தில் உள்ளே செல்ல, அங்கு அவனின் சகோதரர்கள் அமர்ந்திருந்தனர்.
தடாலென திறந்த கதவின் பக்கம் மூன்று ஜோடி கண்களும் திரும்ப, “ராமகிருஷ்ணன் சார் எப்போ சார் வருவாங்க?” கேள்வி அர்ஜுனிடம் வைத்தாள் மூச்சு வாங்கிய குரலில்.
புருவத்தை தூக்கி, “அவரை ஏன் நீ பாக்கணும்?” என்றான் மறு கேள்வியாய்.
“ஒரு முக்கியமான விசியம் பேசணும் சார், அவசரம்”
“ஏன் இலக்கியா இப்டி வேற்குது? ஜஸ்ட் சிட்” என வருண் சொல்ல தர்ஷன் ஒரு நாற்காலியை அவள் நோக்கி திருப்பினான்.
இருவரையும் முறைத்த அர்ஜுன் அவளிடம், “அத என்கிட்டே சொன்னா ஆகாதா?” என்றாரன் காட்டமாக.
அஞ்சுஸ்ரீ மேல் பித்தாகி மயங்கி நிற்கும் அவனிடம் எப்படி அவளின் தவறை இலக்கியாவால் கூற முடியும்?
“கமான் அர்ஜுன், ஏன் இப்டி ஸ்ட்ரிக்ட் ஆபிஸ்ர் மாதிரி இருக்க? நீ வந்து ஒக்காரு இலக்கியா” எழுந்து சென்று தண்ணீர் பாட்டிலை அவள் கையில் திணித்தான் ப்ரியதர்ஷன்.
அவன் செய்கையில் எந்த வித தவறான பார்வையும் இல்லை, ஆனாலும் வம்படியாக வந்து பேசுபவனிடம் லயிக்காத அவள் மனதிற்கு தீங்கு செய்யாமல் சுமூகமாக மறுத்தாள்.
“வேணாம் சார்” என அர்ஜுன் பக்கம் திரும்பி, “ப்ளீஸ் சார்” என்றாள் கெஞ்சலாய்.
“ஹி இஸ் பிஸி. என்கிட்ட என்னனு சொல்றதா இருந்தா சொல்லு இல்லையா, யூ மே வாக் அவுட்” என்றான் கையிலிருந்த நிர்வாகம் சார்ந்த ஒரு கோப்பை ஆராய்ந்து.
வேளையில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் அதிகம் அஞ்சு ஸ்ரீக்கு, அவள் தந்தைக்கோ மொத்த வளாகமும் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது போல் எந்நேரமும் எவ்விடத்திற்கும் செல்லும் அதிகாரம்.
காரணம் அர்ஜுனை மணக்கும் பெண்ணின் தந்தை என்பதால் தானே? ஒருவேளை அந்த அதிகாரம் பொய்யானால், இருவரும் இந்நிறுவனத்தை சுயநலனிற்காக பயன்படுத்த முடியாதல்லவா?
ஒருவேளை தான் பார்த்தது போதை பொருளாக இல்லாவிடினும் அன்று அவள் பேசியது இதை பற்றி தானே, அழைத்து சென்று காட்டிவிடலாம் என்ற வரவழைத்த நம்பிக்கையோடு அவனிடமே சொல்ல முடிவெடுத்தாள்.
சில நிமிடங்களாகவே தீவிர யோசனையில் இருந்தவளை விழி உயர்த்தி பார்த்த அர்ஜுன் மீண்டும் தன்னுடைய வேலையில் மூழ்க, அவளை பார்ப்பதையே வேலையாக வைத்திருந்தனர் வருணும் தர்ஷனும்.
“நேரமாச்சு கெளம்பலையா?” இருவரையும் பார்த்து அர்ஜுன் வினா எழுப்ப,
“நீ மட்டும் பாக்குற?” இலக்கியாவை சுட்டிக்காட்டி குரலை தாழ்த்தினான் வருண் எரிச்சலாய்.
பற்களை கடித்து, “ஒழுங்கா கெளம்பிடுங்க, இல்ல ஒரு மாசத்துக்கு நைட் டியூட்டி தான்” எனவும் வேகமாக எழுந்து போகும் பொழுது இலக்கியாவிற்கு டாட்டா காட்டிய பிறகே வெளியே நகர்ந்தது அவர்கள் கால்கள்.
“இப்ப சொல்லு, என்ன பிரச்சனை உனக்கு” கோப்பை மூடி வைத்து சிஸ்டம் கிளாஸ் அணிந்து தன்னுடைய கம்ப்யூட்டரில் ஏதோ வேலை பார்க்க துவங்கினான்.
ஒரு வேகத்தில் அவனிடம் உண்மையை சொல்லிவிட துணிந்தாள் தான், ஆனால் இப்பொழுது கணீரென ஒலிக்கும் அவன் குரலின் ஆளுமையில் பயம் கூடியது.
“அஞ்சு மேம நீங்க கல்யாணம் பண்ணாதீங்க சார்” சட்டென கூறிவிட்டாள் கண்களை மூடி.
தகவல்களை தட்டிக்கொண்டிருந்த அர்ஜுனின் கைகள் அப்படியே காற்றில் நின்றது.
தலையை திருப்பி அவள் முகம் பார்த்தான், “கம் அகைன்” என.
அவன் தீ பார்கவியில் அனலில் நின்றவள் மனம் அந்த தீ தன்னை பொசுக்கினாலும் கவலை இல்லை என்னும் நிலைக்கு சென்றிருந்தது.
“அவங்க வேணாம் சார், அந்த குடும்பமே பித்தலாட்டம் பன்றாங்க” – இலக்கியா
“ஓ” என்றான் நம்பாத கோப குரலில்.
“சார்… எனக்கு தெரியும் நீங்க என்ன நம்ப மாட்டீங்கனு ஆனா நான் சொல்றது உண்மை சார். அவங்க பேசுனது நான் என் காதலயே கேட்டேன்” தன்னை நம்ப மாட்டானா என தவித்தது அவள் உள்ளம்.
“அப்டி என்ன கேட்டீங்க மேடம்?” என்றான் கண்ணாடியை அவிழ்த்து நேராய் அவளை பார்த்தான்.
“அஞ்சு மேடம், அவங்க அப்பாகிட்ட பேசுனத கேட்டேன் சார். நம்ம ஹாஸ்பிடல் வச்சு ஏதோ ட்ரக்ஸ் மாத்துறதா பேசிக்கிட்டாங்க” அவள் கூறிய பதிலில் ஆத்திரமாக மேஜையிலிருந்த கடிகாரத்தை எடுத்து தரையில் எரிய, துண்டு துண்டாக சிதறியது.
“ஏய் வார்த்தையை அளந்து பேசு, ஷி இஸ் மீ பியான்ஸி. இந்த ஹாஸ்பிடல் ஒருநாள் அவளோடதாக போகுது” கடிகாரம் சிதறியதிலே அரண்டு போன பெண், அவன் எச்சரிக்கையில் இன்னும் பயந்தாள்.
“நான் கேட்டது பொய்-னு சொல்றிங்களா சார்?” கலங்கியது அவள் விழிகள்.
“நீ என்ன கேட்டியோ எனக்கு தெரியாது, நீ பேசுறது அப்பட்டமான பொய். வெளிய போய்ட்டு, இதுக்கு மேல நீ இங்க இருந்தா என்னால என்னோட கோவத்தை கண்ட்ரோல் பண்ண முடியாது” – அர்ஜுன்
error: Content is protected !!