Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nizhalmugam

நிழல்முகம்:12

ஷாரிக்கா தனது அலுவலகத்தில் அமர்ந்து மெயில் செக் செய்து கொண்டிருந்தாள்…அப்போது,”மே ஐ கம்மின் ” என்று கதவை தட்ட, “எஸ் கமின்” என்றாள் ஷாரிக்கா…

 

உள்ளே வந்த கண்ணனை கண்டவள்,வாங்க சார் என்றாள்…

 



Advertisement

மேடம் ஒரு சின்ன என்கொயரி.. உங்க ஸ்டாப்ஸ் எல்லார்கிட்டேயும் ஒரு சின்ன விசாரணை பண்ணனும்..உங்க ஸ்டாப்க்கு இன்பார்ம் பண்ணிடுங்க என்றார்….கவிலாஷ் தாமோதரை தேடும் பணியை இவரிடம் ஒப்படைத்திருந்தான்..

 

ஒகே..சார்,என்றவள் அனைவரிடமும் கண்ணனின் வருகையை தெரிவித்தாள்….

Advertisement

 

Advertisement

அடுத்த பத்து நிமிடத்தில் ஒவ்வொரிடமும் தாமோதரை பற்றி விசாரித்தார்…

 

வளர்மதி நீங்க சொல்லுங்க…தாமோதர் சார நீங்க எப்போ கடைசியா பார்த்தீங்க…

Advertisement

 

சார்,சார் காணாம போன அன்னைக்கு நைட் நான் தான் ஒரு புரோகிராம் ரெடி பண்ண வேண்டியதா இருந்தது..ஆனா அன்னைக்கு என் குழந்தைக்கு உடம்பு சரியில்லனு அந்த ப்ரோகிராம மித்ராகிட்ட குடுத்துட்டு போய்டேன்…நான் வெளியே கிளம்பி போகும் போது பாஸ் உள்ளே வந்தார்..அப்போ பார்த்தது தான் சார்..அதுக்கு அப்புறம் நான் பார்க்கவே இல்ல….

 

ஒகே..நீங்க போய்ட்டு அந்த மித்ராவ வர சொல்லுங்க…

 

சாரி சார்..மித்ரா மறுநாளிலிருந்து ஆபீஸ் வரவே இல்ல…

 

வா…..ஆட்…என்று அதிர்ந்தவன்,அவுங்க அட்ரஸ் தெரியுமா?என்றான்…

 

நோ. சார்..மேடமோட ரெக்கமண்டேசன்ல தான் அவுங்க ஜாயின் பண்ணாங்க…

 

ஒ..அப்படியா.ஓகே..நீங்க கிளம்புங்க என்றவன் ஷாரிக்காவின் அறைக்குள் நுழைந்தான்…என்னாச்சு சார் எதாவது தகவல் கிடச்சுதா….

 

ம்ம்..என்றவர் மித்ரானு யாருக்காவது ரெக்கமண்ட் பண்ணிங்களா….

 

ஆமா சார்…என் ப்ரண்ட் சுகன்யாவோட ப்ரண்ட்..என்றாள்….

 

அவுங்க இப்போ ஒர்க் பண்ணலயா..?

 

நோ சார்..அவளுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லைனு வேலைய விட்டு நின்னுட்டா….

 

ஒ…கெய்….அவுங்க அட்ரஸ் கொஞ்சம் கொடுக்க முடியுமா?

 

கண்டிப்பா சார்,என்றவள் அவளுடைய அட்ரஸை கொடுத்தாள்…

 

ஒகே…தாங்க் யூ என்று கூறிவிட்டு எழும்பும் போது,ஆ……………ஆஆ என்ற அலறல் சத்தம் கேட்க, சத்தம் வந்த திசையை நோக்கி ஒடினர்….

 

சார் சத்தம்  ஸ்டோர் ரூமிலேருந்து வருது என்று கத்திக் கொண்டே இருவரும் அங்கு ஒடினர்…

 

கதவு திறந்து கிடக்க, இருவரும் மெல்ல அடிவைத்து உள்ளே சென்றனர்..கண்ணன் தன் பார்வையை அறை முழுவதும் ஒடவிட்டான்..அங்கு ஒரு மூலையில் ஒடுங்கி போய்,முகமெல்லாம் வியர்த்து வழிய,நடுங்கி கொண்டு அமர்ந்திருந்தார் அங்கு பணிபரியும் துப்புரவு பணியாளி சாரதம்…

 

அவரின் அருகே சென்று,மா என்னாச்சு,எதுக்காக சத்தம் போட்டீங்க,

 

அ. அ..ங்..க….

 

அங்க என்ன?

 

அங்க….அதுக்கு மேல் அவருக்கு வார்த்தை வரவில்லை…அவர் கை காட்டிய திசையில் செல்ல,குப்பென்ற நாத்தம் குடலை பிரட்டியது..தனது கை குட்டயை எடுத்து முகத்தில் கட்டி கொண்டு,மெல்ல அடி வைக்க, அங்கே சிதறி கிடந்த பழைய பொருட்களுக்கு நடுவே,உடல் அழுகி போய் கிடந்தார் தாமோதர்…அவர் உடலை சுற்றி,எறும்புகளும்,ஈக்களும் மொய்க்க, அவரை பார்க்கவே அருவருப்பாய் இருந்தது அவருக்கு…அடுத்த பத்தாவது நிமிடம் அந்த அலுவலகம் முழுவதுமே போலீஸார் நுழைந்திருந்தனர்…அவரது உடல் போஸ்மாட்டத்திற்கு எடுத்து செல்ல பட்டது…ஷாரிக்கா பார்த்ததை நம்ப முடியாமல் சிலையாய் அமர்ந்திருந்தாள்….

 

 மருத்துவமனையில்,சார் பாடி ரொம்ப நாளா அப்படியே கிடந்ததுல்ல டி கம்போஸ் ஆயிருக்கு..அவரோட தலையில யாரோ  கண்ணாடில அடிச்சிருக்காங்க…அதுல அவரோட பின்தலையில கண்ணாடி பட்டு மண்டை உடஞ்சி போயிருக்கு…என்றார்…

 

அவர் கூறியதை கேட்டு,கவி,ப்ரணா,கண்ணன் மூவரும் அதிர்ந்து போய் நின்றனர்…

 

டாக்டர்,இந்த சம்பவம் எத்தனை நாளைக்கு முன்னாடி நடந்துருக்கும்…என்றான் ப்ரனேஷ்…

 

பாடி கன்டிசன வச்சி பாக்கும் போது,இது நடந்து ஒன் வீக் இருக்கலாம்…

 

அவர் கூறி முடித்த, அடுத்த ஒரு மணி நேரத்தில் தாமோதரின் உடல் அவருடைய வீட்டிற்கு அனுப்ப பட்டது…தாமோதரின் இறுதி காரியங்களை நண்பர்கள் இரண்டு பேருமே முன்நின்று நடத்தினர்..சுபத்ரா அழுது அழுது கண்கள் சிவந்து,சோர்ந்து போய் அமர்ந்திருக்க, அதற்கு மாறாக ஷாரிக்கா கலங்காமல் வீட்டின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு,வேலையாட்களிடம் வேலை வாங்கி கொண்டிருந்தாள்..அவளது செயலில் நண்பர்கள் இருவரும் திகைத்து விழித்தனர்..

 

ஹேய் ஷாரிக் என்ன பண்ணிட்டு இருக்க நீ…என்றான் கவி…

 

பாத்தா தெரியலயா…சமையல் செய்துட்டு இருக்கேன்…

 

அது தெரியுது..அப்பா இறந்து முழுசா ஒரு நாள் கூட ஆகல..அதுக்குள்ள இதெல்லாம்…

 

சட்டென திரும்பியவள்,அவனது முகத்தை நேருக்கு நேர் பார்த்து,இதோ பாரு கவி என்னோட அப்பா செத்து ஒன் வீக் மேல ஆச்சு..ஆனா அவரோட உடம்பு இப்போதான் கெடச்சிருக்கு…அதுக்காக அழுதுகிட்டே இருந்தா எல்லாம் சரியாயிடுமா..நான் அழுதா அவரோட ஆத்மா சாந்தியடையுமா..?அடையாது..கண்டிப்பா சாந்தி அடையாது..அப்படி அடையனுனா என்னோட அப்பாவ கொன்ன அந்த கொலக்காரன என் கையாலே சதக்..சதக்னு குத்தி கிழிச்சா தான் என் அப்பா ஆத்மா சாந்தி அடையும்..அப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு என் அப்பாவுக்காக நான் அழுவேன்..அதுவரைக்கும் என் கண்ணிலேருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராது என்று தீர்க்கமாய் கூறியவள்,அவ்வளவு தான் என்பது போல் தன்வேலையை பார்க்க தொடங்கினாள்…

 

அவளது இந்த மாற்றத்தை கண்டு இருவரும் அதிர்ந்து போய் நின்றனர்..இது அவர்களுடைய தோழி ஷாரிக்கா இல்லை..முற்றிலும் வேறொருத்தியாய் மாறி நின்றாள்..அவளது விழிகள்!!அதில் நிறைந்திருந்தது எல்லாம்,கோபம்!வைராக்கியம் மட்டுமே!!இதழ்களில் புன்னகை இல்லை.அவள் முகத்தில் எங்கும் மகிழ்ச்சி இல்லை.வதனத்தில் ஒரு வித கம்பீரம்!!தான் சொன்னதை நடத்தி காட்டுவேன் என்று…அவளுடைய இந்த மாற்றத்தை கண்டு இருவரும் அரண்டு போய் தான் நின்றனர்…

 

இரவு மணி பத்தானது…

 

சமி அங்கு இருந்த தோட்டத்தில் அமர்ந்து அந்த நிலவை ரசித்து கொண்டிருந்தாள்…அவளுடைய மனம் ஏனோ அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது…வானத்து விண்மீண்கள் அவளை பார்த்து கண் சிமிட்டுவது போலவே தோன்றியது…எதையோ சாதித்தது போல் ஒரு வெறி..அவளால் தன் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை…

 

சட்டென அவளுக்கு ப்ரனேஷின் ஞாபகம் வந்தது. அவனை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது…அவனை பார்க்காமல் அவள் தான் தவித்து போனாள்…இரண்டு நாட்களாக அவனது ஞாபகம் அவளை அதிகமாய் வாட்டி வதைத்தது..அவனின் ஏக்கப் பார்வை அவளை பின் தொடர்வது போலவே தோன்றியது..எங்கே போனாலும்,எந்த இடத்திலும்,எந்த நேரத்திலும் அவனது ஞாபகமாகவே இருந்தது…விழிக்கும் போதும்,குளிக்கும் போதும்,ரவீனாவோடு பேசிக் கொண்டிருக்கும் போதும்,சமையலுக்கு உதவி செய்யும் போதும்,அவளின் கண்களுக்குள் நுழைந்து,அவளது இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டது அவனது முகமும்,அவனது பார்வையும்….விலகிப் பார்த்தாள்..விலக்கி பார்த்தாள்..அவளால் முடியவில்லை..இந்த நிமிடத்தில் கூட தன்னவனையே தான் நினைத்திருந்தாள்…

 

தனிமை வீடு.அன்பாய் பேச துணையில்லாமல் தவித்த தருணம்,நான்கு சுவருக்குள் மட்டுமே அடைந்து கிடந்த தனிமை,தன் ஒற்றை வயிற்றுக்கென தானே சமைத்து,சமைத்ததை தன்னந்தனியாய் அமர்ந்து உண்டு,வாழ்ந்தவளுக்கு  ப்ரனேஷின் காதலும்,அவனுடைய அரவணைப்பும் அவளுக்கு அவ்வளவு மகிழ்சியாய் இருந்தது…அவ்வளவு நேரம் அவனையே நினைத்து கொண்டிருந்தவள்,அப்படியே உறங்கி போனாள்….

 

ப்ரனேஷ் அப்போது தான் வீட்டிற்கு வந்தான்..வந்தவன் தோட்டத்தில் யாரோ அமர்ந்திருப்பதை போல் தோன்ற..அங்கே சென்றான்…அங்கே இருந்த இருக்கையில் தலைசாய்த்து உறங்கி கொண்டிருந்தவளை  கண்டு அதிர்ந்தவன்,”இவ எதுக்கு இங்க வந்து தூங்குறா”என்று நினைத்து கொண்டே அவளை எழுப்ப போக,சட்டென கையை இழுத்தவன்,வேண்டாம்.நல்லா தூங்குறா..எழுப்பி தொல்லை பண்ண வேண்டாம் என நினைத்து,அவளை அலேக்காய் தூக்கினான்…

 

யப்பா பாக்க தான் ஆளு சின்ன சைஸ்ஸா இருக்கா..ஆனா என்னா வெயிட்டு,என நினைத்து கொண்டே அவளது அறைக்கு தூக்கி சென்று படுக்க வைத்து,போர்வையை எடுத்து போற்றி விட்டவன்…. அவளையே சிறிது நேரம் பாத்தான்…. சிறு குழந்தை போல்,உறங்குபவளை கண்டு அவன் மெலிதாய் புன்னகைத்தவன்,திடீரென அவள் நெற்றில் ஒரு முத்தம் வைத்தான்…

 

“அப்போ இங்க பாசு” என்று தன் கன்னத்தை காட்ட ப்ரனேஷ் அதிர்ந்து போனான்.அவன் அவளை நன்கு கவனித்தான்..அவள் உறங்கி கொண்டு தான் இருந்தாள்..தூக்கத்துல உளறிருப்பாளோ? என்று நினைத்தவன், தயங்கி தயங்கி அவளது பட்டு கன்னத்தில் முத்தம் வைத்தான்…

 

அவள் முகத்தில் சிறு  புன்னகை மலர்வதை இவனால் காண முடிந்தது..தூக்கத்தில் கூட என்ன தான் நினச்சிருக்கா,ஆனா லவ்வ மட்டும் சொல்ல மாட்டா,அவ்ளோ பிடிவாதகாரி என்று பொய்யாய் கோபம் கொண்டு,அவளை முறைத்தான்..அடுத்த நிமிடம் அறையை விட்டு வெளியேறினான்..அவனது மனமோ சிறகில்லாமல் வானத்தில் பறந்தது…

 

ப்ரனேஷ் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பட்டென விழித்தாள் சமி…..சுற்றி முற்றிலும் பார்த்தவள்,நான் எப்படி இங்க..நா பாச பாக்க தோட்டத்துல தான குந்தினுருந்தேன்.யாரு இங்க தூக்கியாந்திருப்பா,என்று நினைத்தவள் மெல்ல எழுந்து ப்ரனேஷின் அறையை நோக்கி சென்றாள்… 

 

அவனது அறையில் உறங்கி கொண்டிருந்த அவனை கண்டு நீ  வந்துட்டியா பாசு..அப்போ நீ தான் என்ன என்ன தூக்கிட்டு வந்திருப்ப,என்று நினைத்தவளுக்கு அந்த நினைப்பே சுகமாய் இருந்தது… அவனது தூக்கம் கலையா வண்ணம் 

 தூங்கி கொண்டிருந்த ப்ரனேஷின் அருகில் வந்து அமர்ந்தாள்..அவள் தூங்கும் அவனையே பார்த்து கொண்டிந்தாள்..அவளது மனமோ அவனிடம் கேள்வி கேட்டது..ஏன் பாசு என்னோட லைப்பு குள்ள வந்த.. இந்த உலகத்துல சோக்கான பொண்ணுங்க  இருக்க சொல்லோ உனக்கு ஏன் பாசு என்னய புடிச்சது… உன்னோட அன்புக்கு நான் தகுதியில்லாதவ பாசு….உன்னய எனக்கு அவ்ளோ புடிக்கும் பாசு..ஆனா என்னால எப்படி உன்னை…என்று நினைக்கயிலே அவளது கண்களில் கண்ணீர் கரை கட்டியது.. இந்த சென்மத்துல உன் கூட வாழுற பாக்கியம் எனக்கு இல்ல பாசு..என்று நினைக்கையிலே ,கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவனது முகத்தில் பட்டு தெரித்தது…

 

தன் முகத்தில் ஏதோ விழுவது போல் உணர சட்டென விழித்தவன் எதிரே அமர்ந்திருந்தவளை   பார்த்து அதிர்ந்து போய் “ஏ குல்பி என்னோட ரூம்ல நீ என்ன பண்ற, என்றவன் அப்போது தான் அவளை  கவனித்தான்… அவள் அழுது கொண்டிருந்தாள்…

 

சட்டென அவளது தோலை பிடித்து உலுக்கியவன்,ஏய் குல்பி எதுக்கு அழற, நீ இப்படி என் ரூம்ல வந்து உட்காந்து அழுவுறத யாராவது பார்த்தா,என்னைய தான் தப்பா நினைப்பாங்க..அழுவாத ப்ளீஸ் என்றான்…

 

தன் கண்களை துடைத்து கொண்டவள்,மன்னிச்சிக்கோ பாசு உன்ன பாத்து ரெண்டு நாளு ஆவுதா..அதான் இன்னைக்கு உன்ன பாத்தே ஆவனுனு தோட்டத்துல குந்திருந்தேன்..அப்படியே தூங்கிட்டேன்…அப்பறம் முழிச்சி பாத்தா ரூம்ல இருக்கேன்..அதான் யாரு தூக்கிட்டு வந்திருப்பானு யோசிக்க சொல்லோ,உன் ஞாபகம் வந்தது..அதான் நீ வந்துட்டியானு பாக்க வந்தேன் என்று கூறினாள்…அவள் அவளுக்கே தெரியாமல் அவன் மீது உள்ள காதலை கூறிக் கொண்டிருந்தாள்…

 

அவள் கூறியதை கேட்ட ப்ரனேஷ் மனமோ மகிழ்ச்சியில் துள்ளியது..எனக்காக தான் தோட்டத்துல வெயிட் பண்ணிருக்கா,அவள என்ன தவிர வேற யாரும் தூக்க மாட்டாங்கனு நெனச்சிருக்கா..அப்போ இதுக்கெல்லாம் காரணம் அவ என்மேல வச்சிருக்குற காதல் தானே, என்று நினைத்தவன் மனது துள்ளி குதித்தது….

உன்னையறியாமலே உன் மனசுல நான் இருக்கேனு சொல்லிட்ட..கூடிய சீக்கிரம் உன் வாயால “ஐ லவ் யூ”சொல்ல வைக்கிறேன் என்று நினைத்தவன்,அதான் பாத்துட்டல்ல..நீ கெளம்பு,யாராவது பாத்தா தப்பா நெனைக்க போறாங்க, என்று முகத்தை கோபமாய் வைத்து கொண்டு கூறினான்…

 

சட்டென அவன் இப்படி கோப பட்டதும்,ஒன்றும் புரியாமல் விழித்தவள்,பா..பாசு..என்றாள்…

 

என்ன?

 

எம்மேல கோவமாகீறியா?

 

உன் மேல கோவபட நான் யாரு?

 

அவன் அவ்வாறு கூறியதும்,அவளது கண்கள் கலங்க தொடங்கியது..ஏன் பாசு இப்புடி பேசுற..என்றாள்..

 

வேற எப்படி பேசுறது..நான் சொன்னது உண்மை தான, உன்மேல கோப படுறதுக்கு நான் யாரு?நீ தான் என்ன காதலிக்கவே இல்ல…

 

எங்கூட பேசவே புடிக்கலனு சொன்ன..இப்போ நீயே என்ன பாக்குறதுக்காக இத்தனை மணிக்கு என்னோட அறைக்கு வந்துருக்க…இதெல்லாம் எதனால..எனக்கு ஒன்னும் புரியல..என்றான் அவள் மனதில் என்ன இருக்கு என்பதை அறிவதற்காக…

 

பாசு நீனா எனக்கு இஷ்டம் பாசு..ஆனா இந்த காதல்,கத்தரிக்காலாம் ஒம்மேல வரல பாசு..என்றாள் தனது உள்ளத்தை மறைத்து கொண்டு….

 

அவள் கூறியதை கேட்டு அவனுக்கு கோபம் பொத்து கொண்டு வர, அப்பறம் ஏன்டி இங்க உட்காந்திருக்க..எழுந்திரிச்சு போடி என்று கத்தினான்..

 

அவள் அவனையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்…

 

அவனால் அவளை புரிந்து கொள்ள முடியவில்லை…உன்ன கிளம்புனு சொல்லி ரொம்ப நேரம் ஆகுது…கோவத்தை அடக்கி கொண்டு கூறினான்..

 

அவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல் விடுவிடுவென அறையை விட்டு வெளியேறினாள்…

 

அவள் வெளியேறியதும்,சாரி குல்பி..உன்கிட்ட கோபமா நடந்துகிட்டா தான் நீ அதிகமா என்ன பத்தி நினைப்ப, என்று தனக்கு தானே கூறியவன்,சீக்கிரம் அவளை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையோடு படுத்தான்… 

 

அதேநேரம் தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் கவிலாஷ்..அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது..முதலில் தனது தந்தை கொலை செய்யபட்டு இருக்கிறார்..இப்போது தாமோதர் அங்கிள்..இவுங்க ரெண்டு பேரு சாவுக்கும் எதாவது சம்மந்தம் இருக்குமா?என்று யோசித்தவன்,மருத்துவமனையில் குடுத்த பொருட்களை எடுத்தான்..இதே போல செயின் தான் அப்பா இறந்த இடத்துல கெடச்சிருக்கு..இவருக்கும்,செயின தொலச்சவுங்களுக்கும் எதாவது சம்மந்தம் இருக்குமா,என்று நினைத்தவன்,அந்த புத்தகத்தில் சுருட்டி வைக்க பட்டிருந்த கத்தியை பார்த்தான்..அந்த ஆளு எதுக்கு இந்த கத்திய வச்சிட்டு சுத்துறாரு…ஒன்னுமே புரியலயே ?ஒருவேளை இவர் தான் அப்பாவ கொலை பண்ணிருப்பாரா?இல்லையே,அப்பாவ அடிச்ச ஜாடில இருந்தது ஒரு பொண்ணோட கைரேகைனு டாக்டர் சொன்னாரே..?என்று பலவாறு யோசித்தவனுக்கு மண்டை காய்ந்து போனது…அந்த ஆள் கண் முழிச்சா தான் என்னோட சந்தேகத்துக்கெல்லாம் விடை கிடைக்கும் என்று நினைத்தவன்,கடவுளே,அவர் சீக்கிரம் கண் முழிக்கனும் என்று வேண்டிக் கொண்டு படுக்க சென்றான்..அவன் கூறியது கடவுளின் காதில் விழுந்து,நாளையே அவர் கண் விழிப்பார் என்று ஆசி வழங்கினார்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!