Un Vizhigalin Mozhi Ennavo 9
ஜெய் ஸ்ரீ ராம்
EPI – 9
Advertisement
சென்னை திருவான்மியூர் பீச்
இன்னும் பதினைந்து நிமிடத்தில் புது வருடம் பிறக்கப் போகிறது ழினி, மது, அர்ஜுன், டாலி, மனோ அனைவரும் மணலில் கால் புதைய புதைய நடந்து கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் கடற்கரைக்கு வந்து புதுவருடத்தை ஆரம்பிப்பது சென்னைவாசிகளின் வழக்கம். சென்னை வாசிகள் மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கும் அணைத்து ஊரில் உள்ளவர்களும் இருந்தனர்.
ழினி” பௌர்ணமி நிலவு, இரவு பொழுது கடல் மணலில் கால் புதைய நடக்க அவ்வளவு சுகமாக இருக்கு அஜூ “
Advertisement
என்று கண்களில் காதலோடு கூற, அவனும் அவள் கரத்தை தன் கரத்தோடு இனைத்தான். அவளும் அவன் தோளில் சாய்ந்தபடி நடக்க,
Advertisement
மனோ “எப்பா இவங்க ரொமான்ஸ் தொல்லை தாங்க முடியலைடா சாமி, ஹோ கடல் மாதா இந்த அபலையை ஏற்றுக் கொள்வாய்” என்று தன் இரு கைகளையும் கடலை நோக்கி விரித்து காட்டினான்.
ழினி அவனை முறைக்க, அர்ஜுன் ” டேய் மச்சான் என்னடா என்ன பார்த்து பொறாமைப்பட்ற, என்னோட ரெண்டு மச்சானுக்கும் இதே வேலையா போச்சு, வெயிட் பண்ணுங்கடா உங்களுக்கும் நேரம் வரும்”
மனோ ” ஐயையோ! எனக்கு இதெல்லாம் வேண்டாம், நான் முரட்டு சிங்கிள் ஆக்கும்” என்றான். சட்டைக் காலரை உயர்த்தி.
Advertisement
உடனே மதுவும் “யாரு நீ, அப்போ ஏன்? டா.. ஐ வான்ட்ட கேர்ள் பார் மேரேஜ்னு, அடிக்கடி கத்திக்கிட்டு திரிகிற எருமை “என்று அவனை வசைபாட,
[the_ad id=”6605″]
மனோ ” அதெல்லாம் சும்மா ஜாலிக்காக பாடுவது, கண்டுக்காத அத்தை மகளே ! அவள் தலையில் தட்டி “எனக்கு கல்யாணமே வேண்டாம். கல்யாணம் பண்ணி ஐபிஎஸ் ஆஃபீஸ்ர், ஆயா வேலை பார்க்கிறது, தினமும் கூட இருந்து பார்த்துட்டு, அந்த படுகுழியில் போய் நான் விழுவேன் நோ சான்ஸ் . “
” மனோ மாமா என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். சொன்ன இப்போ வேண்டாம் சொல்றே” என்றது டாலி தன் மழலை குரலோடு.
மனோ “இல்லடி செல்லம். மத்த பொண்ணுங்கள தான் அப்படி சொன்னேன். உன் அத்தை மாதிரி பொண்ணுங்களை, மாமா உன்னை தாண்டி கல்யாணம் பண்ணிப்பேன். என் செல்லம். “என்று நடந்து கொண்டிருந்த அவளை கையில் ஏந்தி கன்னத்தில் முத்தமிட்டான்.
ழினி” டேய் மூணு வயசு புள்ளைக்கு 23 வயசு கிழவன் மாப்பிள்ளையா, குடுடா, என் புள்ளைய, சின்ன பொண்ணு கிட்ட என்ன பேச்சு பேசுறான் பாரு, என்று அவனைக் கடிந்து கொண்டாள்.
டாலி “மாமாவ தித்தாதமா, மாமா கிழவன் ஆனாலும் நான் மாமாவ தான் கட்டிப்பேன். மாமா எனக்கு நிறைய ஐஸ் கிரீம் வாங்கி தருவாங்க, ” என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டது.
மனோ தமிழினியை கெத்தாக பார்க்க, ழினி தலையில் அடித்துக்கொண்டு” அதிகப்பிரசங்கி, அவ அத்தை மாதிரியே வந்து பிறந்து இருக்கா பாரு,” என்றாள் பொய் கோபத்துடன்.
யாழ்பேபி பாவமாக தந்தையை பார்க்க, அர்ஜுன் “அடிப்பாவி, மது மாதிரியே துருதுருவென பாப்பா வேணும் மாமா ன்னு சொல்லிட்டு, இப்போ என் பொண்ணையும் தங்கச்சியும் திட்டிகிட்டே இருக்கியா, வீட்டுக்கு வாடி உனக்கு இருக்கு. ஓகே வா என்பது போல் மகளைப் பார்க்க,
மனோ ” மாமா போதும் ரொம்ப சப்போர்ட் பண்ணாதீங்க, உங்களுக்கு குடுக்குற தண்டனையோடு கவுண்டிங் கூடிக்கிட்டே போகுது, நாளைல இருந்து அக்கா நைட் டூட்டி போயிட போறா,”என்றான் இரகசியமாக,
சட்டென்று நிமிர்ந்து தன் மனைவியின் கோப முகத்தை கண்டவன் “இருந்தாலும் டாலி நீ கொஞ்சம் வாயை கம்மி பண்ணனும்.”அம்மா கோபமா இருக்காங்க பாரு “
மனோ ” ஐயோ! சூப்பர் மாமா டபுள் சைடு கோல் போடுறீங்க, பின்ன ஐபிஎஸ் னா சும்மாவா, என்று கலாய்க்க
அஜூ “டேய் !மாப்பிள்ளை… மாமாவை பார்த்து நோட்ஸ் எடுத்துக்கோடா… பியூச்சர்ல யூஸ் ஆகும் “என்றான் மீசையில் மண் ஒட்டாத பாவனையோடு.
பரிமளா, இவர்களின் உரையாடலை சந்தோஷமாக பார்த்துக் கொண்டு வந்தார்.
மதுதான் முகத்தில் சிரிப்பு இருந்தாலும். மனோ எதார்த்தமாக சொன்ன படுகுழி வார்த்தையிலேயே சுற்றிக்கொண்டிருந்தாள்.
அவள் வந்து ஒரு வாரம் ஆகி இருக்க, அவளை பஸ் ஏற்றி விட்டு சென்றவன் தான். போய் சேர்ந்தாயா என்று கூட கேட்கவில்லை.
அவனிடம் இருந்து பர்த்டே விஷஸ் வரும் என்று நொடிக்கு ஒரு முறை செல்போனை பார்க்க, ஹாப்பி நியூ இயர் கூட வரவில்லை. கண்ணீர் இப்பவா அப்பவா என்று தயாராக இருந்தது.
கடற்கரையில் சரியாக 11 55க்கு பவர் ஆப் செய்து 5 நிமிடம் கழித்து சரியாக 12 மணிக்கு கொடுத்து. ஹாப்பி நியூ இயர் என்ற வாழ்த்தோடு பட்டாசுகள் எரிந்துகொண்டு இருக்கும். இன்றும் அதே போல் பவர் ஆப் செய்த உடனே !அவளை யாரோ!! எலும்பு உடைவது போல இறுக்கி அணைத்து இருந்தார்கள்……….
ஒரு நொடி அதிர்ச்சியானவள். அடுத்த நொடி அனைத்தவரின் உடல் வாசத்தை உணர்ந்தவள். சுதாரித்து அமைதியாக நின்று விட்டால். கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. நெற்றியில் ஒரே ஒரு முத்தமிட்டு அவளை விட்டு விலகி விட்டார்கள்.
அவளுக்குத் தெரியும் அது யாரென்று !அவனின் இந்த வாசத்தோடு தானே மூன்று வருடமாக வாழ்ந்து வருகிறாள்…
ஐந்து நிமிடத்தில் மின்சார ஒளி பரவியதும் சுற்றி முற்றும் பார்த்தால். எங்கும் அவன் இல்லை. பிரமையா என்று தோன்ற, அவள் உடல் வலி உணர்த்தியது உண்மை என்று. இல்லை இங்கு தான் எங்கேயோ இருக்கிறான்,
அடுத்த பதினைந்து நிமிடம் தேடித் தேடிப் பார்க்க எங்குமே அவனில்லை. கடைசியில் கார் அவர்களின் வீட்டை நோக்கி நகர்ந்தது. இருந்த பதட்டத்தில் எல்லாரும் விஷ் பண்ணதை கூட அவள் உணரவில்லை.
[the_ad id=”6605″]
சோகமா காரிலிருந்து இறங்கியவள். சக்தி போர்டிகோவில் நின்றிருப்பதை பார்த்ததும். புயல் போல் வேகமாக அவனை நெருங்கி, “நீங்க பீச்சுக்கு வந்தீங்க தானே”!!!
சக்தி ” என்னடா மாப்பிள்ளை உன் தங்கச்சி இப்படி ஒளர்றா, நான் இப்போ தானே ஊர்ல இருந்து வந்தேன், இதுக்குத்தான் கண்ட நேரத்தில் வெளியில் சுத்த கூடாதுன்னு சொல்றது. உன்னோட பிரம்மை ஒரு அளவே இல்லையா, போ போய் படு, என்றான் முறைப்போடு
” பர்த்டே அன்னைக்கு இப்படி அசிங்கப் பட்டுட்டேன் அவனாவது கட்டிப்பிடிக்கிறதாவது நம்ம பிரம்மை தான் போல, தண்டம் மூஞ்சியைப் பாரு என்று திட்டிக்கொண்டே சென்றுவிட்டாள்.
இவ்வளவு நேரமும் வாய் மற்றவர்களோடு பேசிக்கொண்டு இருந்தாலும் விழியை மதுவின் மேல் வைத்திருந்தவன். “அப்பாடா பிரம்மைனு நம்பிட்டா ஆனாலும் என் முட்டைக்கண்ணி ரொம்ப ஷார்ப் தான். எப்படி கரெக்டா நான் தான் கண்டு பிடிச்சிட்டா, இவ கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.”
மது காலையில் கண் விழிக்கும் போதே 10 மணி எழுந்ததும் அவனை பார்க்க வேண்டும்போல் தோன்றியது. ஐயனார் எவ்வளவு திட்டினாலும் அவனை பார்க்கணும்னு ஏன்தான் தோணுதோ என்று தன்னையே நொந்தவள்.
வீட்டில் ஒவ்வொரு ரூமாக அவனைத் தேட இப்போதும் காணவில்லை.நைட் அவன் வந்ததும் கனவா இருக்குமோ !அம்மாவிடம் வந்தவள் “அம்மா! எனக்கு எதோ ஆகிருச்சு மா, இருக்கு ஆனா இல்லை என,
“என்ன இருக்கு என்ன இல்ல” அவர் நிதானமாக கேக்க, உன் அண்ணன் பையன் என்று சொல்ல வந்தவள்.ஒன்னும் இல்லமா என்றால்.
“யேய் லூசு, போய் குளிச்சிட்டு வா கோவிலுக்கு போயிட்டு வரலாம்.
“அடபாவி…….. பர்த்டே அதுவும் என்ன பொலம்பவிடறயே!!!!!தன் ரூம் சென்றவள். ஏதோ தோன்ற மாடிப்படி ஏறினால். அங்கு கண்ட காட்சியில் ஸ்தம்பித்து விட்டாள்.
மொட்டை மாடி ரூமில் அர்ஜுன், மனோ, சக்தி மூவரும் ஒருவர் மேல் ஒருவர் கை கால்களை போட்டும் கட்டி அணைத்தும் படுத்திருந்தனர். அவர்களைச் சுற்றி காலி சரக்கு பாட்டில்களும் நொறுக்குத்தீனிகளும் இறைந்து கிடந்தது.
” கருமம், கருமம் எருமைமாடுங்க மூன்றும் எப்படி படுத்து இருக்கு என்று திட்டிக்கொண்டே…… மனோவின் கையை நறுக்கென்று கிள்ள,
” ஐயோ! அம்மா” என்று பதறியடித்து எழுந்தான்.
“டேய் மனோ….. நீங்க கெட்டு குட்டிச்சுவரா போங்க, அண்ணாவ ஏன் கெடுக்குறீங்க அதுவும் வீட்டிலேயே…. என்றாள்.முறைத்துக்கொண்டே….
மனோ ” லூசு… அதுக்கு ஏன் என்னைக்கில்னா, நான் வெளியில போலாம்னு தான் சொன்னேன். மாமா தான்” நான் ஐபிஎஸ் வெளியில அடிச்சா கெத்து என்னவாகும்னு பீல் பண்ணாரு அதான் வீட்டிலேயே அடிச்சோம் “
மது “போடா, நானா லூசு……… என் பர்த்டே அன்னைக்கு எல்லாரும் லூசு சொல்றிங்க, ஐ ஹேட் யூ……
பேச்சு குரல் கேட்டு கண் விழித்த சக்தி முதலில் பார்த்த காட்சி இடுப்பில் கைவைத்து முறைத்து நின்றிருக்கும் மதுவை தான்
” வருஷத்தில முதல்நாளே வா இந்த பத்ரகாளிதரிசனம் விளங்கிடும்” என்று முனுமுனுக்க,
மது “ஆமா முதல்நாளில் இதையெல்லாம் அடிங்க விளங்கிடும் என்று அவ்விடத்தை விட்டு கோபமாய் நகர்ந்தால். அவள் செல்வதை பார்த்த சக்தியின் முகத்தில் புன்னகை அரும்பியது.
பிறகு அனைவரும் குளித்துவிட்டு சென்னையில் புகழ்பெற்ற கோவிலான பார்த்தசாரதி பெருமாளை தரிசித்து வந்தனர்
வீட்டில் கேக் கட் செய்து மதுவின் பிறந்தநாளை கொண்டாட அவளுக்குப் பிடித்த பரிசுகளை அனைவரும் அளித்தனர். டாலி கூட டெடிபியர் வாங்கித் தந்தது.
ஆனால் வருடாவருடம் அவள் கேட்கும் ஒரு பரிசை யாரும் தரவில்லை. யாருடன் இருக்க ஆசைப் பட்டாலோ, அவன் சம்பிரதாயமாக கூட வாழ்த்து கூறவில்லை.
வாழ்தே இல்லை என்றால் பரிசு எங்கே? மதிய உணவிற்கு பின் அனைவரும் உறங்க செல்ல மது மனுவோடு வெளியில் செல்ல ஆயத்தமானாள்.
அதைக்கண்ட சக்தி “போய் கிளம்பு நாலு மணிக்கு பஸ். இன்னும் ஒன் அவர் ல நாம கிளம்பனும்.
மதுவிற்கு வந்த ஆத்திரத்தில் பெருங்குரலோடு நான் எங்கயும் வரப்போவது இல்லை” என்றாள்.
“இங்கே பாருடி என்றவன், அத்தை ஹார்ட் பேஷன்ட் தெரியுமில்ல அமைதியா ஒழுங்கா போய் டிரஸ் எடுத்து வை கிளம்பனும். இல்லைனா, என்று நிறுத்தி அவளை கூர்மையாய் பார்த்து ” நான் தூக்கிட்டு போக வேண்டி வரும். இங்கு யாரும் என்னை எதுவும் சொல்ல மாட்டாங்க, உன் வசதி எப்டி “என்று முடிக்க.
” முடியவே முடியாது, நான் வரவே மாட்டேன்.எல்லாம் எப்பவும் உங்க இஷ்டம் தானா, ” அடுத்த ஒரு மணிநேரம் வீட்டில் எல்லோரிடமும் கெஞ்சி கொஞ்சி பார்க்க யாரும் அசையவில்லை. ஃபைனல் செமஸ்டர் வரப்போகுது கிளம்பு என்பதே அனைவரின் பதிலாக இருந்தது.
” எல்லோரும் பொங்கலுக்கு மாமா வீட்டுக்கு வருவீங்க இல்ல, பொங்கல்ல சர்க்கரைக்கு பதிலாக உப்பு அள்ளி போடுறேன்.” என்று இன்ஸ்டன்ட் சபதம் எடுத்து சக்தியோடு கிளம்பினாள்.
அவள் சென்ற பின் வீடு மழை அடித்து ஓய்ந்தது போல் ஆனது.
பஸ் ஏறியது தான் தாமதம் ஸ்லீப்பர் சீட்டில் நன்றாக தலையை சாய்த்து காலை நீட்டி காதில் ஹெட்போன் மாட்டி கண்ணை மூடியவன் தான் திறக்கவே இல்லை.
[the_ad id=”6605″]
அருகில் அமர்ந்திருந்த மதுவிற்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. 21 வயசு புள்ளையை பக்கத்துல வச்சிக்கிட்டு எந்த வயசு பையன் ஆவது இப்படி தூங்குவான் .
அதுவும் பக்கத்து சீட்டில் ஒரு காதல் ஜோடி ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு, அதுவும் அந்தப் பெண். ஆணின் தோலில் சாய்ந்து ஏதோ காதல் மொழி பேசிக் கொண்டிருக்க,
இவளுக்கு இதயம் பற்றி எரிந்துகொண்டிருந்தது. சரியான டியூப் லைட், பர்த்டேக்கு ஒரு விஷ் பண்ணனும் கூட தோணலை. எனக்கு வர்ற கோவத்துக்கு என முணுமுணுத்தவல். சுற்றி முற்றி ஒருமுறை பார்த்துவிட்டு சக்தியின் கையில் நறுக்கென்று கிள்ளினாள்.
அவனுக்கு அது எறும்பு கடித்தது போல் இருந்ததோ என்னவோ கண்ணை திறக்காமலே ஒருமுறை தேய்த்துவிட்டு உறக்கத்தை தொடர்ந்தான்.
சண்டை போட கூட நம்ம கூட அவன் பேசினா தானே போட முடியும். இப்படி கும்பகர்ணனாக இருந்தா என்ன பண்ணித் தொலைக்க என நொடித்தவள்.
அவளும் சீட்டில் தலைசாய்ந்து உறங்கி விட்டாள். அவள் நன்றாக உறங்கி விட்டாள் என்று உறுதிப்படுத்திய பின். அதுவரை தூங்குவது போல் பாவனை செய்து இருந்தவன். அவளை தன் மேல் சாய்த்து முன்னுச்சியில் தன் முத்திரையைப் பதித்தான்.
அவளை அணைத்தார் போல் அமர்ந்து அவள் ஸ்பரிசத்தை நுகர்ந்தவன் அப்படியே உறங்கினான்.
சில மணி நேரம் கழித்து உறக்கத்தின் பிடியில் இருந்தவளை சக்தி தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான். மெதுவாக தன் உணர்விற்கு வர தனது இரு கைகளாலும் சக்தியி ன் சட்டையை இறுக பற்றியவாறு அவனின் நெஞ்சில் சாய்ந்து இருந்ததை கண்டு” சாரி சாரி தூக்கத்தில் தெரியாமல் பிடித்து விட்டேன். “என்று பதட்டமாக துள்ளி எழுந்தாள்.
அது வரை மென் புன்னகையோடு அவளை கவனித்து கொண்டிருந்தவன், “இட்ஸ் ஆல்ரைட் பப்ளி, கம் லெட்ஸ் கோ என்க.
“வாட் அதுக்குள்ள வந்துட்டம்மா என்று மணியை பார்க்க, இரவு ஒன்பது தான் ஆகியிருந்தது. “இன்னும் 2 ஹவர்ஸ் இருக்கே ” யோசனையோடு அவனை பார்க்க, அவளின் பேக்கோடு அவன் இறங்க ஆயத்தம் ஆனான்.
சட்டென்று “பிரியன் என்று அழைக்க, அவன் இறங்கி இவளை வாவென்று கைநீட்ட பேசாமல் இறங்கியவள்.” பிரியன் தெரியாம இறங்கிட்டோம், நம்ம ஊரு வர இன்னும் 2 ஹவர்ஸ் ஆகும்” .
இவள் முடிபதற்குள் பஸ் அவர்களை கடந்து சென்றுவிட்டது. “அச்சச்சோ நைட் டைம்ல பஸ் மிஸ் பண்ணிட்டோமே என்ன பண்றது” டென்ஷனோடு இவள் பேச,
அமைதியாக அவள் கையைப்பிடித்து அங்கிருந்த ஹோட்டலில் நுழைந்தவன் “செம பசி சாப்பிட்டு போலாம் வா “.
“ஹோ, அப்படியா சரி சரி என்றவள் முகம் கழுவி சாப்பிட வர, அவள் சொல்லாமலே அவளுக்கு பிடித்த உணவை வரவழைத்தான்.
இருவரும் உண்டு முடித்து வெளியில் வர, யாரோ ஒருவன் சக்தியிடம் எதையோ தந்து விட்டு சென்றான். என்ன என்று மது கேள்வியாய் அவனை நோக்க,
சக்தி விழிகளால் அங்கே பார் என சைகை காட்ட, சக்தியின் என்ஃபீல்டு அங்கே நின்றிருந்தது…..
” வாவ்…… நாம பைக்ல போக போற மா, சூப்பர் என்று சக்தியின் இரு கைகளையும் பிடித்து வட்டமாக சுற்றிக்கொண்டே இருக்கும் இடம் மறந்து, “தேங்க்யூ தேங்க்யூ ” என்று கத்திக் கொண்டிருந்தாள்.
அவர்களை கடந்து சென்ற சிலர் இவளை வினோதமாய் பார்க்க , “மெதுவா எல்லாரும் உன்னை ஒரு மாதிரி பாக்குறாங்க “என்றவன். பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய பின்னால் அமர்ந்திருந்தவள் முகத்தில் அவ்வளவு ஜொலி ஜொலிப்பு..
[the_ad id=”6605″]
இவ்வாறு இரவில் பைக் ரைட் செல்வது அவளின் பல வருட கனவு அவளின் பள்ளிப்பருவத்தில் சென்னை ஈ சி ஆரில் இருந்து மகாபலிபுரம் வரை பைக்கில் சென்று வருவதும் செமையா இருக்கும்.
என்று பல தோழிகள் கூற, அதுபோல் மற்ற தோழிகள் சென்றும் வர, அப்போது இருந்து பைக்கில் லாங் டிரைவ் செல்ல வேண்டும் என்பது அவள் கனவாகிப் போனது.
ஆனால் அவளின் தந்தை மரணம் விபத்தில் நிகழ்ந்ததால் யாரும் அவளை அனுமதிக்க வில்லை. அவள் ஆசைப்பட்டாள் உடனே செய்து முடிக்கும் அண்ணனும் மனோவும் கூட இதை மறுத்து விட்டனர்.
அவர்கள் மறுக்க மறுக்க இவளின் ஆசை அதிகமானதே ஒழிய குறையவில்லை.மதியம் இதற்கு தான் மனோவோடு செல்ல ஆயத்தமானாள். சக்தி தடுத்து விட்டான்.
இரவு நேரத்தில் ஆள் அரவம் இல்லாத சாலையில் சக்தியின் என்ஃபீல்டு பறந்துகொண்டிருந்தது. காதில் ஹெட்போன் ஓடு கூந்தலை காற்றில் பறக்கவிட்டு குளிருக்கு இதமாக சக்தியின் தோளில் முகத்தை வைத்து அவனை ஒட்டி அமர்ந்தவாறு விழிகளை மூடி இருந்தவள்.
முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
வாய்விட்டு பாடினாள்………….
அந்த பயணம் எங்கேயோ பிரிந்து சென்றிருந்த இருவரின் இதயத்தையும் இணைத்து வைத்தது. மதுவின் இந்த பாடல் வரிகளில். பிரியன் தேனுண்ட வண்டானான்.
பின் அவனே……
முன்னில் ஒரு காற்றின் கழி முகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம்
இது முடிந்திட விடுவேனோ
என்று பாட…………..
மதுவோ!!!!! இந்த உலகத்தில் இல்லை.இன்று எல்லாம் புதிதாய்..
விண்மீன்களும் விண்ணாய்
எனைத் தொடர்வதை
தூருக்கொரு காற்றின் மணம் கமல்வதை மறவேனே
முன்னும் இதுபோலே புது அனுபவம்
கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேனே
என பிரியனோடு டூயட் பாடிக்கொண்டிருந்தாள்……..
இரவு 11 மணிக்கு வீடு வர இருவருக்குமே அதற்குள் வந்து விட்டோமே என்றானது. வாசலில் அவளை இறக்கி விட்டு பைக்கை நிறுத்தத்தில் நிறுத்த சென்ற சக்தி திரும்பி வர, அதுவரை வீட்டினுள் செல்லாமல் இருந்தவள் விழிகளில் ஏக்கத்தோடு இப்போவாவது விஷ் பண்ணுவானா என்று காத்திருந்தாள்.
அவன் எதுவும் சொல்லாமல் வீட்டினுள் நுழைய போக, சட்டென்று ஏமாற்றம் சூழ, அதை மறைத்து கண்களில் காதல் பொங்க “தேங்க்யூ சோ மச் மாமா” என்றாள்..
” என்னடா, நீ.. எனக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு” என்றவாறு அவளின் முகத்தில் வந்து விழும் கற்றை கூந்தலை ஒதுக்கி விட்டு, செல் என்பது போல் தலையசைத்தான்.
அவனை பிரிய மனமே இல்லாமல் தன் ரூமினுள் வர அங்கே பழனி, கங்கா, காவேரி தம்பதியினர் அவளுக்காக காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் சக்தியும் அவர்களோடு இணைய கேக் வெட்டி கொண்டாடியவர்கள். பழணி கங்கா தம்பதியினர் தங்களின் பரிசாக அவளின் விரலில் மோதிரம் அணிந்து விட திருப்பதி, காவிரி தம்பதியினர் பரிசாக காவேரிஅவள் கையில் தங்கவளையல் அணிந்து விட்டார்.
சந்தோசமாக ” லெட்ஸ் டேக் எ செல்ஃபி “என்று போட்டோக்களாக எடுத்து கிளிக் செய்ய, இரவு வெகு நேரம் ஆனதால் இவளை உறங்க பணித்து விட்டு இரு தம்பதியினரும் சென்று விட,
“இப்போவாவது விஷ் பண்ணுடா ப்ளீஸ்” என்றவாறு மதுஸ்ரீ அவனை விழிகளால் பார்த்திருக்க, அமைதியாக அவள் அருகில் வந்தவன் ஒரு பார்சலை நீட்டினான்.
இப்போகூட கிப்ட் மட்டும் தர விஷ் பண்ண மாட் றியே என்ற கோபம் இருந்தாலும் தேவையில்லாமல் அவனை சீண்டி, இருக்கும்இதத்தை இழக்க மனமில்லாமல் அதை வாங்கியவள்.
பிரித்து பார்க்க வெள்ளி கொலுசு இருந்தது, அவனை போலவே அமைதியாக கொலுசை அவனிடம் நீட்ட, அவன் முகத்தில் கோபம் குடியேற ஆயத்தமாகும் பொழுது.
தன் காலில் இருந்த பழைய கொலுசை கழட்டி அவனை நோக்கி அணிவித்து விடுமாறு தன் காலை நீட்டினாள்.
இப்போது கோபம் மறைந்து குறும்புப்புன்னகையோடு அணிவித்தவன், அவளின் இடுப்புக்கு கை கொடுத்து தன் தலைக்குமேல் தூக்கி
“”பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீ மா….””
“”இன்னைக்கு மாதிரி நீ என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும் அதுதான் இந்த மாமனோட ஆசை “”என்றவாறு அவளை இறக்கி விட்டான்.
அவன் சட்டென்று செய்த இந்த செய்கையால், கூச்சத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தரையை பார்த்து இருந்தாள்.
” ஏண்ணே !!!!! தெரியல டி உனக்கு ஏதாவது வாங்கனும்னு போனாலே முதல்ல கொலுசு வாங்க தான் தோணுது. இந்த கொலுசு உனக்கு பிடிச்சிருக்காடி, இப்போவாவது உனக்கு புடிச்ச மாதிரி வாங்கி இருக்கேனா…. என்ற கேள்வியோடு பார்க்க,
[the_ad id=”6605″]
“ம்ம்ம்….. என தலையசைத்தவள்,” அன்னைக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது சும்மா உங்களை சீண்டிப் பார்க்கத் தான் அப்படி சொன்னேன். இவ்ளோ நாள் என்னோட கால்ல இருந்தது அந்த கொலுசுதான் என்றாள் சிரிப்போடு.
சட்டென்று தன் விழிகளில் மின்னல் வெட்ட, அவளை இழுத்து அணைத்து இதழோடு இதழ்சேர்த்தான்…………. அவளின் நாயகன்.
இதேபோல் இவளின் ஒரு பிறந்தநாளின்போது சக்தி அவளுக்கு கொடுத்த முதல் பரிசு கொலுசு தான். அப்போது “நிறைய முத்து இருக்கு போட்டுட்டு போனா ஜெகன்மோகினி ன்னு சொல்லுவாங்க செம வெயிட்டா வேற இருக்கு, பழைய மாடல், எனக்கு பிடிக்கவே இல்லை” என்று ஆடி தீர்த்து விட்டாள்.
அதன்பின் 3 பிறந்தநாளுக்கு சக்தி இங்கே இல்லை. ஆனால் அன்று அணிந்த கொலுசை இன்றுதான் கழட்டி இருக்கிறாள். கல்லூரியில் கூட “ஏண்டி ஆள் மட்டும் மாடல் கொலுசு மட்டும் பட்டிக்காடு” என்று தோழிகள் கேலி செய்திருக்கின்றனர்.
முத்தம் எவ்வளவு நேரம் தொடர்ந்ததோ கடிகாரத்தில் இருக்கும் குயில் 12 முறை கூவ, சட்டென்று சுய உணர்வுக்கு வந்தவன் தன்னிடமிருந்து அவளை பிரித்து முகத்தை பாராமல்,
“சாரி, சாரி…. ஸ்ரீ ஏதோ உணர்ச்சி வசப்பட்டு என்று தப்பு செய்தவன் போல் உளறி கிலரி மூடிவிட்டு, அவ்விடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான்.
அதுவரை அவனோடு ஒன்றி இருந்தவள் லூசு அய்யனார் கட்டின பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்தான். அவளும் அனுமதிச்ச பிறகு அதுக்கு போய் சாரி சொல்லிட்டு போது இதெல்லாம் எப்போ தான் திருந்த போதோ சபா…….
எப்படியோ என் பர்த்டே வை முத்தத்துல ஆரம்பிச்சு முத்தத்திலேயே முடிச்சிட்டான். மை ஸ்வீட் ஹப்ப்பி… என்றாள். ரசனையாக,,,,,,,,
அட ஆமாங்க………….
ரெண்டு பக்கியும் கணவன் மனைவி தாங்க………….
மொழி தொடரும்……………….
