Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 34.

நிலாவை விட்டு விலக ஆரம்பிக்கும் தமிழ்.

 

தமிழ், நிலா இருவரும் வேலை முடிந்து இருவரும் கிளம்பினர்.

 



Advertisement

இனி,

 

தமிழ் காரில் ஏறியதில் இருந்து எதுவும் பேசாமல் அமைதியாக வர, ‘தமிழ் என்னாச்சு எதுவும் பிரச்சனையா. நானும் பாக்கறேன் எதயோ பத்தி தீவிரமா யோசிச்சு கிட்டு இருக்கீங்க ‘, என நிலா கேட்க,

Advertisement

 

Advertisement

‘அது ஒன்னுமில்ல நிலா நான் ஒன்னு கேப்பேன். அதுக்கு பொறுமையா யோசிச்சு பதில் சொல்லு’, என தமிழ் கேட்க,

 

‘அப்டி என்ன கேக்க போறீங்க ‘, என நிலா சொல்ல,

Advertisement

 

‘ஒரு வேல எனக்கு இந்த பிரச்சனை சரி ஆகலைன்னா என்ன பண்ணுவ.’, என தமிழ் கேட்க,

 

‘எந்த பிரச்சனை’, என நிலா கேட்க,

 

‘அதான் டாக்டர் சொன்ன மாதிரி ஞாபகம் வர ஆரம்பிக்கும் போது எல்லாம் தலை சுத்தும், மயக்கம் வரும் ன்னு சொன்னாருல்ல ‘, என தமிழ் கேட்க,

 

‘தமிழ் அது பிரச்சனைன்னே முடிவு பண்ணிட்டீங்களா. அது ஜஸ்ட் அப்ப அப்ப எல்லாதுக்கும் வர சாதாரண காய்ச்சல், தலைவலி மாதிரி தான். அத நினச்சு நீங்க பயப்படாதீங்க ‘, என நிலா சொல்ல,

 

‘நிலா அப்ப ஏன் நீ என்ன சின்ன குழந்தைய கூடவே இருந்து பாத்துக்கற மாதிரி பாத்துக்கற. என் முகத்துல சின்ன டயர்ட்நஸ் தெரிஞ்சா கூட நீ ஏன் பதட்டப்படுற ‘, என தமிழ் கேட்க,

 

‘ச்சே அதுவா எனக்கே தெரியல. நீங்க கஷ்டப்படறத என்னால தாங்கிக்க முடியல. அது மட்டும் இல்ல உங்களுக்கு எதாவது பிரச்சனைன்னா அது சரியாகற வரைக்கும் என்னால எதுலயும் கான்சன்ட்ரேட் பண்ண முடியல. சிம்பிளா சொன்னா நான் நானவே இருக்க முடியல. எல்லா நேரமும் உங்கள பத்தின நினப்பா தான் இருக்கு’, என நிலா சொல்ல,

 

”ம் ஒரு வேல நான் உன்ன விட்டு தூரமா போனா’, என தமிழ் கேட்க நிலா காரை நிறுத்த,

 

‘ஏன் இப்ப கார நிறுத்துன’, என தமிழ் கேட்க

 

‘ம் தூரமா எங்கயோ போறேனீங்களே. அதுக்கு தான். வீடு வந்துருச்சு இறங்குங்க. முத வீட்டுக்குள்ள டோலாம். அப்புறமா நீங்க தூரமா போலாம்.’ , என நிலா சொல்ல,

 

‘நிலா நான் சொன்னத இப்ப எப்டி கேசுவலா எடுத்துக் கிட்டியோ அது மாதிரியே நிஜமா உன்ன விட்டு நான் தூரமா போகும் போது கூட கேசுவலா எடுத்துக்கிட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்’, என தமிழ் தனக்குள் நினைத்த படி காரை விட்டு கீழே இறங்கினான்.

 

அவர்கள் வருகைக்காக காத்திருந்த தமிழ் அம்மா அவர்களை பார்த்ததும் எழுந்து காபி போட உள்ளே சென்றார்.

 

நிலாவும், தமிழும் மேலே சென்று பிரஷப் ஆகி வந்தனர்.

 

‘நிலா, தமிழ் இந்தாங்க எடுத்துக்குங்க. ஏங்க இந்தாங்க உங்களுக்கு’, என அனைவருக்கும் குடுத்து விட்டு தானும் குடித்தார் தமிழ் அம்மா.

 

‘தமிழ் ரெண்டு நாள் செஞ்சு வச்சதெல்லாம் பாத்துட்டியா.  ஒன்னும் பிரச்சனை இல்லயே’, என தமிழ் அப்பா கேட்க,

 

‘ம் பாத்துட்டேன் டாடி ஒன்னும் பிரச்சனை இல்ல’, என தமிழ் சொல்ல இருவரும் கம்பெனி விசயமாக சீரியசாக பேசிக் கொண்டிருக்க,

 

‘ஏம்மா நிலா தமிழ் ஓகே தான.’, என தமிழ் அம்மா கேட்க,

 

‘கொஞ்சம் டயர்டா இருந்தாரு மத்தபடி ஓகே தான் ஆன்டி. அப்புறம் கவின் வந்தாரு ஆபிஸ்கு அவர பாக்கறதுக்கு. ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசுனாங்க. ‘, என நிலா சொல்ல,

 

‘அப்டியா சரி யாழினி நல்லா இருக்காளான்னு விசாரிச்சியா’, என தமிழ் அம்மா கேட்க,

 

‘ம் கேட்டேன் ஆன்டி. நல்லா இருக்காங்களாம்.’, என நிலா சொல்ல,

 

‘அவ நல்ல படியா புள்ளைய பெத்து எடுக்கனும் கடவுளே நீ தான் பா பாத்துக்கனும்’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘ஆன்டி கவலைப்படாதீங்க அவங்க உண்டாயிருக்காங்கன்னு தெரிஞ்சதும் சாமி கிட்ட அவங்களுக்கு நல்ல படியா குழந்த பிறக்கனும்னு வேண்டி கிட்டு மஞ்சள் துணில காசு வச்சு முடிஞ்சு வச்சிருக்கேன் ‘ , என நிலா சொல்ல,

 

‘நல்ல வேல செஞ்ச நிலா. நான் கூட மறந்துட்டேன்’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘அதனால என்ன ஆன்டி. யாழினியும் நம்ம வீட்டு பொண்ணு தான’, என நிலா சொல்ல,

 

”நிலா முதல்ல நீ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா எப்டி நடந்துக்குவியோன்னு நான் ரொம்ப பயந்தேன். ஆனா கொஞ்ச கொஞ்சமா நீ எங்க கூட பழக ஆரம்பிச்சதும் அந்த பயம் போயிருச்சு. இப்ப இந்த வீட்டுக்கு ஏத்த மருமகளும் நீ தான், எங்க தமிழ்க்கு ஏத்த பொண்டாட்டியும் நீ தான்னு புரிய வச்சிட்ட’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘ஆன்டி நீங்க தான் என்ன உங்க பொண்ணு மாதிரி பாத்துக்கறீங்களே. அப்புறம் எனக்கு என்ன கவல’, என நிலா சொல்ல இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

 

தமிழுக்கு யாழினியிடம் இருந்து போன் வர தமிழ் வராண்டாவிற்கு சென்று அதை அட்டண்ட் பண்ணி பேசினான்.

 

‘சொல்லு யாழினி’, என தமிழ் கேட்க,

 

‘கவின் கிட்ட நீ சொன்னத அவன் எங்கிட்ட சொன்னான். லூசாடா நீ. இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு நிலாவ விட்டு பிரிய போறேன்னு சொல்ற. நிஜமா அது நிலாவுக்கு கஷ்டத்த தான் குடுக்கும். உனக்கு இப்டி ஆனப் பின்னாடி கூட உன் மேல இருக்க பாசத்துனால தான் அவ உன்ன விட்டு போகாம இருக்கா’, என யாழினி சொல்ல,

 

‘இரு இரு. நானும் அவ மேல வச்சிருக்கிற பாசத்துல தான் அவளுக்காக யோசிச்சு இந்த முடிவ எடுத்திருக்கேன். போதும் எனக்காக என் கூட இருந்து கஷ்டப்பட்டது. இனி எங்கூட இருந்தாலும் எனக்கு என்ன ஆகுமோன்னு டெய்லியும் பயந்து பயந்து தான் வாழ்க்கைய ஓட்ட வேண்டி இருக்கும்’, என தமிழ் சொல்ல,

 

‘சரி அப்டியே நீ அவள விட்டு விலகி போறேன்னு வை. அவ அதுக்கப்புறம் வேற ஒருத்தர கல்யாணம் பண்ணி கிட்டு அவனோட சந்தோஷமா வாழுவான்னு நினக்கறியா.’, என யாழினி கேட்க,

 

‘அப்டி எதுவும் இல்லாட்டினா கூட அவங்க அம்மா, தம்பின்னு நிம்மதியான வாழ்க்கைய வாழுவால்ல. ‘, என தமிழ் சொல்ல,

 

‘தமிழ் நீ ஒரு முடிவு பண்றதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சு தான் எடுப்பன்னு எனக்கு நல்லா தெரியும். அதே  மாதிரி முடிவு எடுத்ததுக்கு பின்னாடி யாரு என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன்னும் தெரியும். ஆனா இது உன் வாழ்க்கை மட்டும் இல்ல நிலா வோட வாழ்க்கையும் இதுல அடங்கி இருக்கு. அதனால நிதானமா யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு. நான் போன வக்கறேன்’, என சொல்லி யாழினி போனை வைக்க தமிழ் யோசித்த படி உள்ளே வந்தான்.

 

இரவு உணவு முடித்து விட்டு அனைவரும் தூங்க சென்றனர்.

 

‘ லைட் ஆஃப் பண்ணிரட்டா தமிழ்’, என நிலா கேட்க,

 

”ம்’, என தமிழ் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி விட்டு தூங்கினான். நிலாவும் தூங்கினாள்.

 

காலையில் இருவரும் எழுந்து கிளம்பி கீழே வர அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.

 

தமிழ், நிலா இருவரும் ஆபிஸ்க்கு கிளம்பினர்.

 

‘நிலா அதான் எனக்கு உடம்பு சரியாடுச்சு இல்ல. நானே கார் ஓட்டறேன்’, என தமிழ் சொல்ல,

 

‘அது இல்ல தமிழ் . சரி இந்தாங்க ‘, என சொல்லி நிலா கார் சாவியை தமிழிடம் குடுக்க தமிழ் காரை ஓட்ட இருவரும் ஆபிஸ்க்கு சென்றனர்.

 

ஆபிஸிலும் நிலாவோடு சரியாக பேசாமல் ஒற்றை வார்த்தையோட முடித்துக் கொண்டான்.

 

ஆனால் நிலா எப்போதும் போல் அவனிடம் நடந்து கொண்டாள்.

 

நிலா அடிக்கடி வந்து உள்ளே தமிழை கவனித்து கொள்ள,

 

‘நிலா நீ இப்டி வந்து அடிக்கடி கவனிச்சக்கறதா பாத்தா எனக்கு நான் ஒரு பேஷண்ட் மாதிரி தெரியறேன் அதனால இந்த மாதிரி அடிக்கடி வராத’, என தமிழ் கஷ்டப்பட்டு அவள் முகத்துக்கு நேராக சொல்ல,

 

‘சாரி தமிழ். இனிமே உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்’, என சொல்லி விட்டு நிலா கேஷுவலாக சென்றாள்.

 

ஆனால் தமிழுக்கு தெரியாமல் நந்தினி மற்றும் அங்கு வேலை பார்ப்பவர்கள் உதவியுடன் அவனை கவனித்து கொண்டாள்.

 

தமிழ், நிலா இருவரும் வேலை முடிந்து ஆபிசிலிருந்து வீட்டுக்கு வந்தனர்.

 

இப்படியே நாட்கள் கடந்தன. கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் நிலாவை விட்டு விலக ஆரம்பித்தான்.

 

இது நிலாவுக்கும் புரிய ஆரம்பித்தது.

 

ஒரு நாள் இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் தூங்க போயினர்.

 

தமிழ் எதுவும் பேசாமல் படுத்திருந்தான்.

 

‘தமிழ் நான் உங்க கூட கொஞ்சம் பேசனும்’, என நிலா சொல்ல,

 

‘எனக்கு தூக்கம் வருது நிலா’, என தமிழ் சொல்ல,

 

நிலா எதுவும் பேசாமல் லைட்டை ஆஃப் செய்து விட்டு படுத்துக் கொண்டாள்.

 

அடுத்த நாள் காலையில் தமிழ் கிளம்பி கீழே இறங்கி வர,

 

”ராஜி சாப்பாடு ரெடியா’, என தமிழ் கேட்க,

 

‘ம் ரெடி. ஆமா நிலா எங்க ‘,  என தமிழ் அம்மா கேட்க,

 

எதுவும் பதில் சொல்லாமல் சாப்பிட்டு விட்டு தமிழ் ஆபிஸ்க்கு கிளம்ப நிலா மேலே இருந்து ஓடி வர,

 

‘நிலா ஒரு முக்கியமான வேல இருக்கு. நான் முன்னாடி போறேன். நீ உன் டூவிலர்ல வந்துரு’, என சொல்லி விட்டு நிலா அவன் சொன்னதை கேட்டாளா என்று கூட பார்க்காமல் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

”ஏம்மா நிலா இவனுக்கு கிறுக்கு எதும் பிடிச்சிருக்கா. எப்பவும் உங்கூட தான ஆபிஸ்க்கு கிளம்புவான். இன்னிக்கு என்ன புதுசா உன்ன தனியா டூவிலர்ல  வர சொல்றான்’, என தமிழ் அம்மா கேட்க,

 

”அதான் ஆன்டி எனக்கும் புரியல. ஒரு வேல அவரு சொன்ன மாதிரி அவருக்கு எதுவும் முக்கியமான வேல இருக்கும்னு நினக்கறேன்’, என நிலா சொல்ல,

 

‘சரி வா நம்ம சாப்டலாம்’, என தமிழ் அம்மா கூப்பிட,

 

‘ஆன்டி அங்கிள் எங்க காணோம்’, என நிலா கேட்க,

 

‘அவரு சாப்டுட்டு அவரு ப்ரெண்ட பாக்க போறேன்னு கிளம்பிட்டாரு’, என தமிழ் அம்மா சொல்ல இருவரும் சாப்பிட்டனர்.

 

‘சரி ஆன்டி நான் போய்ட்டு வரேன்’, என நிலா சொல்லி ஆபிஸ்க்கு தன் டூ விலரில் கிளம்ப தமிழ் அம்மா அவளை வழி அனுப்பி வைத்தாள்.

 

தமிழ் தன்னை விட்டு விலகி செல்வதை  நிலா புரிந்து கொள்வாளா?

 

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!