Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 40.

நந்தினியிடம் நிலாவை பிரிவதற்கான காரணத்தை சொல்லும் தமிழ்.

 

தமிழ், நிலா இருவரும் ஆபிஸ்க்கு சென்றனர்.

 



Advertisement

இனி,

 

நிலா தன் இடத்தில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள்.

Advertisement

 

Advertisement

நந்தினி ஃபைல்களை எடுத்து கொண்டு தமிழிடம் சைன் வாங்க அவன் ரூமுக்கு சென்றாள்.

 

‘சார் நீங்க சொன்ன மாதிரி நானும் நிலாவும் ரெடி பண்ணிட்டோம். நீங்க ஒரு வாட்டி செக் பண்ணிட்டு சைன் பண்ணிடுங்க’, என நந்தினி சொல்லி அந்த ஃபைல்களை தமிழிடம் குடுக்க,

Advertisement

 

‘ஓகே நந்தினி’ என தமிழ் சொல்லி விட்டு அதை வாங்கி கொண்டான்.

 

நந்தினி தமிழிடம் நிலா பற்றி பேசலாமா வேண்டாமா என யோசித்து கொண்டு இருக்க அதை பார்த்த தமிழ்,

 

‘நந்தினி எதாவது எங்கிட்ட பேசனுமா’, என கேட்க,

 

‘சார் இத பத்தி நான் உங்க கிட்ட கேக்கலாமான்னு எனக்கு தெரியல. ஆனாலும் வேற வழி இல்ல. நீங்க என்ன தப்பா நினச்சு கிட்டா கூட பரவால்ல ‘, என நந்தினி சொல்ல,

 

‘என்ன நந்தினி பில்டப் எல்லாம் பெருசா இருக்கு. அப்டி என்ன கேக்க போற எங்கிட்ட. சரி அது என்னன்னு நான் சொல்லட்டுமா’, என தமிழ் கேட்க,

 

‘அப்ப உங்களுக்கே தெரிஞ்சு இருக்கு நான் நிலாவ பத்தி தான் உங்க கிட்ட பேச போறேன்னு’,  என நந்தினி கேட்க,

 

‘என்ன பத்தி உனக்கு நல்லா தெரியும். அதே மாதிரி நிலா கூட உன் நட்ப பத்தி எனக்கு நல்லா தெரியும். நீங்க ரெண்டு பேரும் ஆபிஸ்ல எவ்ளோ க்ளோஸ் ன்னும் எனக்கு தெரியும். சோ ஆஸ் எ ஃப்ரெண்டா உங்க கிட்ட நிலா எல்லாத்தையும் ஷேர் பண்ணி இருப்பா. நீங்களும் அவளுக்காக என் கிட்ட பேச வந்திருக்கீங்க. அப்டி தான ‘, என தமிழ் கேட்க,

 

‘ஆமா சார் நீங்க சொல்றது கரெக்ட் தான். அப்ப நான் ஸ்ட்ரைட்டாவே உங்க  கிட்ட கேட்டறேன். நீங்க நிலா மேல உசரயே வச்சிருக்கீங்க ன்னு தெரியும். அதே மாதிரி தான் நிலாவும். அப்டி இருக்கறப்ப ஏன் நிலாவ உங்கள விட்டு போக சொல்றீங்க. பாவம் நிலா அத நினச்சு எவ்ளோ கஷ்ட படுறான்னு எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும். அப்டி என்ன ரீசன்’, என நந்தினி கேட்க,

 

‘நந்தினி சிம்பிளா ஒன்னு உங்க கிட்ட கேக்கறேன். நீங்க ஒருத்தர் மேல பாசம் வச்சிருக்கீங்க. அவங்க உங்க மேல உங்கள விட அதிகமா பாசம் வச்சிருக்காங்க. இப்ப நீங்க அவங்க கூட இருந்தா அவங்களால நிம்மதியா இருக்க முடியாதுன்னு வச்சுக்குங்க. அப்ப நீங்க என்ன பண்ணுவீங்க ‘, என தமிழ் கேட்க,

 

‘சார் நீங்க சொல்றது எனக்கு புரியுது. ஆனா பிரியற அளவுக்கு இப்ப என்ன நடந்துச்சு. ‘, என நந்தினி கேட்க,

 

‘உங்களுக்கு என் மெமரி லாஸ் பிரச்சனைய பத்தி தெரியும்னு நினக்கறேன். அதனால எனக்கு தலைவலி, மயக்கம்னு பிரச்சனை தொடர்ந்து வரும்னு டாக்டர் சொல்லி இருக்காரு.  இப்ப நிலா என் கூட இருந்தா என்னய நல்லா கவனிச்சுக்குவா. என்னய குழந்தைய பாத்துக்கற மாதிரி கூடவே இருந்து பாத்துக்குவா. ஆனா அவ வாழ்க்கை இப்டியே ஹாஸ்பிடல்லயே முடிஞ்சிடும். நான் அவளுக்கு அப்டி ஒரு வாழ்க்கைய தர மாட்டேன். எனக்கு தெரியும் என்ன விட்டு போனா கூட என்ன மறக்க மாட்டான்னு. ஆனா அவங்க வீட்ல நிம்மதியா இருப்பா. அதே மாதிரி நிலாவ பக்கத்துல வச்சி கிட்டு என்னாலயும் அவள பாக்காம, பேசாம இருக்க முடியாது. அதான் நானும் ஆபிஸ அப்பா கிட்ட விட்டுட்டு ஆஸ்ட்ரேலியா போலான்னு முடிவு பண்ணி இருக்கேன்’, என தமிழ் சொல்ல,

 

‘சார் இது வரைக்கும் நிலா சைடு இருந்து மட்டும் தான் நான் யோசிச்சேன். ஆனா நீங்க சொன்னதுக்கு பிறகு தான் புரிஞ்சுது. நிலா வோட நல்லதுக்காக யோசிச்சு தான் நீங்க இப்டி பண்றீங்கன்னு. சரி எந்த நம்பிக்கைல இத எல்லாம் நீங்க எங்கிட்ட சொல்றீங்க. ஒரு வேல எமோசன்ல இத நான் நிலா கிட்ட சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க ‘, என நந்தினி கேட்க,

 

‘நீ கண்டிப்பா அவ கிட்ட சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும். ஏன்னா நான் எந்த அளவுக்கு அவ மேல அன்பு வச்சிருக்கனோ அதே அளவுக்கு அன்பு நீயும் வச்சிருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும். அதனால அவ மனசு கஷ்டபடற விசயத்த நீ கண்டிப்பா அவ கிட்ட சொல்ல மாட்டேன்னும் எனக்கு தெரியும்’, என தமிழ் சொல்ல,

 

‘ம் அப்ப எங்க ஃப்ரண்ட்ஷிப்ப நீங்க நல்லா புரிஞ்சு கிட்டு தான் நான் கேக்க வந்ததும் என் கிட்ட சொல்லிட்டீங்க. ஆனா ஒன்னு எத்தன நாளைக்கு இத என்னால அவ கிட்ட இருந்து சொல்லாம மறைக்க முடியும்னு எனக்கு தெரியல.’, என நந்தினி சொல்ல,

 

‘கவலப்படாத எனக்கு இந்த வாரத்துல ஆஸ்ட்ரேலியால இருந்து ரிப்ளை வந்துரும். அதுக்குள்ள எப்டியாவது நிலா கிட்ட பேசி அவள அவ வீட்டுக்கு போக சொல்லிடுவேன். அதுக்கு பிறகு அவளுக்கு இது தெரிஞ்சா கூட பெரிசா ரியாக்ட் பண்ண மாட்டா. நான் தான் அவள வேண்டாம்னு சொல்லிட்டு ஆஸ்ட்ரேலியா போய்ட்டேன்னு என் மேல கோபத்துல தான் இருப்பா. நான் நினச்சதும் நடந்துரும்’, என தமிழ் சொல்ல,

 

‘என்னவோ சொல்றீங்க ஆனா நீங்க ரெண்டு பேரும் பிரியறத நினச்சா தான் எனக்கு மனசு கஷ்டமா இருக்கு. ‘, என நந்தினி சொல்ல,

 

‘நந்தினி எப்ப என் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்குதோ அப்ப தான் நானும் நிலாவும் சேர்ந்து வாழ முடியும்’, என தமிழ் சொல்ல,

 

‘அந்த நாள் சீக்கிரம் உங்க வாழ்க்கைல வரனும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கறேன். சரி ரொம்ப நேரமா என்ன காணோம்னு  நிலா தேடுவா. நான் போறேன் சார்’, என சொல்லி விட்டு நந்தினி அங்கிருந்து கிளம்பினாள்.

 

நந்தினி நினைத்தது மாதிரியே நிலா வந்து அவளிடம்,

 

‘நந்தினி உன்ன ரொம்ப நேரமா ஆள காணோம். ‘, என கேட்க

 

‘நாம ரெடி பண்ண அந்த ஃபைல்ஸ தமிழ் சார் கிட்ட சைனுக்காக குடுக்க போயிருந்தேன். அவரு இரு நந்தினி நான் செக் பண்ணிக்கிறேன்னு சொன்னாரு. அவரு செக் பண்ணி முடிச்சதும் வந்தேன்’, என நந்தினி சொல்ல,

 

‘சரி உனக்கு க்ளைய்ண்ட் போன் பண்ணாரு. நான் அட்டண்ட் பண்ணி பேசிட்டேன். அவங்க டீடைல்ஸ மெய்ல் அனுப்பறேன்னு சொன்னாங்க. பாத்துக்கோ’, என நிலா சொல்ல,

 

நிலா சொல்வது எதுவும் நந்தினி காதில் விழ வில்லை. தமிழ் சொன்னது மட்டும் தான் அவள் நினைவில் ஓடிக் கொண்டு இருந்தது.

 

இதை பார்த்த நிலா அவளை உலுக்கி, ‘ஏய் நந்தினி என்ன யோசிச்சு கிட்டு இருக்க’, என கேட்க,

 

‘ஒன்னுமில்ல நிலா. நீ என்ன சொன்ன ‘, என நந்தினி கேட்க,

 

‘சரியா போச்சு போ’, என சொல்லி நிலா திரும்ப சொல்ல,

 

‘ம் ஓகே நான் பாத்துக்கறேன்’, என நந்தினி சொல்ல இருவரும் சேர்ந்து பேசி கொண்டே வேலை பார்த்தனர்.

 

தமிழ், நிலா இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றனர்.

 

எப்போதும் போல் இருவரும் பிரஷப் ஆகி விட்டு வர அனைவரும் சேர்ந்து காபி குடித்தனர்.

 

‘டேய் தமிழ் நானும், அப்பாவும் நாளைக்கு நம்ம ஊருக்கு போறோம்’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘என்ன ராஜி திடீர்னு’, என தமிழ் கேட்க,

 

‘சரியா போச்சு டா. உன் சித்தப்பா பையனோட மச்சுனனுக்கு கல்யாணம்னு போன மாசம் பத்திரிக்கை வச்சிட்டு போனங்கன்னு சொன்னனே மறந்துட்டியா.’, என தமிழ் அம்மா கேட்க,

 

‘ஓ சாரி ராஜி மறந்துட்டேன். சரி எப்ப போறீங்கன்னு சொல்லு நான் கார் புக் பண்றேன்’, என தமிழ் சொல்ல,

 

‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் டா. நானும் ராஜியும் பஸ்லயே போய்க்கறோம். அங்க இறங்கனதும் போன் பண்ணா சித்தப்பா வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டான்’, என தமிழ் அப்பா சொல்ல,

 

‘சரி பஸ் ஸ்டாண்டில உங்கள நான் டிராப் பண்ணிடறேன்’, என தமிழ் சொல்ல,

 

‘நாளைக்கு கிளம்பிட்டு உனக்கு போன் பண்றோம். ‘, என தமிழ் அப்பா சொல்ல,

 

‘டேய் அப்பன்னு பாத்து பிசியா இருந்தேன் போன் எடுக்கலைன்னு சொல்லிடாத.’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘ஆன்டி ஒரு வேல அவரு போன் எடுக்கலைன்னா எனக்கு கூப்டுங்க நான் உங்க ரெண்டு பேரையும் வீட்ல பிக்கப் பண்ணி பஸ் ஸ்டான்ட்ல ட்ராப் பண்ணிடறேன்’, என நிலா சொல்ல,

 

‘அப்புறம் என்ன ராஜி ஓகே தான’, என தமிழ் கேட்க,

 

‘ம் ஓகே தான். அப்புறம் நாங்க வர ரெண்டு நாள் ஆகும். நிலா கிட்ட சின்ன புள்ள மாதிரி சண்ட டோட்டுட்டு இருக்காத’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘ஆமா உன் மருமக கிட்ட சண்ட போடறத தவிர எனக்கு வேற வேலயே இல்ல பாரு. சரி எதுக்கு ரெண்டு நாள்’, என தமிழ் கேட்க,

 

‘டேய் தமிழ் ஊரு பக்கம் போய் ரொம்ப நாளாச்சு. அதான் அப்டியே ரெண்டு நாள் இருந்து எல்லாத்தையும் போய் பாத்துட்டு வரலாம்னு இருக்கோம்.’, என தமிழ் அப்பா சொல்ல,

 

‘ஆன்டி, அங்கிள் ரெண்டு நாளைக்கு தேவையானது எடுத்து வைக்க நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்’, என நிலா சொல்ல,

 

‘பரவால்ல நிலா நாங்களே எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிட்டோம்.’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘ஆன்டி மாத்திரை,  பிரஷ், பேஸ்ட், சோப்பு, டிரஸ், போன், ஜார்ஜர், காசு, ஏடி எம் கார்டு’, என நிலா சொல்லி கொண்டே போக,

 

‘நிலா எல்லாம் எடுத்து வச்சாச்சு’, என தமிழ் அப்பா சொல்ல,

 

‘ம் ஓகே அங்கிள்.’, என நிலா சொல்ல,

 

‘நிலா பாசத்த கொஞ்சம் அடக்கு. அவங்க என்ன வெளிநாட்டுக்கா போறாங்க. பஸ்ல ஏறுன்னா ரெண்டு மணி நேரத்துல கொண்டு போய் விட்ருவான் டிரைவரு’, என தமிழ் சொல்ல,

 

‘டேய் உனக்கு தான் எங்க மேல அக்கறை இல்ல. அவளாவது அக்கறையா கேக்கறாளேன்னு நினக்காம அவள கிண்டல் பண்ணி கிட்டு இருக்க’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘ஆரம்பிச்சிட்டியா உன் மருமக புராணம் பாட இனிமே நான் என் வாய மூடிக்கிறது தான் எனக்கு நல்லது’, என தமிழ் சொல்ல,

 

‘நிலா அவன் எப்பவும் இப்டி தான் நம்மள வம்பிழுக்கலைன்னா அவனுக்கு தூக்கம் வராது. வா நம்ம போய் டிபன் ரெடி பண்ணலாம்’, என சொல்லி விட்டு தமிழ் அம்மாவும் நிலாவும் சமையலறைக்கு செல்ல,  தமிழ் கம்பெனி ஃபைல்களை பார்த்து கொண்டிருக்க தமிழ் அப்பா நியூஸ் சேனல் பார்க்க தொடங்கினார்.

 

தமிழிடம் சொன்னதை நிலா நிறைவேற்ற அவனை விட்டு பிரிவாளா?

 

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!