நீ எனக்கு தந்த காதல் – 41.
நிலாவுக்கு தன்னை விட்டு பிரிய கெடு வைக்கும் தமிழ்.
இரவு உணவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்க சென்றனர்.
Advertisement
இனி,
தமிழ் பெட்டில் தன் இடத்தில் உட்கார்ந்து கொண்டு நிலா வருவதற்காக காத்துக் கொண்டிருந்தான்.
Advertisement
Advertisement
நிலா வந்து தமிழ் படுக்காமல் உட்கார்ந்து இருப்பதை பார்த்து விட்டு, ‘தமிழ் லைட் ஆஃப் பண்ணவா’, என கேட்க,
‘நிலா உன் கிட்ட கொஞ்சம் பேசனும். இங்க வந்து உட்காரு’, என தமிழ் சொல்ல,
Advertisement
நிலாவும் சென்று அவன் அருகில் உட்கார்ந்தாள்.
‘சொல்லுங்க தமிழ் ‘, என நிலா கேட்க,
‘நிலா நமக்கு சரியான நேரம் இது தான். ராஜியும், டாடியும் நாளைக்கு ஊருக்கு போறாங்க அந்த சமயத்துல நாம பேசுன மாதிரி செஞ்சிடலாம்’, என தமிழ் சொல்ல,
‘தமிழ் நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல. நாம என்ன பேசுனோம்’, என நிலா கேட்க,
‘அது சரி. நிலா மறந்துட்டியா. நான் உன் கிட்ட என்ன விட்டு போக சொல்லிருந்தேன். நீ கூட ஓகே கொஞ்சம் டைம் குடுங்க ன்னு கேட்டல’, என தமிழ் சொல்ல,
‘ம் இப்ப அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்’, என நிலா கேட்க,
‘நாளைக்கு ராஜியும், அப்பாவும் கிளம்பி ஊருக்கு போயிருவாங்க. நீயும் கிளம்பி உன் வீட்டுக்கு போயிடு. அவங்க வந்து கேட்டா எதாவது சொல்லி நான் சமாளிச்சுக்கறேன். ‘, என தமிழ் சொல்ல,
‘தமிழ் நீங்க நிஜமா தான் சொல்றீங்களா’, என நிலா கேட்க,
‘ஆமா நிலா இதுல போய் நான் விளையாடு வேனா உன் கிட்ட’, என தமிழ் சொல்ல,
‘தமிழ் ஒரு வேல நான் இதுக்கு ஒத்துக்கலைன்னா என்ன பண்ணுவீங்க. ‘, என நிலா கேட்க,
‘சோ சிம்பிள் நான் உன்ன விட்டு விலகி போயிடுவேன். எனக்கு தெரியும் கடைசி நேரத்துல நீ இது மாதிரி எதாவது சொல்லி சமாதானம் பண்ணுவேன்னு. அதான் நானும் ஒரு முடிவோட தான் இருக்கேன்’, என தமிழ் சொல்ல,
‘நீங்க எங்க போவீங்க’, என நிலா கேட்க,
‘அத ஏன் நான் உன் கிட்ட சொல்லனும். உன் கிட்ட மட்டும் இல்ல யார் கிட்டயும் எதயும் சொல்லாம நான் பாட்டுக்கு கிளம்பி போயிருவேன்.’, என தமிழ் சொல்ல,
‘சரி நீங்க சொல்ற மாதிரியே நான் போயிடறேன். வேற எதுவும் நீங்க யோசிக்காதீங்க’, என நிலா சொல்ல,
‘ரொம்ப தேங்க்ஸ். சரி லைட் ஆஃப் பண்ணிட்டு வா தூங்கலாம்’, என தமிழ் சொல்லி விட்டு படுக்க நிலா லைட்டை ஆஃப் செய்து விட்டு வந்து படுத்தாள்.
‘நிலா இத கேக்குறதுக்கு உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கோ அத விட அதிகமா எனக்கு கஷ்டமா இருக்கு இத உன் கிட்ட சொல்ல. ஆனா எனக்கு வேற வழி இல்ல. சாரி நிலா. என்ன தயவு செஞ்சு மன்னிச்சிரு’, என தமிழ் தனக்குள் அழுது கொண்டு படுத்திருக்க,
‘தமிழ் ஏன் இந்த விசயத்துல நீங்க இவ்ளோ அடமண்ட்டா இருக்கீங்க. நான் உங்கள விட்டு பிரிய போற நாள் இவ்ளோ சீக்கிரமா வரும்னு நான் நினைக்கல. இந்த நிமிஷம் அப்டியே உறைஞ்சு போயிரக் கூடாதா. நாளை ன்னு ஒரு நாள் என் வாழ்க்கைல வராமயே போய்ட்டா ரொம்ப நல்லா இருக்கும்’, என நிலாவும் அழுத படி தனக்குள் பேசிக் கொண்டு படுத்திருந்தாள்.
இருவரும் இரவு முழுவதும் தூங்காமல் இதை பற்றியே யோசித்த படி படுத்திருந்தனர்
அப்படியே விடிந்தும் போனது. இருவரும் எழுந்து கிளம்பி கீழே வர அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.
‘அம்மா நிலா மாவு அரைச்சு ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன். சட்னி மட்டும் அரைச்சுக்கோ. புளி காச்சி வச்சிருக்கேன், தக்காளி தொக்கு செஞ்சு வச்சிருக்கேன், வேற எதாவது வேனும்னா செஞ்சு சாப்டுக்கங்க. ‘, என தமிழ் அம்மா சொல்ல,
‘சரி ஆன்டி நீங்க கவலைப் படாதீங்க . நீங்க எத பத்தியும் யோசிக்காம நல்ல படியா போய்ட்டு வாங்க ‘, என நிலா சொல்ல,
‘தமிழ் திரும்ப சொல்றேன் அவ கிட்ட சண்ட போட்டுட்டு இருக்காத. நிலா அப்டி எதாவது அவன் சண்ட போட்டா கூட நீ பெருசா எடுத்துக்காத. ‘, என தமிழ் அம்மா சொல்ல,
‘ராஜி அதெல்லாம் ஒன்னும் சண்ட போட மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் பாத்து போய்ட்டு வாங்க. டாடி அங்க போனதும் உங்க தம்பி, தம்பி குடும்பம்னு இருந்தறாம ராஜியையும் கொஞ்சம் பாத்துக்கங்க ‘, என தமிழ் சொல்ல,
‘டேய் என் பொண்டாட்டிய பாத்துக்க எனக்கு தெரியும். போடா’, என தமிழ் அப்பா சொல்ல அனைவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.
‘சரி டாடி நீங்க கிளம்பிட்டு போன் பண்ணுங்க நான் வந்து பஸ் ஸ்டாண்ட்ல விடறேன்’, என தமிழ் சொல்லி விட்டு கிளம்ப நிலாவும் கிளம்பினாள்.
தமிழ், நிலா இருவரும் ஆபிஸ்க்கு வந்து சேர்ந்தனர்.
நிலா தன் இடத்தில் வந்து உட்கார்ந்து நைட் தமிழ் சொன்னதையே நினைத்து கொண்டிருந்தாள்.
அதை பார்த்த நந்தினி அவளிடம் வந்து, ‘என்ன நிலா என்ன யோசனை’, என கேட்க,
‘தமிழ் நேத்து ஒன்னு சொன்னாரு அத பத்தி தான்’, என நிலா சொல்ல,
‘என்ன சொன்னாரு’, என நந்தினி கேட்க,
‘ம் அவரு விட்டு பிரிய நான் டைம் கேட்டன்ல அதுக்கு அவரு ரெண்டு நாள் டைம் குடுத்திருக்காரு’, என நிலா சொல்ல,
‘தமிழ் நிலா கிட்ட பேசிட்டாரு போல’, என தனக்குள் நினைத்து கொண்டு, ‘சரி அதுக்கு நீ என்ன முடிவு பண்ணிருக்க ‘, என நந்தினி கேட்க,
‘நான் என்ன முடிவு எடுக்கறது. அதான் எல்லாத்தையும் அவரே எடுத்துட்டாரே. ஒரு வேல நான் அதுக்கு ஒத்துக்கலைன்னா என்ன பண்ணுவீங்க ன்னு கேட்டேன். அதுக்கு யார் கிட்டயும் எதுவும் சொல்லாம நான் எங்கயாவது கிளம்பி போயிருவேன்னு சொல்றாரு’, என நிலா அழுது கொண்டே சொல்ல,
‘நிலா தமிழ் சார் என்ன சொன்னா நீ ஒத்துக்கவைன்னு உன்ன நல்லா புரிஞ்சு வச்சிருக்காரு’, என தனக்குள் நினைத்து கொண்டு,
‘நிலா பேசாம கொஞ்ச நாள் அவர விட்டு பிரிஞ்சு தான் இருந்து பாரேன்’, என நந்தினி கேட்க,
‘பாத்தியா நீயும் அவருக்கு தான் சப்போர்ட் பண்ற. என்ன பத்தி யோசிக்க தான் யாரும் இல்ல ‘, என நிலா சொல்ல,
‘நிலா அப்டி இல்ல உன்ன பத்தி தான் எல்லோரும் யோசிக்கறோம்’, என நந்தினி மைண்ட் வாய்ஸ கொஞ்சம் சத்தமாக சொல்ல,
‘இப்ப நீ என்ன சொன்ன’, என நிலா கேட்க,
‘இல்ல நிலா எல்லாத்துக்கும் கொஞ்சம் டைம் தேவைப்படும் அத தான் தமிழுக்கும் நீ குடுன்னு சொல்றேன்’, என நந்தினி சொல்ல,
‘ம் சரி’, என நிலா சொல்லி விட்டு தன் வேலையை செய்ய நந்தினியும் தன் இடத்திற்கு சென்று தன் வேலையை பார்த்தாள்.
வீட்டிலிருந்து போன் வர தமிழ் கிளம்பினான். பிறகு எதையோ யோசித்தவன் நிலாவுக்கு கூப்பிட்டு,
‘நிலா ராஜியும், அப்பாவும் கிளம்பிட்டாங்களாம். நீயும் வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போய் அவங்கள விட்டுட்டு வரலாம்’, என தமிழ் சொல்ல,
‘ஆமா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்க கூட போறது இது தான கடைசி தடவ. ‘, என நிலா சொல்லி விட்டு கிளம்ப தமிழ் வேறு எதுவும் பேசாமல் அவளுடன் வீட்டுக்கு வந்தான்.
அவர்கள் இருவரும் வருவதை பார்த்த தமிழ் அம்மா, ‘ஏய் ரெண்டு பேரும் வந்துட்டீங்களா. ‘, என கேட்க,
‘ஆமா ராஜி. நீங்க ரெண்டு பேரும் கிளம்பியாச்சா. டாடி எல்லாம் மறக்காம எடுத்துட்டீங்களா’, என தமிழ் கேட்க,
‘ம் ரெடி. எல்லாம் எடுத்தாச்சு’, என தமிழ் அப்பா சொல்ல,
‘சரி பேக்க குடுங்க நான் கொண்டு போய் கார்ல வச்சிட்டு வரேன்’, என சொல்லி தமிழ் வாங்கி கொண்டு போய் காரில் வைத்து விட்டு வர,
‘சரி கிளம்பலாமா’, என தமிழ் அம்மா கேட்க,
‘ஆன்டி ஒரு நிமிஷம்.’, என சொல்லி விட்டு நிலா போய் சாமி அறையில் விபூதி, குங்கும தட்டை எடுத்து வந்து தமிழ் அம்மா, அப்பா கையில் குடுத்து, ‘எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்க. தமிழ் வாங்க’, என தமிழை கூப்பிட தமிழ் தயங்கிய படி மெதுவாக வர,
‘அட வாங்க தமிழ்’, என சொல்லி அவன் அருகில் சென்று மெதுவாக காதில், ‘ப்ளீஸ் கடைசியா ஒரு தடவ ரெண்டு பேரும் சேர்ந்து ஆசீர்வாதம் வாங்கிக்கலாம் வாங்க ‘, என சொல்லி நிலா அவன் கையை பிடித்து இழுக்க தமிழ் என்ன சொல்வது என்று தெரியாமல் நிலாவுடன் சேர்ந்து தன் பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்க அவர்கள் ஆசீர்வாதம் பண்ணி விபூதி, குங்குமம் வைத்து விட்டு,
‘ஏம்மா நிலா என்ன திடீர்னு’, என தமிழ் அம்மா கேட்க,
‘இல்ல ஆன்டி எதோ வாங்கனும்னு தோனுச்சு. ‘, என நிலா சொல்ல,
‘சரி கிளம்பலாமா’, என தமிழ் பேச்சை மாற்ற அனைவரும் கிளம்பினர்.
தமிழ் கதவை சாத்தி விட்டு வந்து காரை எடுத்தான்.
பஸ் ஸ்டாண்டில் ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு தமிழும், நிலாவும் போய் தண்ணி பாட்டில், ஸ்வீட் பாக்ஸ், ஸ்னேக்ஸ் எல்லாத்தையும் வாங்கி கொண்டு வந்து தமிழ் அம்மா, அப்பா விடம் குடுத்து அவர்களை பஸ் ஏற்றி விட்டு பஸ் கிளம்பியதும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
ஆபிஸ்கு போய் சேரும் வரை தமிழ், நிலா இருவரும் எதுவும் பேசாமல் வந்தனர்.
ஆபிஸ்க்கு சென்ற பிறகும் கூட இருவரும் பேசிக் கொள்ளாமல் தங்கள் வேலைகளை பார்த்தனர்.
வேலை முடிந்து இருவரும் ஆபிசிலிருந்து லேட்டாக கிளம்பி வீட்டுக்கு சென்றனர்.
‘தமிழ் இன்னிக்கு டின்னருக்கு எங்கயாவது வெளிய போலாமா’, என நிலா கேட்க,
‘ம் சரி’, என தமிழ் சொல்லி விட்டு ஒரு ரெஸ்டாரண்ட்டுக்கு காரை ஓட்டினான்.
ஹோட்டலுக்கு வந்து உட்கார்ந்த தமிழ், ‘நிலா என்ன வேனும்’, என கேட்க,
நிலா தமிழுக்கு பிடித்ததாக ஆர்டர் பண்ண தமிழ் நிலாவுக்கு பிடித்ததை ஆர்டர் செய்தான்.
இருவரும் வேறு எதுவும் பேசிக் கொள்ளாமல் சாப்பிட்டனர்.
நிலா டீ, காபி, ஐஸ்கிரீம் எதாவது வேனுமா’, என தமிழ் கேட்க,
‘இல்ல எதுவும் வேணாம்’, என நிலா சொல்ல தமிழ் கவுண்டருக்கு சென்று பில் பண்ணி விட்டு வர இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
நிலா எடுக்க போகும் முடிவு என்ன?
தொடரும்..
