Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 3 1

நெஞ்சம்  ஏங்குதே…
  அத்தியாயம் -3
 தேவகி மகளை பார்க்க சுதா ராமமூர்த்தி  வீட்டுக்கு வந்திருந்தார்.
 அருள் ஜோதி அவள் புகுந்து வீட்டின்  கீழே உள்ள ஒரு அறையில் அமைதியாக படுத்திருந்தாள், தூங்கமெல்லாம் இல்லை அவளுக்கு..  தூக்கம் வருமா என்ன? யோசனை, யோசனை ஆயிரம் யோசனை ரிஷியிடம் எப்படி பேசுவது, என்ன பேசுவது என்று யோசித்த படியே அவள் படுத்திருக்க.
“அருள்” என்று மகளை தேடி அவள் இருந்த அறைக்கு வந்தார் தேவகி.
தாயை பார்த்தும் அருள் ஜோதிக்கு பெரிய தெம்பு வந்தது போல் உணர்ந்தவள்.
“மா” என்று அழைக்க…
“என்னடி தூங்கிட்டு இருந்தீயா”?. என்று உள்ளே வர.
“இல்லம்மா”, என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்கு போதே..
சுதா அறைக்கு வந்தவர். “இந்தாங்க அண்ணி இந்த புடவையை அருளை கட்ட சொல்லுங்க, இந்தடா பூ,” என்று அருள் ஜோதியிடம்  பூவை கொடுத்தவர்,
“நீங்க வந்தது ரொம்ப சந்தோசம் அண்ணி” என்றவர்,.
தாயுக்கும்,  மகளுக்கு தனிமை கொடுத்து விட்டு  கிளம்பி விட்டார்.
“குளிச்சிட்டு வா  அருள்” என்று தேவகி கூற.
அருள் குளித்து முடித்து  பிங் வண்ண ஸ்சாப்ட் சில்க் புடவையில்  ரெடியாகி வர..
மகளின் அழகை பார்த்து ரசித்தவர்.
“வா, தலை வாரி விடுறேன்”  என்று மகளை கட்டிலில்  அமர வைத்த தேவகி.
மகளுக்கு தலைவாரி விட்டுக்கொண்டே பேசினார்.,
“இது நம்ம வீடு இல்ல அருள், உன் புகுந்த வீடு, இனி உனக்கு எல்லாம் இவங்க தான், புரிஞ்சதா?
என்றதும்,, “ஊம்ம்” என்று அருள்  தலையாட்டினாள்.
“பாத்து நடந்துக்கோ அருள்,  சாப்பாடுல  இருந்து எல்லாமே வேறுபாடதா தான் இருக்கும், சுதாக்கு ஒரே பையன் தான் மாப்பிள்ளை, அவங்க பையன் மேல கொஞ்சம் அதிகமாக தான் பாசம் வச்சு இருப்பாங்க, அவங்க உரிமை எடுத்து கூட பேசலாம், அத புரிஞ்சு, பார்த்து நடந்துக்கோ, முதல்ல எதிரில் இருக்குறவங்க என்ன பேசுறாங்கன்னு கேட்டு நட.
எது செஞ்சாலும், சுதா கிட்ட கேட்டு செய், அவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசு, நாளைக்கு நீ நம்ம வீட்டுக்கு வரனும் முடிவு பண்ண கூட,  அவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு தான் நம்ம வீட்டுக்கு நீ  வரணும்,  புரிஞ்சதா”?. என்றவுடன்..
மீண்டும் ஒரு தலையாட்டால் அருள்லிடமிருந்து.
“இது உன் வீடு, உன் புருஷன் தான் உனக்கு எல்லாம் அத முதல்ல மனசுல பதிய வை,.. நாங்கெல்லாம் உனக்கு இனி ரெண்டாம் பச்சம் தான்,  நாளைக்கு உனக்கு ஒரு பிரச்சனை வந்தா, குடும்பத்துல சண்டை வந்த, யோசி எதனால பிரச்சனை வருதுன்னு, அடுத்த அந்த விசயத்தை நீ செய்யாத., புருஷனை எதுக்காவும் விட்டு கொடுத்து பேசாதா, உனக்கு அவருதான் எல்லாம், அதே மாதிரி தான்  அவருக்கும், அவர் மனசும், வயிறும் வாடாம பாத்துக்கோ” என்றவர்.
மகளுக்கு  கூந்தலை பின்னி முடித்தவர்..
தலை நிறையா பூ வைத்து விட்டு.
மகளின் முகம் பார்த்தவர்.
“எனக்கு  என் அம்மா சொன்னாங்க, அத  உனக்கு நான் சொல்லுறேன், பழய காலத்துல டைலாக் தான்.. பொண்டாட்டி என்கிறவா பகலில் வாசுகியா இருக்கனும், இரவில்  வேசியா இருக்கனுமுன்னு சொல்லுவாங்க, இதுக்கு உனக்கு அர்த்தம் தெரியும் தானே” என்றதும்.
அவள் தெரியும் என்பது போல்  தலையாட்ட.
“உனக்கும், உன் புருஷனுக்கு நடுவுல உன் மாமியார், மாமனார் தவிர யாரும் வரகூடாது, சரியா.
உன்னை  பொறுமையா இருக்கத்தான் சொன்னேன்ன தவிற, அடிமையா இருன்னு நான் சொல்ல மாட்டேன்,
பாத்து நடந்துக்க, முதலில் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்,, அப்பறம் பழகிடும், அம்மா இப்படி பேசுறாங்கன்னு நினைக்காத, மாப்பிள்ளை மனச புரிஞ்சு நடந்துக்கோ” என்றவர்.
“நான் வர்ரேன் டா”. என்றதும்..
“தாங்யூ மா”, என்றாள் அருள்..
“அம்மாவுக்கு யாராவது நன்றி சொல்லுவாங்க டி” என்றவர் அருளை அறையிலே இரு என்று கூறி விட்டு.
சுதாவிடம் வந்தவர், “அருளை பாத்துக்கோங்க  அண்ணி”  என்று கூறியவருக்கு கண்கலங்கி இருந்தது.
“அண்ணி” என்று  தேவகியின் கைபிடித்து கொண்ட சுதா.
அருள் என் பொண்ணு மாதிரி அண்ணி நான் பாத்துக்கிறேன், நீங்க வருத்தபடாமா  போங்க” என்றதும்,..
சரி என்று தலையாட்டியவர், அவர் வீட்டுக்கு கிளம்பி விட்டார்.
 அருள்ஜோதிக்கு தாய் வந்து பேசியதும் கொஞ்சம் தெளிவாக இருந்தாள்.. மொழியைப் பற்றி ரிஷியிடம் கேட்கக் கூடாது தன்னை பற்றி மட்டும் பேச வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள் அருள் ஜோதி.
 சிறிது நேரம் கழித்து சுதா வந்து அருள்ஜோதியை  “வா அருள் சாப்பிடு” என்று   வெளியில் அழைத்து  வந்தார்…
 இவன் எங்கே என்று மகனை  சுதா தேட,, அவனோ மாடியில்  பட்டு வேட்டி சட்டையில் அணிந்து  ஃபோன் பேசிக் கொண்டிருந்தான்…
“டேய் வாடா”  என்று மகனை சுதா அழைக்க..
“டூ மினிட்ஸ் மா” என்றவன் பத்து நிமிடம் கழித்தே உணவு உண்ண, டைனிங் டேபள்  வந்தான்..
அருள் மாமியாரிடம் பேசிக்கொண்டே இருந்தாள்.
ரிஷி:வந்தவன், அருளை ரசித்தவாறே அவள் பக்கத்தில் அமர..
“டேய் உனக்குன்னு இப்போ ஒருத்தி வந்துட்டா, அத நெனச்சு நடந்துக்கோ, உன்  பிஸ்னஸ்சை கொஞ்சம் ஒதுக்கி வை” என்றவர், இருவருக்கும் உணவு பரிமாற, “அப்பா எங்கே மா”,.. என்று ராமமூர்த்தியை கேட்க..
“அப்பா சாப்பிட்டு படுத்துட்டாருடா” என்றார்.
“நீ சாப்டீயா”?.
” நானும்,  அப்பாவும் சேர்ந்து தான் சாப்பிட்டோம், நீங்க சாப்பிடுங்க”.
என்று மருமகளுக்கு, மகனுக்கு நாட்டு கோழி கொழம்பு செய்து  இட்லியோடு பரிமாறினார் சுதா..
“கொழம்பு ரொம்ப நல்லா இருக்குமா, நீங்க சமச்சீங்கலா” என்றதும்.
“ஆமாம்” என்று தலையாட்டி இருந்தார்..
“ரொம்ப நல்லா இருக்குமா” என்று அவன் உண்ண.
இரண்டு இட்லியோடு போதும் என்ற அருளை,  மிரட்டிய சுதா மீண்டும் இரண்டு இட்லியை வைத்து கறிக்கொழும்பை ஊற்றியவர்.
“சாப்பிடு, இது உன் வீடு, நீ கூச்ச படுறதுக்கு, அவசியம் இல்லை” என்றவர், மகனிடம் கண்ஜாடை காட்டி விட்டு கிச்சன் சொல்ல.
மனைவியை பார்த்தவன், “நீ நேத்துல இருந்து சரியாவே சாப்பிடல ஜோ, இது நம்ம வீடுடா, சாப்பிடு” என்றதும்..
அருள் அனைத்தையும்  உண்டு முடிக்க.
சுதா வெது, வெதுபான  பாலில்  பாதாம் சேர்த்து , எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்தார்.
இருவரும் மறுப்பு சொல்லாமல் பாலை வாங்கி அருந்த.
“ஏங்க, ஏங்க என்று கணவரை அழைத்தார் சுதா,..
“இதோ வர்றேன்” என்று ராமமூர்த்தி   தூக்க கலக்கத்தில் வந்தவர்,.
“சொல்லு சுதா” என்று மனைவின் அருகில் வர.
“பிள்ளைகளை ஆசிர்வாதம் பண்ணுங்க”, என்று  திருநீர் தட்டை நீட்ட.
மகன் முகத்தை பார்க்க வெட்கப்பட்டவர், மகன் முகத்தை  சரியாக பார்க்காமல், மகனுக்கும், மருமகளுக்கும் “நல்லா இருக்கனும் ரெண்டு பேரும்” என்று  திருநீர் பூசி  விட.
சுதாவும் தன் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு இருவரையும் வாழ்த்தி திருநீர் பூசிவிட, ரிஷியும், அருள்ஜோதியும், இருவரின் காலில் விழுந்து எழுந்தனர்.
“மருமகளை மேல உன்  ரூம்பிற்க்கு கூட்டிட்டு போ ரிஷி” என்று சுதா.
அவர் அறைக்கு சென்றார் விட்டார்…
“வா அருள்” என்று, அருள் ஜோதியின் கையை பிடித்துக்கொண்டவன் அவன் அறைக்கு அழைத்து செல்ல.
ரிஷியின் போன் பல முறை அடித்துக்கொண்டே இருந்தது..
போனை பார்த்த படியே மேலே வந்தவன்…
அருளை அவன் ரூம்பில் உள்ளே  விட்டவன், ரூம்பை தாழ்லிட்டு, போனை ஆன் பண்ணி காதில் வைத்தவன் பால்கனி சென்று விட்டான்,  அவனுக்கு  முக்கியமான கிளைன்டுகள், போன் செய்திருக்க, சிறிது நேரத்தில்  போன் பேசி முடித்தவன்,, பால் கனி கதவை தாழ்ளிட்டு உள்ளே வந்தவன்..
“சாரி டா அருள் முக்கியமான கிளைன்ட், பேசமா இருக்க முடியாது” என்றவன், தன் போனை சுச்சாப் பண்ணி டேபிள் மீது வைத்தவன்..
அவள்  கட்டில் அமர்ந்திருக்க, அவள்  பக்கத்தில் வந்து அமர்ந்த கொண்டான், அவன் அறையில் எந்த ஒரு அலங்காரமும் இல்லை, பெட்டில் மட்டும் சில ரோஜா பூ இதழ்கள் மட்டுமே உதிர்ந்து கிடந்தது,.
அருளின் குழப்பமான முகத்தை பார்த்தவன்..
 “என்கிட்ட என்ன பேசணும் டா பேசு, ஏன் ஒரு மாதிரியா இருக்க..
 நிச்சயதார்த்த நடக்குற முன்னாடி உன்கிட்ட இருந்த, வெட்கம் எல்லாம் எங்கே போச்சு ஜோ , நான் நேத்து வந்தப்போ உன் முகத்தில் இருந்த சந்தோஷம் இப்ப இல்லையேடா என்ன ஆச்சு உனக்கு ? என்றான்.
“உங்க கிட்ட நான் ஒன்னும் கேட்கனும்”, என்றாள்.
” கேளு”..
 “நீங்க என்னை  இஷ்டபட்டு தானே கல்யாணம் பண்ணீங்க”.
 “ஆமாம்” என்று ரிஷி தலையாட்ட..
 “ஒரு நிமிஷம்” என்றவள்.. அவளின் பேகிலிருந்து  எதையே தேடி எடுத்து வந்து அவனிடம் காட்ட..
 அதைப் பார்த்து அதிர்ந்தவன் “ஏய் ஜோ இதை நீ பத்திரமா வச்சிருக்கியா?”  என்று அதனை வாங்கி ஆசையாக தொட்டு  பார்த்தான்…
 அது அவன்  திருவிழாவில் அவளுக்கு வாங்கி கொடுத்த வளையல்..
 அதை அவள் அணியவில்லை பத்திரமாக வைத்திருந்தாள்..
 ரிஷி முன்  நின்றவள் “இது நீங்க தானே  எனக்கு வாங்கி கொடுத்தீங்க” என்றாள்.
 “ஆமாம் டா இது நான்  வாங்கி  கொடுத்த  வளையல் தான்,  அது எனக்கு ஞாபகம் இருக்காதா என்ன”? என்றான்..
” இதை என் கையில் கொடுத்து என்ன சொன்னீங்க ஞாபகம் இருக்கா” என்றாள்..
 “என்ன ஆச்சு அருள் உனக்கு? ஏன் இப்படி பேசற” என்றான்..
 “ஞாபகம் இருக்கா? இல்லையா” என்றவளுக்கு அழுகை வந்தது..
 “டேய் அருள் ஏண்டா  அழுவுற” என்றவன் வளையல் பாக்ஸை பக்கத்தில் எடுத்து வைத்துவிட்டு அவளின்  கைகளை பிடித்துக் கொண்டவன்..
 “அழாத எதுக்கு அழுகிற நீ இப்போ ,   நீ என்ன நினைக்குறீயோ அத கேளு,  எனக்கு நீ கேட்குறது  புரியல,  நிதானமா பேசு நான் உனக்கு பதில்  சொல்றேன் டா” என்றான்..
 “என் பெயர் அருள் ஜோதி என்னை உங்களுக்கு பிடிக்கும் தானே” என்றாள்.
 “உன்னை பிடித்ததால் தானடா எங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி உன்னை பெண் பார்க்க சொல்லி கல்யாணம் பண்ணி இருக்கேன் இதுல உனக்கு என்ன சந்தேகம்” என்றான்…
 “இந்த வளையல் நீங்க வாங்கி கொடுத்தது தானே”.
 “ஆமாடா நான் தான் வாங்கி கொடுத்தேன்”
 “என்ன சொல்லி கொடுத்தீங்க?”..
 “நீ இந்த  வளையலை  நீ ஆசையா பார்த்த அதனால உனக்கு வாங்கி கொடுத்தேன்”.
 “வாங்கிக் கொடுத்து என்ன சொன்னீங்க? “..
 “இந்த வளையல் உன் கை நெறஞ்ச மாதிரி,  உன் கழுத்தில் நான் கட்டுற  தாலி ஏற ஆசைப்படுறேன்,  எனக்காக காத்திரு” என்று சொன்னேன்…
 “நீங்கதானே அதை சொன்னீங்க.
 என்கிட்ட தானே அதை சொன்னீங்க”?..
 “ஆமாடா ஆமா நான் தான் உன் கிட்ட சொன்னேன் இப்ப என்ன ஆச்சு உனக்கு”..
 “அப்போ என்னை உங்களுக்கு பிடிக்கும் அப்படித்தானே”..
 “அருள் என்னடா ஆச்சு உனக்கு” என்றவன் அவளின்  தோளை தொட்டு அணைத்துக்கொள்ள..
 “என்னை உங்களுக்கு பிடிக்கும் தானேங்க” என்றாள்.
 “உன்னை மட்டும் தான் எனக்கு பிடிக்கும் ஜோ என்னாச்சுடா”.
என்றவன்.
அவளை அணைத்திருக்க.
 அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.. சிறிது நேரம் இருவரும் பேசவில்லை அமைதியாக இருந்தனர்..
 “வேற ஏதாவது உனக்கு கேட்கணுமா என்றான் ரிஷி…
 “இல்லை” என்று அவள் தலையாட்ட..
 “குழப்பம் எல்லாம் தீர்ந்து விட்டதா” என்றான்.
அவள் “ஆமாம்” என்று தலையாட்டி அவனிடமிருந்து வெட்கப்பட்டு பிரிய.
 “ஏய்… என் பொண்டாட்டி வெக்கப்படுற” என்றவன்  அவள் கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தமிட்டிருந்தான்.
 அதில் இன்னும் வெட்கப்பட்டு. அவனைப் பார்த்து திரும்பிக் கொண்டாள்.
  அவள் தலையில் சூடி இருந்த மல்லிகை பூவின்  வாசனை அவனுக்கு போதை ஏற்ற..
, “அருள்” என்று அவள் சூடிய பூவை முதலில்  வாசனை பிடித்தவன், பின்பு அவளையும் பூ வோடு சேர்த்து பின்னிருந்து   அவளை அணைத்து  வாசம் பிடிக்க.
அருள் அவன் மீது மொத்தமாக  சாய்ந்திருந்தாள்…
, “ஜோ இந்த பூ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது” என்றவன்..
 “இதை எடுத்திரலாமா”, என்று அவளிடம் பர்மிஷன் கேட்க,
“உம்ம்ம்” என்று அவனுக்கு அனுமதி கொடுக்க..
பின்பு எதற்கும் அவன் அவளிடம் அனுமதி கேட்க வில்லை, பூவையும்,  அவளையும் சேர்த்து கலைத்திருந்தான்..
விடிய, விடிய அவளோடு கூடி களித்தவன் விடிந்த பிறகும் அவளை விடவில்லை. இரண்டு வருட தேடலை அவளுக்கு உணர்த்தியிருந்தான் ரிஷி..
அவள் ஓய்வு அறை சென்று வந்த போது, ரிஷி கையில் அவன் இரண்டு வருடமுன் வாங்கி தந்த வளையலை வைத்திருந்தவன்.
‘இதை நீ போடவே இல்லையா ஜோ” என்றான்.
அவள் ஆமாம் என்று தலையாட்ட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!