Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 3 2

“ஏன்” என்றான்.
“போட்டா பழசாகிடும் அதுனால தான் தினமும் எடுத்து பார்ப்பேன்” என்றவளை.
அருகில் அழைத்தவன் அவள் அணிந்திருந்த தங்க வளையலை கலட்டியவன்,, அவளுக்கு அவன் வாங்கிய தந்த  கண்ணாடி வளையலை கைநிறைய அணிவித்து விட்டவன்.. அருளை பார்க்க.
அவளோ அந்த கண்ணாடி வளையலை தொட்டு பார்த்து ரசித்து சிரிக்க.
“ஹலோ என்னை பார்த்து ரசிக்காம வளையலை  பார்த்து சிரிக்குற..
இது சரியில்லை” என்றவன்.நமட்டு சிரிப்பு   சிரித்தவன்
அவளின்  கையை தன் தோள் மீது போட்டவன்…
அவளை இடுப்போடு தூக்கி தன் மீது போட்டு கொண்டவன்..
வளையல் சத்தத்தோடு அவளோடு இன்னொரு முறை இணைய.
விடிந்து விட்டிருந்தது.
அருளை  விடிந்த பிறகும்  விடாமல் வளையல் சத்தத்தில் அவளை  கொஞ்சிக்கொண்டிருந்தவன், சூரியன் வந்த பிறகே அவளை  விட.
இருவருக்கு நல்லா உறக்கம்.
.
சுதா  8 மணிக்கு மகனுக்கு பலமுறை போனில்  அழைக்க..
மகன் போன் சுச்சாப் என்று வர.
சுதா சிரித்து அமைதியாகி விட்டார்.
அருள் வீட்டிலிருந்து, காலை விருந்துக்கு வர சொல்லி பல போன் கால் வர.
தேவகியிடம் , சுதா மறைமுகமாக சொல்லி விட்டார், “அவங்க இன்னும் கீழ வரல, வந்தவுடன் வர சொல்லுகிறேன்” என்று.
விசயத்தை பிரிந்து கொண்ட தேவகி, “சரி அண்ணி பிள்ளைகள் வந்தவுடன் வீட்டுக்கு அனுப்பி விடுங்க”, என்று கூறியவருக்கு, மகள் வாழ ஆரம்பித்து விட்டாள் என்று சந்தோஷத்தோடு மதியம் விருந்துக்கு ஏற்பாடு பண்ணி கொண்டு இருந்தார்..
 அருள் காலையில் எழுந்திருக்கும்  போது  மணி  காலை  10..
 அடித்து புடித்து எழுந்தவள், டைமை பார்த்து ரிஷியை  எழுப்ப.
 அவனோ  மீண்டும் அவளை அணைத்தபடியே   தூங்க முயற்சிக்க.
“ரிஷி அத்தான் மணி பத்து” என்றாள்.
“என்ன” என்று எழுந்தவனுக்கு கண்ணெல்லாம் எறிய,.
“என்ன  சொன்னா ஜோ?” என்றான்..
“மணி  பத்து” என்றாள்.
“இல்ல அதுக்கு முன்னாடி ஏதோ சொன்னீயே”?..
“என்ன சொன்னேன் என்று அவள் யோசிக்க”?.
“ரிஷி அத்தான் சொன்னீயே”.
என்றான்..
“அது வாய் தவறி வந்துடுச்சு” என்று அவள் வெட்கப்பட்டு  கூற.
“ஏய்… சூப்பரா இருக்கு, இன்னொரு தடவை கூப்பிடு” என்று  அவளை கெஞ்ச.
“நோ, நோ” என்றவளுக்கு சிரிப்பு வர.
“உன்னை எப்படி சொல்ல வைப்பது  என்று எனக்கு தெரியும் டி பொண்டாட்டி ” என்றவன்.
அவளை  அள்ளிக்கொண்டு பாத் ரூம் சென்றான்.
ஒரு முறையல்ல, பல முறை அவளை அத்தான் என்று சொல்லி வெட்கப்பட வைத்தான், இருவரும் குளித்து முடித்து வெளியே வர  காலை 12 மணியாகிருந்தது..
ரிஷியிடம் “கீழே போக பயமா இருக்கு, என்னை தப்பா நினைக்க போறாங்க அத்தை”. என்று புலம்பியவளை.
தன் கைவளைவில் கொண்டு வந்தவன், “யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க,  நீ வா” என்று அவள்  கன்னத்தை முத்தங்களால் நிரப்பிய படியே, கீழே அழைத்து சென்றான்..

அருள் ஜோதி மாமியார் என்ன நினைப்பார் என்று பயந்து கொண்டே வர.

ரிஷி எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் கீழே வந்தவன்,  தாய், தந்தையை தேட.
ராமமூர்த்தி வெளியே சென்றிருக்க.
இரவு சென்னை கிளம்புவதற்காக சுதா பொருள்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தார்.
சுதாவை பின்னாடி இருந்து அணைத்துக்கொண்டான் ரிஷி.
மகன் அணைத்ததும் அவன் கன்னத்தை வருடி விட்டவர்,..
“நல்லா தூங்குனீயா?” என்றதும்.
“ஊம்ம்” என்று ரிஷி தலையாட்ட..
 “வா, உனக்கும், மருமகளுக்கும் பசிக்கும்”  என்று வெளியே அழைத்து வர..
அருள் மாமியார் முகத்தை பார்க்க வெட்கப்பட.
“அருள் வாடா” என்று சகசமாக அழைத்தவர், பூஜை அறையில் விளக்கு ஏற்ற சொன்னார்.
 அருள் தயங்கி தயங்கி செய்தாள்..
“என் மேல கோபமா அத்தை”?  என்று அருள் கேட்டதும்..
“எதுக்குடா”?  என்றார்.
 “இல்ல நான் லேட்டா எழுந்து வந்ததுக்கு” என்று அவள் சொல்ல..
 மருமகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவர்..
 “நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதுமடா” என்றவர்..
“வா”, என்று இருவருக்கும் முதலில் இளநீர் கொடுத்து பருக சொன்னவர்.
பின்பு தேங்காய் பாலும், இடியாப்பமும் கொஞ்சமாக உண்ண கொடுத்தவர்.
“விருந்துக்கு உங்க வீட்டுக்கு போகனும் கிளம்புங்க” என்று..
மகனையும், மருமகளை அழைத்து அருள் மொழி வீட்டுக்கு விருந்துக்கு சென்றார்கள்.
 தேவகி  மகளின் முகத்தில் தெரிந்த சோர்வும், பொழிவும் அவருக்கு ஒரு சந்தோஷத்தை தர.
 கறி விருந்தை அசத்தி விட்டார்..
 விருந்து முடிந்தது மனைவியா அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்து விட்டான் ரிஷி…
 இருவருக்கும் இருந்த களைப்பில், வீடு  வந்த உடனே இருவரும் தூங்கி விட்டனர்..
 சாயங்காலம் எழுந்த ரிஷி.
 மனைவியை பார்க்க அருள் நல்ல தூக்கத்தில் இருந்தாள்.
 மெல்ல கீழே வந்தவன் சுதாவிடம் நாங்கள் இரண்டு பேரும் ஒரு வாரம் மூணாறு போகிறோம் என்று சொல்ல..
“டேய் இங்க உங்களுக்கு விருந்து இருக்குடா, அருள் தாய் மாமாவீடு, நாளைக்கு உங்களை விருந்துக்கு அழைத்திருக்காங்க.. அப்பறம் ஐய்யனார்  சம்பந்தி, தம்பி வீடும் அடுத்த நாள் உங்களை விருந்து வைக்க அழைச்சிருக்காங்க,  இத விட்டுட்டு, மூணாறு ஒரு வாரம் போறேன் சொல்லுற” என்றார்.
 “வீடு, வீடா போய் என்னால விருந்து சாப்பிட என்னால முடியாது, நான் அவளை கூட்டிட்டு இப்போ கிளம்புறேன் மா” என்றான்.
 “டேய் ஒரு வாரத்துல சென்னையில  ரிஷப்சன் இருக்கு, அது ஞாபகம் இருக்கா”, என்றார்.
 “இதெல்லாம் ஞாபகம் இருக்கு இன்னும் பத்து நாள்ல நான் குஜராத் ப்ராஜெக்ட் விசயமா  போகணும் அதுவரைக்கும்  அருள்  என் கூட தான்  இருக்கணும்”..
 அவ்வளவுதான்  என்று பேச்சை முடித்தவன் அருளை அழைத்துக்கொண்டு மூணாறு கிளம்பி விட்டான்..
 சுதாவுக்குத் தான் கஷ்டமாக இருந்தது,, தேவகியை  அழைத்து அவர் விவரம் சொல்ல..
 “பரவாயில்லைங்க மாப்பிள்ளை இஷ்டப்படி இருக்கட்டும், அவங்க சந்தோசம்  தான் முக்கியம் நமக்கு, விருந்து தானே பிறகு பார்த்து கொள்ளலாம்” என்று முடித்து விட்டார் தேவகி.
 ஒரு வாரம் எப்படி போனது என்றே தெரியவில்லை ரிஷிக்கும், அருள் ஜோதிக்கும்,.
 தூங்க, உணவு உண்ண  மட்டுமே அவளை விட்டவன்,  பிறகு அனைத்து நேரத்திலும்  அவன் கையணைப்பிலே  அருளை  வைத்திருந்தான்…
 அவர்கள் இருந்த காட்டேஜ்சை விட்டு இருவரும் ஒரு வாரம் வெளியேவே வரவில்லை..
 ரிஷியும், அருளும்  ஹனிமூனை  ரசித்து கொண்டாடினார்.
 இதோ  ரிஷப்சன் அன்று காலை தான் இருவரும்  சென்னை  வந்திருந்தார்கள்..
 அருள்ஜோதியின் சொந்த பந்தமும், அருள் விட்டாரும்,, அவர்களுக்கு வரும்  முன்பே  வந்திருக்க, அருளுக்கு கஷ்டமாக இருந்தது.
தங்கள் வீட்டினர்  வரும்போது நான் அங்கே இருக்க வேண்டும்  என்று அருள் முன்பே ரிஷியிடம் கூற.. ..
 அவனோ  அவள் பேச்சைக் கேட்கவே இல்லை,, “ஏன் என்கூட இருக்க  உனக்கு இஷ்டம் இல்லையா” என்று அருளை  அவன் கேட்க..
 அதற்குப் பிறகு அருள்ஜோதி வாயை திறக்கவில்லை..
  நடு இரவு தான் கிளம்பி இருந்தான் மூணாறில் இருந்து சென்னைக்கு வர.
அருள்ஜோதிக்கு ஒரு அளவுக்கு ரிஷியின் குணம் தெரிந்தது பிடிவாத குணம் கொண்டவன், கோபம் வரும், அவன்  நினைத்தது  தான் நடக்க வேண்டும்,  என்று ஒரு எண்ணம் அவனுக்கு..
 அருள் ஜோதி சொல்வதை அவன் காதில்  போட்டுக் கொள்ளவில்லை..
 இதோ சென்னையில் மிக பிரமாண்டமாக அருள்ஜோதிக்கும் ரிஷிக்கும் ரிசப்ஷன்   நடந்து கொண்டிருந்தது..
 ரிஷியின் பிஸ்னஸ்சில் பழக்கமானவர்கள்  நிறைய பேர் வந்திருந்தனர், சொந்த பந்தம், பிரண்ட்ஸ்  என்று நல்ல கூட்டம்.
 அருள்ஜோதியின் வீட்டிலிருந்து மிக நெருக்கமான  சொந்த பந்தங்கள் மட்டும் வந்திருக்க மேடைக்கு வந்தவர்கள் அனைவரும் மொழி ஏன் வரல்ல, மொழி ஏன் வரல, மொழி எங்கே?  என்று ஆயிரம் கேள்வி மொழியை பற்றி  அருள் ஜோதியிடம் கேட்க..
  சிரித்து சமாளித்து இருந்தாள்  அருள்ஜோதி..
 ரிஷி அருள் ஜோதியிடம் “யாரு மொழி” என்று கேட்க,  “அவளா,  வருவா” என்று சிரித்து  சமாளித்து இருந்தாள்..
 அன்று முழுவதும் அருள் ஜோதியின் சொந்தம் முழுக்க,  யாரை பார்த்தாலும்  அனைவரின்  வாயிலிருந்தது  வந்தது ‘மொழி, மொழி’  என்று  பெண்ணை பற்றியே அவர்கள்  பேச,..
அருள்ஜோதியின் வாயிலிருந்து எந்த வார்த்தையும்  மொழியை பற்றி வரவில்லை…
ரிஷப்சன் முடிந்ததும், அனைவரும் ஒன்றாக உணவு உண்டு முடித்ததும் பேசிக்கொண்டிருக்க.
 அருள்ஜோதியின் வீட்டார் இப்போதே கிளம்புவதாக சொல்லவும் அவர்களோடு அருள்ஜோதி பேசிக்கொண்டிருந்தாள்…
ரிஷி தன் தாயின் அருகில் வந்தவன்.
“ம்மா மொழியின்னா  யாருமா? உனக்கு தெரியுமா?”  என்று கேட்க.
 அவனை பார்த்து சிரித்திருந்தார் சுதா…
“ம்மா சிரிக்காம சொல்லு” என்றதும்..
“ஏன்டா உன் மச்சினியை பத்தி என்கிட்ட கேட்குற” என்றதும்.
“மச்சினியா அப்படியின்னா? யாருமா எனக்கு புரியல “? என்றான்.
சுதா மகனை பார்த்து முறைத்தவர்.
“ஏன்டா அவளுக்கு உன்னை பத்தி எல்லாம் தெரியுது, உனக்கு அவளை பத்தி தெரியலன்னு சொல்லுற”..என்றதும்.
 “ம்மா குழப்பாமா அவ யாருன்னு சொல்லு” என்றான்..
“டேய் மொழியின்னா, அருள் மொழி டா,,. உன் பொண்டாட்டியோடு தங்கச்சி அருள்மொழி,,  உன் கிட்ட உன் பொண்டாட்டி  சொல்லல்ல”. என்றதும்..
“சித்தி பொண்ணா”? என்றான்..
“இல்லடா கூட பிறந்தவ, மருமக உன்கிட்ட சொல்லல்ல” என்று சுதா கேட்டதும்…
“இல்லை” என்றவன்…
“அந்த மொழி பொண்ணோட போட்டோ வச்சு இருக்கீயா” என்றான் ரிஷி..
“போட்டோ எதுக்குடா?அருள்ஜோதியும், அருள்மொழியும் பாக்குறதுக்கு  ஒரே மாதிரியா தான் இருப்பாங்க”,  என்று  அவன் தலையில் இடியை இறங்கியவர்….
மகன் அதிர்ச்சியாக நின்றிருப்பதை பார்க்காமல்..
பின்பு  யோசித்து சுதா .. “இரு நாங்க கல்யாணத்துக்கு  துணி எடுக்குறப்போ எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுத்தோம்! என்றவர்.
அவர் போனிலிருந்த, அருள் மொழியும், அருள்ஜோதியும் சுதாவோடு ஒன்றாக நின்றிருந்த புகைபடத்தை  ரிஷியிடம் சுதா காண்பிக்க.
வாங்கி பார்த்த ரிஷிக்கு மனதில் எரிமலை வெடித்தது,,.
அருள்ஜோதியும், அவள் கூட இருந்த மொழியும்  ஒரே மாதிரி முக ஜாடையில் இருக்க,  இதில் யார் என்னுடைய அருள் என்று பார்த்தான்,, அவனால் கண்டு பிடிக்க  முடியவில்லை ,, இரண்டு பேரும்  ஒரே  மாதிரி இருக்க.
அந்த புகைப்படத்தை பார்த்தவனுக்கு, ஏதோ பெரிய தப்பு நடந்திருக்கிறது என்று தோன்றியது,,,, மொழியை பற்றி  தன் மனைவி ஒன்றும் தன்னிடம்  சொல்ல வில்லையே, தனக்கு தங்கை இருக்கிறாள் என்று  கூட  அவள் கூற வில்லை, ஏன் தன்னிடமிருந்து அவள் தங்கையை மறைத்தாள்..
ஆமாம் மொழி எங்கே, கூற பிறந்த அக்கா திருமணத்துக்கு கூட வரமால் அவள் எங்கே சென்றாள் என்று ரிஷி யோசிக்க.
இது காரணமான அருள் மொழியோ தீர துயரத்தில்,  அந்த அயல்நாட்டில் நடு இரவில் , யாரும் இல்லா கிரவுண்டில்  ஓடிக்கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!