Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் – 7

அத்தியாயம்: 7

“ம்ச்… இப்ப எதுக்கு நீ ஓவரா ஸீன் போடுற. வா… இதுக்கு தான கல்யாணம் பண்ண. கம் மைம்மா…” என்றவனுக்கு வாங்கிய அடி வலிக்கவில்லை போலும். அவளைப் பேச விடாது தூக்கிக் கொண்டு மெத்தையில் கிடத்தினான்.

“யோவ்… வுடுய்யா என்ன.. வுடூ… ” அவனின் பிடியில் இருந்து இறங்க முயல முடியவில்லை. அவன் மெத்தையில் அவளைக் கிடத்தி அவள் மேல் சரியும் சிறு இடைவெளியில் மான் போல் துள்ளி எழுந்து நின்று கொண்டு நழுவிய சேலையைச் சரி செய்தபடி அவனை முறைத்தாள்.



Advertisement

“ஏன்டி நல்ல மூடுல போய்க்கிட்டு இருக்கும் போது கட்டைய போடுற. வா… எனக்கு இது முதல் அனுபவம். நிறைய எக்பெக்ட்டேஷன் இருக்கு. ட்ரீம்ஸ் இருக்கு. அது எல்லாத்தையும் நிறைவேத்தாம இன்னைக்கி உன்ன விடுறதா இல்ல. எங்கக்குக் கிடைச்ச பொம்பள பொம்மை நீ.. கம்… ” என எழுந்து கரம் பற்ற,

Advertisement

“தோ பாரு.. தொடுற வேலை எல்லாம் வச்சிக்காத. சொல்லிட்டேன்… காலைல நீ வேற ஒருத்திக்கி தாலி கட்ட இருந்தவன். அது நின்னு போச்சி. அந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லாம, இப்ப வேற ஒருத்திய பர்ஸ்ட் நைட் கொண்டாட கூப்பிடுற… வெட்கமா இல்ல.”

Advertisement

“வேற ஒருத்தி இல்லம்மா… இது ஏன் பொண்டாட்டி… ஆமா நீ இப்ப இவ்ளோ பேச்சு பேசுறியே.  நான் தாலி கட்டும் போது பேசாமதான இருந்த. அப்ப இப்பயும் நீ பேசக் கூடாது.. வா வந்து படு. விடிய விடிய நிறைய வேல இருக்கு. அந்த சேலைய மட்டும் ஒரு ஓரமா கலட்டீட்டு வா… மத்தெல்லாம் நான் கழற்றிக்கிறேன். ” என்றவனின் பேச்சு பாரதிக்கு இனிக்கவில்லை.

Advertisement

“யோவ் இன்னாய்யா நீ வேற மாதிரி பேசுற… நீ வருவ, கோபமா என்ன பாத்து ‘நீ எனக்கு பொண்டாட்டி இல்ல. நான் உனக்கு புருஷனும் இல்ல. இது கல்யாணமே இல்ல..’ ன்னு வசனம் பேசிட்டு தனியா போய் படுத்துக்கிவன்னு பாத்தா. நீ வா மஜா பண்ணலாம்னு கூப்பிடுற. “

“நிறைய சீரியல் பாப்பியோ! அதுல தான் கல்யாணத்த பத்தாது எபிசோட்ல முடிச்சிட்டு ஃபஸ்ட் நைட்ட இரண்டாயிரமாது எபிசோட்ல வைப்பானுங்க. கட்டுன பொண்டாட்டிய தள்ளி வச்சி, அப்றம் டச்சிங் டச்சிங் பண்ணி. ஆமை வேகத்துல போகும். லாங் கேப்…. ஆனா முக்கியமானது நடக்காது.

பட் இது சீரியல் கிடையாது. ரியல் லைஃப். கட்டுன பொண்டாட்டிய பக்கத்தில வச்சிட்டு சன்னியாச விரதம் இருக்க நான் ஒன்னும் சாமியார் கிடையாது. இப்ப எந்த சாமியாரும் அப்படி இருக்குறது இல்ல தான். இருந்தாலும் பரவாயில்லை. உவமை நல்லா இல்லன்னாலும் சொல்ல வந்தது புரிஞ்சிருக்கும். புரியிதுல டி…” என கேட்க,

“புரியல… கல்யாணம் ஏதோ சந்தர்பத்துல நடந்திடுச்சி. அதுக்குன்னு இப்படில்லாமா நடந்துப்ப. முதல்ல என்னை டி போட்டு கூப்பிடாத. எனக்கு அது பிடிக்கல.”

“அப்படி தான் டி கூப்பிடுவேன் டி…டி…இஇஇஇ.. ” என டி யை அழுத்தி கூற,

” வாய மூடிக்கின்னு கெட… அல்லாடி வுட்சி பேத்திடுவேன். யாருய்யா நீ? என்னை டி போட்டு கூப்பிட.” என இல்லாத சட்டை கையை மடித்து விட்டபடி பார்த்திபனின் முன் நின்று கேட்க,

“அத காட்டத்தா டி கூப்பிடுறேன். நான் புருஷன்னு உ மனசுல பதிய வேண்டாமா! வாடி.. ” என அவளின் கரம் பற்றி மெத்தையில் தள்ள, விழாமல் தம் பிடித்து நின்றவள்,

” போதும்ய்யா.. வு வெளாட்டா இத்தோட நிப்பாட்டிக்க.”

” விளையாட்டு தான். விளையாட்டுத்தான்… இது நம்மல மாதிரி பெரிய பசங்க நாலு சுவத்துக்குள்ள விளையாடுறது. நீ உன் ஆட்டத்த ஆடி முடிச்சிட்ட. நான் ஆரம்பிக்க வேண்டாமா? இந்த விளையாட்ட தனியா விளையாண்டா சுவாரஸ்யமா இருக்காது. அதுனால நீயும் வந்து கம்பெனி குடு…

விடிய விடிய செம்மையா விளையாண்டி யாரு வின் பண்றான்னு பாக்கலாம். எனக்கு தோல்வி பிடிக்காது. அதே நேரம் இதுல தோத்தா தப்பில்ல. வா… ” என அவளை நெருங்க, அவள் பின்னால் நகர்ந்தாள். மெத்தை தடுக்கவே பொத்தென அதில் விழ,

“பார்த்தி வேணா… இப்படில்லாம் பேசாத… கேக்கவே சகிக்கல… “

விட்டாள் அழுது விடுவேன் என்றவளை எழ விடாது அவளின் முந்தணையைக் குனிந்து எடுத்தவன், அதைக் கைகளில் சுருட்டியவாறே அவளை நோக்கி குனிந்து,

“நீ கேக்கவே வேண்டாம் மைம்மா… நான் தியாரியா பாடம் நடத்த போறது இல்ல. ப்ராட்டிகல் தான். ஒன்லி செயல் முறை விளக்கம். அதுக்கு காதும் பேச்சும் அவசியமே இல்ல… கம்… டயம் வேஸ்ட் பண்ணாத..” என்றவன் அவளைத் தன் கரத்திற்குள் சிறை செய்ய மெத்தையில் இரு கரம் ஊன்றி கரங்களுக்கு இடையே அவளை கிடத்தி அவளின் முகம் நோக்கி குனிய,

அவனை விலக்க நினைக்கும் அவளின் அனைத்து முயற்சியும் ஆடவனின் இரும்பென இறுகிய உடலில் மோதி தவிடு பொடி ஆனது.

“பார்த்தா வேண்டாம். நடந்த எதுக்குமே நான் காரணமில்ல. நீ பூஜாவ வேணும்னாலும் கேளு. வேணா பார்த்தா.” என்றவளின் முகத்தில் கண்ணீர் விழி ஓரம் உருண்டு நிற்க, பார்த்திபன் கரங்களை விலக்கி விடுதலை தந்தான். அவ்வளவு தான் பார்த்திபனின் கோபம். அதுவும் கண்ணீர் விடும் பெண்களைக் கண்டால் அது சுடு வானலியில் பட்ட நீர் போல் வேகமாக ஆவியாகி விடும். சில நொடிகள் அவளுள் ஒரு நிம்மதி பிறந்தது.

“எவ்ளோ காசு வாங்குன? என்னோட கல்யாணத்த நிப்பாட்டுறதுக்கு எவ்ளோ குடுத்தான் அவெ? எங்கூட பழக எவ்ளோ கொடுத்தான்? அந்த டிசைன வித்த மாதிரி எவ்ளோக்கு வித்த என்னை?” என எழுந்து அவளின் கன்னம் பற்றி விழிகளை உற்று நோக்கி கோபமாக கேட்டான்.

“நம்பு பார்த்தா… யார் சொல்லியும் நான் பழகல. டிசன் வேணும்னா நான் திருடிருக்கலாம். ஆனா இது…. என் தப்பில்ல பார்த்தா…” என இறைஞ்ச, அவனுக்கு ஆயாசமாக வந்தது. அவளின் கெஞ்சல் மொழியில் மனம் தடுமாறி கோபமெனும் வெள்ளத்தை வடிந்தோடச் செய்ய, மெத்தையில் படுத்துக் கொண்டான்.

“முதலிதும் என்னோட தப்பில்ல. நீ தான் வந்து வந்து பேசுன. திருடலாம் செய்யல. நீ அலட்சியமா இருந்த நான் கஷ்டமே படாம அத எடுத்திட்டேன் அவ்வளவு தான். நீ கேட்டதும் தப்ப சரி பண்ணிட்டேன். அதுக்கப்பறமும் நீ தான் என்னை தேடி தேடி வந்த. நான் உன்ட்ட இருந்து தள்ளி தான் இருக்க நினைச்சேன். நீ தான் அதுக்கு விடல.” என்றவள், அவனுக்கு அருகிலேயே இடைவெளி விட்டு படுத்துக் கொண்டாள்.

” தப்பு தாண்டி… நீ ப்ராடுன்னு தெரிஞ்சும் உங்கூட பழகுனது தப்பு தான். நாந்தா எச்சரிக்கையா இருந்திருக்கணும்.. உன்ன தேடி தேடி வந்து, இப்ப ஒரு பொண்ணோட லைஃப்பையே பாழாக்கிட்டேன்… ச்ச… ” என இரு கரத்தையும் தலைக்கு மேல் உயர்த்தியவனுக்கு விஷாலினியின் நிலை தான் கவலை அளித்தது.

ஆசையை ஆசையாய் அவள் மாமனுடன் வாழும் வாழ்க்கை எதிர்நோக்கி பல கனவுகளுடன் இருந்த அவளை ஏமாற்றி, சோகக் கடலில் தள்ளியது போல் ஓர் உணர்வு.

“மாமா கல்யாணத்துக்கே அப்றம் இந்த ரூம்ல கட்டில் வாங்கி போடணும் மாமா. அப்பத்தா இது பெட் ரூம் மாதிரி இருக்கும். சுவத்துல இருக்குற கண்ராவிய கிழிச்சி எறியணும்.” எனப் பல கனவுகளைத் தாங்கி பேசியிருந்தாள். இப்போது அது கானல் நீராய் மாறிவிட்டது. அதற்கு காரணம் இவள் தான்.

தன் படுக்கை அறைக்குள் நுழையும் முன் தன் செல்ல விஷா குட்டியைப் பார்த்து விட்டு தான் வந்தான். கண்களில் கண்ணீர் வற்றி விடும் அளவிற்கு அழுதவள் அப்போது தான் உறங்கி இருந்தாள். கன்னத்தில் படிந்திருந்த கண்ணீர் உப்பு கோடுகளாக தெரிய, உறங்கும் அவளின் தலையை இதமாய் வருடிவிட்டான் பார்த்திபன். அந்த தொடுகையில் காதலோ காமமோ கிடையாது. அது வைரத்தையொத்த தூய்மையான அன்பு. சில நிமிடங்கள் அப்படியே நின்றவனை நிகழ் உலகத்திற்கு இழுத்து வந்தது வரலட்சுமியின் குரல்.

அவரும் அனந்தராமனைப் போல் பாரதியுடன் நடந்த திருமணத்தை, ஏற்று வாழ்க்கையைத் தொடங்க சொல்லி அறிவுரை வழங்கினார். அதுவும் சற்று அழுத்தமாக, கட்டளை‌ போல். அத்தையின் இந்த பேச்சிற்கும் அவள் தான் காரணம் எனக் கோபம் வந்தது.

தன் விஷா குட்டியைப் பற்றி வாய் விட்டு பார்த்திபன் புலம்ப, அப்போது தான் ஒன்றை உணர்ந்தாள் பாரதி, தன் வாழ்க்கை வீணாகி விட்டது என்று சொல்லவில்லை என்பதை. மனம் ஒரு நொடி அவனின் மனைவியாய் மகிழ்ந்தாலும், வேண்டாம்… இந்தக் குடும்பமே வேண்டாம்… இவனும் வேண்டாம்… இதற்கு முன் அவள் எடுத்த முடிவை அவனிடம் கூறினாள்.

அதான் பிரிந்து செல்வது…

” நாம பிரிஞ்சிடலாம் பார்த்தா.. ” என்றவள் தன் மனவலிகள் மொத்தத்தையும் மண்ணில் போட்டு புதைப்பது போல் இதயக்கூட்டில் புதைத்துவிட்டு உத்திரத்தில் தொங்கிய மின் விசிறியை பார்த்து பேச,

“எப்ப சேந்தோம் பிரியிறதுக்கு. தனி தனியா தான இருக்கோம். நாலு அடி டிஸ்டென்ஸ் விட்டு. ” எனக் கேலியாக அவன் கூற,

“ம்ச்… விவாகரத்து வாங்கி புருஷெ பொண்டாட்டிங்கிற உறவுல இருந்து பிரிஞ்சிடலாம்னு சொன்னேன். ” என அவன் முகம் பார்த்து கூறினாள்.

“ம்… அது தான் சரியா இருக்கும். பட் அது உடனே முடியாது.”

“ஏன்?”

“ஏன்னா நீ தான் பேசி பேசி ஒருத்தர படுக்கைல படுக்க வச்சிட்டியே. கூடவே அவரு எங்கத்த கால்ல சலங்கைய கட்டி விட்டுட்டு படுத்திட்டாரு. அவங்க ரெண்டு பேர் தான் உங்கூட குடும்பம் நடத்த சொல்லி ஐடியா குடுத்து பால் சொம்போட அனுப்பி விட்டாங்க. யாருக்காக இல்லன்னாலும் அவங்களுக்காகவாது நாம ஒன்னா புருஷெ பொண்டாட்டியா இருந்து தான் ஆகணும்.”

“அது முடியாது என்னால. “

“என்னாலயும் தான். என்னை ஏமாத்தி சீட் பண்ண ஒருத்திய லைஃப் லாங்க தூக்கி சுமக்க நான் ஒன்னும் தியாகி கிடையாது. ” என்றவனை முறைத்தவள்,

“ஆறு மாசத்துல அம்மா டிரிப் முடிஞ்சி வீட்டுக்கு வர்றப்ப நான் என்னோட வீட்டுல இருக்கணும். தங்கச்சிய ஹாஸ்டல்ல சேத்தது வசதியா இருந்தாலும், லீவ் விட்டா சமாளிக்கிறது கஷ்டம். இப்ப என்ன பண்ண? ” எனச் சோர்வுடன் முழங்காலைக் கட்டிக் கொண்டு தலை சாய்த்தவள் கேட்க, பார்த்திபன் மேஜையை திறந்து உள்ளிருந்து ஒரு பேப்பரை எடுத்தான்.

“படிச்சி பாத்திட்டு சைன் போடு. ஆறு மாசம் தான். அதுக்கு மேல நாம புருஷெ பொண்டாட்டியா நடிக்க வேண்டியது இல்ல. பழையபடி இருக்கலாம்.” என்றான். என்னதது என வாங்கி பார்த்தவள்,

‘இதுக்கு தான் தாலி கட்டுனதும் எந்திரிச்சி போனியா?’ என்பது போல் பார்த்துவிட்டு, 

“என்ன எழுதிருக்கு? ஒன்னுமே புரியலயே.” என்று காகிதத்தை திரும்பி திரும்பி பார்த்து மீண்டும் மீண்டும் வாசித்து அதில் இருந்ததை புரிந்து கொள்ள முயன்றாள்.

அதாவது பாரதியுடனான அவனின் திருமணத்தை ஒப்பந்த கல்யாணம் போல் ஆறு மாதங்களுக்கு மட்டுமே என்ற ரீதியில் டாக்குமெண்ட் தயார் செய்து வந்துள்ளான்.

அதில் இருவருக்குமான உடல்ரீதியான பிஸிக்கல் ரிலேஷன் ஷிப்பானது விருப்பத்தின் பேரில் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். அப்படி இருந்தால் அதன் விளைவாக உண்டாகும் குழந்தைக்கு அவனோ அவனின் குடும்பமோ பொறுப்பேற்க மாட்டாது. அது இந்த குடும்பத்தின் வாரிசாக ஏற்றுக் கொள்ள படாது.

ஆறு மாதம் தான்… அதன் பின் ஒரு நாள் கூட இந்த வீட்டில் தங்க கூடாது. பிரிந்து செல்கையில் பார்த்திபன் சம்மந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும், பணத்தையும் எடுத்துச் செல்லும் அதிகாரம் கிடையாது. குறிப்பாக சொத்தில் பங்கு கோரும் உரிமை. மனைவி என்ற பெயரில் ஜீவனாம்சம் பெரும் உரிமை என எதுவும் கிடையாது.

பொண்டாட்டி தான்…ஆனா பொண்டாட்டி மாதிரி… ஆறு மாசத்துக்கு மட்டும். ஜஸ்ட் லைக் லிவ்விங்க டுகெதர். அப்பொழுதும் பிடித்திருந்தாலும், பிடிக்கா விட்டாலும் இந்த வீட்டைக் காலி செய்துவிட்டு பார்த்திபனை விட்டு தூர சென்றிட வேண்டும்.

“நீ இந்த வீட்டுல கெஸ்டு மாதிரி இருக்கலாம். எந்த விதத்துலயும் இந்த வீட்டுல இருக்குறவங்களுக்காக அன்பு ப்ராணநாதான்னு எம்முன்னாடி வந்து நிக்க வேண்டாம். மனைவியா எந்த கடமையையும் நீ செய்ய வேண்டியது இல்ல.

எப்பயும் நாம இருக்குற மாதிரி.. அடி தடி வெட்டு குத்துன்னு இருப்போம். அப்பதா நமக்குள்ள செட்டாகதுன்னு அவங்களே புரிஞ்சிப்பாங்க. நீ யாரையும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இந்த வீட்டுக்கு நல்ல மருமக மாதிரி நடந்துக்க தேவை இல்லை.

இத தான் ரிஜிஸ்டர் பண்ணிடுவேன். ஆறு மாசம் தான்… அடுத்து நாம நம்மோட பாதைல தனித்தனியா போய்க்கலாம். ரீஸன் யாரும் கேக்க மாட்டாங்க. அக்ரிமெண்ட் விசயத்த இப்போதைக்கி யார்க்கிட்டையும் சொல்லாத. தெரிஞ்சா தாத்தாவும் அத்தையும் வருத்தப்படுவாங்க. நம்ம பிரிவு நேர்ச்சுரலா எதார்த்தமா இருக்குற மாதிரி பாத்துக்கலாம்.” என்க, சரியாகப் பட்டது அவளுக்கு.

“அதென்ன முதல்ல ஏதோ இருக்கே அதுக்கு என்ன அர்த்தம்? ம்…” என்றாள் புரியாத பாவனையோடு.

“நீ சம்மதிச்சா… நாம ஒவ்வொரு இரவையும் முதல் இரவா கழிக்கலாம் அர்த்தம்… ஆறு மாசம் வர… என்ன வர்றியா? பெட் இருக்கு. அதுக்கு மேல ப்ளார்ஸ் இருக்கு. அது வாடுறதுக்குள்ள, நாம எதாவது பண்ணலாம்.. ம்… என்ன சொல்ற?” என அவளின் கரம்பற்றி தன் மேல் போட்டுக் கொள்ள, பதறி எழுந்தவள்,

“நீ அப்ப பண்ண காரியத்துக்கே.. உனக்கு காரியம் பண்ற அளவுக்கு கோபம் வந்தது. இதுல முதல் இரவு கேக்குதா… ம்.. ஆறு மாசம் மட்டும் புருஷனா இருக்க போற உன்ன கொஞ்சி கொலாவு வாங்க… போய்யா அங்கிட்டு.” என்று விட்டு, மார்பில் தன் கரம் கொண்டு குத்த, அது அவனுக்கு வலித்தாக தெரியவில்லை. இல்லை வலிக்காதது போல் காட்டிக்கொண்டு சிரித்தான்.

“ஏய்!! உனக்கு ஒன்னு தெரியுமா? இது தான் என்னோட ஃபஸ்ட் கிஸ். செம்ம ஃபீல்… அதே மாதிரி ஃபஸ்ட் டயம்… ஃபஸ்ட் நைட் உங்கூடவே நடந்தா… எப்படி இருக்கும்… ம்.. ” என கேட்டு அவளின் கரத்தை பிடித்துக் கொண்டு கண் சிமிட்ட, பாரதியின் முகம் சுருங்கியது.

‘இவனும் உணர்ச்சிகள அடக்கத் தெரியாத ஆம்பள தானா.’ என்ற எண்ணம் தோன்ற, அவளின் முகபாவனைகளை வைத்து அதை யூகித்தவன்,

“ரொம்ப கவலப் படாத. உம்மேல நான் பாஞ்சிட மாட்டேன். என்னை கன்ட்ரோல் பண்ணிக்க எனக்கு தெரியும். நீ என்னை அந்த விசயத்துல நம்பலாம். உன்னோட அம்மா ஊர் திரும்புறப்ப நீ உங்கம்மாக்கு மகளா மட்டுமே இருப்ப… ப்ராமிஸ்…” 

“உனக்கு நான் பொண்டாட்டியா மாறணும்.. ஆனா அது உ வூட்டு ஆளுங்களுக்காக… மத்தபடி நாம தோஸ்த்… சரியா? ” என புன்னகையுடனும், நெஞ்சில் எழுந்த சிறு நிம்மதியுடனும் கேட்டாள்.

” கிட்டத்தட்ட அப்படித்தா. “

“ஏன் அந்த ஆறு மாசமும் புருஷெ பொண்டாட்டியா இருக்குற மாதிரி காட்டிக்கணும்.. நாளைக்கே நான் ஏ வேலைய பாக்க போய்டுறேன். நீ உன் விஷா குட்டிய கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு. ” என்றவளுக்கு இந்த அக்ரிமெண்ட் கல்யாணம் பிடிக்கவில்லை.

‘கான்ட்ராக் போட்டு ஆறு மாசம் இவெங்கூட சேந்து நாடகம் ஆடுவது ஓகே தான். ஆனா ஆறு மாதங்களுக்கு பின் தன் வாழ்க்கை?’ என்ற நினைப்பு எழவில்லை அவளுக்கு. அவனுடன் கழிக்கப் போகும் அந்த ஆறு மாதங்களை ஆவலுடன் இரு கரம் நீட்டி வரவேற்க தயார் தான்.

ஆனால் சொத்து ஜீவனாம்சம் பற்றி பேசியது தான் அவளுக்கு இடித்தது. பணத்தை வைத்து தன்னை மதிப்பிடுகிறான் என்று மனம் சோர்ந்து போனவளுக்குத் தெரியாது இது சண்முகத்தின் வேலை என்று.

விஷாலினியை பார்க்க வந்த பார்த்திபனிடம், நம்மிடம் உள்ள சொத்தை அபகரிக்கத்தான் உன்னை திருமணம் செய்து கொண்டுள்ளாள். அதனால் அது இல்லை என்று கூறினால் அவளின் சாயம் வெளுத்து போகும் என்று சொல்ல.

பார்த்திபன், அவளிடம் ஏற்பட்ட முன் அனுபவம் காரணமாகவும் திருமணத்தில் நடந்த கலாட்டா காரணமாகவும், அவளை யார் அனுப்பினார்கள் என்பது தெரிய இந்த கான்ட்ராக்டுக்கு சம்மதித்து அவளிடம் நீட்டினான்.

அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் இந்த வீட்டுடனான உறவை முழுவதுமாக முறிக்க இதை விட வேறு சிறந்த வழி தெரியாததால் கையெழுத்திட்டாள். அதைக் கண்டவன் தானும் கையெழுத்து போட்டு, அதைத் தன் லாக்கரில் பத்திரப்படுத்தி வைத்தான். பின் மெத்தையில் அவளின் அருகில் வந்து படுத்துக் கொண்டான்.

நாசியை நிறைத்த மஞ்சத்து மலர்கள், அருகே ஆடவன் ரசிக்க ஒரு தேவதை. போதாதற்கு இருவருக்கும் இடையே பூக்களால் செய்யப்பட்ட இதயம். பார்த்திபன் கண்கள் பாரதியை ஸ்கேன் செய்யத் தொடங்கியிருந்தது.

‘இந்தப் பார்வை பார்ப்பவன் எப்படி தன்னுள் எழும் உணர்வுகளை கண்ரோல் செய்து கடிவாளம் இடப்போகிறானோ…’ 

தென்றல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!