Skip to content
Post Views: 2,663
தன்னுடைய துண்டை தலையில் சுற்றிய படியே வந்த மனைவியை கண்டதும் “கூடிய சீக்கிரம் அனைத்தும் சரியாகிப் போகும்”, என்று எண்ணினான் தமிழ். ஏனென்றால் அவள் நேற்று கூட கொஞ்ச நாள் ஆகட்டும் என்று தான் சொன்னாள். அவனை பிடிக்க வில்லை என்றெல்லாம் சொல்ல வில்லை என்பதால் அவர்கள் வாழ்க்கை கூடிய சீக்கிரம் சரியாகும் என்று அவனுக்கு நம்பிக்கை வந்தது.
அதன் பின் அவன் வெளியே செல்ல அவள் கண்ணாடி முன்பு நின்று தலை வாரிக் கொண்டு கீழே சென்றாள். மகனுக்கும் மருமகளுக்கும் கோகிலா அன்புடன் உணவு பரிமாறினாள்.
Advertisement
அதன் பின் இருவரும் சொந்தங்களின் வீட்டுக்கு விருந்துக்குச் செல்வதிலே நாட்கள் நகர்ந்தது.
Advertisement
அவனுடைய சொந்தங்களின் வீட்டுக்கு விருந்துக்கு போன பின்னர் மூர்த்தியும் மீனாவும் அவர்களுக்கு விருந்து கொடுத்தார்கள். திருமணம் முடிந்து போன பின்னர் இது வரை பாரதியை கேசவன் அழைக்க வில்லை என்பதால் அவளும் அவர்கள் வீட்டுக்குச் செல்ல வில்லை.
Advertisement
மூர்த்தி வீட்டில் விருந்தை முடித்து விட்டுக் கிளம்பும் போது அவளுக்கு அவளுடைய அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் போல் இருக்கும் என்று எண்ணி “உங்க வீட்டுக்கு போயிட்டு போவோமா?”, என்று கேட்டான் தமிழ்.
Advertisement
“வேண்டாம், உங்க வீட்டுக்கே போவோம்”, என்றாள் பாரதி.
“ஏன் உனக்கும் உன் அம்மா அப்பாவைப் பாக்கணும் போல இருக்கும்ல?”
“அப்படி எல்லாம் இல்லை. அப்புறம் அவங்க எனக்கு அம்மா கிடையாது. எங்க சித்தி. எங்க அம்மா இறந்துட்டாங்க”, என்றதும் அதிர்ச்சியானவன் “அப்படியா இதை யாருமே என் கிட்ட சொல்லலையே?”, என்றான்.
அதற்கு அவள் ஒன்றுமே சொல்ல வில்லை என்றதும் அவர்கள் வீட்டை நோக்கி கார் நகர்ந்தது. மூர்த்தி வீட்டினருடன் அன்பாக இருப்பதைப் போல அவளுடைய வீட்டினரிடம் அவள் ஒட்ட வில்லை என்று உணர்ந்து கொண்ட தமிழ் “உங்க வீட்டுக்கு போகணும்னா எப்ப வேணும்னா சொல்லு, கூட்டிட்டு போறேன்”, என்று சொல்லி விட்டு அந்த பேச்சை முடித்துக் கொண்டான்.
விருந்து எல்லாம் முடிந்த்ததும் “பிள்ளையை எங்கயாவது வெளியூருக்கு கூட்டிட்டு போ தமிழ்”, என்றாள் கோகிலா.
அம்மா சொன்னதால் எங்காவது போகலாமா என்று அவன் பாரதியிடம் கேட்க “வேண்டாம் வேண்டாம், கொஞ்ச நாள் ஆகட்டும்”, என்று சொல்லி விட்டாள்.
அதன் பின் நாட்கள் சாதாரணமாக நகர்ந்தது. அவன் காலையில் கிளம்பி அவன் வேலையை பார்க்கச் சென்று விடுவான். பாரதியோ கோகிலா பின்னாலே சுற்றித் திரிந்தாள். பாண்டியன் ஏதாவது கேட்டால் அன்பும் மரியாதையும் கலந்து பதில் சொல்வாள்.
பாண்டியன் மற்றும் கோகிலாவுடன் சகஜமாக பேசும் பாரதி தமிழைக் கண்டால் மட்டும் தன்னுடைய கூட்டுக்குள் ஒளிந்து கொள்வாள். அவனும் விட்டுப் பிடிக்கலாம் என்று எண்ணி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான்.
இருவரும் விலகியே இருந்தாலும் ஒரு நாள் இரவு அவனை சாப்பிட அழைக்க அறைக்குள் வந்தாள் பாரதி. அப்போது குளித்து முடித்து வெளியே வந்த தமிழ் இடையில் ஒரு துண்டுடன் நின்றான்.
அவன் அப்படி வந்து நிற்பான் என்று தெரியாமல் அதிர்ந்து போனவள் படக்கென்று தலை குனிந்து கொண்டாள். அவள் முகத்தைப் பார்த்த தமிழுக்கு சிரிப்பு வந்தது.
அவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. என்ன தான் அவனை அவளுடைய மனது முழு மனதாக ஏற்க வில்லை என்றாலும் ஒரு ஆண் மகன் இடையில் ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு அரை நிர்வாணக் கோலத்தில் நின்றால் அவளால் எப்படி இயல்பாக அவனை பார்க்க முடியும்? தலை குனிந்தே நின்றாள்.
“என்ன ஆச்சு பாரதி?”, என்று அவன் கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “அத்தை சாப்பிட வரச் சொன்னாங்க”, என்றாள். அப்போது அவள் கண்களில் விழுந்தான் அவன். அவனது அகன்ற தோள்கள், முருக்கேறிய புஜங்கள், கையில் இருந்த ஆர்ம்ஸ், படிக்கட்டுகளாக இருந்த அவன் தேகம் என அனைத்தையும் பார்த்தாள்.
ஒரு நிமிடம் அவனை ரசித்துப் பார்த்த படி நின்று விட்டாள். அவள் பார்வையில் இருந்த ரசனையை உணர்ந்த தமிழ் அடுத்த நொடி அவளை நெருங்கினான். அவன் நெருங்கி வர அவள் தடுமாற்றத்துடன் தலை குனிந்து கொண்டாள்.
அவளுக்கு வெகு அருகில் வந்து நின்றான் தமிழ். அவன் பயன் படுத்திய ஆஃப்டர் ஷேவிங்க் லோசனின் வாசனை அவள் நாசியை நிறைத்தது. அவனுடைய அருகாமையில் அவளது இதயம் அதிகமாக துடிப்பதை அவளால் உணர முடிந்தது. அவனுடைய முடி படர்ந்த அந்த அகலமான மார்பைக் கண்ட போது கூச்சம் வந்தது.
“பாரதி”, என்று கிசுகிசுப்பாக அழைத்தான் தமிழ்.
“ம்ம்”, என்று முணுமுணுத்தாள் அவள்.
“என்ன ஆச்சு?”
“இல்ல… அது வந்து… சும்மா தான்…”, என்று அவள் திணற “என்னைக் கொஞ்சம் நிமிர்ந்து பாரேன்”, என்றான் அவன்.
அவள் பார்க்காமல் இருக்கவும் அவனே அவள் நாடியைப் பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தினான். அவன் செய்கையில் அவளுக்கு மூச்சடைத்தது. தன்னுடைய பார்வையை அவன் முகத்தில் இருந்து திருப்பவே சிரமப் பட்டாள்.
தன்னுடைய ஒரு வார்த்தைக்காக அவன் இத்தனை நாள் தன்னை விட்டு விலகி இருந்த விதம் அவன் மேல் அவளுக்கு நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கியிருந்தது. அவன் நினைத்திருந்தால் இத்தனை நாளில் கணவன் என்ற உரிமையைச் சொல்லி அவளை என்ன வேண்டும் என்றாலும் செய்திருக்க முடியும்.
அதற்கான அவ்வளவு உரிமையும் அவனுக்கு உண்டு. ஆனால் தன்னுடைய பேச்சைக் கேட்டு அவன் விலகி இருந்தது, வெளியே எங்கேயாவது அழைத்துச் சென்றால் அவள் மேல் அக்கறையாக இருப்பது, தினமும் மூன்று வேளையும் சாப்பிட்டாயா என்று அவளைக் கேட்பது, முதல் நாள் அவள் பணத்துக்காக திருமணம் செய்ற என்று சொன்ன குற்றசாட்டுக்கு மன்னிப்பு கேட்டது என அனைத்துமே அவன் மேல் நல்லெண்ணத்தை அவளுக்குள் விதைத்திருந்தது.
தன்னுடைய உணர்வுக்கும் அவன் மதிப்பு கொடுக்கிறானே என்று எண்ணி அவன் மேல் ஒரு இனம் புரியாத உணர்வு உருவானது.
கூடவே அவள் மனதை நினைத்தும் அவளுக்கு குழப்பமாக இருந்தது. ஏனென்றால் அவன் இவ்வளவு நெருக்கத்தில் வந்து நின்றால் அவள் இங்கிருந்து ஓடியிருக்க வேண்டும். ஆனால் அவளோ அவனை கள்ளப் பார்வையில் ரசிக்கிறாள். இதை என்னவென்று சொல்வது என்று அவளுக்கு புரிய வில்லை.
“நான் ஏன் இப்படி பண்ணுறேன்? இவன் மேல எனக்கு ஈடுபாடு வந்து விட்டதா? அப்ப ரிஷிக்கு நான் கொடுத்த வாக்கு? நான் என்ன ஆளை மாத்தி மாத்தி லவ் பண்ணுறேன்”, என்று அவள் மேலேயே அவளுக்கு கோபம் வந்தது.
அவள் யோசனையில் மூழ்கியிருக்க “பிளீஸ் இப்ப எதுவும் சொல்லாத பாரதி”, என்று சொல்லி அவளை இன்னும் நெருங்கினான் தமிழ்.
அவள் என்ன என்று சிந்திக்கும் போதே அவள் கன்னத்தில் தன்னுடைய இரு கைகளையும் வைத்து அவளை தன் பக்கம் இழுத்தவன் அவள் சுதாரிக்கும் முன் அவனுடைய இதழ்களை அவள் இதழ்களில் பதித்து விட்டு அடுத்த நொடி விலகி விட்டான்;
உடனடியாக அவன் விலகி விட்டான் தான். நடந்தது லேசான இதழ் ஒற்றுதல் தான். ஆனால் அந்த ஒரு நொடி செயல் அவளை மொத்தமாக செயல் இழக்க வைத்தது. “சீக்கிரம் வா சாப்பிடலாம்”, என்று சொன்னவன் ஒரு லுங்கியை எடுத்துக் கட்டிக் கொண்டு கீழே சென்று விட்டான். அவளுக்கு தான் அந்த இடத்தில் இருந்து அசைய முடியவில்லை.
தன்னோட அனுமதி இல்லாமல் அவன் முத்தம் கொடுத்தது கோபம் வந்தாலும் அவன் இதழ் தீண்டியதால் எழுந்த வெம்மையான உணர்வு அவள் மேனி முழுவதும் இப்போதும் மிச்சம் இருப்பது போல உணர்ந்தாள்
“ஏன் இப்படி?”, என்று தன்னைத் தானே கேட்டவளுக்கு விடை தான் கிடைக்க வில்லை. சிறிது நேரம் கழித்து கீழே வந்தவளுக்கு யாரையும் எதிர்க் கொள்ள தான் முடியவில்லை. அதுவும் தமிழை சுத்தமாக நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. இருவரையும் அருகருகே அமர வைத்து கோகிலா உணவு பரிமாற அவள் காதருகே குனிந்தவன் “தேங்க்ஸ்”, என்றான்.
அவன் எதற்கு தேங்க்ஸ் சொல்கிறான் என்று புரிய அவள் உடம்பில் ஒரு வித சிலிர்ப்பு ஓடியது. அவள் முகம் சிவந்து விட்டது. அவள் வெட்கத்தை அவனும் ரசித்தான்.
பேருக்கு கொறித்து விட்டு தூங்குவதற்காக அறைக்குள் வந்தவள் அவனை பற்றி எண்ணிக் கொண்டே கட்டிலில் அமர்ந்தாள். அப்போது அவளது சேலை விலகியதைக் கூட அவள் கவனிக்க வில்லை.
பாண்டியனிடம் கணக்கு வழக்கு பற்றி பேசி விட்டு உள்ளே வந்த தமிழின் பார்வை ஆர்வமாக அவள் மேல் பதிந்தது. அவன் வரவை உணர்ந்தவள் தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் பார்வை போன இடத்தைக் கண்டவள் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு சேலையை சரி செய்தாள்.
காதல் துளிர்க்கும்….
error: Content is protected !!