Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சில் துளிர்க்கும் காதல்

நெஞ்சில் துளிர்க்கும் காதல் Final

அத்தியாயம் 10 

எந்தன் இதயம் காவியமாக்கி

கொண்டிருக்கிறது நீ பேசிய

வார்த்தைகள் ஒவ்வொன்றையும்!!!



Advertisement

“ஆமா தமிழ், நான் வருணை என் தங்கைக்கு மாப்பிள்ளை பாத்தப்ப எங்க அப்பா சாமானியமா ஒத்துக்கலை. இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டர். அவங்க குடும்பமே பெரிய குடும்பம் தான். அப்படி இருக்க நான் பாரதியை கல்யாணம் பண்ண என் வீட்ல கேட்டுருந்தா எங்க வீட்ல ஒத்துக்கிட்டு இருப்பாங்களா? பாரதி குடும்ப சூழ்நிலை தான் உங்களுக்கு தெரியுமே? ஒண்ணு எங்க அப்பா கிட்ட இருந்து அவளைக் காப்பாத்த அவளை விட்டு விலகிருப்பேன். இல்லைன்னா ரெண்டு பேரும் ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிருந்துருப்போம். அப்பவும் அவ என் கூட சந்தோஷமா இருந்திருக்க மாட்டா. ஏன்னா பாரதிக்கு குடும்பத்தோட இருக்க தான் பிடிக்கும். உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே, அவ உங்க கிட்ட ஒட்டினதை விட உங்க அம்மா அப்பா கிட்ட தான் அதிகமா ஒட்டிருப்பா”, என்று ரிஷி சொன்னதும் ஆமாவேன்று சொன்னான் தமிழ். 

Advertisement

“நீங்க தான் அவளுக்கு பெர்பெக்ட் மேட்ச். அவ எதிர்பார்த்த வாழ்க்கையையும் அவளுக்கு உங்களால தான் தமிழ் கொடுக்க முடியும். அப்புறம் கண்டிப்பா நான் மேரேஜ் பண்ணிப்பேன். சரி கிளம்புறோம்”, என்றான் ரிஷி. 

Advertisement

“எங்க கிளம்ப? அங்க பாருங்க ரெண்டு பேரும் கதை பேசுறதை”,  என்று சிரித்தான் தமிழ். 

Advertisement

“உனக்கு சூப்பர் கணவர் கிடைச்சிருக்கார் டி. அவர் கூட சந்தோஸமா வாழனும். சும்மா தேவையில்லாம யோசிச்சிட்டு இருக்காத. அடிக்கடி நான் கால் பண்ணி கேப்பேன். இன்னைக்கு நைட்ல இருந்து நீங்க ரெண்டு பேரும் ஓருயிர் ஈருடல் மாதிரி வாழணும்”, என்று சஹானா சொல்லிக் கொண்டிருக்க பாரதி புன்னகையுடன் வெட்கப் பட்டுக் கொண்டு நின்றாள். அதன் பின் அவர்கள் இருவரும் சந்தோஷமாக கிளம்பிச் செல்ல அவர்களை விட அதிக சந்தோஷமாக இருந்தார்கள் பாரதியும் தமிழும். 

அவனை தனி அறையில் சந்திக்க ஆசை இருந்தாலும் பகல் என்பதால் தடுக்க அவனும் வேறு வழியில்லாமல் கிளம்பினான். 

“உன்னை விட்டு போகவே மனசில்லை டி. ஆனா போகணும். சரி நைட் எல்லாம் பேசிக்கலாம். இப்ப பகல் முழுக்க தூங்கி ரெஸ்ட் எடு. ஏன்னா நைட் உனக்கு தூக்கமே கிடையாது”, என்று தமிழ் சொன்னதும் அழகாக முகம் சிவந்தாள் பாரதி.

“இப்படி எல்லாம் வெக்கப் படாத டி. என்னால அப்புறம் தாங்கவே முடியாது. சரி சாயங்காலம் வரேன். ஏதாவது வாங்கிட்டு வரவா?”, என்று கேட்டான் தமிழ். 

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாங்க. பாத்து போயிட்டு வாங்க, போதும்”

“சரி டி, இந்த மல்லிக்கை பூ எல்லாம் வேண்டாமா?”

“அது தான் அத்தை தினமும் அவங்க மகனை மயக்க என் தலையை நிறப்பி விடுறாங்களே. நீங்க தான் என்னைக் கண்டுக்கவே இல்லை”

“அதுக்கான காரணம் நிறைய இருக்கு பாரதி. சரி எல்லாம் சாயங்காலம் வந்து சொல்றேன். பை”

“மதிய சாப்பாடு?”

“அப்பா வந்தா கொடுத்து விடு. இல்லைன்னா நான் வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றான். அன்று பகல் முழுவதும் அவனைப் பற்றிய கனவுகளுடனே சுற்றிக் கொண்டிருந்தாள் பாரதி. 

மருமகளின் கண்கள் கனவில் மிதப்பதைக் கண்ட கோகிலா அவளை ஒரு வேலையும் செய்ய விடாமல் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தாள். அன்று மாலையும் வந்தது. ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்தான் தமிழ். அறைக்குள் வந்ததும் அவளை இறுக அணைக்க “கருக்கல்ல போய் என்ன செய்றீங்க? வாங்க டீ குடிக்க போகலாம்”, என்று சொல்லி தடுத்தாள் பாரதி. 

“படுத்துற டி, சரி கிளம்பு கோவிலுக்கு போயிட்டு வரலாம்”, என்று அவன் அழைத்ததும் சந்தோஷமாக கிளம்பினாள் பாரதி. 

இருவரும் கிளம்பி கீழே வரவும் “நானே உங்களை கோயிலுக்கு போகச் சொல்லணும்னு  நினைச்சேன். அம்பாளை நல்லா வேண்டிட்டு வாங்க”, என்று சொல்லி அனுப்பி வைத்தாள் கோகிலா. 

கோவிலுக்கு சென்றவர்கள் சந்தோஷமாக அம்பாளை வணங்கினார்கள். அவளும் அவர்களுக்கு ஆசி வழங்கினாள். 

பின் வீட்டுக்கு வந்ததும் பெரியவர்களுக்கு பிரசாதம் கொடுக்க அவள் தேங்க அவன் அறைக்குச் சென்று அவள் வரவுக்காக காத்திருந்தான். 

அறைக்குச் சென்ற பாரதியை அவன் மீண்டும் தன்னுடைய கையணைப்புக்குள் கொண்டு வர “ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆரப் பொறுக்கலையா? அத்தை உங்களை சாப்பிடக் கூப்பிட்டாங்க”, என்றாள். 

“எனக்கு இப்ப இருக்குறது வேற பசி டி”, என்று சொன்னவனின் உதடுகள் அவளுடைய கன்னத்தில் உரச “பிளீஸ், சீக்கிரம் சாப்பிட்டு வந்துரலாம். நமக்காக அவங்களும் சாப்பிடாம இருப்பாங்க”, என்று அவள் சொன்னதும் தான் அவளை விட்டான். 

பின் இருவரும் அரக்க பறக்க சாப்பிட்டு முடித்தார்கள். அதை பாராதது போல பார்த்த பெரியவர்களின் மனம் நிறைந்து போனது. 

அவன் அறைக்குள் சென்று விட ஏற்கனவே பாரதி தலையில் இருந்த பூவை எடுத்து விட்டு வேறு பூவை வைத்து விட்டாள் கோகிலா. அதைக் கண்டு வெட்கத்துடன் பாரதி சிரிக்க “அழகா இருக்க டா ராஜாத்தி. எப்பவும் நீ இப்படி சந்தோஸமா இருக்கணும். சீக்கிரம் போய் தூங்குங்க”, என்று சொல்லி அனுப்பி வைத்தாள் கோகிலா. 

பரந்த மனம் கொண்ட மாமியாரை உயர்வாக எண்ணிய படி அறைக்குச் சென்றாள் பாரதி. 

அவள் அறைக்குள் வந்ததும் அவள் அருகே வந்து வாசம் பிடித்த தமிழ் அவளை இழுத்து அனைத்துக் கொண்டான். அவன் செய்கையில் திகைத்து விலக முயன்றாள் பாரதி. ஆனால் அவனோ இத்தனை நாள் விட்டது போல இன்று அவளை விட வில்லை. இன்னும் நெருக்கமாக அவளை இறுக்கிப் பிடித்து அவள் காதோரம் உதடு பதித்தான். 

“ஐயோ உடனேவா? பிளீஸ் கொஞ்சம் பேசலாங்க. மனசுல உள்ள அழுக்கு எல்லாம் வெளிய போகனும்ங்க”, என்றாள் பாரதி. 

ஆனால் அவள் கழுத்தில் உதடு பதித்தவனோ “பிளீஸ் டி ஐ நீட் யு”, என்றான். 

அவள் அவன் முகத்தைப் பார்க்க “என்னால முடியலை பாரதி. எனக்கு இப்பவே நீ வேணும்”, என்றான். அவளோ பேச வேண்டும் என்று சொன்னாள்.

அவன் அவ்வளவு கெஞ்சியும் அவள் அசையாமல் இருக்க இது வேலைக்கு ஆகாது என்று எண்ணிய தமிழ் அவளை விட்டுவிட்டான். 

அவன் விட்டு விட்டதும் ஏமாற்றமாக உணர்ந்த பாரதிக்கு அவன் கோபமும் கஷ்டமாக இருந்தது.  

அவன் கோபத்தில் வெளியே செல்ல போகிறான் என்று அவள் எண்ண அவனோ நிதானமாக அறைக் கதவை பூட்டி தாழ் போட்டான். அவள் அவனை திகைத்து பார்க்க அவளை நெருங்கி வந்தான் தமிழ். அவன் அவளை நெருங்க நெருங்க அவள் பதட்டத்துடன் பின்னால் நகர்ந்தாள். 

அவள் அருகே நெருங்கிய தமிழ் அவளை இறுக்கிப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான். அவன் கைகள் அவளை வளைத்து தன்னோடு சேர்த்து பிடித்தது. அவள் தான் அவன் தொடுகையில் தவித்துப் போனாள். 

“என்னங்க இப்பவே இதெல்லாம் வேணுமா? இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாமே?”, என்று அரை மனதாக முணுமுணுத்தாள் பாரதி.

“ரெண்டு பேர் மனசுலயும் அழுக்கு இல்லவே இல்லை டி. உண்மையான காதல் மட்டும் தான் இருக்கு. நான் அதை முழுசா நம்புறேன். உனக்கு நம்பிக்கை இல்லைன்னா சொல்லு. நாம பேசலாம். இல்லைனா பழைய விஷயம் எதுவுமே நாம பேச வேண்டாம்”, என்றான் தமிழ். 

அவன் இவ்வளவு சொன்ன பிறகு அவள் எப்படி விலகி இருப்பாள். விருப்பத்துடன் அவன் கைகளுக்குள் சுருண்டு கொண்டாள். 

அவன் கைகளும் அவளை வளைத்து அனைத்துக் கொண்டது. அவளை முதலில் முத்தங்களால் அர்ச்சித்தவன் தன்னுடைய தேடலை ஆரம்பித்தான்.  அவனுடைய அத்துமீறலில் அவனுக்குள் கரைந்து கொண்டிருந்தாள் பாரதி. 

அவனது ஆசை முடிந்து அவளை அவன் விடும் போது ஆதவன் மேல எழும்பியிருந்தான். 

அதன் பின் தமிழையும் பாரதியையும் பிரிக்கவே முடியாது என்பது போல இருவரும் ஒட்டிக் கொண்டே திரிந்தார்கள். 

……..முற்றும்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!