Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 23. 2

 

நாம் 23 (2)

   

     ” சரிங்க அண்ணி.. நீங்க சொல்வதும் சரிதான்.. நேரம்காலம் கூடியும் வரனும்.. விருப்பமும் முக்கியம்தான். இப்பகூட சாப்பிடும் இடத்தில் பார்த்தேன்.. வேந்தனே உங்க மருமகளுக்கு சாப்பாடு கொண்டு போக கேட்டுயிருந்து.. நம்ம பொண்ணா இருந்தா எந்த பயமும் இல்ல. ஆனா முதல்முறையா நீங்க வெளியில் இருந்து பொண்ணு எடுக்கிறிங்க. அதிலும் ஒரே ஊர் வேற. இன்னும் வேந்தனிற்கு வசுந்தராவின்  கல்யாணம் முன்ன.. நின்னு நடந்துற கடமை இருக்கு. அதுவரைக்கு பார்த்து இருந்துக்கோங்க அண்ணி. ”



Advertisement

   ” ம்.. சரிங்க அண்ணி.. ” இருவரிடமும் திருப்பி.. ” என்ன வசு சாப்பிட போகலையா?.. ”

    ” இல்லமா.. இப்ப பரவாயில்ல.. நீங்க சாப்பிடும்போது சாப்பிட்டுக் கொள்கிறோம். ”

     ‘ ம் ‘ என தலையாட்ட திருப்ப.. அங்கு  ஜீஸ் கப் உடன்  வேந்தன் வந்து நின்றான்.

Advertisement

 

Advertisement

      இவர்கள் பேசிக் கொண்டுயிருந்த அந்நேரத்தில்.. வேந்தன் தன்னவளிற்கு நிச்சியம் முடிந்து இருவரும் சாப்பிட நேரம் ஆகிவிடும் என்று வளைகாப்பு சாதங்கள் இருப்பதால் அவளிற்கு பிடித்ததில் சிறு அளவு மட்டும் எடுத்து வரும்போது.. அங்கு நால்வர் தனியாக அமர்ந்துயிருப்பை பார்த்தான். அவர்களை கை அசைத்து கூப்பிட்டான். அவர்களும் வந்தோம் என அவனிடம் சென்றார்கள்.

   ” என்ன  அனு, நிஷா நீங்க அரசியோட நிறைய பேசுனும்.. என்னோட அருமை, பெருமையெல்லாம்.. சொல்லி மாட்டிவிடுனும் சொன்னிங்க. அரசியோட இல்லாம.. இங்க தனியா உட்கார்த்து இருக்கிங்க. ”

    ” பேசியவரைக்கு போதும் அண்ணா. எங்களுக்கு இப்ப எங்க உங்கள கிண்டல் பண்ணி.. அது எப்படி நீங்க என் தனுவ சொல்லுவீங்க? வந்து விடுவாங்களோனு. உங்க அரசியோட பேசிவே பயமா இருக்கு. ”

Advertisement

    புன்னகையுடன்.. ” ஓ.. நீங்க வசுவிடம் பேசிய வைத்து பேசுறிங்களா அனு.. நீங்க என்னை கிண்டல் பண்ணினா.. ஆள் கிடைச்சதுனு.. என்னை உங்களோட சோர்ந்து ஓட்டுவா. நீங்க ஏதாவது சாப்பிட வேண்டுமா?.. ” இல்லை என தலையசைக்க..

   ” சரி. இந்தாங்க இத அரசியிடம் கொடுத்துவிட்டு.. அங்க எல்லோரும் கிளம்பிட்டாங்களானும் பார்த்து எனக்கு கால் பண்ணுங்க.. நான் அங்க வரனும். அப்புறம் நிஷா நீங்க எப்போதும் போல பேசுங்க. காலையில் மாதிரி சில விஷயங்கள் கல்யாண வரை நாங்க சமாளிக்க வேண்டிவரும். அதனால அதை நினைத்து பேசமா இருக்காதீங்க. “

    ‘ தாங்கள் இவ்வளவு நேரம் பார்த்தை வைத்து ஆமா அண்ணா.. நிறைய விஷயங்கள் நீங்க சமாளிக்க வேண்டிவரும் என நால்வருமே எண்ணினர். ‘

    புன்னகையுடன்.. ” ம் சரி அண்ணா. நீங்க சொன்னத பார்த்துட்டு கால் பண்ணுறோம். ஆமா நீங்க எதுக்கு அங்க வரீங்க?. ”

    ” அது அரசிக்கு பூ வைத்துவிடனும்.. அதுக்காகதான். சரி சரி போங்க ” புன்னகையுடன் கூறி அம்மாவிடம் வர.. அவர்கள் அதிர்ந்து.. மகிழ்ந்து எழிலரசியின் அறைக்கு சென்றனர். 

 

    வேந்தன் அங்குயிருந்தவர்களை ஒருபார்வை பார்த்துவிட்டு.. ” ம்மா.. இந்தாங்க ”

    புன்னகையுடன் சித்ரா  வாங்கி கையிலேயே வைத்திருக்க..

    ” ம்மா.. அத்தை இரண்டு பேரும் சாப்பிட்டாங்க.. அதனால ஒன்னும் நினைக்கமாட்டாங்க.. நீங்க குடிங்க. நிச்சியம் முடிந்து சாப்பிட லேட்டாகும். ” ம் என தலையசைத்து குடிக்க ஆரம்பிக்கும் போது..

   நான் உங்க கூட சாப்பிட வரேனு சொல்லியிருக்கே.. நீங்க அண்ணா கொடுத்தவுடன் அதை பற்றி சொல்லாம.. குடிக்க ஆரம்பிச்சாச்சு.. ” ம்மா.. என்ன அம்மா?. அண்ணா எழில் அண்ணிக்கு  விதவிதமா சாப்பாடு எடுத்துட்டு போயிருக்காங்க.. உங்களுக்கு ஜீஸ்மட்டும் தான் போல. அதுக்குள்ள சாப்பாடு முடிந்துவிட்டதா?.. ” நக்கல் போல கூற..

     வேந்தன் உடனே அருகில் இருந்த அத்தைகளை பார்த்தான்.. பின் வசுவை பார்த்தான்.. ஏதோ கூற போகும் நேரம் மெசேஜ் வர.. அதனை பார்த்து மென்புன்னகை புரிந்தவன்.. ” அம்மா அரசிக்கு ஸ்விட் வேணும்மா.. நான் எடுத்துக் கொடுத்துட்டு.. அக்கா, வினோ எல்லாம் அங்க தான் இருக்காங்க. இந்த ரூம்மில் தீபா அக்கா போட்டோ எடுக்குறாங்க. அதனால  அக்காவோட நான் அங்கதான் இருப்பேன். என் போன் சார்ஜ் கம்மியா இருக்கு. ஏதாவது சொல்ல வேண்டும்னா அக்காவுக்கு கால்பண்ணுங்க. ” அவன் வேறுயாரையும் பார்க்காமல் சென்றுவிட்டான். அவன் அத்தைகளும் அவன் ஒரு பார்வை பார்த்தபோதே கிளம்பியிருந்தனர்.

   சித்ரா வசுவை ஒருமுறைப்பு பார்வை செலுத்தி விட்டு.. ” ஏன் வசு நான் இப்ப வளைகாப்பு சாப்பாடு சாப்பிட்டா.. இன்னும் கொஞ்சம் நேரத்திலேயே திரும்பி நிச்சிய சாப்பாடு சாப்பிட முடியுமா?.. எழில் வயசு என்ன?. ஏன் வயசு என்ன?. எனக்கு இந்த ஜீஸ்சை முழுசா குடித்தாளே.. இன்னும் 2மணிநேரத்திற்கு பசிக்காது. அதனாலதான் அவன் சாப்பாடு கொண்டு வரல. விளக்கம் போதும்மா.. இல்ல சாப்பாடு முடிந்தானு பார்த்துட்டு வரியா. ”

    ” ம்மா.. உங்ககிட்ட நான் விளக்கம் கேட்கல.. சொல்ல வேண்டிய ஆள்.. என்னைய பார்க்காம கூட போயாச்சு. ஜீஸ் குடிச்சுட்டு நீங்களும் உங்க மருமக கூடவே உட்கார்ந்துக்கோங்க. ”

   இதனை அதிர்ச்சியுடன் கேட்ட சித்ரா.. ரவிந்திரனிடம் நாளையே வசுவை பற்றிக்கூற வேண்டும் என எண்ணி.. வசுவிடம் ஏதோ சமாதானம் கூறி அவளை சாப்பிட்டு வரச்சொன்னார்.

      இவர்களின் பேச்சிற்கு காரணமானவள்.. அவளிற்கு உரிய அறையில் அக்கா, அண்ணிகள், தோழி, புது நண்பர்கள் சூழ அரட்டையில் ஈடுபட்டுயிருந்தாள்.

   ” ஆனாலும் எழில் உனக்கு ரொம்ப தைரியம்தான்.. எல்லோரும் இருக்கோம் வேந்தனை பார்த்துட்டே பாடுற.. உங்கள பார்த்த ஒரு மாதம் முன்பு பழக ஆரம்பித்தவங்க போலவே தெரியல?.. “

   ” ஆமாம் அண்ணி.. எங்களுக்கு ஒருமாதம் முன்பு பழக்கம் இல்ல.. எனக்கு உங்க தம்பிய ஐந்து வருடம் முன்பே தெரியும். இது தனு அண்ணாவுக்கும் தெரியும். ” புன்னகையுடன் கூற..

   அந்த அறையில் சிறு அமைதி நிலவியது.. சத்யா இவ என்ன சொல்லவரா?.. என்ன முன்பே வேந்தனை தெரியும்மா?.. ஏன் இந்த அமைதி என நால்வரும் பார்க்க..

   ” ஹேய் என்ன வேந்தனையும் அண்ணாணு சொல்லுறியா?. ” முதலில் தெளிந்து இளமதி கேட்க..

    தன் அக்காவை முறைத்து.. ” அக்கா நான் தனுவோட அண்ணா ஈஸ்வர் இருக்காருல்ல அவரை சொன்னேன். சரி சரி எல்லாம் ரொம்ப ஷாக் கொடுக்காதிங்க. ” கூறிய பின் தன் போனில் இருந்த புகைபடத்தை புன்னகையுடன் காண்பித்தாள்.

    ” நானும் தனும் ஐந்துவருடம் முன்னமே ஏதோ வகையில்.. மீட் பண்ணி இருக்கோமே!.. அதனால இந்த டையாலாக்க இனி சொல்லாதிங்க அண்ணி. ” துள்ளலுடன் கூறி கண்ணடிக்க..

    ‘ அவளை பொருத்தவரை இந்த சம்பவமானது.. வேந்தன் கூறுவது போல சிறுவயதில் சந்திக்கவில்லை எனில்.. ஏதோ ஒருவகையில் நாம் சந்தித்து.. பழகி.. பின் பிடித்துயிருக்கும் என்ற கூற்றுக் சான்று போலதான் நினைத்து ஆனந்தம் கொண்டாள். இதனால் யாருக்கும் ஒரு பாதிப்பும் இல்லை.. அனைவரும் மகிழ்ச்சி கொள்வார்கள் என்று எண்ணி கூறிவிட்டாள். ‘

   ” எழில் அப்பகூட அண்ணா உனக்கு ஸ்விட்தான் கொடுத்துயிருக்காங்க. ” எனக் கூறிக் கொண்டுயிருக்கும் போது.. கதவு தட்டும் ஓசைகேட்க.. சுரபி சென்று கதவை திறந்தாள். அங்கு வேந்தன் கையில் கப்புடன் நிற்பதை பார்த்தவுடன் சிரிப்பு வர..

   வேந்தன் ‘ என்ன!. ‘ என்பது போல பார்த்து.. பின் நேராக உள் வந்து அங்குயிருந்த சேரில் வினோ, யோகாவின் பக்கத்தில்.. அரசிக்கு கண்ணாடியில் தான்.. தெரியும்படி உட்கார்ந்துக் கொண்டான்.

   ” என்ன அண்ணா அங்க போட்டோ எடுப்பதால் இங்க வந்திங்களா?..இல்ல ஏதாவது எடுத்துட்டு வரச்சொல்லி வந்திங்களா?.. ” புன்னகையுடன் வினோ கேட்க..

   எப்படி வினோ கண்டுபிடிச்ச!.. ” ம்.. இரண்டல ஒன்னு சரி. ஆனா நான் உங்ககூட இருக்கலாம் என்று தான் வந்தேன். ” வரும்போதே உட்கார்ந்துயிருந்த நிஷாவிடம் மைசூர்பாக்கை கொடுத்துவிட்டான்.

   உறுதியன்று இதேதான் கூறியதால்.. எழிலரசியை பார்த்து.. பின் ” என்ன அண்ணா திருப்பும் நாங்க ஏதாவது கேட்டு.. அதன்பிறகு தான் உண்மையான ரீசன் வெளி வருமா?. ” சிறிய முறைப்புடன் கேட்க..

   ” ஹேய் சுரபி இப்படியெல்லாம் என்னை பயமுறுத்தக்கூடாது. நிஜமா நான் உங்ககூட இருக்கதான் வந்தேன்.. இதில் பாதிபேர் நிச்சியம் முடிந்து ஊருக்கு கிளம்பி விடுவிங்க.. அதனால்தான். அப்படியே அப்ப அப்ப அரசியும் பார்த்துப்பேன். ” புன்னகையை கட்டுப்படுத்திக் கொண்டு கூறினான்.

    ” ஓஹ்.. அண்ணா இனி இங்கதானே இருக்கப்போறிங்க. அப்ப எழிலை எப்ப வேண்ணாலும் பார்த்துக்கலாம். ம்.. ” இனி உங்கள நான் அடிக்கடி கோயிலில் பார்க்கலாம் என சத்யா மனதினுள் நினைத்தாள்.

   ” டேய் தம்பி ரொம்ப விவரம்தான். இனி இங்கயே இருக்கபோறது ரொம்ப சந்தோஷம் டா. ”

    ‘ அக்காவின் சந்தோஷத்தை புன்னகையுடன் ஏற்றவன்.. தன்னவளை பார்த்தான். தான் எடுத்து வந்த ஸ்விட்டை சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள்.. குனிந்தபடியே கண்ணடித்து.. மென்புன்னகை புரிந்து அவளின் சந்தோஷத்தை வெளிப்படுத்த.. கேடி கேடி முயல்குட்டி.. என அவளை இனிமையாக அர்ச்சித்து.. பின் அனைவரிடமும் சில நிமிடங்கள் பேசினான். ‘

   ” சரி வேந்தா நேரம் ஆச்சு.. நீ உன் ரூமிற்குபோ.. நிச்சியம் முடிந்து பேசிக்கலாம். ” சரி என தலையசைத்து எழுந்தவன்.. தன்னவள் அவள் அருகில் வந்தான்.

 

    ” டேய் இன்னுமா டா நீ வந்த வேலை முடியல?.. ” என கத்தியபடி உள்ளே திலகன் நுழைந்தான். அரசியை பார்த்தான். இவனோட.. வேந்தனை மறைக்கும் விதமாக நின்ற பின்

    அங்கு இருந்தவர்களை  பார்த்து..  ” அக்கா மேடையில் இப்பதான் எல்லாம் முடிந்தது.. அம்மா உங்கள 10 நிமிடத்தில் கூப்பிட்டு வரச்சொல்லி இவன அனுப்பினாங்க. வரல அதான் நான் வந்தேன்.. ” கூறிக் கொண்டுயிருக்கும் போது..

   ” டேய் டேய் உளறாதடா.. பெரியம்மா எனக்கு இப்பதான் போன் பண்ணி வரசொன்னாங்க. வேந்தன் பூ வைச்சுடான். போங்க இரண்டுபேரும். ” இதனை கேட்ட அனைவரும் சிரிக்க..

  ” அப்ப இவன் எதுக்கு வந்தானு.. உங்க எல்லோருக்கும் தெரியும்மா?. ” அனைவரும் தெரியும் என தலையாட்ட..

    திலகன் வேந்தனை முறைத்து.. ” அப்படா இனி பிரச்சனையில்ல.. ஆனா உங்களுக்கு இந்த விஷயத்தை சொல்லி.. வேந்தன் வேலையை சுலபமாக்குன நபர் யார்னு?. தெரிந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும். ”

   ” சுலபமாயிருச்சுல அவ்வளவுதான். இனி அத தெரிந்து என்ன பண்ணபோற போடா. ” யோகா கூறும் போது அவனின் தியா கஷ்டப்பட்டு புன்னகையை அடக்குவதை பார்த்து.. ‘ ஓ.. இவதானா?. ‘

   ” சரிடா போலாமா. “  என தன் காதில்விழ.. மலர்ந்த முகத்துடன் வேந்தனை பார்த்தவன்.. “  நானும் சத்யாவுக்கு வைச்சுவிடட்டா டா. ?. ” என திலகன் கேட்டவுடன்..

    ” பிச்சுவிடுவேன் பிச்சு. இரண்டு பேர் வீட்லையும் முதல சம்மதம் வாங்குங்க. ” பின் மற்றவர்களை புன்னகையுடன் பார்த்தவன்.. ” சரி எல்லோரும் சீக்கிரம் அரசிய அழைத்து வாங்க. ” என அவர்களின் பதில் கூறும் முன் வெளியே சென்றவன்.. தன்னவளை ஒருநொடி நின்று பார்க்கவும் தவறவில்லை.

 

    திலகனோ தன் காதலை 15 நாட்களுக்கு முன் வெளிபடுத்தி  தினத்தை நினைத்துப் பார்த்த படி வேந்தனுடன் நடந்தான்.

 

     வேந்தன் சத்யா, திலகன் மற்றும் எல்லோரிடம் பேசி ரிசைன் செய்யப்போவதை தெரிவித்து வைத்தவுடன்.. திலகனிற்கு சத்யாவை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவள் குரலில் பகிர்ந்துக் கொள்ளமுடியாத சிறு வருத்தம் தெரிந்தது. அதை காதலனாக தன்னிடம் பகிர வேண்டும் என்ற அவாவும் இருந்தது. அதே நேரம் வேந்தனின் நண்பனாக எழிலரசியையும் பார்க்க வேண்டும். பின் வேந்தனுக்கு கால் செய்து எல்லோரும் பார்த்துக் கொள்வோம் என கூறி.. அவனின் வருத்தத்தை குறைக்க முடியும்.

   இன்பாவிற்கு கால் செய்து என சூழ்நிலை என தெரிந்துக் கொண்டு.. ஒருமணி நேரம் கழித்து எழிலரசியின் வீட்டிற்கு சென்றான். அப்பா வீட்டில் இல்லை. அம்மாவும், பாட்டி, தாத்தா ஆகியோர் காலையில் நேரமே சென்றாதால்.. எப்போதும் மதியம் ஓய்வு எடுக்கும் நேரம்முன் உறங்க சென்றுவிட்டனர். சத்யா, இன்பா எழில் அறையில் இருந்தார்கள்.

   திலகன் எழிலரசியை பார்த்தவுடன்.. இது எழிலா??. என்று நினைக்கும் அளவிற்கு சோர்ந்து போய் வேந்தனின் உடையின் மீதும் குறுக்கும், அவனின் புகைபடத்தை கையில் வைத்தபடி.. படுத்துயிருந்தாள். திலகன் அதனை பார்த்து.. ” ஏன்?.. இப்படி ” அவன் ஆரம்பித்ததும்.. இருவரும் ஒருசேர வாய் கைவைத்து.. பேசவேண்டாம் எனக் கூறி.. அறையின் வெளிவந்தனர்.

    ” ஏன் இளா இப்படி எழில் படுத்துயிருக்காங்க?. “

    சற்று கலங்கிய கண்களுடன்.. ” திலகன் மாமா. உங்களுக்காக தான் வெயிட் பண்னேன். நான் மில்லுக்கு கிளம்புறேன். நீங்க கொஞ்சம் நேரம் இருந்துட்டு கிளம்புங்க. சத்யா மாமாக்கு குடிக்க ஏதாவது கொடுத்துவிடு. ” இன்பா ஒன்றும் பேசமுடியாமல் கிளம்பி விட்டான்.

   ‘ சத்யாவும் தலையசைத்து.. திலகனை அங்குயிருந்த ஷோபாவில் அமர சொல்லிவிட்டு.. குடிக்க எடுத்துவர சொல்லும் போது.. சட்டென்று திலகன்.. அவள் கையை பிடித்து தன் அருகில் உட்கார வைத்தான். அவள் உட்கார்ந்தவுடன் இவ்வளவு நேரம் அடக்கி வைத்துயிருந்த அழுகையை.. அவனின் தோளில் தலைவைத்து.. 5நிமிடம் விடாமல் அழுது தீர்த்துவிட்டாள். ‘

   அவளின் அழுகையை பார்த்தாள்.. வேந்தன் சற்று கோபமாக திட்டியதால் இல்லை என்றும்.. இது வேறு ஏதோ என புரிந்தது. அவளாக கூறுவாள் என அவளின் தோளை அணைக்க துடித்த கைகளை அடக்கி.. அமைதியாக உட்கார்ந்துயிருந்தான். சிறு நேரத்தில் அவள் எழுந்துக் கொண்டாள்.

     ” எழில் அண்ணாவ  ரொம்ப மிஸ் பண்ணுறா. இதுநாள் வர நான் எழிலரசிய.. இப்படி பார்த்ததே இல்ல. எப்போதும் விட ரொம்ப சோர்ந்து போய் இருக்கா. நாங்க அம்மாவையும், பாட்டியிடம் விட்டு போய்ட்டு.. வந்து பார்த்தா துங்கிட்டுயிருந்தவ.. அரை தூக்கத்திலேயே ஏதோ சொல்லிட்டுயிருந்தா. நாங்க வந்ததும் உடனே  அம்மா, பாட்டிய  அனுப்பி வைத்தவுடன்.. பக்கத்தில் காது கொடுத்து கேட்டப்பட்ட தான் தெரிந்தது. தனு.. தனு என்று அண்ணா பேர சொல்லிட்டுயிருந்தா. நாங்க வந்து தூங்க வைத்தவுடன்.. அப்ப புலம்பல. இப்ப ஏன்னு புரியல? “

    ” பிறகு அவள நல்லா பார்த்த பின்ன தான் எனக்கு புரிந்தது. நாங்க எடுத்து வைத்த.. அண்ணாவோட சட்டையும், போட்டோவை முன்னயிருந்த மாதிரி வைத்த கொஞ்ச நேரத்தில அமைதியா புலம்பாம தூங்கிட்டா. “

     ” அவ முதன்முதலா வலி வந்தப்ப  அண்ணாவோட இருந்ததா.. அவள அழமா இருக்க கைய பிடித்த, தோள் சாய்ச்சு, பேசிட்டே இருந்ததா.. ஆன கண்ண முடியிருந்தானு சொன்னாங்கள.. நான் நினைக்கிறேன்.. அண்ணா யாருனே  தெரியமலையே.. அப்பவே அவங்க கூடயிருந்து எல்லாம் அவ மனசுல நல்லா பதிந்துவிட்டதுனு. நான், இளா அண்ணா பார்த்துக் கொண்டதால.. அண்ணாவ கொஞ்சும் மறுந்தும், மறக்காம இருந்துயிருக்கா. ”

     ” இப்ப அண்ணா.. தான்.. தான் அப்ப கூடயிருந்தது, நடந்தத சொல்லியிருக்கவும்.. காலையிலேயே அவங்கள மிஸ் பண்ணியிருக்கா.. நாங்க வேற இல்லையா.. வலி அதிகமா தெரிந்துயிருக்கும் போல. இன்னும் ரொம்ப மிஸ் பண்ணியிருக்கா. அதான் இப்படி படுத்து இருக்கா. ”

   ‘ திலகன் இது எப்படி உங்களுக்கு தெரிந்தது?.’   என்பது போல பார்க்க.. ” நானும் அண்ணாவும்..  அவ அனுப்பிய மெசேஜ் கேட்டோம். ” அவன் முறைக்க..

    ” இல்ல.. அண்ணா அவ அனுப்பிய செசேஜ் உடனே டெலிட் பண்ண சொன்னாங்க. அதிலிருந்தே எனக்கு அவ இப்ப ரொம்ப வலியில் இருக்கானு புரிஞ்சுதான். இருந்தாலும் அவ நினைப்பது புரிந்தா தானே எங்களால அவள சமாளிச்சு.. பாத்துக்க, தூங்க வைக்க முடியும். அதான் கேட்டோம். அதனாலதான் அண்ணாவிடம் பேசிட்டு வந்தபிறகு.. ஏன்னு தெரிந்து?.. இப்ப தூங்க வைக்க முடிந்தது.

    எழில் இப்ப சட்டையில் இப்படி கூறுக்கி படுத்து அண்ணா மடியில படுத்து.. இல்ல தோள்சாய்ந்து படுத்துயிருப்பது போல இருக்கானு நினைக்கிறேன். நான் கால நீட்டிவிட்டாலும்.. உடனே கூறுக்கி படுத்துக்கிறா. இப்ப 10நிமிடமா தான் நல்லா தூங்குறா. அதான் அங்க பேச வேண்டானு இங்க வந்ததது. ”

   ” சரி. இப்ப நீ ஏன் அழுத?.. வேந்தன் திட்டியதாளா?.. “

   அவசரமாக.. ” இல்ல இல்ல.. அண்ணா பேசியதில், கோபபட்டதினால நான் அழுகல. அவங்க சொன்னது சரி தானே..  நான் பொறுமையா எழில் கிட்ட புரிய வைத்து.. அடுத்தமாதம் டிரை பண்ணியிருக்கலாம். “

   ” அதானே பார்த்தேன்.. நீங்கதான் வேந்தன் கொள்கை பரப்பு செயலாளர் ஆச்சே.. அவன் சொன்னதிற்காகவா அழப்போற. பின்ன எதுக்காக தியா அழுதாங்க?.. ”

    திலகனின்  தியா என்ற அழைப்பிலும், அதை கேட்ட தனக்கும்… ஏதோ ஓர் உணர்வு!.. அதில் புதைத்துயிருப்பத்தை போல இருந்தது.

    ” தெரியலை.. நான் எப்போதும் நல்லா பேசுவேன்.. எழில் அமைதியாதான் இருப்பா. நான் முத்த பொண்ணு எனக்கு இரண்டு தங்கச்சினால நான் தான் அவங்கள பார்த்துப்பேன்.  என்னை எழில் பார்த்துப்பா. அவ சொல்லிதான் இன்பா அண்ணாவும் என்னைய பார்த்துக்க ஆரம்பிச்சாங்க. எனக்கு அவள ரொம்ப பிடிக்கும். “

    ” இன்னைக்கு எழில்.. சோர்ந்து படுத்திருந்ததை  பார்த்தவுடன்.. நான் ரொம்பவே பயந்துட்டேன். கொஞ்சம் அவரபட்டு விட்டேனு அப்பதான் நினைத்தேன். இந்நேரம் அண்ணா சொன்னமாதிரி அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா. அப்ப அழுகையா வந்தது. இப்ப உங்கள பார்த்தவுடன் ஏன்னு தெரியல.. சொல்லி அழத் தோனுச்சு. ”

     ” என்னை எதிர்பார்த்தியா தியா!.. ” ஆவலுடன் கேட்டான்.

    ” தெரியல.. ஆனா அண்ணாவோட  பேசியபோது பதட்டதோட நான் பேசியதை கேட்டு.. உடனே மறைமுகமா என்னைய ஏன் திட்டினு?.. கேட்டிங்களா.. அதில என்னைய நினைத்து கவலப்பட்ட மாதிரியிருந்து. அதனால் கால் பண்ணி நான் நல்லயிருக்கேன் சொல்லி பேசியிருப்பேன். ”

   தன் மேல் அவளின் அக்கறை எண்ணி.. இதுபோதும் என நினைத்தவன்.. ” நீ நினைத்தது சரிதான் தியா. நீ பதட்டமா பேசிய கேட்டதும்.. நீ கொஞ்சம் பயந்து போயிருக்கனும்.. உனக்கு அதை யாரிடமாவது சொல்லி அழுதா நல்லாயிருக்கும்.. அப்படி என்பது போல இருந்தது உன் குரல். அதான் உன்னைய பார்த்தது.. நீ என்னிடம்தான் உன் பயம், வருத்தம் சொல்லி உன் மனதை பகிர்ந்துக் கொள்ளனும் நினைத்து வந்தேன்.

    ஏனா.. நான் உனக்கு எப்போதும் துணையா வருனும் நினைக்கிறேன். உன்ன கல்யாணம் செய்துக் கொள்ளனும் ஆசைப்படுறேன் தியா. ” அவள் கண்களை பார்த்தபடி  கேட்டான். 

    சத்யா திலகன் கூறியதை கேட்டவுடன் ஆரம்பித்தில் இருந்தே சாதாரணமாக பேச ஆரம்பித்ததால்.. கல்யாணம்  என்பதை கேட்டதில் மட்டும் நாணம் வந்து.. மற்றபடி அவனிடம் வழவழக்கத்தான் தோன்றியது.

   புன்னகையுடன்.. ” என்ன நீங்க இப்படி சாதாரணமா கேட்கிறிங்க. அதுவும் பார்த்த கொஞ்சநாளில்.. எப்படி  என்னை கல்யாணம் செய்துக்கனும் தோனுச்சு. ”

   ” தெரியல ஆனா தோனுச்சு.. எனக்கு வேந்தன் மாதிரியெல்லாம் பொறுமை கிடையாது. நான் உன்னை.. முதன்முதலா துணிக்கடையில் இருக்கும் போது.. எழில், வேந்தன் அக்கா, தங்கைகளுடன் போட்டோவில் பார்த்ததும்.. ஒரு ஈர்ப்பு வந்தது. அதே உணர்வுடன் நான் இருக்கும் போது.. சிறிதுநேரத்திலே அந்த துணிக்கடையிலேயே..  நீ எழிலரசியோட பேசினப்ப உன் பேச்சு பிடித்தது. அதன் பிறகு அங்க, எழில் வீட்டில நாம்ம பேசியதும் இன்னும் பிடித்தது. “

     ” உறுதி அன்னைக்கு வேந்தன் உனக்கு மாப்பிள்ளை பார்ப்பேன் சொன்னதும்.. நான் முடிவே பண்ணினேன். உன் பக்கத்தில் என்னைய தவிர யாரும் இருக்ககூடாதுனு. இன்னைக்கு சொல்லாட்டி.. வேந்தன், எழிலரசி நிச்சியத்திற்கு முன் கண்டிப்பா சொல்லியிருப்பேன்.. ஆனா நான் உன்னிடம் இரண்டு வீட்டலை சம்மதம் வாங்கும்முன் உன்னிடம் உரிமையா பேசமாட்டேன். நாம்ம யாரோ மாதிரி பார்த்துக்க, பேசிக்க எனக்கு விருப்பம் இல்ல. அதனால்தான். ”

   ” என்ன இரண்டு வீட்டு சம்மதம் சொல்லுறிங்க. முதலில் நான் சம்மதம் சொல்லனும் அத மறுந்துவிட்டிங்க. ” அவள் கண்களில் குறும்பு மின்ன கேட்க..

    ” அதுக்கு அவசியமே இல்ல.. நீ எப்ப என் தோளில் சாய்ந்து உன் மனதில் இருப்பதை பகிர்ந்தியோ.. அப்பவே நீ என்னை எவ்வளவு நெருக்கமா உணர்கிற என்று தெரியுது. நான் கவலபடக்கூடாது நீ நினைப்பதிலே.. உனக்கு நான் எவ்வளவு முக்கியம் என்பது புரியுது. உன் சம்மதத்தை இனி வாய்மொழியா சொல்லனும் அவசியமில்ல. நான் கேட்க போவதும் இல்ல. ”

    ” ம்.. ” புன்னகையுடன் தலையசைத்து.. அவர்கள் பெற்றோர்களின் முழு சம்மதத்திற்கு.. பிறகு காதலிக்கலாம் என்று அவர்கள் சாதாரண பார்வையுடன் வலம் வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!