Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 36.4

 

நாம் 36(4)

 

      பிறந்தநாள் கொண்டாட்ட வீட்டின் மேல் மாடியில் இருந்து இப்போது தன்னவளின் வீட்டில் அவள் அறைநோக்கி மாடி படிகள் சென்று கொண்டுயிருப்பது வரை பல முத்தங்களை வாங்கிய பின்னும் அமைதியாக வருபவனை என்ன செய்து?. அவனை வாய் திறக்க வைப்பது என்று வேந்தனின் அரசிக்கு தெரியவில்லை.



Advertisement

   தனு மாமா.. நான் அவங்க எல்லாம் உங்களை எதுவும்.. ”

   அவளை முறைக்க.. ‘ போடாஎன அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு சாய்ந்து கொண்டாள்.

   தன்னவளை படுக்கையில் படுக்க வைத்து.. கட்டை பிரித்து அழுத்தியிருந்த தடத்தில் மென்மையாக நீவி விட்டு.. அவனும் அவளின் கழுத்தில் புதைந்து படுத்துக்கொண்டான். அவளும் அவனின் தலையை கோதியபடியே இருந்தவள்.. தன் மார்ப்பில் ஏதோ உணர.. பதறி தன்னவனை முகத்தை பார்த்தாள்.

Advertisement

   அதிர்ந்து.. ” தனு.. தனு மாமா.. எனக்கு புரியுது… ” அவளின் பேசும் இதழை மென்மையாய் ஆரம்பித்து வன்மையில் சில நொடி.. பின் மென்மையில் சில நிமிடங்கள் என அவள் இதழை ஆளுகை செய்தவன்.. அவளை விட அவனே முதலில் துவண்டு அழுகையுடன் அவளை இறுக்கபற்றிக் கொண்டான்.

Advertisement

   அவளின் கழுத்தில் புதைந்தபடியே.. ” ஏன்டி என்னைய இப்படி படுத்துற?. நான் எவ்வளவு பயந்துபோய் இருக்கேனு உனக்கு தெரியாதாடி. அன்னைக்கு நான்நான் மட்டும் நீ சொன்னதை கேட்டு உள்ள போயே இருந்துயிருக்க கூடாது. நான் போகாம இருந்து இருந்தா டேபிளை நகர்த்தி.. ” அவனின் இதழில் விரல் வைத்து

   அவனின் கண்களின் மேல் முத்தமிட்டு.. ‘ நிறுத்துடா போதும்என நீண்ட முத்தம் கொடுத்து வெப்பத்தால் கண்ணீரை வற்றவைத்த பின்..

   “  அதனாலதான் என்னைய இப்ப எல்லோர் இருக்கும் போதும் தனியா விடல. ”

Advertisement

   ‘ ஆமாம்என அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க..

   நீங்க இப்படி பண்ண பண்ணதான்.. தனு அவங்களுக்கு என்மேல பிடிக்காத உணர்வு வருது. ” புரியவைக்க முயல..

   பொறுமையாற்றவனாக.. ” போடி.. அவங்களுக்கு பிடிக்காத மாதிரி இருக்குனு.. நான் உனக்கு பண்ண வேண்டும் என்று  நினைப்பதை!. பண்ணாம இருக்கமுடியும்மா?. இதுல அவங்களுக்கு என்னடி பிரச்சனை?. இதில் எனக்கு ஒன்னும் மட்டும் புரியல.. வசும், மேகாவும் கல்யாணம் ஆகல ஆனா தனக்குனு ஒருவன் இருக்கான் என்பதால் புரிந்தும்புரியது போல இருக்காங்க.

   ஆனா காவ்யா அண்ணிக்கு என்னடி பிரச்சனை.? அவங்க முன்ன தானே நாங்க உள்ள போனோம். இரண்டு பேரை கூப்பிடா நீ தனியா இருப்பனு தெரியாதா?. முதன்முதலா வந்துயிருக்க.. நான் வரவரைக்கும் இருந்து இருக்கனும்.. இல்ல பெரியம்மா, அம்மாவிடம் சொல்லிட்டு போய்யிருக்கனும். அவங்க யாராவது இருந்துயிருந்தா.. எதையாவது ஒன்றை கவனித்து இருப்பாங்க. இல்ல நீயாவது போட்டோவை கவனிக்காம இருந்துயிருப்ப. நீ வீழ ஆரம்பமே அவங்க தான்.

   அவங்கள மாதிரி தானே நீயும்.. அந்த வீட்டு மருமகளா வரப்போற. ஆரம்பத்திலே உன்னிடம் அவங்க இப்படி நடந்துக்கொண்டா.. நான் அவங்களை மதிக்க மாட்டேன். இதனால அண்ணாக்குதான் கஷ்டம் ஏன்டி அவங்களுக்கு புரியல. ”

   அழுகையும், தன் மீதே கோபமும், வருந்தமும் என குரல் உடைத்து பேசிக் கொண்டுயிருந்தவன்..  சாதாரண குரலில் பேசிவிட்ட திருப்தியில்.. அவனின் கன்னத்தை பிடித்திழுத்து.. ” இதுக்கு அப்புறம் பதில் சொல்றேன். பசிக்குது தனு. எனக்கு முட்டை தோசை ஊற்றி கொடு. ”

   தனுவாக மாறி.. ” கொழுப்பு டி உனக்கு

   புன்னகையுடன்.. ” எங்க?. ” அவளின் இதழை அழுத்திபிடித்து.. ” இங்கதான்.. இந்த வாய் இருக்கே.. அங்க போதும் போதுனு சொல்லிட்டு இப்ப பசிக்குதுனு சொல்லுது. ”

   அவனின் கையை கிள்ள.. அவள் இதழில் இருந்து அவன் கையை எடுத்துவிட.. அரசி தன்கையால் இதழை வருடிய படி இருக்க..

   அவளை முறைத்தவன்.. ” என்னடி பண்ணுற?. ” அவளின் கையை எடுத்து விட்டு.. அவன் அவளின் இதழ்களை பார்த்தவன்.. அய்யோ என நினைத்தான். ” சாரி முயல்குட்டி.. ” இன்னும் அழுத்தி பிடித்தால் குருதி வந்துவிடும். நீண்ட முத்த தாக்குதலினால் வந்த விளைவு.

   கள்ளப்புன்னகையுடன்.. ” எதுக்கு? ” புருவத்தை ஏற்றி இருக்க.

   ‘ கேடி முயல்குட்டிஎன நினைத்து.. மென்மையாக தன் இதழ் மூலம் அவள் இதழின் மேல் பதிலளித்து.. அதற்கு மருந்தையும் கொடுத்தான்.

   பின் அவள் எதற்காக தோசை கேட்டாள் என தாமதமாக உணர்ந்து.. அவளை சமையல் அறை முன்தூக்கி வந்தவன்.. பின்இறக்கி மெதுவாக நடக்க வைத்து அழைத்து வந்தவன்.. பின் சமையல் மேடையில் உட்கார வைத்து.. அவளின் கால் கீழே தொங்காதபடி.. சேர் போட்டு அவளிற்கு தேவையான உயரத்திற்கு தலையணை வைத்தான். பின் அவளுக்கு பிடித்த மாதிரி மிளகு, வெங்காயம் போட்ட முட்டை தோசை ஊற்றி எடுத்துதான் பின் இரண்டாவதை ஊற்றிவிட்டு.. அவளுக்கு ஊட்டினான்.

 

   தனு நாளைக்கு காலையிலேயே இங்க வேலை ஆரம்பித்து விடுவாங்களா?. ” இதுபோலான இவ்வறையின் தோற்றம் தான் பார்க்கும் கடைசிநாள் என்பதால் கண்களால் அனைத்து இடத்தை பார்த்தவாறே கேட்க..

   ம்.. இரண்டு வாரத்திற்குள் இங்க, டைனிங்ஹால், ஹால் எல்லாம் முடியனும் இல்ல. ” அடுத்ததை எடுத்து அவளுக்கு கொடுக்க.. ” போதும் தனு.. ”

   அவனை முறைக்க வைத்து அவனிற்கு ஊட்டினாள். அவன் வாங்கிய படியே இருவருக்கும் டீ  வைத்தான்.

     சாப்பிட்டவுடன் டைனிங்அறைக்கு அழைத்து வந்தவன்.. தான் இவ்வீட்டிற்கு முதன்முதலில் வந்தபோது.. இருவரும் அனைவர் முன்னும் சேர்ந்து அமர்ந்து.. தான் செய்த இனிப்பை முதன்முதலில் தன்னவள் சாப்பிட்ட அந்த இடத்தில்.. ஒரு தலையணை மட்டும் காலில் வைத்து அவளை மடியில் அமர்த்திக்கொள்ள..

   ” தனு அப்பா, அம்மா வந்திட போறாங்க. ”

    அவங்க பெரிய மாமா வீட்டில் இருக்க போறாங்க. இன்பா தான் வருவான். புன்னகையுடன் கூற.. 

   ‘ .. அந்த தைரியமாஎன்று பார்வை பார்க்க.. ‘ போடிஎன புன்னகையுடன் அருகில் வைத்துயிருந்ததை இருவருக்குமான டீயை குடித்தபின்.. அவளை தோளில் சாய்ந்துக் கொண்டான்.

 

   தனு நீங்க காவ்யா அக்கா.. அங்க இருந்தபோது எப்படி இருப்பீங்க?. ” கேட்டு முடிக்கும் முன்னமே..

    எத்தனை தடவைடி சொல்வது?. நான் சென்னைக்கு காலேஜ் போன பின்னயே நான் அங்க அதிகம் இருந்தது இல்ல. சென்னை போன பிறகு தான் அவங்க கல்யாணமே ஆச்சு. “

    அவனை கிள்ளி.. ” முழுசா கேளு தனு. அவங்க சாந்தி அத்தையோட அண்ணா பொண்ணுதானே.. அவங்க வீட்டிற்கு அடிக்கடி வருவாங்களா?. வீட்டில் இருப்பாங்களா?. அப்ப எப்படி இருப்பிங்க?. ”

   .. ” முயல்குட்டி.. அவங்க கல்யாணம் முன்னாடி நான் அவங்களிடம் பேசியதே இல்ல. எல்லாம் ஒன்னா இருந்ததால பெரியம்மா, யோகா அக்கா மட்டும் தான் அவங்க வீட்டிற்கு போங்க. அவங்க கல்யாணம் முடிந்துதான் இங்க வந்ததே. அப்ப பார்த்தது.. அதன்பிறகு நான் மாதேஷ் பிறந்த அப்பதான் பார்த்தேன். இப்படி நான் அவங்கள ஒரு ஐந்து தடவை தான் பார்த்துயிருக்கேன். பேசியது இரண்டு, மூனு வார்த்தை தான். ”

   மெல்லிய புன்னகை புரிந்தவள்.. அவனின் முகத்தை பார்த்து.. ” ம்.. இப்படி அதிகம் பேசாம, பார்க்காம இருந்தவர். இப்ப இரண்டு மாதமா நீங்க அதிரடியா நடந்துக் கொள்ளவதை பார்த்து கொஞ்சம் வேற மாதிரி யோசிக்க ஆரம்பித்து இருக்காங்க. ” ‘ புரியும் படியா சொல்லுடிஎன்ற லுக்விட..

   தனு அவங்க இத்தனை வருடம் அந்த வீட்டில் அண்ணா பொண்ணாவும், அவங்க அம்மா, அப்பா அடிக்கடி வீட்டிற்கு வந்து போயிட்டு எந்த கவலையில்லாம இருந்து இருக்காங்க.

   நீங்க இங்க வீட்டில் அதிகம் தங்காது.. பழக்கம் இல்லாம இருந்ததால.. என்னைய பார்த்தபின் உங்க அதிரடியான செயலை பார்த்து முதலில் சாதாரணமா புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவங்க.. நிச்சியம் பின் இப்ப நீங்க இங்கேயே வந்துவிட்டது. என்னைய நீங்க ஹோட்டலில் நீங்க செய்யும் வேலை, தனியா ஆரம்பிக்கும் இனிப்பகம் மற்ற எல்லாம் பார்த்துக்க சொன்னது.. நீங்க இங்க தினமும் வருவது. இன்னும் எனக்காக செய்வதை எல்லாம்.. கொஞ்சம் அதிகம் என்று பார்த்தாலும்.. ” அவன் அவளை முறைக்க..

   புன்னகையுடன் அதனை ஏற்று.. தனுமாமா அவனின் கன்னத்தில் முத்தமிட்டு.. ” தனு அவங்க என்ன நினைக்கிறாங்கனா?. நாம்ம  இதையெல்லாம் செய்ய காரணம் ஒரே ஊரில் இருப்பாதால் தானே. சித்ரா அத்தை மாதிரி நானும்.. சாந்தி அத்தை மாதிரி அவங்கனு மாறிவிடுவோனு நினைத்து.. நாமளும் அதே மாதிரி இருந்தா என்னவென்று தோன்றியிருக்கும் போல.

    அதனால தான் தம்பிய இங்க பக்கத்தில் இருக்க பொண்ணா பார்த்து கல்யாணம் செய்து.. இங்கயே பிஸ்னஸ் ஆரம்பிக்க வைத்து.. குடும்பத்தையே இங்க வரவைக்கலாம் பிளான்ல இருக்காங்க போல. இதில் சேர்த்து இன்னொரு பிளான் போட பார்த்தாங்க. ”

   புன்னகையுடன்.. ” தனு அவங்க கதிரா அண்ணாவ.. வித்யாவுக்கு முடிக்கலானு நினைத்துயிருப்பாங்க போல. ”

   யோசனையுடன்.. ” தர்ஷினி பற்றி யாருக்கும் தெரியாதா?. கதிரவன் வீட்டில் எல்லாம் சம்மதம் சொல்லிட்டதா சொன்ன. ”

   ம்.. சொல்லிட்டாங்க தான். அண்ணாக்கு முடிவாகாம இருக்க.. எப்படி சொல்லனு. வெளியில் யாருக்கும் தெரியாது. அதனால மேகாவும் சொல்லி இருக்கமாட்டா. ”

    புன்னகையுடன்.. ” இரண்டு நாளா அண்ணா வரும்போது.. அவங்க நடவடிக்கைய கவனித்த மாதிரி இருந்தது. அதான் இன்னைக்கு அண்ணாட்ட தர்ஷினிய அத்தைய அழைத்து வரச்சொல்லி.. அவங்களிடம் மேலோட்டமா காரணம் சொன்னேன்.  

   ஏற்கனவே அவங்க எதுக்காக அத்தைங்கள அழைத்தாங்கனு?. யோசனையில் இருந்தாங்க. அவங்க தர்ஷினிய வேற அழைத்து வரலையாஎங்கே இதை பற்றி பேசிவிடுவாங்களோனு செம்ம டென்சன் ஆகிட்டாங்க. அவங்க இதைபற்றி இனி நினைக்க கூடாதுனு.. உடனே சந்துரு அண்ணாவிடம் பேசுவது போல அவங்க முன்னாடியே தர்ஷினி அவர் வருகால மனைவி.. பார்த்து பத்திராமா அழைத்துவானு சொல்லி வைத்தாங்களா? அவங்களை திரும்பி பார்க்க கூட இல்லையாமா. மெசேஜ் பண்ணி சொன்னாங்க. “

   அவளை முறைப்புடன்.. ” சரிடி. அவங்க குடும்பத்தை, என்னமோ, எப்படியோ பிளான் பண்ணி பக்கத்திலே வைத்துக்கொள்ளட்டும். இதில் அவங்க உன் மேல கோபபட என்னயிருக்கு?. ” காவ்யாவின் மேல் கோபம் கண்களில் தெரிய..

    கண்களில் முத்தமிட்டு.. கோபத்தை குறைத்து.. ” அவங்களுக்கு நீங்க என்னய இப்பவே அழைத்து வந்தது பிடிக்கல போல. நாம்ம வீடுபோகும் முன்ன.. நீங்க நேரம் பார்க்கமா அழைத்து வருவதா.. ஏதோ பேசு வந்துயிருக்கும் போல.. அதற்கு சாந்தி அத்த ஒன்னும் சொல்லலையா.. அதன்பின்ன வினோ அண்ணி குழந்தை விஷயம் கேட்டபிறகு நான் நல்லநேரத்தில் வீட்டிற்குள் வந்தேனு சித்ரா அத்த வசுவிடம் சந்தோஷமா சொன்னாங்களா. நான் உட்கார்ந்து இருந்தபோது மேகாவும், வசும் பேசிட்டு இருந்தாங்க. காவ்யா அக்கா சமையல்அறை போனாங்க அப்ப. அங்கேயும் இரண்டுபேரும் இதை பற்றி பேசியிருப்பாங்க. ”

   இதனால உன்மேல அவங்களுக்கு கோபம் வந்துருச்சா. ” கோபம் குறைந்து நிதானமாகவே கேட்க ஆரம்பத்தான்.

   கோபமா?. இல்ல வெளியிடத்தில் வந்த பொண்ணுக்கு இப்பவே எல்லா இடத்திலும், எல்லோரும் உரிமையும், முக்கியத்துவம் கொடுப்பதை பார்த்து என் மேல வெறுப்பு இருக்கலாம். ”

  லூசா அவங்க. அது என்னடி கல்யாணம் பண்ணா பண்ணலாம். ஆனா கல்யாணம் செய்து வரப்போகும் உனக்கு பண்ணக்கூடாதா?. ”

   தனு.. நீங்க என்னைய முன்னாடியே பிடித்துயிருந்து.. மிஸ் பண்ணியாதால் எல்லாம் செய்யனும் நினைத்து.. எதையும், யாரையும் பார்க்காம செய்றீங்க. வீட்டிலையும் நீங்க இத்தனை வருடம் இங்க இல்லாததால் நீங்க கேட்பதை நிறைவேத்துறாங்க.

   ஆனா எல்லோரும் கல்யாண பண்ணபோற பொண்ணுக்கு செய்யனும் நினைக்க மாட்டாங்க. அதோட நாம்ம உறவுமுறையில் திருமணம் வேண்டானு சொல்லிட்டு.. அவங்களின் துணையோடவே கல்யாணம் முன்பே எல்லாம் பண்ணுறோம். அதனால இப்படி சில விருப்பு, வெறுப்பை சம்பாதித்து தான் ஆகனும். “

 

    அவளை இறுக்க அணைத்து.. நெற்றியில் முத்தமிட்டு.. ” அப்ப நான் உன்னைய பதினெட்டு வயசில் கல்யாணம் செய்து.. நான் உனக்கு எல்லாம் பண்ணியிருந்தா.. என்னடி செய்துயிருப்பாங்க?. ”

    முகம் மின்ன புன்னகையுடன்.. ” ம்.. இந்நேரம் நம்ம குழந்தைக்கும் ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாடி இருப்போம். தனுமாமா தனியா பிஸ்னஸ் ஆரம்பித்து.. முயல்குட்டிய கொஞ்சி கொஞ்சி இன்னும் தாங்கி.. இன்னும் அதிகமான வெறுப்பு வந்தால் வந்துயிருக்கும். ”

   அப்ப இது ஓகே தானே?. ”

   தெரியல தனு. ஒருபக்கம் கடவுளா பெரியவங்க மூலமா முதல்வரனா அமைந்து.. நாம்ம பார்த்து திருமணம் முடிவாகி இருக்குனு சந்தோஷமா!. இருக்கு. ஒருபக்கம் சிலர் செய்வதை பார்த்தா.. என் தனுமாமா என்னைய பல வருடம் விரும்பி கல்யாணம் பண்ணப்போறாருஅதனால  எல்லாம் எனக்கு செய்யுறாரு.. உங்களுக்கு என்னனு? கத்தி சொல்லனும் போலவும் இருக்கு. எப்படா கல்யாணம்நாள் வருனு இருக்கு தனு. ” சிறிது கண்கலங்கி.. அவனின் கழுத்தை இறுக்க அணைத்து கூறினாள்.

   அவளின் கலங்கிய முகத்தில் அவனும் கலங்கி.. ” முயல்குட்டி நாம்ம வேண்ணா.. ” வேகமாக அவனின் இதழை கைவைத்து முடி..

   தனு நான் நீங்க கேட்டத்திற்கு மனசில் பட்டதை சொன்னேன். நீங்க ஏதும் பிளான் பண்ணாதீங்க. ஒரு ஐந்தாறு பேருக்காக.. நம்ம அன்பை புரிந்துகொண்டு நமக்கு துணையாக நிறையபேர் செய்யும் செயலையும், அவங்களையும்.. ஒரே வார்த்தையில் நாம்ம கஷ்டபடுத்த வேண்டாம். ” மெல்லிய புன்னகையுடன் கூற..

   அவன் யோசிக்க.. ” தனு மாமா. ”

  சரி முயல்குட்டி. ஆனா நீ எதை பற்றியும் நினைத்து கொண்டுயிருக்க கூடாது. ” அவளின் முடியை ஒதுக்கி.. கன்னத்தை தாங்கி கேட்க..

   ம்.. ” தலையசைத்தவள்.. பின் நினைவு வந்தவளாக.. ” தனு நைட் இங்கயா?. அங்கயா?.”

    என் அரசிக்கு எங்க இருக்கனும்?. ” நெற்றிமுட்டி கேட்க..

    நாம்ம ஹாலில் படுத்துக்கலாமா?. காலையில் 4மணிக்கு அங்க போய்விடலாம். பின்ன அண்ணாவ வரச்சொல்லாம். 

    யோசித்தவன்.. ” சரி.. நான் அண்ணாவிடம் சொல்லிட்டு.. இன்பாவிடம் சொல்லுறேன். ” புன்னகையுடன் தலையாட்ட.. பின் அவளை கீழே உட்கார வைத்துவிட்டு.. இருவரிடமும் தகவல் தெரிவித்தான்.

   முயல்குட்டி உனக்கு கால் வலி இல்ல தானே?. மாத்திரை குடிக்கல வேற. ” அவளின் கால்களை தடவிய படிகேட்க..

  முழித்தவள்.. ” தனு வலி லைட்டாதான் இருக்கு. சமாளிச்சுக்குவோன். காலையில் சீக்கிரம் போய்விடுவோம் தானே. ”

    அவளை முறைக்க தோன்றினாலும்.. அவள் இந்நிலையிலும் இங்கு இருக்க விரும்புகிறாள் என்கிறாள்.. மீண்டும் இதே போல் இருக்காது. சில மாற்றங்களுடன் தான் இருக்கும் என்பதாலும்.. தங்களுக்கு இவ்விடத்தில் தானே உறுதி நிகழ்ச்சி நடந்ததால் தன்னுடன் இருக்க ஆசைபடுகிறாள் என்பதை மனதில் வைத்து.. ‘ சரிஎன தலையசைத்தான்.

    பின் அவளின் அறைக்கு கூட்டிச் சென்று.. இரவு உடை மாற்ற கூறி.. பின் தானும் இன்பா அறையில் மாற்றி.. இருவரின் உடைகளை எடுத்து வைத்து.. கீழே சென்றார்கள். அவளை ஷோபாவில் அமர வைத்து..  பின்படுப்பதற்கு ஏற்ற வகையில் அவள் பீரியட்ஸ் டைமில் ஹாலில் படுக்க வாங்கிய படுக்கையை எடுத்துவந்து.. அவளை உட்காரவைத்து.. மென்மையாக மசாஜ் செய்துவிட்டு.. அவளின் மடியில் இடை கட்டுக்கொண்டு படுத்தான்.

   தனு நீங்க மட்டும் நான் வேண்டானு சொன்னாலும் திரும்ப திரும்ப படுக்கிறீங்க. ” வாய் கோபமாக கேட்க.. கை அவனின் தலைகோத..

   ” முயல்குட்டி நான் அமைதியாதான் படுத்துயிருக்கேன். ” அவனின் கை முதுகில் அசைவை கொடுக்க. அதிலே அவள் சிலிர்க்க..

   அய்யோ தானாபோய் தலைய கொடுத்துட்டமோ.. ” சரி சரி நான் ஒன்னும் சொல்ல. நீ கொஞ்சம்நேரம் படுத்துக்கோ. ”

    சமாதானத்திற்கு வந்தவளின்.. அவன் மடியில் இருந்தே அவள் முகத்தை பார்க்க. அது சிவந்து மின்ன.. முயல்குட்டி என அவளை இழுத்து சிறிய மென்முத்தம் ஒன்றை அவள் உணரும் முன்கொடுத்து.. எதுவும் நடக்காதது போல மீண்டும் படுத்துக் கொண்டான்.

   வாங்கியவள் கனவா?. நனவா என தலையை ஆட்டி யோசிக்க.. ஒருவன் புன்னகையை கட்டுப்படுத்தி அவளை கட்டிக்கொண்டு சிலநிமிடங்கள் படுத்துயிருந்தவன்.. பின் அவளை சரியாக படுக்கவைத்து.. பின் அவளின் அருகில் இவ்விடத்தில் தான் நுழைந்து முதல் அன்று நடந்து அனைத்தையும் பேசியபடி இருந்தனர். 

 

    அடுத்தநாள் முதல் ஒருமாதத்திற்கு அனைவரின் நேரமும், நாட்களும் றெக்கை கட்டிக்கொண்டு ஒவ்வொருவருக்கும் பலவிதமாக கடந்து பறந்தது.

 

     அரசி ஒருவாரம்  வீட்டில் இருந்து தன்னவனின் முழுகவனிப்பில் நன்றாக ரெஸ்ட் எடுத்துவிட்டு பின் கடைக்கு வந்துவிட்டாள். வந்துவிட்டாள் என்பதை விட அவள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தாலும்.. ஏனோ முகத்தில் நிம்மதி இல்லாததது போல இருக்க.. அவள் கண்ணால் நேடியாக பார்த்தால் மட்டும் திருப்திபடுவாள் என்று அவளவன் புரிந்துக்கொண்டு கடைக்கு இருவருமே வந்துவிட்டார்கள். அரசி அங்குயிருந்தே தன் அப்பா, அண்ணாவின் வரவு, செலவுகளை கணக்குகளை பார்த்தாள்.

   சென்னை வேலை அதிகம் இனி இல்லை. அதனை வீட்டில் இருக்கும் போது முடித்துவிடலாம். கடையின் உள்பகுதி, மாடியில் இனிப்புகள் செய்யப்படும் பகுதி, அதனை செய்யும் பொருட்கள் வைக்கும் பகுதி என அனைத்தும் துரிதமாக நடைப்பெற்று.. இனிப்புகள் செய்யப்படுத்தும் பாத்திரங்கள் முதற்கொண்டு சுத்தமாக, விரைவாக, பாதுகாப்பாக செய்ய என்ன தேவையோ அனைத்தும் மாணிக்கம் அறிவுரைபடி வாங்கி.. அடுத்து வரவைக்கப்பட்டது.

   பின் தங்களுடைய இனிப்புகள் மற்ற கடையில் இருந்து மாறுபட்டு அதே சமயத்தில் தனித்துவம் மிக்கதாக தெரியவும்.. இனிப்புகள் மட்டும் தான் பெரும்பான்மை என்பதால் அதனை செய்ய தேவையான பொருட்கள் அனைத்தும் அதற்குரிய சிறந்த ஊர்களில் இருந்து அரசியின் ஆசை மற்றும் யோசனையால்.. வேந்தன் அதனை தன் நண்பர்கள் மூலம் தரமான, நம்பிக்கையான இடத்தில் இருந்து வரவழைத்தான்.

    இதன்நடுவில் அவளின் வயிற்று வலியின் போது  வீட்டில் இருந்து சுகமான வலியாக அவளை உணரவைத்து.. அவனும் அவளின் வலியை தன் வலியாக உணர்ந்து இருவரும் இந்நாட்களில் தங்களை புதுவிதமாக உணர்ந்து.. இனிவரும் மாதங்களில்  தன்னால் முடிந்தளவு அழாமல் சமாளிக்க வேண்டும்  என்று அரசியை அவளின் தனு அதற்கு தயார் படுத்தியிருந்தான்.

   அரசியின் வீடு அரசியின் அறை தவிர.. தரைதளம் மற்றும் மாடி ஹால், பிற அறைகளில் சிறிய சிறியமாற்றங்களுடன்.. தேவைக்கு ஏற்ப பர்னிச்சர் அமுதன் கடையில் இருந்து ஆடர் கொடுத்தும்.. புதுவண்ணத்துடன் மாறியிருந்தது. அரசி அவர்களின் திட்டப்படி இருவாரங்களில் அவளின் வீட்டிற்கு வந்துவிட்டாள். ஆனால் அவளை அந்த அறையைவிட்டு வெளிவருவதற்குள் அவளவன் இத்தனை வருடத்திற்கும் சேர்த்து செய்த கூத்து. அப்பப்பா..

    கதிரவனும், சந்துருவும் தன் பணிகளை சிறப்பாக செய்து முடித்துயிருந்தனர். ராஜேஷ் சற்று  ஹோட்டல் தொழில் மீது ஆர்வம் வந்துயிருந்தது. அவனின் திருமண வரன் இருவீட்டிலும் திருப்தியாக அமைய.. இனிப்பகம் திறக்கும் அன்று மாலையே திருமண பெண் அஞ்சலி வீட்டில்உறுதி வைக்கலாம் என்று இப்போதைக்கு முடிவு எடுக்கப் பட்டுயிருக்கிறது.

    ரவிந்திரன், மாணிக்கம், ஈஸ்வர் மாற்றி மாற்றி கடைதிறப்பு விழா மற்றும் குலதெய்த கோயில் கும்பாபிஷகத்திற்கும் அழைப்புவிடுத்தனர். சித்ரா கல்யாணவேலை வந்துவிடும் என்பதால் வசுவை, சாருவுடன் கல்லூரி ஒன்றாக சென்றுவிடலாம் என அத்தை சுமதியை பார்த்துக்கொள்ள கூறி.. வினோவுடன் இருக்க எண்ணி மூன்று வாரங்களுக்கு அங்கு சென்றுவிட்டார்.

    மற்றவர்கள் எப்போதும் போல தேவையான நேரத்தில் நாள் ஒன்றுக்கு என ஒருமாதமாக பலஉதவிகள் செய்தும், தங்களின் வேலைகளை பார்த்தும் இருந்தனர். சிலர் இவர்களை கவனித்தபடியும் இருந்தனர்.

    

    

    

   

  

    

    

   

    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!