Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 37.3

 

நாம் 37 (3)

 

   நந்தினி இப்படி பண்ணிட்டா?. இப்ப என்ன செய்ய?. “



Advertisement

   ” யார்?. யார் பக்கம் பேச?. எனக்கு ஒரே படபடப்பா இருக்கு. ”

   அழுகையுடன்.. ” ம்.. எனக்கு.. எனக்கு மாமாவை நினைத்தா பயமா இருக்கு அண்ணி. அவர் எப்படிபட்ட மாப்பிள்ளை பார்த்தாரு. இப்ப என்னடானா?. ”

   ஏன் அந்த பையனுக்கு என்ன குறைச்சல்?.”

Advertisement

    அவரின் பேச்சை பாதியில் நிறுத்தி.. ” அண்ணி அந்த பையன்.. நல்ல அழகான, லட்சணமா பையன்தான். ஆனா சொத்து அந்த பையனுக்கு என்று பார்க்கும்போது கம்மி தானே. அதான் இப்ப பிரச்சனையே. அவர் முதலில் பார்ப்பதே இதைதான். மத்ததெல்லாம் அடுத்துதான். “

Advertisement

 

   ராஜேஷ் உறுதி முடிந்து திருச்சிக்கு செல்ல வேண்டியவர்கள் ஒரு வேனில் சென்றுவிட.. மற்றவர்கள் பாதி வழியில் வரும்போதே ஒரு அதிர்வு செய்தியை கேட்டு..

   இப்போது எழிலரசி அத்தை தேவகி, ராதா இருவீட்டின் நடுகூடத்தில்.. வீட்டினுள் செல்ல முடியாமல் வெளியே அமர்ந்து.. என்ன நடந்தது?. இனி என்ன நடக்கும்?  என புரியாமல், படபடப்புடன் இருந்த நேரம்.. வரதராஜன் பேச அதை கவனிக்க ஆரம்பித்தனர்.

Advertisement

 

   தன் மகனின் செயலை ஏற்க முடியாமல் தவிப்பும்,கோபமுமாய் இருந்தவர்.. தான்தான் பேசவேண்டும் என்ற பொறுப்பு இருப்பதால்.. தன் அருகில் இருந்த அருணாச்சலத்தின் ஆறுதல் வார்த்தையில் மனம் தேறி.. இருப்பவர்களை சடங்கடத்துடன் பார்த்து பேச ஆரம்பித்தார் வரதராஜன்.

 

   எல்லாரும் என் பையன் பண்ண செயலிற்காக..  நான் உங்களிடம் மன்னிப்பு கேட்குறேன். ” எழுந்து நின்று கூற..  பதறிய அருணாச்சலமும்.. அவரின் மூத்தமகன் அருட்செல்லமும் அவரை உட்கார வைத்தனர்.

   அண்ணா நீங்க நடந்தத சொல்லுங்க . தப்பு யார் பெயரில் இருக்குனு அப்பதானே தெரியும். எத்தனை நாட்களா இவங்களுக்கு பழக்கம். ஏன் இப்படி பண்ணினாங்களா?. ”

   வரதராஜன் இதுபோலனா சூழ்நிலையை பார்த்து கூட இல்லை. அவர் கையில் நடுக்கம் இருந்தது. அவரின் கையை பிடித்தபடி ரவிந்திரன் கேட்க.

   நாங்க திறப்புவிழா முடித்துட்டு நீங்க மாடிக்கு போனிங்க.. நாங்க வீட்டிற்கு போயிட்டு இருக்கும்போது.. எங்க குலதெய்வ கோயில் பூசாரி கால்செய்து.. நான் இல்லாத.. உங்கள தெரியாத புதுபையன் இருக்க நேரம்மா.. உங்க பையன் கல்யாணம் செய்து கொண்டான். வாங்கனு கூப்பிட்டார். அவனுக்கு போன் செய்தா சுவிட்ச்ஆப்னு வந்தது.

    காலையில் சீக்கீரம் வந்ததால தலைவலினு.. அவன் மட்டும் வீட்டிற்கு போனான். இப்ப இப்படி சொல்லுறானு.. நம்பவே இல்ல. நம்பாமபோனா.. அங்க போனபிறகு தான் அவர் கூறியது உண்மைதானு புரிந்தது. பின்ன பொண்ணு யாருனு தெரிந்தும்.. மனசை மறைக்காமா சொல்லனும் என்றால் ஒருபக்கம் நிம்மதியும்.. ஒருபக்கம் குழப்பம், கோபமும் இருந்து.

   நந்தினி பொண்ணை நினைத்து நிம்மதி ஆனாலும்.. ஏன் இப்படி பண்ணினாங்க?. நம்ம கிட்ட சொல்லியிருந்தா நல்லபடியா பேசி கல்யாணம் முடித்து.. ” அவரை வேகமாக இடைமறித்து..

 

   நடந்தை ஜரணிக்க முடியாமல் அமைதியாக இருந்த கணேஷ்.. யார் பெண் என்று நிம்மதி என கூறியதும் எழ நினைத்தவர்.. நல்லபடியா  பேசி என்றதும்..

   ” என்ன என்ன சொன்ன?. நல்லபடியா பேசியா.. எங்க கிட்ட பேசியிருந்தா இந்த கல்யாணம் நடந்துயிருக்குமா?. இல்ல உன் பையன்தான் நடந்துயிருப்பானா?. ” அனைவரும் அதிர்ந்து பார்க்க..

   என் பொண்ணுக்கு..  ஒத்த பையானா இருக்க அதிக சொத்து உள்ள.. மாப்பிள்ளையா பார்த்தேன். உன் பையனுக்கு இப்ப பார்க்கும் வேலையில் இருந்து அவனை தூக்கிட்டா.. இங்க வந்து தனியா பண்ண.. என்ன தெரியும் அவனுக்கு?.

   இல்ல தனியா எதையாவது ஆரம்பிக்கதான் அவனுக்குனு சொத்து இருக்கா?. அதனால உனக்கு எல்லா விதத்திலும் நிறைவா இருக்க.. என் பொண்ண பார்த்தா நிம்மதியா தானே இருக்கும். “

 

   அவரின் அருகில் பேசாதே என சுற்றியுள்ளவர்கள் கூறியும், தடுத்தும் கணேஷ் பேசுவதை நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து பேசியபடியே தான் இருந்தார்.

   வரதராஜன் வீட்டில் உள்ளவர்களும், மற்றவர்களும் அவரின் பேச்சில் கட்டுகடங்காத கோபம் வந்தாலும்.. ஆதங்கத்தில் பேசுகிறார்.. தாங்களும் அதுபோல பேசினால் இன்னும் பேச்சு முற்றம் என நிதானமாக இருந்தார்கள்.

 

   இப்படி ஊரே பார்த்து சிரிக்கும் படியா செய்துட்டு.. இப்ப என்ன வீட்டுக்குள்ள உட்கார வைத்துயிருக்கீங்க. இரண்டுபேரையும் வெளிய கூப்பிட்டு வாங்க. “

 

    பட்டுவேஷ்டி கட்டி முழுஆண்மகனாக அஸ்வின்.. பார்த்து பார்த்து வாங்கிய கல்யாண புடவை போல அரக்குநிற தங்க பாடர்வைத்த சேலை.. அதற்கு மாம்பழவண்ண பிளவுஸ் அணிந்த நந்தினியை.. அஸ்வின் தங்கள் குலதெய்வ கோயிலில்.. அங்குயிருக்கும் உறவினர்களின் உதவியுடன் தாலிகட்டி.. சற்றே சற்று கவலையுடன் புதுமண தம்பதிகளாக வெளிவந்தனர்.

 

   எப்படாஎன காத்துயிருந்த கணேஷ்.. யாரும் உணரும்முன் வெளிவந்த நந்தினியின்.. இருகன்னத்திலும் இரண்டுஅடிகள் வைக்க.. அதன்பின் தான் மற்றவர்கள் உணர்ந்து அவரை தடுத்து நிறுத்தி அமர வைத்தனர். இதில் சுமதிக்கு அழுகை தவிர வேறு ஒன்றும் கூற, செய்ய முடியாத நிலையில் இருந்தார்.

 

   கணேஷ் சில நொடிகளில்.. ” சொல்லு எதுக்காக இப்படி பண்ணின?. என்ன இப்படி எல்லோர் முன்னயேயும் அவமான படுத்துவதற்காக தான்.. நான் பாத்த மாப்பிள்ளை எல்லாம் வேண்டானு சொல்லுட்டு இருந்தியா?. ”

   அழுகை, அவமானம் இருந்தாலும்.. அஸ்வின் பிடியில் இருந்து.. தன் அப்பாவின் அருகில் வந்தவள்.. ” அப்பா நான் அஸ்வினை வேந்தன் நிச்சியத்திற்கு வந்தபோது பார்த்தேன்.. நிச்சியம் முடிந்து அடுத்தநாளே எங்க ஆபிஸ்சில் டிரைனிங்  வந்தவரிடம் பழகி அவரை பிடித்துயிருந்து.

   நீங்க பார்த்த மாப்பிள்ளை எல்லாம்.. நீங்க உங்களுக்கு என்று ஒரு அளவு வைத்து இப்படிதான் இருக்கனும் பார்த்தீங்க. மற்றதை பார்ப்பதே இல்ல. ஆனா எனக்கு எல்லாமும் முக்கியம்.. இப்படிதான் இருக்கனும் ஆசையிருக்கு. ” 

   ” உங்க விருப்பபடி அஸ்வினிடம்.. வேந்தன விட சொத்து மட்டும்தான் கொஞ்சம் கம்மிய இருக்கு. மற்றபடி எல்லாவிதத்திலும் அஸ்வின் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லப்பா. பொறுமையா பேசி.. புரிய வைத்து கல்யாணம் பண்ணலாம் என்றுதான் இருந்தேன்.

   ஆனா நான் வேந்தன், எழிலரசிய பெங்களூரில் பார்த்தது.. அவங்களால இங்க நடப்பதை கேட்டபிறகும்.. வேந்தனுக்கே கல்யாணம் நடக்க போகுது.. உனக்கு ஏன் இன்னும் கல்யாணம் முடியல முடியலனு கேட்கும் கேள்விக்கு.. எல்லோர் முன்னேயும் இனிமேலும் அவமானம் படமுடியாதுனு நினைத்து..

    நாளை கழித்து நடக்கப்போற கும்பாபிஷேகம் கோயில் அவஸ்வின் வீட்டில் கும்பிடும் சாமிதானா. அதான் வேந்தன் கல்யாணம் முடியும் முன்ன என் கல்யாணம் நடந்த மாதிரி நம்ம சொந்தகாரங்களுக்கு தெரிய வேண்டுனு என்று இந்த முடிவிற்கு வந்தேன் ப்பா. “

 

    அவள் கூற கூற அனைவருக்கும் அவளின் நிலை புரிந்தாலும்.. இதில் வேந்தன், எழிலரசியை காரணம் கூறுவது.. ஏன்?. என புரியாமல் இருக்க..

 

    வேந்தன் தன் எழிலரசிக்குக்காக இனிப்பகத்தின் பரிசாகவும், வரும்காலத்தில் ஹய்வேயில் தனியாக பாதுகாப்பாக செல்ல, அவள் உயரத்திற்கு ஏற்ற வகையில் என எல்லா வசதிகளும் கூடிய.. ஊதாநிற BMW SUV காரை இரண்டுநாட்கள் முன்தான் வாங்கினான்

  எல்லோரும் உறுதி முடிந்து கிளம்ப.. இவர்கள் மட்டும் மதியம் நடந்த வேதனையில்  இருந்து.. தங்கள் மனநிலை மாற்றத்திற்காக.. சற்றுமுன்பே கிளம்பி காரைக்குடி வரை லாங்டிரைவ் சென்றுவிட்டு வரும்போது.. கதிரவனும், இன்பாவும் ஒன்றும் புரியாமல் பதட்டத்தில் இங்கு வரக்கூறி.. கப்பல்போல இருந்த கார் வீட்டின் முன் நிறைத்து நிற்க.

   கார் ஒரமாக நிற்பாதால் இரவுநேரத்தில் பார்த்து இறங்க வேண்டி வேந்தன் கதவு திறக்க.. அதிலிருந்து எழிலரசி.. புன்னகையின் அரசியாக இறங்கினாள். 

 

  எப்போதும்  இருவரை பார்த்து மகிழ்பவர்கள்.. இன்று ஏனோ அங்கு இருந்தவர்களின் மனநிலையில் மாற்றம் தடுமாற்றம் வந்தது.

 

   தனு கதிரா அண்ணா ஏன் இங்க?. இந்நேரத்தில் வரச்சொன்னாங்க?. ” என்று தனுவின் முகத்தை பார்த்து மட்டுமே கேட்டபடியே வந்தவள்.. அவனின் யோசனை முகத்தை பார்த்து பார்வை சென்ற இடத்தில் திருப்ப..

 

    அங்கு கூடத்தில் ஆண்கள் மொத்தமாக அமர்ந்துயிருக்க.. பெண்கள் சற்று தள்ளியிருக்க.. சில புதுமுகங்களும் இருக்க.. அனைவரின் பார்வையும் தங்கள் மேல் படிந்திருப்பதை பார்த்தவள்.. ஏதோ சரியில்லை என்று மட்டும் உணர்ந்தாள்.

 

   வேந்தனும் தங்கள் மீதான அந்த பார்வை மற்றும் ஏன்? எதற்காக?. என எண்ணியபடியே வந்தவனை..

 

   எல்லோரும் அவர்களையே பார்த்திருக்க.. இப்போதும் கணேஷ் யாரும் உணரும் முன்.. அவரின் முன்னால் நின்று இருந்த நந்தினியை தாண்டி வந்து.. வேந்தனின் சட்டையை பிடித்து.. ” எல்லாம் எல்லாம் இவனால்தான். ” கத்திக் கூற..

 

    கணேஷ் நடந்து கொண்ட விதத்தில் பயந்து போன எழிலரசி.. தன்னவனின் கையை இறுக்க பிடித்துக் கொண்டாள். வேந்தனும் அதனை உணர்ந்து அவனின் கைகளுக்குள்.. அரசியின் கையை கொண்டுவந்து.. அவளை தன்அருகில் நிறுத்திக்கொண்டான்.

 

  அதன்பின்னர் தான். ” முதலில் கைய எடுக்க மாமா. பிரச்சனை என்னவென்று கூறி.. அதை நான் கேட்டபிறகு.. நீங்க சொல்வதுபோல.. அதற்கு நான் காரணமா?. இல்லையானு சொல்ல முடியும். ” கோபமும், அழுத்தமாக கூற..

 

    வேந்தன் கூறிவுடனே முடியாது என்பது போல கணேஷ் அழுத்த.. அடுத்தநொடி அவரின் கையை தன் ஒற்றை கையாலே எடுத்துவிட்டு.. சட்டையை சரி செய்தபடியே கணேஷ் மற்றும் அவனின் அருகில் பதறி வந்துயிருந்த இன்பா, ஈஸ்வர், ரவிந்திரனை என்னவென்று?. கேட்பது போல பார்க்க..

 

   இன்பா, ரவிந்திரன் இருவரின் பார்வை சென்ற இடத்தில் கணேஷ் பின்னால்.. முகத்தில் ஏதோ சாதித்து விட்டதை போல.. புது தாலியுடன் நின்ற நந்தினி மற்றும் குழப்பம், கவலை என இருமனநிலையில் இருந்த அஸ்வினை பார்த்தான்.

 

    வேந்தன் இருவரையும் பார்த்தபின்.. ” சரி.. இவங்க கல்யாணம் செய்ததற்கும்?. எனக்கும் என்ன சம்பந்தம்?. நான் ஏன் காரணம்?. ” கணேஷை பார்த்து கேட்க..

 

   கணேஷ் இருவரும் கண்களாலே அவனிற்கு பதில் கூறுவதை பார்க்க கடுப்பாகவும், வெறுப்புடனும் பார்த்தான். எவ்வளவு சிறப்பாக தன் மகளின் திருமணத்தை நடந்த வேண்டும் என நினைத்திருக்க.. அவர் எண்ணத்தின் பாதிஅளவில் பாதிமட்டுமே இருக்கும் பையன்.

   வேந்தன் நந்தினியை திருமணம் செய்ய மறுத்தும்.. அவளை நல்லநிலைக்கு வர வைத்து.. வேந்தனைவிட எல்லாவிதத்திலும் சிறப்பாக இருக்கக்கூடிய  மாப்பிள்ளை பார்த்து கொண்டுயிருக்க.. மகள் இவ்வாறு செய்ததின் காரணம்.. இவனின் திருமணமும் தானே. ‘

   இவன் மறுப்பு சொல்லவில்லை எனில் இவன் தன்மருமகனாக இருந்துயிருப்பான். இல்லையெனில் இப்போது இவனுக்கு திருமணம் நடக்கவில்லையெனில் மகள் இவ்வளவு அவசரமாக திருமணம் செய்து இருக்கமாட்டாள்.. அவள் கூறியது போல சில நாட்களாக கஷ்டப்பட்டு இருக்கமாட்டாள்.. இதனால் தனக்கு எவ்வளவு மனவேதனை, அவமானம்.

    இனிமேல் யார் என்னை மதிப்பார்கள்?. பெண்ணை பார்த்துக் கொள்ள முடியவில்லை?. தங்கை மகனை சம்மதிக்க வைக்க முடியவில்லை?. சாருலதாவிற்கு இனி யார் வருவர்?. அவளும் அக்காவை போல இருப்பாளா.?. செய்வாளா?. என்று கேள்வி எழுமே?. இவை அனைத்திற்கும் ஆரம்பம் வேந்தன்?. வேந்தன்.. வேந்தன்?. மட்டுமே காரணம். ‘

 

    கணேஷ் இத்தனை நாட்களாக மறைத்து வைத்துயிருந்த வெறுப்பை தன் முகத்தில் காட்ட  ஆரம்பித்தார்..

   ” இவங்க இப்ப கல்யாணம் செய்தற்கு.. நீ தான் காரணம். ஏனா நீ ஆரம்பத்தில் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லாதில் இருந்து தொடங்கியது. இப்ப உனக்கு கல்யாணம் ஆகப்போகுது.. யார்யாரோ?. என் பொண்ணை ஏன் கல்யாணம் ஆகவில்லை என கேள்வி கேட்கபோய்.. மனம் கஷ்டப்பட்டு.. இப்ப உன் கல்யாண முன்ன நடந்தே ஆகனும் என்று அவரச அவசரமாக.. இப்படி இந்த பையனை கல்யாணம் செய்து இருக்கா. “

 

   எதையே யோசித்தவன்.. தன் அருகில் இருந்த தன்னவளிடம்.. எல்லோரும் கேட்கும் விதமாகவே.. ” அரசி நாம்ம உன் பிறந்தநாள் அப்ப சாய்ந்திரம் பெங்களூர் மாலில் இருந்தபோது.. அங்கு நந்தினிய பார்த்தயே எப்படி இருந்தா?.  யார் கூடவோ நல்லா புன்னகையுடன் பேசிட்டு இருந்தாத சொன்னியே அது அஸ்வின் மாதிரியா இருந்தாரு?. ” தன்னவளிடம் கேட்டாலும் பார்வை நந்தினி மற்றும் அஸ்வின் மீது இருக்க.

   நான் நல்லா சந்தோஷமா பேசிக்கொண்டுயிருந்த நந்தினி அக்காவ மட்டும்தான் பார்த்தேன் தனு. அவங்க எதிரில் இருந்தவரை பார்க்க முடில. அப்ப நாம்ம எடுத்த போட்டோவில் இருந்தாலும் இருக்கலாம். ” வேந்தனை மட்டும் பார்த்து கூறினாள்.

 

   உன் மகள் கஷ்டபட்டதை நாங்களும் பார்த்தோம் என இருவரை பார்த்து விட்டு.. தன் மாமாவை மட்டும் பார்த்தவன்.. ” சரி நீங்க சொன்ன ஆரம்பம் சில வருடங்களுக்கு முன்னமே வரேன். நான் எப்போதாவது உங்களிடமோ.. இல்ல உங்க பொண்ணுங்களிடமோ திருமணம் செய்வது கொள்வதுபோல ஒரு வார்த்தை பேசியாவது, ஒருபார்வை பார்த்துயிருக்கனா?. சொல்லுங்க.

    நீங்க எல்லாம் கேட்டீங்க.. நான் விருப்பம் இல்லேனு சொல்லிட்டேன். நான் விருப்பம் இல்லை என்பதை.. இல்லேனு தான் சொல்லமுடியும். உங்களுக்காக நான் சரி என்று சொல்ல முடியுமா என்ன?.

   அதன்கூடவே அப்பவே.. நான் எனக்கு சொந்தத்தில் திருமணம் செய்ய மாட்டேன்.. வெளியில் இருந்துதான் பொண்ணு வரும் என்று சொல்லிட்டேன். அதற்கு எங்க வீட்டிலேயும் சம்மதம் சொல்லிட்டாங்க. அதன்பிறகு யாரும் ஒன்னும் சொல்ல. அவங்க அவங்க வேலைய பார்த்தோம். ” 

    ” நீங்க உங்க விருப்பத்திற்கு மாப்பிள்ளை, அவர் குடும்பம் என்று பார்த்தீங்க. அதில் இரண்டுபேருக்கும் சேர்ந்து  பிடித்த மாதிரி யாரும் அமையல. அதனால கல்யாணம் தள்ளிபோயிருக்கு. இதில் உங்களோட, உங்க குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்சனையும் அடங்கி இருக்கு.

   உங்க பொண்ணு காலையில் ஹோமத்திற்கு இதே சேலையோட தான்  வந்தா. அஸ்வினிடம் தனியா பேசியதை நானும் பார்த்தேன். உங்க பொண்ணு எப்படி வரா?. என்ன பண்ணாறா?. யாரிடம் பேசுறானு? கவனிக்காம நீங்களும் இருந்துயிருக்கீங்க. இப்ப வந்து உங்க பொண்ணு கல்யாணம் செய்ததற்கு.. நான் தான் முழு காரணம் என்பது போல என் மேல பழிசொல்லுறீங்க?. “

 

   ஆமாம்.. உன் மேல தான் பழிமுடியும். நீ ஒன்னும் யாரிடமும் பேசலதான். ஆனா உங்க வீட்டில் இருப்பவர்களோட சேர்ந்து.. நாங்க சொந்தகாரங்க எல்லோருக்கும் உன்னை தான் அவளுக்கு முடிக்க போறோனு சொல்லி வைத்துயிருந்தோம்.

   நீ வந்து விருப்பம் இல்லைனு சொல்லிட்ட. உங்க வீட்டிலையும் ஒத்துகிட்டு அவங்க அவங்க வேலைய பார்த்தீங்க. ஆனா அதன்பின் என் பொண்ண.. சொந்த தங்கை பையனே வேண்டானு சொல்லிட்டான்.. அவளுக்கு என்ன குறையேனு நினைக்கமாட்டாங்க.

   அதான் யாரும் எதுவும் பொண்ண சொல்லி விடக்கூடாதுனு.. அவளை இன்னும் படிக்க வைத்தும்.. வேலைக்கு போக கூறி.. உன்னவிட எல்லாவிதத்திலும் சிறப்பா இருக்கும் மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்தேன்.

   ஆனா நானே எதிர்பார்க்காத உன் திருமணம் செய்தியால்.. என் பொண்ணிடம் ஏன் இன்னும் கல்யாணம் நடக்கலனு கேள்வி கேட்டு.. இந்த நிலைமைக்கு வந்துயிருக்கானா.. இதுக்கு காரணம் நீ தானாடா. உன்னால நந்தினி இப்படி பண்ணியிருக்கா. அவளால இப்ப சாருலதாவிற்கும் பிரச்சனை.

    இப்ப நீயும்.. உங்க குடும்பம் நல்லாயிருக்கிங்க. நான் கஷ்டமும், இப்ப அவமானமும் படுறேன். நீ சொன்னது போல எங்க குடும்ப பிரச்சனைய நான் பார்த்துக்குறேன்.. நீ போய் இந்த பொண்ணை கல்யாணம் செய்துக்கொள். “

    கணேஷ் எழிலரசியை.. என் பொண்ணைவிட இவள் எந்த விதத்தில் சிறந்தவள்?. என்ற கேள்விபார்வையை  மறைமுகமாக செய்பவர்.. இன்று அனைவர் முன்னும் பார்த்து கூற..

 

   அவரின் பார்வையில் கூசி.. தன்னவனை நடுக்கத்துடன் அவனின் பக்கவாட்டில் நெருங்கி நின்றாள். ஏதோ யோசனையில் இருந்த வேந்தன் அதனை கவனிக்கவில்லை.

 

   மற்றவர்கள் காரணமே இல்லாமல் இவர்களை பற்றிய பிரச்சனையில் வேந்தன், எழிலரசியை ஏன் இழுத்து.. இப்போது தேவையில்லாமல் பேசுகிறார் என நினைத்து அவர்களின் பேச்சை தடுக்கமுடியாமல் இருக்கும் வேலையில்..

   அவரே முடித்து விட்டார் என ஒரு நொடி நிம்மதி அடைந்த அடுத்த நொடியேஅய்யோஎன சிலர் நினைக்க.. மீதி இருப்போருக்கு புது தகவல் மற்றும் அவர்கள் மனதிலும் வரும் கேள்வி வந்தது.

   

    சரி.. சாய்ந்திரம் தான் ஒருவிஷயம் தெரிந்தது. நீ பொண்ணு பார்க்கனு இவங்க வீட்டிற்குபோகும் முன்னமே.. இந்த பொண்ணுதான் மனைவியா வரப்போற பெண் என்று முடிவு எடுத்துயிட்டுயாமே. உங்க வீட்டில் இருப்பவர்களும் என்னிடம் ஒன்றும் சொல்லாம.. என்னை ஏமாற்றி சாதாரணமா பொண்ணு பார்ப்பது போல எல்லோரையும் கூப்பிட்டு.. உறுதி பண்ணீயிருக்கீங்க. ” குடும்பத்தினரை குற்றம் சாட்டும் பார்வை செலுத்தி கேட்க.

 

  ஆமாம். நான் முடிவு எடுத்துட்டேன் தான். நாங்க கோயில் எதிர்பாராமல் பார்த்தோம்.  அதில் யாருக்கு என்ன பிரச்சனை?. 

  நான் முடிவு சொல்லிட்டேன் என்று.. நீங்க இல்லாம எங்க வீட்டில் ஒன்னும்.. நேரா நிச்சியம், கல்யாணம் என்று நாள் குறிக்கவில்லை தானே?. ஏன் நீங்க உறுதி அன்று காலையில் வரவில்லை என்று உங்களுக்காக தான் சாய்ந்திரம் மாற்றி பண்ணினோம்.

   உங்களை ஏமாற்ற வேண்டும் நினைத்தால் இந்த மாதிரி பண்ணவேண்டும் அவசியம் இல்ல. நீங்க வேண்டும் என்பது தான் காரணம். ”

   அன்று தான் செய்த செயலால் தன்அரசி, இருவரின் பெற்றோர்களை யாரும் தவறாக பேசிவிடக் கூடாது, அவருக்காக அனைவரும் செய்ததையும்.. இந்நேரத்தில் கூறவேண்டுமே. என அவன் பொறுமையாகவே அவருக்கு பதில் அளித்தான்.

   கணேஷ் எதையும் யோசிப்பதாக இல்லை… ” சரி.. நீங்க எதை நினைத்து அன்று செய்திருந்தாலும்.. அது இனிமேல் எனக்கு முக்கியமில்ல. உன்னால, உன் குடும்பத்தினால். எனக்கு இதுவரை நடந்த அனைத்து அவமானங்களும் போதும். நான் முடிவு எடுத்துட்டேன். “

   

  

   

   

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!