Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 40.5

 

நாம் 40(5)

 



Advertisement

    இன்பன் சங்கடம், தயக்கத்துடன் நின்றுயிருக்க.. ” இன்பா எதுக்கு இப்படி தயங்குற?. வா போகலாம். ” அவனை அழைத்து பெற்றோர் இருக்கும் இடம் வரவும்.. ஜோடிகள் புன்னகையுடன் அவர்களிடம் வருவது தெரிந்தது.

 

   ஞாயிறு அன்று வேந்தன், எழிலரசி கல்யாணம் முடித்து.. ரிசெப்ஷனிற்காக மாலை வரை இருப்போமே என சிலர், ஹோட்டல் அறைக்கு சிலர், சென்னையில் இருந்து வந்தவர்களும் மதுரையை சுற்றிபார்க்க என அனைவரும் கிளம்பிவிட்டனர். அடுத்து குலதெய்வ கோயிலுக்கு அங்கிருந்தே செல்ல வேண்டும் என நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அங்கு இருந்தனர்.

Advertisement

 

Advertisement

   இன்பன் அஸ்வனிடம் தான் முதலில் கொடுத்து பின் மற்றவர்களிடம் கொடுக்க.. என்ன பைல்?. என புரியாமல் வாங்க படிக்க ஆரம்பித்து.. கோபம், வருத்தம், நிம்மதி என்ற மனநிலையில்..

  ” அவங்க இரண்டுபேரும் எங்க? ” நந்தனி, வசுந்தரா ஒருசேர கேட்க.

 

Advertisement

   எதுக்கு?. ” அஸ்வின், கமலேஷ் ஒருசேர கேட்டனர்.

    மற்ற யாருக்கும் ஒன்றும் புரியாமல் இருக்க..

    ராகவன்.. ” கமலேஷ் என்ன விஷயம்?. ” அவன் கூற போக.. அவனிற்கு முன்.. நந்தினி.. ” பெரியப்பா.. என்னைய ஆபிஸ் வேலையில் இருந்து உடனே  போக சொல்லிட்டாங்க. ”

    வசுந்தரா.. ” மாமா.. நான் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வானதை ஹோல்ட் பண்ணி வைத்துயிருக்காங்க. “

 

     ” ஏன்? எதுக்காக? யார்? ” என கணேஷ், சித்ரா, ராகவன் கேட்க..

   வசுந்தரா கூற போக.. மற்ற இருவர் முகத்தில் நிம்மதி இருப்பதை பார்த்த அருணாச்சலம்.. ” கமலேஷ்.. அஸ்வினுக்கும், பார்த்திபனுக்கும் என்ன சொல்லியிருக்காங்க? ” அனைவரும் இருவரையும் பார்க்க..

 

    இவ்வளவு நேரம் பார்த்திபனுடைதை பார்த்திருந்த அஸ்வின்.. ” சித்தப்பா.. EV ப்ராடெக்ட் ஷோரூமை.. ஸ்விட் கடை பக்கத்திலும்.. அவற்றை தயாரிக்கும் கம்பெனிய.. வேந்தன் உணவுபொருட்கள் ஃபேக்டரி இருக்க இடம் பக்கத்திலே இரண்டயும் ஒரே நேரத்தில் கட்ட போறாங்களா.

    ஷோரூம் கட்டித்திலே ஆபிஸ் வரபோகுது. அங்கயே வேந்தனோட என்னையும், பார்த்திபனையும் சேர விருப்பமானு கேட்டுயிருக்காங்க. நாங்க சரினு தான் சொல்லுவோம். “

 

   அப்படியா என மகிழ்ச்சி, நிம்மதி, வியப்பாக அஸ்வின் கூறியதை கேட்டவர்கள்..

   ” உங்களை இப்படி கேட்டுவிட்டு.. ஏன் நந்தினி, வசுவிற்கு இப்படி பண்ணியிருக்காங்க?. ” அஸ்வின் கூற தயங்க..

 

   பெண்கள் இருவரும் ‘ சரி என்று கூறுவோம் ‘ என்றதில் கோபம் கொண்டு வசுந்தரா.. நடந்த அனைத்தை கூறியும்.. ஒருவேகத்தில் காய்ச்சலையும் கூறி முடிக்க..

   அடுத்த நொடி.. சேரை பின்னுக்கு தள்ளி அருணாச்சலம் கோபமாக எழுந்துவிட்டார். பக்கத்தில் இருந்த ராகவன், அருணாச்சலம் கவலையுடன் இருந்தவர்கள்.. அவரை வேகமாக பிடித்தனர். இல்லையென்றால் இந்நேரம் வசுவை அடித்துயிருப்பார். அந்த அளவிற்கு அவர் முகத்தில் அவ்வளவு கோபம். அவரை உட்கார வைத்தார்கள். அவருடன் அருணாச்சலம் கண் கலங்கி உட்கார்ந்தார்.

 

     உனக்கு ஒருதடவை சொன்னா புரியாத. சின்ன பொண்ணுமாதிரியா பேசியிருக்க? “

 

   ” நான் ஒன்னும் தப்பா சொல்ல மாமா. அண்ணா பண்ணியதைதான் சொன்னேன். அதுக்கு காரணம் அவங்கதானே. அவங்களா தானே கணேஷ் மாமா, நந்தினி அண்ணினு.. ஆரம்பித்து என்னைய உங்க எல்லோர் முன்னவும் இப்படி பேச அளவிற்கு கொண்டு வந்துயிருக்கு. ” கண்ணீரும், கோபமுமாக கூற..

 

   ” மாமா.. ” அவர்களின் பின்னால் இருந்து வேந்தனின் குரல் வர.. அவர்களிடம் வந்தவன்..

   ” மாமா… இவளுக்கு எவ்வளவு தடவை விளக்கம் கொடுத்தாலும் இப்படிதான் பேசுவா. யார் என்ன பேசினாலும், கோபபட்டாலும் கொடுத்த எதுவும் மாறபோவது இல்ல. “

 

    இவர்களை பார்த்தவர்கள் அனைவருக்கும் கல்யாணம் மிக சிறப்பாக முடிந்த தினம் இப்படியா?. என நினைத்துயிருக்க..

   சித்ராவிற்கு தன் மகளின் அழுகை.. அவருக்கு கோபம் வரவைத்தது.. ” வேந்தா.. நீ பண்ணுவது எதுவும் சரி இல்ல. அது எப்படி மாறாம போகும். இரண்டுபேர் வேலை அவங்க கஷ்டபட்டு படித்து.. இன்டர்வியூல் தேர்ச்சி செய்து வாங்கியது. நீ எப்படி தீடிர் என்று வேலை விட்டு போகவும், பிளாக் செய்ய முடியும்?. அதுவும் உன் தங்கச்சி, ” முடிக்கும் முன்..

 

   ” அம்மா.. அவங்க என் உறவா இருக்கவும் தான் இவ்வளவு மரியாதையா நீயே வேலைய ரிசன் செய்துயிருனும் என்றும்.. வசுவிற்கு ஹோல்ட் தான் செய்திருக்காங்க. இல்லையென்றால்.. ” முடிக்கும் முன்..

 

   இல்லையென்றால் என்னடா செய்துயிருப்பாங்க. அதுவும் வீட்டில் நடந்த பிரச்சனைக்கும், வேலைக்கும் என்னடா சம்பந்தம்?. “

 

   ம்மா. நான் இதை சொன்னா தப்பாதான் புரிந்து கொள்வீங்க. ” அஸ்வினை பார்க்க..

 

   அவனும்புரிந்து.. ” சித்தி அவங்க வீடியோ காலில் பேசியபோது சொன்னதை மறந்துடீங்களா?. எழிலரசிதான் நான், நந்தினி வேலை செய்துகொடுக்கும் கம்பெனியின் மறைமுகமாக இருக்க ஓனர். அவங்க மூனுபேரையும் நாங்க சென்னையில் பார்க்கும் போதே.. இங்க அவங்க ஆளுங்க உங்க கூடவே தான் இருப்பாங்க. எக்காரணம் கொண்டும் இனி மனம் வருந்தும்படியா யார் பேசினாலும், நடந்துகொண்டாலும்.. அவங்களுக்கு என்னவேனாலும் நடக்கும் என்று சொல்லிதான் அனுப்பினாங்க.

 

   இப்ப கூட நீங்க எல்லாம் எழிலரசியை ஒன்னும் சொல்லிவிடகூடாது தான் வேலையில் மட்டும் கைவைத்தாங்க. கூடவே எங்களுக்கு இங்க ஆரம்பிக்க போகும் கம்பெனியில் வேலை கொடுத்துயிருக்காங்க. அவங்க ஓனருக்கு எங்க வேண்டும் என்றாலும்? யாரால் என்றாலும்?. பிரச்சனை வரும்போது.. அதற்கு நடவடிக்கை எடுக்க முழுஉரிமையும் இருக்கு. அவங்களுக்கு எழிலரசியின் சந்தோஷம், உடல்நிலை ரொம்ப முக்கியம். “

 

   இன்னும் கோபம் கொண்டு.. ” .. அவங்க ஓனர் எழிலரசிக்கு அவங்க என்னவேனாலும் பண்ணுவாங்க. ம்.. அப்படி எழிலரசி ஓனர் ஆனதற்கு யார் காரணம்? என் பையன்தானே. அவன் சொல்வதை அவங்க கேட்டுதானே ஆகனும். ” வேந்தனிடம் திரும்பி.. ” வேந்தா நந்தினி வசுந்தராவிற்கு உடனடியா மாற்ற சொல்லுற. “

 

   சித்ரா சித்தி.. ” அஸ்வின் அழைக்க..

    அவனிடம் திரும்பியவர்.. ” இதற்கு நான் சம்மதிக்கமாட்டேன். ”

   அஸ்வின்.. ” தொடங்கும் முன்..

   ” நந்தினி..  வசுவை இத்தனை நாளா உங்க அண்ணா அண்ணா என்று கண்டதை நினைக்க தூண்டின.. இப்ப உங்க அத்தை.. என் பையன் என்று அந்த வேலை செய்ய ஆரம்பிக்கிறாங்க.

   நான் அமைதியா பேசனும், நடந்துக்கனும் நினைக்கிறேன்.  ” கடிமையாக கூற.. அருகில் இருந்த சுமதியும் அவளை முறைத்து அடுத்து பேசாமல் இருக்க வைத்தார்.

 

   சித்ராவிடம் திரும்பியவன்.. ” சித்தி உங்க பையனால தான் எழிலரசி. ஆனாலும் உங்க பையனால மட்டும் எழிலரசி ஓனர் ஆக முடியாது. அவங்க மூனுபேருக்கு தான் அதிக ஷேர் இருக்கு. அவங்க எழிலரசியை ஓனர் நிலையில்  வைத்துயிருக்காங்க. அவங்க முடிவை வேந்தன் கூறினா கூட மாற்றமாட்டாங்க. இல்ல மாற்ற நினைத்தா?. ”

    அனைவரையும் ஒருபார்வை பார்த்து.. ” நந்தினி என்னைய ஏமாற்றி.. எங்க வீட்டிற்கு தெரியாம.. அவளை கல்யாண செய்ய வைத்து..,

   அதன் மூலமா நிச்சியம் முடிந்த என் மாமா பொண்ணு எழிலரசி கல்யாணத்தில் பிரச்சனை வரக்காரணமா இருந்தற்காக அவ மேல ஆபிஸ், மகளிர் போலிஸ் இரண்டு இடத்திலும் கம்ப்ளைன்ட் பண்ணுவேன். உங்களுக்கு எது வேண்டும்?. ”

   சித்ரா அவனின் இப்படியான பேச்சில் அதிர.. அதே அதிர்ச்சியுடன் பாதிபேர் எழுந்தே விட்டனர். வேந்தன் சுற்றிலும் யாரும் இல்லையே என்பதையும்.. தன் அரசி அறையில் உறங்குவதை இன்பாவிடம் உறுதி செய்துகொண்டான்.

 

   அவன் அருகில் வந்த தேவகி.. ” டேய் என்னடா நீயும் விருப்பிதான கல்யாணம் செய்த. திரும்ப எல்லோர் முன்ன எல்லாம் செய்த பின்ன.. என்ன என்னமோ சொல்லிட்டு இருக்க?. “

 

   ம்மா. உங்களுக்கு இவங்களுக்கு எல்லாம்.. எல்லோர் முன்ன.. எல்லாம் நடந்து பின்ன.. மாற்றி பேசுவது, கேட்பது புசுசா என்ன?. நான் விருப்பி தான் கல்யாணம் செய்தேன்.

   ஆனா எழிலரசி, வேந்தன் கல்யாணம் முன் நடக்கனும் என்று அப்பானு பொய்யான காரணம் கூறி ஏமாற்றி.. உடனே கல்யாணம் செய்ய தூண்டியது இவதானே.. கல்யாணம் செய்ததால  பிரச்சனை வந்து..

   இவங்க பொண்ணு கைய வெட்டிபேனு ஒரு சீன் போட்டு.. அதுக்கு சப்போட் பண்ணி இவங்க நடந்து கொண்டதற்கு.. இவங்க அண்ணா நடந்து கொண்டதற்கு அவகூடவே.. மூனுபேர் மேல கூட நான் கம்ப்ளைன்ட் பண்ணுவேன். 

    நந்தினி, வசுந்தரா, சித்ரா, கணேஷ் ஆகியேரை பார்த்து கோபமாக கூற..

   டேய் என்ன விட்ட இஷ்டத்திற்கு பேசிட்டே போற. அவங்க யார்?. யார்?. என்று மறந்துபோச்சா?. “

 

  ம்மா. எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு. சித்திக்கு தான் எதுவும் இல்ல போல. இவங்க வீட்டுபொண்ணு என்னைய கருவியா வைத்து பண்ண கல்யாணத்தில்..

    அன்னைக்கு இவங்க எல்லாம் பண்ணதை சொல்லுறேன். எனக்கு, வேந்தன், எழிலரசிக்கு.. இவளால் எவ்வளவு மன உளைச்சல்.. பிரச்சனை.

    அன்னைக்கே அவங்க மூனுபேருக்கும் நடந்தை வேந்தன் சொல்லி இருந்தா.. இன்னைக்கு எந்த கல்யாணமும் நடந்து இருக்காது. எழிலரசி யாருனே சொல்லமாலே.. இவங்க நாலுபேர் கூட என்னையும் சேர்த்து எங்க மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருப்பாங்க.

    அதுக்கு இப்ப இவங்க இரண்டுபேர் வேலை மட்டும் தான் தலையிட்டு இருக்காங்க. இல்ல வேந்தன் போய் சித்ரா சித்தி சொன்னதை சொல்லட்டுமே.. பிறகு என்ன நடக்கும்.. ”

   அவனின் தோள்பிடித்த வேந்தன் மெல்லிய குரலில்.. ” போதும்டா.. அம்மா, பெரியப்பாம்மா பயந்து அரண்டு போய் நிக்குறாங்க. ”

   கொஞ்ச நேரம் நிக்கட்டும். அப்பதான் எழிலரசி பெயர் சொல்லு கூட பயப்படுவாங்க. ”

  போதும்டா.. இதுக்குமேல வேண்டாம். இவங்கள பயப்பட வைக்கிறேன்.. என் பார்வையில் நீ பேசியது அரசிக்கு தெரியும்போது..  அவகிட்ட நாம்ம தான் பயந்து போய் நிக்கனும். அதிலும் நான்தான் கம்பி எண்ண வேண்டி வரும்டா. ”

   புரியாமல் முழிக்க..

   டேய் கல்யாணம் முடிந்த அன்னைக்கு பால்கனியில் நிக்க வைத்துவிடுவா. ” வேந்தன் பாவமாககூற.. 

    இதனை கேட்ட அஸ்வின் அருகில் இருந்த ஆண்களுக்கு.. சிரிப்பை அடக்க பெரும்பாடாக இருந்தது. கதிரவன், கமலேஷ் தானே நடுவில் அவன் பேச ஹின்ட் எடுத்து கொடுத்தது.

    வேந்தனை முறைப்பு பார்வையுடன் நடித்து.. வசுவிடம் திரும்பியவன்.. ” வசுந்தரா உனக்கு வேலை ஹோல்ட்தான் பண்ணி வைத்துயிருக்கு. அது நீ  படிக்கிற பொண்ணு என்பதற்காக தான். உனக்கு படிப்பு தெரிந்த அளவிற்கு மற்றது.. மற்றவர்களை பற்றி சரியா புரிந்து கொள்ளும்  சூழ்நிலை வரல. அது இனி வரும். ” அப்போது உண்மையாக நந்தினியை பார்த்து கூறி.. ” புரிந்த பின் உன் வேலையும் தேடி வரும். அதுகூட நீ எழிலரசிய புரிந்து கொள்ளும் காலமும் வரும். “

 

   மற்றவர்களிடம் குறிப்பாக நால்வரிடம் திரும்பியவன்.. ” எனக்கு நந்தினி என்னைய விரும்பியதில் சந்தேகம் கிடையாது. ஆனா அவ என்னை கல்யாணம் செய்ததில் பல உள்நோக்கம் இருந்துயிருக்கு. என்னால எல்லாத்தையும் மறக்க, மன்னிக்க முடியும்.

    ஆனா எங்க கல்யாணத்தை வைத்து இரண்டு கல்யாணத்தை நிறுத்தம் அளவிற்கு வர காரணமா இருந்த என்னையும் சேர்த்து, அவளையும் மன்னிக்கவே மாட்டேன். அவ செய்ததற்கு அவங்க மூனுபேரும் வேலையில் இருந்து போககூறி.. வேந்தன் அதற்கு சம்மதம் சொல்லிட்டாரு.

   நான் அவ செய்ததற்கும்.. நான் விசாரிக்காம அவள கல்யாணம் செய்ததற்கு நான் அவங்க கம்பெனியில் தான் எப்போதும் வேலை பார்ப்பேன். இனி நந்தினி எங்கும் வேலைக்கு போகமாட்டா. இதுக்கு அவ சம்மதம் சொல்லிதான் ஆகனும். இது எங்க தனிப்பட்ட விஷயம் இதில் யாரும் தலையிடவும் கூடாது.

    திருப்பி எல்லோரும் நந்தினி பண்ணியதற்கு வேந்தன் தான் காரணம் என்று ஆரம்பிக்ககூடாது. மற்றவங்களை தூண்டி விடுபவளுக்கு.. அவர் காரணம் இல்லனு யோசிக்க தெரியாமலா இருந்து இருக்கும். தெரியலனா அவளுக்கு தான் இன்னும் பாதிப்பு வரும்.

   ஏன் இதை இப்ப எல்லோர் முன்ன சொல்லுறனா. அவளால் இனி யாரும் பாதிக்ககூடாதுனு நினைக்கிறேன். அவ என்ன சொன்னாலும் கேட்க கூடாது. பின்ன நீங்க கேட்டு.. அதன்மூலமா உங்களுக்கோ.. உங்க குடும்பத்திற்கு பிரச்சனை வந்தா? யாரும் என்கிட்ட வந்துடாதிங்க. “

 

    அவன் கூறுவதில் உண்மையும், அவன் திருமணத்தால் மனதளவில் பாதிப்பு அடைந்துயிருப்பதால் நந்தினியையும்,

   எழிலரசி அவன்  நிலையில் இருப்பதால் வசுவையும்.. இனி சப்போட் செய்து பேசுவதில் ஒருபயனும் இல்லை.. இனி பேசவும் முடியாது எனவும், சிலர் என்ன சொல்ல?. என தெரியாமல் அனைவரும் அவரவர் மனநிலையில் யோசித்து அடுத்து என்னவென்று? பேச ஆரம்பிக்க.. நந்தினியும், வசுவும் வேறுவழியில்லாமல் அவர்களுடன் இணைய..

 

   ‘ ஏன்டா ?. ‘ என வேந்தன் பார்வையால் அஸ்வினை கேட்க…

   புன்னகையுடன்.. ” வேந்தன் சிலதை ஆரம்பித்திலேயே எல்லோர் முன்ன சொன்னாதான் எங்க எதிர்காலத்திற்கு நல்லது. இனி யாரும் அவளிடம் அதிகம் பேசாமல் இருந்தாதான்.. எங்க குடும்பம் வாழ்க்கைக்கும் நல்லது. ” கூறி..

   ஊரிலே இருந்து வேலை பார்க்க போகிறோம் என மகிழ்ச்சியாக மனநிலையில் தன் துணையிடம் பேசிக் கொண்டுயிருந்த பார்த்திபன், எழிலரசியின் கீழ் தன் கணவன் வேலை செய்ய போகிறானா என்று சிறு கடுப்பில் இருந்த மேகாவை ஊரில் இருக்க போகிறோம் என்று பார்த்திபன் அவளின் மனநிலையை மாற்றி மகிழ்வுடன் இருந்த தங்கையிடமும் அஸ்வின் திரும்ப..

 

   இதற்கு மேல் அவன் தனிபட்ட கருத்தில் தலையிட விருப்பாமல் அவனிடம் இருந்து மற்றவர்களை பார்த்தான். தன்னவள் அப்பா, அம்மா மற்றும் தன்னுடைய பெரியப்பா, அப்பா, அம்மா, இரு மாமா, அத்தைகள் சிறு கவலை முகத்தில் தெரிந்தது. அவர்களிடம் சென்று அருகில் அமர்ந்தான்.

 

    அவனை பார்த்ததும் மாணிக்கம் அவன் கையை பற்றி தன்னை சமநிலை படுத்திக்கொண்டு.. ஏதோ பேச ஆரம்பிக்க போக.. ” பெரியப்பா இப்ப நீங்க எல்லாம் பழசு எதை பற்றியும் பேசாதீங்க. இப்ப நடந்து எதை பற்றியும் யோசிக்காதீங்க. பிள்ளைங்க, குடும்ப நல்லது தவிர நீங்க யாரும் எதையும் செய்யல. இனி செய்யவும் மாட்டீங்க. ” அவரின் முகமே அவர் பேச வருவது புரிந்து வேகமாக கூறி முடித்தான்.

 

   வேந்தன் சரியாக தான் பேச நினைத்தை கூறியதில் அவருக்கு புன்னகைதான் வந்தது.

   அதை பார்த்தவன்.. ” ம்.. பெரியப்பா இப்படி இதே புன்னகையோடவே.. அடுத்து இந்த கல்யாண மாப்பிள்ளை பக்கம் பார்வையும், கவனத்தையும் கொண்டுவாங்க. நானே உங்ககிட்ட அப்ப அப்ப எனக்கும் கல்யாணம்.. நானும் கல்யாண மாப்பிள்ளைனு ஞாபகபடுத்தியும் என்னைய யாரும் கண்டுகொள்ளவே மாட்டிகிறீங்க. ” பாவமாக கூற..

 

   ” ம்.. ரொம்ப கெஞ்சுற. சரி சொல்லுங்க கல்யாண மாப்பிள்ளை உங்களுக்கு என்ன வேண்டும்? ”

   வேந்தன் புன்னகையுடன் ஏதோ கூற வர..

   ” மாமா.. இவன் இவ்வளவு அடக்க ஒடுக்காமா பேசும் போதே  தெரியுது. ஏதோ விவகாரமா தான் கேட்க போறான். ”

   ” கணேஷ் வேற என்ன கேட்பான்.. அவன் எழிலரசி வீட்டில் இன்னைக்கு தங்க போறேன். யாரும் வேண்டானு சொல்லிறாதீங்கனு சொல்வான். ” அப்படிதானே வேந்தனை பார்க்க.

    புன்னகையுடன் ‘ ஆமாம் ‘ என தலையசைத்து.. ” ம்.. அவளுக்கு உடம்பு சரியில்லாம இருக்கவும் தான். “

 

   ஏற்கனவே வேந்தனின் வீட்டில்தான் தங்குவேன் என கூறி.. இப்போது எழிலரசி வீட்டில் இருக்கிறேன் என கூறுவதால்.. அவனின் எண்ணம் புரிந்து.. ” சரி டா. பார்த்து கவனமா இரு. “

 

   ” ம்.. சரி பெரியப்பா. ” அம்மா, அத்தைகளை பார்த்து..

 

   ” ஃபேக்டரி இடத்தில் எங்க கல்யாண ரிசெப்ஷன் வேலை நாளை காலையில் இருந்து ஆரம்பிக்க போறாங்க. ஆரம்பிக்கும் முன் காலை 7மணிக்கு சின்ன பூஜை இருக்கா. அது முடிந்த பின்தான் நம்ம வீட்டில் நலங்கு.  அதற்கு ஏற்றார் போல் நீங்க பிளான் பண்ணிக்கோங்க. ”

   அவன் எதை குறிப்பிடுகிறான் என்பது புரிந்து.. அவன் தங்களின் திருமண ஏற்பாடு ஆரம்பிக்க போகிறது என்ற மகிழ்வு, நாணத்தில் சிறிது சிவந்து இருக்கும் அவன் முகத்தை புன்னகையுடன் பார்த்து ‘ சரி ‘ என தலையசைத்தனர்.

 

    அனைரும் அவரவர் குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு.. நாலு ஜோடிகளும் நாலு வீடுகளில் உள்ள பூஜை அறையில் விளக்குகளை ஏற்றி.. தங்களை அவ்வீட்டின் திருமணான மகன், மருமகள் என்று தங்கள் வாழ்க்கையை அவ்வீட்டில் ஆரம்பித்து.. 

    இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க.. கதிரவன்- தர்ஷினி. பார்த்திபன்- மேகா மாற்றங்கள், அலங்காரங்கள் செய்யபட்ட தங்களுக்கு உரிய அறைகளுக்கு மகிழ்வுடனும் சென்று ஆரம்பிக்க.. அஸ்வின்- நந்தினி ஊடலுடன் சென்று ஊடலுடனே.. சில நாட்கள் வேண்டும் மனநிலையில் உறங்கினர்.

    கமலேஷ்- வசுந்தரா ஜோடியில் கமலேஷ் தன் முடிவை வசு, பெற்றோர்களிடம் கூற.. வசுவும் தான் இருக்கும் மனநிலையில் கமலேஷ் கூறியதற்கு சரி என கூற.. இன்று செய்ய வேண்டியது முறை என்று கூறியும் முடியாது என இருவரும் மறுத்துவிட.. சரி இருவராக முடிவு எடுத்துவிட்டார்கள்.. இனி அது அவர்களின் தனிபட்ட முடிவு கூறுவது எங்களின் கடமை..

   ஆனால் கூறியது போல படிப்பு முடிந்தவுடன் கணவன், மனைவி வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என வாழ்த்த.. இருவரும் புன்னகையுடன் ஏற்று கமலேஷ் தாரா இனி தன்னுடன் ஒரே வீட்டில் இருக்கபோகிறாள் என்ற மனநிறைவுடன் தன்அறைக்கு செல்ல.. வசுந்தரா இனி கல்லூரி இறுதி தேர்விற்கு மட்டுமே செல்ல வேண்டும்.. பின் ப்ராஜெக்ட் தான். படிப்பு முடியும் வரை இருவரும் புரிந்து கொள்ளும் காலமாக எடுத்துக்கொண்டு மெதுவாகவே வாழ்க்கை ஆரம்பிக்கலாம் என சாருலதா அறைக்கு சென்றாள்.

 

   பெரியவர்கள் தங்கள் நான்கு திருமணம் முடிந்த திருப்பதியுடன் தங்களின் வேந்தன்- எழிலரசியின் திருமண சடங்குகளை தொடங்க அதிகாலையே எழ வேண்டுமே என்று சீக்கிரமே உறங்கிவிட்டனர். வேந்தனின் குடும்பம் மட்டுமே அவரவர் வீடுகளில் இருக்க..

   அஸ்வின், கதிரவன், பார்த்திபன் குடும்பத்தினர் ஜோடிகளுக்கு தனிமை வேண்டியும்.. வேந்தன்- எழிலரசி சடங்குகள், திருமணம் எல்லாவற்றிக்கும் விரைவில் அனைவரும் கிளம்ப மற்றும் வந்த உறவினர்களுடன் சேர்ந்து இருக்க என்று..

   அவர்களின் ரிசெப்ஷன் முடிந்து மறுநாள் வரை ஹோட்டல் புக்செய்யபட்டு இருந்த இடத்தில் மூன்றுநாட்களுக்கு இருக்க போகிறார்கள். அவர்களுடன் தான் சென்னையில் இருந்து வந்தவர்களும் இருக்கிறார்கள்.

 

   வேந்தன் அவர்களின் ஊஞ்சலில் தன் மடியில் அரசியை அமர்த்தி தனக்குள் அடக்கி வைத்திருந்தான். அரசிக்கு காய்ச்சல் முற்றிலும் குறைந்து உள்ளது.. ஆனாலும் சேர்வு இருக்கதான் செய்தது.

   அந்நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேந்தன் நடத்ததை கூற.. அதை கேட்டு சிலபல அடிகள், பல கண்ணீர் துளிகள் என அரசி இருக்க..

   தன்னவளை ‘ போடி , முயல்குட்டி, நெற்றி முத்தம் ‘ என செல்லம் கொஞ்சி, கெஞ்சி, சமாளித்து.. அவளை இறுக்க அணைத்து தன் கழுத்துவளையில் தன்னில் புதைத்துகொள்ள.. 

 

உனக்காக வாழ நினைக்கிறேன்

உசுரோட வாசம் புடிக்கிறேன்

பொடவ மடிக்கையில்

உன்னதான் மடிக்கிறேன்

ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு

தோளில் தூங்கிடுவேன்

உனக்காக உனக்காக

உனக்காக வாழ நினைக்கிறேன்

உசுரோட வாசம் புடிக்கிறேன்

எச கேட்டா நீதானோ

நெரமெல்லாம் நீதானோ

தெனம் நீ தூங்கும் வரத்தான்

என் வாழ்க்கையே

விடுஞ்சு உன் பேச்சொலி கேட்டாத்தான்

எடுப்பன் மூச்சையே

உன்ன சுமக்கிற வரமா

மேல நிழல் வந்து விழுமா

கொள்ளாதே கண்ணின் ஓரமா

உனக்காக வாழ நினைக்கிறேன்

உனக்காக வாழ நினைக்கிறேன்

உசுரோட வாசம் புடிக்கிறேன்

உசுரோட வாசம் புடிக்கிறேன்

 

 

    அவள் உறங்கிய பின் அள்ளிகொண்டு கட்டியில் படுக்கவைத்தான்.. வேந்தன் நடந்து முடிந்த நான்கு திருமணத்திற்கு ஆன செலவு பற்றியும், தங்களின் திருமண ஏற்பாடுகளை பற்றி அனுப்பியதை பார்த்து.. மாற்றம் இருப்பதை தெரிவித்து விட்டு..

        முயல்குட்டி காய்ச்சல் காரணமாக திருமணத்திற்கு முன் தன்னவளுடன் மீண்டும் அவள் அறையில் உறங்கும் வாய்ப்பை நினைத்து பாதி வருந்தி, பாதி மகிழ்ந்து என தங்களின் திருமண கனவுகளை காண தன் அரசியுடன் இணைந்து விட்டான்.  

  

  

   

  

  

  

   

   

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!