Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 6.3

 

 

நாம் 6(3)

 



Advertisement

    ‘ அரசி கூறியதை கேட்டவுடன்.. வேந்தனிற்கு இப்போதே தன்னவளின் நெற்றில் அழுத்த முத்தமிட்டு.. முயல்குட்டி!. நீ எனக்கு கிடைத்தது பெற்றோரின் வேண்டுதல் மட்டும் அல்ல.. நீ எனக்காவே  பிறந்தவள்.. நான் உனக்கே உனக்காக பிறந்தவன். காலையில் நடந்து அனைத்தும் நல்லதுக்குத்தான் அரசிமா. நான் அதை நினைத்து ஒருநாளும் கவலை கொள்ளமாட்டேன். நான் நடந்து கொண்டதால் தான் எனது.. உனது மற்றும் அனைவரின் எண்ணங்களையும் , ஆசைகளையும் அறிந்துக்கொண்டு.. இனிமேல் நம் திருமணத்தில் யாருக்கும் எந்த மனக்குறையும் வராமல்.. அதேசமயம் நம் திருமண விருப்பங்களையும் ஆசைகளை நிறைவேற்றுவேன் என கட்டியணைத்து கூற தோன்றியது. ‘

    வேந்தன் அப்போதுதான் சுற்றியிருப்பவர்களை பார்த்தான். அம்மா மற்றும் பெரியவர்கள் கலங்கிய கண்களுடனும்.. மகிழ்ச்சி சிரிப்புடன் அவனை பார்த்தனர். அவர்கள் நினைத்ததை அப்படியே கூறுகிறாள் என்று. அவர்களும் அரசியின் பேச்சில் மகிழ்ந்தனர்.

    இவர் அடிக்கடி அமைதியாக மாறிவிடுகிறார்.. ” ஹலோ லைன்ல இருக்கிங்களா?.. இல்லையா?.. “

Advertisement

    ம்.. இருக்கேன். அரசி நம்ம திருமணத்தில் யாருக்கும் எந்த மனக்குறையும் வராமல்.. அதுகூட நம்ம அனைத்து திருமண ஆசைகளையும் நிறைவேற்றலாம். ” ஆசையுடன் கூற..

Advertisement

    அந்த குரலில் மகிழ்ந்து.. ” ம்ம்.. நான் ஒன்னு சொல்லட்டா.. இன்னைக்கு மட்டும் நீங்க காலையில் எல்லாரிடமும் பேசனும் அனுமதி வாங்கனப்ப.. இப்ப பேசனும் என்று சொல்லாமல்.. இன்னைக்கு சொல்லியிருந்தால்.. இந்நேரம் எங்க வீட்டல.. இரண்டு குடும்பத்து ஆட்களுடன் இருந்துயிருப்பபோம்.. ஞாயிறு ஏற்கனவே முடிவு செய்துபோல எல்லோரையும் கூப்பிட்டு உறுதிசெய்து இருக்கலாம்.. அதன்பிறகு நம்ம உறவினர்கள் ஏதாவது கேட்டா கூட நீங்க சொன்ன ரீசன்அப்படியே பொருந்தும்.. கொஞ்சம் மிஸ் பண்ணிவிட்டிங்க..”

   அதெல்லாம் இல்லடி முயல்குட்டி.. ” அதெல்லாம் இல்ல அரசி.. உங்க விட்டுக்கு இன்னைக்கு இல்லையெனில் ஞாயிறு வந்துயிருப்போம். ஆனா அந்த கோயிலில்  நாம்ம பேசுனது.. நடந்தது.. கண்டிப்பா இதேமாதிரி இன்னோரு நாள் அமையாது. நீயே நினைத்துப்பாரு. “

      இருவரும் நடந்த அடிபிரதஷ்ணம்.. குளத்தின் படியில் அமர்ந்து அவனைப்பற்றியும்.. இருவரது ஆசைகள்.. அவனின் எதிர்கால கனவுகள்.. எனப்பல பேசி.. கணவனாக ஏற்றுக் கொள்.. இல்லையேனில் மனைவியாக என்னுள் வந்துவிடு என்றான்.. ஒரு விரல் கூட என் உடலில் படாமல் அவளை தூக்கியது நினைத்ததும் இருவரின் முகமும் பளிச்சிட்டது.. அந்த மயக்கநிலை.. பூ வாங்கிகொடுத்தது.. அரசி.. அரசிமா தான் எல்லாயிடத்திலும்.. என இன்றைய காலை பொழுதை இருவரும் ஒருசேர நினைத்து பார்த்தனர். ‘

Advertisement

     எழில்  சிறிய புன்னகையுடன்..  ம்ம்கண்டிப்பா இதேமாதிரி இன்னோரு நாள் அமையாதுதான்.  சரி.. எல்லோரும் வந்து இருக்காங்கனு சொன்னிங்கல்ல.. இன்னும் எல்லாரும் அங்க தான்இருக்காங்களா?..  அவங்க குட்டி பசங்கயொல்லாம் அங்கதான் இருங்காங்களா?..  எல்லோருக்கும் வருத்தம் குறைந்து விட்டதா?..”

    வேந்தன்  புன்னகையுடன்  அனைவரையும் பார்த்துக்கொண்டே.. ” ம்ம்.. குட்டீஸ்ம்.. எல்லோரும் இங்கதான் இருக்காங்க. வருத்தம் குறைந்துவிட்டது என நினைக்கிறேன்.”

    அரசி புன்னகையுடன்.. ” அப்படியா?.. நம்பமுடியலையே!.. ஏதோ இந்த எழிலரசி சின்ன பொண்ணு என்பதால்.. குழந்தைகளுக்கு சமாதானபடுத்த அவங்களுக்கு பிடித்த சாக்லேட், ஐஸ்கீரீம் வாங்கிகொடுப்பது போல.. எனக்கும்.. எனக்கு பிடித்த ஸ்விட் வாங்கி கொடுத்ததும்.. நீங்க வீட்டுக்கு ஸ்விட்.. அதிலும் எனக்கு  பிடுச்ச ஸ்விட்  வாங்கி கொடுத்ததும்.. நீங்க  பண்ண கலாட்டாவ மறந்து..  சமாதானம் ஆகி மன்னிக்க வைத்து இருக்கிங்க.” 

     ” அதே மாதிரி உங்க வீட்டல இருப்பவங்களுக்கும்.. வெறும் ஸ்விட்  மட்டும் கொடுக்காம.. அதோட ஏதாவது அவங்களுக்கு பிடித்த மாதிரி கிப்ட் வாங்கி கொடுங்க.. அவங்க உங்களுக்காக நேற்று காலையில் சொல்லி இன்றைக்கு உங்ககிட்ட கல்யாணம் பற்றி பேச  குழந்தைகளோட வந்து இருக்காங்கஅதனால அவங்களுக்கு ஏற்ற கீப்ட்டும்.. கல்யாணம் ஆகாத தங்கை மற்றும் வேற யாராவது அங்கு வந்திருந்தால் சிம்பிள் கீப்ட் சேர்த்து வாங்கி கொடுத்து விடுங்க. இது என்னோட இலவச ஆலோசனை பாஸ்.. அப்பதான் உங்களுக்கு சேதாரம் கம்மியாகும்.. எதிர்காலத்தில் உங்களுக்கு  ஏதாவது உதவி  தேவைப்பட்டால் ஈசியா கிடைக்கும்  சொல்லிட்டேன் பார்த்துக்கோங்க. “

   எல்லோரும் அவனை பார்த்து சிரித்தனர்.அதை பார்த்து வேந்தன் ஏதாவது உள்குத்து இருக்கோ.. ‘

       ம்ம்.. சரி கண்டிப்பா வாங்கி கொடுக்கிறேன். அது என்ன நடுவில் சின்ன பொண்ணு.. ஹேய்.. நீஎன்ன சின்ன பெண்ணா?.. ”

    ஹலோ..  எங்க வீட்டல நான் சின்ன பொண்ணுதான் தெரியும் ல்ல.. என்ன?.. ஒன்னும் தெரியாத பச்ச மண்ணா என்னை வளர்த்துவிட்டாங்க. இல்லையினா உங்க கூட நான் சண்டை போட்டு.. என்னிடம் அடிவாங்க வேண்டியவங்கள.. நான் அப்படி பண்ணாம சாமாதனம் ஆகி.. மற்றவர்களிடம் நீங்க அடி, திட்டு வாங்காம இருக்க நானே தப்பிக்க ஐடியா கொடுப்பனா சொல்லுங்க பார்ப்போம்.. அப்ப சின்ன பொண்ணுதானே. ”

    வேந்தன் புன்னகையுடன்.. ” சரி..சரி நான் ஒத்துக் கொள்கிறேன் நான்.. நீ சின்ன பொண்ணுதான்.. ஒன்னும் தெரியாத பச்ச மண்ணுதான் நீ. ஆனா பாரு நீ சொன்னதுல சமாதானம்படுத்துன ஓகே.. ஆனா திட்டாம சொன்ன.. நீ என்ன லூசு மாதிரினு.. சொல்லி என்ன திட்டின.. எங்க வீட்டல கூடஎன்னை சொன்னது இல்ல. ”

     என்ன நான் உங்கள லூசு சொல்லி திட்டுனேன்னா.. ச்சா.. ச்சா.. அப்படியொல்லா இருக்காதே.. உங்களுக்கு காது சரியா கேட்காமல் இருந்துயிருக்கும். நான் பெரியவங்களுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கும் பொண்ணு தெரியுமா?..  அப்படியே சொல்லி இருந்தாலும் ஒரு தடவை லூசு சொன்னேனா.. இல்ல இரண்டு தடவை  லூசு சொன்னேனா?.. இல்ல மூனு தடவை  லூசுசொன்னேனா?.. நானோ.. இல்ல வீட்டல இருக்கவங்க  நீங்க நடந்து கொள்வதை பார்த்து..  உங்கள லூசுனு மனசுக்குள்ள வேண்னா திட்டுவோமே தவிர.. வெளிப்படையாவா உங்கள லூசு திட்டுவோம்மா?.. சொல்லுக பார்ப்போம். ”

    அனைவரும் சற்றுநேரம் முன்பு  அவனை பார்த்து அமைதியாக சிரித்தவர்கள்.. இப்போது வெளிப்படையாகவே சிரித்தனர்

     வேந்தனும் மானத்த வாங்குறாளே என் முயல்குட்டி.. நேர்ல மாட்டுவேல்ல.. அப்பயிருக்குடி உனக்கு.. ” ஹே.. அரசி தெரியாதனமா கேட்டுவிட்டேன் ம்மா. அப்ப பேசுவாக்கல ஒரு தடவதான்  நீசொன்ன.. ஆனா இப்ப ஐந்தாறு தடவ சொன்னது இல்லாம.. காதுவேற  சரியா கேட்காதுசொல்லுற.. இதுக்கு நான் அமைதியாவே இருந்து இருக்கலாம். ”

     அரசி   இத.. இததானே  நாங்க எதிர்பார்த்தோம்.. “  ம்ம்..  இப்பதான் க்ரைக்டா  சொன்னிங்க.. இந்த அமைதிய ஞாயிறு எங்க வீட்டுக்கு வரவரைக்கும் இருக்கட்டும். வீட்டல என்ன சொல்லுறாங்களோ?.. அதமட்டும் பண்ணுங்க.. சரியா. ”

    முயல்குட்டி.. ” சரிங்க மேடம்.. வேறே ஏதாவது கட்டளை இருக்கா?.. ஆனா ரொம்ப பேசுற. “

    புன்னககையுடன்..” இப்போதைக்கு அவ்வளவுதான்.. மாமா அத்தை பெரியவங்க எல்லாம் அப்பா.. அம்மாட்ட பேசட்டும் அதன்பிறகு சொல்கிறேன்.  ம்.. நீங்க சொல்லுவது நான் உங்ககூட கொஞ்சம் ஜாஸ்தியாதான் பேசுறேன் நினைக்கிறேன். நான் அமைதிதான்.. யாரிடமும் சீக்கிரத்தில் பேசவே மாட்டேன். ஆனா உங்ககிட்ட ரொம்ப வாய்யடிப்பது போல் இருக்கு.. நான் உங்ககூட முதல்தடவை பேசுவது போலவே இல்ல. நான் ஏற்கனவே இந்த வாயஸ் கேட்டுயிருக்கேன்.. பேசியிருக்கேன். நீங்க பேசறத கேட்கும்போது.. ஏற்கனவே பழகுனது மாதிரிதான் இருக்கு..”

     இதை கேட்டு கொண்டு இருந்தவர்களுக்கும் வேந்தன் எழிலரசியிடம்..  புரிந்து நடந்துகொள்ளும் விதம்.. பேசுவது, பழகுவது,  அவளுக்காக காலையில் அதிரடியாக செய்த விதம்அவளுக்கு பிடித்த உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்து.. அவள் பேசுவதை அழகாக கேட்டு ரசிப்பது.. சாதாரணமாக இருப்பது என பழகிய சிறிய நேரத்தில் இவ்வளவு அழகாக அவனிடத்தில் வருவது போன்றவைகள் எல்லாம்.. ஏற்கனவே  நல்ல ஒரு பந்தம் இருவருக்கும் இருப்பது போலதான் தோன்றியது. ‘

    தன்னை முயல்குட்டி கண்டுபிடுச்சுட்டாளா?.. வாய்ப்பு ரொம்ப கம்மிதான்… ” அப்படியா!.. அதுவும் நல்லதுதானே. அதனால தானே.. இப்ப எப்படி உன்னோட எண்ணங்களை என்கிட்ட சொன்ன.. அதுதான் எல்லோருக்கும் நல்லது. சரி அரசி.. நீ போய் தூங்கு.. நான் வீட்டல பேசுனபிறகு நான் கால் பண்ணுகிறேன்.” போனை வைக்கும் நோக்கத்தில் இருந்தான்.

     அரசி  என்ன வாய்ஸ்ல ஏதோ குறைதே.. ” சரிஎல்லாத்துக்கூடயும் நல்ல என்ஜாய் பண்ணுங்க.. இங்க அக்கா இளமதியோட குட்டீஸ்சும்.. நாளைக்கு தான் வருவாங்க. கால் பண்ணுங்க.. வைக்கிறேன்.”

      ம்.. நான் கால் பண்ணுகிறேன்.”

      ம்என வைக்கபோகும் நேரம்.. மின்னலென அவள் மனத்தில் ஒரு கேள்வி தோன்றியது.

     அரசிஹலோ.. ஹலோ.. லைன்ல இருக்கிங்களா???..”

     வேந்தன்  வைக்க மனம் இல்லாமல்  போன்னை வைக்க கையை கொண்டு சொல்லும்போது அவள் அழைக்க.. ” ம்.. சொல்லு அரசி. ”

      தனு.. நீங்க எந்த ஸ்கூல்ல படிச்சிங்க??..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!